9th Standard Tamil Guide Unit 5
TN Students Guide
9th
Standard Tamil Unit 5 Full Answers Key. Book Back and Additional Question and
answers. 9th tamil guide. 9th Standard Tamil Nadu Syllabus Samacheer kalvi
Gide.
இயல் 5.1. கல்வியில் சிறந்த
பெண்கள்
இயல் 5.2. குடும்ப விளக்கு
இயல் 5.3. சிறுபஞ்சமூலம்
இயல் 5.4. வீட்டிற்கோர் புத்தகசாலை
இயல் 5.5. இடைச்சொல் – உரிச்சொல்
இயல் 5.1. கல்வியில் சிறந்த பெண்கள்
I. குறு வினா
சாரதா சட்டம் எதற்காகப் போடப்பட்டது?
பெண்கள் முன்னேற்றத்திற்குத் தடைக்கல்லாய் இருப்பது குழந்தைத் திருமணம். எனவே அதைத் தடுக்க 1929-ம் ஆண்டு சாரதா சட்டம் போடப்பட்டது.
II. சிறு வினா
1. சங்க கால பெண்பாற் புலவர்களின் பெயர்களை எழுதுக
- ஔவையார்
- ஒக்கூர் மாசாத்தியார்,
- ஆதிமந்தியார்
- வெண்ணிக் குயத்தியார்
- பொன்முடியார்
- அள்ளூர் நன்முல்லையார்
- நக்கண்ணையார்
- காக்கைப்பாடினியார்,
- வெள்ளிவீதியார்
- காவற்பெண்டு
- நப்பசலையார்
2. இன்றைய பெண்கல்வி என்னும் தலைப்பின் வில்லுப்பாட்டு வடிவில் பாடல் எழுதுக.
- “தந்தனத்தோம் என்று சொல்லியே வல்லினில் பாட
- ஆமாம் வில்லினில் பாட
- வந்தருள்வாய் தமிழ் மகளே!
- இன்றைய பெண்கல்வி பற்றிப் பாடப்போகிறோம்!
- ஆமாம்! பாடப்போகிறோம்.
- மருத்துவம் படித்து மருத்துவ மாேமேதைகள் தான்
- இன்று பெண்கள்…
- சட்டம் படித்து சட்ட மாமேதைகள் தான்
- இன்று பெண்கள்…
- பொறியில் படித்து பொறியியல் மாமேதைகள் தான்
- இன்று பெண்கள்…
- ஆமாம்!
- வாழிய வாழிய பெண்கல்வி
- ஆமாம் வாழிய வாழியவே!”
3. முத்துலெட்சுமி – குறிப்பு வரைக. (அல்லது) மருத்துவர் முத்துலெட்சுமியின் சாதனைகளை குறிப்பிடுக.
- தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்
- இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர்.
- சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர்.
- சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி.
- தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டம், இருதார தடைச்சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் ஆகியவை நிறைவேற காரணமாக இருந்தவர்.
- அடையாற்றில் 1930இல் அவ்வை இல்லம், 1952இல் புற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றை நிறுவியவர்.
4. நீலாம்பிகை அம்மையாரின் தமிழ்ப்பணி குறித்த சிறப்பங்களை எழுதுக.
- மறைமலையடிகளின் மகள் ஆவார்.
- தந்தையைப் போலவே தனித்தமிழ்ப் பற்றுடையவர்
- இவரது தனித்தமிழ்க் கட்டுரை, வடசொல் – தமிழ் அகரவரிசை, முப்பெண்மணிகள் வரலாறு, பட்டினத்தார் பாராட்டிய மூவர் ஆகிய நூல்கள் தனித்தமிழில் எழுத விரும்புவோர்க்கு மிகவும் பயனுள்ளனவாக விளங்குகின்றன.
II. நெடு வினா
நீங்கள் அறிந்த சாதனைப் பெண்கள் குறித்த செய்திகளை விவரிக்க
மூவலூர் இராமாமிர்தம்:-
தமிழகத்தின் சமூகச் சீர்திருத்தவாதி, எழுத்தாளர்
திராவிட இ யக்க அரசியல் செயல்பாட்டாளர்.
தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறத் துணைநின்றவர்.
தமிழக அரசு, 8ஆம் வகுப்புவரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித் தொகையை இவரின் பெயரில் வழங்கிவருகிறது.
முத்துலெட்சுமி:-
தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்
இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர்.
சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர்.
சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி.
தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டம், இருதார தடைச்சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் ஆகியவை நிறைவேற காரணமாக இருந்தவர்.
அடையாற்றில் 1930இல் அவ்வை இல்லம், 1952இல் புற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றை நிறுவியவர்.
நீலாம்பிகை அம்மையார்:-
மறைமலையடிகளின் மகள் ஆவார்.
தந்தையைப் போலவே தனித்தமிழ்ப் பற்றுடையவர்
இவரது தனித்தமிழ்க் கட்டுரை, வடசொல் – தமிழ் அகரவரிசை, முப்பெண்மணிகள் வரலாறு, பட்டினத்தார் பாராட்டிய மூவர் ஆகிய நூல்கள் தனித்தமிழில் எழுத விரும்புவோர்க்கு மிகவும் பயனுள்ளனவாக விளங்குகின்றன.
கல்வியில் சிறந்த பெண்கள் – கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. கல்வி பெறுதலே _________ அழகு.
விடை : பெண்களுக்கு
2. பெண் கல்விக்கு _________ முதன் முதலில் பரிந்துரை செய்தது.
விடை : ஹண்டர் குழு
3. _________ மாநிலம் இந்தியாவில் முதன் முதலாக பெண்களுக்கான பள்ளியை தொடங்கியது.
விடை : மராட்டியம்
4. தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் _________
விடை : முத்துலெட்சுமி
5. 1952-ல் புற்றுநோய் மருத்துவமனையை நிறுவியவர் _________ ஆவார்.
விடை : முத்துலெட்சுமி
6. _________வேலூரில் இலவச மருத்துவம் அளித்தவர்.
விடை : ஐடாஸ் சோபியா ஸ்கட்டர்
7. பாகிஸ்தானில், பெண்கல்வி வேண்டுமென்று மலாலாவின் தனது _________ வயதில் போராடினார்.
விடை : பன்னிரண்டு
8. மூவலூர் இராமாமிர்தம் தேவதாசி சட்டம் நிறைவேற துணை நின்றார்.
விடை : தேவதாசி சட்டம்
9. இந்திய நாட்டின் முதல் பெண் ஆசிரியர் _________
விடை : சாவித்திரபாய் பூலே
10. _________ நோபல் பரிசு வாங்கி சிறுமி ஆவார்.
விடை : மலாலா
11. கைலாஷ் சத்தியமூர்த்தி _________ என்ற அமைப்பை நிறுவினார்.
விடை : குழந்தையைப் பாதுகாப்போம்
12. தடைகளை மீறி கல்வி கற்று பண்டிதர் ஆகியவர் _________
விடை : பண்டித ரமாபாய்
13. 2014-ல் நோபல் பரிசு வாங்கியவர் _________
விடை : கைலாஷ் சத்யார்த்தி.
