10th Standard Tamil Book Back Answers Unit 5
10th Tamil Unit 5 Book back Question and answers, 10th Standard Tamil Samacheer kslvi guide, Book and additional question and answers.
- இயல் 5.1 மொழிபெயர்ப்புக் கல்வி
- இயல் 5.2 நீதி வெண்பா
- இயல் 5.3 திருவிளையாடற் புராணம்
- இயல் 5.4 புதியநம்பிக்கை
10TH TAMIL UNIT 5 BOOK BACK ANSWERS |
5.1. மொழிபெயர்ப்புக் கல்வி
I. பலவுள் தெரிக.
மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம்வைத்தும்’ என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி
- சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
- காப்பியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
- பக்தி இலக்கியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
- சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
விடை : சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
II. குறு வினா
தாய்மொழியும் ஆங்கிலமும் தவிர நீங்கள் கற்க விரும்பும் மொழியினைக் குறிப்பிட்டுக் காரணம் எழுதுக.
- தாய்மொழித் தமிழும் உலகப் பொது மொழி ஆங்கிலமும் தவி, நான் கற்க விரும்பும் மொழி இந்தி
- இந்தி கற்க விரும்புக் காரணம் :
- இந்தி நமது நாட்டின் தேசிய மொழி.
- இந்தி இந்திய பாராளுமன்ற மொழி.
- பாராளுமன்ற விவாதங்களை அறிய உதவும் மொழி.
- அரசு மற்றும் தனியார் வேலை வடக்கே கிடைத்தால் துணையாக இருக்கும் மொழி.
- வட நாட்டு மக்களின் பண்பாட்டை புரிந்து கொள்ளும் உதவும் மொழி இந்தி.
III. சிறு வினா
1. உங்களுடன் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி வேலைக்குச் செல்ல விரும்புகிறார். அவரிடம் கற்பதன் இன்றியமையாமையை எவ்வகையில் எடுத்துரைப்பீர்கள்?
- என்னுடன் படித்த மாணவன் வறுமையின் காரணமாக வேலைக்குச் செல்கிறான்.
- நான் அவனைக் கண்டு இளம் வயது படிப்பதற்கு உரியது, பணி செய்வதற்கு அல்ல.
- ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா!
- நாம் இன்று வேலைக்குச் செல்வதால் இன்றைய தேவைதான் பூர்த்தியாகும். நாளைய தேவை பூர்த்தியாகுமா?
- கண்ணுடையார் என்பர் கற்றோர் முகத்திரண்டு
- புண்ணுடையார் கல்லா தவர். – என்கிறார் வள்ளுவர்
- அப்துல்கலாம் அவர்கள் வறுமையில் வாடினாலும் காலை, மாலை வேலைக்குச் செல்வார் இடைப்பட்ட நேரத்தில் பள்ளிக்குச் சென்றதால் தான் உலகம் போற்றும் உத்தமர் ஆனார். இவர் போல நீயும் உழை; இடைப்பட்ட நேரத்தில் என்னோட பள்ளிக்கு வா. படித்தும் பணிக்கு போகலாம்.
- அரசும், தொண்டு நிறுவனமும் உடை முதல் உணவு வரை இலவசமாகத் தருகிறது.
- நாம் கல்வியால் இணைவோம்!
- நம் தேசத்தை கல்வியால் உயர்த்துவோம்!!
2. ஐக்கிய நாடுகள் அவையில் மொழிபெயர்ப்பு
- ஐ.நா.அவையில் ஒருவர் பேசினால் அவரவர் மொழிகளில் புரிந்துகொள்வதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பு (translation) என்பது எழுதப்பட்டதை மொழிபெயர்ப்பது; ஆனால் ஒருவர் பேசும்போதே மொழிபெயர்ப்பது விளக்குவது (Interpreting) என்றே சொல்லப்படுகிறது. ஐ.நா.அவையில் ஒருவர் பேசு வதை மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர் பார்வையாளர்களுக்குத் தெரியாதபடி வேறு இடத்தில் இருப்பார். ஒருவர் பேசுவதைக் காதணிேகட்பியில் (Headphone) கேட்டபடி சில நொடிகளில் மொழிபெயர்த்து ஒலிவாங்கி வழியே பேசுவார். அவையில் உள்ள பார்வையாளர் தம்முன் உள்ள காதணிேகட்பியை எடுத்துப் பொருத்திக்கொண்டு அவரது மொழியில் புரிந்துகொள்வார். இப்பகுதியிலிருந்து ஐந்து வினாக்களை உருவாக்குக.
இப்பகுதியில் இருந்து 5 வினாக்களை உருவாக்குக
- ஐ.நா. அவையில் உறுப்பினர்கள் தம் மொழியில் பேசும்போது மொழி தெரியாதவர்களுக்கு ஏதேனும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா?
- மொழிபெயர்ப்பு என்றால் என்ன?
- பார்வையாளர்கள் அவையில் பேசுவோர் உரையை எப்படி புரிந்து கொள்கின்றனர்?
- மொழிபெயர்ப்பாளர்கள் எங்கு அமர்ந்திருப்பர்?
- ஐ.நா. அவையில் பேசுவோரின் பேச்சு எவ்வளவு நேரத்தில் மொழிபெயர்க்கப்படுகிறது?
- ஐ.நா. அவையில் செய்யப்பட்டுள்ள வசதி யாது?
- காதணி கேட்பியை எதற்குப் பயன்படுத்துவர்?
- விளக்குவது (Inter Preting) என்றால் என்ன?
IV. நெடு வினா
தமிழின் இலக்கிய வளம் – கல்வி மொழி – பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள் – அறிவியல் கருத்துகள் – பிறதுறைக் கருத்துகள் – தமிழுக்குச் செழுமை.
மேற்கண்ட குறிப்புகளைக் கொண்டு ‘செம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும்
மொழிபெயர்ப்புக் கலை’ என்ற தலைப்பில் வார இதழ் ஒன்றுக்கு நடுப்பக்கக்
கட்டுரை எழுதுக.
தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை
குறிப்புச் சட்டம்
- முன்னுரை
- வரையறை
- தமிழ் இலக்கிய வளம்
- கல்வி மொழி
- பிற மொழி இலக்கியம்
- அறிவியல் கருத்துகள்
- பல்துறை கருத்துக்கள்
- முடிவுரை
முன்னுரை:-
- உலகம் தகவல் தொழில் நுட்பத்தினால் சுருங்கி விட்ட குழலில் கூட மொழிபெயர்ப்புத் துறை முக்கிய இடம் பெறுகிறது. இத்தகு மொழிபெயர்ப்பு கலை மக்களின் வாழ்வில் எத்தகு போக்கினைச் செய்கிறது என்பது பற்றிக் காண்போம்.
வரையறை:-
- மொழி பெயர்ப்பு என்பது மூல மொழியில் உள்ள சொல் அல்லது சொற்றொடர்களை எவ்வித பொருள் மாற்றமும் இல்லாமல் வேறு மொழியில் பெயர்ப்பு செய்வது மொழிபெயர்ப்பு எனப்படும்.
தமிழ் இலக்கிய வளம்:-
- தமிழ் இலக்கிய வளம் பெற வேண்டும் என்றால் பிற மொழியல் சிறந்து விளங்கிய நூல்களை தமிழில் மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும்.
- பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இருந்து தமிழில் மொழிபெயர்ப்புப் பணி நடைபெற்ற வருகிறது. அதனடிப்படையில் கம்பரின் இராமவதாரம், வில்லிபுத்தூராரின் வில்லிபாரதம் போன்ற காவியங்கள் அனைத்தும் மொழிபெயர்க்கப்பட்டவையே.
கல்வி மொழி:-
- மொழிபெயர்ப்பைக் கல்வியாக்குவதன் மூலம் அனைத்துலக அறிவை நாம் பெற்றுமப் பல்வேறு துறையில் சிறந்து விளங்க முடியும்.
பிற மொழி இலக்கியம்:-
- ரவீந்திரநாத் தாகூர் வங்க மொழியில் எழுதிய கீதாஞ்சலியை அவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தப் பிறகு நோபல் பரிசு கிடைத்துள்ளது.
அறிவியல் கருத்துகள்:-
- மொழிபெயர்ப்பு அறிவியல் சார்ந்த துறையிலும் தன் ஆதிக்கத்தைச் செலுத்துகிறது. Tele என்ற ஆங்கிலச் சொல் தொலை என்பதனைக் குறிக்கும். இதன் அடிப்படையில் Telephone – Telescope – தொலைபேசி, தொலைநோக்கி என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
பல்துறை கருத்துக்கள்:-
- கல்வி, அறிவியல், இலக்கியம் மட்டுமல்லாமல் பிற துறையிலும் வளர்ச்சி அடைந்துள்ளன. வானொலி, திரைப்படம், இதழியியல், விளம்பரம் போன்ற துறைகளில் மொழிபெயர்ப்பு பணி சிறந்து விளங்குகிறது. தொலைக்காட்சித் தொடர்கள் வேற்று மொழிக்கு மாற்றப்படுவதால் அனைத்து மக்களையும் சென்றடைகிறது.
முடிவுரை:-
- எந்த மொழியின் படைப்பாக இருந்தாலும் எதை மொழி பெயர்க்க வேண்டும்? எப்படிச் செய்ய வேண்டும்? என்பதனை அறிந்து இலக்கண விதிமுறையுடன் செய்வதால் நிலைபெற்று விளங்கும்.
மொழிபெயர்ப்புக் கல்வி – கூடுதல் வினாக்கள்
I. குறு வினா
1. மணவை முஸ்தபா மொழிபெயர்ப்பு பற்றி கூறுவன யாவை?
- ஒரு மொழியல் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு என மணவை முஸ்தபா கூறுகிறார்
2. மொழி பெயர்ப்பு எதற்கு இன்றியமையாததாகும்?
- ஒரு மொழி வளம் பெறவும் உலகத்துடன் உறவு கொள்ளவும் மொழி பெயர்ப்பு இன்றியமையாததாகும்.
3. மு.கு.ஜகந்நாத ராஜா மொழி பெயர்ப்பு எதற்கு காரணமாகுகிறது என்கிறார்?
- உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழி பெயர்ப்பு ஒரு காரணமாகிறது என்கிறார் மு.கு.ஜகந்நாத ராஜா.
4. மொழிபெயர்க்கப்படாததால் உரிய ஏற்பு கிடைக்காத நூல் எது?
- மகாகவி பாரதியின் கவிதைகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டிருந்தால் உலகளவில் உயரிய விருதுகளும் ஏற்பும் கிடைத்திருக்கும்.
5. ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சி எதன் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது?
