10th Std Tamil Guide 
இயல் 1: அமுதஊற்று

10th Standard Tamil Guide, 10th Tamil Unit 1 Book back Question and Answers, 10th Tamil Unit 1 Book Back and additional question and answers, TN Students Guide.

  • இயல் 1.1அன்னை மொழியே
  • இயல் 1.2 தமிழ்ச்சொல் வளம்
  • இயல் 1.3 இரட்டுற மொழிதல்
  • இயல் 1.4 உரைநடையின் அணிநலன்கள்
  • இயல் 1.5 எழுத்து, சொல்


 1.1. அன்னை மொழியே

அழகார்ந்த செந்தமிழே!

*அன்னை மொழியே அழகார்ந்த செந்தமிழே! 
முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே! 
கன்ணிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில் 
மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!

தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே! 
இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே! 
மன்னுஞ் சிலம்பே மணிமே கலைவடிவே 
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!*

செப்பரிய நின்பெருமை

செந்தமிழே! உள்ளுயிரே செப்பரிய நின்பெருமை 
எந்தமிழ்நா எவ்வாறு எடுத்தே உரைவிரிக்கும்? 
முந்தைத் தனிப்புகழும் முகிழ்த்த இலக்கியமும் 
விந்தை நெடுநிலைப்பும் வேறார் புகழுரையும்

உந்தி உணர்வெழுப்ப உள்ளக் கனல்மூளச் 
செந்தா மரைத்தேனைக் குடித்துச் சிறகார்ந்த 
அந்தும்பி பாடும் அதுபோல யாம்பாடி
முந்துற்றோம் யாண்டும் முழங்கத் தனித்தமிழே!
-கனிச்சாறு
நூல் வெளி

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் கனிச்சாறு (தொகுதி 1) தொகுப்பிலிருந்து இருவேறு தலைப்பில் உள்ள பாடல்கள் (தமிழ்த்தாய் வாழ்த்து, முந்துற்றோம் யாண்டும்) எடுத்தாளப்பட்டுள்ளன. தென்மொழி, தமிழ்ச்சிட்டு இதழ்களின் வாயிலாகத் தமிழுணர்வை உலகெங்கும் பரப்பியவர் துரை. மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்ட பெருஞ்சித்திரனார்.

இவர் உலகியல் நூறு பாவியக்கொத்து, நூறாசிரியம், கனிச்சாறு, எண்சுவை எண்பது, மகபுகுவஞ்சி, பள்ளிப் பறவைகள் முதலிய நூல்களைப் படைத்துள்ளார். இவரின் திருக்குறள் மெய்ப்பொருளுரை, தமிழுக்குக் கருவூலமாய் அமைந்துள்ளது. இவரது நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.

I. பலவுள் தெரிக

“எந்தமிழ்நா” என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்
  1. எந் + தமிழ் + நா
  2. எந்த + தமிழ் + நா
  3. எம் + தமிழ் + நா
  4. எந்தம் + தமிழ் + நா
விடை : எம் + தமிழ் + நா

II. குறு வினா

“மன்னும் சிலம்பே! மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!” – இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள ஐம்பெருங் காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக.
  • சீவகசிந்தாமணி
  • வளையாபதி
  • குண்டலகேசி
இவையாவும் எஞ்சிய ஐம்பெருங்காப்பியங்கள் ஆகும்

III. சிறு வினா

தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?
“அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!
முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!”

  • அன்னை மொழியே! அழகான செந்தமிழே!
  • பழமைக்குப் பழமையாய்த் தோன்றிய நறுங்கனியே!
  • குமரிக்கண்டத்தில் நிலைபெற்று அரசாட்சி செலுத்திய மண்ணுலகப் பேரரசே!
  • பாண்டியனின் மகளே! திருக்குறளின் பெரும் பெருமைக்குரியவளே!
  • பாட்டும், தொகையும் ஆனவளே! பதினெண்கீழ்க்கணக்கே! நிலைத்த சிலப்பதிகாரமே! அழகான மணிமேகலையே!
  • கடல் கொண்ட குமரியில் நிலையாய் நின்று அரசாட்சி செய்த பெருந்தமிழ் அரசே!
  • பொங்கியெழும் நினைவுகளால் தலை பணிந்து தமிழே உன்னை வாழ்த்துகின்றோம்
“முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!”

