10th Standard Tamil Unit 2 Book Back Answers
10th Standard Tamil Nadu Start Board Syllabus, Samacheer Kalvi Guide, 10th Tamil Unit 2 Full Guide, 10th Tamil Unit 2 Book Back Question And Answers, Also Additional Question and answers. 10th Tamil Guide.
- இயல் 2.1 கேட்கிறதா என்குரல்!
- இயல் 2.2 காற்றை வா!
- இயல் 2.3 முல்லைப்பாட்டு
- இயல் 2.4 புயலிலே ஒரு தோணி
2.1. கேட்கிறதா என் குரல்!
I. பலவுள் தெரிக
1. செய்தி 1 – ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 15ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.
செய்தி 2 – காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாமிடம் என்பது எனக்குப்
பெருமையே.
செய்தி 3 – காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல்கடந்து வணிகம்செய்து அதில் வெற்றி
கண்டவர்கள் தமிழர்கள்!
- செய்தி 1 மட்டும் சரி
- செய்தி 1, 2 ஆகியன சரி
- செய்தி 3 மட்டும் சரி
- செய்தி 1, 3 ஆகியன சரி
விடை : செய்தி 1, 3 ஆகியன சரி
2. பொருந்தும் விடைவரிசையைத் தேர்ந்தெடுக்க
- கொண்டல் – மேற்கு
- கோடை – தெற்கு
- வாடை – கிழக்கு
- தென்றல் – வடக்கு
விடை : 1 – இ, 2 – அ, 3 – ஈ, 4 – ஆ
II. குறு வினா
1. ‘நமக்கு உயிர் காற்று
காற்றுக்கு வரம் மரம் – மரங்களை
வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம்’ – இதுபோன்று உலகக் காற்று நாள் விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத்தொடர்களை எழுதுக.
1)உயிர்களின் சுவாசம் காற்று!
காற்றின் சுவாசம் மரம்!
2)தூய்மையை நேசிப்போம்!
தூய காற்றைச் சுவாசிப்போம்!
III. சிறு வினா
1. உயிராக நான், பல பெயர்களில் நான், நான்கு திசையிலும் நான், இலக்கியத்தில் நான், முந்நீர் நாவாய் ஓட்டியாக நான்…..முதலிய தலைப்புகளில் காற்று தன்னைப் பற்றிப் பேசுகிறது. இவ்வாறு ‘நீர்’ தன்னைப் பற்றிப் பேசினால்….. உங்களுடைய கற்பனையில் தலைப்புகளை எழுதுக.
- நானே! நீர்
- உலகில் முக்கால் பாகம் நான்
- நான் இல்லை என்றால் உலகம் இல்லை
- ஆதவனின் அணைப்பில் கருவுற்று
மேகமாய் வளர்ந்து
மழையாய் பிறப்பேன் நான்
- விண்ணிலிருந்து நான் விழுந்தால்
- என்னைக் கண்டு உலகம் சிரிக்கும்
- மலையில் விழுந்து
நதியில் ஓடி
கடலில் சங்கமிக்கும்
சரித்திர நாயகன் நான்
2. சோலைக்(பூங்கா) காற்றும் மின்விசிறிக் காற்றும் பேசிக்கொள்வதுபோல் ஓர் உரையாடல் அமைக்க.
மின் விசிறிக் காற்று : நண்பா! வா எங்கெல்லாம் சுற்றித் திரிந்து வருகிறாய்?
சோலைக்காற்று : நீ ஓரிடத்தில் இருந்து நிலையகா வீசினாலும் உன்னை இயக்க ஒருவர் தேவை. அது மட்டுமல்லாமல் நீ கொடுக்கும் வெப்பக்காற்றை மனிதர்கள் வேறு வழியின்றி பயன்படுத்துகின்றனர். மின்சாரம் தடை பட்டால் மனிதர்கள் உன்னை இயக்க முடியாது
மின் விசிறிக் காற்று : மனிதர்கள் உன்னை விரும்புகிறார்களா?
சோலைக்காற்று :
ஆம் நான் மக்களுக்கு குளிர்ந்த காற்றைக் கொடுக்கிறேன். என்னிலிருந்து மின்சாரம் தயாரிக்கினறனர், காற்றாைல மின் உற்பத்தியில் இந்தியா ஐந்தாம் இடத்திலுலம், தமிழகம் முதல் இடத்திலும் உள்ளது. புதுபிக்கக் கூடிய வளமான என்னை பயன்படுத்தி மின்னாற்றலை உருவாக்கும் போது நிலக்கரியின் தேவை குறைந்து கனிம வளங்கள் பாதுகாக்கப்படுகிறது.
மின் விசிறிக் காற்று : இத்தனை சிறப்புகள் கொண்ட உன்னை வைத்து புது மொழியை உலகிற்கு கூறப்போகிறேன்.
சோலைக்காற்று : அப்படியா! அப்புது மொழி யாது?
மின் விசிறிக் காற்று : “காற்றுள்ள போதே மின்சாரம் எடுத்துக்கொள்”
IV. நெடு வினா
மலர்ந்தும் மலராத பாதிமலர் போல
வளரும் விழி வண்ணமே – வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளந் தென்றலே – வளர்
பொதிகை மலைதோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே
-கவிஞர் கண்ணதாசனின் இப்பாடலில் தவழும் காற்றையும் கவிதை நயத்தையும் பாராட்டி உரை செய்க.
காற்றைப் பாராட்டல்:-
- மலர்ந்த மலராத பாதி மலரைம், விடிந்து விடியாத காலைப் பொழுதையும் விரும்பாதார் எவருமில்லை. அனைவரும் காற்றாகிய உன்னையும் நீ இளந்தென்றலாக வரும் போது விரும்புவர் எனக் குறிப்பிட்டுள்ளார் கண்ணதாசன். காற்றானது நதிகளை வருடியும், செடி கொடிகளை வருடியும் இளந்தென்றலாக வருகிறது. காற்றைப் போலவே தமிழும் அனைவராலும் விரும்பத்தக்கதாய் இருக்கிறது. தெற்கிலுள்ள பொதிகை மலையில் தோன்றிய தமிழுக்கு மதுரையிலே சங்கம் வைத்து அழகிய தமிழ் வளர்த்ததாகவும் கருத்துக் கொள்ளலாம்.
கவி நயம்:-
- கவிஞர் கண்ணதாசனின் பாடலில் எதுகை, மோனை, இயைபு இயைந்தோடும் வகையிலும் கற்பனை காட்சியளிக்கும் வகையிலும், அணி அழகுற வகையிலும், சந்த தாளமிட்டு சொந்தம் கொண்டாடும் தன் கவிநயத்தைக் காட்சிப்படுத்தியுள்ளார்.
சான்று:-
மோனை
- வளரும் – வண்ணமே
எதுகை
- நதியில் – பொதிகை
முரண்
- மலர்ந்து x மலராத
- விடிந்தும் x விடியாத
இயைபு
- வண்ணமே – அன்னமே
அணி
- பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே (உவமை அணி வந்துள்ளது)
கேட்கிறதா என் குரல்! – கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. உயிரின வாழ்வின் அடிப்படை _______________
விடை : இயற்கை
2.மேற்கிலிருந்து வீசும்போது காற்று _______________ எனப்படுகிறது.
விடை : கோடை
3. வடக்கிலிருந்து வீசும்போது காற்று _______________ எனப்படுகிறது.
விடை : வாடைக்காற்று
4. தெற்கிலிருந்து வீசும்போது காற்று _______________ எனப்படுகிறது.
விடை : தென்றல் காற்று
5. காற்றின் ஆற்றலை _______________ என்று ஐயூர் முடவனார் சிறப்பித்துள்ளார்.
விடை : வளி மிகின் வலி இல்லை
II. குறு வினா
1. உயிரினங்களின் முதன்மைத் தேவை யாவை?
- மூச்சுக்காற்று
- தாகத்திற்கு நீர்
- உறைவதற்கு நிலம்
- ஒளிக்கு கதிரவன்– ஆகியன உயிரினங்களின் முதன்மைத் தேவை ஆகும்.
2. காற்றின் உருவங்கள் யாவை?
- மெல்லத் தொட்டுச் சென்றால் தென்றல்
- தூக்கிச் சென்றால் புயல்
3. காற்றின் இயக்கம் எதை தீர்மானிக்கிறது?
- காற்றின் இயக்கம் மனிதர்களின் இயக்கத்தையும் உலக உயிர்களின் இயக்கத்தையும் தீர்மானிக்கிறது.
3. பருவக்காற்றின் வகைகள் யாவை?
- தென்மேற்கு பருவக்காற்று, வடகிழக்குப் பருவக்காற்று என இரு வகைப்படும்.
4. காற்று மாசடைவதால் மனிதனுக்கு ஏற்படும் நோய்கள் யாவை?
- கண் எரிச்சல், தலைவலி, தொண்டைக்கட்டு, காய்ச்சல், நுரையீரல், புற்றுநோய், இளைப்பு நேயா், மூளை வளர்ச்சிக் குறைவு
5. அமில மழை பெய்யக் காரணம் யாது?
