9th Standard Tamil Guide UNit 9
9th Standard Tamil Unit 9 Full Answers Key. Book Back and Additional Question and answers. 9th tamil guide. 9th Standard Tamil Nadu Syllabus Samacheer kalvi Gide.
- இயல் 9.1. விரிவாகும் ஆளுமை
- இயல் 9.2. அக்கறை
- இயல் 9.3. குறுந்தொகை
- இயல் 9.4. தாய்மைக்கு வறட்சி
இல்லை
- இயல் 9.5. அணியிலக்கணம்
9.1. விரிவாகும் ஆளுமை
I. பலவுள் தெரிக1. இமயத்துக் கோடு உயர்ந்தன்ன – இவ்வடியில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் யாது?
- கொம்பு
- மலையுச்சி
- சங்கு
- மேடு
2. தமிழ்ப் புலவரைப் போலவே உரோமச் சிந்தனையாளர் கொண்ட கொள்கை?
- நிலையற்ற வாழ்க்கை
- பிறருக்காக வாழ்தல்
- இம்மை மறுமை
- ஒன்றே உலகம்
II. குறு வினா
1. தமிழ்ச் சான்றோர்க்கும் உரோமையச் சான்றோர்க்கும் உள்ள வேறுபாடு யாது?- தமிழ்ச்சான்றோன் சமுதாயத்திலேயே வாழ்ந்து தன்னால் இயன்ற வரை சமுதாயத்திற்குப் பல நன்மைகள் செய்வான்.
- ஆனால், உரோமையரின் சான்றோர் சமுதாயத்திலிருந்து விலகி, தன் சொந்தப் பண்புகளையே வளர்க்க வேண்டும்.
III. சிறு வினா
1. உலக இலக்கியத்தில் காண இயலாத அரிய கருத்துகளைக் ஆல்பர்ட் சுவைட்சர் குறிப்பிடுவன யாவை?- மக்கள் அனைவரும் உடன் பிறந்தவர்கள். பிறப்போ, சாதியோ, சமயமோ அவர்களை தாழ்த்தவோ, உயர்த்தவோ முடியாது.
- இத்தகைய அரிய கொள்கையைத் தமிழ் மக்கள் கடைப்பிடித்திருந்தனர் என்னும் உண்மை பெரும் வியப்பைத் தருகின்றது.
- திருக்குறள் பற்றி ஆல்பர்ட் சுவைட்சர் குறிப்பிடும் போது “இத்தகைய உயர்ந்த கொள்கைகளைக் கொண்ட செய்யுட்களை உலக இலக்கியத்திலேயே காண்பதரிது” என்பார் ஆல்பர்ட் சுவைட்சர்.
- முதிர்ந்த ஆளுமைக்கு மூன்று இலக்கணங்கள் இன்றியமைதான என்கிறார் கோர்டன் ஆல்பர்ட்
- முதலாவது மனிதன், தன் ஈடுபாடுகளை வளர்ப்பவனாக இருத்தல் வேண்டும். பிறருடைய நலத்திற்கும், இன்பத்திற்கும் பாடுபடக் கூடிய வகையில் தன் ஆளுமையை விரிவடையச் செய்து செழுமைப் படுத்த வேண்டும்.
- இரண்டாவது ஒருவன் பிறரால் எவ்வாறு கணிக்கப்படுகிறானோ அதை அறிந்து ஆற்றல் படைத்தவனாக இருத்தல் வேண்டும்.
- மூன்றாவதாக அவனது வாழ்க்கைக்குச் சுய ஓர்மையத் தரும் தத்துவத்தை கடைபிடித்து நடத்தல் வேண்டும்.
IV. நெடு வினா
தமிழ் இலக்கியங்கள் காட்டும் சான்றாண்மைக் கருத்துக்களைத் தனிநாயக அடிகளாரின் வழி நிறுவுக.உலக நாடுகளையும் மக்களையும் உட்படுத்தி பாராட்டுவது நம் இயல்பு
அதனையே
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற புறநானூறு வரிகளையும்,
“யாதானும் நாடாமல் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு” – என்னும் குறட்பா வரிகளும் கூறுகின்றன.
மக்கள் அனைவரும் உடன் பிறந்தவர்கள். பிறப்போ, சாதியோ, சமயமோ அவர்களை தாழ்த்தவோ, உயர்த்தவோ முடியாது.
இத்தகைய அரிய கொள்கையைத் தமிழ் மக்கள் கடைப்பிடித்திருந்தனர் என்னும் உண்மை பெரும் வியப்பைத் தருகின்றது.
திருக்குறள் பற்றி ஆல்பர்ட் சுவைட்சர் குறிப்பிடும் போது “இத்தகைய உயர்ந்த கொள்கைகளைக் கொண்ட செய்யுட்களை உலக இலக்கியத்திலேயே காண்பதரிது” என்பார் ஆல்பர்ட் சுவைட்சர்.
விரிவாகும் ஆளுமை – கூடுதல் வினாக்கள்…
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. உலக நாடுகளையும் மக்களையும் உட்படுத்தி நம் இயல்பு.விடை : அன்பு பாராட்டுவது
2. குறிக்கோள் இல்லாத வீழ்ச்சி அடையும்
விடை : சமுதாயம்
3. தமிழுக்கு தொண்டாற்றிய கிறிஸ்தவப் பெரியார்களுள் _____________ குறிப்பிடத்தக்கவர்.
விடை : தனிநாயகம் அடிகள்
4. திருவள்ளுவரை _____________ உலகப்புலவர் என்று போற்றினார்
விடை : ஜி.யு.பாேப்
II. குறு வினா
1. சீன அறிஞர்கள் யாவர்?வாவோட்சு, கன்பூசியசு
2. கிரேக்க அறிஞர்கள் யாவர்
பிளேட்டா, அரிஸ்டாட்டில்
3. குறிக்கோள் இல்லாதவன் வெறும் சதைப்பிண்டம் என்பதை புறநானூற்றில் ஆலந்துகிழார் எப்படி கூறுகிறார்?