- ஒரு நாடு எவ்வளவு மின்னாற்றலைப் பயன்படுத்துகிறது என்பதைப் பொறுத்தே அந்த நாட்டின் தொழில் வளர்ச்சியை மதிப்பிடுகிறார்கள்.
6. இப்போது நேரடியாக மொழிபெயர்க்கப்படும் நூல்கள் யாவை?
- பிரெஞ்சு, ஜெர்மன், ஆப்பிரிக்கா, லத்தீன், அமெரிக்கா, முதலான நாடுகளின் நூல்கள் நேரடியாக மொழி பெயர்க்கப்பட்டு கிடைக்க தொடங்கியிருப்பது நல்ல பயனைத் தரும்
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1.பிறநாட்டு தூதரகங்கள் நம் நாட்டில் எப்போது நிறுவப்பட்டன?
அ) சுதந்திரத்திற்கு முன்
ஆ) விடுதலைக்குப் பின்
இ) குடியரசுக்கு முன்
ஈ) குடியரசுக்குப் பின்
Answer:
ஆ) விடுதலைக்குப் பின்
2.மொழிபெயர்த்தல் என்னும் தொடரைத் தொல்காப்பியர் கையாண்ட இடம் ………………..
அ) பெயரியல்
ஆ) வினையியல்
இ) மரபியல்
ஈ) உயிரியல்
Answer:
இ) மரபியல்
3.இராமாயண மகாபாரத தொன்மச் செய்திகள் இடம் பெற்றுள்ள தமிழ் இலக்கியம் எது?
அ) சங்க இலக்கியம்
ஆ) பக்தி இலக்கியம்
இ) சிற்றிலக்கியம்
ஈ) நவீன இலக்கியம்
Answer:
அ) சங்க இலக்கியம்
4.மொழிபெயர்க்கப்பட்டதால் நோபல் பரிசு பெற்ற இந்தியக் கவிஞர் யார்?
அ) வி.சூ. நைப்பால்
ஆ) இரட்யார்ட் கிப்ளிவ்
இ) வெங்கட்ராமன்
ஈ) இரவீந்திரநாத் தாகூர்
Answer:
ஈ) இரவீந்திரநாத் தாகூர்
5.‘மொகு சாஸ்ட்டு’ என்னும் ஜப்பானிய சொல்லின் பொருள்………………..
அ) பதில் தர மறுக்கிறோம்
ஆ) விடைதர அவகாசம் வேண்டும்
இ) விடைதர முடியாது
ஈ) இரவீந்திரநாத் தாகூர்
Answer:
ஆ) விடைதர அவகாசம் வேண்டும்
6.வடமொழிக் கதையைத் தழுவி படைக்கப்பட்ட நூல் ………………..
அ) கம்பராமாயணம்
ஆ) சீவகசிந்தாமணி
இ) கலிங்கத்துப்பரணி
ஈ) வில்லிபாரதம்
Answer:
இ) கலிங்கத்துப்பரணி
7.மொழிபெயர்ப்பு முயற்சியில் ஈடுபடும் நிறுவனங்கள்………………..
அ) சாகித்திய அகாதெமி
ஆ) தேசிய புத்தக நிறுவனம்
இ) தென்னிந்திய புத்தக நிலையம்
ஈ) இவை அனைத்தும்
Answer:
ஈ) இவை அனைத்தும்
8.பன்னாட்டு மொழிகளைக் கற்பிப்பவை………………..
அ) தனியார் நிறுவனங்கள்
ஆ) வெளிநாட்டு தூதரகங்கள்
இ) பள்ளிகள்
ஈ) இவை அனைத்தும்
Answer:
ஈ) இவை அனைத்தும்
9.‘காசினியில் இன்றுவரை அறிவின் மன்னர் கண்டுள்ள கலைகளெல்லாம் தமிழில் எண்ணிப் பேசி மகிழ் நிலை வேண்டும்” என்று கூறியவர் யார்?
அ) குலோத்துங்கன்
ஆ) பராந்தகன்
இ) இராஜராஜன்
ஈ) இராஜேந்திரன்
Answer:
அ) குலோத்துங்கன்
10.பொருத்தித் தெரிக.
அ) 1942 – 1. யூமா வாசுகி
ஆ) 1949 – 2. முத்துமீனாட்சி
இ) 2016 – 3. ராகுல் சாங்கிருத்யாயன்
ஈ) 2018 – 4. கணமுத்தையா
அ) 3, 4, 2, 1
ஆ) 4, 3, 2, 1
இ) 1, 2, 3, 4
ஈ) 2, 4. 3, 1
Answer:
அ) 3, 4, 2, 1
11.நம்மிடம் எல்லாம் உள்ளது என்ற பட்டை கட்டிய பார்வையை ஒழித்து அகன்ற
பார்வையைத் தருவது………………..
அ) நாடகம்
ஆ) மொழிபெயர்ப்பு
இ) தியானம்
ஈ) செல்வம்
Answer:
ஆ) மொழிபெயர்ப்பு
12.ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு
என்று கூறியவர் ………………..
அ) மு. கு. ஜகந்நாதர்
ஆ) மணவை முஸ்தபா
இ) அ. முத்துலிங்கம்
ஈ) அப்துல் ரகுமான்
Answer:
ஆ) மணவை முஸ்தபா
13.உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும்
ஒரு காரணமாகும் என்று………………..
கூறியவர்
அ) மு. கு. ஜகந்நாதர்
ஆ) மணவை முஸ்தபா
இ) மு. மேத்தா
ஈ) அ. முத்துலிங்கம்
Answer:
அ) மு. கு. ஜகந்நாதர்
14.“மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்” என்று
குறிப்பிடும் செப்பேட்டுக் குறிப்பு………………..
அ) உத்திரமேரூர்
ஆ) மண்டகப்பட்டு
இ) சின்னமனூர்
ஈ) ஆதிச்சநல்லூர்
Answer:
இ) சின்னமனூர்
15.சங்ககாலத்திலேயே தமிழில் மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டதைப்
புலப்படுத்தும் சான்று………………..
அ) உத்திரமேரூர் கல்வெட்டு
ஆ) உறையூர்ச் செப்பேட்டுக் குறிப்பு
இ) மண்டகப்பட்டுக் கல்வெட்டு
ஈ) சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு
Answer:
ஈ) சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு
16.வடமொழிக் கதைகளைத் தழுவிப் படைக்கப்படாத இலக்கியத்தைக் கண்டறிக.
அ) சீவக சிந்தாமணி
ஆ) கம்பராமாயணம்
இ) சிலப்பதிகாரம்
ஈ) வில்லிபாரதம்
Answer:
இ) சிலப்பதிகாரம்
17.வடமொழிக் கதையைத் தழுவி எழுதப்பட்ட இலக்கியத்தைக் கண்டறிக.
அ) பெருங்கதை
ஆ) முக்கூடற்பள்ளு
இ) கலிங்கத்துப் பரணி
ஈ) மணிமேகலை
Answer:
அ) பெருங்கதை
18.பாரதியின் மொழிபெயர்ப்புகளைப் பொருத்திக் காட்டுக.
i) பொருட்காட்சி – 1. Strike
ii) இருப்புப் பாதை – 2. Revolution
iii) புரட்சி – 3. East Indian Railways
iv) வேலை நிறுத்தம் – 4. Exhibition
அ) 4, 3, 2,1
ஆ) 3, 4, 1, 2
இ) 2, 1, 4, 3
ஈ) 2, 4, 1, 3
Answer:
அ) 4, 3, 2, 1
19.ஜெர்மன் மொழியில் மொழிபெயர்ப்பின் மூலம் அறிமுகம் ஆன ……………….. அந்நாட்டுப் படைப்பாளர் போலவே கொண்டாடப்பட்டவர்.
அ) வேர்ட்ஸ் வொர்த்
ஆ) ஷேக்ஸ்பியர்
இ) லாங்பெல்லோ
ஈ) ஜி.யு. போப்
Answer:
ஆ) ஷேக்ஸ்பியர்
20.………………..ஆம் நூற்றாண்டு வரை வடமொழி நூல்கள் தமிழில் ஆக்கப்பட்டன.
அ) 16
ஆ) 17
இ) 18
ஈ) 19
Answer:
இ) 18
21.மொழிபெயர்ப்பின் மூலம் பெற்றிருக்கக்கூடிய கொள்கை ………………..
அ) நடப்பியல்
ஆ) தத்துவவியல்
இ) இலக்கியத் திறனாய்வு
ஈ) திறனாய்வு
Answer:
இ) இலக்கியத் திறனாய்வு
22.1942 ஆம் ஆண்டு ஹஜிராபாக் மத்திய சிறையிலிருந்த போது ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற நூலை இந்தி மொழியில் எழுதியவர் ………………..
அ) ராகுல் சாங்கிருத்யாயன்
ஆ) சசிதேவ்
இ) கணமுத்தையா
ஈ) வெ. ஸ்ரீராம்
Answer:
அ) ராகுல் சாங்கிருத்யாயன்
23.‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற நூலைக் கணமுத்தையா தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட ஆண்டு ………………..
அ) 1942
ஆ) 1945
இ) 1949
ஈ) 1952
Answer:
இ) 1949
24.‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற நூல் மொழிபெயர்க்கப்பட்ட ஆண்டும், மொழி……………….. பெயர்த்தவர்களையும் பொருத்திக்காட்டுக.
i) கணமுத்தையா – 1. 1949
ii) டாக்டர் என். ஸ்ரீதர் – 2. 2016
iii) முத்து மீனாட்சி – 3. 2016
iv) யூமாவாசுகி – 4. 2018
அ) 1, 2, 3, 4
ஆ) 2, 3, 4, 1
இ) 4, 3, 2, 1
ஈ) 4, 3, 1, 2
Answer:
அ) 1, 2, 3, 4
25.வடம் (கயிறு), ஒட்டகம் என்ற இருபொருளுக்குரியச் சொல் ………………..
அ) Camel
ஆ) Cow
இ) Horse
ஈ) Rope
Answer:
அ) Camel
26.ஜெர்மனியில் ஓர் ஆண்டில் பிற மொழிகளிலிருந்து ……………….. நூல்கள் வரை மொழி பெயர்க்கப் படுகின்றன.
அ) 1000
ஆ) 2000
இ) 4000
ஈ) 5000
Answer:
ஈ) 5000
27.தமிழ் நூல்கள் பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்படுவதில் முதலிடத்தில் இரண்டாமிடத்தில் ……………….. இடம் வகிக்கின்றன.
அ) ஆங்கிலம், மலையாளம்
ஆ) மலையாளம், ஆங்கிலம்
இ) தெலுங்கு, கன்னடம்
ஈ) இந்தி, வடமொழி
Answer:
அ) ஆங்கிலம், மலையாளம்
28.மொழிபெயர்ப்பினால் புதிய சொற்கள் உருவாகி ……………….. ஏற்படுகிறது.