- காற்றில் கலக்கும் கந்தக-டை-ஆக்ஸைடு, நைட்ரஜன்-டை-ஆக்ஸைடு இரண்டும் மழை பொழியும் போது மழை நீரில் கலப்பதே அமில மழை பெய்யக்காரணம் ஆகும்
III. சிறு வினா
1. ஹிப்பாலஸ் பருவக்காற்று குறிப்பு வரைக
- ஹிப்பாலஸ் பருவக்காற்று கி.பி. ( பொ.ஆ. ) முதல் நூற்றாண்டில் ஹிப்பாலஸ் என்னும் பெயர் கொண்ட கிரேக்க மாலுமி, பருவக் காற்றின் உதவியினால் நடுக்கடல் வழியாக முசிறித் துறைமுகத்திற்கு நேர விரைவில் பயணம் செய்யும் புதிய வழியைக் கண்டுபிடித்தார். அதுமுதல், யவனக் கப்பல்கள் விரைவாகவும் அதிகமாகவும் சேரநாட்டு முசிறித் துறைமுகத்துக்கு வந்து சென்றன. அந்தப் பருவக் காற்றுக்கு யவனர், அதைக் கண்டுபிடித்தவர் பெயராகிய ஹிப்பாலஸ் என்பதையே சூட்டினார்கள். ஹிப்பாலஸ் பருவக்காற்றின் வழியில் யவனக் கடல் வணிகம் பெருகிற்று.
2. காற்றின் பல்வேறு பெயரினை கூறுக
காற்றிற்கு பல பெயர்கள்
- வளி
- தென்றல்
- புயல்
- சூறாவளி
- தென்றல் காற்று
- பூங்காற்று
- கடல் காற்று
- பனிக்காற்று
- வாடைக்காற்று
- மேல்காற்று
- கீழ்காற்று
- மென்காற்று
- இளந்தென்றல்
- புழுதிக்காற்று
- ஆடிக்காற்று
- கடுங்காற்று
- யல்காற்று
- பேய்க்காற்று
- சுழல்காற்று
- சூறாவளிக்காற்று
IV. நெடு வினா
காற்று நான்கு திசைகளில் வீசும் போது தமிழர்கள் சூட்டியுள்ள பெயர்கள் யாவை?
- கிழக்கு என்பதற்குக் குணக்கு என்னும் பெயருமுண்டு. கிழக்கிலிருந்து வீசும்போது நhன் கொண்டல் எனப்படுகிறேன். கொண்டலாக நான் குளிர்ச்சி தருகிறேன்; இன்பத்தைத் தருகிறேன்; மழையைத் தருகிறேன்; கடல் பகுதிக்கு மேலுள்ள மழை மேகங்களைச் சுமந்து வருவதால் மழைக்காற்று எனப்படுகிறேன்.
- மேற்கு என்பதற்குக் குடக்கு என்னும் பெயருமுண்டு. மேற்கிலிருந்து வீசும்போது நான் கோடை எனப்படுகிறேன்; மேற்கிலிருந்து அதிக வலிமையோடு வீசுகிறேன்; வறண்ட நி லப்பகுதியில் இருந்து வீசுவதால் வெப்பக் காற்றாகிறேன்.
- வடக்கு என்பதற்கு வாடை என்னும் பெயருமுண்டு. வடக்கிலிருந்து வீசும்போது நான் வாடைக்காற்று எனப்படுகிறேன். நான் பனிப் பகுதியிலிருந்து வீசுவதால் மிகவும் குளர்ச்சியான ஊதைக்காற்று எனவும் அழைக்கப்படுகிறேன்.
- தெற்கிலிருந்து வீசும் போது நான் தென்றல் காற்று எனப்படுகிறேன்; மரம், செடி, கொடி, ஆறு, மலை, பள்ளத்தாக்கு எனப் பல தடைகளைத் தாண்டி வருவதால் வேகம் குறைந்து இதமான இயல்பு கொள்கிறேன்.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1.தென்மேற்குப் பருவக்காற்று இந்தியாவிற்கு எத்தனை விழுக்காடு மழைப்பொழிவினைத் தருகிறது?
அ) ஐம்பது
ஆ) அறுபது
இ) எழுபது
ஈ) எண்ப து
Answer:
இ) எழுபது
2.தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு எப்பாடல்களைத் தாய்மொழியில் எழுதி வைத்துப் பாடுகிறார்கள்?
அ) திருமந்திரம், திருவாசகம்
ஆ) திருக்குறள், திருமந்திரம்
இ) திருவருட்பா, திருப்பாவை
ஈ) திருவெம்பாவை, திருப்பாவை
Answer:
ஈ) திருவெம்பாவை, திருப்பாவை
3.பொருத்துக.
1. மூச்சு – அ) நீர்
2. தாகம் – ஆ) நிலம்
3. உறைவது – இ) காற்று
4. ஒளி – ஈ) கதிரவன்
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.இ 2.ஆ 3.அ 4.ஈ
இ) 1.ஈ 2.இ 3.ஆ 4.அ
ஈ) 1.இ 2.அ 3.ஆ 4.ஈ
Answer:
ஈ) 1.இ 2.அ 3.ஆ 4.ஈ
4.உலகம் ஐம்பூதங்களால் ஆனது என்றவர்?
அ) திருமூலர்
ஆ) அகத்தியர்
இ) வள்ளுவர்
ஈ) தொல்காப்பியர்
Answer:
ஈ) தொல்காப்பியர்
5.“வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில் ஆயுள் பெருக்கம் உண்டாம்” என்ற பாடலடியைப் பாடியவர்
அ) திருமூலர்
ஆ) ஔவையார்
இ) தொல்காப்பியர்
ஈ) கம்பர்
Answer:
ஆ) ஒளவையார்
6.பொருத்துக.
1. மேற்கு – அ) வாடை
2. வடக்கு – ஆ) குடக்கு
3. தெற்கு – இ) குணக்கு
4. கிழக்கு – ஈ) தென்றல்
அ) 1.ஈ 2.இ 3.அ 4.ஆ
ஆ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.இ 2.ஈ 3.ஆ 4.அ
Answer:
ஆ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
7.“முந்நீர்” என்பதன் பொருள்
அ) கடல்
ஆ) கப்பல்
இ) பயணம்
ஈ) நீர்
Answer:
அ) கடல்
8.பொருந்தாத ஒன்றினைத் தேர்வு செய்க.
அ) வளி
ஆ) தென்றல்
இ) புயல்
ஈ) கடல்
Answer:
ஈ) கடல்
9.“வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்” எனக் கூறும் நூல் எது?
அ) தென்றல் விடு தூது
ஆ) சிலப்பதிகாரம்
இ) மணிமேகலை
ஈ) புறநானூறு
Answer:
ஆ) சிலப்பதிகாரம்
10.பத்மகிரிநாதர் தென்றல் விடு தூது என்ற நூலின் ஆசிரியர்?
அ) இளங்கோவடிகள்
ஆ) ஔவையார்
இ) பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்
ஈ) திருமூலர்
Answer:
இ) பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்
11.‘வளிதொழில் ஆண்ட உரவோன்’ – எனக் குறிப்பிடப்படும் மன்னன்
அ) கரிகாலன்
ஆ) இராசராசன்
இ) இராசேந்திரன்
ஈ) பாழி
Answer:
அ) கரிகாலன்
12.கரிகால் பெருவளத்தானைப் புகழ்ந்து பாடிய சங்ககாலப் பெண்புலவர்
அ) ஔவையார்
ஆ) ஆதிமந்தியார்
இ) அள்ளூர் நன்முல்லையார்
ஈ) வெண்ணிக் குயத்தியார்
Answer:
ஈ) வெண்ணிக் குயத்தியார்
13.முசிறி துறைமுகத்துக்கு விரைவில் பயணம் செய்யும் புதிய வழியைக் கண்டுபிடித்த கிரேக்க மாலுமி
அ) ஹிப்பாலஸ்
ஆ) யுவான்சுவாங்க்
இ) பிளைனி
ஈ) தாலமி
Answer:
அ) ஹிப்பாலஸ்
14.ஜூன் முதல் செப்டம்பர் வரை வீசும் பருவக்காற்று
அ) வடகிழக்குப் பருவக் காற்று
ஆ) தென்மேற்குப் பருவக் காற்று
இ) வடமேற்குப் பருவக் காற்று
ஈ) தென்கிழக்குப் பருவக் காற்று
Answer:
ஆ) தென்மேற்குப் பருவக் காற்று
15.அக்டோபர் முதல் டிசம்பர் வரை வீசும் பருவக்காற்று
அ) வடகிழக்குப் பருவக் காற்று
ஆ) தென்மேற்குப் பருவக் காற்று
இ) வடமேற்குப் பருவக் காற்று
ஈ) தென்கிழக்குப் பருவக் காற்று
Answer:
அ) வடகிழக்குப் பருவக் காற்று
16.உலகக் காற்றாலை உற்பத்தியில் ஐந்தாம் இடம் பெற்றுள்ள நாடு
அ) இந்தியா
ஆ) அமெரிக்கா
இ) சீனா
ஈ) ஜப்பான்
Answer:
அ) இந்தியா
17.இந்தியாவில் காற்றாலை மின் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம்
அ) குஜராத்
ஆ) கேரளா
இ) தமிழ்நாடு
ஈ) ஆந்திரா
Answer:
இ) தமிழ்நாடு
18.உலகிலேயே அதிக அளவு மாசுபடுத்தும் நாடுகளில் இரண்டாமிடம் பெற்றுள்ள நாடு
அ) சீனா
ஆ) அரேபியா
இ) இந்தியா
ஈ) ஜப்பான்
Answer:
இ) இந்தியா
19.இந்தியாவில் மிகுந்த உயிரிழப்பைத் தரும் காரணிகளில் ஐந்தாமிடம் பெறுவது
அ) காற்று மாசு
ஆ) நீர் மாசு
இ) நில மாசு
ஈ) ஒலி மாசு
Answer:
அ) காற்று மாசு
20.உலகக் காற்று நாள்
அ) ஜூன் 15
ஆ) ஜூலை 15
இ) ஜனவரி 15
ஈ) டிசம்பர் 10
Answer:
அ) ஜூன் 15
*************************THE END OF 2.1*****************************
2.2. காற்றே வா!