II. குறு வினா
1. இறைவனுக்குப் பாமாலை சூட்டின பெண்கள் யாவர்?
- காரைக்கால் அம்மையார்
- ஆண்டாள்
2. பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்வர்கள் யார்?
- மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
- தந்தை பெரியார்
- பாரதியார்
- பாரதிதாசன்
3. சாவித்திரிபாய் பூலே ஆற்றிய பணி யாது?
- 1848-ல் பெண்களுக்கெனத் தொடங்கப்பட்ட பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர்.
- நாட்டின் முதல் பெண் ஆசிரியர்.
4. ஒருவரின் வாழ்வின் இறுதி வரையிலும் கை கொடுப்பது?
கையிலுள்ள செல்வத்தைக் காட்டிலும் நிலைத்த புகழுடைய கல்விதான் ஒருவருக்கு வாழ்வின் இறுதி வரையிலும் கை கொடுக்கிறது.
5. பெண்களுக்கான நலத்திட்டங்கள் எவை?
- ஈ.வெ.ரா. – நாகம்மை இலவசக் கல்வி உதவித் திட்டம் பட்டமேற்படிப்பிற்கு உரியது.
- சிவகாமி அம்மையார் கல்வி உதவித்திட்டம் – கல்வி, திருணம உதவித் தொகை ஆகியவற்றுடன் தொடர்புடையது.
III. சிறு வினா
ஈ.த. இராஜேஸ்வரி அம்மையார் பற்றி குறிப்பு வரைக
- தமிழ், இலக்கியம், அறிவியல் ஆகிய துறைகளிலும் சிறந்து விளங்கினார்.
- திருமந்திரம், தொல்காப்பியம், கைவல்யம் போன்ற நூல்களிலுள்ள அறிவியல் உண்மைகள் குறித்துச் சொற்பொழிவு ஆற்றியுள்ளார்.
- இராணி மேரி கல்லூரியில் அறிவியல் பேராசிரியாகப் பணியாற்றினார்.
- சூரியன், பரமாணுப் புராணம் போன்ற அறிவியல் நூல்களை எழுதியுள்ளார்.
*********************THE END OF 5.1*********************
5.2 குடும்ப விளக்கு
I. சொல்லும் பொருளும்:
- களர்நிலம் – உவர்நிலம்,
- நவிலல் – சொல்
- வையம் – உலகம்
- மாக்கடல் – பெரிய கடல்
- இயற்றுக – செய்க
- மின்னாளை – மின்னலைப் போன்றவளை
- மின்னாள் – ஒளிரமாட்டாள்
- தணல் – நெருப்பு
- தாழி – சமைக்கும் கலன்
- அணித்து – அருகில்
- தவிர்க்கஒணா – தவிர்க்க இயலாத
- யாண்டும் – எப்பொழுதும்
II. இலக்கணக்குறிப்பு
- மாக்கடல் – உரிச்சொல்தொடர்
- ஆக்கல் – தொழில்பெயர்
- பொன்னே போல் – உவம உருபு
- மலர்க்கை – உவமைத்தொகை
- வில்வாள் – உம்மைத்தொகை
- தவிர்க்கஒணா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
III. பகுபத உறுப்பிலக்கணம்
1. விளைவது = விளை + வ் +அ + துவிளை – பகுதி
வ் – எதிர்கால இடைநிலை;
அ – சாரியை
து – ஒன்றன்பால் வினைமுற்று விகுதி.
2. சமைக்கின்றார் = சமை + க் + கின்று + ஆர்
சமை – பகுதி
க் – சந்தி
கின்று – நிகழ்கால இடைநிலை
ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி.
VI. பொருத்தமான விடையைத் தேர்க .
- சிறுபஞ்சமூலம் – காப்பிய இலக்கியம்
- குடும்ப விளக்கு – சங்க இலக்கியம்
- சீவகசிந்தா மணி – அற இலக்கியம்
- குறுந்தொகை – தற்கால இலக்கியம்.
V. குறு வினா
தலைவியன் பேச்சில் வெளிப்படுகின்ற பாடுபொருள் யாது?பெண்கல்வி பெறுதலே தலைவயின் பேச்சில் வெளிப்படுகினற் பாடுபொருள் ஆகும்.
VI. சிறு வினா
சமைப்பது தாழ்வா ? இன்பம்சமைக்கின்றார் சமையல் செய்வார்.
அ) இன்பம் சமைப்பவர் யார்?
உணவைச் சமைப்பவர் இன்பத்தையும் சமைப்பர்
ஆ) பாவேந்தரின் கூற்றுப்படி சமைப்பது தாழ்வா?
பாவேந்தரின் கூற்றுப் படி சமைப்பது தாழ்வன்று
VII. நெடு வினா
குடும்ப விளக்கு நூலில் தலைவி பேச்சில் வெளிப்படும் பெண்கல் விக்கான கருத்துகளை இன்றைய சூழலுடன் ஒப்பிட்டு எழுதுக.- கல்வியறிவு இல்லாத பெண்கள் பண்படாத நிலத்தைப் போன்றவர்கள். அந்நிலத்தில் புல் முதலானவைதான் விளையலாம். நல்ல பயிர் விளையாது. அறிவுடைய மக்கள் உருவாகமாட்டார்கள்.
- இன்று கல்வி இல்லா பெண்களின் குழந்தைகளில் பலர் தீய பழக்கங்களுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
- கல்வி அறிவுள்ள நன்செய் நிலத்தினைப் போன்றவர்கள். அவர்கள் மூலம் சிறந்த அறிவுடைய மக்கள் உருவாகின்றனர்.
- இன்று கல்வி கற்ற பெண்களின் குழந்தைகளில் பலர் நல்ல பழக்கங்கள் கற்று உயர்ந்து இருக்கின்றனர்.
- வானூர்தியைச் ஓட்டல், கடல் மற்றும் உலகினை அளத்தல் ஆகியன ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவானது என்று அன்று பாரதிதாசன் கூறியுள்ளவை இன்று நனவாகியுள்ளது.
- சமைப்பது, வீட்டு வேலை செய்வது பெண்களுக்கு மட்டுமே பொருத்தமற்றது, அவை நமக்கும் உரியது என ஆண்கள் ஏற்றுக் கொள்ளும் எண்ணம் வர வேண்டும். அந்த நன்நாள் காண்போம் என்று பாரதிதாசன் கூறியது இன்று நனவாகிவிட்டது. ஆண்கள் வீட்டு வேலை செய்வதும் இன்று நடக்கின்றது.
- வாழ்க்கை என்பது பொருள் மற்றும் வீரத்தால் அமைவதன்று. அடுப்பில் சமைக்கும் பாத்திரத்தில் சுவையை இட்டு, அருகில் இருந்து உள்ள அன்போடு பரிமாறுதலில் தன் வாழ்வு நலம் பெறும். ஆனால் இன்று இவ்வாறு நடப்பதில்லை.