அ) மொழிவளம்
ஆ) மொழி வளமிழப்பு
இ) மொழி சிதைவு
ஈ) மொழி மாற்றம்
Answer:
அ) மொழிவளம்
29.கருத்துப் பகிர்வைத் தருவதால் மொழிபெயர்ப்பைப் ……………….. என்று குறிப்பிடுவார்கள்.
அ) பயன்கலை
ஆ) நிகழ்கலை
இ) கவின்கலை
ஈ) ஆயக்கலை
Answer:
அ) பயன்கலை
30.………………..பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கை அத்தகைய பணிகளில் ஈடுபட வேண்டும்.
அ) கொலம்பியா
ஆ) ஆக்ஸ்போர்டு
இ) ஹார்வர்ட்
ஈ) சென்னை
Answer:
இ) ஹார்வர்ட்
31.“சென்றிடுவீர் எட்டுத்திக்கும் – கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” – என்று பாடியவர்.
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) வாணிதாசன்
ஈ) கண்ண தாசன்
Answer:
அ) பாரதியார்
32.“தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” – என்று பாடியவர்?
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) வாணிதாசன்
ஈ) அப்துல் ரகுமான்
Answer:
அ) பாரதியார்
33.பிரான்சு தேசிய நூற்கூடத்தில் ஏறக்குறைய ……………….. பழைய தமிழ் ஏடுகளும் கையெழுத்துப் பிரதிகளும் உள்ளன.
அ) நூறு
ஆ) ஆயிரம்
இ) மூவாயிரம்
ஈ) பதினாறாயிரம்
Answer:
ஆ) ஆயிரம்
34.‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும் – கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் – பாரதியாரின் இக்கூற்று உணர்த்தும் கருத்து?
அ) பலதுறை நூல்கள் தமிழில் உருவாக்கப்பட வேண்டும்.
ஆ) பலகலைகள் தமிழில் புதிதாகத் தோன்ற வேண்டும்.
இ) உலகெங்கும் காணப்படும் செல்வங்கள் தமிழகத்தில் வந்து சேர்தல் வேண்டும்.
ஈ) கலைச் செல்வங்களை உலகம் முழுவதும் பயணம் செய்து கண்டுகளிக்க வேண்டும்.
Answer:
இ) உலகெங்கும் காணப்படும் செல்வங்கள் தமிழகத்தில் வந்து சேர்தல் வேண்டும்.
************THE END OF
5.1************
5.2. நீதிவெண்பா
நீதிவெண்பா
- கா.ப.செய்குதம்பிப் பாவலர்
அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அகற்றி மதிக்கும் தெருளை
அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்
பொருத்துவதும் கல்வியென்றே போற்று.
பாடலின் பொருள்
அருளினைப் பெருக்கி, அறிவைச் சீராக்கி, மயக்கம் அகற்றி, அறிவுக்குத் தெளிவு தந்து, உயிருக்கு அரிய துணையாய் இன்பம் சேர்ப்பது கல்வியே ஆகும். எனவே அதைப் போற்றிக் கற்க வேண்டும்.I. பலவுள் தெரிக.
1. “அருந்துணை” என்பதைப் பிரித்தால்………………….
- அருமை + துணை
- அரு + துணை
- அருமை + இணை
- அரு + இணை
விடை : அருமை + துணை
2. “அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை“ – என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?
- தமிழ்
- அறிவியல்
- கல்வி
- இலக்கியம்
விடை : கல்வி
II. குறு வினா
செய்குதம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழுக்கத் தொடர்களாக்குக
கற்போம்! கற்போம்!
அருளைப் பெருக்க கற்போம்!
கற்போம்! கற்போம்!
அறிவினைப் பெற கற்போம்!
கற்போம்! கற்போம்!
மயக்க விலக்க கற்போம்!
கற்போம்! கற்போம்!
உயிருக்குத் துணையாக கல்வியைக் கற்போம்!
நீதிவெண்பா – கூடுதல் வினாக்கள்
I. பலவுள் தெரிக.
1. செய்குதம்பிப் பாவலர் சிறந்து விளங்கிய கலை
- சதாவனம்
- ஆடல்
- பாடல்
- ஓவியம்
விடை : சதாவனம்
2. செய்குதம்பிப் பாவலர் பிறந்த ஊர்
- பாளையங்கோட்டை
- புதூர்
- மாறாந்தை
- இடலாக்குடி
விடை : இடலாக்குடி
3. சீறாப்புறாணத்திற்கு உரை எழுதியவர்
- பாரதியார்
- செய்குதம்பிப் பாவலர்
- பாரதிதாசன்
- சுரதா
விடை : செய்குதம்பிப் பாவலர்
3. “சதாவதானி” என்று பாராட்டு பெற்றவர்
- பாரதியார்
- பாரதிதாசன்
- சுரதா
- செய்குதம்பிப் பாவலர்
விடை : செய்குதம்பிப் பாவலர்
4. “சதம்” என்பதற்கு என்ன பொருள்
- ஒன்று
- பத்து
- நூறு
- ஆயிரம்
விடை : நூறு
5. போற்றிக் கற்க வேண்டியது
- கல்வி
- நூல்
- ஒழுக்கம்
- பண்பு
விடை : கல்வி
6. கற்றவர் வழி _____________ செல்லும் என்கிறது சங்க இலக்கியம்
- மக்கள்
- அரசு
- விலங்கு
- பண்பு
விடை : அரசு
7. “தோண்டும் அளவு ஊறும் நீர் போலக் கற்கும் அளவு அறிவு சுரக்கும்“ என்று கூறும் நூல்
- மணிமேகலை
- சீறாப்புராணம்
- குண்டலகேசி
- திருக்குறள்
விடை : திருக்குறள்
7. பூக்களை நாடிச் சென்று தேன் பருகுவது
- வண்டு
- எறும்பு
- பூச்சி
- ஈ
விடை : வண்டு
8. _____________ நாடிச் சென்று அறிவு பெற வேண்டும்
- நூல்
- தீயொழுக்கம்
- புகழ்
- ஒழுக்கம்
விடை : நூல்
9. “கல்வியென்ற” என்பதைப் பிரித்தால்………………….
- கல்வி + என்ற
- கல்வி + யென்ற
- கல் + யென்ற
- கல் + என்ற
விடை : கல்வி + என்ற
II. சிறு வினா
1. ஏன் கல்வியைப் போற்றிக் கற்க வேண்டும் என செய்குத்தம்பிப் பாவலர் குறிப்பிடுகிறார்?
- அருளினைப் போக்கி, அறிவை சீராக்கி, மயக்கம் அகற்றி, அறிவுக்கு தெளிவு தந்து, உயிருக்கு அரிய துணையாய் இன்பம் சேர்ப்பது கல்வியே ஆகும். எனவே அதனை போற்றி கற்க வேண்டும் என செய்குத்தம்பிப் பாவலர் குறிப்பிடுகிறார்.
2. சதாவதானம் குறிப்பு வரைக
- சதம் என்றால் நூறு என்று பொருள். ஒருவரது புலமையும், நினைவாற்றலையும் நுண்ணறிவையும் சோதிப்பதற்காக ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் நூறு செயல்களையும் நினைவில் கொண்டு விடையளித்தேல சதாவதானம் ஆகும்.
3. செய்குதம்பிப் பாவலர் ஏன் சதாவதான் என்று போற்றப்படுகிறார்?
- செய்குதம்பியார் 1907-ம் ஆண்டு மார்ச் 10-ம் நாள் சென்னை விக்டோரியா அரங்கத்தில் அறிஞர்கள் பலர் முன்னிலையில் நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி “சதாவதானி” என்று பாராட்ப்பெற்றார்.
- அன்று முதல் “சதாவதானி செய்குதம்பிப் பாவலர்” என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.
4. செய்குதம்பிப் பாவலர் குறிப்பு வரைக
- சதாவதானம் என்ற கலையில் சிறந்து விளங்கியவர்
- இவர் வாழ்ந்த காலம் 1874 – 1950 ஆகும்
- கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இடலாக்குடி என்னும் ஊரைச் சேர்ந்தவர்
- பதினைந்து வயதிலேயே செய்யுள் இயற்றும் திறன் பெற்றவர்
- சீறாப்புறாணத்திற்கு உரை எழுதியவர்.
- செய்குதம்பியார் 1907-ம் ஆண்டு மார்ச் 10-ம் நாள் சென்னை விக்டோரியா அரங்கத்தில் அறிஞர்கள் பலர் முன்னிலையில் நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி “சதாவதானி” என்று பாராட்டப் பெற்றார். அன்று முதல் “சதாவதானி செய்குதம்பிப் பாவலர்” என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.
பலவுள் தெரிக
1.‘அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி’ – இவ்வடியில் பயின்று வரும் தொடை நயம் யாது?
அ) எதுகை
ஆ) மோனை
இ) இயைபு
ஈ) முரண்
Answer:
ஆ) மோனை
2.‘கற்றவர் வழி அரசு செல்லும்’ என்று கூறும் இலக்கியம்…………………
அ) காப்பிய இலக்கியம்
ஆ) பக்தி இலக்கியம்
இ) சங்க இலக்கியம்
ஈ) நீதி இலக்கியம்
Answer:
இ) சங்க இலக்கியம்
3.‘செய்கு தம்பிப் பாவலர்’ இவ்வாறு அழைக்கப்படுகிறார்…………………
அ) சதாவதானி
ஆ) தசாவதானி
இ) மொழி ஞாயிறு
ஈ) கவிமணி
Answer:
அ) சதாவதானி
4.‘ஊறும் நீர்போலக் கற்கும் அளவு அறிவு சுரக்கும்’ என்று கூறியவர் யார்?
அ) ஒளவையார்
ஆ) கபிலர்
இ) திருவள்ளுவர்
ஈ) செய்குதம்பிப் பாவலர்
Answer:
இ) திருவள்ளுவர்
5.செய்குதம்பிப் பாவலர் சிறந்து விளங்கிய கலை…………………
அ) ஓவியம்
ஆ) சதாவதானம்
இ) நாட்டியம்
ஈ) சிற்பம்
Answer:
ஆ) சதாவதானம்
6.செய்குதம்பிப் பாவலரின் மாவட்டம் ………………… வட்டம்…………………
அ) கன்னியாகுமரி, இடலாக்குடி
ஆ) தஞ்சாவூர், படைத்தலைவன்குடி
இ) கடலூர், மஞ்சக்குப்பம்
ஈ) சென்னை , மயிலாப்பூர்
Answer:
அ) கன்னியாகுமரி, இடலாக்குடி
7.செய்குதம்பிப் பாவலர் …………………வயதிலேயே செய்யுள் இயற்றும் திறன் பெற்றவர்.
