9th Standard Tamil Guide Unit 8
TN Students Guide
- இயல் 8.1. பெரியாரின் சிந்தனைகள்
- இயல் 8.2. ஒளியின் அழைப்பு
- இயல் 8.3. தாவோ தே ஜிங்
- இயல் 8.4. யசோதர காவியம்
- இயல் 8.5. மகனுக்கு எழுதிய கடிதம்
- இயல் 8.1. பெரியாரின் சிந்தனைகள்
- இயல் 8.2. ஒளியின் அழைப்பு
- இயல் 8.3. தாவோ தே ஜிங்
- இயல் 8.4. யசோதர காவியம்
- இயல் 8.5. மகனுக்கு எழுதிய கடிதம்
9th Standard Tamil Guide இயல் 8
8.1. பெரியாரின் சிந்தனைகள்
I. பலவுள் தெரிக
கூற்று – பெரியார் உயிர் எழுத்துக்களில் “ஐ” என்பதனை “அய்” எனவும், “ஒள” என்பதை “அவ்” எனவும் சீரமைத்தார்காரணம் – சில எழுத்துக்களைக் குறைப்பதன் வாயிலாக தமிழ் எதுத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்று எண்ணினார்.
- கூற்று சரி, காரணம் தவறு
- கூற்று, காரணம் இரண்டும் சரி
- கூற்று, காரணம் இரண்டும் தவறு
- கூற்று தவறு, காரணம் சரி
II. குறு வினா
‘பகுத்தறிவு’ எனறால் என்ன?எச்செயலையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகி ஏன்? எப்படி? எதற்கு? என்ற வினாக்கள் எழுப்பி, அறிவின் வழியே சிந்தித்து முடிவெடுப்பதே பகுத்தறிவு ஆகும்.
III. சிறு வினா
சிக்கனம் குறித்த பெரியாரின் கருத்துக்களை இன்றைய நடைமுறையோடு தொடர்புபடுத்தி எழுதுக.- விழாக்கள் மற்றும் சடங்குகளால் மூடப்பழக்கம் வளர்வதோடு, வீண் செலவும் ஏற்படுவதால் தேவையற்ற விழாக்கள் மற்றும் சடங்குளைத் தவிர்க்க வேண்டும் என்றார்.
- திருமணத்தை எளிமையாக சீர்திருத்த முறையில் நடத்த வேண்டும் என்றார்.
- விழாக்கள், திருமணங்கள் மற்றும் சடங்குகள் நடத்த கடன் வாங்கி செலவு செய்து கடன்காரர்களிடம் மாட்டிக் கொண்டிருப்பதை நாம் பார்க்க முடிகிறது.
- பெரியார் சொன்னதைக் கடைபிடித்திருந்தால் இந்நிலை வராது.
IV. நெடு வினா
மொழியிலும், இலக்கியத்திலும் பெரியார் மேற்கொண்ட சீரமைப்புகளை விளக்குகஇன்றைய அறிவியல் வளர்ச்சிக்கேற்ற நூல்கள் தமிழில் படைக்க வேண்டும்.
மொழியோ, நூலோ, இலக்கியமோ எதுவானாலும் மனிதனுக்கு மானம், பகுத்தறிவு, வளர்ச்சி, நற்பண்பு ஆகிய தன்மைகளை உண்டாக்க வேண்டும்.
மதம், கடவுள் தொடரபற்ற இலக்கியம், யாவருக்கும் பொதுவான அறிவைத் தரும் இலக்கியம், அறிவியல் பற்றிய இலக்கியம் ஆகியவற்றின் மூலமே மொழியும் இலக்கியமும் மேன்மை அடையும்.
திருக்குறளைப் பெரியார் மதிப்பு மிக்க நூலாகக் கருதுகிறார்.
இந்நூலில் அறிவியல் கருத்துகளும், தத்துவக் கருத்துகளும் அனைவருக்கும் பொதுவான முறையில் அமைந்திருப்பதே காரணம் என்றார் பெரியார்.
தமிழில் “ஐ” என்பத “அய்” எனவும், “ஒள” என்பதை “அவ்” எனவும் சீரமைத்தார். இவற்றுக்கான மாற்று வரிவடிவத்தையும் கொண்டு வந்தார்.
பெரியாரின் சிந்தனைகள் – கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. _____________ பெண்ணினப் போர்முரசு என்று புகழப்பட்டார்விடை : தந்தை பெரியார்
2. பெரியாருக்குத் _____________ என்ற பட்டம் கொடுத்த அமைப்பு யுனெஸ்கோ
விடை : “தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்”
3. பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் செயத உயிரெழுத்துகள் _____________ ஆகும்
விடை : ஐ, ஒள
4. _____________ பெரியார் தோற்றுவித்தார்
விடை : சுயமரியாதை இயக்கத்தை
5. அறிவியல் அடிப்படையில் _____________ அமைந்தவை
விடை : பெரியாரின் சிந்தனைகள்
6. _____________ என்பது மனித சமூகத்தின் வாழக்கை நலத்திற்கு ஏற்படுத்தப்பட்டன.
விடை : மதங்கள்
7. சமூக வளர்ச்சிக்குக் _____________ மிகச்சிறந்த கருவியாகப் பெரியார் கருதினார்.
விடை : கல்வியை
8. ஒரு மொழியின் தேவை அதன்_____________ கொண்டே அமைகிறது.
விடை : பயன்பாட்டு முறையை
9. 1938-ல் சென்னை பெண்கள் மாநாட்டில் ஈ.வெ.ரா.வுக்கு _____________ பட்டம் வழங்கியது.
விடை : பெரியார்
II. குறு வினா
1. பெரியாரின் சிறப்பு பெயர்கள் யாவை?- வெண்தாடி வேந்தர்
- சுயமரியாதைச் சுடர்
- பகுத்தறிவுப் பகலவன்
- வைக்கம் வீரர்
- ஈரோட்டுச் சிங்கம்
- தெற்காசியாவின் சாக்ரடீஸ்
- பெண்ணினப் போர்முரசு
- புத்துலகத் தொலைநோக்காளர்
- சாதியினால் மனித வாழ்விற்கு எவ்விதச் சிறு பயனும் விளையப்போவதில்லை. அதனால் சண்டைகளும், குழப்பங்களும் தான் மேலோங்கிறது.