- சமைக்கும் பணி பெண்களின் கடமை, அது அவர்க்கே உரியது என்ற தமிழக வழக்கத்தினை இமைப்பொழுதில் (கண்ணிமைக்கும் நேரத்தில்) நீக்க வேண்டும். இன்று ஓரளவு நீங்கிவிட்டது.
குடும்ப விளக்கு – கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1..பாவேந்தரின் பிசிராந்தையார் நாடக நூலுக்குச் _____________ விருது வழங்கப்பட்டுள்ளது.
விடை : சாகித்திய அகாதெமி2. கல்வி இல்லாத பெண்கள் _____________ போன்றவர்கள்.
விடை : களர்நிலம்
3. குடும்ப விளக்கு _____________ ஆகும்.
விடை : மறுமலர்ச்சி இலக்கியம்
4. குடும்ப விளக்கு நூல் _____________ பகுதிகளாப் பிரிக்கப்பட்டுள்ளது.
விடை : ஐந்து
5. _____________ என்பது பொருள் மற்றும் வீர்த்தால் அமைவதன்று.
விடை : வாழ்க்கை
II. குறு வினா
1. மறுமலர்ச்சி இலக்கியங்கள் எதனால் தோன்றியவை?புதுமைக் கருத்துகளை இயம்பும் வகையில் இருபதாம் நூற்றாண்டில் எழுந்தவையே மறுமலர்ச்சி இலக்கியங்கள்.
2. கல்வியறிவு இல்லாத பெண்களை பற்றி பாவேந்தர் கூறுவதென்ன?
கல்வியறிவு இல்லாத பெண்கள் பண்படாத நிலத்தைப் போன்றவர்கள். அந்நிலத்தில் புல் முதலானவைதான் விளையலாம். நல்ல பயிர் விளையாது. அறிவுடைய மக்கள் உருவாகமாட்டார்கள்.
III. சிறு வினா
1. பாரதிதாசனின் படைப்புகள் யாவை?- பாண்டியன் பரிசு
- அழகின் சிரிப்பு
- இருண்ட வீடு
- குடும்ப விளக்கு
- தமிழியக்கம்
- இயற்கையைப் போற்றுதல்
- தமிழுணர்ச்சி ஊட்டுதல்
- பகுத்தறிவு பரப்புதல்
- பொதுவுடைமை பேசுதல்
- விடுதலைக்குத் தூண்டுதல்
- பெண்கல்வி பெறுதல்
- பாரதிதாசனின் இயற்பெயர் கனக.சுப்புரத்தினம்.
- இவர் பாரதியின் கவிதை மீதுகொண்ட ஈர்ப்பினால் பாரதிதாசன் என்று தம்பெயரை மாற்றிக் கொண்டார்.
- பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, தமிழியக்கம் உள்ளிட்டவை இவரது படைப்புகள்.
- இவர் இயற்றிய கவிதைகள் அனைத்தும் ‘பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்’ என்னும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன.
- இவரது பிசிராந்தையார் நாடக நூலுக்குச் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டுள்ளது.
- பாரதிதாசன் இயற்றிய நூல்களுள் ஒன்று குடும்ப விளக்கு
- குடும்ப உறவுகள் அன்பு என்னும் நூலால் பிணைந்துள்ளதை உணர்த்துகிறது;
- கற்ற பெண்ணின் குடும்பமே பல்கலைக்கழகமாக மிளிரும் என்பதைக்
- காட்டுகிறது
- குடும்பம் தொடங்கி உலகினைப் பேணுதல்வரை பெண்ணுக்குக் கல்வி இன்றியமையாதது என கூறும் நூல்
- இந்நூல் ஐந்து பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.
******************THE END OF 5.2*******************
5.3. சிறுபஞ்சமூலம்
I. சொல்லும் பொருளும்:
- மூவாது – முதுமை அடையாமல்
- நாறுவ – முளைப்ப
- தாவா – கெடாதிருத்தல்
II. இலக்கணக் குறிப்பு
- அறிவார் – வினையாலணையும் பெயர்
- வல்லார்– வினையாலணையும் பெயர்
- விதையாமை – எதிர்மறைத் தொழிற்பெயர்
- உரையாமை – எதிர்மறைத் தொழிற்பெயர்
- தாவா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
III. பகுபத உறுப்பிலக்கணம்
1. உரையாமை = உரை + ய் + ஆ + மைஉரை – பகுதி
ய் – சந்தி (உடம்படுமெய்)
ஆ – எதிர்மறை இடைநிலை
மை – தொழிற்பெயர் விகுதி
2. காய்க்கும் = காய் + க் + க் + உம்
காய் – பகுதி
க் – சந்தி
க் – எதிர்கால இடைநிலை
உம் – பெயரெச்ச விகுதி
IV. பலவுள் தெரிக.
பூவாது காய்க்கும், மலர்க்கை – அடிக்கோடிட்ட சொற்களுக்குரிய இலக்கணம் யாது?- பெயரெச்சம், உவமைத்தொகை
- எதிர்மறைப் பெயரெச்சம், உருவகம்
- வினையெச்சம், உவமை
- எதிர்மறை வினையெச்சம், உவமைத்தொகை
V. குறு வினா
மூவாது மூத்தவர், நூல் வல்லார் – இத்தொடர் உணர்த்தும் பொருளைக் குறிப்பிடுகபூக்காமலே சில மரங்கள் காய்ப்பது போல் நன்மை, தீமைகளை உணர்ந்த இளையோர் மூத்தவரோடு வைத்து நினைக்கத தக்கவர்.
VI. சிறு வினா
விதைக்காமலே முளைக்கும் விதைகள் – இத்தொடரின் வழிச் சிறுபஞ்சமூலம் தெரிவிக்கும் கருத்துக்களை விளக்குக.- பூக்காமலே சில மரங்கள் காய்ப்பது போல் நன்மை, தீமைகளை உணர்ந்த இளையோர் மூத்தவரோடு வைத்து நினைக்கத தக்கவர்.
- பாத்தி அமைத்து விதை விதைக்காமலேமுளைக்கும் விதைகளைப் போல அறிவுநுட்பம் மிகுந்தவர் பிறர் உணர்த்தாமல் எதையும் தாமே உணர்ந்துகொள்வர்.
சிறுபஞ்சமூலம் – கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. மனித வாழ்வைச் செழுமையாக்குபவை ______________விடை : அறப்பண்புகளே.
2. ______________ சில நேரங்களில் தொடர்பு இருப்பதில்லை.
விடை : வயதுக்கும், அறிவுக்கும்
3. ______________ வயது ஒரு தடையில்லை.
விடை : சாதனைக்கு
4. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ______________.
விடை : சிறுபஞ்சமூலம்.
5. ஐந்து சிறிய வேர்களால் ஆன மருந்து ______________ போக்குகின்றது.
விடை : உடலின் நோயைப்
II. குறு வினா
1. பதினெண் கீழ்க்கணக்கு எனத் தொகுக்கப்பட்டுள்ளவை எவை?தமிழில் சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து நீதிநூல்கள் தோன்றின. அவையே பதினெண் கீழ்க்கணக்கு எனத் தொகுக்கப்பட்டுள்ளன.