அ) பத்து
ஆ) பதினைந்து
இ) பதினெட்டு
ஈ) இருபது
Answer:
ஆ) பதினைந்து
8.சதாவதானி என்ற பாராட்டப் பெற்றவர்…………………
அ) உமறுப்புலவர்
ஆ) பனு அகமது மரைக்காயர்
இ) செய்குதம்பிப் பாவலர்
ஈ) படிக்காத புலவர்
Answer:
இ) செய்குதம்பிப் பாவலர்
9.சதாவதானி என்பது…………………
அ) நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டுவது
ஆ) ஆயிரம் யானைகளைப் போரில் கொல்வது
இ) நூறு மலர்களை ஒரே இடத்தில் குவிப்பது
ஈ) ஆயிரம் பேருக்கு உணவிடுவது
Answer:
அ) நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டுவது]
10.செய்குதம்பிப்பாவலர் சதாவதானி என்று பாராட்டுப் பெற்ற இடம்…………………நாள்…………………
அ) சென்னை விக்டோரியா அரங்கம், 1907 மார்ச் 10
ஆ) சென்னை தீவுத் திடல், 1909 மார்ச் 8
இ) தஞ்சாவூர் திலகர் திடல், 1908 பிப்ரவரி 8
ஈ) திருச்சி அண்ணா மைதானம், 1906 மார்ச் 6
Answer:
அ) சென்னை விக்டோரியா அரங்கம், 1907 மார்ச் 10
11.செய்குதம்பிப் பாவலரின் நினைவைப் போற்றும் வகையில் மணிமண்டபமும் பள்ளியும் அமைந்துள்ள இடம்…………………
அ) கன்னியாகுமரி
ஆ) இடலாக்குடி
இ) சென்னை
ஈ) மயிலாப்பூர்
Answer:
ஆ) இடலாக்குடி
12.‘சதம்’ என்றால் ………………… என்று பொருள்.
அ) பத்து
ஆ) நூறு
இ) ஆயிரம்
ஈ) இலட்சம்
Answer:
ஆ) நூறு
13.தோண்டும் அளவு நீர்போலக் கற்கும் அளவு அறிவு சுரக்கும் என்று கூறுவது…………………
அ) நாலடியார்
ஆ) திருக்குறள்
இ) ஏலாதி
ஈ) திரிகடுகம்
Answer:
ஆ) திருக்குறள்
*************************THE END OF 5.2******************************
5.3. திருவிளையாடற் புராணம்
I. சொல்லும் பொருளும் :
- கேள்வியினான் – நூல் வல்லான்
- கேண்மையினான் – நட்பினன்
- தார் – மாலை
- முடி – தலை
- முனிவு – சினம்
- அகத்து உவகை – மனமகிழ்ச்சி
- தமர் – உறவினர்
- நீபவனம் – கடம்பவனம்
- மீனவன் – பாண்டிய மன்னன்
- கவரி – சாமரை ( கவரிமாவின் முடியில் செய்த விசிறியாகிய அரசச் சின்னம்)
- நுவன்ற – சொல்லிய
- என்னா – அசைச் சொல்
II. இலக்கணக் குறிப்பு
- கேள்வியினான் – வினையாலைணையும் பெயர்
- காடனுக்கும் கபிலனுக்கும் – எண்ணும்மை
III. பகுபத உறுப்பிலக்கணம்
தணிந்தது = தணி + த் (ந்) + த் + அ +து
- தணி- பகுதி
- த் – சந்தி
- ந் – ஆனது விகாரம்
- த் – இறந்த கால இடைநிலை
- அ – சாரியை
- து – படர்க்கை வினைமுற்று விகுதி
IV. பலவுள் தெரிக.
இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் ……… இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர் ……….
- அமைச்சர், மன்னன்
- அமைச்சர், இறைவன்
- இறைவன், மன்னன்
- மன்னன், இறைவன்
விடை : மன்னன், இறைவன்
V. குறு வினா
1. “கழிந்த பெரும் கேள்வியினான் எனக் கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன் பால் பொழிந்த பெரும் காதல்மிகு கேண்மையினான் இடைக்காட்டுப் புலவன் தென்சொல்“
- -இவ்வடிகளில் கழிந்த பெரும் கேள்வியினான் யார்? காதல்மிகு கேண்மையினான் யார்?
- கழிந்த பெரும் கேள்வியினான் (மிகுந்த கல்வியறிவு உடையவர்) – குலேசபாண்யடின்
- காதல்மிகு கேண்மையினான் (கபிலரிடம் நட்பு கொண்டவர்) – இடைக்காடனார்
2. அமர்ந்தான் – பகுபத உறுப்பிலக்கணம் தருக.
அமர்ந்தான் = அமர் + த் (ந்) + த் +ஆன்
- அமர் – பகுதி
- த் – சந்தி
- ந் – ஆனது விகாரம்
- த் – இறந்த கால இடைநிலை
- ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி
VI. சிறு வினா
மன்னன் இடைக்காடனார் என்ற புலவனுக்குச் சிறப்புச் செய்தது ஏன்? விளக்கம் தருக.
- குலேச பாண்டியன் தமிழ் புலமை வாய்ந்தவன்.
- அவன் அவையில் புலவர் இடைக்காடனார் பாடிய பாடலை மன்னன் பொருட்படுத்தாமல் அவமதித்தான்.
- இடைக்காடனார் கடம்பவனத்து இறைவனிடம் முறையிட்டார்
- இறைவன் கடம்பவனம் கோயிலை விட்டு நீங்கி வைகை ஆற்றின் தெற்கே கோயில் உருவாக்கி அமர்ந்தார்.
- இதையறிந்த மன்னர் யான் என்ன தவறு செய்தேன்? ஏன் இங்கு அமர்நதீர்? என்று வருந்தினான்.
- இறைவன் இடைக்காடனார் பாடலை இகழ்ந்த குற்றமே தவிர, வேறு எந்த தவறும் இல்லை என்றார்.
- தன் தவற்றை உணர்ந்த மன்னன் இடைக்காடனாரை அழைத்து மங்கல ஒப்பனை செய்து, பொன் இருக்கையில் அமர்த்தி, பணிந்து வணங்கி தம் தவறைப் பொறுத்தருள வேண்டினான்.
VII. நெடு வினா
இறைவன், புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக.
குறிப்புச் சட்டம்
- மன்னனின் அவையில் இடைக்காடனார்
- இடைக்காடனாரின் புலமையை அவமதித்தல்
- இடைக்காடனார் இறைவனிடம் முறையிடுதல்
- இறைவன் கோவிலை விட்டு வெளியேறுதல்
- இறைவனிடம் மன்னன் வேண்டுதல்
- இறைவனின் பதில்
- பிழையைப் பொறுத்தருள இறைவனிடம் வேண்டுதல்
- மன்னன் இடைக்காடனாருக்குப் பெருமை செய்தல்
- மன்னன் புலவரிடம் வேண்டுதல்
மன்னனின் அவையில் இடைக்காடனார்:-
- வேப்பமாலை அணிந்த குலேச பாண்டியன் மிகுந்த கல்வியறிவு உடையவன். இதைக் கேள்வியுற்ற இடைக்காடனார் குலேசனின் அவைக்கு சென்று தான் இயற்றிய கவிதையப் படித்தார்.
இடைக்காடனாரின் புலமையை அவமதித்தல்:-
- வேப்பமாலை அணிந்த குலேச பாண்டியன் மிகுந்த கல்வியறிவு உடையவன். தமிழறியும் பெருமான், அடியார்க்கு நல்நிதி போன்றவன், பொருட்செல்வமும், கல்விச் செல்வமும் உடையவன் என்று கேட்டுணர்நது தாங்கள் முன் சுவை நிரப்பிய கவிதை பாடினார் இடைக்காடனார். பாண்டியன் சிறிதேனும் பாடலைப் பொருட்படுத்தாமல் புலவரின் புலமையை அவமதித்தான்.
இடைக்காடனார் இறைவனிடம் முறையிடுதல்:-
- இறைவா! பாண்டியன் என்னை இகழவில்லை. சொல்லின் வடிவான பார்வதியையும், பொருளின் வடிவான உம்மையும் அவமதித்தான் என்று சினத்துடன் இறைவனிடம் கூறினார்.
இறைவன் கோவிலை விட்டு வெளியேறுதல்:-
- இடைக்காடனாரின் வேண்டுகோளை ஏற்று வைகை ஆற்றின் தெற்கே கோயில் அமைத்து குடி கொண்டார் இறைவன். உடனே கபிலரும் மகிழ்ந்து இடைக்காடனாேராடு வெளியேறினார்.
இறைவனிடம் மன்னன் வேண்டுதல்:-
- இதையறிந்த மன்னன் இறைவனிடம் என் படைகளால், பகைவரால், கள்வரால், விலங்குகளால் தங்களுக்கு இடையூறு ஏற்பட்டதா? மறையவர் ஒழுக்கம் குறைந்தாேரா? தவமும், தானமும் சுருங்கியதோ? இல்லறமம், துறவறமும் தத்தம் வழயில் தவறினவோ? தந்தையே நான் அறியேன் என்றார் குலசேகர பாண்டியன்.
இறைவனின் பதில்:-
- “வயல் சூழ்ந்த கடம்ப வனத்தை விட்டு ஒருபோது நீங்க மாட்டோம்.” “இடைக்காடனார் பாடலை இகழ்ந்த குற்றம் தவிர உன்னிடம் குற்றம் இல்லை” என்றார். “இடைக்காடன் மீது கொண்ட அன்பினால் இங்கு வந்தோம்” என்றார்.
பிழையைப் பொறுத்தருள இறைவனிடம் வேண்டுதல்:-
- வானிலிருந்து ஒலித்த இறைவனின் சொல் கேட்டான் குலேச பாண்டியன், மகிழ்ந்து, பரம்பொருளே! புண்ணியனே! சிறியவரின் குற்றம் பொறுப்பு பெரியவர்க்குப் பெருமை என்று குற்றத்தைப் பொறுக்க வேண்டினான்.
மன்னன் இடைக்காடனாருக்குப் பெருமை செய்தல்:-
- மன்னன் மாளிகை வாழை, சாமரை இவற்றாலன விதானமும் விளக்கும் உடையது. பூரண கும்பம் மாலை, கொடி இவற்றால் ஒப்பனை செய்யப்பட்டது. புலவர்கள் குழு இடைக்காடனாரை மங்கலாமாக ஒப்பனை செய்து பொன் இருக்கையில் அமர்த்தினர்
மன்னன் புலவரிடம் வேண்டுதல்:-
- மன்னன் புலவர்களிடம், தான் இடைக்காடனாருக்குச் செய்த குற்றத்தைப் பொறுத்து கொள்ள வேண்டும் என்றான். புலவர்களும், நீர் கூறிய அழுதம் போன்ற சொல்லால் எங்கள் சினம் தணிந்து விட்டது என்றார்.