குறிக்கோள் இல்லாதவன் வெறும் சதைப்பிண்டம் என்பதை “பூட்கையில்லோன் யாக்கை போல” என்று புறநானூற்றில் ஆலந்துகிழார் கூறுகிறார்.
4. எப்போது ஒருவனுடைய வாழ்க்கை பண்புடைய வாழ்க்கையாகிறது?
பிறருக்காகப் பணி செய்யும் போது ஒருவனுடைய வாழ்க்கை பண்புடைய வாழ்க்கையாகிறது.
5. சான்றோன் பற்றி இலக்கணம் வகுத்தவர் யார்?
சான்றோன் பற்றி இலக்கணம் வகுத்தவர் இத்தாலி நாட்டினர் உரோமையர்.
6. பிறர் நலக்கொள்கையும், பிறர் மீதான அன்பு பாராட்டலையும் முதன் முதலில் பரப்புவதற்குக் காரணமாய் இருந்தவர்கள் யார்?
தமிழ்நாட்டுப் பாணர்
புலவர்
7. தனிநாயகம் அடிகள் எவற்றை உருவாக்க காரணமாய் இருந்தார்?
தனிநாயகம் அடிகள் அகில உலகத் தமிழாய்வு மன்றம், உலகத் தமிழராய்ச்சி நிறுவனம் உருவாக்க காரணமாய் இருந்தார்.
8. திருக்குறள் எதற்காக எழுதப்பட்ட நூல்?
மக்கள் அனைவரும் மக்கட் தன்மையை வளர்க்க வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட நூல் திருக்குறள் ஆகும்.
9. பண்புடமை பற்றி பரிப்பெருமாள் கூறியன யாவை?
பண்புடைமையாவது யாவர்மாட்டம் அன்பினராய் கலந்து ஒழுகுதலும், அவரவர் வருத்ததிறகுப் பரிதலும் பகுத்து உண்டலும் பழிநாணலும் முதலான நற்குணங்கள் பலவும் உடைமை
*******************THE END OF 9.1*************************
9.2. அக்கறை
I. இலக்கணக் குறிப்பு- உருண்டது – ஒன்றன் பால் வினைமுற்று
- போனது – ஒன்றன் பால் வினைமுற்று
- சரிந்தது – வினையெச்சம்
- அனவரும் – முற்றுமை
சரிந்து – சரி + த்(ந்) + த் + உ
சரி – பகுதி
த் – சந்தி
ந் – ஆனது விகாரம்
த் – இறந்தகால் இடைநிலை
உ – வினையெச்ச விகுதி
III. பலவுள் தெரிக
வண்ணதாசனுக்குச் சாகித்திய அகாதெமி பரிசு பெற்றுத் தந்த நூல்?- ஒரு சிறு இசை
- முன்பின்
- அந்நியமற்ற நதி
- உயரப் பறத்தல்
I. சிறு வினா
1. பழங்களை விடவும் நசுங்கிப் பாேனது – இடம் சுட்டிப் பாெருள் விளக்குக தருக.கல்யான்ஜியின் “அக்கறை” என்னும் கவிதைத் தலைப்பில் இவ்வரிகள் இடம் பெற்றுள்ளது.
விளக்கம்
மிதி வண்டியில் இருந்து விழந்த தக்காளிகள் சாலையில் விழந்து நசுங்கின. அங்குப் போவோர் வருவோர் தலைக்கு மேல் வேலை இருப்பதாய் செல்வதைப் பார்க்கையில் பழங்களை விடவும் நசுங்கிப் போனது எது மற்ற மனிதர்கள் மீது அக்கைற இல்லாததால் தான் என்கிறார் கல்யாண்ஜி
2. மணல் விளையாட்டு என்னும் தலைப்பில் சிறு கவிதை படைக்க.
மண்ணில் பிறந்தோம்
மண்ணில் தவழ்ந்தோம்
மண்ணில் நடந்தோம்
அதானல் தானோ என்னவோ
விளையாட்டையும் கூட மண்ணில் தொடங்கினோம்
மதங்களை மறந்து
மனிதநேயத்தோடு
இறை இல்லங்களை கட்டினோம்
சாதிப்புயல் அதை சூறையாடிவிட்டது
அக்கறை – கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. கல்யாண்ஜியன் இயற்பெயர் ____________விடை : கல்யாணசுந்தரம்.
2. ____________ என்ற சிறுகதை தொகுப்பிற்காக சாகித்திய அகாதெமி பரிசினை பெற்றார்.
விடை : ஒரு சிறு இசை
3. கல்யாண்ஜி ____________ -ம் ஆண்டு சாகித்திய அகாதெமி பரிசினை பெற்றார்.
விடை : 2016
II. குறு வினா
1. கல்யாண்ஜி தொடர்ந்து எழுதுபவை எவை?- சிறுகதை
- கவிதை
- கட்டுரை
- நாவல்
- புலரி
- முன்பின்
- ஆதி
- அந்நியமற்ற நதி
- மணல் உள்ள ஆறு
கல்யாண்ஜி எழுதிய கட்டுரை தொகுப்பு “அகமும் புறமும்” என்பதாகும்.
4. கல்யாண்ஜி எழுதிய சிறு கதை தொகுப்பு எது?
- கலைக்க முடியாத ஒப்பனை
- தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள்
- உயரப் பறத்தல்
- ஒளியிலே தெரிவது
ஒரு சிறு இசை என்ற சிறுகதை தொகுப்பிற்காக கல்யாண்ஜிக்கு சாகித்திய அகாதெமி பரிசு வழங்கப்பட்டது.
6. கல்யாண்ஜிக்கு எந்த ஆண்டு சாகித்திய அகாதெமி பரிசு வழங்கப்பட்டது?
கல்யாண்ஜிக்கு 2016-ம் ஆண்டு சாகித்திய அகாதெமி பரிசு வழங்கப்பட்டது.
கல்யாண்ஜிக்கு 2016-ம் ஆண்டு சாகித்திய அகாதெமி பரிசு வழங்கப்பட்டது.
III. சிறு வினா
கல்யாண்ஜி குறிப்பு வரைக- கல்யாண்ஜியன் இயற்பெயர் கல்யாணசுந்தரம்.
- சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனத் தொடர்ந்து எழுதி வருபவர்.
- வண்ணதாசன் என்ற பெயரில் கதை இலக்கியத்திலும் பங்களிப்பு செய்து வருகிறார்.
- புலரி, முன்பின், ஆதி, அந்நியமற்ற நதி, மணல் உள்ள ஆறு ஆகியன இவரின் கவிதை படைப்புகள்.
- இவர் எழுதிய கட்டுரை தொகுப்பு “அகமும் புறமும்” என்பதாகும்.
- பல கடிதங்கள் தொகுக்கப்பட்டு “சில இறகுகள் சில பறவைகள்” என்ற பெயரில் வெளியானது.
- கலைக்க முடியாத ஒப்பனை. தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள், உயரப் பறத்தல், ஒளியிலே தெரிவது போன்றவை இவர் எழுதிய சிறுகதை தொகுப்பு ஆகும்
- ஒரு சிறு இசை என்ற சிறுகதை தொகுப்பிற்காக 2016-ம் ஆண்டு சாகித்திய அகாதெமி பரிசினை பெற்றார்.
******************THE END OF 9.2******************
9.3. குறுந்தொகை
I. சொல்லும் பொருளும்- நசை – விருப்பம்
- நல்கல் – வழங்குதல்
- பிடி – பெண்யானை
- வேழம் – ஆண்யானை
- யா – ஒரு வகை மரம், பாலை நிலத்தில் வளர்வது
- பொளிக்கும் – உரிக்கும்
- ஆறு – வழி
- களைஇய – சொல்லிசை அளபெடை
- பெருங்கை – பண்புத்தொகை
- மென்சினை – பண்புத்தொகை
- பொளிக்கும் – செய்யுள் என்னம் வினைமுற்று
- பிடிபசி – ஆறாம் வேற்றுமைத் தொகை
- அன்பின – பலவின் பால் அஃறிணை வினைமுற்று
- நல்கலும் நல்குவர் – எச்ச உம்மை
III. பகுபத உறுப்பிலக்கணம்
1. உடையார் – உடை + ய் + ஆர்உடை – பகுதி
ய் – சந்தி (உடம்படு மெய்)
ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி
2. பொளிக்கும் = பொளி + க் + க் + உம்
பொளி – பகுதி
க் – சந்தி
க் – எதிர்கால இடைநிலை
உம் – வினைமுற்று விகுதி
IV. பலவுள் தெரிக
யா மரம் எந்த நிலத்தில் வளரும்?- குறிஞ்சி
- மருதல்
- பாலை
- நெய்தல்
I. குறு வினா
1. பிடி பசி, களைஇய, பெருங்கை வேழம் – இவ்வடியில் உள்ள இலக்கண குறிப்புகளை கண்டறிக.- பிடிபசி – ஆறாம் வேற்றுமை தொகை
- களைஇய – சொல்லிசையளபெடை
- பெருங்கை – பண்புத்தொகை
- குறுகிய பாடல்களின் தொகுப்பு குறுந்தொகை. 4 அடி முதல் 8 அடி வரை உள்ள செய்யுட்களைத் தொகுத்துக் குறுந்தொகை என்று பெயர் வைத்தனர்
II. சிறு வினா
“யா” மரத்தின் பட்டையை உரித்தது எது? எதற்காக? விளக்குக.பெண் யானையின் பசியை போக்க ஆண் யானை “யா” மரத்தின் பட்டையை உரித்துத் தன் அன்பை வெளிப்படுத்தும்
விளக்கம்:-
மேற்கண்ட காட்சியைக் கண்ணுற்ற தலைவனுக்கு உன் நினைவு வரும். எனவே அவன் உன்னிடம் விரைந்து வருவான்.
குறுந்தொகை – கூடுதல் வினாக்கள்…
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. குறுந்தொகை ஓர் ________ நூலாகும்விடை : அக
2. _____________ ஒன்று குறுந்தொகை ஆகும்.
விடை : எட்டுத்தொகை நூல்களுள்
3. குறுந்தொகை ________ பாடல்களை காெண்டது.
விடை : 401
4. குறுந்தொகை பாடல்கள் _____________, _____________ கொண்டவை.
விடை : நான்கடிச் சிற்றெல்லையும் எட்டடிப் பேரெல்லையும்
5. குறுந்தொகை _____________ என அழைக்கப்படுகிறது
விடை : நல்குறுந்தொகை
II. சிறு வினா
1. தமிழ் சமுதாயத்தின் மாண்புகளைக் காட்டும் காலக் கண்ணாடியாய்த் திகழ்கிறது எவை?“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று மனிதம் பேசிய சங்கக் கால கவிதைகள் தமிழ் சமுதாயத்தின் மாண்புகளைக் காட்டும் காலக் கண்ணாடியாய்த் திகழ்கிறது.
2. குறுந்தொகை பாடல்கள் இயற்கை காட்சிகள் மூலம் எதைக் காட்டுகின்றன?
குறுந்தொகை பாடல்கள் இயற்கை காட்சிகள் மூலம் அன்பின் வளத்தை படம் பிடித்த காட்டுகின்றன
3. பெருங்கடுங்கோ குறிப்பு வரைக
இவர் சேர மரபைச் சேர்ந்த மன்னர்
கலித்தொகையில் பாலைத்திணையைப் பாடியதால் பாலை பாடிய பெருங்கடுங்கோ என அழைக்கப் பெற்றார்.
4. பிடி, வேழம் என்பன எதைக் குறிக்கும்?
பிடி – பெண் யானை
வேழம் – ஆண் யானை
II. குறு வினா
குறுந்தொகை – குறிப்பு வரைக- எட்டுதொகை நூல்களுள் ஒன்று.
- தமிழர் வாழ்வின் அகப்பொருள் நிகழ்வுகளை கவிதையாக்கி கூறுகிறது.
- கடவுள் வாழ்த்து நீங்கலாக 401 பாடல்களை கொண்டது.
- இதன் பாடல்கள் நான்கடிச் சிற்றெல்லையும் எட்டிப் பேரெல்லையும் கொண்டவை.