I. சொல்லும் பொருளும்
- மயலுறுத்து – மயங்கச்செய்
- ப்ராண – ரஸம் – உயிர்வளி
- லயத்துடன் – சீராக
I. பலவுள் தெரிக
1. “உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம் உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்” – பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை?
- உருவகம், எதுகை
- மோனை, எதுகை
- முரண், இயைபு
- உவமை, எதுகை
விடை : மோனை, எதுகை
II. குறு வினா
வசன கவிதை – குறிப்பு வரைக- உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும். விதை வடிவம் வசன கவிதை எனப்படும்
- ஆங்கிலத்தில் Prose Poetry என்பர்
- தமிழில் பாரதியார் இதனை அறிமுகம் செய்தார்
- இல்வுலகம் இனியத, இதிலுள் வான் இனிமை
- யுடையது காற்றும் இனிது – பாரதியார்
காற்றே வா! – கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. பாரதியார் ___________ அறியப்பட்டவர்விடை : எட்டயபுர ஏந்தலாக
2. பாரதியார் ___________ எனப் பாராட்டப்பட்டவர்.
விடை : பாட்டுக்காெரு புலவன்
3. _________, ___________ முதலிய இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றியவர் பாரதியார்.
விடை : இந்தியா, சுதேசமித்திரன்
II. குறு வினா
1. இயற்கை வாழ்வு எவற்றோடு இயைந்தது?- காடு, மலை, அருவி, கதிரவரன் இவற்றோடு இயைந்ததே இயற்கை வாழ்வு.
- நீரின்றி அமையாது உலகு
- காற்றின்றி அமையாது உலகு
- மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
- நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா
- சிந்துக்குத் தந்தை
- பாட்டுக்காெரு புலவன்
- மகாகவி
- கலைமகள்..... என்றெல்லாம் பாராட்டப் பெற்றவர் ஆவார்
- கவிஞர்
- கட்டுரையாளர்
- சிறுகதையாளர்
- ஆசிரியர்
- இதழாசிரியர்
- கேலிச்சித்திரம் – கருத்துப்படங்களை உருவாக்கியவர்
- கண்ணன் பாட்டு
- குயில் பாட்டு
- பாப்பா பாட்டு
- பாஞ்சாலி சபதம்
- புதிய ஆத்திச்சூடி
- பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றிய இதழ்களின் பெயர்கள் இந்தியா, சுதேசிமித்திரன் ஆகும்
- உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும். விதை வடிவம் வசன கவிதை எனப்படும்
- உணர்ச்சி பாெங்கக் கவிதை படைக்கும் இடங்களில் யாப்பு, தடையாக இருப்பதை உணர்ந்த பாரதியார் இவ்வடிவத்தை இலகுவாகக் கையாண்டு உள்ளார். இவ்வசன கவிதையே புதுக்கவிதை என்ற வடிவம் உருவாகக் காரணமாயிற்று.
- மகரந்தத்தூளைச் சுமந்து, மனதை மயக்கும் வாசனையுடன், இலைகள் மற்றும் நீரலைகள் மீது உராய்ந்து மிகுந்த உயிர் வளியைக் கொண்டு வந்து கொடுக்குமாறு காற்றிடம் பாரதியார் வேண்டுகிறார்.
- காற்றை மெதுவாக, நல்ல முறையில் சீராக, நீண்ட காலம் நின்று வீசிக் கொண்டிருக்குமாறு பாரதியார் பணிக்கிறார்.
III. சிறு வினா
1. “காற்றே வா” பாடலில் பாரதியார் கூறும் செய்தி யாது?- மகரந்தத்தூளைச் சுமந்து, மனதை மயக்கும் வாசனையுடன் வா
- இலைகள் மற்றும் நீரலைகள் மீது உராய்ந்து வா
- உயிர் வளியைக் கொடு. ஆனால் பேய்போல் வீசி உயிராகிய நெருப்பை அணைத்து விடாேத
- நீடித்து நின்று நன்றாக வீசு, உன் சக்தி குறைத்து எம் உயிரை அவித்து விடாதே!
- உம்மை நாம் பாடுகிறோம், புகழ்கிறோம், வழிபடுகிறோம் என்றெல்லாம் பாரதி, காற்றே வா என்ற பாடலில் பாடுகிறார்
உனக்குப் பாட்டுகள் பாடுகின்றோம்.
உனக்கு புகழ்ச்சிகள் கூறுகிறோம்
உன்னை வழிபடுகின்றோம்”
2. பாரதியார் குறிப்பு வரைக- மகாகவி சுப்பிரமணிய பாரதியார் நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா, சிந்துக்குத் தந்தை, பாட்டுக்காெரு புலவன் என்றெல்லாம் பாராட்டப் பெற்றவர்
- கவிஞர், கட்டுரையாளர், சிறுகதையாளர், ஆசிரியர், இதழாசிரியர் கேலிச்சித்திரம் – கருத்துப்படங்களை உருவாக்கியவர்
- கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாப்பா பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திச்சூடி ஆகியன உலகிற்கு தந்த படைப்புகள்
- இந்தியா, சுதேசிமித்திரன் ஆகிய இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்
பலவுள் தெரிக
1.கீழ்க்காண்பனவற்றுள் பொருந்தாத இணையைக் கண்டுபிடி.அ) மயலுறுத்து – மயங்கச்செய்
ஆ)ப்ராண – ரஸம் – உயிர்வளி
இ) லயத்துடன் – சீராக
ஈ) வாசனை மனம்
Answer:
ஈ) வாசனை – மனம்
2.பொருத்திக் காட்டுக.
i) பாஞ்சாலி சபதம் – 1. குழந்தைகளுக்கான நீதிப்பாடல்
ii) சுதேசமித்திரன் – 2. பாராட்டப்பெற்றவர்
iii) புதிய ஆத்திசூடி – 3. இதழ்
iv) சிந்துக்குத் தந்தை – 4. காவியம்
அ) 3, 4, 2, 1
ஆ) 1, 2, 3, 4
இ) 4, 3, 1, 2
ஈ) 2, 4, 1, 3
Answer:
இ) 4, 3, 1, 2
3.‘‘நீடு துயில் நீக்கப் பாடிவந்த நிலா’ என்று பாராட்டப்பட்டவர்.
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) சுரதா
ஈ) கவிமணி
Answer:
அ) பாரதியார்
4.‘சிந்துக்குத் தந்தை’ என்று பாராட்டப்பட்டவர்.
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) சுரதா
ஈ) கவிமணி
Answer:
அ) பாரதியார்
5.கேலிச் சித்திரம், கருத்துப்படம் போன்றவற்றை உருவாக்கியவர்.
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) சுரதா
ஈ) கவிமணி
Answer:
அ) பாரதியார்
6.பாட்டுக்கொரு புலவன் என்று பாராட்டப்பெறுபவர்.
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) சுரதா
ஈ) கவிமணி
Answer:
அ) பாரதியார்
7.‘காற்று’ என்னும் தலைப்பில் வசன கவிதை எழுதியவர்.