திருவிளையாடற் புராணம் – கூடுதல் வினாக்கள்
I. குறு வினா
1. திருவிளையாடற் புராணம் எத்தனை காண்டங்களை கூறுக.
- திருவிளையாடற் புராணம் மூன்று காண்டங்களை கொண்டது. அவை
- மதுரைக் காண்டம்
- கூடற்காண்டம்
- திருவாலவாய் காண்டம்
2. திருவிளையாடற் புராணம் எத்தனை படலங்களை கொண்டது?
- திருவிளையாடற் புராணம் 64 படலங்களை கொண்டது.
3. பரஞ்சோதி முனிவர் குறிப்பு வரைக
- திருமறைக்காட்டில் (வேதாரண்யம்) பிறந்தவர்.
- 17-ம் நூற்றாண்டில் சேர்ந்தவர்
- சிவபக்தி மிக்கவர்
- வேதாரண்யப் புராணம், திருவிளையாடல் போற்றிக் கலிவெண்பா, மதுரை பதிற்றுப்பத்தந்தாதி முதலியன இவர் இயற்றிய வேறு நூல்களாகும்.
பலவுள் தெரிக
1.கபிலரின் நண்பர் யார்?
அ) பரஞ்சோதி முனிவர்
ஆ) இடைக்காடனார்
இ) குலேச பாண்டியன்
ஈ) ஒட்டக்கூத்தர்
Answer:
ஆ) இடைக்காடனார்
2.திருவிளையாடற்புராணத்தின் ஆசிரியர் யார்?
அ) சமண முனிவர்
ஆ) அகத்தியர் முனிவர்
இ) பரஞ்சோதி முனிவர்
ஈ) இடைக்காடனார்
Answer:
இ) பரஞ்சோதி முனிவர்
3.திருவிளையாடற்புராணம் படலங்களின் எண்ணிக்கை ………………………
அ) 64
ஆ) 96
இ) 30
ஈ) 18
Answer:
அ) 64
4.‘தகடூர் எறிந்த பெருஞ்சேரல்’ இரும்பொறை யாருக்குக் கவரி வீசினான்?
அ) பரஞ்சோதி முனிவர்
ஆ) கபிலர்
இ) இடைக்காடனார்
ஈ) மோசிகீரனார்
Answer:
ஈ) மோசிகீரனார்
5.வேப்ப மாலை அணிந்த மன்னன்?
அ) சேரன்
ஆ) சோழன்
இ) பாண்டியன்
ஈ) பல்லவன்
Answer:
இ) பாண்டியன்
6.மோசிகீரனார் முரசுக் கட்டிலில் கண்ண யரக் காரணம் ………………………
அ) குளிர்ந்த காற்று வீசியதால்
ஆ) நல்ல உறக்கம் வந்ததால்
இ) களைப்பு மிகுதியால்
ஈ) அரசன் இல்லாமையால்
Answer:
இ) களைப்பு மிகுதியால்
7.களைப்பு மிகுதியால்] ‘மூரித் தீம் தேன் வழிந்து ஒழுகு தாரானைக் கண்டு’ என்னும் தொடரில் தாரானை என்பது யாரைக் குறிக்கிறது?
அ) சிவபெருமான்
ஆ) கபிலர்
இ) பாண்டியன்
ஈ) இடைக்காடனார்
Answer:
இ) பாண்டியன்
8.பரஞ்சோதி முனிவர் பிறந்த ஊர் ………………………
அ) தஞ்சாவூர்
ஆ) திருமறைக்காடு
இ) திருத்துறைப் பூண்டி
ஈ) திருவண்ணாமலை
Answer:
ஆ) திருமறைக்காடு
9.திருவிளையாடற்புராணம் காண்டங்களின் எண்ணிக்கை ………………………
அ) 3
ஆ) 4
இ) 6
ஈ) 10
Answer:
அ) 3
10.இடைக்காடனார் பிணக்குத் தீர்த்த படலம் இடம் பெறும் காண்டம் ………………………
அ) மதுரைக் காண்டம்
ஆ) கூடற் காண்டம்
இ) திரு ஆலவாய்க் காண்டம்
ஈ) யுத்த காண்டம்
Answer:
இ) திரு ஆலவாய்க் காண்டம்
11.இடைக்காடனார் பிணக்குத் தீர்த்த படலம் திருவிளையாடற்புராணத்தில் எத்தனையாவது படலம்?
அ) 64
ஆ) 56
இ) 46
ஈ) 48
Answer:
ஆ) 56
12.அரசரும் புலவருக்குக் ……………………… வீசுவர்.
அ) கவண்
ஆ) கணையாழி
இ) கவரி
ஈ) கல்
Answer:
இ) கவரி
13.குலேசபாண்டியன் ……………………… நாட்டை ஆட்சி புரிந்தான்.
அ) பாண்டிய
ஆ) சேர
இ) சோழ
ஈ) பல்லவ
Answer:
அ) பாண்டிய
14.குலேச பாண்டியன் என்னும் மன்னன் ……………………… புலமையில் சிறந்து விளங்கினான்.
அ) தமிழ்
ஆ) வடமொழி
இ) தெலுங்கு
ஈ) கன்ன டம்
Answer:
அ) தமிழ்
15.சொல்லின் வடிவாக இறைவனின் இடப்புறம் வீற்றிருப்பவள் ………………………
அ) பார்வதி
ஆ) திருமகள்
இ) கலைமகள்
ஈ) அலைமகள்
Answer:
அ) பார்வதி
16.சொல்லின் பொருளாக விளங்குவது ………………………
அ) இறைவன்
ஆ) இடைக்காடனார்
இ) கபிலர்
ஈ) பார்வதி
Answer:
அ) இறைவன்
17.சொல்லின் பொருளாக விளங்கும் உன்னையுமே அவமதித்ததாக இறைவனிடம் இடைக்காடனார் ……………………… கூறிச் சென்றார்.
அ) அழுகையுடன்
ஆ) சினத்துடன்
இ) ஏளனத்துடன்
ஈ) உருக்கத்துடன்
Answer:
ஆ) சினத்துடன்
18.இடைக்காடனாரின் சொல் ……………………… போல் இறைவனின் திருச்செவியில் சென்று தைத்தது.
அ) கூரிய அம்பு
ஆ) வேற்படை
இ) தீ
ஈ) விடமுள்
Answer:
ஆ) வேற்படை
19.………………………ஆற்றின் தென் பக்கத்தே ஒரு திருக்கோவிலை ஆக்கி இறைவன் அங்குச் சென்று இருந்தார்.
அ) காவிரி
ஆ) கங்கை
இ) வைகை
ஈ) தாமிரபரணி
Answer:
இ) வைகை
20.திரு ஆலவாய்க் கோவிலை விட்டு வெளியேறிய இறைவன் – வடிவத்தை மறைத்து………………………வடக்கே வையை ஆற்றின் தென் பக்கத்தே சென்று இருந்தார்.
அ) நரசிங்க
ஆ) பலராம
இ) இலிங்க
ஈ) சர்ப்ப
Answer:
இ) இலிங்க
21.கடம்பவனத்தை விட்டு ஒரு போதும் நீங்க மாட்டோம் என்று கூறியவர் ………………………
அ) குலேச பாண்டியன்
ஆ) இறைவன்
இ) இடைக்காடனார்
ஈ) கபிலர்
Answer:
ஆ) இறைவன்
22.மன்னன் இடைக்காடனாரை மங்கலமாக ஒப்பனை செய்து ……………………… இருக்கையில் விதிப்படி அமர்த்தினான்.
அ) மரகத
ஆ) பொன்
இ) தன்
ஈ) வைர
Answer:
ஆ) பொன்
23.கேள்வியினான், காடனுக்கும் கபிலனுக்கும் – இச்சொற்களுக்குரிய இலக்கணக் குறிப்புகளைக் கண்டறிக.
அ) வினையாலணையும் பெயர், எண்ணும்மை
ஆ) எண்ணும்மை, வினையாலணையும் பெயர்
இ) முற்றெச்சம், உம்மைத் தொகை
ஈ) வினையெச்சம், தொழிற் பெயர்
Answer:
அ) வினையாலணையும் பெயர், எண்ணும்மை
24.‘மாசற விசித்த வார்புறு வள்பின்’ என்று பாடிய புலவர் _ பாடப்பட்டவன்
அ) மோசிகீரனார், தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
ஆ) ஔவையார், அதியமான்
இ) பரணர், தலையாளங்கானத்துச் செருதவன்ற பாண்டியன்
ஈ) கபிலர், பாரி
Answer:
அ) மோசிகீரனார், தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
25.அரண்மனையின் முரசுக் கட்டிலில் தூங்கியவர் ……………………… கவரி வீசிய மன்னர்
………………………
அ) இடைக்காடனார், குலேச பாண்டியன்
ஆ) மோசிகீரனார், பெருஞ்சேரல் இரும்பொறை
இ) கபிலர், பாரி
ஈ) பரணர், பேகன்
Answer:
ஆ) மோசிகீரனார், பெருஞ்சேரல் இரும்பொறை
26.பரஞ்சோதி முனிவர் ……………………… நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
அ) பத்தாம்
ஆ) பதினேழாம்
இ) பதினெட்டாம்
ஈ) பதினைந்தாம்
Answer:
ஆ) பதினேழாம்
27.பரஞ்சோதி முனிவர் ……………………… பக்தி மிக்கவர்.
அ) சிவ
ஆ) பெருமாள்
இ) முருக
ஈ) தேச
Answer:
அ) சிவ
28.திருவிளையாடற் கதைகள் ……………………… முதற்கொண்டு கூறப்பட்டு வருகிறது.
அ) சிலப்பதிகாரம்
ஆ) மணிமேகலை
இ) சீவகசிந்தாமணி
ஈ) தொல்காப்பியம்
Answer:
அ) சிலப்பதிகாரம்
**************THE END OF 5.3***************
5.4 புதியநம்பிக்கை
பாடநூல் வினாக்கள்
நெடுவினா
1.கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே – என்கிறது வெற்றிவேற்கை.
மேரியிடம் இருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில்
கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின் கருத்துகளை விவரிக்க.
Answer:
முன்னுரை :
- வரலாற்றில் மனிதர்கள் வருகிறார்கள். சிலர் வரலாறாகவே வாழ்கிறார்கள். அந்த வகையில் கல்வி அறிவற்ற, இருட்சமூகத்தில் ஒற்றைச் சுடராய் பிறந்து ஓராயிரம் சுடர்களை ஏற்றி, மேரி மெக்லியோட் பெத்யூன் கதையைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
இளமை வாழ்க்கை :
- மேரி தன் தாய் தந்தையோடு பருத்திக் காட்டில் வேலை செய்யும் கல்வி அறிவற்ற உழைக்கும் குடும்பம். அச்சூழலிலும் மேரி தனக்கென்ற தனி பாதை வகுப்பாள். அது, எதுவாகினும் தான் முதலில் பார்க்க வேண்டும் என ஆசைப்படுவாள்.