2. சிறுபஞ்சமூலம் என்பதற்கு பொருள் யாது?
சிறுபஞ்சமூலம் என்பதற்கு ஐந்து சிறிய வேர்கள் என்பது பொருள்.
3. ஐந்து சிறிய வேர்கள் எவை?
- கண்டங்கத்திரி
- சிறுவழுதுணை
- சிறுமல்லி
- பெருமல்லி
- நெருஞ்சி
III. சிறு வினா
1. சிறுபஞ்ச மூலம் பற்றி குறிப்பு வரைக- பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று சிறுபஞ்சமூலம்.
- சிறுபஞ்சமூலம் என்பதற்கு கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்து சிறிய வேர்கள் என்பது பொருள்.
- ஐந்து சிறிய வேர்களால் ஆன மருந்து உடலின் நோயைப் போக்குவது போல சிறுபஞ்சமூலப் பாடல்களில் உள்ள ஐந்தைந்து கருத்துகள் மக்களின் அறியாமையைப் போக்கி நல்வழிப்படுத்துவனவாய் அமைந்துள்ளன.
- சிறுபஞ்சமூலப் பாடல்களில் உள்ள ஐந்தைந்து கருத்துகள் மக்களின் அறியாமையைப் போக்கி நல்வழிப்படுத்துவனவாய் அமைந்துள்ளன.
- இப்பாடல்கள் நன்மை தருவன, தீமை தருவன , நகைப்புக்கு உரியன என்னும் வகையில் வாழ்வியல் உண்மைகளை எடுத்துக்காட்டுகின்றன.
- சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியர் காரியாசான்
- இவர் மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர்.
- காரி என்பது இயற்பெயர். ஆசான் என்பது தொழிலின் அடிப்படையில் அமைந்த பெயர்.
- மாக்காரியாசான் என்று பாயிரச் செய்யுள் இவரைச் சிறப்பிக்கிறது.
- 10 வயதிற்குள்ளாகவே சொற்பொழிவு நிகழ்த்தவும் பாடவும் ஆற்றல் பெற்றவர் வள்ளலார்.
- 11ஆவது வயதிலேயே அரசவையில் கவிதை எழுதி ‘பாரதி’ என்னும் பட்டம் பெற்றவர் பாரதியார்.
- 15ஆவது வயதிலேயே பிரெஞ்சு இலக்கியக் கழகத்துக்குத் தமது கவிதைகளை எழுதியனுப்பியவர் விக்டர் ஹியூகோ.
- 16ஆவது வயதிலேயே தமது தந்தையின் போர்ப் படையில் தளபதியானவ ர் மாவீரன் அலெக்சாண்டர்.
- 17ஆவது வயதிலேயே பைசா நகரச் சாய்ந்த கோபுரத்தின் விளக்கு ஊசலாடுவது குறித்து ஆராய்ந்தவர் அறிவியலாளர் கலீலியோ
****************THE END OF 5.3********************
5.4. வீட்டிற்கோர் புத்தகசாலை
I. குறு வினா
1. நீங்கள் விரும்பி படித்த நூல்கள் யாவை?- திருக்குறள்
- மணிமேகலை
- தமிழ்விடு தூது
- புறநானூறு
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு.
எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.
II. நெடு வினா
நூலகம், நூல்கள் குறித்து அண்ணாவின் வானொலி உரையில் வெளிப்படுகின்ற கருத்துக்ள யாவை?முன்னுரை:-
- வீட்டிற்கோர் புத்தகச் சாலை வேண்டும் என்ற கருத்தை நம் ஒவ்வொருவரின் மனத்திலும் விதைத்தவர் பேரறிஞர் அண்ணா நூலகம், நூல்கள் குறித்து அண்ணாவின் வானொலி வெளிப்படுகின்ற கருத்துக்களைக் காண்போம்.
- வீடுகளில் மேஜை, நாற்காலி உள்ளிட்ட பல பொருட்களும், சிறு கடை அளவுக்கு உடைகளும், சிறு வைத்தியசாலை அளவுக்கு மருந்துகள் இருக்கும். ஆனால் புத்தகசாலை மட்டும் இருக்காது.
- வாழ்க்கையில் அடிப்படைத் தேவைக்கு அடுத்த இடம் புத்தகசாலைக்குத் தரப்பட வேண்டும். மக்கள் மனத்திேல உலக அறிவு புக வழிவகை செய்ய வேண்டும்.
- அவர்கள் உலகம் மற்றும் நாட்டை அறி ஏடுகள் வேண்டும். அடிப்படை உண்மைகளையாவது அறிவிக்கும் நூல்கள் சிலவாவது வேண்டும்.
- கொஞ்சம் வசதியுள்ள வீட்டார் விஷேசங்களுக்குச் செல்லும்போது புத்தகங்கள் வாங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால் சிறு புத்தகச் சாலையை எளிதில் அமைக்கலாம்.
- பூகோளம், சரித்திரம் தொடர்பான ஏடுகள் இருக்க வேண்டும்.
- நமக்கு ஒழுக்கத்தையும், வாழ்வுக்கான வழிகளையும் காட்ட, வீட்டிற்கோர் திருக்குறள் கட்டாயம் இருக்க வேண்டும்.
- சங்க இலக்கிய சாராம்சத்தைச் சாதாண மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் உள்ள ஏடுகள் இருக்க வேண்டும்.
- விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைப் பற்றிய முக்கியமான தகவல்களைத் தரும் நூல்கள் இருக்க வேண்டும்
- விடுதலைக்கு உழைத்தோர், மக்கள் மனமாசு துடைத்தோட, தொலை தேசங்களைக் கண்டவர்கள், வீரர்கள் விவேகிகள் ஆகியோர் வாழக்கைக்குறிப்பு ஏடுகள் இருக்க வேண்டும்.
- வீட்டிற்கோர் புத்தகசாலை
வீட்டிற்கோர் புத்தகசாலை – கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. உலகமெங்கும் பயணம் செல்லும் ________________ நூலகம் தருகிறது.விடை : பட்டறிவை
2. இசையைப் போன்றே இதயத்தைப் பண்படுத்துவன ________________.
விடை : நூல்கள்
3. நடுவண் அரசு 2009 ஆம் ஆண்டு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட ________________ வெளியிட்டது.
விடை : ஐந்து ரூபாய் நாணயத்தை
4. 2010ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு ________________ உருவாக்கியது.
விடை : அண்ணா நூற்றாண்டு நூலகத்தை
5. எதையும் தாங்கும் ________________ வேண்டும்.
விடை : இதயம்
6. சென்னை மாகாணத்தைத் ________________ என மாற்றியவர் பேரறிஞர் அண்ணா
விடை : ‘தமிழ்நாடு’
7. ________________ உருவாக்கியவர் பேரறிஞர் அண்ணா
விடை : இருமொழிச் சட்டத்தை
II. குறு வினா
1. தலைசிறந்த நண்பன்” என்று ஆபிரகாம் லிங்கன் யாரைக் கூறுகிறார்?“நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கிவந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்” என்பார் ஆபிரகாம் லிங்கன்.