- 1915-ம் ஆண்டு செளரிப்பெருமாள் அரங்கனால் முதன்முதலில் இந்நூலைப் பதிப்பித்தார்.
*****************THE END OF 9.3****************
9.4 தாய்மைக்கு வறட்சி இல்லை
1.“பிறருக்கு உதவி செய்வதற்கு மொழி தேவையில்லை” என்ற கருத்தை அடிப்படையாக் கொண்டு வகுப்பறை மேடையில் நடித்துக் காட்டுக.Answer:
மாணவர்களே,
உங்கள் வகுப்பறை மேடையில் (mime show) மௌன நாடகமாக பின்வருவதை நடித்துக்காட்டுங்கள்.
நீங்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கிறீர்கள். அப்போது மிதிவண்டியில் வரும் ஒருவருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டு, சாலையில் விழுகிறார் உடனடியாக நீங்கள் அவருக்கு முதலுதவி செய்து, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ உதவி செய்து, வீட்டு முகவரியை விசாரித்து பத்திரமாய் அழைத்து செல்வது என மேற்கூறிய காட்சியை நடித்து காட்டுங்கள்.
மனிதநேயம், அன்பு, இரக்கம், உதவி இவற்றை வெளிப்படுத்த மொழி தேவையில்லை என்பதை உணர்த்துங்கள்.
2.கதையைத் தொடர்ந்து எழுதித் தலைப்பிடுக.
Answer:
சுண்டெலியின் அறிவு சுண்டெலிகளுக்குப் பூனையால் மிகவும் துன்பமான நேரம். ஒவ்வொரு நாளும் இரண்டு மூன்று சுண்டெலிகளைப் பிடித்துத் தின்றது பூனை. சுண்டெலிகள் ஒன்று சேர்ந்து என்ன செய்வது என்று ஆலோசித்தன. மேலும் மேலும் ஆலோசித்தன. ஆனால் ஒரு முடிவும் கிடைக்கவில்லை.
பிறகு ஒரு சின்ன சுண்டெலி சொன்னது, பூனைக்கு என்ன செய்ய வேண்டும் என்று நான் சொல்கிறேன். நான் செய்கிறேன் என்றது. சரி முயற்சி செய்து பார் என்று மற்ற சுண்டெலிகள் கூறின.
Answer:
சுண்டெலியின் அறிவு சுண்டெலிகளுக்குப் பூனையால் மிகவும் துன்பமான நேரம். ஒவ்வொரு நாளும் இரண்டு மூன்று சுண்டெலிகளைப் பிடித்துத் தின்றது பூனை. சுண்டெலிகள் ஒன்று சேர்ந்து என்ன செய்வது என்று ஆலோசித்தன. மேலும் மேலும் ஆலோசித்தன. ஆனால் ஒரு முடிவும் கிடைக்கவில்லை.
பிறகு ஒரு சின்ன சுண்டெலி சொன்னது, பூனைக்கு என்ன செய்ய வேண்டும் என்று நான் சொல்கிறேன். நான் செய்கிறேன் என்றது. சரி முயற்சி செய்து பார் என்று மற்ற சுண்டெலிகள் கூறின.
அன்று பூனை தனக்குத் தேவையான சுண்டெலிகளைப் பிடித்துத் தின்று ஓய்வாக படுத்திருந்தது. சுண்டெலி அருகில் சென்றது. பூனை ஐயா! தங்களுக்கு என் வணக்கம். எங்கள் பூனைகளின் சார்பாக உங்களைச் சந்திக்க வந்துள்ளேன். அப்படியா என்ன… விஷயம் சொல்லு என்றது பூனை.
ஐயா! உங்கள் பசியைப் போக்க நீங்கள் அலைந்து திரிந்து எங்களைத் தேடி வந்து சாப்பிட வேண்டாம் ஐயா!
நாங்களே தேடி வந்து உங்களுக்குத் தேவையானபோது உணவாகி விடலாம் என்று முடிவு செய்துள்ளோம். ஐயா! ஓ அப்படியா ரொம்ப மகிழ்ச்சி. சரி எனக்கு எப்போது பசி என்று நீங்கள் எப்படி தெரிந்து கொள்வீர்கள்?
அதற்கு ஒரு யோசனை இருக்குதய்யா…. ம்ம்… சொல்லு உங்கள் நான்கு கால்களில் ஒரு காலில் மணி ஒன்றை கட்டி விடுகிறேன் ஐயா.
நீங்கள் பசிக்கும் போது… உங்கள் காலை தரையில் உதையுங்கள் மணியோசை கேட்டவுடன் நாங்கள் ஓடோடி வருகிறோம் ஐயா… என்றது.
பூனை யோசித்தது… சரி… நானும் வளை தேடி ஓடி வரவேண்டியிருக்காது சாப்பிட்டோமா… படுத்தோமான்னு நிம்மதியா இருப்பேன்… என்றது.
நீங்கள் பசிக்கும் போது… உங்கள் காலை தரையில் உதையுங்கள் மணியோசை கேட்டவுடன் நாங்கள் ஓடோடி வருகிறோம் ஐயா… என்றது.
பூனை யோசித்தது… சரி… நானும் வளை தேடி ஓடி வரவேண்டியிருக்காது சாப்பிட்டோமா… படுத்தோமான்னு நிம்மதியா இருப்பேன்… என்றது.
பூனையைத் தன் அறிவாற்றலால் வென்ற சுண்டெலி, பூனையின் காலில் மணியைக் கட்டிவிட்டு ஓடி வந்து விட்டது.
பயந்து போய் நின்ற தன் சக சுண்டெலிகளிடம் நான் மணியைக் கட்டிவிட்டேன். இனி மகிழ்ச்சியாக அவரவர் வளைகளிலும். பொந்துகளிலும் சுதந்திரமாக வாழலாம் என்றது.
பாடநூல் வினாக்கள்
நெடுவினா
1.‘தாய்மைக்கு வறட்சி இல்லை’, என்னும் சிறுகதையில் வரும் ஏழைத்தாயின் பாத்திரப் படைப்பை விளக்குக.Answer:
முன்னுரை:
எது வறண்டு போனாலும் உலகில் தாய்மை வறண்டு போவது இல்லை. தாய்மை வழியே மனிதம் காக்கப்படுவதை சு. சமுத்திரம் அவர்கள் இக்கதையில் படைத்திருக்கும் ஏழைத் தாயின் வழி புலப்படுத்துகிறார்.