மேரிக்கு ஏற்பட்ட அவமானம்:
- மேரி ஒருநாள்தாயுடன் வில்சன்வீட்டிற்குச் செல்கிறாள். அங்குக்குழந்தைகள் விளையாடுவதைக் கண்டு வியப்புற்றாலும் அவள் கண்கள் அங்கு இருந்த புத்தகத்தின் மீதே சென்றது. ஒரு புத்தகத்தை எடுத்துப் புரட்டிப் பார்க்கின்றபோது வில்சனின் இளைய மகள் புத்தகத்தை வெடுக்கென்று பிடுங்கி உன்னால் படிக்கமுடியாது என்று கூறினாள். அந்த வார்த்தை அவள் மனதைக் கிழித்தது. உடனே வீட்டை விட்டு வெளியேறினாள்.
மேரியின் ஏக்கம் :
- வில்சனின் வீட்டில் நடந்த அவமானங்களை எண்ணி கண்ணீர் வடித்துத் தன் தந்தையிடம் நான் படிக்க வேண்டும். படித்தால்தான் இச்சமூகம் மதிக்கும் என்று கூறுகிறாள்.
தந்தையின் அறிவுரை :
- மேரி நாம் பள்ளிச் செல்லமுடியாது. நமக்கென்று தனியாகப் பள்ளிக்கூடம் இல்லை. வெளியூரில் பள்ளியில் வெள்ளைக்காரர்கள் படிக்கும் பள்ளிதான் இருக்கிறது. அதிலும் நம்மைச் சேர்க்கமாட்டார்கள் என்றார்.
மேரியின் தன்னம்பிக்கை:
- பதினொரு வயது நிரம்பிய மேரி வயல்காட்டிலிருந்து பருத்திமூட்டையைச் சுமந்துகொண்டு வீட்டிற்கு வந்தாள். அப்போது வீட்டில் முன்பின் அறிமுகம் இல்லாத பெண் தன்னை அறிமுகம் செய்துகொண்டு, நீ படிக்க வேண்டும்; உன் வேலைகளை முடித்துக்கொண்டு சீக்கிரம் வரவேண்டும் என்றார். மேரிக்கு நா எழவில்லை, வாயடைத்து நின்று வாசிக்கப் புறப்பட்டாள்; படிக்கத் தொடங்கினாள்.
- புதிது புதிதாக கற்றாள். தன் பாதையை மெல்ல மெல்ல உயர்த்தினாள். இறுதி வகுப்பு படித்து, சான்றிதழ் பெற்றாள்.
பட்டமளிப்பு விழா :
- தோல்வியே வெற்றிக்கு முதல்படி என்பதை உணர்ந்த மேரி, வில்சனின் இளைய மகள் என்னை அவமதிக்காவிட்டால் இந்த ஊக்கம் கிடைத்திருக்காது. அச்சிறுமியின் செயல் எனக்கு நேரிடாவிட்டால் இந்த விருது பெற இயலாது என்று எண்ணி பெருமிதம் அடைந்த மேரிக்கு எழுத படிக்கத் தெரியும் எனப் பட்டம் அளித்துச் சிறப்பித்தது.
மேற்படிப்பு :
- பட்டமளிப்பு விழாவின்போது வில்சன் தோளில் மேரியை அணைத்து ‘நீ எனக்கு என்ன செய்யப் போகிறாய்’ என்றார். “மிஸ் நான் மேலும் படிக்க விரும்புகிறேன்” என்றார். ஆனால் அலைகடலில் அகப்பட்ட கப்பல் கரைசேர இயலாத நிலைபோல் இருந்தாள்.
புதியதோர் பயணம் :
- மீண்டும் தன் பணியினைப் பருத்திக்காட்டில் தொடங்கினார்கள். அப்போது மிஸ் வில்சன் அங்கு வந்து, வெள்ளைக்காரப் பெண்மணி ஒரு கருப்பின குழந்தையின் படிப்பிற்காக பணம் அனுப்பி இருக்கிறார். அதைப் பெறுவதற்குரிய ஆளாக நீதான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாய். நீ மேல்படிப்பிற்காக டவுனுக்குப் போகவேண்டும் தயாராகு என்றார் மேரியிடம்
ஊரே கூடுதல் :
- மேரி மேல்படிப்பிற்குச் செல்ல தொடர்வண்டி நிலையத்தில் ஊரே ஒன்று கூடியது. அனைவரும் குட்பை மேரி, குட்பை வெற்றி உண்டாகட்டும் என்று வாழ்த்தி விடை கொடுத்தனர்.
முடிவுரை:
- சாதாரணப் பெண்ணாகப் பிறந்து சாதனைப் பெண்ணாக மாறியது மேரியின் வாழ்வு.மேலும், சமுதாயத்தின் அறியாமை இருளைப் போக்க தோன்றிய மேரிஜேன்னின் வாழ்வியல் நிகழ்வுகளைப் போல நாமும் அவமானங்களை வெகுமானமாக மாற்ற முயற்சிப்போம்.
- என்பதனை உணர்வோம்! வெற்றி பெறுவோம்!!!
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1.‘உனக்குப் படிக்கத் தெரியாது’ என்று உள்ளத்தில் பெற்ற அடி மேரி மெக்லியோட் பெத்யூன் ………………………..உருவாக்கிடக் காரணமானது.
அ) குப்பை கொட்டும் இடத்தில் ஒரு பள்ளியை
ஆ) தெருமுனையில் ஒரு கல்லூரியை
இ) மக்கள் கூடுமிடத்தில் ஒரு சமுதாயக் கூடத்தை
ஈ) கிராமத்தில் ஏழை மாணவர்களுக்கான பள்ளியை
Answer:
அ) குப்பை கொட்டும் இடத்தில் ஒரு பள்ளியை
2.மேரி மெக்லியோட் பெத்யூன் குப்பை கொட்டும் இடத்தில் ஒரு பள்ளியை உருவாக்கிட பணம் சேர்த்த
விதங்கள்………
i) சமையல் செய்து
ii) தோட்டமிட்டு
iii) பொது இடங்களில் பாட்டுப் பாடி
iv) பிச்சையெடுத்து
அ) i, ii, iii – சரி
ஆ) ii, iii, iv – சரி
இ) நான்கும் சரி
ஈ) iii – மட்டும் சரி
Answer:
அ) i, ii, iii – சரி
3.அமெரிக்க கறுப்பினப் பெண்மணி மேரி மெக்லியோட் பெத்யூன் – சமூகங்களின் ஒரு குரலாக இருந்தவர்.
அ) உலகெங்கும் மூலை முடுக்குகளில் உள்ள ஒடுக்கப்பட்ட, கல்வி மறுக்கப்பட்ட
ஆ) கைவிடப்பட்ட, நோய்வாய்ப்பட்ட
இ) மறுமணம் மறுக்கப்பட்ட
ஈ) உழைக்கும்
Answer:
அ) உலகெங்கும் மூலை முடுக்குகளில் உள்ள ஒடுக்கப்பட்ட, கல்வி மறுக்கப்பட்ட
4.மேரி மெக்லியோட் பெத்யூன் என்னும் அமெரிக்கக் கல்வியாளரின், வாழ்க்கையை ‘உனக்குப் படிக்கத் தெரியாது’ என்ற தலைப்பில் நூலாகப் படைத்தவர்
அ) அகிலன்
ஆ) கமலாலயன்
இ) கீதாலயன்
ஈ) ஜெயகாந்தன்
Answer:
ஆ) கமலாலயன்
5.கொற்கை என்னும் ஊர் அமைந்துள்ள மாவட்டம்
அ) திருநெல்வேலி
ஆ) மதுரை
இ) தூத்துக்குடி
ஈ) குமரி
Answer:
இ) தூத்துக்குடி
6.“கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை” என்று குறிப்பிடும் நூல்
அ) அகநானூறு
ஆ) புறநானூறு
இ) ஐங்குறுநூறு
ஈ) நற்றிணை
Answer:
இ) ஐங்குறுநூறு
*****************************THE END OF 5.4*********************************
5.5. வினா, விடை வகைகள், பொருள்கோள்
I. பலவுள் தெரிக.
”இங்கு நகரப் பேருந்து நிற்குமா?” என்று வழிப்போக்கர் கேட்டது ………… வினா.
“அதோ, அங்கே நிற்கும்.” என்று மற்றொருவர் கூறியது ………. விடை.
- ஐயவினா, வினா எதிர் வினாதல்
- அறிவினா, மறை விடை
- அறியா வினா, சுட்டு விடை
- கொளல் வினா, இனமொழி விடை
விடை : அறியா வினா, சுட்டு விடை
II. குறு வினா
இந்த அறை இருட்டாக இருக்கிறது. மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம்
இருக்கிறது?
இதோ… இருக்கிறதே! சொடுக்கியைப் போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே!மின்சாரம்
இருக்கிறதா, இல்லையா?
மேற்கண்ட உரையாடலில் உள்ள வினாக்களின் வகைகளை எடுத்தெழுதுக.
விடை
அ) மின்விளக்கின் சொடுக்கி எந்தபக்கம் இருக்கிறது? – அறியா வினா
ஆ) இதோ… இருக்கிறதே! – சுட்டு விடை
இ) சொடுக்கியைப் போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே! மின்சாரம் இருக்கிறா,
இல்லையா? – ஐய வினா
III. சிறு வினா
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
இக்குறட்பாவில் அமைந்துள்ள பொருள்கோளின் வகையைச் சுட்டி விளக்குக.
இப்பாடலில் அமைந்துள்ள பொருள்கோள் ஆற்றுநீர்ப் பொருள்கோள்
பொருள்கோள் இலக்கணம்
பாடலின் தொடக்கம் முதல் முடிவு வரை ஆற்று நீரின் போக்கைப் போல நேராகவே
பொருள் கொள்ளுமாறு அமைதல் ஆற்றுநீர்ப பொருள்கோள்
பொருள்கோள் விளக்கம்
இப்பாடலில் முயற்சி செல்வத்தை தரும். முயற்சி செய்யாமை வறுமையைத் தரும் என்று
பாடலின் தொடக்கம் முதல் முடிவு வரை நேராகப் பொருள் கொள்ளும் முறையில்
அமைந்திருப்பதால் அது ஆற்று நீரப்பொருள்கோள் ஆயிற்று.
வினா, விடை வகைகள், பொருள்கோள் – கூடுதல் வினாக்கள்
1. வினா எத்தனை வகைப்படும் அவை யாவை?