2. மனிதனை விலங்கிடமிருந்து வேறுபடுத்துவது எவை?
மனிதனை விலங்கிடமிருந்து வேறுபடுத்துவது சிரிப்பு, சிந்தனை
3. சிந்தனையைத் தூண்டுவது எவை?
சிந்தனையைத் தூண்டுவது கற்றல், நூல்கள்
4. எவற்றை தேடிப் பெற வேண்டும்?
நல்ல நண்பனைப் போன்ற நூலையும், நல்ல நூலைப் போன்ற நண்பனையும் தேடிப் பெறவேண்டும்.
5. இளைஞர்களுக்குப் தேவையானவை எவை?
இளைஞர்களுக்குப் பகுத்தறிவும் சுயமரியாதையும் தேவை
II. குறு வினா
அண்ணாவின் சிறப்பியல்களை கூறு- தமிழிலும் ஆங்கிலத்திலும் மிகச்சிறந்த பேச்சாளராக விளங்கியவர்.
- சிறந்த எழுத்தாளர்
- அண்ணாவைத் ‘தென்னகத்துப் பெர்னாட்ஷா‘ என்று அழைக்கப்ட்டார்.
- இவர் சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் முதல் இன்ப ஒளி வரை பல படைப்புகளைத் தந்தவர்.
- தம் திராவிடச் சீர்திருத்தக் கருத்துகளை நாடகங்கள், திரைப்படங்கள் மூலமாக முதன்முதலில் பரப்பியவர்
- 1935இல் சென்னை, பெத்தநாயக்கன் பேட்டை, கோவிந்தப்ப நாயக்கன் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக ஓராண்டு பணியாற்றினார்.
- ஹோம்ரூல், ஹோம்லேண்ட், நம்நாடு, திராவிடநாடு, மாலைமணி, காஞ்சி போன்ற இதழ்களில் ஆசிரியராகவும் குடியரசு, விடுதலை ஆகிய இதழ்களில் துணையாசிரியராகவும் இருந்தார்.
- முதலமைச்சராகப் பொறுப்பை ஏற்றதும் இருமொழிச் சட்டத்தை உருவாக்கினார்.
- சென்னை மாகாணத்தைத் ‘தமிழ்நாடு’ என்று மாற்றித் தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார்.
II. நெடு வினா
புகழுக்குரிய நூலகங்கள் சிலவற்றை கூறுக.தஞ்சை சரசுவதி மகால் நூலகம்:-
- ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் என்ற புகழுக்குரியது தஞ்சை சரசுவதி மகால் நூலகம்.
- இந்திய மொழிகள் அனைத்திலும் உள்ள ஓலைச்சுவடிகள் இங்குப் பாதுகாக்கப்படுகின்றன.
- உலகளவில் தமிழ் நூல்கள் அதிகமுள்ள நூலகம் கன்னிமரா நூலகமே
- இது சென்னை எழும்பூரில் அமைந்துள்ளது.
- திருவனந்தபுரம் நடுவண் நூலகம்:-
- இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம் என்ற பெருமைக்கு உரியது.
- காெல்கத்தாவில் 1836ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, 1953இல் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட தேசிய நூலகமே இந்தியாவின் மிகப் பெரிய நூலகமாகும்.
- இது ஆவணக் காப்பக நூலகமாகவும் திகழ்கிறது.
- உலகின் மிகப் பெரிய நூலகம் என்ற பெருமையைத் தாங்கி நிற்பது அமெரிக்காவிலுள்ள லைப்ரரி ஆப் காங்கிரஸ்
****************THE END OF 5.4******************
5.5. இடைச்சொல் – உரிச்சொல்
VI. பலவுள் தெரிக.
1. மாறுபட்டுள்ள குழுவினைக் கண்டறிக.
- கலைக்கூடம், திரையரங்கம், ஆடுகளம், அருங்காட்சியகம்
- கடி, உறு, கூர், கழி
- வினவினான், செப்பினான், உரைத்தான், பகன்றான்
- இன், கூட, கிறு, அம்பு
விடை : இன், கூட, கிறு, அம்பு
2. கீழ்க்காண்பவற்றுள் உணர்ச்சித் தொடர் எது?
- சிறுபஞ்ச மூலத்தில் உள்ள பாடல்கள் பெரும்பாலும் மகடூஉ முன்னிலையில் அமைந்துள்ளன.
- இந்திய நூலகவியலின் தந்தையென அறியப்படுபவர் யார்?
- என்னண்ணே! நீங்கள் சொல்வதை நம்பவே முடியவில்லை!
- வாழ்க்கையில் அடிப்படைத் தேவைக ளுக்கு அடுத்த இடத்தைப் புத்தகசாலைக்குத் தருக.
விடை : என்னண்ணே! நீங்கள் சொல்வதை நம்பவே முடியவில்லை!
3. சரியான கூற்றினைத் தெரிவு செய்க.
அ) ‘ஆ’ என்பது எதிர்மறை இடைநிலை.
ஆ) வீட்டிற்கோர் புத்தகசாலை என்பது அண்ணாவின் மேடைப்பேச்சு.
இ) வில்லுப்பாட்டு ஓர் இலக்கிய வடிவம்.
- ஆ, இ சரி; அ தவறு
- அ, இ, சரி; ஆ தவறு
- மூன்றும் சரி
- மூன்றும் தவறு
விடை : மூன்றும் சரி
இடைச்சொல் – உரிச்சொல் – கூடுதல் வினாக்கள்
1. இடைச்சொற்கள் பற்றித் தொல்காப்பியர் கூறுவன யாவை?
- இடைச் சொற்கள் , பெயரையும், வினையையும் சார்ந்து இயங்கும் இயல்பை உடையன; தாமாகத் தனித்து இயங்கு இயல்பை உடையன அல்ல என்கிறார் தொல்காப்பியர்.
2. இடைச்சொற்கள் சிலவற்றை கூறுக.
இன், கு, உடைய, உம், ஐ, விட, கள், ஆனால், தான், போல, உடன்
3. தற்காலத் தமிழில் மிகுதியாகப் பயன்படும் இடைச்சொற்கள் யாவை?
உம், ஓ, ஏ, தான், மட்டும், ஆவது, கூட, ஆ, ஆம்
4. எவற்றை சார்ந்து வந்து உரிச்சொற்கள் பொருள் உணர்த்துகின்றன?
உரிச்சொற்கள் பெயர்களையும் வினைகளையும் சார்ந்து வந்து பொருள் உணர்த்துகின்றன.
5. உரிச்சொற்கள் நன்னூலார் கூறுவன யாவை?
உரிச்சொற்கள் பெயர்களையும் வினைகளையும் சார்ந்து வந்து பொருள் உணர்த்துகின்றன. இசை, குறிப்பு, பண்பு என்னும் பொருள்களுக்கு உரியதா ய் வரும். உரிச்சொற்கள் ஒவ்வொன்றும் தனித்த பொருள் உடையவை.