3. பெரியாரின் தன் சிந்தனையால் புரட்சியை ஏற்படுத்திய துறைகள் எவை?
- சமூகம்
- பண்பாடு
- மொழி
- கல்வி
- பொருளாதாரம்
- இந்தி திணிப்பு
- குலக்கல்வித் திட்டம்
- தேவதாசி முறை
- எள்ளுண்ணல்
- குழந்தைத் திருமணம்
- மணக்கொடை
- பெரியார் சுய மரியாதை இயக்கத்தை 1925 தோற்றுவித்தார்
- குடியரசு
- உண்மை
- விடுதலை
- ரிவோல்ட் (ஆங்கில இதழ்)
III. சிறு வினா
பெரியார் விதைத்த விதைகள் என்று எவற்றையெல்லாம் குறிப்பிடலாம்?- கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு
- பெண்களுக்கு இட ஒதுக்கீடு
- பெண்களுக்கு சொத்துரிமை
- குடும்ப நலத் திட்டம்
- கலப்புத் திருமணம்
- சீர்திருத்தத் திருமணச் சட்டம்
********************THE END OF 8.1**************************
2.2. ஒளியின் அழைப்பு
I. சாெல்லும் பாெருளும்- விண் – வானம்
- ரவி – கதிரவன்
- கமுகு – பாக்கு
- பிறவி இருள் – உருவகம்
- ஒளியமுது – உருவகம்
- வாழ்க்கைப்போர் – உருவகம்
III.பகுபத உறுப்பிலக்கணம்
1. வேண்டி – வேண்டு + இவேண்டு – பகுதி
இ – வினையெச்ச விகுதி
2. போகிறது – போ + கிறு + அ +து
போ – பகுதி
கிறு – நிகழ்கால இடைநிலை
அ – சாரியை
து – ஒன்றன்பால் வினைமுற்று விகுதி
3. மலர்ச்சி – மலர் + ச் + சி
மலர் – பகுதி
ச் – இடைநிலை
சி – தொழிற்பெயர் விகுதி
IV. பலவுள் தெரிக
முண்டி மோதும் துணிவே இன்பம் – இவ்வடியில் இன்பமாக உருவகிக்கப்படுவது- மகிழ்ச்சி
- வியப்பு
- துணிவு
- மருட்சி
V. குறு வினா
கமுகு மரம் எதனைத் தேடியது?கமுகு மரம் விண்ணிலிருந்து வரும் கதிரவன் உயிர்ப்பைத் (அமுதை) தேடியது
VI. சிறு வினா
அது வாழ்க்கைப் போர் – எது?- கமுகு மரம், தான் தோன்றிய இடத்தில் இருந்த பெருமரத்தின் நிழல் என்னும் இருளைத் துளைத்து நின்றது.
- கமுகு மரம் விண்ணிலிருந்து வரும் கதிரவன் உயிர்ப்பைத் (அமுதை) தேடியது.
- கமுகு மரம் பெருமரத்தின் நிழலை வெறுத்து, உச்சி கிளையை மேல் உயர்த்தி நின்றது.
- அமுதத்தை நம்பி, ஒளியை வேண்டிக் கமுகு மரம் பெருமரத்துடன் போட்டி போடக் காரணம் ஆகும். இதுவே வாழ்க்கைப் போர்.
VII. நெடு வினா
மொழியிலும், இலக்கியத்திலும் பெரியார் மேற்கொண்ட சீரமைப்புகளை விளக்குக- கமுகு மரம், தான் தோன்றிய இடத்தில் இருந்த பெருமரத்தின் நிழல் என்னும் இருளைத் துளைத்து நின்றது.
- கமுகு மரம் விண்ணிலிருந்து வரும் கதிரவன் உயிர்ப்பைத் (அமுதை) தேடியது.
- கமுகு மரம் பெருமரத்தின் நிழலை வெறுத்து, உச்சி கிளையை மேல் உயர்த்தி நின்றது.
- அமுதத்தை நம்பி, ஒளியை வேண்டிக் கமுகு மரம் பெருமரத்துடன் போட்டி போடக் காரணம் ஆகும்.
- இதுவே வாழ்க்கைப் போர்
- கமுகு மரம் பெருமரத்துடன் முட்டி மோதி துணிச்சல், முயற்சி, நம்பிக்கைக் கொண்டு தன்முனைப்போடு கூடிய போட்டியில் போராணி வென்றது.
- பெரு மரத்தை விஞ்சி வளர்ச்சி பெற்றி நடை போடுகிறது.
- அதுபோலவே வாழ்க்கைப் போரில் செயல்பட்டால் வெற்றி பெறலாம் என்கின்ற வழியைக் கழுகமரம் வாயிலாக ஆசிரியர் உணர்த்துகிறார்.
ஒளியின் அழைப்பு – கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. ந,பிச்சமூர்த்தி _______________ ஆவார்விடை : புதுக்கவிதையின் தந்தை
2. ரேவதி என்னும் புனைப்பெயரில் படைப்புகளை _______________ வெளியிட்டவர்.
விடை : ந.பிச்சமூர்த்தி
3. புவிஈரப்பு விசையை எதிர்த்து _______________ தாவரத்தின் தனித்துவமாகும்.
விடை : விண்ணோக்கி விரைவது
4. _______________, தான் தோன்றிய இடத்தில் இருந்த பெருமரத்தின் நிழல் என்னும் இருளைத் துளைத்து நின்றது.
விடை : கமுகு மரம்
5. கமுகு மரம் விண்ணிலிருந்து வரும் _______________ தேடியது.