IV. நெடு வினா

மனோன்மணீயம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப்பேச்சு ஒன்றை உருவாக்குக.
தாயே! தமிழே! வணக்கம்,

தாய் பிள்ளை உறவம்மா, உனக்கும் எனக்கும்.

என்று தமிழ்த்தாயை வணங்கி, இங்கு மனோன்மணீயம் சுந்தரனாரின் பாடலையும், பெருஞ்சித்தரனாரின் பாடலையும் ஒப்பிட்டுக் காண்போம்.

சுந்தரனார்

  • நீர் நிறைந்த கடலை ஆடையாக உடுத்திய பெண்ணாக பூமியையும்,
  • பாரதத்தை முகமாகவும், பிறை போன்ற நெற்றியாகவும்,
  • நெற்றியில் இட்ட பொட்டாக தமிழும்,
  • தமிழின் மணம் எத்திசையும் வீசுமாறு உருவகப்படுத்திப் பாடியுள்ளார் சுந்தரனார்
  • “நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்….”

பெருஞ்சித்திரனார்

  • குமரிக்கண்டத்தில் நின்று நிலைபெற்ற மண்ணுலகம் போற்ற வாழ்ந்த பேரரசியே!
  • பழமைக்கு பழமையானவளே!
  • பாண்டியனின் மகளே! திருக்குறளின் புகழே!
  • பாட்டுத்தொகையே! கீழ்கணக்கே! சிலம்பே! மேகலையே! என்று பெருங்சித்திரனார் தமிழை முடிதாழ வணங்கி வாழ்த்துகிறார்.
  • “அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!”
நிறைவுரை
  • இருவருமே தமிழின் பெருமையைத் தம் பாடல்களில் பூட்டி, காலந்தோறும் பேசும்படியாக அழகுற அமைத்துப் பாடியுள்ளார்.

அன்னை மொழியே – வினாக்கள்

I. பலவுள் தெரிக

1. துரை. மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்டவர்
  1. பெருஞ்சித்திரனார்
  2. பாரதியார்
  3. பாரதிதாசன்
  4. சுரதா
விடை : பெருஞ்சித்திரனார்
2. செந்தமிழ் பிரித்து எழுதுக.
  1. செந் + தமிழ்
  2. செம் + தமிழ்
  3. செ + தமிழ்
  4. செம்மை + தமிழ்
விடை : செம்மை + தமிழ்

II. குறு வினா

1. பெருஞ்சித்திரனார் தமிழ் உணவர்வை உலகம் முழுவதும் பரப்ப காரணமாக இருந்த நூல்கள் யாவை?
  • தென்மொழி
  • தமிழ்ச்சிட்டு
2. பெருஞ்சித்திரனாரின் படைப்புகள் எவை?
  • உலகியல் நூறு
  • பாவியக்கொத்து
  • நூறாசிரியம்
  • எண்சுவை எண்பது
  • மகபுகுவஞ்சி
  • கனிச்சாறு
  • பள்ளிப்பறைவைகள்
3. பதினெண் மேற்கணக்கு நூல்கள் யாவை?
  • எட்டுத்தொகை
  • பத்துப்பாட்டு

III. சிறு வினா

பாவலரேறு பெருஞ்சித்திரனார் குறிப்பு வரைக
  • பாவலரேறு பெருஞ்சித்திரனார் இயற்பெயர் துரை. மாணிக்கம்.
  • இவர்  எழுதிய தென்மொழி, தமிழ்ச்சிட்டு நூல்கள் தமிழ் உணவர்வை உலகம் முழுவதும் பரப்ப காரணமாக இருந்தன.
  • உலகியல் நூறு, பாவியக்கொத்து, நூறாசிரியம், எண்சுவை எண்பது, மகபுகுவஞ்சி, கனிச்சாறு, பள்ளிப்பறைவைகள் என்பன பெருஞ்சித்திரனாரின் படைப்புகள் ஆகும்.
  • இவரின் திருக்குறள் மெய்ப்பொருளுரை தமிழுக்கு கருவூலமாய் அமைந்தது.