6. இடைச்சொற்களின் வகைகளை கூறுக
- வேற்றுமை உருபுகள் ஐ, ஆல், கு, இன், அது, கண்
- பன்மை விகுதிகள் கள், மார்
- திணை, பால் விகுதிகள் ஏன், ஓம், ஆய், ஈர்(கள்), ஆன், ஆள், ஆர், ஆர்கள், அது, அ
- கால இடைநிலைகள் கிறு, கின்று,…
- பெயரெச்ச, வினையெச்ச விகுதிகள் அ, உ, இ, மல்,…
- எதிர்மறை இடைநிலைகள் ஆ, அல், இல்
- தொழிற்பெயர் விகுதிகள் தல், அம், மை
- வியங்கோள் விகுதிகள் க, இய
- சாரியைகள் அத்து, அற்று, அம்,…
- உவம உருபுகள் போல, விட, கா ட்டிலும், மாதிரி
- இணைப்பிடைச் சொற்கள் உம், அல்லது, இல்லையென்றால் , ஆனால் , ஓ, ஆகவே, ஆயினும், எனினும்,…
- தத்தம் பொருள் உணர்த்தும் இடைச் சொற்கள் உம், ஓ, ஏ, தான், மட்டும், ஆவது, கூட, ஆ, ஆம்
- சொல்லுருபுகள் மூலம், கொண்டு, இருந்து, பற்றி, வரை
- வினா உருபுகள் ஆ, ஓ
கற்பவை கற்றபின்…
I. பத்திகளில் இடம்பெற்றுள்ள இடைச்சொற்களைக் கண்டறிந்து எழுதுக.
அ) பெண்ணடிமை போக வேண்டும்; பெண், கல்வி பெற வேண்டும். பெண்கள் படித்தால் தான் தம் சொந்தக் காலில் நிற்கலாம். பெண், கல்வி கற்றால் வீடும் நாடும் முன்னேறும். சமுதாயத்தின் சரிபாதியான பெண்களுக்கும் எல்லா உரிமைகளும் உண்டு.
ஆ) நமது முன் சந்ததியார்களுக்கு இருந்ததை விட, அதிகமான வசதிகள் நமக்கு உள்ளன. அவர்களின் காலம், அடவியில் ஆற்றோரத்தில் பர்ணசாலைக்குப் பக்கத்தில் ஆலமரத்தடியில் சிறுவர்கள் அமர்ந்திருக்க, குரு காலைக் கடன்களை முடித்துக் கொண்டு வந்து, பாடங்களைச் சொல்லித் தரும் முறை இருந்த காலம், ஏடும் எழுத்தாணியும் இருந்த காலம். இப்போதுள்ளது உலகை நமது வீட்டுக்கு அழைத்து வந்து காட்டக்கூடிய காலம். பாமர மக்கள் பாராளும் காலம். மனவளத்தை அதிகப்படுத்தும் வழிகள் முன்பு இருந்ததைவிட அதிகம் உள்ள காலம்.
இடைச்சொற்கள்
- பழத்தான் தான் – (தான்) இருந்ததை விட – (விட)
- வீடும் நாடும் – (உம்) வசதிகள் – (கள்)
- சமுதாயத்தின் – (இன்) அவர்களின் – (இன்)
- பெண்களுக்கும் – (உம்) பாடசாலைக்கு – (கு)
- உரிமைகளும் – (உம்) வீட்டுக்கு – (கு)
- ஆடவியில், ஆற்றோரத்தில் – (இல்)
II. உம், ஓ, ஏ, தான், மட்டும், ஆவது, கூட, ஆ, ஆம், ஆகிய இடைச்சொற்களைப் பயன்படுத்திச் சொற்றொடர்களை உருவாக்குக.
- உம் – தலைவர்களும் போற்றும் தலைவர் காமராஜர்
- ஓ – அவனோ இவனோ இதைச் செய்தது
- ஏ – அவன் படித்தே முன்னேறினான்
- தான் – அவன் தான் பார்த்தான்
- மட்டும் – உங்களில் ஒருவர் மட்டும் முன்னால் வாருங்கள்
- ஆவது – என்றைக்காவது நூலகம் போயிருக்கிறாயா?
- கூட – ஒருவர் கூட சாட்சி சொல்லவில்லை
- ஆ – அவன் படித்தானா?
- ஆம் – தலைமை ஆசிரியர் உள்ளே வரலாம் என்றார்
- ஆகிய – தேனாகிய அமுது மொழி தமிழ்
III. பொருத்தமான இடைச்சொற்களைப் பயன்படுத்துக.
மணற்கேணியைப்போல் விளங்கும் நூல்தான் உறுதுணை என இருக்கிறது.
பெண்களைப் படிக்க வைக்காத காலத்திலும் பெண் இனத்திற்கும் பெருமை சேர்க்கும்படிக்கு நம் முத்துலட்சுமி அம்மையார் முதல் பெண் மருத்துவராக வந்தார்கள் .
மக்களின் மனங்களில் உலக அறிவு புக வழி செய்ய வேண்டும்.
IV. இணைத்து எழுதிப் பாருங்கள்.
அவன் தான்
உம்
ஏ
ஆ
மனிதன்
இயற்கை அழகு
அவன் தான் மனிதன்
அவனும் மனிதன்
அவனே மனிதன்
அவனா மனிதன்
இயற்கை தான் அழகு
இயற்கையும் அழகு
இயற்கையே அழகு
இயற்கையா அழகு
உனக்கு மட்டும்
கூட
ஆவது
தெரியுமா?
தெரியும்
உனக்கு மட்டும் தெரியுமா?
உனக்கு கூட தெரியுமா?
உனக்காவது தெரியுமா?
உனக்கு மட்டும் தெரியும்
உனக்குக் கூட தெரியும்
உனக்காவது தெரியும்
வீடு. நாடு உம்
ஓ
நமேத
காற்று, வெளிச்சம் தேவை
அன்பு, அமைதி வேண்டும்
வான்மதி, பானு வாருங்கள்
வீடும், நாடும் நமதே
வீடோ, நாடோ நமதே
காற்றும், வெளிச்சமும் தேவை
காற்றொ, வெளிச்சமோ தேவை
அன்பும், அமைதியும் வேண்டும்
அன்போ, அமைதியோ வேண்டம்
வான்மதியும், பானுவும் வாருங்கள்
வான்மதியோ, பானுவோ வாருங்கள்
III. பொருத்தமான உரிச்சொற்களை எழுதுக.
- மாபெரும் பொதுக் கூட்டம் (கடி, மா)
- கடி விடுதும் (உறு, கடி)
- வாள் நுதல் (வாள் , தவ )
- சால சிறந்தது ( சால , மழ)
- கடி மனை ( கடி, தட )
சிந்தனை வினா
1) “தான்” என்னும் இடைச்சொல்லை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?
- ’தான்’ என்னும் இடைச்சொல்லும் அழுத்தப் பொருளில் பயன்படுத்தலாம்
- எந்தச் சொல்லுடன் வருகிறதோ, அ தனை முதன்மைபப்படுத்தும் வகையில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தலாம்.
- சான்று : நிர்மலாதான் பாடினாள்
2. அவர்களுக்குப் பரிசு தருவேன் – இத்தொட ரில் “ஆ” என்னும் இடைச்சொல்லைச் சேர்த்து வினாக்களை அமைக்க.