விடை : கதிரவன் உயிர்ப்பைத்
6. ந.பிச்சமூர்த்தியின் முதல் சிறுகதை _______________ என்பதாகும்
விடை : ஸயன்ஸூக்பலி
7. 1932-ல் _______________ வழங்கிய பரிசை பெற்றவர் ந.பிச்சமூர்த்தி
விடை : கலைமகள் இதழ்
II. குறு வினா
1. புதுக்கவிதைகள் என்றால் என்ன?- புதிய படைப்புச் சூழலில் மரபுக்கவிதையின் யாப்பு பிடியிலிருந்த விடுபட்ட கவிதைகள் புதுக்கவிதைகள் எனப்பட்டன.
- பாரதியின் வசனக் கவிதையைத் தொடந்து புதுக்கவிதை படைக்கும் முயற்சியில் ந.பிச்சமூர்த்தி ஈடுபட்டார். எனவே அவர் புதுக்கவிதையின் தந்தை என போற்றப்பட்டார்.
- இலகு கவிதை
- கட்டற்ற கவிதை
- விலங்குகள் இலாக் கவிதை
- கட்டுக்குள் அடங்காக் கவிதை
- புதுக்கவிதை
- சிறுகதை
- ஓரங்க நாடகங்கள்
- கட்டுரைகள்
- ந.பிச்சமூர்த்தி ஹனுமான், நவ இந்தியா ஆகிய இதழ்களின் துணை ஆசியராக பணியாற்றி உள்ளார்.
III. சிறு வினா
ந.பிச்சமூர்த்தி சிறு குறிப்பு வரைக- புதுக்கவிதையின் தந்தை என போற்றப்பட்டவர்.
- வழக்குரைஞராகவும், இந்து சமய அறநிலையப் பாதுகாப்புத்துறை அலுவலராகவும் பணியாற்றியுள்ளார்.
- ஹனுமான், நவ இந்தியா ஆகிய இதழ்களின் துணை ஆசிரியர்
- புதுக்கவிதை, சிறுகதை, ஓரங்க நாடகங்கள், கட்டுரைகள் ஆகியன இவர் படைத்த இலக்கிய வகைமைகள் ஆகும்
- இவரின் முதல் சிறுகதை ஸயன்ஸூக்பலி என்பதாகும்
- 1932-ல் கலைமகள் இதழ் வழங்கிய பரிசை பெற்றவர்
- பிக்ஷூ, ரேவதி என்னும் புனைப்பெயரில் படைப்புகளை வெளியிட்டவர்.
*************THE END OF 8.2*****************
8.3. தாவோ தே ஜிங்
I. இலக்கணக் குறிப்பு
- பாண்டம் பாண்டமாக – அடுக்குத் தொடர்
- வாயிலும் சன்னலும் – எண்ணும்மை
II.பகுபத உறுப்பிலக்கணம்
இணைகின்றன – இணை + கின்று + அன் + அ
இணை – பகுதி
கின்று – நிகழ்கால இடைநிலை
அ – சாரியை
அ – பலவின்பால் வினைமுற்று விகுதி
III. பலவுள் தெரிக
விடைக்கேற்ற வினாவைத் தேர்க
விடை – பானையின் வெற்றிடமே நமக்கு பயன்படுகிறது
- பானையின் எப்பகுதி நமக்குப் பயன்படுகிறது?
- பானை எப்படி நமக்குப் பயன்படுகிறது?
- பானை எதனால் பயன்படுகிறது
- பானை எங்கு நமக்குப் பயன்படுகிறது
விடை : பானையின் எப்பகுதி நமக்குப் பயன்படுகிறது?
IV. குறு வினா
தாவோ நே ஜிங் “இன்னொரு பக்கம்” என்று எதைக் குறிப்பிடுகிறார்?
- தாவோ நே ஜிங் “இன்னொரு பக்கம்” என்று இருத்தலின்மையைப் பயன்படுத்திக் கொள்வதை (வெற்றிடமே பயன்படுகிறது) குறிப்பிடுகிறார்.
தாவோ தே ஜிங் – கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. லாவோர்ட்சு இயற்றிய நூல் ______________
விடை : தாவோ தே ஜிங்
2. லாவோர்ட்சு ______________-ம் நூற்றாண்டிற்கு முன் வாழ்ந்தவர்
விடை : பொ.ஆ.மு 2
3. ______________ என்ற சிந்தனைப் பிரிவை சார்ந்தவர் லாவோர்ட்சு
விடை : தாவோவியம்
4. ______________ லாவோர்ட்சு
விடை : சீனமொழிக் கவிஞர்
5. அழகிய பானையானாலும் ______________ பயன்படுகிறது.
விடை : வெற்றிடமே
6. இல்லை என்பது ______________ வரையறை செய்கிறது.
விடை : வடிவத்தை
II. குறு வினா
1. லாவோர்ட்சு – குறிப்பு வரைக
- லாவோர்ட்சு சீனாவில் பொ.ஆ.மு 2-ம் நூற்றாண்டிற்கு முன் வாழ்ந்தவர்
- கன்பூசியஸ் இவரது சம காலத்தவர்
- தாவோவியம் என்ற சிந்தனைப் பிரிவை சார்ந்தவர்.
- தாவோவியம் வலியுறுத்தும் இன்றைய வழா்வை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்னும் சிந்தனையை முன் வைத்தார்.
2. வெற்றிடம் பயன்டும் பொருட்கள் என தாவோ ஜிங் கூறும் பொருட்கள் யாவை?
- சக்கரம்
- சன்னல்
- பானை
- சுவர்
3. தாவோவியம் எதைக் கூறுகின்றார்?
- வாழ்க்கையை வாழ்வதன் மூலம் தான் யார் என்பதை அறிந்து கொள்ளுதல், வாழ்க்கையின் போக்கோடு செல்லுதல் ஆகிய அடிப்படைகளைத் தாவோவியம் கூறுகின்றது.
III. சிறு வினா
1. வெற்றிடமே பயன்படுகிறது என்பதை தாவோ தே ஜிங் எவ்வாறு விளக்கிறது?
- சக்கரம் பல ஆரங்களை கொண்டது. வெற்றிடத்தை நடுவே வைத்து சுழல்கிறது.
- அழகிய பானையே ஆனாலும் வெற்றிடமே பயன்படுகிறது.
