10th Tamil Guide Unit 4
10th Standard Tamil Unit 4 Guide. Book Back Question and answers also
additional question and answers.
- இயல் 4.1 செயற்க்கை நுண்ணறிவு
- இயல் 4.2 பெருமாள் திருமொழி
- இயல் 4.3 பரிபாடல்
- இயல் 4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை
- இயல் 4.5 இலக்கணம் – பொது
4.1. செயற்கை நுண்ணறிவு
I. பலவுள் தெரிக
1. தலைப்புக்கும் குறிப்புக்கும் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.
தலைப்பு : செயற்கை நுண்ணறிவு
குறிப்புகள் : கண்காணிப்புக் கருவி, அசைவு நிகழும் பக்கம் தன்
பார்வையைத் திருப்புகிறது. திறன்பேசியில் உள்ள வரைபடம் போக்குவரத்திற்குச்
சுருக்கமான வழியைக் காண்பிப்பது.
- தலைப்புக்குப் பொருத்தமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
- குறிப்புகளுக்குத் தொடர்பில்லாத தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
- தலைப்புக்குத் தொடர்பில்லாத குறிப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.
- குறிப்புகளுக்குத் பொருத்தமில்லாத தலைப்பு வழங்கப்பட்டுள்ளது.
விடை : தலைப்புக்குப் பொருத்தமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன
2. பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?
- துலா
- சீலா
- குலா
- இலா
II. குறுவினா
1. வருங்காலத்தில் தேவையெனக் கருதுகின்ற செயற்கை நுண்ணறிவு பொதிந்த இரண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளைக் குறிப்பிடுக.
எ.கா.
செயற்கை நுண்ணறிவால் இயங்கும் போக்குவரத்து ஊர்திகள்
- செயற்கை நுண்ணறிவால் இயங்கும் இயந்திர மனிதன் (Robo – ரோபோ)
- செயற்கை நுண்ணறிவால் இயங்கும் திறன்பேசி (Smart Phone)
III. சிறுவினா
1. இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்துகின்றனவா என்பது குறித்த சிந்தனைகளை முன்வைத்து எழுதுக.
- இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்தவில்லை.
- அது மனிதனுக்குரியத் தேவைகளை மட்டுமே மேம்படுத்தி இருக்கிறது.
- அறிவியலால் இன்று மனிதன் மனிதனாக வாழவில்லை.
- இயந்திரம் மனிதனாகிவிட்டது. மனிதன் இயந்திரம் ஆகிவிட்டான்.
- மனித நேயத்தையும் அன்பையும் இரக்கத்தையும் இன்றைய மனிதனிடம் பார்க்க முடியவில்லை.
- பணிகளால் அவன் எந்திரத்தைப் போல ஓடிக்கொண்டே உள்ளான்.
2. மனிதர்களின் மூளையைப் போன்றது, செயற்கை நுண்ணறிவு கொண்ட கணினியின் மென்பொருள். மனிதனைப் போலவே பேச, எழுத, சிந்திக்க இத்தொழில் நுட்பம் மேம்படுத்தப்படுகிறது. இதனால் மனிதகுலத்துக்கு ஏற்படுகிற நன்மைகளைப் பற்றி அறிவியல் இதழ் ஒன்றுக்கு ‘எதிர்காலத் தொழில்நுட்பம்’ என்ற தலைப்பில் எழுதுக.
எதிர்காலத் தொழில் நுட்பம்
- உயரினங்களில் மனிதரை உயர்த்திக் காட்டுவது அவர்களின் சிந்தனை ஆற்றலே! அந்தச் சிந்தனைக்குத் தொழில்நுட்பமும் துணை செய்கிறது. திறன்பேசிகளில் இயங்கும் உதவு மென்பொருள் கண்ணுக்குப் புலப்படாத மனிதனைப் போல நம்முடன் உரையாடி உதவி செய்கிறது.
- நாம் சொல்கிறவர்களுக்குத் தொலைபேசியில் அழைப்பு விடுக்கும். நாம் திறக்க கட்டளையிடுகிற செயலியைத் திறக்கும். நாம் கேட்பதை உலாவியல் தேடும், நாம் விரும்பும் அழகா கவிதைகளை இணையத்தில் தேடித்தரும். எந்தக்கடையில் எது விற்கும் என்று சொல்லும். படிப்பதற்கு உரிய நூல்களைப் பட்டியலிடும். நாம் எடுத்த ஒளிப்படங்களை பற்றிப் பட்டியிலிடும்.
- எதிர்காலத்தில் நம் நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் ஆகியோரை விடவும் உதவு மென்பொருள் நம்மை நன்கு அறிந்திருக்கும்.
IV. நெடுவினா
ஒரு குழந்தையைத் தூக்கவும் கீழே விழுந்த ஒரு தேனீர்க் கோப்பையை எடுக்கவும் மென்பொருள் அக்கறைகொள்ளுமா? வெறும் வணிகத்துடன் நின்றுவிடுமா? இக்கருத்துகளை ஒட்டிச் ‘செயற்கை நுண்ணறிவின் எதிர்கால வெளிப்பாடுகள்’ பற்றி ஒரு கட்டுரை எழுதுக.
குறிப்புச் சட்டம்
- முன்னுரை
- ஊர்திகளை இயக்குதல்
- மனிதர்களிடம் போட்டி
- கல்வித்துறை
- பிற செயல்பாடுகள்
- வேலை வாய்ப்புகளில்மாற்றம்
- இயந்திர மனிதனிடம் குழந்தை
- தோழனாய் இயந்திர மனிதன்
- உயிராபத்தை விளைவித்தல்
- வணிக வாய்ப்புகள்
- முடிவுரை
முன்னுரை:-
- ஒரு குழந்தையைத் தூக்கவும் கீழே விழுந்த ஒரு தேனீர்க் கோப்பையை எடுக்கவும் மென்பொருள் அக்கறை கொள்ளும் வெறும் வணிகத்துடன் அது நின்றுவிடாது. செயற்கை நுண்ணறிவின் வெளிப்பாடுகள் இனி மிகுதியாக இருக்கும்.
ஊர்திகளை இயக்குதல்:-
- எதிர்காலத்தில் நாம் இயக்கும் ஊர்திகளைச் செயற்கை நுண்ணறிவு கொண்டு இயக்கப்படும்.
- இத்தகைய ஊா்திகள் ஏற்படுத்தும் விபத்து குறையும்.
- போக்குவரத்து நெரிசல் இருக்காது.
- பயண நேரம் குறையும்.
- எரிபொருள் மிச்சப்படும்.
மனிதர்களிடம் போட்டி:-
- மென்பொருள்கள், கவிதைகள், கதைகள் விதவிதமான எழுந்து நடைகள் போன்றவற்றைக் கற்றுக் கொண்டு மனிதர்களிடம் போட்டியிட்டாலும் வியப்பதற்கில்லை
கல்வித்துறை:-
- கல்வித்துறையில் இத்தொழில் நுட்பத்தைப் பல விதங்களில் பயன்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் இருக்கின்றன.
பிற செயல்பாடுகள்:-
- விடுதிகளில், வங்கிகளில், அலுவலகங்களில் தற்போது மனிதன் அளிக்கும் சேவையை இயந்திர மனிதன் செய்யும்.
- நம்முடன் உரையாடுவது, ஆலோசனை வழங்குவது, பயண ஏற்பாடு செய்து தருவது, தண்ணீர் கொண்டு வந்து தருவது, குழந்தைகளுக்குப் பொம்மை கொண்டு வந்து தருவது, குழந்தைகளுக்கு வேடிக்கைக் காட்டுவது எனப் பலவற்றையும் செய்யும் நிலை வரும்
- வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றத்தை எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு கொண்டு வரும்.
இயந்திர மனிதனிடம் குழந்தை:-
- எதிர் காலத்தில் இயந்திர மனிதனிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு அலுவலகம் செல்லும் பெற்றோரைப் பார்க்க முடியும்.
தோழனாய் இயந்திர மனிதன்:-
- வயதானவர்களுக்கு உதவிகள் செய்தும், அவர்களுக்கு உற்ற தோழனாய் பேச்சுக் கொடுத்தும் பேணும் இயந்திர மனிதர்களை நாம் பார்க்க முடியும்.
உயிராபத்தை விளைவித்தல்:-
- செயற்கை நுண்ணறிவுள்ள இயந்திர மனிதர்களால், மனிதர் செய்ய இயலாத அலுப்புத் தட்டக்கூடிய கடினமான செயல்களையும் செய்ய முடியும்.
- மனித முயற்சியல் உயிராபத்தை விளைவிக்கக் கூடிய செயல்களையும் செய்ய முடியும்.
வணிக வாய்ப்புகள்:-
- பெருநிறுவனங்கள் தங்கள் பொருள்களை உற்பத்தி செய்யவும் சந்தைப்படுத்தவும், புதிய வணிக வாய்ப்புகளைச் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்திக் கொடுக்கும்.
முடிவுரை:-
- செயற்கை நுண்ணறிவு சாதனங்களால் மனிதனின் வேலைப்பளு குறைந்துள்ளது. கால விரயம் தடுக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு – கூடுதல் வினாக்கள்
I. குறு வினா
1. மின்னணுப் புரட்சிக்கான காரணங்களைக் கூறுக
- 1980-ல் ஒவ்வொருவருக்குமான தனிநபர் கணினிகளின் வளர்ச்சி
- இணையப் பயன்பாட்டின் பிறப்பு
- இவையே இன்றைய மின்னணுப் புரட்சிக்கான காரணங்களாகும்.
2. வேர்டுஸ்மித் குறிப்பு வரைக
- இதழியலில் மொழி நடையை உருவாக்கும் மென்பொருளின் பெயர் வேர்டுஸ்மித்
- இதற்கு “எழுத்தாளி” என்று பெயர்
- இதில் தகவல்களை கொடுத்தால் மட்டும் போதும் சில நொடிகளிலேய கட்டுரையை உருவாக்குகின்றன
3. வாட்சன் குறிப்பு வரைக
- 2016-ல் ஐபிஎம் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு கணினி வாட்சன்.
- சில நிமிடங்களில் இரண்டு கோடித் தரவுகளை அலசி, நோயாளி ஒருவரின் புற்றுநோயைக் கண்டுபிடித்தது.
4. செயற்கை நுண்ணறிவு நமக்கு எப்படி அறிமுகமாகிறது?
- சமூக ஊடகங்கள்
- மின்னணு சந்தைகள் மூலம் செயற்கை நுண்ணறிவு நமக்கு அறிமுகமாகிறது
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1.பொருத்தமான விடை வரிசையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
அ) மின்ன ணுப் புரட்சி – 1. Browser
ஆ)செயல்திட்ட வரைவு – 2. Data
இ) உலாவி – 3. Computer Program
ஈ) தரவு – 4. Digital Revolution
அ) 1, 4, 3, 2
ஆ) 4, 1, 2, 3
இ) 4, 3, 2, 1
ஈ) 2, 4, 1, 3
Answer:
இ) 4, 3, 2, 1
2.பொருந்தாத இணையைக் கண்டறிக.
அ) பெப்பர் ஜப்பான் சாப்ட் வங்கி
ஆ) வாட்சன்
ஐ.பி.எம். நிறுவனம்
இ) இலா – பாரத ஸ்டேட் வங்கி
ஈ) பெப்பர்
புற்றுநோயைக் கண்டுபிடித்தது
Answer:
ஈ) பெப்பர் – புற்றுநோயைக் கண்டுபிடித்தது
3.சீன நாட்டில் சூவன்சௌ துறைமுக நகரில் கட்டப்பட்ட கோயில்…………………………
அ) சிவன் கோயில்
ஆ) பெருமாள் கோயில்
இ) முருகன் கோயில்
ஈ) பிள்ளையார் கோயில்
Answer:
அ) சிவன் கோயில்
4.உயிரினங்களில் மனிதரை உயர்த்திக்காட்டுவது அவர்களின்…………………………
அ) சிந்தனை ஆற்றல்
ஆ) செல்வம்
இ) வாழ்நாள்
ஈ) ஆற்றல்
Answer:
அ) சிந்தனை ஆற்றல்
5.…………………………களில் ஒவ்வொருவருக்குமான தனி நபர் கணினிகளின் வளர்ச்சியும், இணையப் பயன்பாட்டின் பிறப்பும் இன்றைய மின்னணுப் புரட்சிக்குக் காரணமாயின.