- அவர்களுக்கா பரிசு தருவேன்?
- அவர்களுக்குப் பரிசு தருவேனா?
3) செய்யுளில் உரிச்சொற்கள் எத்தகைய பொருள்களில் இடம் பெறுகின்றன?
- உரிச்சொற்கள் செய்யுளுக்கே உரியன என்றும் அவை,
- ஒரு சொல் பல பொருளுக்கு உரியது
- பல சொல் ஒரு பொருளுக்கு உரிது என இடம் பெறும்
4) தற்காலத் தமிழ்ப் பயன்பாட்டில் காண ப்படுகின்ற உரிச்சொற்களை எழுதுக.
- மா, உறு, தவ, நனி, கடி, கூர், கழி முதலியவை தற்காலத் தமிழ்ப் பயன்பாட்டில் காணப்படுகினற் உரிச்சொற்கள்
- மேலும் மழ, குழு, விழுமம், செழுமை என்பனவும் பயன்பாட்டில் உள்ளன.
5) ’ஆ’ என்னும் இடைச்சொல் எதிர்மறைப் பொருளில் எப்படி வரும் என்பதை எழுதுக
- “ஆ” என்னும் இடைச்சொல் எதிர்மறைப் பொருளில் “ஐயம்” தோன்ற வரும்.
- சான்று : அவனா பேசினான்
6. இடைச் சொற்களைப் பயன்படுத்திக் கீழ்க் காணும் சொற்றொடர்களை மாற்றியமைத்துக் காண்க.
அ) வீட்டுக்குச் செல்லத்தான் இவ்வளவு பீடிகையா?
வீட்டிற்குச் செல்வதற்குத்தான் இவ்வளவு பீடிகையாம்.
ஆ) இந்தச் சூழ்நிலை மாறியாக வேண்டும்.
இந்தச் சூழ்நிலையை மாற்றிதான் ஆகவேண்டும்.
இ) வானூர்தியைச் செலுத்துதல், உலகையும் கடலையும் அளத்தல் போன்ற எந்தச் செயலும் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானவை.
வானூர்தியைச் செலுத்துதல், உலகையும் கடலையும் அளத்தல் ஆகிய செயல்கள் கூட ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவாம்.
ஈ) சமைப்பது தாழ்வென எண்ணலாமா?
சமைப்பது மட்டும் தாழ்வென எண்ணலாமா?
உ) பூக்காமலே சில மரங்களில் காய்ப்பதுண்டு.
பூக்காமலும் சில மரங்கள் காய்க்கும்.
ஊ) வாளால் வெட்டினான்.
வாளால் தான் வெட்டினான்.
மொழியை ஆள்வோம்
I. மொழிபெயர்க்க.
Akbar said, “How many crows are there in this city?”
Without even a moment’s thought, Birbal replied “There are fifty thousand five hundred and eighty nine crows, my lord”.
“How can you be so sure?” asked Akbar.
Birbal said, “Make your men count, My lord. If you find more crows it means some have come to visit their relatives here. If you find less number of crows it means some have gone to visit their relatives elsewhere”.
Akbar was pleased very much by Birbal’s wit
பீர்பாலின் நகைச்சவையுணர்வு
இந்த நகரத்தில் எத்தனை காகங்கள் இருக்கின்றன? என்று அக்பர் கேட்டார். பீர்பால் ஒரு கணம் கூட யோசிக்காமல் ஐம்பதாயிரம் ஐநூற்று என்பத்தொன்பது காகங்கள் இருக்கின்றன அரசே என்று பதிலளித்தார். எப்படி உன்னால் உறுதியாகச் சொல்ல முடிகிறது என்றார் அக்பர்.
உங்களது ஆட்களை வைத்து எண்ணுங்கள் அரேச எனறார். இதைவிட அதிகமான காகங்கள் இருந்தால் சில இங்குள்ள தங்களுடைய உறவினர்களைப் பார்க்க வந்திருக்கும். நான் கூறியதை விடக் குறைவாக இருந்தால். வேறு இடங்களில் உள்ள தங்கள் உறவினர்களைக் காணச் சென்றிருக்கும் என்று அர்த்தாம் என்றார் பீர்பால். பீர்பாலுடைய நகைச்சுவையும், நகைச்சுவை உணர்வையும் எண்ணி அக்பர், திருப்தியும், மன மகிழ்வும் அடைந்தார்.
II. பிழை நீக்கி எழுதுக.
1. மதீனா சிறந்த இசை வல்லுநர் வேண்டும்.
மதீனா சிறந்த இசை வல்லுநராக வேண்டும்
2. நல்ல தமிழுக்கு எழுதுவோம்
நல்ல தமிழில் எழுதுவோம்
3. பவளவிழிதான் பரிசு உரியவள் .
பவளவிழிதான் பரிசுக்கு உரியவள்
4. துன்பத்தால் பொறுத்துக்கொள்பவனே வெற்றி பெறுவான்.
துன்பத்தைப் பொறுத்துக்கொள்பவனே வெற்றி பெறுவான்
5. குழலியும் பாடத் தெரியும்.
குழலிக்கும் பாடத் தெரியும்
III. இடைச் சொற்களைக் கொண்டு தொடர்களை இணைக்க.
1. பெரும் மழை பெய்தது. வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
பெரும் மழை பெய்ததால் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
2. அலுவலர் வந்தார்; அனைவரும் பதற்றம் அடைந்தனர்.
அலுவலர் வந்ததும் அனைவரும் பதற்றம் அடைந்தனர்
3. சுடர்க்கொடி பாடினாள்; மாலன் பாடினான்.
சுடர்க்கொடி பாடியதால் மாலனும் பாடினான்
4. பழனிமலை பெரியது; இமயமலை மிகப் பெரியது.
பழனிமலை பெரியது; இமயமலையோ மிகப் பெரியது
5. கவலையற்ற எதிர்காலத்திறகுக் கல்வியே நிகழ் காலம்.
கவலையற்ற எதிர்காலத்திற்கு கல்வியே நிகழ்காலம்
VIII. விளம்பரத்தைச் செய்தித்தாள் செய்தியாக மாற்றி அமைக்க.
தஞ்சையில் புத்தகத் திருவிழா
செப்டம்பர் 19 முதல் 28 வரை தஞ்சாவூர் சரசுவதி மஹால் நூலகத்தில் அறிவுக் களஞ்சியமான புத்தகங்களின் சங்கமமாம் புத்தகத் திருவிழா நடைபெறுகின்றது. முதல் நாள் காலை 9 மணிக்குத் தமிழகக் கல்வி அமைச்சர் புத்தகத் திருவிழாவினைத் தொடங்கி வைக்கிறார். நாள்தோறும் கால 8 மணி முதல் 6 மணி வரை அறிவுப் புதையலை அள்ளிச் செல்லலாம். சிந்தைக்குப் பெருவிருந்தாய் மாலை 6 மணிக்குப் புதிய நூல் வெளியீடும். தலை சிறந்தப் பேச்சாளர்களின் பேச்சும் இடம்பெறும்
IX. நிகழ்வினைப் படித்து, வினாக்களுக்கு விடையளிக்க.
அண்ணாவின் வாழ்க்கையில்…
- தமிழக முதலமைச்சராக அண்ணா பொறுப்பேற்ற காலகட்டத்தில், அரிசி வெளிமாநிலங்களுக்குச் செல்லக் கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தது. ஒரு நாள் அண்ணா விருத்தாசலம் கூட்டத்தை முடித்து விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார்.