1. அன்பும் கண்டிப்பும் உடைய மனைவி:
தூங்கிக் கொண்டிருக்கும் போது பேரிரைச்சலுடன் வந்த ஜீப் தன் மீதும் தன் கணவன் மீதும் மோதாமல் இருக்க தன் கணவனை உருட்டி விட்டு தானும் அங்கப்பிரதட்சணம் செய்வது போல் உருண்டு காப்பாற்றிய போது ஏழைத்தாய் அன்புடைய மனைவியாகிறாள்.
செல்வந்தன் தன் கைக்குக் கிடைத்த உணவு வகையறாக்களை அள்ளிப்போட்டு அவள் கணவனைத் தன் குடும்பத்தை நோக்கி நடக்கும்படி முதுகைத் தள்ளுகிறான். கையில் உணவுடன் வந்த கணவனைத் தன் கண்களால் இப்படி ஒரு பிழைப்பா என்று தன் தலையில் கைகளால் அடித்தபடியே அவனைத் தண்டிக்கிறார். இவ்வாறு கண்டிப்பும் அன்பும் கலந்து அந்த ஏழைத்தாய் வறுமையிலும் தன்மானம் உள்ளவளாகக் காணப்படுகிறாள்.
2. குழந்தைகளுக்குப் பரிமாறுதல்:
குழந்தைகள் அம்மா வாதாடுவதைக் கோபமாய்ப் பார்த்தன. அதனைக் கண்ட தாய் அவர்கள் பசியில் இருப்பதைப் புரிந்துகொள்கிறாள். பசிமுள் அவள் வயிற்றைக் குத்தியது. சப்பாத்தியையும் வெஜிடபிள் பிரியாணியையும் கண்ட குழந்தைகள் காணாததைக் கண்டது போல் சுவைத்தார்கள் அவள் அனுதாபத்துடன் குழந்தைகளைப் பார்த்து, இப்போ இப்படிச் சாப்டுகிறீர்கள் ராத்திரி என்ன செய்வீர்கள்? என்று உள்ளத்துள் வருந்துவதால் அன்புத்தாய் ஆகிறாள்.
3. மனிதநேயம் புரிந்தாள்:
அவள் சாப்பிட ஆரம்பித்தபோது உலர்ந்த தொண்டைக்குள் உணவு இறங்க மறுக்கிறது. உணவைக் கொடுத்தவர் தண்ணீரையும் கொடுத்து “உன்னைப் போல கஷ்டப்பட்ட ஒரு தாய்க்குத் தான் மகனாய் பிறந்தேன் உன்னை என் தாயாய் எண்ணி கொடுக்கிறேன்” என்ற போது அவர் உள்ளத்தில் உள்ள மனிதநேயத்தைப் புரிந்து கொள்கிறாள்.
4. நாய்க்குட்டிகளை விரட்டுதல்:
சாப்பிடும் நேரத்தில் தொந்தரவு செய்த நாய்க்குட்டிகளைக் குரலிட்டபடியே கையைத் தூக்கி துரத்தினாள். ஒரு காலைத் தூக்கியபடியே ஓடின. நாய்க்குட்டி ஒலி எழுப்பியது.
5. சுவைத்து உண்டாள்:
தட்டை குழந்தையைப் போல மடியில் வைத்துக்கொண்டு உணவை வாய்க்குள் போட்டாள். இவ்வளவு ருசியாய் அவள் சாப்பிட்டதாய் நினைவில்லை. உண்டு உண்டு அந்த சுவையில் சொக்கி லயித்துக்கொண்டிருந்தாள். நாயின் ஒலி அவளைச் சுண்டி இழுத்தது. பாசத்தில் பரிதவித்து ஓடுகிறாள்.
6. நாய் குட்டிகளுக்கும் தாயாகிறாள்:
எச்சில் கையைத் தரையில் ஊன்றி எழுந்தாள். நாய்க்குட்டியை வாரி எடுத்தாள். அதன் முதுகைத் தடவினாள். மடியிலிட்டு தாலாட்டினாள். தட்டை தன் பக்கமாய் இழுத்தாள். உணவு சிறுசிறு கவளமாக உருட்டி நாய்க்குட்டிக்கு ஊட்டினாள். தட்டில் இருந்த உணவு குறையக்குறைய அவளது தாய்மை கூடிக்கொண்டே இருந்தது
முடிவுரை:
வறுமையிலும் அன்பு குறையாத மனிதநேயம் மாண்பு குறையாத மறையாத ஏழைத்தாயின் கதாபாத்திரத்தை நம் கண்முன் படைத்துக்காட்டி தாய்மைக்கு என்றும் வறட்சியில்லை என்பதைச் சு.சமுத்திரம் விளக்கி உணர்த்தியுள்ளார்.
*******************THE END OF 9.4*********************
9.5. அணியிலக்கணம்
I. பலவுள் தெரிக
கேடில்விழுச் செல்வம் கல்வி ஒருவற்குமாடல்ல மற்றை யவை – இக்குறளில் பயின்று வந்துள்ள அணி?
- சொல் பின்வரு நிலையணி
- பொருள் பின்வரு நிலையணி
- சொற்பொருள் பின்வரு நிலையணி
- வஞ்சப் புழச்சி அணி
II. குறு வினா
நினைத்தேன், கவித்தேன், படைத்தேன், சுவைத்தேன் இத்தொடரில் அமைந்துள் உருவகத்தைக் கண்டறிகஇத்தொடரில் அமைந்துள்ள உருவகம் ‘கவித்தேன்’ என்பது . கவிதை, தேனாக உருவாகம் செய்யப்பட்டுள்ளது.
III. சிறு வினா
உருவக அணியை சான்றுடன் எழுதுகஇலக்கணம்:-
உவமையின் தன்மையைப் பொருள் மீது ஏற்றிக் கூறுவது உருவக அணி ஆகும்.