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) சுரதா
ஈ) கவிமணி
Answer:
அ) பாரதியார்
8.“காற்றே , வா மகரந்தத் தூளைச் சுமந்து கொண்டு, மனத்தை மயலுறுத்துகின்ற இனிய வாசனையுடன் வா” – என்று பாடியவர்
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) சுரதா
ஈ) கவிமணி
Answer:
அ) பாரதியார்
9.ப்ராண-ரஸம் என்ற சொல் உணர்த்தும் பொருள்
அ) சீராக
ஆ) அழகு
இ) உயிர்வளி
ஈ) உடல்உயிர்
Answer:
இ) உயிர்வளி
10.வசன கவிதையைத் தமிழில் அறிமுகப்படுத்தியவர்
அ) பாரதிதாசன்
ஆ) வல்லிக்கண்ணன்
இ) பிச்சமூர்த்தி
ஈ) பாரதியார்
Answer:
ஈ) பாரதியார்
11.‘காற்றே வா’ என்னும் கவிதையின் ஆசிரியர்
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) கண்ண தாசன்
ஈ) வாணிதாசன்
Answer:
அ) பாரதியார்
12.காற்று எதைச் சுமந்து கொண்டு வர வேண்டுமென்று பாரதி அழைக்கிறார்?
அ) கவிதையை
ஆ) மகரந்தத்தூளை
இ) விடுதலையை
ஈ) மழையை
Answer:
ஆ) மகரந்தத்தூளை
13.பொருத்திக் காட்டுக:
i) மயலுறுத்து – 1. மயங்கச் செய்
ii) ப்ராண – ரஸம் – 2. உயிர்வளி
iii) லயத்துடன் – 3. மணம்
iv) வாசனை – 4. சீராக
அ) 1, 2, 4, 3
ஆ) 2, 3, 1, 4
இ) 3, 2, 1, 4
ஈ) 2, 1, 3, 4
Answer:
அ) 1, 2, 4, 3
14.ஆங்கிலத்தில் Prose Poetry (Free verse) என்றழைக்கப்படும் வடிவத்தைத் தமிழில் அறிமுகப்படுத்தியவர்
அ) பாரதிதாசன்
ஆ) பாரதியார்
இ) வாணிதாசன்
ஈ) கண்ண தாசன்
Answer:
ஆ) பாரதியார்
15.புதுக்கவிதை என்ற வடிவம் உருவாகக் காரணம்
அ) பாரதியின் வசன கவிதை
ஆ) ஜப்பானியரின் ஹைக்கூ
இ) வீரமாமுனிவரின் உரைநடை
ஈ) கம்பரின் கவிநயம்
Answer:
அ) பாரதியின் வசன கவிதை
16.பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றிய இதழ்கள்
i) இந்தியா
ii) சுதேசமித்திரன்
iii) எழுத்து
iv) கணையாழி
அ) i, ii – சரி
ஆ) முதல் மூன்றும் சரி
இ) நான்கும் சரி
ஈ) i, ii – தவறு
Answer:
அ) i, ii – சரி
17.பக்க மலைகள் உடைந்து வெள்ளம் பாயுது பாயுது பாயுது – தாம்தரிகிட என்ற இயற்கையொலிகளை உணர்வுடன் வெளிப்படுத்தும் பாடல்களைப் பாடியவர்
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) கண்ண தாசன்
ஈ) வாணிதாசன்
Answer:
அ) பாரதியார்
18.‘இனிய வாசனையுடன் வா’ என்று பாரதி அழைத்தது
அ) காற்று
ஆ) மேகம்
இ) குழந்தை
ஈ) அருவி
Answer:
அ) காற்று
19.பாரதியார் காற்றை ‘மயலுறுத்து’ அழைப்பதைக் குறிக்கும் சொற்றொடர்
அ) மணம் வீசும் காற்றாய் நீ வா
ஆ) மனதை மயங்கச் செய்யும் மணத்தோடு வா
இ) மயிலாடும் காற்றாய் நீ வா
ஈ) மகரந்தம் சுமந்து கொண்டு நீ வா
Answer:
ஆ) மனதை மயங்கச் செய்யும் மணத்தோடு வா
*******************THE END OF 2.2***************************
2.3. முல்லைப்பாட்டு
I. சொல்லும் பாெருளும்
- நனந்தலை உலகம் – அகன்ற உலகம்
- நேமி – வலம்புரிச்சங்கு
- காேடு – மலை
- காெடுஞ்செலவு – விரைவாகச் செல்லுதல்
- நறுவீ – நறுமணமுடைய மலர்கள்
- தூஉய் – தூவி
- விரிச்சி – நற்சாெல்
- சுவல் – தாேள்
II. இலக்கணக்குறிப்பு
- மூதூர் – பண்புத்தாெகை
- உறுதுயர் – வினைத்தாெகை
- கைதாெழுது – மூன்றாம் வேற்றுைமத் தாெகை
- தடக்கை – உரிச்சாெல் தாெடர்
III. பகுபத உறுப்பிலக்கணம்
பாெறித்த – பாெறி + த் + த் +அ
பாெறி – பகுதி
த் – சந்தி
த் – இறந்தகால இடைநிலை
அ – பெயெரச்ச விகுதி
IV. பலவுள் தெரிக
“பாடுஇமிழ் பனிக்கடல் பருகி” என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது?
- கடல் நீர் ஆவியாகி மேகமாதல்
- கடல் நீர் குளிர்ச்சி அடைதல்
- கடல் நீர் ஒலித்தல்
- கடல் நீர் கொந்தளித்தல்
விடை : கடல் நீர் ஆவியாகி மேகமாதல்
V. குறு வினா
1. பெற்றோர் வேலையிலிருந்து திரும்பத் தாமதாகும் போது அழும் தம்பிக்கு நீங்கள் கூறும் ஆறுதல் சொற்களை எழுதுக.- தம்பி அழாதே! அப்பாவும் அம்மாவும் விரைவில் வந்துவாடுவார்கள். வரும்போது உனக்கு விளையாட்டு பொருட்களை வாங்கிக் கொண்டு வருவார்கள்.
மா அல்
பொருள்: திருமால் - பேருருவம்
இலக்ககணக்குறிப்பு: செய்யுளிசை அளபெடை - உரிச்சொல் தொடர்
VI. நெடு வினா
முல்லைப் பாட்டில் உள்ள கார்காலச் செய்தியை விவரித்து எழுதுககுறிப்புச்சட்டம்
- மழை
- தெய்வ வழிபாடு
- கன்றின் வருத்தம்
- வருந்தாதே
- முதுபெண்டிர் தலைவியிடம் கூறியது
- மேகம் அகன்ற உலகத்தை வளைத்து பெருமழை பொழிகிறது. மாவலி மன்னன் திருமாலுக்கு நீர்வார்த்துத் தரும்போது மண்ணுக்கும், விண்ணுக்கும் பேருருவம் எடுத்து உயர்ந்து நிற்பது போன்றுள்ளது மழைமேகம். அம்மழை மேகம் ஒலிக்கும் கடலின் குளர்நீரைப் பருகிப் பெருந்தோற்றம் கொண்டு வலமாய் எழுகிறது. மலையைச் சூழந்து விரைந்து வேகத்துடன் பெரு மழையைப் பொழிகிறது.
- முது பெண்கள் காவலையுடைய ஊர்பக்கறம் சென்றனர். யாழிசை போன்று ஒலிக்கும் வண்டுக்ள நறுமணம் கொண்ட பூக்களைச் சுற்றி ஆரவாரிக்கும். மலர்ந்து முல்லைப் பூவோடு நெல்லையும் சேர்த்து தெய்வத்தின் முன் தூவி வழிபடுவபர். தெய்வத்தைத் தொழுது தலைவிக்காக நற்சொல் கேட்டு நிற்பர்.
“சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறுதுயர் அலமரல் நோக்கி”
சிறு தாம்புக் கயிற்றால் கட்டப்பட்ட இளங்கன்று பசியால் வாடிக் கொண்டிருந்தது. அதன் வருத்தத்தை ஓர் இடைமகள் கண்டாள்
வருந்தாதே:-
- புல்லை மேய்ந்த உன் தாய்மாரை வளைந்த கத்தியை உடைய கம்பைக் கொண்ட என் இடையர் இப்பொழுது ஓட்டு வந்து விடுவார் “வருந்தாதே” என்றாள் இடைமகள்.
- இடைமகள் மூலம் நற்சொல்லைக் கேட்டாேம். நின் தலைவன் பகைவரை வென்று திறைப் பொருளோடு வருவது உறுதி. மனத்தடுமாற்றம் கொள்ளாேதே!
முல்லைப்பாட்டு – கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. முல்லைப்பாட்டு _____________ நூல்களுள் ஒன்று.விடை : பத்துபாட்டு
2. முல்லைப்பாட்டு ___________ அடிகளை கொண்டது
விடை : 103
3. பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை கொண்ட நூல் _____________
விடை : முல்லைப்பாட்டு
4. இயற்கைச் சூழல் நமக்குள் _____________ தூண்டுகிறது.
விடை : இனிய உணர்வுகளைத்
5. தமிழர்கள் _____________ இயைந்த வாழ்வைக் காெண்டிருந்தனர்.
விடை : இயற்கையாேடு
II. குறு வினா
1. முல்லைப்பாட்டு நூல் குறிப்பு வரைக- பத்துபாட்டு நூல்களுள் ஒன்று.
- 103 அடிகளை கொண்டது
- ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது
- முல்லை நிலத்தைப் பற்றிப் பாடப்பட்டது
- பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை கொண்ட நூல்.
- முல்லைப் பாட்டினை பாடியவர்.
- காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனாவார்.
- பெரும்பொழுது – கார்காலம் (ஆவணி, புரட்டாசி)
- சிறுபொழுது – மாலை.
- நீீர் – குறுஞ்சுனை நீர், காட்டாறு
- மரம் – கொன்றை, காயா, குருத்தம்
- பூ – முல்லை, பிடவம், தோன்றிப்பூ
பலவுள் தெரிக
1.முல்லைப்பாட்டின் மொத்த அடிகள் எத்தனை?அ) 101
ஆ) 102
இ) 103
ஈ) 104
Answer:
இ) 103
2.முல்லைப்பாட்டு எந்த நூல் வகையைச் சார்ந்தது?
அ) எட்டுத்தொகை
ஆ) பத்துப்பாட்டு
இ) கீழ்க்க ணக்கு
ஈ) சிற்றிலக்கியம்
Answer:
ஆ) பத்துப்பாட்டு
3.முல்லைத் திணைக்குரிய பூ வகை
அ) காந்தள்
ஆ) பிடவம்
இ) தாழை
ஈ) பாதிரி
Answer:
ஆ) பிடவம்
4.முல்லைப்பாட்டு எந்தக் கணக்கு நூல்களுள் ஒன்று?
அ) பதினெண்மேல் கணக்கு
ஆ) பதினெண்கீழ்க்கணக்கு
இ) சிற்றிலக்கியம்
ஈ) காப்பியம்
Answer:
அ) பதினெண்மேல் கணக்கு
5.பத்துப்பாட்டில் மிகக் குறைந்த அடிகளைக் கொண்ட நூல்
அ) குறிஞ்சிப்பாட்டு
ஆ) முல்லைப்பாட்டு
இ) பட்டினப்பாலை
ஈ) திருமுருகாற்றுப்படை
Answer:
ஆ) முல்லைப்பாட்டு
6.பொருத்துக.
1. நேமி – அ) மலை
2. கோடு – ஆ) வலம்புரி சங்கு (சக்கரத்துடன் கூடிய)
3. விரிச்சி – இ) தோள்
4. சுவல் – ஈ) நற்சொல்
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
இ) 1.ஈ 2.ஆ 3.இ 4.அ
ஈ) 1.இ 2.ஈ 3.அ 4.ஆ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
7.வலம்புரிச் சங்கு பொறித்த கைகளையுடையவர்
அ) முருகன்
ஆ) திருமால்
இ) மாவலி மன்னன்
ஈ) நான்முகன்
Answer:
ஆ) திருமால்
8.குறுகிய வடிவம் கொண்டு நீர்வார்த்துத் தந்தவன்
அ) முருகன்
ஆ) திருமால்
இ) மாவலிமன்னன்
ஈ) நான்முகன்
Answer:
இ) மாவலிமன்னன்
9.மண்ணுக்கும் விண்ணுக்குமாகப் பேருருவம் எடுத்து நின்றவர்
அ) முருகன்
ஆ) திருமால்
இ) மாவலிமன்னன்
ஈ) நான்முகன்
Answer:
ஆ) திருமால்
10.“கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி”
– இவ்வடிகளில் ‘மேகம்’ என்னும் பொருள்தரும் சொல்
அ) கோடு
ஆ) செலவு
இ) எழிலி
ஈ) கொடு
Answer:
இ) எழிலி
11.“கொடுங்கோற் கோவலர்” – இதில் குறிப்பிடப்படும் கோவலர் யார்?
அ) கோவலன்
ஆ) குறவர்
இ) உழவர்
ஈ) இடையர்
Answer:
ஈ) இடையர்
12.முல்லைப்பாட்டு என்னும் நூலை இயற்றியவர்
அ) கபிலர்
ஆ) மாங்குடிமதேனார்
இ) நப்பூதனார்
ஈ) நக்கீரர்
Answer:
இ) நப்பூதனார்
13.மழையின் சீற்றம் இயல்பு வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்களைப் படம் பிடித்துக் காட்டுவது எது?
அ) சங்க இலக்கியம்
ஆ) திருக்குறள்
இ) நாலடியார்
ஈ) சிலப்பதிகாரம்
Answer:
அ) சங்க இலக்கியம்
14.‘நனந்தலை உலகம்’ என்பதில் ‘நனந்தலை’ என்பதன் பொருள்
அ) கவர்ந்த
ஆ) அகன்ற
இ) சுருங்கிய
ஈ) இழந்த
Answer:
ஆ) அகன்ற
15.‘நறுவீ என்பதில் ‘வீ’ என்பதன் பொருள்
அ) மலர்கள்
ஆ) மான்கள்
இ) விண்மீன்கள்
ஈ) கண்க ள்
Answer:
அ) மலர்கள்
16.பொருத்திக் காட்டுக:
i) மூதூர் – 1. உரிச்சொற்றொடர்
ii) உறுதுயர் – 2. மூன்றாம் வேற்றுமைத்தொகை
iii) கைதொழுது – 3. வினைத்தொகை
iv) தடக்கை – 4. பண்புத்தொகை
அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 1, 3, 4, 2
ஈ) 2, 1, 3, 4
Answer:
அ) 4, 3, 2, 1
17.பொறித்த – பகுபத உறுப்பிலக்கணத்தின்படி பிரிக்கும் முறை
அ) பொறி + த் + த் + அ
ஆ) பொறித்து + அ
இ) பொறி + த்(ந்) + த் + அ
ஈ) பொறி + த் + த
Answer:
அ) பொறி + த் + த் + அ
18.தலைவிக்காக நற்சொல் கேட்டு நின்றவர்கள்
அ) இளம் பெண்கள்
ஆ) முதிய பெண்டிர்
இ) தோழிகள்
ஈ) சான்றோர்
Answer:
ஆ) முதிய பெண்டிர்
ஆ) முதிய பெண்டிர்
இ) தோழிகள்
ஈ) சான்றோர்
Answer:
ஆ) முதிய பெண்டிர்
19.சிறுதாம்புக் கயிற்றால் கட்டப்பட்ட எது பசியால் வாடிக் கொண்டிருந்தது?
அ) பசு
ஆ) இளங்கன்று
இ) எருமை
ஈ) ஆடு
Answer:
ஆ) இளங்கன்று
20.பசியால் வாடிக் கொண்டிருந்த இளங்கன்றின் வருத்தத்தைக் கண்டவள்
அ) குறமகள்
ஆ) இடைமகள்
இ) தலைவி
ஈ) தோழி
Answer:
ஆ) இடைமகள்
21.‘கைய கொடுங்கோற் கோவலர் பின் நின்று உய்த்தர இன்னே வருகுவர், தாயர்’ என்று யார் யாரிடம் கூறியது?
அ) இடைமகள் இளங்கன்றிடம்
ஆ) முதுபெண்டிர் பசுவிடம்
இ) தலைவன் காளையிடம்
ஈ) தலைவி மேகத்திடம்
Answer:
அ) இடைமகள் இளங்கன்றிடம்
22.‘நன்னர் நன்மொழி கேட்டனம்’ – யார் யாரிடம் கூறியது?
அ) முதுபெண்டிர் தலைவியிடம் கூறியது
ஆ) தலைவி முதுபெண்டிரிடம் கூறியது
இ) தோழி தலைவியிடம் கூறியது
ஈ) தலைவி தலைவனிடம் கூறியது
Answer:
அ) முதுபெண்டிர் தலைவியிடம் கூறியது
23.பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள முல்லைப்பாட்டின் அடிகள்
அ) 1 – 17
ஆ) 17 – 25
இ) 4 – 16
ஈ) 5 – 20
Answer:
அ) 1 – 17
24.முல்லையின் நிலம்
அ) காடும் காடு சார்ந்த இடமும்
ஆ) மலையும் மலை சார்ந்த இடமும்
இ) வயலும் வயல் சார்ந்த இடமும்
ஈ) கடலும் கடல் சார்ந்த இடமும்
Answer:
அ) காடும் காடு சார்ந்த இடமும்
25.இருத்தலும் இருத்தல் நிமித்தமும் (காத்திருத்தல்) எந்நிலத்துக்குரிய உரிப்பொருள்
அ) குறிஞ்சி
ஆ) முல்லை
இ) மருதம்
ஈ) பாலை
Answer:
ஆ) முல்லை
26.கார்காலத்துக்குரிய மாதங்கள்
அ) தை, மாசி
ஆ) பங்குனி, சித்திரை
இ) ஆவணி, புரட்டாசி
ஈ) கார்த்திகை, மார்கழி
Answer:
ஆ) பங்குனி, சித்திரை
இ) ஆவணி, புரட்டாசி
ஈ) கார்த்திகை, மார்கழி
Answer:
இ) ஆவணி, புரட்டாசி
27.நப்பூதனாரின் தந்தை
அ) பொன்முடியார்
ஆ) பொன்வணிகனார்
இ) மாசாத்துவாணிகனார்
ஈ) மாணிக்கநாயனார்
Answer:
ஆ) பொன்வணிகனார்
ஆ) பொன்வணிகனார்
இ) மாசாத்துவாணிகனார்
ஈ) மாணிக்கநாயனார்
Answer:
ஆ) பொன்வணிகனார்
28.பொன்வணிகனாரின் ஊர்
அ) உறையூர்
ஆ) மதுரை
இ) காவிரிப்பூம்பட்டினம்
ஈ) குற்றாலம்
Answer:
இ) காவிரிப்பூம்பட்டினம்
**********************THE END OF 2.3****************************
இயல் 2.4 புயலிலே ஒரு தோணி
1 . ' புயலிலே ஒரு தோணி ' கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்கு தொடர்களும் ஒலிக் குறிப்புச் சொற்களும் புயலில் , தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன ?