- வழியில் சோதனைச் சாவடியில் அவரது வண்டி நிறுத்தப்பட்டது. அங்கிருந்த வருவாய் அலுவலர், முதலமைச்சரின் மகிழுந்து என்று அறியாமலே திறந்துகாட்டச் செய்தார்.
- மகிழுந்தின் பின்பக்கம் முழுவதும் மாலைகள், கைத்தறி ஆடைகள், வாழ்த்துமடல்கள் இருந்தன. அவற்றைப் பார்த்த பிறகுதான் அந்த அலுவலருக்கு வந்திருப்பது யார் என்பது புரிந்தது. உடனே அவர் அண்ணாவின் அருகில் சென்று,” தெரியாமல் நடந்து விட்டது பொறுத்துக் கொள்ளுங்கள் ” என்றார். ஆனால், அண்ணா அவர் உதவியாளரிடம், “இந்த அலுவலரின் பெயரைக் குறித்துக் கொள்ளுங்கள் “என்றார்.
- அந்த அலுவலர் தனக்கு ஏதோ நடந்து விடப்போகிறது என அச்சப்பட்டு அழாத குறையாக கெஞ்சினார். உடனே, அண்ணா, “ நாங்கள் போடும் சட்டங்களைச் சரியான முறையில் நிறைவேற்றும் பொறுப்பு உங்களைப்போன்ற அலுவலரின் கையில்தான் இருக்கிறது. இன்று நேரில் உங்கள் செயலைப் பார்த்தேன். உங்களைப் போன்றவர்கள்தாம் உயர் பதவிக்கு வரவேண்டும் . அதற்காகத்தான் உங்கள் பெயரைக் கேட்டேன்” என்றார்.
1. மகிழுந்தில் வந்திருப்பது அண்ணா என்பதை வருவாய் அலுவலர் எப்படி அறிந்தார்?
மகிழுந்தின் பின்பக்கம் முழுவதும் மாலைகள், கைத்தறி ஆடைகள், வாழ்த்து மடல்கள் இருந்தன. அவற்றைப் பார்த்த பிறகுதான் வந்திருப்பது அண்ணா என அந்த அலுவலர் தெரிந்து கொண்டார்
2. அண்ணாவிடம் ஏன் வருவாய் அலுவலர் பொறுத்துக் கொள்ளச் சொன்னார்?
முதலமைச்சர் என்று தெரியாமல் சோதனைச்சாவடியில் மகிழுந்தைத் திறந்து காட்டச் சொன்னதால், என்ன நடக்குமோ என்று அச்சப்பட்டு, தெரியாமல் நடந்து விட்டது பொறுத்துக் கொள்ளுங்கள் என்றார்
3. அண்ணா, வருவாய் அலுவலரின் செயலை எவ்வாறு பாராட்டினார்?
“ சட்டங்களைச் சரியான முறையில் நிறைவேற்றும் பொறுப்பு உங்களைப் போன்றவர்கள் கையில் தான் இருக்கிறது. உங்களைப் போன்றவர்கள்தாம் உயர் பதவிக்கு வரவேண்டும் என்று பாராட்டினார்.
4. பத்தியில் இடம்பெ றும் இடைச் சொற்களைக் கொண்டு இரு புதிய சொற்றொடர்களை உருவாக்குக.
தான் – தான் முன்னேற்ற கன்னிமாரோ நூலகேம காரணம் என்றார் பேரறிஞர் அண்ணா
இன் – ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை
5. நிகழ்வுக்குப் பொருத்தமான தலைப்பு இடுக.
நேர்மை (அல்லது) துணிவு
மொழியோடு விளையாடு
I. சொற்களைப் பயன்படுத்தித் தொடர்களை உருவாக்குக
- மாணவர்கள் ஆசிரியர் பாடவேளை கரும்பலகை
- புத்தகம் எழுதுகோல் அழிப்பான் வழிபாட்டுக் கூட்டம்
- அறை கல்லூரி உயர்நிலை சீருடை
- மடிக்கணினி
- வழிபாட்டுக் கூட்டத்தில் மாணவர்கள் சீருடையுடன் நின்றனர்.
- மாணவர்கள் உயர்நிலை அடைய வேண்டும் என்றார் ஆசிரியர்
- “மாணவர்களே! எழுதுகோலும், அழிப்பானும் கொண்டு வாருங்கள்” என்றார் ஆசிரியர்,
- பாடவேளையின் பொழுது ஆசிரியர் கரும்பலகையில் எழுதினார்
- மாணவர்கள் பாடவேளைக்குரிய புத்தகங்களைக் கொண்டு வரவில்லை
- வழிபாட்டுக் கூட்டத்தில் மடிக்கணினி வழஙகப்பட்டது
II. அகராதியில் காண்க.
1. ஒட்பம்
அறிவு, அழகு, நன்மை, மேன்மை
2. கான்
காடு, மனம், வாய்க்கால், இசை, மணம், பூ, வீட்டறை, நெசவு
3. நசை
ஆசை, குற்றம், எள்ளல், ஈரம், அன்பு, ஒழுக்கம், பரிகாசம், விருப்பம்
4. பொருநர்
படைவீரன், தலைவன், அரசர், நாடகர், புகழ்வோர்
III. படங்களை இணைத்தால் கிடைக்கும் நூல்களின் பெயர்களைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
(ஒரு கிராமத்து நதி, கிழவனும் கடலும், கருப்பு மலர்கள், சாக்ரட்டீஸின் சிவப்பு நூலகம், தண்ணீர்தண்ணீர்)
1. நா. காமராசனின் கவிதை நூல்
கருப்பு மலர்கள்
2. திரைப்படமாக வெளிவந்த கோமல் சுவாமி நாதனின் நாடக நூல்.
தண்ணீர்தண்ணீர்
3. நோபல் பரிசு பெற்ற எர்ன ஸ்ட் ஹெமிங்வேவின் குறுநாவல்
கிழவனும் கடலும்
4. சாகித்திய அகாதெமி பரிசுபெற்ற சிற்பியின் கவிதை நூல்
ஒரு கிராமத்து நதி
5. எஸ். ரா மகிருஷ்ணனின் சிறார் நாவல்.
சாக்ரட்டீஸின் சிவப்பு நூலகம்
சாக்ரட்டீஸின் சிவப்பு நூலகம்
கலைச்சொல் அறிவோம்
- சமூக சீர்திருத்தவாதி – Social Reformer
- தன்னார்வலர் – Volunteer
- களர்நிலம் – Saline Soil
- சொற்றொடர் – Sentence
கருத்துரையிடுக