சான்று:-
“இன்சொல் விளைமா ஈதலே வித்தாக”
விளக்கம்:-
இன்சொல் – நிலமாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இவ்வடி உருவ அணியாயிற்று.
அணியிலக்கணம் – கூடுதல் வினாக்கள்
1. சொல் பின்வருநிலையணி என்றால் என்ன? சான்று தருக.முன் வந்த சொல்லே பின்னும் பலவிடத்தும் வந்து வேறு பொருளை உணர்த்துவது சொல் பின்வருநிலையணி அணியாகும்.
சான்று:-
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
இக்குறளில் “துப்பு” எனற சொல் மீண்டும் மீண்டும் வந்து வேறு வேறு பொருளைத்
தருகிறது.
2. பொருள் பின்வருநிலையணி என்றால் என்ன? சான்று தருக.
செய்யுளில் முன் வந்த பொருளே பின்னர் பல இடங்களில் வருவது பொருள் பின் வருநிலை அணி ஆகும்.
சான்று:-
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை
இக்குறட்பாவில் “செல்வம்” “மாடு” இரண்டு சொற்களுமே செல்வத்தையே குறிக்கின்றது.
3. சொற்பொருள் பின்வருநிலையணி என்றால் என்ன? சான்று தருக.
செய்யுளில் முன் வந்த பொருளும், சொல்லும் பின்னர் பல இடங்களில் வருவது சொற்பொருள் பின் வருநிலையணி அணியாகும்.
சான்று
எல்லா விளக்கும் விளக்கல்ல் சான்றோர்க்கு
பொய்யா விளக்கே விளக்கு
இக்குறட்பாவில் “விளக்கு” என்னும் சொல் ஒரே பொருளில் பலமுறை வந்துள்ளது.
4. வஞ்சப்புகழ்ச்சி அணி என்றால் என்ன? சான்று தருக.
புகழ்வது போல் பழிப்பதும், பழிப்பது போல் புகழ்வது வஞ்சப்புகழ்ச்சி அணி ஆகும்
சான்று
தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழக லான்
கயவர்கள் தேவர்களுக்கு ஒப்பானவர் என்று புகழப்படுவது போலத் தோன்றிலாலும் கயவர்கள் இழிநத் செயல்களையே செய்வர் என்னும் பொருளை குறிப்பால் உணர்த்துகிறது. எனவே இது புகழ்வது போல் பழிப்பது ஆகம்.
கற்பவை கற்றபின்…
I. கீழ்க்காணும் குறட்பாக்களில் அமைந்துள்ள அணி வகையை கண்டறிக
அ) ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்குஆழி என்படு வார்
விடை :
சான்றாண்மை மிக்கவர் கடலுக்கு கரை என்று உருவகம் செய்த வள்ளுவர், ஊழிக் காலத்தை உருவகம் செய்யாமல் விட்டதால், இஃது ஏகதேச உருவக அணி ஆயிற்று
ஆ) பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம் நாணத் தக்கது உடைத்து
விடை :
“நாண்” என்னும் சொல் “வெட்கம்” என்னும் ஒரே பொருளில் பலமுறை வந்துள்ளது.
செய்யுளில் முன்னர் வந்த சொல் மீண்டும் மீண்டும் வந்து ஒரே பொருளைத் தந்தால் சொற்பொருள் பின்வருநிலையணி எனப்படும்
இ) தீயவை தீய பயத்தால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்
விடை :
“தீய” என்னும் சொல் “தீமை” என்னும் ஒரே பொருளில் பலமுறை வந்துள்ளது.
செய்யுளில் முன்னர் வந்த சொல் மீண்டும் மீண்டும் வந்து ஒரே பொருளைத் தந்தால் சொற்பொருள் பின்வருநிலையணி எனப்படும்
2. உவமையணி அமைந்துள் பாடல் அடிகளை எழுதுக
“மறுவிலா தெழுந்த முழுமதி போல
முகம்மது நபிபிறந் தனேர” – சீறாப்புராணம்
“ஆறுகிடந் தன்ன அகனேடுத் தெருவிற்” – நெடுநெல்வாடை
3. கீழ்க்காணும் புதுக்கவிதையில் அமைந்த அணியினை எழுதுக
- விருட்சங்கள்
- மண்ணரசி மடக்காமலேயே
- பிடித்துக் கொண்டிருக்கம்
- பச்சைக் குடைகள்
மொழியை ஆள்வோம்
I. மாெழி பெயர்க்க.A deer, a turtle, a crow and a rat were friends. One day the deer was caught in a hunter’s trap. Friends made a plan to save him. According to the plan, the deer lay motionless as if it were dead. The crow sat on the deer and started poking. The turtle crossed the hunter’s path to distract him. The hunter left the deer, assuming it dead, and went after the turtle. Meanwhile, the rat chew open the net to free the deer. The crow picked up the turtle and quickly took it away from the hunter. From this Panchatantra story, we learn that the teamwork can achieve great results.
ஒரு மான், ஆமை, ஒரு காகம் மற்றும் எலி நண்பர்கள். ஒரு நாள் மான் ஒரு வேட்டைக்காரனின் வலையில் சிக்கியது. நண்பர்கள் அவரைக் காப்பாற்ற ஒரு திட்டத்தை உருவாக்கினர். திட்டத்தின் படி, மான் இறந்ததைப் போல அசையாமல் கிடந்தது. காகம் மானின் மீது அமர்ந்து குத்த ஆரம்பித்தது. ஆமை அவரை திசைதிருப்ப வேட்டைக்காரனின் பாதையை கடந்தது. வேட்டைக்காரன் மானை விட்டுவிட்டு, இறந்துவிட்டதாகக் கருதி, ஆமைக்குப் பின் சென்றான். இதற்கிடையில், எலி மெல்லும் மானை விடுவிக்க வலையைத் திறக்கிறது. காகம் ஆமை எடுத்து விரைவாக வேட்டைக்காரனிடமிருந்து எடுத்துச் சென்றது. இந்த பஞ்சதந்திர கதையிலிருந்து, குழுப்பணி சிறந்த முடிவுகளை அடைய முடியும் என்பதை அறிகிறோம்.