அ) 1970
ஆ) 1960
இ) 1980
ஈ) 1950
Answer:
இ) 1980
6.இவ்வுலகை மிகுதியாக ஆளக்கூடிய ஒரு தொழில் நுட்பம்…………………………
அ) செயற்கை நுண்ணறிவு
ஆ) மென்பொருள்
இ) மீத்திறன் நுண்ண றிவு
ஈ) முகநூல், புலனம் போன்றவை
Answer:
அ) செயற்கை நுண்ணறிவு
7.இயல்பான மொழிநடையை உருவாக்குதல் என்னும் மென்பொருளின்
பெயர்…………………………
அ) வேர்டுஸ்மித்
ஆ) வேர்டுபீட்டர்
இ) வேட்ஸ்வொர்த்
ஈ) வேர்ல்டுஸ்மித்
Answer:
அ) வேர்டுஸ்மித்
8.வேர்டுஸ்மித் என்பதைத் தமிழில் ………………………… என்று அழைப்பர்.
அ) எழுத்தாளி
ஆ) எழுத்தாணி
இ) எழுத்தோவியம்
ஈ) குரலாளி
Answer:
அ) எழுத்தாளி
9.இதழியலில் செயற்கை நுண்ணறிவு செய்துள்ள குறிப்பிடத்தகுந்த மாற்றங்களில்
ஒன்று…………………………
அ) இயல்பான மொழிநடை
ஆ) கடினமான மொழிநடை
இ) தாய்மொழிநடை
ஈ) உலக மொழிகள் இணைப்பு
Answer:
அ) இயல்பான மொழிநடை
10.2016 இல் நோயாளி ஒருவரின் புற்றுநோயைக் கண்டுபிடித்த ஐ.பி.எம்.
நிறுவனத்தின் கணினியின் பெயர்…………………………
அ) வாட்சன்
ஆ) வேர்டுஸ்மித்
இ) ஸ்டீவ்ஸ்மித்
ஈ) பெப்பர்
Answer:
அ) வாட்சன்
11.செயற்கை நுண்ணறிவுக் கணினியான வாட்சன் சில நிமிடங்களில் …………………………
தரவுகளை அலசி, நோயாளி ஒருவரின் புற்றுநோயைக் கண்டுபிடித்தது.
அ) இருபதாயிரம்
ஆ) இரண்டு இலட்சம்
இ) இரண்டு கோடி
ஈ) இருபது கோடி
Answer:
இ) இரண்டு கோடி
12.…………………………உதவியாளர்களை ‘இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்
என்று பாரதியார் மெச்சுவதுபோல் மெச்சிக்கொள்ளலாம்.
அ) மெய்நிகர்
ஆ) பொய் நிகர்
இ) செயற்கை
ஈ) முதன்மை
Answer:
அ) மெய்நிகர்
13.இவ்வுலகை இதுவரை…………………………ஆண்டு கொண்டிருக்கிறது; இனிமேல் …………………………
தான் ஆளப்போகிறது.
அ) மென்பொருள், செயற்கை நுண்ணறிவு
ஆ) செயற்கை நுண்ணறிவு, மென்பொருள்
இ) நுண்ண றிவு, முகநூல்
ஈ) முகநூல், புலனம்
Answer:
அ) மென்பொருள், செயற்கை நுண்ணறிவு
14.செயற்கை நுண்ணறிவின் மிகுதியான வளர்ச்சியால் ………………………… தேவை
கூடியுள்ளது.
அ) மெய்நிகர் உதவியாளர்களின்
ஆ) தரவு அறிவியலாளர்களின்
இ) உதவியாளர்களின்
ஈ) அறிவியலாளர்களின்
Answer:
ஆ) தரவு அறிவியலாளர்களின்
15.ஜப்பானில் சாப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதன்…………………………
அ) வாட்சன்
ஆ) பெப்பர்
இ) சோபியா
ஈ) வேர்டுஸ்மித்
Answer:
ஆ) பெப்பர்
16.உலக அளவில் அதிகம் விற்பனையாகும் ரோபோ…………………………
அ) வாட்சன்
ஆ) பெப்பர்
இ) இலா
ஈ) சோபியா
Answer:
ஆ) பெப்பர்
17.பெப்பர் ரோபோக்களின் மூன்று வகையினுள் பொருந்தாததைக் கண்டறிக.
அ) வீட்டுக்குப் பயன்படுவது
ஆ) வணிகத்துக்குப் பயன்படுவது
இ) படிப்புக்குப் பயன்படுவது
ஈ) நாட்டுக்குப் பயன்படுவது
Answer:
ஈ) நாட்டுக்குப் பயன்படுவது
18.இந்தியாவின் பெரிய வங்கி…………………………
அ) இந்தியன் வங்கி
ஆ) பாரத ஸ்டேட் வங்கி
இ) கனரா வங்கி
ஈ) பரோடா வங்கி
Answer:
ஆ) பாரத ஸ்டேட் வங்கி
19.‘இலா’ என்ற உரையாடு மென்பொருளை உருவாக்கியது…………………………
அ) ஐ.பி.எம். நிறுவனம்
ஆ) பாரத ஸ்டேட் வங்கி
இ) ஹான்சன் ரோபோட்டிக்ஸ் நிறுவனம்
ஈ) சாப்ட் வங்கி
Answer:
ஆ) பாரத ஸ்டேட் வங்கி
20.இதழியலில் இயல்பான மொழிநடையை உருவாக்கும் மென்பொருள்…………………………
அ) வாட்சன்
ஆ) வழிகாட்டி வரைபடம்
இ) வேர்டுஸ்மித் (எழுத்தாளி)
ஈ) பெப்பர்
Answer:
இ) வேர்டுஸ்மித் (எழுத்தாளி
21.தகவல்களைக் கொடுத்தால், அழகான சில கட்டுரைகளை உருவாக்கும்
மென்பொருள்…………………………
அ) வாட்சன்
ஆ) வழிகாட்டி வரைபடம்
இ) வேர்டுஸ்மித் (எழுத்தாளி)
ஈ) பெப்பர்
Answer:
இ) வேர்டுஸ்மித் (எழுத்தாளி)
22.2016 இல் ஐ.பி.எம். நிறுவனத்தின் நுண்ண றிவுக் கணினி…………………………
அ) வாட்சன்
ஆ) வழிகாட்டி வரைபடம்
இ) வேர்டுஸ்மித் (எழுத்தாளி)
ஈ) பெப்பர்
Answer:
அ) வாட்சன்
23.50க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் இயந்திர மனிதர்களைப்
பணியமர்த்தியுள்ள நாடு…………………………
அ) இந்தியா
ஆ) சீனா
இ) அமெரிக்கா
ஈ) ஜப்பான்
Answer:
ஆ) சீனா
24.செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு…………………………
அ) வன்பொருள்
ஆ) மென்பொருள்
இ) இயந்திர மனிதன்
ஈ) கணினி
Answer:
ஆ) மென்பொருள்
25.“இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்” என்று
பாடியவர்…………………………
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) கவிமணி
ஈ) வைரமுத்து
Answer:
அ) பாரதியார்
26.‘இலா’ மென்பொருள் ஒரு விநாடிக்கு உரையாடும் வாடிக்கையாளர்களின்
எண்ணிக்கை…………………………
அ) பத்தாயிரம்
ஆ) ஆயிரம்
இ) ஐயாயிரம்
ஈ) பத்து
Answer:
அ) பத்தாயிரம்
27.சாப்ட் வங்கி உருவாக்கிய நாடு…………………………
அ) இந்தியா
ஆ) சீனா
இ) அமெரிக்கா
ஈ) ஜப்பான்
Answer:
ஈ) ஜப்பான்
28.பெப்பர் என்பது ஒரு…………………………
அ) வன்பொருள்
ஆ) மென்பொருள்
இ) இயந்திர மனிதன்
ஈ) கணினி
Answer:
இ) இயந்திர மனிதன்
29.ஜப்பானில் வரவேற்பாளராகவும் பணியாளராகவும் உள்ள இயந்திர மனிதன்
அ) வாட்சன்…………………………
ஆ) இலா
இ) வேர்டுஸ்மித் (எழுத்தாளி)
ஈ) பெப்பர்
Answer:
ஈ) பெப்பர்
30.ஜப்பானில் வீடுகளிலும் வணிக நிறுவனங்களிலும் உணவுவிடுதிகளிலும்
பயன்பாட்டில் உள்ள இயந்திர மனிதன்…………………………
அ) வாட்சன்
ஆ) இலா
இ) வேர்டுஸ்மித் (எழுத்தாளி)
ஈ) பெப்பர்
Answer:
ஈ) பெப்பர்
31.காண்டன் நகர் அமைந்துள்ள நாடு…………………………
அ) இந்தியா
ஆ) சீனா
இ) அமெரிக்கா
ஈ) ஜப்பான்
Answer:
ஆ) சீனா
32.தமிழ்க் கல்வெட்டு காணப்படும் பிற நாடு…………………………
அ) ஆஸ்திரேலியா
ஆ) சீனா
இ) அமெரிக்கா
ஈ) ஜப்பான்
Answer:
ஆ) சீனா
33.பண்டையத் தமிழர் அடிக்கடி வணிகத்திற்காகச் சென்று வந்த சீன
நகர்…………………………
அ) காண்டன்
ஆ) சூவன்சௌ
இ) குப்லாய்கான்
ஈ) பெய்ஜிங்
Answer:
ஆ) சூவன்சௌ
34.சீனப்பேரரசர்…………………………
அ) காண்டன்
ஆ) சூவன்சௌ
இ) குப்லாய்கான்
ஈ) பெய்ஜிங்
Answer:
இ) குப்லாய்கான்
35.சீனாவில் சிவன் கோவில் கட்டிய சீனப்பேரரசர்…………………………
அ) காண்டன்
ஆ) சூவன்சௌ
இ) குப்லாய்கான்
ஈ) பெய்ஜிங்
Answer:
இ) குப்லாய்கான்
36.பொருத்துக.
1. பெப்பர் – அ) கட்டுரை உருவாக்கும் மென்பொருள்
2. எழுத்தாளி – ஆ) இயந்திர மனிதன்
3. இலா – இ) நுண்ணறிவுக் கணினி
4. வாட்சன் – ஈ) வாடிக்கையாளர்களுடன் உரையாடும் மென்பொருள்
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
37.ஸ்மார்ட்போன் என்பதற்கு இணையான தமிழ்ச்சொல்…………………………
அ) திறன் பேசி
ஆ) தொலைபேசி
இ) அலைபேசி
ஈ) செல்பேசி
Answer:
அ) திறன் பேசி
38.…………………… தொழிற்புரட்சியின் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் அறிவும்
நம்மை வளப்படுத்த உதவும்.
அ) மூன்றாவது
ஆ) நான்காவது
இ) ஐந்தாவது
ஈ) இரண்டாவது
Answer:
ஆ) நான்காவது
************************THE END OF 4.1*****************************
4.2. பெருமாள் திருமொழி
வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்மீளாத் துயர்தரினும் வித்துவக் கோட்டம்மா! நீஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே. *
பாசுர எண்: 691
பாடலின் பொருள்
மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைக்
கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என்று உணர்ந்து நோயாளி
அவரை நேசிப்பார். வித்துவக்கோட்டில் எழுந்தருளியிருக்கும் அன்னையே!
அதுபோன்று நீ உனது விளையாட்டால் நீங்காத துன்பத்தை எனக்குத் தந்தாலும்
உன் அடியவனாகிய நான் உன் அருளையே எப்பொழுதும் எதிர்பார்த்து
வாழ்கின்றேன்.
சொல்லும் பொருளும்
- சுடினும் - சுட்டாலும்
- மாளாத-தீராத
- மாயம் - விளையாட்டு
I. சொல்லும் பொருளும்
- சுடினும் – சுட்டாலும்
- மாளாத – தீராத
- மாயம் – விளையாட்டு
II. பலவுள் தெரிக
1. ‘உனதருளே பார்ப்பன் அடியேனே’ –
யாரிடம் யார் கூறியது?
- குலசேகராழ்வாரிடம் இறைவன்
- இறைவனிடம் குலசேகராழ்வார்
- மருத்துவரிடம் நோயாளி
- நோயாளியிடம் மருத்துவர்
விடை : இறைவனிடம் குலசேகராழ்வார்
III. குறு வினா
மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை
எழுதுக.
- மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைத் துன்பம் தரும்படி கத்தியால் அறுத்து சுட்டாலும், அத்துன்பம் நமக்கு நன்மையே என்று உணர்ந்து நோயாளி மருத்துவர் மீது அன்ப காட்டுவார்.