பலவுள் தெரிக

1.ஐம்பெருங்காப்பியங்களுள் பொருந்தாததைத் தேர்க.
அ) யசோதர காவியம்
ஆ) சிலப்பதிகாரம்
இ) மணிமேகலை
ஈ) சீவக சிந்தாமணி
Answer:
அ) யசோதர காவியம்

2.உள்ளத்தில் கனல் மூள செந்தாமரைத் தேனைக் குடித்துச் சிறகசைத்துப் பாடியது எது?
அ) தேன்சிட்டு
ஆ) வண்டு
இ) தேனீ
ஈ) வண்ணத்துப்பூச்சி
Answer:
ஆ) வண்டு

3.“அன்னை மொழியே” என்ற கவிதையில் இடம்பெறும் மூவேந்தருள் ஒருவர்
அ) சேரன்
ஆ) சோழன்
இ) பாண்டியன்
ஈ) பல்லவன்
Answer:
இ) பாண்டியன்

4.பொருந்தாதவற்றைக் கண்டறிக.
அ) பாவியக்கொத்து
ஆ) நூறாசிரியம்
இ) தென்தமிழ்
ஈ) பள்ளிப்பறவைகள்
Answer:
இ) தென்தமிழ்

5.பொருந்தாதவற்றைக் கண்டறிக.
அ) தமிழ்ச்சிட்டு
ஆ) பள்ளிப்பறவைகள்
இ) எண்சுவை எண்பது
ஈ) உலகியல் நூறு
Answer:
அ) தமிழ்ச்சிட்டு

6.பொருத்துக.
1. மாண்புகழ் – அ) சிலப்பதிகாரம்
2. மன்னும் – ஆ) திருக்குறள்
3. வடிவு – இ) பத்துப்பாட்டு
4. பாப்பத்தே – ஈ) மணிமேகலை
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.இ 2.ஈ 3.அ 4.ஆ
இ) 1.ஆ 2.இ 3.ஈ. 4.அ
ஈ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

7.‘அன்னை மொழியே’ கவிதை இடம் பெறும் நூல்
அ) நூறாசிரியம்
ஆ) கனிச்சாறு
இ) எண்சுவை எண்பது
ஈ) பாவியக்கொத்து
Answer:
ஆ) கனிச்சாறு

8.“முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே”- என்று பாடியவர்
அ) பெருஞ்சித்திரனார்
ஆ) க.சச்சிதானந்தன்
இ) வாணிதாசன்
ஈ) கண்ண தாசன்
Answer:
அ) பெருஞ்சித்திரனார்

9.“முந்துற்றோம் யாண்டும் முழங்கத் தனித்தமிழே” – என்று பாடியவர்
அ) க.சச்சிதானந்தன்
ஆ) துரை. மாணிக்கம்
இ) வாணிதாசன்
ஈ) முடியரசன்
Answer:
ஆ) துரை. மாணிக்கம்

10.“நற்கணக்கே” என்பதில் சுட்டப்படும் நூல்கள் எத்தனை?
அ) 18
ஆ) 10
இ) 8
ஈ) 5
Answer:
அ) 18

11.“மன்னும் சிலம்பே! மணிமேகலை வடிவே!” எஞ்சியுள்ள பெருங்காப்பியங்கள் எத்தனை?
அ) ஐந்து
ஆ) மூன்று
இ) இரண்டு
ஈ) எட்டு
Answer:
ஆ) மூன்று

12.துரை. மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்டவர் யார்?
அ) பெருஞ்சித்திரனார்
ஆ) பெரியவன்கவிராயர்
இ) தேவநேயப் பாவாணர்
ஈ) தமிழண்ணல்
Answer:
அ) பெருஞ்சித்திரனார்

13.பெருஞ்சித்திரனார் பாடலில் ‘பழமைக்குப் பழமை’ என்னும் பொருள் தரும் சொல்.
அ) முன்னை முகிழ்ந்த
ஆ) முன்னைக்கும் முன்னை
இ) முன்னும் நினைவால்
ஈ) முந்துற்றோம் யாண்டும்
Answer:
ஆ) முன்னைக்கும் முன்னை