வர்ணனைகள் :
1. கொளுத்திக் கொண்டிருந்த வெயில் இமைநேரத்தில் மறைந்து விட்டது ; புழுங்கிற்று .
2. மேகப் பொதிகள் பரந்து திரண்டொன்றிக் கும்மிருட்டாய் இறுகி நின்றன .
3. கிடுகிடுக்கும் இடி முழக்கத்துடன் மின்னல் கீற்றுகள் வானைப் பிளந்தன .
4. வானம் உடைந்து கொட்டு கொட்டென்று வெள்ளம் கொட்டியது .
5 . சூறாவளி மாரியும் காற்றும் கூடிக் கலந்து ஆடிக் குதித்துக் கெக்கலித்தன .
6. வானும் கடலும் வளியும் மழையும் மீண்டும் ஒன்று
கூடிக் கொந்தளிக்கின்றன .
7 . வானம் பிளந்து தீ கக்கியது .
8 .மழை வெள்ளம் கொட்டுகிறது .
9.வளி முட்டி புரட்டுகிறது .
10 .கடல்வெறிக் கூத்தாடுகிறது .
அடுக்குத் தொடர்கள் :
1 .தொங்கான் எலும்புகள் முடிவது போல் நொறு நொறு நொறுங்கல் ஒலியுடன் தத்தளித்தது .
2. இருளிருட்டு , இருட்டிருட்டு , கும்மிருட்டு , குருட்டிருட்டு தலைக்கு மேல் காணப்பட்டது .
3 . தொங்கான் நடுநடுங்கித் தாவித் தாவிக் குதித்து குதித்து விழுவிழுந்து நொறு நொறு நொறுங்குகிறது .
4 . சூரியன் சூரியன்....கரை ! கரை ! ...
5 . கடல் அலைகள் மொத்து மொத்தென்று மோதின .
2. இருளிருட்டு , இருட்டிருட்டு , கும்மிருட்டு , குருட்டிருட்டு தலைக்கு மேல் காணப்பட்டது .
3 . தொங்கான் நடுநடுங்கித் தாவித் தாவிக் குதித்து குதித்து விழுவிழுந்து நொறு நொறு நொறுங்குகிறது .
4 . சூரியன் சூரியன்....கரை ! கரை ! ...
5 . கடல் அலைகள் மொத்து மொத்தென்று மோதின .
ஒலிக்குறிப்புச் சொற்கள் :
1 . தொங்கான் நடுநடுங்கித் தாவித் தாவிக் குதிகுதித்து நொறு நொறு நொறுங்கல் ஒலியுடன் நொறுங்குகிறது .
2. ஙொய்ங் புய்ங் ஙொய்ங் புய்ங் ஙொய்ங் புய்ங் .
3. இடிமுழக்கச் சீனப் பிசாசுகள் தாவி வீசுகின்றன .
புயலுக்குப் பின் அமைதி...கரை :
மறுநாள் காலையில் சூரியன் உதித்து , தொங்கான் மிதந்து சென்று , அலைகளில் நெளிந்தோடி ஒருவழியாகக் கரையை அடைந்தது .
***********************THEE END OF 2.4*****************************
2.5. தொகைநிலைத் தொடர்கள்
I. பலவுள் தெரிக
‘பெரிய மீசை’ சிரித்தார் – வண்ணச் சொல்லுக்கான தொகையின் வகை எது?
- பண்புத்தொகை
- உவமைத்தொகை
- அன்மொழித்தொகை
- உம்மைத்தொகை
விடை : பண்புத்தொகை
II. குறு வினா
தண்ணீர் குடி, தயிர்க்குடம் ஆகிய தொகைச் சொற்களை விரித்து எழுதுக. தொடரில் அமைக்க
தண்ணீர் குடி
- தண்ணீரைக் குடி (இரண்டாம் வேற்றுமைத் தொகை)
- மிகுந்த தாகத்தினால் தண்ணீரைக் குடித்தேன்.
தயிர்க்குடம்
- தயிரை உடைய குடம் (இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை)
- கமலா தயிர்க்குடத்திலிருந்து தயிரை ஊற்றினாள்.
II. சிறு வினா
தோட்டத்தில் மல்லிகைப்பூ பறித்த பூங்கொடி, வரும்வழியில் ஆடுமாடுகளுக்குத் தண்ணீர்த் தொட்டியில் குடிநீர் நிரப்பினாள். வீட்டினுள் வந்தவள் சுவர்க்கடிகாரத்தில் மணி பார்த்தாள்.
இப்பத்தியில் உள்ள தொகைச் சொற்களின் வகைகளைக் குறிப்பிட்டு, விரித்து எழுதுக.
மல்லிகைப்பூ:-
- இரு பெயரொட்டுப் பண்புத்தொகை
- மல்லிகை என்னும் பூ (மல்லிகை – சிறப்பு பெயர், பூ – பொதுப்பெயர்)
பூங்கொடி:-
- உவமைத் தொகை
- பூ போன்ற கொடி
தண்ணீர்த் தொட்டியில்;-
- இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை
- தண்ணீரை ஊற்றும் தொட்டி
குடிநீர் நிரப்பினாள்;-
- இரண்டாம் வேற்றுமைத் தொகை
- குடிநீரை நிரப்பினாள்
தொகைநிலைத் தொடர்கள் – கூடுதல் வினாக்கள்
1. சொற்றொடர் என்றால் என்ன?
- சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது “சொற்றொடர்” அல்லது “தொடர்” எனப்படும்.
எ.கா.:- நீர் பருகினான், வெண்சங்கு ஊதினான்.
2. தொகைநிலைத் தொடர் என்றால் என்ன?
- பெயர்ச்சொல்லோடு வினைச்சொல்லும் பெயர்ச்சொல்லும் சேரும் தொடரின் இடையில், வேற்றுமை உருபுகளோ, வினை, பண்பு முதலியவற்றின் உருபுகளோ தொக்கி (மறைந்து) இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட சொற்கள் ஒரு சொல் போல் நிற்குமானால் அதனைத் தொகைநிலைத்தொடர் என்று கூறுவர்.
எ.கா.:- கரும்பு தின்றான்.
3. தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்.?
தொகைநிலைத் தொடர் ஆறு வகைப்படும்.
அவை
- வேற்றுமைத்தொகை
- வினைத்தொகை,
- பண்புத்தொகை
- உவமைத்தொகை ,
- உம்மைத்தொகை
- அன்மொழித்தொகை என்பன ஆகும்.
4. தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?
- ஒரு தொடரில் வேற்றுமை உருபுகள் (ஐ, ஆல், கு, இன், அது, கண்) ஆகியவ ற்றுள் ஒன்று மறைந்து வந்து பொருள் உணர்த்துவது வேற்றுமைத்தொகை எனப்படும்.
5. பண்புத்தொகை என்றால் என்ன?
- நிறம், வடிவம், சுவை , அளவு முதலானவற்றை உணர்த்தும் பண்புப்பெயருக்கும் அது தழுவிநிற்கும் பெயர்ச்சொல்லுக்கும் இடையில் “மை” என்னும் பண்பு விகுதியும் ஆகிய, ஆன என்னும் பண்பு உருபுகளும் மறைந்து வருவது பண்புத்தொகை எனப்படும்.
6. இருபெயரொட்டுப் பண்புத்தொகை என்றால் என்ன?
- சிறப்புப்பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நின்று இடையில் ’ஆகிய’ என்னும் பண்பு உருபு தொக்கி வருவது இருபெயரொட்டுப் பண்புத்தொகையாகும்.
7. உவமைத்தொகை என்றால் என்ன? எ.கா. தருக.
- உவமைக்கும் பொருளுக்கும் (உவமேயம்) இடையில் உவமஉருபு மறைந்து வருவது உவமைத்தொகை எனப்படும்.
எ.கா.:- மலர்க்கை (மலர் போன்ற கை)
8. உம்மைத்தொகை என்றால் என்ன?
- இரு சொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் ’உம்’ என்னும் இடைச்சொல் மறைந்து வருவது உம்மைத்தொகையாகும்.
9. உம்மைத்தொகை என்றால் என்ன?
- உம்மைத்தொகை எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நான்கு அளவுப்
- பெயர்களைத் தொடர்ந்து வரும்.
10. அன்மொழித்தொகை என்றால் என்ன?
- வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்கள் அவை அல்லாத வேறு சொற்கள் மறைந்து நின்று பொருள் தருவது அன்மொழித் தொகை ஆகும்.
கற்பவை கற்றபின்…
வண்ணமிட்ட தொகைச் சொற்களை வகைப்படுத்துக.
1. அன்புச்செல்வன்
திறன்பேசியின் தாெடுதிரையில் படித்துக் காெண்டிருந்தார்.
- அன்புச்செல்வன் – இருபெயரொட்டு பண்புத்தொகை
- தாெடுதிரை – வினைத்தொகை
2. அனைவருக்கும் மோர்ப்பானையைத் திறந்து மோர் காெடுக்கவும்.
- மோர்ப்பானை – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை
- மோர் காெடுக்கவும் – இரண்டாம் வேற்றுமைத் தொகை
3. வெண்டக்காய்ப் பாெரியல் மோர்க்குழம்புக்குப் பொருத்தமாக இருக்கும்.
- வெண்டக்காய்ப் – இருபெயரொட்டு பண்புத்தொகை
- மோர்க்குழம்பு – மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை
4. தங்கமீன்கள் தண்ணீர்த் தாெட்டியில் விளையாடுகின்றன.
- தங்கமீன்கள் – உவமைத்தொகை
- தண்ணீர்த் தாெட்டி – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை
மொழியை ஆள்வோம்
I. தமிழில் மொழிபெயர்த்துத் தலைப்பிடுக.
The Golden sun gets up early in the morning and starts its bright rays to fade away the dark. The milky clouds start their wandering. The colourful birds start twitting their morning melodies in percussion. The cute butterflies dance around the flowers. The flowers’ fragrance fills the breeze. The breeze gently blows everywhere and makes everything pleasant.
இயற்கை
பொன்னான கதிரவன் நாள்தோறும் காலையில் எழுந்து அதன் ஒளிக் கதிர்களை வீசி, இருளை மறையச் செய்யும், பால் போன்ற மேகங்கள் சுற்ற ஆரம்பித்துவிடும். வண்ணப் பறவைகள் இதமான சூழ்நிலையைத் தன் இறகுகளை அடிப்பதன் மூலம் உருவாக்கும். அழகான வண்ணத்துப் பூச்சி மலர்களைச் சுற்றி ஆடும். பூக்களின் நறுமணம் தென்றல் காற்றை நிரப்பும். அந்தக் காற்று அனைத்த இடங்களிலும் பரவி ஒரு புத்துணர்வான சூழ்நிலையை உருவாக்கும்.
II. சொற்களில் மறைந்துள்ள தொகைகளை அடையாளம் கண்டு தொடரில் அமைக்க.
(இன்சொல், எழுகதிர், கீரிபாம்பு, பூங்குழல் வந்தாள், மலை வாழ்வார், முத்துப்பல்)
1. இன்சொல் – பண்புத்தொகை
- இனிமையான சொல் கூறுதல் சான்றோர்க்கு அழகு
2. எழுகதிர் – வினைத்தொகை
- கடலின் நடுவே தோன்றும் ஏழுகதிரின் அழகே அழகு
3. கீரிபாம்பு – உம்மைத்தொகை
- பகைவர்கள் எப்போதும் கீரியும் பாம்பும் போல இருப்பார்கள்
4. பூங்குழல் வந்தாள் – அன்மொழித் தொகை
- பூப் போன்ற கூந்தலையுடைய பெண் வந்தாள்
5. மலை வாழ்வார் – ஏழாம் வேற்றுமைத் தொகை
- பழங்குடியினர் மலையின் கண் வாழ்பவர்
6. முத்துப் பல் – உவமைத் தொகை
- வெண்மதியின் முத்துப் பல் மேலும் அவளுக்கு அழகு சேர்க்கிறது
III. செய்திகளைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.
பூக்களைப் பற்றிய அரிய இலக்கியச் செய்திகள் பூ உண்டு. ஆனால் கண்ணிற்குக் காட்சி தராமல் காண்டற்கு அரியனவாய் இருக்கும் மலர்கள்: ஆல மலர்; பலா மலர்.மலர் உண்டு; பெயரும் உண்டு; ஆனால் இதுதான் அது என்று உறுதியாக அறிய இயலாதுள்ள நிலையில் இருக்கும் மலர்கள்: சுள்ளி மலர், பாங்கர் மலர்.அகவிதழ் முதலிய உறுப்புகள் இருந்து அவை புறத்தே காட்சிப்படாமல் உள்ளேயே பொதிந்திருக்கும் மலர்கள்: அத்தி, ஆலம், கொழிஞ்சி, பலா.பயன்பாடு, நாற்றம், மக்களது விருப்பில் இடம் பெறாமை, பொதுவில் ஒதுக்கப்பட்டமை கொண்டு மலரில் சில எளியவை ஆகின்றன. அவையாவன: நெருஞ்சி, எருக்கு, பூளை, குரீஇப் பூளை, வேளை, ஊமத்தம், கள்ளி, முருங்கை.இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை. கரடிகள் மரத்தின் மீதேறி அவற்றைப் பறித்து உண்ணும். பாதிரிப் பூ குடிநீருக்குத் தன் மணத்தை ஏற்றும். மூங்கில் பூவில் காய் தோன்றிக் கனியாகி அதிலிருந்து ஒருவகை அரிசி தோன்றும். இது மூங்கில் அரிசி எனப்படும்
– கோவை.இளஞ்சேரன்
1. மலர் உண்டு; பெயரும் உண்டு – இரண்டு தொடர்களையும் ஒரு தொடராக்குக.
- மலருக்கு பெயர் உண்டு
2. அரும்பாகி மொட்டாகிப் பூவாகி…. என்பதை ஒத்து அமைந்துள்ள தொடரைக் கண்டறிக.
- மூங்கில் பூவில் காய் தோன்றிக் கனியாகி அதிலிருந்து ஒருவகை அரிசி தோன்றும்
3. நீங்கள் அறிந்த இரு பூக்களின் பெயர்களையும் பயன்களையும் எழுதுக.
- பாதிரிப்பூ – குடிநீருக்குத் தன் மனத்தை ஏற்றும். உடல் நலத்தை பெருக்கி குளிர்ச்சியூட்டும்
- முருங்கைப்பூ – இப்பூவைக் கசாயம் செய்து வாரம் இருமுறை குடிக்கவும். குடித்துவர நீரிழிவு நோய், நரம்புத்தளர்ச்சி நோய் நீங்கும். நினைவாற்றல் பெருகும்
4. அரிய மலர் – இலக்கணக் குறிப்புத் தருக.
- அரிய மலர் – பெயரச்சம்
5. தொடரில் பொருந்தாப் பொருள்தரும் மயங்கொலி எழுத்துகளைத் திருத்துக.
- இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை. கரடிகள் மறத்தின் மீதேறி அவற்றைப் பரித்து உண்ணும். பாதிரிப் பூ குடிநீருக்குத் தன் மனத்தை ஏற்றும்
விடை –
- இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை. கரடிகள் மரத்தின் மீதேறி அவற்றைப் பறித்து உண்ணும். பாதிரிப் பூ குடிநீருக்குத் தன் மணத்தை ஏற்றும்
மொழியோடு விளையாடு
I. சொல்லைக் கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்க.
(காடு, புதுமை, விண்மீன், காற்று, நறுமணம்)
1. முதல் இரண்டை நீக்கினாலும் வாசனை தரும்; நீக்காவிட்டாலும் வாசனை தரும்.
- நறுமணம்
2. பழமைக்கு எதிரானது – எழுதுகோலில் பயன்படும்
- புதுமை
3. இருக்கும்போது உருவமில்லை – இல்லாமல் உயிரினம் இல்லை.
- காற்று
4. நாலெழுத்தில் கண் சிமிட்டும் – கடையிரண்டில் நீந்திச் செல்லும்
- விண்மீன்
5. ஓரெழுத்தில் சோலை – இரண்டெழுத்தில் வனம்
- காடு
II. நயமிகு தொடர்களைப் படித்து ஏற்ற தலைப்புகளை எடுத்தெழுதுக.
(வனத்தின் நடனம், மிதக்கும் வாசம், காற்றின் பாடல், மொட்டின் வருகை, உயிர்ப்பின் ஏக்கம், நீரின் சிலிர்ப்பு)
1. கொளுத்தும் வெயில் சட்டெனத் தணிந்தது. வானம் இருண்டது. வாடைக் காற்று வீசியது.
- காற்றின் பாடல்
2. புவி சிலிர்த்து, மண்ணிலிருந்து சின்னஞ்சிறு மொட்டு முகிழ்த்தது; அச்செடியை வரவேற்கும் விதமாகப் பக்கத்துச் செடிகள் தலையாட்டி மகிழ்கின்றன.
- மொட்டின் வருணனை
3. சோலைக்குள் சத்தமில்லாமல் வீசியது தென்றல்; பூக்கள் அதன் வருகையை உணர்ந்து நறுமணத்துடன் வரவேற்கின்றன. பூவாசம் கலந்த தென்றலில் வண்டுகள் மிதந்து சென்று மலர்களில் அமர்கின்றன.