IV. சிறு வினா
“மாளாத கால் நோயாளன் போல” என்னும் தொடரிலுள்ள உவமை சுட்டும் செய்தியை
விளக்குக.
உடலில் ஏற்பட்ட புண்
- மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைத் துன்பம் தரும்படி கத்தியால் அறுத்து சுட்டாலும், அத்துன்பம் நமக்கு நன்மையே என்று உணர்ந்து நோயாளி மருத்துவர் மீது அன்பு காட்டுவார்.
நீங்காத துன்பம்
- வித்துக் கோட்டில் எழுந்தருளயிருக்கும் அன்னையே! மருத்துவரைப் போன்று நீ எனக்கு துன்பத்தைக் தந்தாலும், உன் அடியவனாகிய நான் (நோயாளியைப் போல) உன் அருளையே எப்போதும் எதிர்பார்த்து வாழ்கிறேன்.
பெருமாள் திருமொழி – கூடுதல் வினாக்கள்
I. இலக்கணக் குறிப்பு
- மீளாத்துயர் – ஈறு கெட்ட எதிர்மறை பெயரச்சம்
- அறுத்து – வினையெச்சம்
- ஆளா உனதருளே – ஈறு கெட்ட எதிர்மறை பெயரச்சம்
II. பலவுள் தெரிக
1. பெருமாள் திருமொழியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
- 120
- 115
- 110
- 105
விடை : 105
2. பெருமாள் திருமொழியைப் பாடியவர்
- நம்மாழ்வார்
- பெரியாழ்வார்
- குலசேகர ஆழ்வார்
- ஆண்டாள்
விடை : குலசேகர ஆழ்வார்
3. குலசேகர ஆழ்வார் வாழ்ந்த காலம்
- எட்டாம் நூற்றாண்டு
- ஏழாம் நூற்றாண்டு
- ஆறாம் நூற்றாண்டு
- ஐந்தாம் நூற்றாண்டு
விடை : எட்டாம் நூற்றாண்டு
4. மாயம் என்பதன் பொருள்
- அறியாமை
- நிலையாமை
- வினோதம்
- விளையாட்டு
விடை : விளையாட்டு
5. சங்க கால இலக்கியங்களில் நிறைந்துள்ளவை
- அறிவியல் கருத்துகள்
- அறியாமை
- மூட நம்பிக்கை
- பொய்மை
விடை : அறிவியல் கருத்துகள்
6. தமிழர்,பண்டைய நாளிலிருந்தே அறிவியிலை வாழ்வியலோடு இணைத்துக் காணும்
இயல்புடையவர்களாக இருக்கிறார்கள்.
- அறியாமை
- நிலையாமை
- வினோதம்
- விளையாட்டு
விடை : விளையாட்டு
III. குறு வினா
1. தமிழர், பண்டைய நாளிலிருந்தே எதனை வாழ்வியலோடு இணைத்துக் காணும்
இயல்புடையவர்களாக இருக்கிறார்கள்?
- தமிழர்,பண்டைய நாளிலிருந்தே அறிவியிலை வாழ்வியலோடு இணைத்துக் காணும் இயல்புடையவர்களாக இருக்கிறார்கள்.
2. பெருமாள் திருமொழி நூல் குறிப்பு வரைக.
- நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ஐந்தாம் திருமொழியாக உள்ளது பெருமாள் திருமொழி ஆகும்
- நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் 105 பாடல்கள்.
- நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தினை இயற்றியவர் குலேசகர ஆழ்வார்.
3. குலசேகர ஆழ்வார் சிறு குறிப்பு வரைக
- குலேசர ஆழ்வார் பிறந்த ஊர் கேரளாவிலுள்ள திருவஞ்சிக்களம் ஆகும்.
- பெருமாள் திருமொழி, முகுந்தமாலை ஆகியன இவர் இயற்றிய நூல்கள் ஆகும்.
- வட மொழியிலும், தென் மொழியிலும் புலமை பெற்றவர்.
- எட்டாம் நூற்றாண்டில் பிறந்தவர் ஆவார்.
4. அறுத்து என்ற சொல்லுக்கு பகுபத உறுப்பிலக்கணம் காண்க
அறுத்து = அறு + த் + த் + உ
- அறு – பகுதி
- த் – சந்தி
- த் – இறந்த கால இடைநிலை
- உ – வினையெச்ச விகுதி
பலவுள் தெரிக
1.பெருமாள் திருமொழியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?
அ) 105
ஆ) 155
இ) 205
ஈ) 255
Answer:
அ) 105
2.வித்துவக்கோடு என்னும் ஊர், …………………. மாநிலத்தில்………………..
மாவட்டத்தில் உள்ளது.
அ) கேரள, பாலக்காடு
ஆ) கர்நாடக, மாண்டியா
இ) ஆந்திரா, நெல்லூர்
ஈ) கேரள, திருவனந்தபுரம்
Answer:
அ) கேரள, பாலக்காடு
3.குலசேகர ஆழ்வார் வித்துவக்கோட்டில் உள்ள இறைவனை உய்ய வந்த பெருமாளை
………………….. உருவகித்துப் பாடுகிறார்.
அ) அன்னையாக
ஆ) காதலியாக
இ) தோழனாக
ஈ) தந்தையாக
Answer:
அ) அன்னையாக
4.வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால் – என்னும் அடிகளில் இடம் பெற்றுள்ள
நயம்.
அ) மோனை
ஆ) எதுகை
இ) உருவகம்
ஈ) அந்தாதி
Answer:
ஆ) எதுகை
5.நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் …………. திருமொழியாக உள்ளது பெருமாள்
திருமொழி.
அ) மூன்றாம்
ஆ) நான்காம்
இ) ஐந்தாம்
ஈ) ஆறாம்
Answer:
இ) ஐந்தாம்
6.பெருமாள் திருமொழியைப் பாடியவர்…………………..
அ) திருமங்கையாழ்வார்
ஆ) குலசேகராழ்வார்
இ) நம்மாழ்வார்
ஈ) பொய்கையாழ்வார்
Answer:
ஆ) குலசேகராழ்வார்
7.குலசேகர ஆழ்வாரின் காலம்……………..நூற்றாண்டு.
அ) ஆறாம்
ஆ) ஏழாம்
இ) எட்டாம்
ஈ) பத்தாம்
Answer:
இ) எட்டாம்
8.‘வாளால் அறுத்து’ எனத் தொடங்கும் பெருமாள் திருமொழியின் பாடப்பகுதியாக
உள்ள முதலாயிரத்தின் பாசுரம்?
அ) 681
ஆ) 691
இ) 541
ஈ) 641
Answer:
ஆ) 691
9.‘மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்’ என்னும் அடிகளில் ‘மாயம்’
என்பதன் பொருள்
அ) பொய்மை
ஆ) நிலையாமை
இ) விளையாட்டு
ஈ) அற்புதம்
Answer:
இ) விளையாட்டு
10.காதல் நோயாளன் போன்றவர் …………………..
அ) குலசேகராழ்வார்
ஆ) வித்துவக்கோட்டு இறைவன்
இ) மக்கள்
ஈ) மருத்துவர்
Answer:
அ) குலசேகராழ்வார்
11.மருத்துவன் போன்றவர் …………………..
அ) குலசேகராழ்வார்
ஆ) வித்துவக்கோட்டு இறைவன்
இ) மக்கள்
ஈ) மருத்துவர்
Answer:
ஆ) வித்துவக்கோட்டு இறைவன்
12.“நீ ஆளா உனதருளே பார்ப்பன் அடியேன்” என்றவர் …………………..
அ) குலசேகராழ்வார்
ஆ) வித்துவக்கோட்டு இறைவன்
இ) மக்க ள்
ஈ) மருத்துவர்
Answer:
அ) குலசேகராழ்வார்
13.மாயத்தால் மீளாத் துயர் தருபவர் …………………..
அ) குலசேகராழ்வார்
ஆ) வித்துவக்கோட்டு இறைவன்
இ) மக்கள்
ஈ) மருத்துவர்
Answer:
ஆ) வித்துவக்கோட்டு இறைவன்
14.பொருத்தமில்லாத ஒன்றினைத் தேர்வு செய்க.
அ) நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம்
ஆ) முதலாயிரம்
இ) ஐந்தாம் திருமொழி
ஈ) திருப்பாவை
Answer:
ஈ) திருப்பாவை
15.வாளால் அறுத்துச் சுடுபவர் …………………..
அ) குலசேகராழ்வார்
ஆ) வித்துவக்கோட்டு இறைவன்
இ) மக்கள்
ஈ) மருத்துவர்
Answer:
ஈ) மருத்துவர்
16.சரியான சொற்றொடரைத் தேர்வு செய்க.
அ) சங்க இலக்கியத்தில் அறிவியல் கருத்துகள் நிறைந்துள்ளன.
ஆ) அறிவியல் கருத்துகள் சங்க இலக்கியத்தில் நிறைந்துள்ளன.
இ) இலக்கியத்தில் அறிவியல் சங்க கருத்துகள் நிறைந்துள்ளன.
ஈ) சங்க அறிவியல் இலக்கியத்தில் கருத்துகள் நிறைந்துள்ளன.
Answer:
அ) சங்க இலக்கியத்தில் அறிவியல் கருத்துகள் நிறைந்துள்ளன.
17.“வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்”
– இவ்வடிகளில் அமைந்த அடிஎதுகைச் சொற்கள்
அ) வாளால் – மாளாத
ஆ) நோயாளன் – மாயத்தால்
இ) மருத்துவன் – நோயாளன்
ஈ) வாளால் – நோயால்
Answer:
அ) வாளால் – மாளாத
18.“வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்” இவ்வடிகளில் அமைந்த முரண்
சொற்கள்
அ) வாளால் – மாளாத
ஆ) நோயாளன் – மாயத்தால்
இ) மருத்துவன் – நோயாளன்
ஈ) வாளால் – நோயால்
Answer:
இ) மருத்துவன் – நோயாளன்
*****************************THE END OF 4.3*************************************
4.3. பரிபாடல்
விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்கரு வளர் வானத்து இசையில் தோன்றி,உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;உந்து வளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும்செந்தீச் சுடரிய ஊழியும்; பனியொடுதண்பெயல் தலைஇய ஊழியும்; அவையிற்றுஉள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு,மீண்டும் பீடு உயர்பு ஈண்டி, அவற்றிற்கும்உள்ளீடு ஆகிய இருநிலத்து ஊழியும் ...
பா. எண். 2 : 4-12
சொல்லும் பொருளும்
- விசும்பு - வானம்
- ஊழி - யுகம்
- ஊழ் - முறை
- தண்பெயல் - குளிர்ந்த மழை
- ஆர்தருபு - வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த
- ஈண்டி - செறிந்து திரண்டு
I. சொல்லும் பொருளும்
- விசும்பு – வானம்
- ஊழி – யுகம்
- ஊழ – முறை
- தண்பெயல் – குளிர்ந்த மழை
- ஆர்தருபு – வெள்ளததில் மூழ்கிக் கிடந்த
- பீடு – சிறப்பு
- ஈண்டி – செறிந்து திரண்டு
II. இலக்கணக் குறிப்பு
- ஊழ்ஊழ் – அடுக்குத்தொடர்
- வளர்வானம் – வினைத்தொகை
- செந்தீ – பண்புத்தொகை
- வரா (ஒன்றன்) – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- தோன்றி – வினையெச்சம்
- மூழ்கி – வினையெச்சம்
- கிளர்ந்த – பெயரெச்சம்
III. இலக்கணக் குறிப்பு
கிளர்ந்த = கிளர் + த் (ந்) + த் + அ
- கிளர் – பகுதி
- த் – சந்தி
- த் (ந்) – ந் ஆனது விகாரம்
- த் – இறந்தகால இடைநிலை
- அ – பெயரச்ச விகுதி
IV. பலவுள் தெரிக
பரிபாடல் அடியில் ‘விசும்பும் இசையும்’ என்னும் தொடர் எதனைக்
குறிக்கிறது?
- வானத்தையும் பாட்டையும்
- வானத்தையும் புகழையும்
- வானத்தையும் பூமியையும்
- வானத்தையும் பேரொலியையும்
விடை : வானத்தையும் பேரொலியையும்
III. குறு வினா
உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எவை எவையெனப் பரிபாடல் வழி
அறிதவற்றைக் குறிப்பிடுக
- நிலம்
- நீர்
- காற்று
- வானம்
- நெருப்பு
IV. சிறு வினா
நம் முன்னோர் அறிவியல் கருத்துக்களை இயற்கையுடன் இணைத்துக் கூறுவதாக
தொடங்குகின்ற பின்வரும் சொற்பொழிவைத் தொடர்ந்து நிறைவு செய்க.