14.‘பாப்பத்தே எண் தொகையே’ – சரியான பொருளைக் கண்டறி.
அ) பாடல் பத்து, எண் தொகை
ஆ) பா பத்து, எட்டுத் தொகை
இ) பத்துப்பாட்டு, எட்டுத்தொகை
ஈ) பத்தும் எட்டும்
Answer:
இ) பத்துப்பாட்டு, எட்டுத்தொகை

15.பெருஞ்சித்திரனாரின் ‘முந்துற்றோம் யாண்டும்’, ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ என்னும் இரு தலைப்பிலுள்ள பாடல்கள் எத்தொகுப்பிலிருந்து எடுத்தாளப் பெற்றன? அ) எண்சுவை எண்பது
ஆ) உலகியல் நூறு
இ) நூறாசிரியம்
ஈ) கனிச்சாறு
Answer:
ஈ) கனிச்சாறு

16.செந்தாமரைத் தேனைக் குடித்துச் சிறகார்ந்த அந்தும்பி பாடும் அது போல – பயின்று வரும் அணி
அ) உவமையணி
ஆ) உருவக அணி
இ) எடுத்துக்காட்டு உவமையணி
ஈ) தற்குறிப்பேற்றணி
Answer:
அ) உவமையணி

17.செந்தமிழ் – பிரித்து எழுதுக.
அ) செந் + தமிழ்
ஆ) செம் + தமிழ்
இ) செ + தமிழ்
ஈ) செம்மை + தமிழ்
Answer:
ஈ) செம்மை + தமிழ்

18.செந்தமிழ், செந்தாமரை ஆகிய சொற்களில் இடம் பெறும் இலக்கணக் குறிப்பைச் சுட்டுக.
அ) பண்புத்தொகை
ஆ) வினைத்தொகை
இ) உம்மைத் தொகை
ஈ) அன்மொழித்தொகை
Answer:
அ) பண்புத்தொகை

19.உந்தி உணர்வெழுப்ப உள்ளக் கனல் மூள – இவ்வடியில் காணும் நயம்
அ) மோனை
ஆ) எதுகை
இ) முரண்
ஈ) இயைபு
Answer:
அ) மோனை

20.தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!
இன்னறும் பாப்பத்தே! எண் தொகையே! நற்கணக்கே
மன்னுஞ் சிலம்பே! மணிமேகலை வடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!
              ----இப்பாடலில் அமைந்த எதுகைச் சொற்களை எடுத்தெழுதுக.
அ) தென்னன்
ஆ) மன்னும்
இ) இன்னறும்
ஈ) இவையனைத்தும்
Answer:
ஈ) இவையனைத்தும்

குறுவினா

1.வண்டு – தேன் தமிழர் – தமிழ்ச்சுவை இவற்றை ஒப்பிட்டுப் பெருஞ்சித்திரனார் குறிப்பிடும் செய்தி யாது?
Answer:
வண்டு – தேன் :
2.தமிழ் எவற்றின் காரணமாகத் தமக்குள் பற்றுணர்வை ஏற்படுத்துவதாகப் பெருஞ்சித்திரனார் கூறுகிறார்?
Answer:
ஆகிய இவையே தமக்குள் பற்றுணர்வை ஏற்படுத்துவதாகப் பெருஞ்சித்திரனார் கூறுகிறார்.

*********THE END OF 1.1*************

1.2. தமிழ்ச்சொல் வளம்

I. பலவுள் தெரிக

1. “காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்” நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது –
  1. இலையும் சருகும்
  2. தோகையும் சண்டும்
  3. தாளும் ஓலையும்
  4. சருகும் சண்டும்
விடை : சருகும் சண்டும்
2. வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை –
  1. குலை வகை
  2. மணி வகை
  3. கொழுந்து வகை
  4. இலை வகை
விடை : மணி வகை

II. குறு வினா

ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.
ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.
ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.
மேற்கண்ட தொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டி, எஞ்சிய பிழையான தொடரிலுள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக.