II. பொருத்தமான நிறுத்த குறியிடுக
ஆசிரியர் மாணவர்களிடம், “மாணவர்களே! கடவுளையும் தலைவர்களையும் குழந்தையாகக் கருதி, எழுதப்பட்ட சிற்றிலக்கிய வகை பற்றித் தெரியுமா? தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் பிள்ளைத் தமிழும் ஒன்று” என்று கூறினார்.பிள்ளைத் தமிழ் நூல்கள்: முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், அமுதாப்பிகைப் பிள்ளைத்தமிழ் முதலியன.
“அடடா! என்று சிலிர்ப்பூட்டும் பட்டறிவைப் படிப்வர்க்கு அளிக்கும் வகையில், குமரகுரபரின் ‘மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்’ மிகச் சிறந்தாகத் திகழ்கிறது.
III. சொற்றொடர் அமைக்க
1. செந்தமிழும் சுவையும் போலபெரியோர்கள் மணமக்களை செந்தமிழும் சுவையும் போல வாழ வேண்டும் என வாழ்த்தினர்.
2. பசுமரத்தாணிபோல
ஒருவன் நமக்கு செய்த தீங்கு பசுமரத்தாணிபோல மனதில் பதிந்துவிடும்.
3. உள்ளங்கை நெல்லிக்கனி போல
இச்செய்யுளின் பொருள், உள்ளங்கை நெல்லிக்கனி போல தெளிவாக புலனாகிறது.
4. அத்தி பூத்தாற் போல
என் தோழியின் வருகை அத்தி பூத்தாற்போல் என்றாவது நிகழும்.
5. மழைமுகம் காணாப் பயிர் போல
வெளிநாட்டிற்கு சென்ற சோமு மழைமுகம் காணாப் பயிர் போல சோர்வாக காணப்பட்டான்.
III. பாடலில் காணும் இலக்கிய வடிவங்களையும் அவற்றுக்குப் புகழ் பெற்றோரையும் கண்டறிந்து எழுதுக.
வெண்பாவிற் புகழேந்தி; பரணிக்ஓர்சயங்கொண்டான்; விருத்தம் என்னும்
ஒண்பாவிற்கு உயர்கம்பன்; கோவைஉலா
அந்தாதிக்கு ஒட்டக் கூத்தன்;
கண்பாய கலம்பகத்திற்கு இரட்டையர்கள்;
வசைபாடக் காளமேகம்;
பண்பாய பகர்சந்தம் படிக்காச
அலாதொருவர் பகர ஒணாதே
இலக்கிய வடிவம் புகழ் பெற்றோர்
வெண்பா புகழேந்தி
பரணி சயங்கொண்டான்
விருத்தம் கம்பன்
கோவை, உலா, அந்தாதி ஒட்டக்கூத்தர்
கலம்பகம் இளஞ்சூரியர், முதுசூரியர் என்னும் இரட்டையர்கள்
வசைக்கவி காளமேகம்
சந்தம் படிக்காசுப்புலவர்
மொழியோடு விளையாடு
I. எழுத்துக்களை முறைப்படுத்திச் சொற்களை கண்டுபிடிக்க- புன்பமொப்லமைழி – பன்மொழிப்புலமை
- யனிநேம்தம – மனித நேயம்
- கச்வப்ஞ்புசிழ்வ – வஞ்சப்புகழ்ச்சி
- தைக்விதுகபு – புதுக்கவிதை
- டுசிப்காட்ஞ்ப – காஞ்சிப்பட்டு
II. அகராதியில் காண்க
1. குரிசல்பெருமையில் சிறந்தேன், உபகாரி, தலைவன்
2. தலையளி
முகமலர்ந்து, கூறுதல், அன்பு, அருள்
3. நயம்
நன்மை, விருப்பம், போற்றுகை, மிகுதி, பயன், நுன்மை, அருள்
4. உய்த்தல்
செலுத்துதல், நடத்துதல், நுகர்தல், அனுப்புதல், அறிவித்தல்
5. இருசு
நேர்மை, வண்டியச்சு, மூங்கில்
III. தொகைச் சொற்களை கொண்டு பத்தியை சுருக்குதல்
சேர, சாேழ, பாண்டிய அரசர்களிடம் யானைப்பலை, குதிரைப்படை, தேர்ப்படை, தரைப்படை ஆகியவை இருந்தன. அவர்கள் மா, பலா, வாழை ஆகிய கனிகளுடன் விருந்தோம்பல் செய்தனர். கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய திசைகளில் அவர்களின் ஆட்சிப்புகழ் பரவியிருந்தது. தமிழகத்தின் குறிஞ்சி முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நிலங்களில் எள்ள புலவர்கள் இவ்வரசர்களை இம்மையிலும் மறுமையிலும் வாழ்கவென்று வாழ்த்தினர்.விடை :-
மூவேந்தர்களிடம், நாற்படைகளும் இருந்தன. முக்கனிகளுடன் விருந்தோம்பல் செய்தனர். நாற்றிசைகளிலும் அவர்கள் ஆட்சி புகழ் பரவியிருந்தது. தமிழகத்தின் ஐவகை நிலங்களிலும் உள்ள புலவர்கள் இவ்வரசர்களை இருமையிலும் வாழ்கவென்று வாழ்த்தினர்.
IV. வினைப்பகுதிகளை எச்சங்களாகவும் முற்றாகவும் மாற்றுக.
பூங்கொடி நேற்று பள்ளிக்குச் சென்றாள் (செல்) தன் தோழிகளைக் கண்டு (காண்) மகிழ்ச்சியுடன் உரையாடினாள் (உரை). பின்னர் வங்கிக்குப் போய் (போ) தான் கூடுதலாகச் செலுத்திய (செலுத்து) தொகையை திரும்பப் பெற்று (பெரு)க் கொண்டு (கொள்) வந்தாள். வரும் வழியில் வீட்டுக்கு வேண்டிய (வேண்டு) பொருள்களை வாங்கி, அங்கு நின்ற (நில்) பேருந்தில் ஏறி (ஏறு) வீடு திரும்பினாள் (திரும்பு).V. பொருத்தமான தமிழ் எண்களைக் கொண்டு நிரப்புக
தமிழிலுள்ள மொத்த எழுத்துக்கள் உசஎஇவை முதலெழுத்து, சார்பெழுத்து என்ற உ பிரிவாக பிரிக்கப்படும், கஉ உயிரெழுத்து கஅ மெய்எழுத்துகள் ஆகிய ங0 எழுத்துகளும் முதலெழுத்துகள் எனப்படும். இவற்றைச் சார்ந்து பிறப்பவை சார்பெழுத்துகள் எனப்படுகின்றன. சார்பெழுத்துக்கள் எனப்படுகின்றன. சார்பெழுத்துகள் க0 வகைப்படும்.