- மிதக்கும் வாசம்
4. இரவின் இருளமைதியில் இரைச்சலாய்ச் சில சுவர்க்கோழிகள். வறண்ட வானத்தின் இருண்ட புழுக்கம்; மழைக்கு ஏங்கும் புவி வெப்பப் பெருமூச்சு விடும்; கசகசத்த உயிரினங்கள்.
- உயர்ப்பின் ஏக்கம்
5. நின்றுவிட்ட மழை தரும் குளிர்; சொட்டுச் சொட்டாக விளிம்புகளிலிருந்தும் மரங்களிலிருந்தும் விழும் மழைநீர்பட்டுச் சிலிர்க்கும் உயிரினம்.
- நீரின் சிலிப்பு
6. குயில்களின் கூவலிசை. புள்ளினங்களின் மேய்ச்சலும் பாய்ச்சலும். இலைகளின் அசைவுகள், சூறைக்காற்றின் ஆலோலம்.
- வனத்தின் நடனம்
III. அகராதியில் காண்க.
1. அகன்சுடர்
- சூரியன், விரிந்து சுடர், அகன்ற சுடர்
2. ஆர்கலி
- கடல், மழை, ஆரவாரம், பேரொலி, வெள்ளம்
3. கட்புள்
- பறைவ, ஒரு புலவன்
4. கொடுவாய்
- புலி, வளைந்த வாய், பழிச்சொல்
5. திருவில்
- வானவில், இந்திரவில்
கலைச்சொல் அறிவாேம்
- Storm – புயல்
- Land Breeze – நிலக்காற்று
- Tornado – சூறாவளி
- Sea Breeze – கடற்காற்று
- Tempest – பெருங்காற்று
- Whirlwind – சுழல்காற்று
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1.தொகை நிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?
அ) இரண்டு
ஆ) நான்கு
இ) ஐந்து
ஈ) ஆறு
Answer:
ஈ) ஆறு
2.கீழ்க்காணும் சொற்களில் உம்மைத்தொகை அல்லாத சொல் எது?
அ) தேர்ப்பாகன்
ஆ) அண்ண ன் தம்பி
இ) வெற்றிலை பாக்கு
ஈ) இரவு பகல்
Answer:
அ) தேர்ப்பாகன்
3.‘மதுரை சென்றார்’ – இத்தொடரில் அமைந்துள்ள வேற்றுமைத்தொகை எவ்வகை வேற்றுமைத் தொகைக்குப் பொருந்தும்?
அ) மூன்றாம் வேற்றுமைத் தொகை
ஆ) நான்காம் வேற்றுமைத் தொகை
இ) ஐந்தாம் வேற்றுமைத் தொகை
ஈ) ஆறாம் வேற்றுமைத் தொகை
Answer:
ஆ) நான்காம் வேற்றுமைத் தொகை
4.பொருத்துக.
1. மதுரை சென்றார் – அ) வினைத்தொகை
2. வீசு தென்றல் – ஆ) பண்புத்தொகை
3. செங்காந்தள் – இ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை
4. மார்கழித் திங்கள் – ஈ) நான்காம் வேற்றுமைத் தொகை
அ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
ஆ) 1.ஈ 2.இ 3.ஆ 4.அ
இ) 1.ஈ 2.ஆ 3.அ 4.இ
ஈ) 1.ஈ 2.இ 3.அ 4.ஆ
Answer:
அ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
5.பொருத்துக.
1. உவமைத்தொகை – அ) முறுக்கு மீசை வைத்தார்
2. உம்மைத்தொகை – ஆ) மலர்க்கை
3. அன்மொழித்தொகை – இ) வட்டத்தொட்டி
4. பண்புத்தொகை – ஈ) அண்ணன் தம்பி
அ) 1.ஆ 2.ஈ. 3.அ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.இ 3.அ 4.ஈ
ஈ) 1.இ 2.ஈ 3.அ 4.ஆ
Answer:
அ) 1.ஆ 2.ஈ 3.அ 4.இ
6.பண்புத்தொகை அல்லாத ஒன்று அ) செங்காந்தள்
ஆ) வட்டத்தொட்டி
இ) இன்மொழி
ஈ) கொல்களிறு
Answer:
ஈ) கொல்களிறு
7.காலம் கரந்த பெயரெச்சம்
அ) வினைத்தொகை
ஆ) பண்புத்தொகை
இ) உவமைத்தொகை
ஈ) உம்மைத்தொகை
Answer:
அ) வினைத்தொகை
8.வேற்றுமையுருபு அல்லாதது
அ) ஐ, ஒடு
ஆ) கு, இன்
இ) ஆகிய, ஆன
ஈ) அது, கண்
Answer:
இ) ஆகிய, ஆன
9.பொருந்தாத இணையைக் கண்டறிக
அ) வினைத்தொகை – தேர்ப்பாகன்
ஆ) பண்புத்தொகை – இன்மொழி
இ) உம்மைத்தொகை – தாய் சேய்
ஈ) அன்மொழித்தொகை – சிவப்புச்சட்டை பேசினார்
Answer:
அ) வினைத்தொகை – தேர்ப்பாகன்
10.‘மலர் போன்ற கை’ இதில் ‘மலர்’ என்பது ………………….. ‘போன்ற’ என்பது ……………… ‘கை’ என்பது…………………..
அ) உவம உருபு – உவமை – உவமேயம்
ஆ) உவமை – உவம உருபு – உவமேயம்
இ) உவமேயம் – உவமை – உவம உருபு
ஈ) இவற்றுள் ஏதுமில்லை
Answer:
ஆ) உவமை – உவம உருபு – உவமேயம்
11.சிறப்புப் பெயர், பொதுப்பெயர் ஆகியன வரும் தொகைச்சொல்
அ) பண்புத்தொகை
ஆ) வினைத்தொகை
இ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை
ஈ) உம்மைத்தொகை
Answer:
இ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை
12.மார்கழித் திங்கள், சாரைப்பாம்பு ஆகிய சொற்களில் இடம்பெறும் பொதுப்பெயர்கள் எவை?
அ) மார்கழி, சாரை
ஆ) திங்கள், பாம்பு
இ) மார்கழி, பாம்பு
ஈ) திங்கள், சாரை
Answer:
ஆ) திங்கள், பாம்பு
13.‘செங்காந்தள்’ – இப்பண்புத்தொகைச் சொல்லில் மறைந்து வரும் உருபு
அ) ஆன
ஆ) ஆகிய
இ) போன்ற
ஈ) ஐ
Answer:
ஆ) ஆகிய
14.‘இன்மொழி’ – இப்பண்புத்தொகைச் சொல்லில் மறைந்து வரும் உருபு
அ) ஆன
ஆ) ஆகிய
இ) போன்ற
ஈ) இன்
Answer:
அ) ஆன
15.‘மதுரை சென்றாள்’ – இவ்வேற்றுமைத்தொகைச் சொல்லில் இடம்பெறும் வேற்றுமை உருபு
அ) கு
ஆ) கண்
இ) ஆல்
ஈ) அது
Answer:
அ) கு
16.கரும்பு தின்றான் – இத்தொடர் …………………………….. வேற்றுமைத்தொடர்.
அ) இரண்டாம்
ஆ) மூன்றாம்
இ) நான்காம்
ஈ) ஆறாம்
Answer:
அ) இரண்டாம்
17.நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகைக்கான சொல்
அ) தேர்ப்பாகன்
ஆ) தமிழ்த்தொண்டு
இ) கரும்பு தின்றான்
ஈ) மதுரை சென்றார்
Answer:
ஆ) தமிழ்த்தொண்டு
18.பொருத்திக் காட்டுக.
i) வீசு தென்றல் – 1. உம்மைத் தொகை
ii) செங்காந்தள் – 2. உவமைத்தொகை
iii) மலர்க்கை – 3. பண்புத்தொகை
iv) தாய்சேய் – 4. வினைத்தொகை
அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 4, 2, 1, 3
ஈ) 2, 3, 4, 1
Answer:
அ) 4, 3, 2, 1
19.இருபெயரொட்டுப் பண்புத்தொகைக்கான சொல்
அ) மலர்க்கை
ஆ) அண்ண ன் தம்பி
இ) மார்கழித்திங்கள்
ஈ) தேர்ப்பாகன்
Answer:
இ) மார்கழித்திங்கள்
20.பொருத்துக.
i) இன்மொழி – 1. உவமைத்தொகை
ii) தாய்சேய் – 2. வினைத்தொகை
iii) முத்துப்பல் – 3. உம்மைத் தொகை
iv) வருபுனல் – 4. பண்புத்தொகை
அ) 1, 2, 3, 4
ஆ) 3, 4, 2, 1
இ) 4, 3, 2, 1
ஈ) 4, 3, 1, 2
Answer:
ஈ) 4, 3, 1, 2
Thanks for your informations
பதிலளிநீக்குகருத்துரையிடுக