வினா ஆறு வகைப்படும்.
- அவை
- அறி வினா
- அறியா வினா
- ஐய வினா
- கொளல் வினா
- கொடை வினா
- ஏவல் வினா
2. அறி வினா என்றால் என்ன? எ.கா தருக
- தான் விடை அறிந்திருந்தும், அவ்விடை பிறருக்குத் தெரியுமா என்பதை அறியும் பொருட்டு வினவுவது.
எ.கா:-
மாணவரிடம், ‘இந்தக் கவிதையின் பொருள் யாது?’ என்று ஆசிரியர் கேட்டல்.
3. அறியா வினா என்றால் என்ன? எ.கா தருக
- தான் அறியாத ஒன்றை அறிந்து கொள்வதற்காக வினவுவது.
எ.கா:-
ஆசிரியரிடம், ‘இந்தக் கவிதையின் பொருள் யாது?’ என்று மாணவர் கேட்டல்.
4. கொளல் வினா என்றால் என்ன? எ.கா தருக
- தான் ஒரு பொருளை வாங்கிக் கொள்ளும் பொருட்டு வினவுவது
எ.கா:-
‘ ஜெயகாந்தன் சிறுகதைகள் இருக்கிறதா ?’ என்று நூலகரிடம் வினவுதல்.
5. ஐயா வினா என்றால் என்ன? எ.கா தருக
- ஐயம் நீங்கித் தெளிவு பெறுவதற்காகக் கேட்கப்படுவது.
எ.கா:-
‘இச்செயலைச் செய்தது மங்கையா? மணிமேகலையா?’ என வினவுதல்.
6. கொடை வினா என்றால் என்ன? எ.கா தருக
- பிறருக்கு ஒரு பொருளைக் கொடுத்து உதவும் பொருட்டு வினவுவது
எ.கா:-
‘என்னிடம் பாரதிதாசன் கவிதைகள் இரண்டு படிகள் உள்ளன. உன்னிடம் பாரதிதாசனின்
கவிதைகள் இருக்கிறதா?’ என்று கொடுப்பதற்காக வினவுதல்.
7. ஏவல் வினா என்றால் என்ன? எ.கா தருக
- ஒரு செயலைச் செய்யுமாறு ஏவுதற் பொருட்டு வினவுவது.
எ.கா:-
“வீட்டில் தக்காளி இல்லை. நீ கடைக்குச் செல்கிறாயா? என்று அக்கா தம்பியிடம்
வினவி வேலையைச் சொல்லுதல்.
8. விடை எத்தனை வகைப்படும்? அவை யாவை?
விடை எட்டு வகைப்படும்.
அவை
- சுட்டு விடை
- மறை விடை
- நேர் விடை
- ஏவல் விடை
- வினா எதிர் வினாதல் விடை
- உற்றது உரைத்தல் விடை
- உறுவது கூறல் விடை
- இனமொழி விடை
9. சுட்டு விடை என்றால் என்ன? எ.கா. தருக
- சுட்டிக் கூறும் விடை
எ.கா:-
‘கடைத்தெரு எங்குள்ளது?’ என்ற வினாவிற்கு, ‘வலப்பக்கத்தில் உள்ளது’ எனக் கூறல்.
10. மறை விடை என்றால் என்ன? எ.கா. தருக
- மறுத்துக் கூறும் விடை ‘
எ.கா:-
கடைக்குப் போவாயா?’ என்ற கேள்விக்குப் ‘போகமாட்டேன்’ என மறுத்துக் கூறல்.
11. நேர் விடை என்றால் என்ன? எ.கா. தருக
- உடன்பட்டுக் கூறும் விடை
எ.கா:-
‘கடைக்குப் போவாயா?’ என்ற கேள்விக்குப் ‘பாேவேன்’ என்று உடன்பட்டுக் கூறல்.
12. ஏவல் விடை என்றால் என்ன? எ.கா. தருக
- மாட்டேன் என்று மறுப்பதை ஏவுதலாகக் கூறும் விடை.
எ.கா:-
இது செய்வாயா?” என்று வினவியபோது, “நீயே செய்”என்று ஏவிக் கூறுவது.
13. வினா எதிர் வினாதல் விடை என்றால் என்ன? எ.கா. தருக
- வினாவிற்கு விடையாக இன்னொரு வினாவைக் கேட்பது.
எ.கா:-
‘என்னுடன் ஊருக்கு வருவாயா?’ என்ற வினாவிற்கு ‘வராமல் இருப்பேனா?’ என்று
கூறுவது.
14. உற்றது உரைத்தல் விடை என்றால் என்ன? எ.கா. தருக
- வினாவிற்கு விடையாக ஏற்கெனவே நேர்ந்ததைக் கூறல்.
எ.கா:-
‘நீ விளையாடவில்லையா?’ என்ற வினாவிற்குக் ‘கால் வலிக்கிறது’ என்று உற்றதை
உரைப்பது.
15. உறுவது கூறல் விடை என்றால் என்ன? எ.கா. தருக
- வினாவிற்கு விடையாக இனிமேல் நேர்வதைக் கூறல்.
எ.கா:-
‘நீ விளையாடவில்லையா?’ என்ற வினாவிற்குக் ‘கால் வலிக்கும்’ என்று உறுவதை
உரைப்பது.
16. இனமொழி விடை என்றால் என்ன? எ.கா. தருக
- வினாவிற்கு விடையாக இனமான மற்றொன்றை விடையாகக் கூறல்.
எ.கா:-
“உனக்குக் கதை எழுதத் தெரியுமா?” என்ற வினாவிற்குக் “கட்டுரை எழுதத் தெரியும்”
என்று கூறுவது.
17. பொருள்கோள் ஏன்றால் என்ன? அதன் வகைகளை கூறுக
செய்யுளில் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு சேர்த்தோ மாற்றியோ பொருள் கொள்ளும்
முறைக்குப் ‘பொருள்கோள்’ என்று பெயர்.
பொருள்கோள் எட்டு வகைப்படும்.
- ஆற்றுநீர்ப் பொருள்கோள்
- மொழிமாற்றுப் பொருள்கோள்
- நிரல்நிறைப் பொருள்கோள்
- விற்பூட்டுப் பொருள்கோள்
- தாப்பிசைப் பொருள்கோள்
- அளைமறிபாப்புப் பொருள்கோள்
- கொண்டு கூட்டுப் பொருள்கோள்
- அடிமறிமாற்றுப் பொருள்கோள்
18. கொண்டு கூட்டுப் பொருள்கோள் என்றால் என்ன?
- ஒரு செய்யுளில் பல அடிகளில் சிதறிக்கிடக்கும் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடொன்று கூட்டிப் பொருள்கொள்வது கொண்டுகூட்டுப் பொருள்கோளாகும்.
கற்பவை கற்றபின்…
I. வினா வகையையும் விடை வகையையும் சுட்டுக.
1. “காமராசர் நகர் எங்கே இருக்கிறது? “இந்த வழியாகச் செல்லுங்கள்.” – என்று
விடையளிப்பது.
- சுட்டுவிடை
2. “எனக்கு எழுதித் தருகிறாயா?” என்ற வினாவுக்கு, “எனக்கு யார் எழுதித்
தருவார்கள்?” என்று விடையளிப்பது.
- வினா எதிர் வினாதல் விடை
II. உரையாடலில் இடம்பெற்றுள்ள வினாவிடை வகைகளைக் கண்டு எழுதுக.
பாமகள் : வணக்கம் ஆதிரை! ஏதோ எழுதுகிறீர்கள் போலிருக்கிறதே? (அறியா வினா)
ஆதிரை : ஆமாம்! கவியரங்கத்துக்குக் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறேன்.
(உற்றது உரைத்தல் விடை)
பாமகள் : அப்படியா! என்ன தலைப்பு? (அறியாவினா)
ஆதிரை : கல்வியில் சிறக்கும் தமிழர்! (நேர்விடை). நீங்கள்
கவியரங்கத்துக்கு
எல்லாம் வருவீர்களோ? மாட்டீர்களோ? (ஐயவினா)
பாமகள் : ஏன் வராமல்? (வினா எதிர் வினாதல் விடை)
மொழியை ஆள்வோம்
I. ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களைக் கவிதையில் கண்டு
எழுதுக.
யாழிசை
அறைக்குள் யாழிசை
ஏதென்று சென்று
எட்டிப் பார்த்தேன்;
பேத்தி,
நெட்டுருப் பண்ணினாள்
நீதிநூல் திரட்டையே.
பாரதிதாசன்
It’s like new lute music
Wondering at the lute music
Coming from the chamber
Entered I to look up to in still
My grand-daughter
Learning by rote the verses
Of a didactic compilation.
Translated by Kavignar Desini
விடை:-
lute music - யாழிசை
chamber - ஏதென்று
to look up - எட்டிப் பார்த்தேன்
grand-daughter - பேத்தி
rote - நெட்டுரு
didactic compilation - நீதிநூல் திரட்டு
III. தொடர்களில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க .
1 . கடம்ப வனத்தை விட்டு இறைவன் நீங்கினான் .
- அழகிய குளிர்ந்த கடம்ப வனத்தை விட்டு இறைவன் நீங்கினான் .
2 .மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும் .
- பழம் தரும் மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும் .
3 . வாழ்க்கைப் பயணமே வேறுபட்ட பாடங்களைக் கற்றுத் தருகிறது .
- சொந்தங்களோடு வாழும் வாழ்க்கைப் பயணமே வேறுபட்ட பாடங்களைக் கற்றுத் தருகிறது .
4 . கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும் .
- ஒழுக்கத்துடன் கற்கும் கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும் .
5 . குழந்தைகள் தனித்தனியே எழுதித்தர வேண்டும் .
- விடைத்தாள்களை குழந்தைகள் தனித்தனியே எழுதித் தரவேண்டும்.
மொழியோடு விளையாடு
I. தொழிற்பெயர்களின் பொருளைப் புரிந்துகொண்டு தொடர்களை முழுமை செய்க.
1. நிலத்துக்கு அடியில் கிடைக்கும்
புதையல் யாவும் அரசுக்கே சொந்தம்.
நெகிழிப் பொருள்களை மண்ணுக்கு அடியில்
புதைத்தல் நிலத்தடி நீர்வளத்தைக்
குன்றச் செய்யும். (புதையல்; புதைத்தல்)
2. காட்டு விலங்குகளைச்
சுடுதல் தடை செய்யப்பட்டுள்ளது.
செய்த தவறுகளைச் சுட்டல் திருந்த
உதவுகிறது. (சுட்டல், சுடுதல்)
3. காற்றின் மெல்லிய
தொடுதல் பூக்களைத்
தலையாட்டவைக்கிறது. கைகளின் நேர்த்தியான
தொடுத்தல் பூக்களை மாலையாக்குகிறது.