- சன்னலும், கதவும் கூட வெற்றிடமே. அதுவே நமக்கும் பயன்பாடு.
- சுவர்களுக்கு இடையே உள்ள வெற்றிடமே அறையாக பயன்படுகின்றது.
- உருப்பொருள் உண்மையாலும் வெற்றிடமே பயனாகின்றது.
- வெற்றிடம் பயன்படுகின்ற போது நாம் வெற்றி பெறத் தடையில்லை.
- என்று தாவோ தே ஜிங் விளக்குகின்றார்.
2. “இன்மை” என்று எதையும் புறக்கணிக்க வேணடாம் என்பதற்குரிய விளக்கத்தினை கூறுக
- இல்லை என்பது வடிவத்தை வரையறை செய்கிறது.
- குடம் செய்ய மண் உண்டு. குடத்திற்குள்ளே வெற்றிடம் என்பது இல்லை. இந்த உண்டும் இல்லையும் சேர்வதால் தான் குடத்தில் நீரை நிரப்ப முடியும்
- வெற்றிடம் இல்லாத குடத்தில் நீரை நிரப்ப முடியாது. இவை முரண்களாக தெரிந்தாலும் இவை முரண்களல்ல.
- அதை வலியுறுத்தவே இன்மையால்தான் நாம் பயனடைகிறோம் என்றார் கவிஞர்.
- ஆரங்களை விட நடுவிலுள்ள வெற்றிடமே சக்கரம் சுழல உதவுகிறது.
- குடத்து ஓட்டினைவிட உள்ளே இருக்கும் வெற்றிடமே பயன்படுகிறது.
- சுவர்களை விட வெற்றிடமாக இருக்கும் இடமே பயன்படுகிறது. ஆகவே “இன்மை” என்று எதையும் புறக்கணிக்க வேண்டாம் என்பதற்குரிய விளக்கம் ஆகும்.
************THE END OF 8.3*****************
8.4. யசோதர காவியம்
I. சாெல்லும் பாெருளும்
- அறம் – நற்செயல்
- வெகுளி – சினம்
- ஞானம் – அறிவு
- விரதம் – மேற்கொண்ட நன்னெறி
II. இலக்கணக் குறிப்பு
- ஆக்குக – வியங்கோள் வினைமுற்று
- போக்குக – வியங்கோள் வினைமுற்று
- நோக்குக – வியங்கோள் வினைமுற்று
- காக்க – வியங்கோள் வினைமுற்று
III.பகுபத உறுப்பிலக்கணம்
காக்க – கா + க் +க
கா – பகுதி
க் – சந்தி
க – வியங்கோள் வினைமுற்று விகுதி
IV. பலவுள் தெரிக
ஞானம் என்பதன் பொருள் யாது?
- தானம்
- தெளிவு
- சினம்
- அறிவு
விடை : அறிவு
V. குறு வினா
யசோதர காவியத்தின பாட்டுடைத் தலைவன் யார்?
யசோதர காவியத்தின பாட்டுடைத் தலைவன் அவந்தி நாட்டு மன்னன் யசோதரன்
VI. சிறு வினா
1. நாம் கடை பிடிக்க வேண்டிய வாழ்க்கை நெறிகளாக யசோதர காவியம் குறிப்பிடுவன யாவை?
- நாம் ஒரு செயலைச் செய்வதென்றால் அச்செயல் பயன்தரத்தக்க நற்செயலாக இருத்தல் வேண்டும்.
- நம்மிடம் உள்ள தீய பண்புகளை நீக்க வேண்டுமாயின் முதலில் சினத்தை நீக்க வேண்டும்.
- ஆராய வேண்டுமானல் மெய்யறிவு நூல்களை ஆராய வேண்டும்.
- இடை விடாது போற்றிக் காக்க வேண்டுமென்றால் நன்னெறியினைக் காக்க வேண்டும்.
2. யசோதர காவியம் வெளிப்படுத்தும் வாழ்க்கை நெயியைத் திருக்குறளுடன் ஒப்பிடுக
திருக்குறள் :-
” ஒல்லும் வகையால் அறவினை யோவதே
செல்லும்வா யெல்லாஞ் சிறப்பு”
யசோதர காவியம் :-
நம்மிடம் உள்ள தீய பண்புகளை நீக்க வேண்டுமாயின் முதலில் சினத்தை நீக்க வேண்டும்.
திருக்குறள் :-
” மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும் ”
யசோதர காவியம் :-
ஆராய வேண்டுமானால் மெய்யறிவு நூல்களை ஆராய வேண்டும்
திருக்குறள் :-
” எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
செல்லும்வா யெல்லாஞ் சிறப்பு ”
யசோதர காவியம் :-
இடைவிடாது போற்றிக் காக்க வேண்டுமென்றால் நன்னெறியினைகள் காக்க வேண்டும்
3. பிறமொழி இலக்கியங்களைத் தழுவி எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்களை குறிப்பிடுக?
- சூளாமணி
- புரட்சிக்காப்பியம்
- பெருங்கதை
- மனோன்மணீயம்
- இரட்சண்ய யாத்ரிகம்
- கம்பராமாயணம்
தாவோ தே ஜிங் – கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. யசோதர காவியம் _____________ காப்பியங்களுள் ஒன்று
விடை : ஐஞ்சிறு
2. வட மொழியிலிருந்து தமிழில் தழுவி எழுதப்பெற்ற நூல் _____________
விடை : யசோதர காவியம்
3. யசோதர காவியம் _____________ என்ற மன்னனின் வரலாற்றை கூறுகிறது.
விடை : யசோதரன்
4. அவந்தி நாட்டு மன்னன் _____________ ஆவான்
விடை ” யசோதரன்
II. குறு வினா
1. நம்மிடம் உள்ள தீய பண்புகளை நீக்க வேண்டுமாயின் முதலில் எதை நீக்க வேண்டும்?
நம்மிடம் உள்ள தீய பண்புகளை நீக்க வேண்டுமாயின் முதலில் சினத்தை நீக்க வேண்டும்.