- பேரன்பிற்குரிய அவையோர் அனைவருக்கும் வணக்கம்! இன்று இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழுடன் அறிவியிலை நான்காம் தமிழாக கூறுகின்றனர். ஆதிகாலந்தொட்டு இயங்கி வரும் தமிழ் மொழியில் அறிவயில் என்பது தமிழர் வாழ்வியேலாடு கலந்து கரைந்து வந்துள்ளதை இலக்கியங்கள் மூலம் அறிகிறோம். அண்டத்தை அளந்தும், தோற்றத்தை ஊகித்தும் கூறும் அறிவியல் செய்திகள் இலக்கியங்களில் உள்ளன.
- சங்க இலக்கியமான் பரிபாடலில்….பூமியின் தோற்றம் குறித்து சொல்லப்பட்டுள்ளது.
- எதுவுமே இல்லாத பெருவெளியில் அண்டத் தோற்றத்துக்கு காரணமான கரு பேராெலியுடன் தோன்றியது.
- உருவமில்லாத காற்று முதலான பூதங்களின் அணுக்களடன் வளர்கின்ற என்னும் முதல் பூதங்கள் உருவாகின.
- அந்த அணுக்களின் ஆற்றல் கிளர்ந்து பருப்பொருள்கள் சிதறும் படியாகப் பல காலங்கள் கடந்தது.
- பின்னர் பூமி குளிரும் படியாகத் தொடரந்து பெய்த மழையால் பூமி வெள்ளத்தில் மூழ்கியது.
- மீண்டும் மீண்டும் நிறை வெள்ளத்தில் இப்பெரிய புவி மூழ்கி உயிர்கள் உருவாகி வாழ்வத்ற்கு ஏற்ற சூழல் தோன்றியது.
- இச்சூழல் மாற்றத்தினால் உயிர்கள் தோன்றி நிலை பெற்று வாழ்கின்றன.
- புவி உருவாகிய நிகழ்வை அறிவியல் அறிஞர்கள் கண்டறியும் முன்பே நம் தமிழர் கண்டறிந்தனர் என்பது தமிழருக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியும் பெருமைக்குரிய செயலுமாகும்.
பரிபாடல் – கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. பரிபாடல் _________ நூல்களுள் ஒன்று.
விடை : எட்டுத்தொகை
2. பரிபாடலை எழுதியவர் _________
விடை : கீரந்தையார்
3. பரிபாடல் _________ என்னும் புகழுடையது.
விடை : ஓங்கு பரிபாடல்
4. _________ என்பவர் அமெரிக்க வானியல் அறிஞர்.
விடை : எட்வின் ஹப்பிள்
5. முதல் பூசம் எனப்படுவது _________ ஆகும்.
விடை : வானம்
II. குறு வினா
1. சங்க இலக்கிய நூல்கள் மூலம் நீவீர் அறிந்து கொள்ளும் செய்தி யாது?
- ஈராயிம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழ் மக்களின் வாழ்க்கை முறை, அறிவாற்றல், சமூக உறவு, இயற்கையப் புரிந்து கொள்ளும் திறன்.
2. பரிபாடல் நூல் குறிப்பு வரைக.
- அகம் சார்ந்த பரிபாடல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
- இந்நூல் ” ஓங்கு பரிபாடல்” என்னும் புகழுடையது.
- சங்க நூல்களுள் பண்ணோடு பாடப்பட்ட நூல்.
- உரையாசிரியர்கள் எழுபது பாடல்கள் இருப்பதாகக் கூறியுள்ளனர்.
- இப்போது 24 பாடல்களே கிடைத்துள்ளன.
3. அண்டப்பகுதி குறித்து மாணிக்கவாசகர் குறிப்பிடும் செய்தி யாது?
- அண்டப்குதியின் உருண்டை வடிவம் ஒப்பற்ற வளமான காடசியும் ஒன்றுடன் ஒன்று நூறு கோடிக்கும் மேல் விரிந்து நின்றன.
- கதிரவனின் ஒளிக்கற்றையில் தெரியும் தூசுத்துகள் போல அவை நுண்மையாக இருக்கின்றன.
4. பால்வீதி பற்றி எட்வின் ஹப்பிள் நிருபித்துக் கூறிய செய்தியை கூறு
- அண்டப் பெருவெளியில் நம் பால்வீதி போன்று எண்ணற்ற பால்வீதிகள் உள்ளன.
- வெளியே எண்ணற்ற பால்வீதிகள் உள்ளன.
- வெளியே நின்று அதைப் பார்த்தோமெனில் சிறுதூசி போலக் கோடிக்கணக்கான பால்வீதிகள் தூசுகளாத் தெரியும்.
பலவுள் தெரிக
1.பொருத்தமான விடை வரிசையைத் தேர்ந்தெடு.
1. தண்பெயல் – வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த
2. ஆர் தருபு – செறிந்து திரண்டு
3. பீடு – குளிர்ந்த மழை
4. ஈண்டி – சிறப்பு
அ) 1, 3, 2, 4
ஆ) 3, 2, 4, 1
இ) 4, 2, 1, 3
ஈ) 3, 1, 4, 2
Answer:
ஈ) 3, 1, 4, 2
2.இதுவரைக்கும் நமக்குக் கிடைத்துள்ள பரிபாடல் நூலில் உள்ள பாடல்களின்
எண்ணிக்கை எத்தனை?
அ) 24
ஆ) 34
இ) 44
ஈ) 54
Answer:
அ) 241
3.எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று
அ) பரிபாடல்
ஆ) முல்லைப் பாட்டு
இ) நாலடியார்
ஈ) மூதுரை
Answer:
அ) பரிபாடல்
4.‘விசும்பில் ஊழி’ எனத் தொடங்கும் பரிபாடலை எழுதியவர்.
அ) நக்கீரர்
ஆ) மருதனார்
இ) கீரந்தையார்
ஈ) ஓதலாந்தையார்
Answer:
இ) கீரந்தையார்
5.பரிபாடல் “ ……………….. ” என்னும் புகழுடையது.
அ) நற்பரிபாடல்
ஆ) புகழ் பரிபாடல்
இ) ஓங்கு பரிபாடல்
ஈ) உயர் பரிபாடல்
Answer:
இ) ஓங்கு பரிபாடல்
6.சங்க நூல்களுள் பண்ணோடு பாடப்பட்ட நூல் …………………
அ) நற்றிணை
ஆ) முல்லைப்பாட்டு
இ) பட்டினப் பாலை
ஈ) பரிபாடல்
Answer:
ஈ) பரிபாடல்
7.பரிபாடலில் எழுபது பாடல்கள் இருப்பதாகக் கூறியுள்ளவர்கள் ………………………
அ) புலவர்கள்
ஆ) வரலாற்று ஆய்வாளர்கள்
இ) இலக்கிய ஆய்வாளர்கள்
ஈ) உரையாசிரியர்கள்
Answer:
ஈ) உரையாசிரியர்கள்
8.எட்வின் ஹப்பிள் என்பவர்………………….
அ) அமெரிக்க மருத்துவர்
ஆ) பிரெஞ்சு ஆளுநர்
இ) அமெரிக்க வானியல் அறிஞர்
ஈ) போர்ச்சுக்கீசிய மாலுமி
Answer:
இ) அமெரிக்க வானியல் அறிஞர்
9.எட்வின் ஹப்பிள் ………………..இல் நம் பால்வீதி போன்று எண்ணற்ற பால்வீதிகள்
உள்ளன என்று நிரூபித்தார்.
அ) 1921
ஆ) 1821
இ) 1924
ஈ) 1934
Answer:
இ) 19241
10.“அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கும்.
சிறிய ஆகப் பெரியோன் தெரியின்” – என்று குறிப்பிடும் நூல்?
அ) பரிபாடல்
ஆ) கலித்தொகை
இ) பெருமாள் திருமொழி
ஈ) திருவாசகம்
Answer:
ஈ) திருவாசகம்
11.பொருத்திக் காட்டுக.
i) ஊழ் ஊழ் – 1. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
iii) வளர் வானம் – 2. பண்புத்தொகை
iii) செந்தீ – 3. வினைத்தொகை
iv) வாரா – 4. அடுக்குத் தொடர்
அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 2, 1
இ) 2, 4, 1, 3
ஈ) 4, 2, 1, 3
Answer:
அ) 4, 3, 2, 1
12.பொருத்திக் காட்டுக.
i) விசும்பு – 1. சிறப்பு
ii) ஊழி – 2. யுகம்
iii) ஊழ் – 3. வானம்
iv) பீடு – 4. முறை
அ) 3, 2, 4, 1
ஆ) 4, 3, 2, 1
இ) 1, 2, 3, 4
ஈ) 3, 4, 1, 2
Answer:
அ) 3, 2, 4, 1
13.‘கிளர்ந்த’ என்னும் சொல்லைப் பிரிக்கும் முறை ………………
அ) கிளர்ந்து + அ
ஆ) கிளர் + த் + த் + அ
இ) கிளர் + ந் + த் + அ
ஈ) கிளர் + த்(ந்) + த் + அ
Answer:
ஈ) கிளர்+த்(ந்)+த்+அ
14.முதல் பூதம் எனப்படுவது ………………..
அ) வானம்
ஆ) நிலம்
இ) காற்று
ஈ) நீர்
Answer:
அ) வானம்
15.“கரு வளர் வானத்து இசையில் தோன்றி,
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்”
– இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள இலக்கிய நயம்?
அ) எதுகை
ஆ) மோனை
இ) இயைபு
ஈ) அந்தாதி
Answer:
அ) எதுகை
16.முதல் பூதம் …………..
அ) வானம்
ஆ) நிலம்
இ) நீர்
ஈ) காற்று
Answer:
அ) வானம்
17.பரிபாடலில் புவிக்குக் கூறப்பட்ட உவமை ……………………..
அ) நெருப்புப் பந்து
ஆ) உருவம் இல்லாத காற்று
இ) வெள்ளம்
ஈ) ஊழி
Answer:
அ) நெருப்புப் பந்து
18.“விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல” – இவ்வடியில் அமைந்துள்ள பெரும்பான்மை
நயம் ……………….
அ) எதுகை
ஆ) மோனை
இ) முரண்
ஈ) இயைபு
Answer:
ஆ) மோனை
19.நெருப்புப்பந்தாய் வந்து குளிர்ந்தது ……………
அ) பூமி
ஆ) காற்று
ஈ) நீர்
Answer:
அ) பூமி
20.“விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல” – இவ்வடியில் ‘விசும்பு’ என்னும்
சொல்லின் பொருள் ………………….
அ) வானம்
ஆ) காற்று
இ) யுகம்
ஈ) முறை
Answer:
அ) வானம்
21.“விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல” – இவ்வடியில் ‘ஊழி’ என்னும் சொல்லின்
பொருள் ………………….
அ) வானம்
ஆ) காற்று
இ) யுகம்
ஈ) முறை
Answer:
இ) யுகம்
22.“விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல” – இவ்வடியில் ‘ஊழ்’ என்னும் சொல்லின்
பொருள் ……………………
அ) வானம்
ஆ) காற்று
இ) யுகம்
ஈ) முறை
Answer:
ஈ) முறை
23.1300ஆண்டுகளுக்கு முன் திருஅண்டப்பகுதி பற்றிக் கூறியவர் ……………………
அ) மாணிக்கவாசகர்
ஆ) கீரந்தையார்
இ) பெருஞ்சித்திரனார்
ஈ) கபிலர்
Answer:
அ) மாணிக்கவாசகர்
24.“தண்பெயல் தலைஇய ஊழியும்” இதில் ‘குளிர்ந்த மழை’ என்னும் பொருள் தரும்
சொல் ……………………
அ) தண்பெயல்
ஆ) தலை
இ) இய
ஈ) ஊழி
Answer:
அ) தண்பெயல்
******************************THE END OF 4.3*************************************
4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை
கற்பவை கற்றபின்
1.“அறிவைவிட மிகவும் முக்கியமானது கற்பனைத் திறன். ஏனெனில் அறிவு என்பது நாம்
தற்போது அறிந்தும் புரிந்தும் வைத்திருப்பவற்றோடு முடிந்து விடுகிறது.