கலைச் சாெல்லாக்கம்
- மனிதம் = Humane
- ஆளுமை = Personality
- பண்பாட்டுக் கழகம் = Cultural Academy
- கட்டிலாக் கவிதை = Free verse
- உவமையணி = Simile
- உருவக அணி = Metaphor
**************THE END OF 9.5*****************
9.6திருக்குறள்
கற்பவை கற்றபின்…
1. படத்திற்கு ஏற்ற குறளைத் தேர்வு செய்அ. இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.
ஆ. ஏவவும் செய்கலான் தான்தே றான் அவ்வுயிர்
போஒம் அளவும்ஓர் நோய்.
இ. சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை
விடை
இ. சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை
2. பொருளுக்கேற்ற அடியைக் கண்டு பிடித்துப் பொருத்துக.
1. கண்டானாம் தான்கண்டவாறு பகைவரையும் நட்பாக்கும் கருவி
2. அறம்நாணத் தக்கது உடைத்து தெரிந்த அளவில் அறிவுடையவனாகத் தோன்றுவான்
3. மாற்றாரை மாற்றும் படை அறம் வெட்கப்பட்டு அவனை விட்டு விலகிப்போகும்
விடை : 1 – ஆ, 2 – இ, 1 -அ
3. ஐந்து சால்புகளில் இரண் டு
- வானமும் நாணமும்
- நாணமும் இணக்கமும்
- இணக்கமும் சுணக்கமும்
- இணக்கமும் பிணக்கமும்
5. கோடிட்ட இடங்களுக்கான விடையைக் கட்டத்துள் கண்டறிந்து வட்ட மிடுக.
ஒ ப் பு று
க ப ர வ
ட டை வு த
ல் உ ழ எ
ம் ற அ ர
1. அனைவரிடமும் இணக்கம் என்பதன் பொருள் _____________
விடை : ஒப்புரவு
2. உலகத்துக்கு அச்சாணி போன்றவர் _____________
விடை : உழவர்
3. தான் நாணான் ஆயின் _____________ நாணத் தக்கது.
விடை : அறம்
4. ஆழி என்பதன் பொருள் _____________
விடை : கடல்
5. மாற்றாரை மாற்றும் _____________
விடை : படை
6. ஒழுக்கமான குடியில் பிறந்தவர் _____________ செய்வதில்லை
விடை : தவறு
வினாக்கள்
1) இறக்கும்வரை உள்ள நோய் எது?சொன்னாலும் செய்யாமல், தானாகவும் செய்யாமல் இருப்பவன் உயிர், சாகும் வரை உள்ள நோய்
2) அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோ(டு)
ஐந்துசால்பு ஊன்றிய தூண். – இக்குறட்பாவில் பயின்றுவரும் அணியை விளக்கி எழுதுக.
இக்குறட்பாவில் பயின்றுவரும் அணி – ஏகதேச உருவக அணி
இலக்கணம்:-
செய்யுளில் ஒன்றை உருவகப்படுத்தி மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது ஏகதேச உருவக அணி ஆகும். (ஏகம் – ஒன்று, தேசம் – பக்கம்)
விளக்கம்:-
சான்றாண்மைக்கு தாங்கும் தூண்களை உருவகம் செய்த வள்ளுவன், சான்றாண்மைக்கு உருவகம் செய்யாமல் விட்டதால் இது எகதேச உருவக அணி ஆகும்.
3) உலகத்திற்கு அச்சாணியாய் இருப்பவர் யார்? ஏன்?
மற்ற தொழில் செய்பவரையும் உழுபவரே தாங்கி நிற்பதால், அவரே உலகத்துக்கு அச்சாணி ஆவர்.
4) காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு. – இக்குறட்பாவில் பயின்றுவரும் தொடை நயத்தை எழுதுக.
எதுகைத் தொடை
செய்யுளி்ல் சீர்களிலோ அல்லது அடிகளிலோ இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை ஆகும்.
தான்காணான் – தான்கண்ட
காணாதான் – காட்டுவான்
மோனைத் தொடை
செய்யுளில் சீர்களிலோ அல்லது அடிகளிலோ முதலாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை ஆகும்.
காணாதான் – காட்டுவான்
தான்காணான் – தான்கண்ட
திருக்குறள் – கூடுதல் வினாக்கள்
1. எப்படி சிறந்த இன்பம் காணலாம்?துன்பத்தில் மனக்கசப்பு என்னும் மோசமான துன்பம் மறைந்தால், இன்பத்தில் சிறந்த இன்பம் பெறலாம்.
2. யார் தவறு செய்வதில்லை?
கோடிப் பொருள் அடுக்கிக் கொடுத்தாலும், ஒழுக்கமான குடியில் பிறந்தவர், தவறு செய்வதில்லை
3. சான்றாண்மையைத் தாங்கும் தூண்கள் யார்?
பிறரிடம் அன்பும் பழிக்கு நாணுதலும் அனைவரிடமும் இணக்கமும் இரக்கமும் உண்மையும் சான்றாண்மையைத் தாங்கும் தூண்கள்!
4. சான்றோர்க்குப் பகைவரையும் நடப்காக்கும் கருவி எது?
செயல் செய்பவரின் ஆற்றல், பணிவுடன் நடத்தல். அதுவே சான்றோர்க்குப் பகைவரையும் நட்பாக்கும் கருவி.
கருத்துரையிடுக