2. ஆராய வேண்டுமானல் எதனை ஆராய வேண்டும்?
ஆராய வேண்டுமானல் மெய்யறிவு நூல்களை ஆராய வேண்டும்.
3. இடை விடாது போற்றிக் காக்க வேண்டுமென்றால் எதனை காக்க வேண்டும்?
இடை விடாது போற்றிக் காக்க வேண்டுமென்றால் நன்னெறியினைக் காக்க வேண்டும்.
4. நாம் ஒரு செயலைச் செய்வதென்றால் அச்செயல் எப்படி இருத்தல் வேண்டும்?
நாம் ஒரு செயலைச் செய்வதென்றால் அச்செயல் பயன்தரத்தக்க நற்செயலாக இருத்தல் வேண்டும்.
III. சிறு வினா
யசோதர காவியம் குறிப்பு வரைக
- யசோதர காவியம் ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று.
- வட மொழியிலிருந்து தமிழில் தழுவி எழுதப்பெற்ற நூல்.
- இதன் ஆசிரியர் அறிய முடியவில்லை.
- இது சமண முனிவர் ஒருவரால் இயற்றப்பட்டது என்பர்.
- யசோதரன் என்ற மன்னனின் வரலாற்றை கூறுகிறது.
- இந்நூல் ஐந்து சருக்கங்களைக் கொண்டது.
- பாடல்களின் எண்ணிக்கை 320 எனவும் 330 எனவும் கருதுவர்.
*********************THE END OF 8.4************************
8.5 மகனுக்கு எழுதிய கடிதம்
1.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதத்தைப் போல நீங்கள் யாருக்குக் கடிதம் எழுத விரும்புகிறீர்களோ அப்படியொரு ஒரு கடிதம் எழுது.
Answer:
தங்கைக்கு…..
அன்புள்ள தங்கைக்கு அண்ணா எழுதுவது,
நலமா? பதின்பருவத்தில் இருக்கும் உனக்கு இக்கடிதம் மூலம் சில கருத்துகளை தெரிவிக்கவும், சிலவற்றை உன்னுடன் பகிர்ந்து கொள்ளவும் விரும்புகிறேன்.
நாம் சிறு வயதில் இருக்கும் போது பல கஷ்டங்களை அனுபவித்தது உண்டு. துன்பங்களிலும், வறுமையிலும், துவண்டு போகாத நம் தந்தை கண்ணெனத் தகும் கல்வியை எனக்குத் தடையின்றி தந்தார். நீயும் இன்று படித்துக் கொண்டிருக்கிறாய். நானும் பணியில் சேர்ந்து விட்டேன். நான் உழைக்கிறேன் ஓய்வெடுங்களென்றால் நம் தந்தை அதற்கு உடன்படுவதில்லை.
நம் பெற்றோரின் உழைப்பின் பயனாகிய நல்வாழ்வை நாம் அறுவடை செய்து கொண்டிருக்கிறோம். அன்புத் தங்கையே நீ பத்திரமாகவும், பக்குவமாகவும் இருக்க வேண்டிய தருணம் இது. கல்வியிலும் நம் குடும்ப நிலையிலும் மட்டுமே உன் கவனம் இருத்தல் வேண்டும்.
கவனச் சிதறல்கள் ஏற்படா வண்ணம் நல்ல புத்தகங்களை வாசி, பெற்றோரை நேசி, இறைவனை மறவாது வழிபடு. நற்பண்புகளை வளர்த்துக்கொள். பெண்ணிற்கு எதற்குப் பணி? என்று வீட்டிலே இருந்து விடாதே. அடுத்த ஆண்டு உன் பட்டப்படிப்பு முடிந்து விடும் அல்லவா! உனக்கு பிடித்தமான பணியைச் செய்ய உன்னை ஆயத்தப்படுத்திக் கொள். பொருளாதார சுதந்திரமும், சமூக பாதுகாப்பு வழங்குவதும் கல்வியும், பணியுமே. நாளை உன் பிறந்த நாள் அல்லவா? அன்புத் தங்கையே வாழ்வில் அனைத்து நலங்களும் பெற்று வளமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
அன்புடன் அண்ணன்
இரகு. இரா
2.வகுப்பில் நீங்கள் தேர்ந்தெடுத்த நண்பனின் சிறந்த பண்பைப் பாராட்டியும், அவர் மாற்றிக் கொள்ள வேண்டிய பண்பையும் பெயரைக் குறிப்பிடாமல் கடிதமாக எழுதிப் படித்துக் காட்டுக.
Answer:
அன்புள்ள நண்பா,
உன் நற்பண்பை பாராட்டும் வகையிலும் நீ உன்னில் இருந்து நீக்க வேண்டிய, மாற்றிக் கொள்ள வேண்டிய பண்புகளைக் குறித்தும் நீ உணர்ந்து கொள்ளும்படியும், உணர்த்தும் படியும் இம்மடலை வரைந்து வாசிக்கிறேன்.
நண்பா உன்னை எண்ணி பார்க்கும் போதெல்லாம் என்னுள் மகிழ்வும், பெருமிதமும் ஊற்றெடுக்கும். ஆம் நீ அனைவருக்கும் உதவி செய்யும் நற்பண்பினைப் பெற்றிருக்கிறாய் அல்லவா! அதை நினைத்துத்தான் பெருமிதம் பொங்கும்.
பிறருக்குத் தாமாகவே ஓடிச் சென்று உதவும் பண்பு, எல்லோரிடத்திலும் இருப்பதில்லை. ஆனால் நீ இந்த பண்பை இயல்பிலே பெற்றிருப்பதால் நல்ல நண்பர்கள் உனக்குக் கிடைத்து இருப்பதோடு, பலருடைய பாராட்டையும், நன்மதிப்பையும் பெற்றுள்ளாய் பாராட்டுக்கள்.
அதேவேளையில், நீ திருத்திக் கொள்ளும் பொருட்டு உன்னிடம் உள்ள ஒரு சிறு குறையைச் சுட்டிக் காட்டுவது நல்ல நண்பனாகிய என் கடமை எனக் கருதுகின்றேன்.