கற்பனைத் திறனோ இந்த ஒட்டு மொத்தப் பேரண்டத்தையும் அளப்பது. இன்று நாம்
அறிந்திருப்பதை மட்டுமன்று; இனி நாம் அறிந்து கொள்ளப் போவதையும்
உள்ளடக்கியது” – ஐன்ஸ்டைன்.
“வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் வெற்றிக்கான வழி அதில் இருக்கவே
செய்கிறது. நிச்சயம் என் ஆராய்ச்சியில் நான் வெல்வேன். அதன்மூலம் மனித இனம்
தொடர வழி வகுப்பேன்” – ஸ்டீபன் ஹாக்கிங்.
இவ்விருவரின் கூற்றுகளைப் பாடப்பகுதி உணர்த்தும் கருத்துகளோடு ஒப்பிட்டு
உரையாடுக.
Answer:
மணி: அறிவைவிட மிகவும் முக்கியமானது கற்பனைத் திறன் என அறிவியல் அறிஞர்
ஐன்ஸ்டைன் கூறியுள்ளாரே. அதைப் பற்றிய காரணம் என்னவாக இருக்கும்?
முகில்: அறிவு என்பது நாம் தற்போது அறிந்தும் புரிந்தும் வைத்திருப்பதோடு
முடிந்து விடுகிறது. கற்பனைத் திறனோ இந்த ஒட்டு மொத்தப் பேரண்டத்தையும்
அளந்து விடுகிறது. இன்று நாம் அறிந்திருப்பதை மட்டுமன்று; இனி நாம் அறிந்து
கொள்ளப் போவதையும் உள்ளடக்கியது.
மணி: ஐன்ஸ்டைனது E = MC2 கோட்பாட்டை யாரும் ஏற்றுக் கொள்ளாததற்கான காரணம்
இதுவாக இருக்குமோ?
முகில்: ஆம்! ஐன்ஸ்டைன் ஈர்ப்பலைகள் குறித்த முடிவுகளைக் கணிதச் சமன்பாடுகள்
மூலம் கோட்பாடுகளாகச் சொன்னார். அவரது கோட்பாடுகளை அறிவுத்திறனுடன்
கற்பனையையும் சேர்த்து யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. 100 ஆண்டுகளுக்குப் பின்
ஈர்ப்பலைகள் இருப்பதை உலகம் கண்டு கொண்டது.
மணி: ‘வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருந்தாலும் வெற்றிக்கான வழி அதில் இருக்கவே
செய்கிறது’ என்று ஸ்டீபன் ஹாக்கிங் கூறியதைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன?
முகில்: ஆம் ஹாக்கிங்கின் கூற்றுக்கு அவரே சிறந்த உதாரணமாக இருக்கிறார்கள்.
மணி: எப்படி?
முகில்: 1963 ஆம் ஆண்டு பக்கவாதம் என்னும் நரம்பு நோயால் பாதிக்கப்பட்ட போது
அவருக்கு வயது 21. மருத்துவர்கள் இவர் சில நாட்கள் மட்டுமே உயிரோடிருப்பார்
என்றனர். ஆனால் மருத்துவ உலகமே மிரண்டு போகும்படி 53 ஆண்டுகள் இயங்கினார்.
1985 இல் மூச்சுக்குழல் தடங்களால் பேசும் திறனை இழந்தார். எஞ்சியது
கன்னத்தின் தசையசைவும் கண் சிமிட்டலும் மட்டுமே.
மணி: ஹாக்கிங்கின் உடல் நலக் குறைவிற்கும் தன்னம்பிக்கைக்கும் உள்ள தொடர்பு
யாது?
முகில்: ஹாக்கிங் அவருடைய கன்னத்து அசைவுகள் மூலம் தன் கருத்தை தட்டச்சு
செய்து வெளிப்படுத்தினார். கருந்துளை பற்றி ஆராய்ச்சி செய்து தன் கோட்பாடுகளை
விண்மீன் இயக்கத்தோடு ஒப்பிட்டு உலகம் புரிந்து கொள்ளும் வகையில்
விளக்கினார். 1988ஆம் ஆண்டு இவர் இயற்றிய காலத்தின் சுருக்கமான வரலாறு’ என்ற
நூல் நாற்பது மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அந்நூல் ஒரு கோடி
படிகளுக்கு மேல் விற்பனையாகி உள்ளது.
மணி: கருந்துளைப் பெருவெடிப்பு ஆகியன பற்றிய அரிய உண்மைகள் அந்நூலில் உள்ளன.
அறிவுத் தேடலில் உடல், உள்ளத் தடைகளைத் தகர்த்த மாமேதை ஸ்டீபன் ஹாக்கிங்.
முகில்: உண்மைதான். அவர்கூறியதத்துவத்திற்கு அவரேசிறந்த எடுத்துக்காட்டாக
வாழ்ந்திருக்கிறார். இத்தகைய அறிஞர்களைப் பற்றிய செய்திகளை விளக்கிய
தங்களுக்கு மிக்க நன்றி!
2.கருந்துளைச் சார்ந்த செய்தியை அறிவியல் இதழ் ஒன்றிற்குக்
குறுங்கட்டுரையாக எழுதுக.
Answer:
முன்னுரை :
- நமது பால்வீதியில் கோடிக்கணக்கான விண்மீன்கள் ஒளிர்கின்றன. அவற்றுள் நம் ஞாயிறும் ஒன்று விண்மீன்களின் ஆயுள் கால முடிவில் நிகழும் நிகழ்வுகளைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
விண்மீன் சுருக்கம் :
- ஒரு விண்மீனின் ஆயுள் கால முடிவில் உள்நோக்கிய ஈர்ப்பு விசை கூடுகிறது. அதனால் விண்மீன் சுருங்கத் தொடங்குகிறது. விண்மீன் சுருங்கச் சுருங்க அதன் ஈர்ப்பாற்றல் உயர்ந்து கொண்டே சென்று அளவற்றதாகிறது. ஜான் வீலர் கருத்து கருந்துளை என்ற சொல்லையும் கோட்பாட்டையும் முதன் முதலில் வெளியிட்டவர் ஜான்வீலர். சுருங்கிய விண்மீனின் ஈர்ப்பெல்லைக்குள் செல்கிற எதுவும் ஏன் ஒளியும் கூட ஈர்க்கப்படும். இவ்வாறு உள்சென்ற எதுவும் வெளிவர முடியாததனால் இதனைக் கருந்துளை என்றார் ஜான் வீலர்.
ஹாக்கிங் கதிர்வீச்சு :
- சில நேரங்களில் உண்மை பொய்யையும் மிஞ்சுவதாக அமைகிறது. கருந்துளைப் பற்றிய உண்மைகளும் அப்படியே. ஹாக்கிங் மேற்கொண்ட கருந்துளை ஆராய்ச்சி முடிவு ஹாக்கிங் கதிர்வீச்சு’ என அழைக்கப்படுகிறது.
கருந்துளைக் கோட்பாடு :
- கருந்துளையினுள் செல்லும் எந்த ஒன்றும் தப்பித்து வெளியே வர முடியாது. கருந்துளையின் ஈர்ப்பு எல்லையிலிருந்து கதிர்வீச்சுகள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கருந்துளை உண்மையிலேயே கருப்பாக இருப்பதில்லை. கருந்துளையில் இருந்து ஒரு கட்டத்தில் கதிர் வீச்சும் அணுத்துகள்களும் கசியத் தொடங்கி இறுதியில் கருந்துளை வெடித்து மறைந்து விடும். இக்கோட்பாடுகளை ஹாக்கிங் கோட்பாடுகளாக வெளியிடாமல் விண்மீன் இயக்கத்தோடு ஒப்பிட்டு விளக்கியதால் உலகம் கருந்துளைக் கோட்பாட்டை எளிதில் புரிந்து கொண்டது.
முடிவுரை :
- அண்டவெளியில் காணப்படும் கருந்துளை அழிவு ஆற்றல் என்று கருதப்பட்டது. ஆனால் ஹாக்கிங், கருந்துளைப் படைப்பின் ஆற்றல் என்று நிரூபித்தார்.
நெடுவினா
1.“அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்குடன் ‘விண்வெளிப் பயணம்’ என்னும்
தலைப்பில் கற்பனைக் கதை ஒன்று எழுதுக.
Answer:
அறிமுகவுரை:
- இலக்கியங்களில் நிலவிய அறிவியல் கோட்பாடுகளையும் நம்பிக்கைகளையும் அறியும் பொருட்டு நானும், எம் வகுப்பு மாணவர்களும், ஆசிரியர்கள் சிலரோடு ஸ்டீபன் ஹாக்கிங்குடன் விண்வெளிப் பயணம் மேற்கொண்டோம்.
பேரண்டம்:
- பேரண்டப் பெருவெடிப்பு, கருந்துளைகள் பற்றியதான ஸ்டீபன் ஹாக்கிங்கின் ஆராய்ச்சிகள் முக்கியமானவை. இப்பேரண்டம் பெருவெடிப்பினால் உண்டானதே என்பதற்கான சான்றுகளைக் கணிதவியல் அடிப்படையில் எங்களுக்கு விளக்கினார். ‘இப்புவியின் படைப்பில் கடவுள் போன்ற ஒருவர் பின்னணியில் இருந்தார்’ என்பதை மறுத்தார். பிரபஞ்சத்தை இயக்க வைக்கும் ஆற்றலாகக் கடவுள் என்ற ஒருவரைக் கட்டமைக்க வேண்டியதில்லை’ என்றார்.
விண்மீன்கள்:
- விண்வெளியில் பால்வீதியில் எங்கள் விண்வெளி ஓடம் சுற்றிக் கொண்டிருந்தது. அப்போது ஹ ாக்கின், ‘நமது பால் வீதியில் கோடிக்கணக்கான விண்மீன்கள் ஒளிருகின்றன. அவற்றுள் ஞாயிறும் ஒன்று. ஒரு விண்மீனின் ஆயுள் கால முடிவில் உள்நோக்கிய ஈர்ப்பு விசை கூடுகிறது. அதனால் விண்மீன் சுருங்கத் தொடங்குகிறது. விண்மீன் சுருங்கச் சுருங்க அதன் ஈர்ப்பாற்றல் உயர்ந்து கொண்டே சென்று அளவற்றதாகிறது என்று விளக்கினார்.
கதிர்வீச்சும் துகளும்:
- “சில நேரங்களில் உண்மையானது புனைவை விடவும் வியப்பூட்டுவதாக அமைகிறது. அப்படி ஓர் உண்மைதான் கருந்துளைகள் பற்றியதும் என்பதை அறிந்து கொண்டோம். எப்படியெனில், கருந்துளையினுள் செல்லும் எந்த ஒன்றும் தப்பித்து வெளியே வர முடியாது. கருந்துளையின் ஈர்ப்பு எல்லையிலிருந்து கதிர்வீச்சுகள் வெளிப்பட்டுக் கொண்டிருந்தன. கருத்துளை உண்மையிலேயே கருப்பாக இல்லை என்பதை நேரில் கண்டோம். அப்போது ஹாக்கிங், கருந்துளையிலிருந்து ஒரு கட்டத்தில் கதிர்வீச்சும் அணுத்துகள்களும் கசியத் தொடங்கி இறுதியில் வெடித்துவிடும் என்றார்.
- முன்னர் அண்டவெளியில் காணப்படும் கருந்துளை அழிவு ஆற்றல் என்று கருதப்பட்டது. ஆனால் கருந்துளை என்பது படைப்பின் ஆற்றல் என்று எங்களிடம் ஹாக்கிங் விளக்கினார்.
திரும்புதல்:
- விண்வெளி ஓடம் பூமிக்கு திரும்பிக் கொண்டிருந்த போது பல வடிவிலான விண்கற்கள் மற்றும் தொலைவில் தூசுகள் போன்ற பால்வீதிகளையும் கண்டு அதனைப் பற்றிய சில கருத்துகளைப் பேசிக் கொண்டே பூமியை வந்தடைந்தோம். எங்களை வரவேற்க பலரும் கூடி வந்திருந்தனர்.
நிறைவுரை:
- விண்வெளிப் பயணம் மேற்கொண்ட எங்களை வரவேற்றுப் பாராட்டி, வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்நிகழ்வுகள் அனைத்தும் எம் வாழ்வில் மறக்க முடியாதவையாகவே இருக்கின்றன.
பலவுள் தெரிக
1.பெரியார் அறிவியல் தொழில்நுட்பக் கழகம் நிறுவப்பட்ட ஆண்டு…………………..
அ) 1978
ஆ) 1988
இ) 1972
ஈ) 1982
Answer:
ஆ) 1988
2.பெரியார் அறிவியல் தொழில்நுட்பக் கழகத்திலுள்ள காட்சிக்
கூடங்கள்…………………..