(தொடுத்தல், தொடுதல்)
4. பசுமையான காட்சிஐக் காணுதல் கண்ணுக்கு நல்லது.
(காணுதல், காட்சி)
5. பொதுவாழ்வில்
நடித்தல் கூடாது. நடிப்புஇல் அவரை மிஞ்ச ஆள் கிடையாது. (நடித்தல், நடிப்பு)
II. அகராதியில் காண்க.
1. மன்றல்
- திருமணம்
2. அடிச்சுவடு
- காலடிக்குறி
3. அகராதி
- அகர வரிசை சொற்பொருள் நூல்
4. தூவல்
- மழை/நீர்த்துளி
5. மருள்
- மயக்கம்
நிற்க அதற்குத் தக…
கலைச்சொல் அறிவோம்
- Emblem – சின்னம்
- Intellectual – அறிவாளர்
- Thesis – ஆய்வேடு
- Symbolism – குறியீட்டியல்
- Exhibition – காட்சி, பொருட்காட்சி
- East Indian Railways – இருப்புப் பாதை
- Revolution – புரட்சி
- Strike – தொழில் நிறுத்தி இருத்தல், தொழில் நிறுத்தம், வேலை நிறுத்தம்
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1.தான் அறியாத ஒன்றை அறிந்து கொள்வதற்காக வினவுவது ……………………………..
அ) அறிவினா
ஆ) அறியாவினா
இ) ஐயவினா
ஈ) ஏவல் வினா
Answer:
ஆ) அறியாவினா
2.பிறருக்குப் பொருளைக் கொடுத்து உதவும் பொருட்டு வினவுவது ……………………………..
அ) ஏவல் வினா
ஆ) கொளல் வினா
இ) ஐய வினா
ஈ) கொடை வினா
Answer:
ஈ) கொடை வினா
3.மாட்டேன் என்று மறுப்பதை ஏவுதலாகக் கூறும் விடை ……………………………..
அ) மறைவிடை
ஆ) இனமொழிவிடை
இ) நேர்விடை
ஈ) ஏவல்விடை
Answer:
ஈ) ஏவல்விடை
4.வினாவிற்கு விடையாக இனிமேல் நேர்வதைக் கூறுவது ……………………………..
அ) உறுவது கூறல் விடை
ஆ) உற்றது உறைத்தல் விடை
இ) இனமொழி விடை
ஈ) வினா எதிர் வினாதல் விடை
Answer:
அ) உறுவது கூறல் விடை
5.உடன்பட்டுக் கூறும் விடை ……………………………..
அ) சுட்டுவிடை
ஆ) மறைவிடை
இ) நேர்விடை
ஈ) ஏவல்விடை
Answer:
இ) நேர்விடை
6.வினாவிற்கு வினாவை திரும்பக் கேட்பது ……………………………..
அ) ஏவல் விடை
ஆ) வினா எதிர்வினாதல் விடை
இ) மறைவிடை
ஈ) நேர்வினா
Answer:
ஆ) வினா எதிர்வினாதல் விடை
7.மறுத்துக் கூறும் விடை ……………………………..
அ) சுட்டு விடை
ஆ) மறைவிடை
இ) ஏவல்விடை
ஈ) நேர் விடை
Answer:
ஆ) மறைவிடை
8.ஆடத்தெரியுமா என்ற வினாவிற்குப் பாடத்தெரியும் என்று
கூறுவது……………………………..
அ) வினாஎதிர் வினாதல்
ஆ) உற்றது உரைத்தல்
இ) உறுவது கூறல்
ஈ) இனமொழி விடை
Answer:
ஈ) இனமொழி விடை
9.ஊருக்கு வருவாயா? என்ற வினாவிற்கு வராமல் இருப்பேனா? என்று கூறுவது என்ன
விடை?
அ) வினாஎதிர் வினாதல் விடை
ஆ) உற்றது உரைத்தல் விடை
இ) உறுவது கூறல் விடை
ஈ) இனமொழி விடை
Answer:
அ) வினாஎதிர் வினாதல் விடை
10.ஆசிரியர் மாணவனிடம் இப்பாடலின் பொருள் யாது?
அ) அறிவினா
ஆ) ஐயவினா
இ) அறியாவினா
ஈ) கொளல்வினா
Answer:
அ) அறிவினா
11.மாணவன் ஆசிரியரிடம் இப்பாடலின் பொருள் யாது என வினவுவது ……………………………..
அ) அறிவினா
ஆ) அறியாவினா
இ) ஐயவினா
ஈ) ஏவல்வினா
Answer:
ஆ) அறியாவினா
12.இச்செயலைச் செய்தது மங்கையா? மணிமேகலையா?
அ) அறிவினா
ஆ) அறியாவினா
இ) ஐயவினா
ஈ) ஏவல்வினா
Answer:
இ) ஐயவினா
13.ஐயம் நீங்கித் தெளிவு பெறுவதற்காகக் கேட்கப்படுவது ……………………………..
அ) அறிவினா
ஆ) அறியாவினா
இ) ஐயவினா
ஈ) ஏவல்வினா
Answer:
இ) ஐயவினா
14.வினா ……………………………..வகைப்படும்.
அ) நான்கு
ஆ) ஐந்து
இ) ஆறு
ஈ) ஏழு
Answer:
இ) ஆறு
15.‘என்னிடம் பாரதிதாசன் கவிதைகள் இரண்டு படிகள் உள்ளன. உன்னிடம் பாரதிதாசனின் கவிதைகள் இருக்கிறதா? என்று கொடுப்பதற்காக வினவுவது ……………………………..
அ) கொளல் வினா
ஆ) ஐய வினா
இ) கொடை வினா
ஈ) ஏவல் வினா
Answer:
இ) கொடை வினா
16.“வீட்டில் தக்காளி இல்லை, நீ கடைக்குச் செல்கிறாயா? என்று அக்கா தம்பியிடம் வினவி வேலையைச்
சொல்வது
அ) ஐயவினா
ஆ) அறியாவினா
இ) கொளல் வினா
ஈ) ஏவல் வினா
Answer:
ஈ) ஏவல் வினா
17.விடை …………………………….. வகைப்படும்.
அ) ஆறு
ஆ) ஏழு
இ) எட்டு
ஈ) ஒன்பது
Answer:
இ) எட்டு
18.வெளிப்படை விடைகளில் பொருந்தாததைக் கண்டறிக.
அ) சுட்டு விடை
ஆ) மறை விடை
இ) நேர் விடை
ஈ) ஏவல் விடை
Answer:
ஈ) ஏவல் விடை
19.நேரடி விடைகளாக இருக்கும் வெளிப்படை விடைகள் எத்தனை?
அ) மூன்று
ஆ) நான்கு
இ) ஐந்து
ஈ) ஆறு
Answer:
அ) மூன்று
20.குறிப்பு விடைகளாக இருக்கும் குறிப்பு விடைகள் எத்தனை?
அ) மூன்று
ஆ) நான்கு
இ) ஐந்து
ஈ) ஆறு
Answer:
இ) ஐந்து
21.குறிப்பு விடைகளில் பொருந்தாததைக் கண்டறிக.
அ) நேர் விடை
ஆ) ஏவல் விடை
இ) உறுவது கூறல்
ஈ) இனமொழி
Answer:
அ) நேர் விடை
22.செய்யுளில் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு சேர்த்தோ மாற்றியோ பொருள் கொள்ளும் முறைக்கு ……………………………..என்று பெயர்.
அ) பொருள்கோள்
ஆ) வழாநிலை
இ) அணி
ஈ) வழுவமைதி
Answer:
அ) பொருள்கோள்
23.பொருள்கோள்…………………………….. வகைப்படும்.
அ) 6
ஆ) 7
இ) 8
ஈ) 9
Answer:
இ) 8
24.பாடலின் தொடக்கம் முதல் முடிவு வரை நேராகவே பொருள் கொள்ளுமாறு அமைவது …………………………….. ஆகும்.
அ) ஆற்று நீர்ப் பொருள்கோள்
ஆ) நிரல் நிறைப் பொருள்கோள்
இ) கொண்டு கூட்டுப் பொருள்கோள்
ஈ) மொழிமாற்றுப் பொருள்கோள்
Answer:
அ) ஆற்று நீர்ப் பொருள்கோள்
25.ஒரு செய்யுளில் சொற்கள் முறையே பிறழாமல் நிரல் நிறையாக அமைந்து வருவது……………………………..
அ) நிரல் நிறைப் பொருள்கோள்
ஆ) விற்பூட்டுப் பொருள்கோள்
இ) ஆற்று நீர்ப் பொருள்கோள்
ஈ) மொழிமாற்றுப் பொருள்கோள்
Answer:
அ) நிரல் நிறைப் பொருள்கோள்
26.நிரல் நிறைப் பொருள்கோள் ……………………………..வகைப்படும்.
அ) இரு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஆறு
Answer:
அ) இரு
27.செய்யுளில் எழுவாயாக அமையும் பெயர்ச்சொற்களை அல்லது வினைச் சொற்களை வரிசையாக நிறுத்தி, அவை ஏற்கும் பயனிலைகளையும் அவ்வரிசைப்படியே நிறுத்திப் பொருள் கொள்ளுதல் ……………………………..ஆகும்.
அ) விற்பூட்டுப் பொருள்கோள்
ஆ) முறை நிரல் நிறைப் பொருள்கோள்
இ) எதிர் நிரல் நிறைப் பொருள்கோள்
ஈ) மொழிமாற்றுப் பொருள்கோள்
Answer:
ஆ) முறை நிரல் நிறைப் பொருள்கோள்
28.செய்யுளில் எழுவாய்களை வரிசைப்படுத்தி அவை ஏற்கும் பயனிலைகளை எதிர் எதிராகக் கொண்டு பொருள் கொள்ளுதல் ……………………………..ஆகும்.
அ) விற்பூட்டுப் பொருள்கோள்
ஆ) முறை நிரல் நிறைப் பொருள்கோள்
இ) எதிர் நிரல் நிறைப் பொருள்கோள்
ஈ) மொழிமாற்றுப் பொருள்கோள்
Answer:
இ) எதிர் நிரல் நிறைப் பொருள்கோள்
29.ஒரு செய்யுளில் பல அடிகளில் சிதறிக் கிடக்கும் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடொன்று
கூட்டிப் பொருள் கொள்வது ……………………………..ஆகும்.
அ) கொண்டு கூட்டுப் பொருள்கோள்
ஆ) ஆற்று நீர்ப் பொருள்கோள்
இ) மொழிமாற்றுப் பொருள்கோள்
ஈ) நிரல் நிறைப் பொருள்கோள்
Answer:
அ) கொண்டு கூட்டுப் பொருள்கோள்
கருத்துரையிடுக