மகிழ்ச்சியாக உணவருந்திக் கொண்டிருக்கும் போது சிக்கிக் கொண்டு எரிச்சல் தரும் மிளகாய் போல் உன்னிடம் முன்கோபமாகிய குணம் உள்ளது. நாம் எத்தனை நன்மைகள் செய்தாலும் நம்மிடம் உள்ள சினம் என்னும் குணம் எல்லா நற்பண்புகளையும் அழித்து விடும்.
உலகத்தாருக்கும் நாம் செய்த நன்மைகளை, நம் சினமானது மறைத்து விடும். நற்பண்பு வெளியில் தெரியாமல் நம் எதிர்மறை குணம் மட்டுமே பேசு பொருளாக மாறி விடும் எனவே அன்பு நண்பா “சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லியை” நீ மாற்றிக் கொண்டால் உன்னத மனிதனாய் பேரும், புகழும் பெறுவாய்.
வாழ்த்துகள்.
அன்புடன் ஆருயிர் நண்பன்,
……………
பாடநூல் வினாக்கள்
நெடுவினா
1.மொழியின் விரல் பிடித்து நடக்க பழகிக் கொண்டிருக்கும் தன் மகனுக்கு நா. முத்துக்குமார் எழுதியுள்ள கடிதச் செய்திகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
முன்னுரை:
கடித செய்தி என்பது உயிர்ப்புள்ள மொழி. செய்தியை அளிப்பவருக்கும், பெறுபவருக்குமான உறவுப் பாலத்தை உறுதியாக்குகிறது. தாயுமானவனாகத் திகழ்ந்த முத்துக்குமார் அவர்கள் தம் மகனுக்கு எழுதிய கடிதத்தில் அமைந்துள்ள செய்திகளை அறிவோம்.
குழந்தைப் பருவமும் – உலக வாழ்வும்:
என் செல்லப் பூங்குட்டியே! நீ குழந்தையாய் இருந்தாய்; அழுதாய்; சிரித்தாய்; குப்புறக்கவிழ்ந்து தலைநிமிர்ந்து, சாகசம் கொண்டாடினாய். தரையெல்லாம் உனதாக்கித் தவழ்ந்தாய்; எழுந்தாய்; விழுந்தாய்; நடந்தாய்; ஓடினாய்.
இந்த உலக வாழ்வும் இப்படித்தான். சிரிக்க வேண்டும், சிணுங்க வேண்டும், குப்புறக்கவிழ்ந்தும், தலைநிமிர்ந்தும் சாகசம் செய்தல் வேண்டும். தவழ வேண்டும், எழவேண்டும், விழவேண்டும், மீண்டும் எழ வேண்டும், இந்த நாடகத்தை நீ வெவ்வேறு வடிவங்களில் உலக வாழ்வில் நடிக்கத்தான் வேண்டும்.
அனுபவமே கல்வி:
கல்வியில் தேர்ச்சி கொள்ள வேண்டும், அதே நேரம் அனுபவங்களிடம் இருந்து அதிகம் கற்றுக் கொள். தீயைப் படித்துத் தெரிந்து கொள்வதை விட தீண்டிக் காயம் பெறு. அந்த அனுபவக் கல்வியே இவ்வுலகில் வெற்றியுடன் வாழ பயன்படும் சூத்திரம் ஆகும்.
அன்பாக இரு:
எங்கும், எதிலும் எப்போதும் அன்பாய் இரு. அன்பை விட உயர்ந்தது இவ்வுலகில் வேறு எதுவுமே இல்லை. உன் பேரன்பால் இந்தப் பிரபஞ்சத்தை நனைத்துக் கொண்டே இரு. உறவுகளை விட மேன்மையானது நட்பு மட்டுமே, உன் அன்பால் நல்ல நண்பர்களைச் சேர்த்துக் கொள். உன் வாழ்வு அன்பாலும், நட்பாலும் நேராகும்.
உனக்கான காற்றை நீயே உருவாக்கு:
என் மகனே மாநகரத்தில் நீ வாழ்க்கை முழுக்கக் கோடைகாலங்களையும், வெவ்வேறு வடிவங்களில் கொடிய தேள்களையும் சந்திக்க வேண்டியிருக்கும். எப்போதும் உன் தகப்பன் உன் அருகில் அமர்ந்து விசிறி கொண்டிருக்க முடியாது. உனக்கான காற்றை நீயே உருவாக்கு.
புத்தகங்களை நேசி:
புத்தகங்களை நேசிக்கத் தவறாதே. ஒரு புத்தகத்தைத் தொடுகிறபோது நீ ஓர் அனுபவத்தைத் தொடுவாய். உன் பாட்டனும் தகப்பனும் புத்தகங்களின் காட்டில் தொலைந்தவர்கள் உன் உதிரத்தில் காகித நதி ஓடிக்கொண்டே இருக்கட்டும்.
முடிவுரை:
இக்கருத்துக்கள் அனைத்தும் முத்துக்குமாரின் மகனுக்கு மட்டுமல்ல. இதனைப் படிக்கின்ற ஒவ்வொரு மாணவனுக்கும், ஒவ்வொரு குழந்தைக்கும், வளர்வதற்கும், உயர்வதற்கும், ஏற்ற கருத்துக்கள் ஆகும் என்பதை எவராலும் மறுக்க இயலாது.
********************THE END OF 8.5*************************
8.6. யாப்பிலக்கணம்
I. பலவுள் தெரிக
காலத்தினால் செய்த நன்றி சிறிெதனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது – இக்குறளின் ஈற்றுச் சீரின் வாய்ப்பாடு யாது
- நாள்
- மலர்
- காசு
- பிறப்பு
விடை : பிறப்பு
II. குறு வினா
அசை என்றால் என்ன? அசை எத்தனை வகைப்படும்?
எழுத்துக்களால் ஆனது அசை
நேரசை, நிரையசை என இரு வகைப்படும்
யாப்பிலக்கணம் – கூடுதல் வினாக்கள்
I. குறு வினா
1. யாப்பின் உறுப்புகள் எவை?