அ) 8
ஆ) 9
இ) 10
ஈ) 15
Answer:
இ) 10
3.தற்காலத்தின்…………………..என்று புகழப்படுபவர் ஸ்டீபன் ஹாக்கிங்.
அ) விடிவெள்ளி
ஆ) நம்பிக்கை மனிதன்
இ) ஐன்ஸ்டைன்
ஈ) அரிஸ்டாட்டில்
Answer:
இ) ஐன்ஸ்டைன்
4.ஸ்டீபன் ஹாக்கிங் இங்கிலாந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆண்டு
வயது…………………..
அ) 1963, 21
ஆ) 1965, 23
இ) 1961, 19
ஈ) 1959, 17
Answer:
அ) 1963, 21
5.ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு ஏற்பட்ட நோய்…………………..
அ) காலரா
ஆ) தொழு நோய்
இ) பக்கவாதம்
ஈ) காய்ச்ச ல்
Answer:
இ) பக்கவாதம்
6.ஸ்டீபன் ஹாக்கிங் மூச்சுக்குழாய்த் தடங்கலால் பேசும் திறனை இழந்த
ஆண்டு…………………..
அ) 1963
ஆ) 1983
இ) 1985
ஈ) 1973
Answer:
இ) 1985
7.பக்கவாதம் என்னும் நரம்பு நோய்ப் பாதிப்புடன் ஸ்டீபன் ஹாக்கிங் மேலும்
இயங்கிய ஆண்டுகள்…………………..
அ) 23
இ) 43
ஆ) 21
ஈ) 53
Answer:
ஈ) 53
8.இப்பேரண்டம் பெருவெடிப்பினால் உருவானதே என்பதற்கான சான்றுகளை…………………..
அடிப்படையில் ஸ்டீபன் ஹாக்கிங் விளக்கினார்.
அ) புவியியல்
ஆ) கணிதவியல்
இ) புள்ளியியல்
ஈ) வானியல்
Answer:
ஆ) கணிதவியல்
9.இப்புவியின் படைப்பில் கடவுள் என்ற ஒருவர் பின்னணியில் இருந்தார் என்பதை
ஸ்டீபன் ஹாக்கிங்…………………..
அ) ஏற்றுக் கொண்டார்
ஆ) ஆய்வுக்கு உட்பட்டது என்றார்
இ) மறுத்தார்
ஈ) உலகம் முழுவதும் பரப்பினார்
Answer:
இ) மறுத்தார்
10.பிரபஞ்சத்தை இயக்க வைக்கும் ஆற்றலாகக் கடவுள் என்ற ஒருவரைக் கட்டமைக்க
வேண்டியதில்லை என்று கூறியவர்…………………..
அ) ஸ்டீபன் ஹாக்கிங்
ஆ) வேர்ட்ஸ்வொர்த்
இ) அரிஸ்டாட்டில்
ஈ) கார்ல் மார்க்ஸ்
Answer:
அ) ஸ்டீபன் ஹாக்கிங்
11.கருந்துளை என்ற சொல்லையும் கோட்பாட்டையும் முதலில்
பயன்படுத்தியவர்…………………..
அ) ஸ்டீபன் ஹாக்கிங்
ஆ) ஜான் வீலர்
இ) வேர்டுஸ்மித்
ஈ) வாட்சன்
Answer:
அ) ஸ்டீபன் ஹாக்கிங்
12.ஸ்டீபன் ஹாக்கிங்கின் முன்னோடிகள்…………………..
i) ஜன்ஸ்டைன்
ii) நியூட்ட ன்
iii) கிரிகோர் மெண்டல்
அ) i, ii – சரி
ஆ) ii, ii – சரி
இ) மூன்றும் சரி
ஈ) மூன்றும் தவறு
Answer:
அ) i, ii – சரி
13.நியூட்டன், ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோர் கணக்கியல் துறையின் லூகாசியன்
பேராசிரியர் என்ற மதிப்பு மிகுந்த பதவியை வகுத்த பல்கலைக்கழகம்…………………..
அ) கொலம்பியா
ஆ) ஆக்ஸ்போர்டு
இ) கேம்பிரிட்ஜ்
ஈ) டிரான்ஸ்போர்டு
Answer:
இ) கேம்பிரிட்ஜ்
14.ஈர்ப்பலைகள் குறித்த முடிவுகளைக் கணிதச் சமன்பாடுகள் மூலம்
கோட்பாடுகளாகச் சொன்னவர்
அ) ஐன்ஸ்டைன்
ஆ) ஜான் வீலர்
இ) ஸ்டீபன் ஹாக்கிங்
ஈ) சார்லஸ் டார்வின்
Answer:
அ) ஐன்ஸ்டைன்
15.ஐன்ஸ்டைன் காலத்தில் ………….. என்னும் கோட்பாட்டை யாரும் ஏற்றுக்
கொள்ளவில்லை.
அ) E = mc2
ஆ) F = cm2
இ) E = cm2
ஈ) F = mc2
Answer:
அ) E = mc2
16.ஐன்ஸ்டைன் ஈர்ப்பலைகள் இருப்பதாகக் கூறியதை உலகம் ……………………
ஆண்டுகளுக்குப் பின் கண்டு கொண்டது.
அ) 100
ஆ) 200
இ) 150
ஈ) 250
Answer:
அ) 1001
17.ஸ்டீபன் ஹாக்கிங் விளக்கிய கருந்துளைக் கோட்பாட்டை உலகம் எளிதில்
புரிந்து கொள்ளக் காரணம்
அ) கணிதச் சமன்பாடுகள் மூலம் கோட்பாடுகளாகச் சொன்னதால்
ஆ) விண்மீன் இயக்கத்தோடு ஒப்பிட்டுக் கூறியதால்
இ) பருப்பொருள்களோடு ஒப்பிட்டுக் கூறியதால்
ஈ) பெருவெடிப்பைச் சான்று காட்டியதால்
Answer:
ஆ) விண்மீன் இயக்கத்தோடு ஒப்பிட்டுக் கூறியதால்
18.அமெரிக்காவின் உயரிய விருதான அதிபர் விருதினைப் பெற்றவர் …………………….
அ) ஸ்டீபன் ஹாக்கிங்
ஆ) அன்னை தெரசா
இ) ஹெலன் ஹெல்லர்
ஈ) கிரிகோல் மெண்டல்
Answer:
அ) ஸ்டீபன் ஹாக்கிங்
19.ஸ்டீபன் ஹாக்கிங் பெற்றுள்ள விருதுகளைக் கண்டறிக.
i) ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் விருது
ii) உல்ஃப் விருது
iii) காப்ளி பதக்கம்
iv) அடிப்படை இயற்பியல் பரிசு
அ) i, ii – சரி
ஆ) i, ii, iii – சரி
இ) i, iv – சரி
ஈ) நான்கும் சரி
Answer:
ஈ) நான்கும் சரி
20.கலீலியோவின் நினைவு நாளில் பிறந்து, ஐன்ஸ்டைனின் பிறந்த நாளில்
இறந்தவர் …………………….
அ) நியூட்டன்
ஆ) ஹெலன் கெல்லர்
இ) ஸ்டீபன் ஹாக்கிங்
ஈ) கிரிகோர் மெண்டல்
Answer:
இ) ஸ்டீபன் ஹாக்கிங்
21.ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய நூல்களுள் ‘காலத்தின் சுருக்கமான வரலாறு’ என்ற
நூல்……………..மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.
அ) 30
ஆ) 40
இ) 50
ஈ) 70
Answer:
ஆ) 40
22.ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய ‘காலத்தின் சுருக்கமான வரலாறு’ வெளிவந்த
ஆண்டு……………………..
அ) 1972
ஆ) 1976
இ) 1982
ஈ) 1988
Answer:
ஈ) 1988
23.பெருவெடிப்பு, கருந்துளை ஆகியவை பற்றிய அரிய உண்மைகளைப் பொதுமக்களிடையே
பரப்பி, ஒரு கோடிப் படிகளுக்கு மேல் விற்பனையான நூல்…………
அ) காலத்தின் சுருக்கமான வரலாறு
ஆ) ஞாலத்தின் சுருக்கமான வரலாறு
இ) ஹாக்கிங்கின் தத்துவங்கள்
ஈ) பெருவெடிப்பும் கருந்துளையும்
Answer:
அ) காலத்தின் சுருக்கமான வரலாறு
24.“கடும் பகட்டு யானை நெடுந்தேர்க் கோதை
திரு மாவியல் நகர்க் கருவூர் முன்துறை” என்று குறிப்பிடும் நூல்?
அ) அகநானூறு
ஆ) புறநானூறு
இ) கலித்தொகை
ஈ) பரிபாடல்
Answer:
அ) அகநானூறு
25.“திரு மாவியல் நகர்க் கருவூர் முன்துறை” என்பதில் குறிப்பிடப்படும்
மாவட்டம்
அ) கரூர்
ஆ) பெரம்பலூர்
இ) தஞ்சாவூர்
ஈ) திருச்சி
Answer:
அ) கரூர்
26.………………. இல் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க
விழா நாயகர் என்ற சிறப்பை ஸ்டீபன் ஹாக்கிங் பெற்றார்.
அ) 2010
ஆ) 2005
இ) 2007
ஈ) 2012
Answer:
ஈ) 2012
27.ஸ்டீபன் ஹாக்கிங் பங்கேற்ற தொலைக்காட்சித் தொடர்கள்
i) அடுத்த தலை முறை
ii) முந்தைய தலை முறை
iii) பெருவெடிப்புக் கோட்பாடு
iv) சிறுவெடிப்புக் கோட்பாடு
அ) i, ii – சரி
ஆ) i, iii – சரி
இ) iii, iv – சரி
ஈ) நான்கும் சரி
Answer:
ஆ) i, ii – சரி
28.ஸ்டீபன் ஹாக்கிங் சூடான காற்று நிரம்பிய பலூனில் வானில் பறந்து
தனது………….. ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார்.
அ) 40
ஆ) 50
இ) 60
ஈ) 70
Answer:
இ) 60
29.ஸ்டீபன் ஹாக்கிங் ………………. என்ற விமானத்தில் பூஜ்ஜிய ஈர்ப்பு விசைப்
பயணத்தை மேற்கொண்டு எடையற்ற தன்மையை உணர்ந்தார்.
அ) போயிங் 725
ஆ) போயிங் 726
இ) போயிங் 727
ஈ) போயிங் 729
Answer:
இ) போயிங் 727
30.அறிவுத் தேடலில் உடல், உள்ளத் தடைகளைத் தகர்த்த மாமேதை…………………………
அ) ஸ்டீபன் ஹாக்கிங்
ஆ) எடிசன்
இ) நியூட்டன்
ஈ) மேரி கியூரி
Answer:
அ) ஸ்டீபன் ஹாக்கிங்
31.தலை விதிதான் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என நம்புபவர்களைப்
பார்த்தால் எனக்குச் சிரிப்புதான் வருகிறது. விதிதான் தீர்மானிக்கிறது
என்றால் சாலையைக் கடக்கும் போது ஏன் இருபுறமும் பார்த்துக் கடக்கிறார்கள்?
என்று கூறியவர் ……………
அ) அரிஸ்டாட்டில்
ஆ) பெர்னாட்ஷா
இ) ஸ்டீபன் ஹாக்கிங்
ஈ) டெமாதனிஸ்
Answer:
இ) ஸ்டீபன் ஹாக்கிங்
32.அறிவைவிட மிகவும் முக்கியமானது கற்பனைத்திறன் என்று கூறியவர்
அ) ஐன்ஸ்டைன்
ஆ) நியூட்டன்
இ) ஸ்டீபன் ஹாக்கிங்
ஈ) எடிசன்
Answer:
அ) ஐன்ஸ்டைன்
33.வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் வெற்றிக்கான வழி அதில்
இருக்கவே செய்கிறது. நிச்சயம் என் ஆராய்ச்சியில் நான் வெல்வேன். அதன் மூலம்
மனித இனம் தொடர வழி வகுப்பேன் என்று கூறியவர் ………..