- எழுத்து
- அசை
- சீர்
- தளை
- அடி
- தொடை
2. யாப்பிலக்கண அடிப்படையில் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
- யாப்பிலக்கண அடிப்படையில் எழுத்துக்கள் குறில், நெடில், ஒற்று என மூன்று வகைப்படும்
3. சீர் என்றால் என்ன? எத்தனை வகைப்படும்?
ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட அசைகளின் சேர்க்கை அசை ஆகும்.
சீர் 4 வகைப்படும். அவை
- ஓரசைச்சீர்
- ஈரசைச்சீர்
- மூவகைச்சீர்
- நாலசைச்சீர்
5. ஈரசைச்சீர்களின் வாய்ப்பாடுகள் யாவை?
- நேர் நேர் – தேமா
- நிரை நேர் – புளிமா
- நேர் நிரை – கூவிளம்
- நிரை நிரை – கருவிளம்
II.சிறு வினா
1. மூவசைச்சீர்களின் வாய்ப்பாடுகள் யாவை?
- நேர் நேர் நேர் – தேமாங்காய் நேர் நேர் நிரை – தேமாங்கனி
- நிரை நேர் நேர் – புளிமாங்காய் நிரை நேர் நிரை – புளிமாங்கனி
- நேர் நிரை நேர் – கூவிளங்காய் நேர் நிரை நிரை – கூவிளங்கனி
- நிரை நிரை நேர் – கருவிளங்காய் நிரை நிரை நிரை – கருவிளங்கனி
2. அடி என்றால் என்ன? எத்தனை வகைப்படும்?
இரண்டும் இரண்டிற்கும் மேற்பட்ட சீர்களும் தொடர்ந்து வருவது அடியாகும்
- குறளடி – இரு சீர்களை கொண்டது
- சிந்தலடி – மூன்று சீர்களை கொண்டது
- அளவடி – நான்கு சீர்களை கொண்டது
- நெடிலடி- ஐந்து சீர்களை கொண்டது
- கழிநெடிலடி – ஆறு மற்றும் அதற்கு மேற்பட்ட சீர்களை கொண்டது
கற்பவை கற்றபின்…
1. உமக்குப் பிடித்த திருக்குறளை அலகிட்டு அதன் வாய்ப்பாடு காண்க
பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்க துடைத்து
சீர் அசை வாய்ப்பாடு
- பிறர்/நா/ணத்/ நிரை நேர் நேர் புளிமாங்காய்
- தக்/கது/ நேர் நிரை கூவிளம்
- தான்/நா/ணா/ நேர் நேர் நேர் தேமாங்காய்
- னா/யின்/ நேர் நேர் தேமா
- அறம்/நாண/த்/ நிரை நேர் நேர் புளிமாங்காய்
- தக்/க நேர் நேர் தேமா
- துடைத்/து நிரைபு பிறப்பு
2. பாடல்களில் பயின்வரும் தாெடை நயங்களை எடுத்து எழுதுக
காெண்டல் காேபுரம் அண்டையில் கூடும்
காெடிகள் வானம் படிதர மூடும்
கண்ட பேரண்டம் தண்டலை நாடும்
கனக முன்றில் அனம் விளையாடும் விண்ட பூமது வண்டலிட்டு ஓடும்
வெயில் வெய்யாேன் பாென்னெயில் வழி தேடும்
அண்டர் நாயகர் செண்டலங் காரர்
அழகர் முக்கூடல் ஊர் எங்கள் ஊரே
மாேனை:-
செய்யுளின் அடியிலோ சீரிலோ முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை ஆகும்
காெண்டல் – காெடிகள்
கண்ட – கனக
அண்டர் – அழகர்
ஊர் – ஊரே
எதுகை:-
செய்யுளின் அடியிலோ சீரிலோ இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது மேனை ஆகும்
காெண்டல் – கண்ட
அண்டையில் – தண்டலை
விண்ட – வண்டலிட்டு
கனக – அனம்
இயைபு:-
செய்யுளின் அடிகள் தோறும் இறுதி எழுத்தோ அல்லது சொல்லோ இயைந்து வருவது ஒன்றி வருவது இயைபு ஆகும்
கூடும் – மூடும்
பாடும் – ஆடும்
ஓடும் – வெடும்
வினாக்கள்
1. உங்கள் வீட்டில் உள்ளவர்களின் பெயர்களை நேர் – நிரை அசைகளாகப் பிரித்துப் பார்க்க
சாந்தா சாந் / தா நேர் நேர்
ஸ்ரீநிதி ஸ்ரீ / நிதி நேர் நிரை
டேவிட் டே / விட் நேர் நேர்
2. மூவசை சீரில் அமைந்த பெயர்கள் நான்கினை குறிப்பிடுக
மீ / னாம் / பிகை ஆ / னந் / தி
ஐ / யப் / பன் தமிழ் / மா / றன்
3. தம்பொருள் என்புதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும் – இக்குறட்பாவில் பயின்றுவரும் மோனை, எதுகை ஆகியவற்றை கண்டறிக
மாேனை:-
செய்யுளின் அடியிலோ சீரிலோ முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை ஆகும்
தம்பொருள் – தம்தம்
எதுகை:-
செய்யுளின் அடியிலோ சீரிலோ இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது மேனை ஆகும்
தம்பொருள் – தம்தம்
4. தளையின் வகைகளை எழுதுக.
தளை ஏழு வகைப்படும்
நேரொன்றாசிரியத்தளை
நிரையொன்றாசிரியத்தளை
இயற்சீர் வெண்டளை
வெண்சீர் வெண்டளை
கலித்தளை
ஒன்றிய வஞ்சித்தளை
ஒன்றாத வஞ்சித்தளை
மொழியை ஆள்வோம்…
I. மாெழிபெயர்க்க.
Once Buddha and his disciples were thirsty. They reached a lake. But it was muddy because somebody justfinished washing their clothes. Buddha asked his disciples to take a little rest there by the tree. After half an hour the disciples noticed that the water was very clear. Buddha said to them,” You let the water and the mud be settled down on its own. Your mind is also like that. When it is disturbed, just let it be. Give a little time. It will settle down on its own. We can judge and take best decisions of our life when we stay calm.”