அ) ஐன்ஸ்டைன்
ஆ) நியூட்டன்
இ) ஸ்டீபன் ஹாக்கிங்
ஈ) எடிசன்
Answer:
இ) ஸ்டீபன் ஹாக்கிங்
******************THE END OF 4.4**********************
4.5. இலக்கணம் – பொது
I. பலவுள் தெரிக
குலசேகர ஆழ்வார் ‘வித்துவக்கோட்டம்மா’ என்று ஆண் தெய்வத்தை அழைத்துப்
பாடுகிறார். பூனையார் பால்சோற்றைக் கண்டதும் வருகிறார் ஆகிய தொடர்களில்
இடம்பெற்றுள்ள வழுவமைதி முறையே –
- மரபு வழுவமைதி, திணை வழுவமைதி
- இடவழுவமைதி, மரபு வழுவமைதி
- பால் வழுவமைதி, திணை வழுவமைதி
- கால வழுவமைதி, இடவழுவமைதி
விடை : பால் வழுவமைதி, திணை வழுவமைதி
II. குறு வினா
1. வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில்
காண்பதற்கு ஆரல்வாய்மொழிக்குச் செல்கிறேன் – இத்தொடர் கால வழுவமைதிக்கு
எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?
- கோடையில் பள்ளி விடுமுறை என்பதால் ஆரல்வாய்மொழிக்குச் செல்ல திட்டமிருக்கும் உறுதித்தன்மை நோக்கி காலவழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக இத்தொடர் அமைகிறது.
2. “சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக்
கத்துவானே தவிர கடிக்க மாட்டான்” என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப்
பற்றிப் பெருமையாகக் கூறினார் – இதில் உள்ள திணை வழுக்களைத் திருத்தி
எழுதுக.
- சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்கும். புதியவர்களைப் பார்த்துக் குரைக்குமே தவிர கடிக்காது” என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினாள்.
III. சிறு வினா
4. நேற்றிரவு பெய்த மழை எல்லாம் தொட்டியை நிறைத்திருந்தது. வாழைத் தோப்பில்
குட்டியுடன் நின்றிருந்த மாடு கத்தியது; தந்தை என்னிடம், “இலச்சுமி
கூப்பிடுகிறாள், போய்ப் பார்” என்றார். “இதோ சென்றுவிட்டேன்” என்றவாறே
அங்குச் சென்றேன். துள்ளிய குட்டியைத் தடவிக்கொடுத்து, “என்னடா
விளையாடவேண்டுமா?” என்று கேட்டு அவனை அவிழ்த்துவிட்டேன். என் தங்கை அங்கே
வந்தாள். அவளிடம், “நீயும் இவனும் விளையாடுங்கள்” என்று கூறினேன்.
அவிழ்த்துவிடப்பட்ட இலச்சுமி தொட்டியிலிருந்த நீரைக் குடித்தாள்.
இப்பத்தியிலுள்ள வழுவமைதிகளைப் பட்டியலிட்டு எழுதுக.
திருத்தப்பட்ட வழுக்கள்
- நேற்றிரவு பெய்த மழை தொட்டியை நிறைத்தது.
- வாழைத் தோட்டத்தில் கன்றுடன் நின்றிருந்த மாடு கதறியது.
- துள்ளிய கன்றைத் தடவிக் கொடுத்த…
வழுவமைதித் தொடர்கள் வழுவமைதி
வகை
1. நேற்று பெய்த மழை தொட்டியை
நிறைந்திருந்தது (நிறைந்தது) கால வழுவமைதி
2. இலட்சுமி கூப்பிடுகிறாள்.
(மாட்டைக் குறிக்கிறது) திணை வழுவமைதி
3. இதோ சென்று விட்டேன்
(சென்று விடுகிறேன்) கால வழுவமைதி
4. என்னடா விளையாட வேண்டுமா?
(மாட்டைக் குறிக்கிறது)
திணை வழுவமைதி
5. அவனை அவிழ்த்து விட்டேன்.
(பசு மாட்டைக் குறிக்கிறது) திணை வழுவமைதி
6. இலட்சுமி தொட்டியிலிருந்த நீரைக் குடித்தாள்.
(மாட்டைக் குறிக்கிறது)
திணை வழுவமைதி
இலக்கணம் பொது – கூடுதல் வினாக்கள்
I. குறு வினா
1. உயர்தினை, அஃறிணை என்றால் என்ன?
- ஆறறிவுடைய மக்களை உயர்திணை என்றும் மற்ற உயிரினங்களையும் உயிரற்ற பொருள்களையும் அஃறிணை (அல்திணை) என்றும் வழங்குவர்.
2. உயர்திணையின் பிரிவுகளை கூறு
- உயர்திணை ஆண்பால், பெண்பால், பலர்பால் என மூன்று பிரிவுகளை உடையது.
3. அஃறிணையின் பிரிவுகளை கூறு
- அஃறிணை ஒன்றன்பால், பலவின்பால் என இரு பிரிவுகளை உடையது.
4. மூவிடம் வகையினை கூறுக
- தன்மை, முன்னிலை, படர்க்கை என இடம் மூன்று வகைப்படும்.
5. வழாநிலை என்றால் என்ன?
- இலக்கண முறையுடன் பிழையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழாநிலை எனப்படும்.
6. வழு என்றால் என்ன?
- இலக்கண முறையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழு எனப்படும்
- இரு திணையும் ஐம்பாலும் மூவிடமும் காலமும் வினாவும் விடையும் பலவகை மரபுகளும் ஆகிய ஏழும் தொடர்களில் இலக்கணப் பிழைகளுடன் வந்தால் அவையும் வழு எனப்படும்.
II. சிறு வினா
மூவிடப் பெயர்களைப் பெயர்/வினை எடுத்துக்காட்டுடன் கூறுக
இடம்
பெயர் / வினை
எடுத்துக்காட்டு
தன்மை தன்மைப் பெயர்கள் நான், யான், நாம், யாம் …
தன்மை
வினைகள்
வந்தேன், வந்தோம்
முன்னிலை
முன்னிலைப் பெயர்கள் நீ, நீர்,
நீவிர், நீங்கள்
முன்னிலை
வினைகள் நடந்தாய், வந்தீர்,
சென்றீர்கள்
படர்க்கை
படர்க்கைப் பெயர்கள் அவன், அவள்,
அவர்,
அது, அவை…
படர்க்கை வினைகள்
வந்தான், சென்றாள், படித்தனர், பேசினார்கள்
பறந்தது, பறந்தன…
III. நெடு வினா
வழுவமைதி வகைகளை விவரிக்க
திணை வழுவமைதி
“என் அம்மை வந்தாள்” என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது திணைவழுவமைதி ஆகும்.
இங்கு உவப்பின் காரணமாக அஃறிணை உயர்திணையாகக் கொள்ளப்பட்டது.
பால் வழுவமைதி
“வாடா இராசா, வாடா கண்ணா” என்று தன் மகளைப் பார்த்துத் தாய் அழைப்பது
பால்வழுவமைதி ஆகும். இங்கு உவப்பின் காரணமாக, பெண்பால் ஆண்பாலாகக்
கொள்ளப்பட்டது.
இட வழுவமைதி
மாறன் என்பான் தன்னைப்பற்றிப் பிறரிடம் கூறும்போது,“இந்த மாறன் ஒருநாளும்
பொய் கூறமாட்டான்” என, தன்மையினைப் படர்க்கை இடத்தில் கூறுவது இடவழுவமைதி
ஆகும்.
கால வழுவமைதி
குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார். இத்தொடர், குடியரசுத் தலைவர் நாளை
வருவார் என அமைதல் வேண்டும். அவ்வாறு அமையவில்லை என்றாலும் நாம் பிழை யாகக்
கருதுவதில்லை. ஏனெனில் அவரது வருகையின் உறுதித்தன்மை நோக்கிக் காலவழுவமைதியாக
ஏற்றுக்கொள்கிறோம்.
மரபு வழுவமைதி
“கத்துங் குயிலோசை – சற்றே வந்து காதிற் படவேணும்”- பாரதியார். குயில் கூவும்
என்பதே மரபு, குயில் கத்தும் என்பது மரபு வழு ஆகும். இங்குக் கவிதையில்
இடம்பெற்றிருப்பதால் இது மரபு வழுவமைதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கற்பவை கற்றபின்…
I. கீழ்காணும் தொடர்களின் வழுவமைதி வகைகளை இனம் கண்டு எழுதுக.
அ) அமைச்சர் நாளை விழாவிற்கு வருகிறார்
- காலவழுவமைதி
ஆ) அவனும் நீயும் அலுவலரைப் பார்க்க ஆயத்தமாகுங்கள்
- இடவழுவமைதி
இ) “இந்தக் கண்ணன் ஒன்றைச் செய்தான் என்றால் அதை அனைவரும் ஏற்பர்” என்று
கூறினார் –
- இடவழுவமைதி
ஈ) சிறிய வயதில் இந்த மரத்தில்தான் ஊஞ்சல் கட்டி விளையாடுவோம்
- மரபுவழுவமைதி
உ) செல்வன் இளவேலன் இந்தச் சிறுவயதிலேயே விளையாட்டுத் துறையில் சாதனை
புரிந்திருக்கிறார்
- திணைவழுவமைதி
II. அடைப்புக் குறிக்குள் உள்ளவாறு மாற்றுக
1. தந்த “மகனே! நாளை உன்னுடைய தோழன் அழகனை அழைத்து வா?” என்று
சொன்னார்.
(ஆண்பாற் பெயர்களைப் பெண்பாலாக மாற்றித் தொடரை எழுதுக.)
- தந்தை மகளே உன்னுடைய தோழி அழகியை அழைத்துவா என்று சொன்னார்
2. அக்கா நேற்று வீட்டுக் வந்தது. அக்கா புறப்படும்போது அம்மா
வழியனுப்பியது. (வழுவை வழாநிலையாக மாற்றுக.)
- அக்கா நேற்று வீட்டுக்கு வந்தாள். அக்கா புறப்படும் போது அம்மா வழியனுப்பினாள்.
3. “இதோ முடித்து விடுவேன்” என்று செயலை முடிக்கும் முன்பே கூறினார்.
(வழாநிலையை வழுவமைதியாக மாற்றுக.)
- இதோ முடித்தேன் என்று சொல்லை செயலை முடிக்கும் முன்பே கூறினார்
4. அவன் உன்னிடமும் என்னிடமும் செய்திைய இன்னும் கூறவில்லை. (படர்க்கையை முன்னிலையாக, முன்னிலையைத் தன்மையாக, தன்மையைப் படர்க்கையாக
மாற்றுக.)
- என்னிடமோ உன்னிடமோ அவன் செய்தியை இன்னும் கூறவில்லை
- உன்னிடமோ என்னிடமோ அவன் செய்தியை இன்னும் கூறவில்லை
- அவன் என்னிடமோ உன்னிடமோ செய்தியை இன்னும் கூறவில்லை
5. குழந்தை அழுகிறான், பார். (வழுவை
வழாநிலையாக மாற்றுக.)
- குழந்தை அழுகிறது பார்
மொழியை ஆள்வோம்!
I. மொழிபெயர்க்க.
Malar: Devi, switch off the lights when you leave the room.
Devi: Yeah. We have to save electricity.
Malar: Our nation spends a lot of electricity for lighting up our
streets in the night.
Devi: Who knows? In future our country may launch artificial moons to
light our night time sky!
Malar: I have read some other countries are going to launch these types
of illumination satellites near future.
Devi: Superb news! If we launch artificial moons, they can assist in
disaster relief by beaming light on areas that lost power!
விடை:-
மலர் : தேவி, நீ அறையை விட்டு வெளியே செல்லும் முன் விளக்கை அணைத்து விடு.
தேவி : ஆம், நாம் மின்சாரத்தை சேமிக்க வேண்டும்.
மலர் : நம் நாடு தெரு விளக்குகளை எரிய வைப்பதற்கு நிறைய மின்சாரத்தைச் செலவு
செய்கிறது.
தேவி : யாருக்குத் தெரியும்? வருங்காலத்தில் நம் நாடு செயற்கை நிலவை நிறுவி
இரவில் வானத்தில் விள்க்குகளை எரிய வைக்கலாம்.
மலர் : வருங்காலத்தில் நிறைய நாடுகள் இவ்வகையான செயற்கைக்கோளை நிறுவ
இருப்பதாக நான் வாசித்துள்ளேன்.
தேவி : நல்ல செய்தி! நாம் செயற்கை நிலவை றிறுவினால் அது பேரழிவு மற்றும்
மின்சாம் இல்லாத சமயத்தில் ஒளியூட்டி நிவாரண உதவிகளை செய்ய வழி செய்கிறது!
II. வல்லின ஒற்றை இட்டும் நீக்கியும் எழுதுதல்.
காகத்திற்கு காது உண்டா? அதற்கு காது கேட்குமா?
எல்லா பறவைகளுக்கும் காது உண்டு. செவி துளைகள் இறகுகளால் மூடி இருக்கும்.
மற்றப்படி பாலூட்டிகளில் உள்ளதுபோல் புறசெவிமடல் இருக்காது. காகத்திற்கு காது
உண்டு. காதுக் கேட்கும். பறவைகளுக்கு பார்த்தல், கேட்டல் உணர்வு நன்றாக
வளர்ச்சிப் பெற்று இருக்கும். சுவைத்தல் உணர்வுக் குறைவாகவும் நுகர்தல்
உணர்வு இல்லையென்றேக் கூறலாம்.
யுரேகா! யுரேகா! – அறிவியல் வெளியீடு
விடை:-
காகத்திற்கு காது உண்டா? அதற்கு காது கேட்குமா?
எல்லாப் பறவைகளுக்கும் காது உண்டு.
செவித் துளைகள் இறகுகளால் மூடி
இருக்கும். மற்றப்படி பாலூட்டிகளில் உள்ளதுபோல் புறச்செவிமடல் இருக்காது. காகத்திற்கு காது உண்டு. காதுக் கேட்கும்.
பறவைகளுக்குப் பார்த்தல், கேட்டல்
உணர்வு நன்றாக வளர்ச்சிப் பெற்று இருக்கும். சுவைத்தல் உணர்வுக் குறைவாகவும்
நுகர்தல் உணர்வு இல்லையென்றேக் கூறலாம்.
யுரேகா! யுரேகா! – அறிவியல் வெளியீடு
III. கொடுக்கப்பட்டுள்ள இருசொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க.
அ) இயற்கை – செயற்கை
- பாதை தெரியாத இயற்கைக் காடுகளில் பயணிக்கச் செயற்கைக் கருவிகள் பயன்படுகின்றன.
ஆ) கொடு – கோடு
- கொடுப்பதும், கொள்வதும் ஒரு எல்லைக்கோடு போன்றதே
இ) கொள் – கோள்
- உறவினர்களை அனுசரித்து கொள். கோள் சொல்வதை தவிர்
ஈ) சிறு – சீறு
- சிறு பாம்பானாலும் சீறும் குணத்தை கொண்டுள்ளது
உ) தான் – தாம்
- தான் என எண்ணாமல் தாம் என் எண்ணுவோம்
ஊ) விதி – வீதி
- என் தலைவிதியோ வீதிகளில் கூவி விற்பது என வியாபாரி சலித்தார்.
IV. பத்தியைப் படித்துப் பதில் தருக.
பருப்பொருள்கள் சிதறும்படியாகப் பல ஊழிக் காலங்கள் கடந்து சென்றன. புவி
உருவானபோது நெருப்புப் பந்துபோல் விளங்கிய ஊழிக்காலம் தோன்றியது. பின்னர்ப்
புவி குளிரும்படியாகத் தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக் காலம் கடந்தது. அவ்வாறு
தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது. இப்படி மீண்டும்
மீண்டும் சிறப்பாகிய ஆற்றல் மிகுந்து செறிந்து திரண்டு இப்படியாக
(வெள்ளத்தில் மூழ்குதல்) நடந்த இந்தப் பெரிய உலகத்தில், உயிர்கள் வாழ்வதற்கு
ஏற்ற சூழலாகிய உள்ளீடு தோன்றியது. உயிர்கள் தோன்றி நிலைபெறும்படியாக இப்பெரிய
புவியில் ஊழிக்காலம் கடந்தது.
1. பத்தியில் உள்ள அடுக்குத்தொடர்களை எடுத்து எழுதுக.
- மீண்டும் மீண்டும்
2. புவி ஏன் வெள்ளத்தில் மூழ்கியது?
- தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது
3. பெய்த மழை – இத்தொடரை வினைத்தொகையாக மாற்றுக.
- பெய் மழை
4. இப்பத்தி உணர்த்தும் அறிவியல் கொள்கை யாது?
- பருப்பொருள்கள் சிதறுதல் (பெரு வெடிப்பு கோட்பாடு)
5. உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாக நீவிர் கருதுவன யாவை?
- நிலம், நீர், காற்று, நெருப்பு
மொழியோடு விளையாடு!
I. தொடரைப் படித்து விடையைக் கண்டறிக.
(சோறு, கற்றல், கரு, பூவில், எழுத்து)
அ) நூலின் பயன் படித்தல் எனில், கல்வியின் பயன் _________
விடை : கற்றல்
ஆ) விதைக்குத் தேவை எரு எனில், கதைக்குத் தேவை _________
விடை : கரு
இ) கல் சிலை ஆகுமெனில், நெல் _________ ஆகும்.
விடை : சோறு
ஈ) குரலில் இருந்து பேச்சு எனில், விரலில் இருந்து _________
விடை : எழுத்து
உ) மீன் இருப்பது நீரில்; தேன் இருப்பது _________
விடை : பூவில்
II. குறிப்பைப் பயன்படுத்தி விடைதருக.
குறிப்பு
எதிர்மறையான சொற்கள்
மீளாத் துயர்
மீண்ட இன்பம்
கொடுத்துச் சிவந்த
கொடாமல் கருத்த
மறைத்துக் காட்டு
திறந்து மூடு
அருகில் அமர்க
தூரத்தில் நிற்க
பெரியவரின் அமைதி
சிறியவரின் ஆர்ப்பாட்டம்
புயலுக்குப் பின்
தென்றலுக்கு முன்
அகராதியில் காண்க.
அ) அவிர்தல்
ஒளி செய்தல், பீரல், விரிதல், பாடம் செய்தல்
ஆ) அழல்
உட்டணம், எருக்கு, தீ, நெருப்பு, கள்ளி, கேட்டை நாள், கொடுவேலி
இ) உவா
இளமை, இளையோன், கடல், நிறைவு, பூரணை, யானை
ஈ) கங்குல்
இரவு, இருள், பரணி நாள்
உ) கனலி
சூரியன், , கள்ளி, கொடுவேலி, கரியன், நெருப்பு
கலைச்சொல் அறிவோம்
- Nanotechnology – மீநுண்தொழில்நுட்பம்
- Space Technology – விண்வெளித் தொழில்நுட்பம்
- Biotechnology – உயிரித் தொழில்நுட்பம்
- Cosmic rays – விண்வெளிக் கதிர்கள்
- Ultraviolet rays – புற ஊதாக் கதிர்கள்
- Infrared rays – அகச்சிவப்புக் கதிர்கள்
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1.பொருத்தமான விடை வரிசையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
அ) தன்மை வினைகள் – 1. நடந்தாய், வந்தீர்
ஆ) முன்னிலை வினைகள் – 2. நீர், நீங்கள்
இ) படர்க்கை வினைகள் – 3. வந்தேன் வந்தோம்
ஈ) முன்னிலை பெயர்கள் – 4. வந்தான், சென்றான்
அ) 1, 2, 3, 4
ஆ) 4, 3, 2, 1
இ) 3, 1, 4, 2
ஈ) 2, 4, 1, 3
Answer:
இ) 3, 1, 4, 2
2.பொருத்தமான விடை வரிசையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
அ) மருதன் – 1. பலர்பால்
ஆ) பெண்கள் – 2. ஒன்றன்பால்
இ) யானை – 3. ஆண்பால்
ஈ) பசுக்கள் – 4. பலவின்பால்
அ) 4, 3, 1, 2
ஆ) 3, 1, 2, 4
இ) 2, 4, 1, 3
ஈ) 4, 1, 3, 2
Answer:
ஆ) 3, 1, 2, 4
3.பால் என்பது ……………. உட்பிரிவு ஆகும்.
அ) திணையின்
ஆ) திணையின்
இ) காண்டத்தின்
ஈ) படலத்தின்
Answer:
ஆ) திணையின்
4.உயர்திணையின் பிரிவுகள் ………………
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
Answer:
ஆ) மூன்று
5.அஃறிணையின் பிரிவுகள் ………………
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
Answer:
அ) இரண்டு
6.இடம் ……………….. வகைப்படும்.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
Answer:
ஆ) மூன்று
7.பொருத்திக் காட்டுக.
i) நான், யான், நாம், யாம் – 1. தன்மை வினைகள்
வந்தேன், வந்தோம் – 2. தன்மைப் பெயர்கள்
iii) நீ, நீர், நீவிர், நீங்க ள் – 3. முன்னிலை வினைகள்
iv) நடந்தாய், வந்தீர், சென்றீர்கள் – 4. முன்னிலைப் பெயர்கள்
அ) 2, 1, 4, 3
ஆ) 4, 3, 2, 1
இ) 2, 4, 3,1
ஈ) 3, 4, 2, 1
Answer:
அ) 2, 1, 4, 3
8.பொருத்திக் காட்டுக.
i) அவன் – தன்மை வினை
ii) பறந்தன – 2. முன்னிலை வினை
iii) நடந்தாய் – 3. படர்க்கை வினை
iv) வந்தேன் – 4. படர்க்கைப் பெயர்
அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 4, 2, 1, 3
ஈ) 3, 4, 2, 1
Answer:
அ) 4, 3, 2, 1
9.பொருத்திக் காட்டுக.
i) செழியன் வந்தது – 1. கால வழு
ii) கண்ண கி உண்டான் – 2. இட வழு
iii) நீ வந்தேன் – 3. பால் வழு
iv) நேற்று வருவான் – 4. திணை வழு
அ) 4,3, 2, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 4, 2, 1, 3
ஈ) 2, 1, 3, 4
Answer:
அ) 4,3, 2, 11
10.ஒரு விரலைக் காட்டிச் சிறியதோ? பெரியதோ என்று கேட்பது……………….. வழு.
அ) விடை
ஆ) வினா
இ) மரபு
ஈ) கால
Answer:
ஆ) வினா
11.கண்ணன் எங்கே இருக்கிறார் என்ற வினாவிற்குக் கண்ணாடி பைக்குள்
இருக்கிறது என்று கூறுவது ……………. வழு.
அ) பால்
ஆ) வினா
இ) விடை
ஈ) மரபு
Answer:
இ) விடை
12.தென்னை மரங்கள் உள்ள பகுதியைத் தென்னந்தோட்டம் என்று கூறுவது ………………..
வழு.
அ) பால்
ஆ) வினா
இ) விடை
ஈ) மரபு
Answer:
ஈ) மரபு
13.பொருத்திக் காட்டுக.
i) என் அம்மை வந்தாள் – 1. பால் வழுவமைதி
ii) கத்துங் குயிலோசை என்றன் காதில் விழ வேண்டும் – 2. கால வழுவமைதி
iii) குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார் – 3. மரபு வழுவமைதி
iv) வாடா ராசா மகளைப் பார்த்துத் தாய் அழைப்பது – 4. திணை வழுவமைதி
அ) 4, 3, 2, 1
ஆ) 2, 3, 1, 4
இ) 4, 2, 3, 1
ஈ) 3, 4, 1, 2
Answer:
அ) 4, 3, 2, 1
14.மாறன் என்பான் தன்னைப் பற்றிப் பிறரிடம் கூறும்போது, “இந்த மாறன் ஒரு
நாளும் பொய் கூறமாட்டான் என்று கூறுவது ………………
அ) பால் வழுமமைதி
ஆ) திணை வழுவமைதி
இ) இட வழுவமைதி
ஈ) மரபு வழுவமைதி
Answer:
இ) இட வழுவமைதி
15.பொருத்துக.
1. வீரன், அண்ணன், மருதன் – அ) பெண்பால்
2. மகள், அரசி, தலைவி – ஆ) பலர்பால்
3. மக்கள், பெண்கள், ஆடவர் – இ) ஒன்றன்பால்
4. யானை, புறா, மலை – ஈ) ஆண்பால்
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
விடை :
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
16.பொருத்துக.
1. நீ வந்தேன் – அ) இட வழாநிலை
2. நீ வந்தாய் – ஆ) இட வழு
3. நேற்று வருவான் – இ) கால வழாநிலை
4. நேற்று வந்தான் – ஈ) கால வழு
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
17.பொருத்துக.
1. என் அம்மை வந்தாள் என்று மாட்டைக் கூறுவது – அ) பால் வழுவமைதி
2. வாடா இராசா, வாடா கண்ணா என மகளைத் தாய் அழைப்பது – ஆ) இடவழுவமைதி
3. இந்த மாறன் ஒரு நாளும் பொய் கூறமாட்டான் என மாறன் பிறரிடம் சொல்வது இ)
கால வழுவமைதி
4. குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார் – ஈ) திணைவழுவமைதி
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
கருத்துரையிடுக