விடை:-
ஒருமுறை புத்தரும், அவருடைய சீடர்களும் மிகுந்த தாகத்துடன் இருந்தனர். அவர்கள் ஒரு ஏரியை அடைந்தார்கள். யாரோ ஒருவர் துணி துவைத்தபடியால் ஏரி கலங்கி சேறுடன் காணப்பட்டது. புத்தர் தனது சீடர்களிடம் மரத்தின் அருகே சிறிது ஓய்வு எடுக்கச் சொன்னார். அரை மணி நேரம் கழித்து சீடர்கள் தண்ணீர் மிகவும் தெளிவாக இருப்பதை கவனித்தனர். அழுக்குகள் ஒதுங்கி விட்டன. உங்கள் மனமும் அப்படித்தான். அது தொந்தரவு செய்யும்போது, அப்படியே இருக்கட்டும். சிறிது நேரம் கொடுங்கள். அது கரைந்து, மறைந்து அழிந்து போய்விடும். நாங்கள் அமைதியாக இருக்கும்போது நம் வாழ்க்கையின் சிறந்த முடிவுகளை நாங்கள் தீர்மானிக்கலாம் மற்றும் எடுக்கலாம். ” அதுவே சிறந்த நேர்மையான வாழ்வுக்கு வழியாகும்.
II. சொற்றொடர்களை அடைப்புகுறிக்குள் உள்ளவாறு மாற்றுக
1. மறுநாள் வீட்டுக்கு வருவதாக முரளி கூறினார் (நேர்கூற்றாக மாற்றுக)
“நான் நாளை வீட்டுக்கு வருவேன்” என்று முரளி கூறினார்
2. “தென்னாட்டுப் பெர்னாட்ஷா என்று அறிஞர் அண்ணாவைப் புகழ்கிேறாம்” என்று ஆசிரியர் கூறினார் (அயற்கூற்றாக மாற்றுக)
“தென்னாட்டுப் பெர்னாட்ஷா என்று அண்ணா புகழப்படுவதாக ஆசிரியர் கூறினார்
3. மார்னிங் நாஷ்டாவுக்கு இரண்டு தோசைகள் ஹோட்டலில் சாப்பிடப்பட்டான் (பிற மொழிச் சொற்களைத் தமிழாக்குக)
காலை சிற்றுண்டிக்கு இரண்டு தோசைகளை உணவு விடுதியில் (உணவகத்தில்) உண்டான் (சாப்பிட்டான்)
4. அலறும் மயிலும், கூவும் ஆந்தையும், அகவும் சேவலும் போன்ற இயற்கையின் ஒலிகளை நாம் நேசிக்க வேண்டும் ( ஒலி மரபுப் பிழைகளை திருத்துக)
அகவும் மயிலும், அலறும்ஆந்தையும், கூவும் சேவலும் போன்ற இயற்கையின் ஒலிகளை நாம் நேசிக்க வேண்டும்
5. கோழிக் குட்டிகளைப் பிடிக்க பூனைக் குஞ்சுகள் ஓடின (பெயர் மரபுப் பிழைகளை திருத்துக)
கோழிக் குஞ்சுகளைப் பிடிக்க பூனைக் குட்டிகள் ஓடின
மொழியோடு விளையாடு
I. பொருத்தமான வாய்ப்பாடுகளை கூறுக
1. பகலவன் – காசு / கருவிளம் / கூவிளங்கனி
கருவிளம்
2. மலர்ச்சி – கூவிளம் / புளிமா / கருவிளம் –
புளிமா
3. தாவோவியம் – தேமாங்கனி / தேமா – பிறப்பு
தேமாங்கனி
4. வெற்றிடம் – நாள் / கூவிளம் / புளிமா
கூவிளம்
5. பூங்குட்டி – கருவிளங்கனி / மலர் / தேமாங்காய்
தேமாங்காய்
II. அகராதியில் காண்க
1. வயம்
- வலிமை.
- வெற்றி
- வேட்கை
2. ஓதம்
- வெள்ளம்
- கடல் அலை
- ஒலி
3. பொலிதல்
- செழித்தல்
- பெருகுதல்
- மிகுதல்
4. துலக்கல்
- விளக்கம்
- ஒளி
- மெருகு
- தெளிவு
5. நடலை
- வஞ்சனை
- துன்பம்
- பொய்மை
III. வினைத்தொகைகளைப் பொருத்தி எழுதுக.
(வளர்தமிழ், விளைநிலம், குளிர்காற்று, விரிவானம், உயர்மதில், நீள்வீதி, கரை விளக்கு, மூடுபனி, வளர்பிறை, தளிர் பூ)
வளர்பிறை நிலவுடன் விரிவானம் அழகாகக் காட்சியளிக்கிறது
தளிர்பூங்கொடிகளும், விளைநிலங்களும், மனதைக் கொள்ளையடிக்கின்றன.
நீள்வீதிகள் அனைத்தும் மூடுபனியில் மூழ்கிக் கிடக்கின்றன
மெல்ல வீசும் குளிர்காற்றும் வளர்தமிழ் புகழ்பாடுகிறது
தொலைவில் கலங்கரை விளக்கின் ஒளி உயர்மதில் சுவரை ஒளிரச் செய்கிறது
IV. பொருத்துக
நேர் நேர் நிரை – கூவிளங்காய்
நிரை நிரை நேர் – கூவிளம்
நேர் நிரை – தேமாங்காய்
நிரை நிரை – தேமாங்கனி
நேர் நேர் நேர் – கருவிளம்
விடை : 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – உ, 5 – இ
கலைச்சாெல் அறிவாேம்….
- எழுத்துச் சீர்திருத்தம்– Reforming the letters
- எழுத்துரு – Font
- மெய்யியல் (தத்துவம்) – Philosophy
- அசை – Syllable
- இயைபுத் தொடை – Rhyme
கருத்துரையிடுக