சரியான தொடர்கள்
இரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.
ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.
பிழையான தொடர்
ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன
பிழைக்கான காரணம்
தாறு – வாழைக்குலை
சீப்பு – வாழைத்தாற்றின் பகுதி

III. சிறு வினா

‘புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது.’
இதுபோல் இளம் பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.
  • பிள்ளை – தென்னம் பிள்ளை வாங்கி வந்தேன்.
  • வடலி – காட்டில் பனை வடலியைப் பார்த்தேன்.
  • நாற்று – நெல் நாற்று நட்டேன்
  • கன்று – வாழைக்கன்று நட்டேன்
  • பைங்கூழ் – சோளப் பைங்கூழ் பசுமையா உள்ளது.

IV. நெடு வினா

தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக் குறிப்புகளை எழுதுக.
குறிப்புச்சட்டம்
  • அறிமுக உரை
  • சொல்வளம்
  • சொல்லாக்கத்திற்கான தேவை
  • நிறைவுரை
அறிமுகவுரை:-
  • வணக்கம்! அன்னைமொழியே! அழகார்ந்த செந்தமிழே! எனப் போற்றப்படும் தமிழ்மொழி பிறமொழிகளுக்கெல்லாம் தலைச்சிறந்த மொழியாகும். அம்மாெழியின் சொல் வளத்தைப் பற்றி காண்போம்.
சொல் வளம்:-
  • இலக்கியச் செம்மொழிகளக்கெல்லாம் பொதுவேனும், தமிழ்மட்டும் அதில் தலை சிறந்ததாகும்.
  • தமிழ்ச்சொல் வளத்தைப் பலதுறைகளில் காணலாம்.
  • ஒரு பொருட் பல சொல் வரிசைகள் தமிழைத் தவிர வேறு எந்தத் திராவிட மொழிகளின் அகாராதிகளிலும் காணப்படவில்லை.
  • “பிற திராவிட மொழிகளுக்குரியனவாகக் கருதப்படும் சொற்களம் தமிழில் உள” என்கிறார் கால்டுவெல்
சொல்லாக்கத்திற்கான தேவை:-
  • சொல்லாக்கத்கத்திற்கான தேவை என்பது அதன் பயன்பாட்டு முறையைக் கொண்டே அமைகிறது.
  • இன்றைய அறவியல் வளர்ச்சிக்கேற்ப நூல்களை புதிய சொல்லாக்கத்துடன் படைத்தல் வேண்டும்.
  • இலக்கிய மேன்மைக்கு மக்கள் அறிவுடையவர்களாக உயர்வதற்கும், புதிய சொல்லாக்கம் தேவை.
  • மொழி என்பது உலகின் போட்டி பேராட்டத்திற்கு ஒரு போர்க்கருவியாகும். அக்கருவி காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும்.
  • தமிழன் பெருமையும் மொழியின் சிறப்பும் குன்றாமல் இருக்க தமிழில் சொல்லாக்கம் தேவை.
  • உலகின் பிற ஆய்வுச் சிந்தனைகளைத் தமிழர்படுத்தி எழுதும் போது பிறமொழி அறியாத தமிழரும் அவற்றைக் குறித்த அறிந்து கொள்ள முடியாது.
  • மொழியே கலாச்சாரத்தின் வழிகாட்டி அதை நிலைநாட்ட புதிய சொல்லாக்கம் தேவை.
  • மக்களிடையே பரந்த மன்பான்மையையும், ஆளுமையும் நிலைநாட்ட புதிய சொல்லாக்கம் தேவைப்படுகிறது.
  • பிறமொழிச் சொற்கள் கலவாமல் இருக்க காலத்திற்கேற்ப புதிய கலைச் சொல்லாக்கம் ஏற்படுத்த வேண்டும்.
நிறைவுரை:-
  • மென்மையான தமிழை மேன்மையான தமிழாக்க அறிவியல் தொழில்நுடபச் சொற்களை தமிழ்ப்படுத்தி தமிழன் பெருமையை உலகிற்ககு கொண்டு செல்வோம்.
புதிய சொல்லாக்கத்தின் சேவை
இன்றைய தமிழுக்குத் தேவை
நன்றி!

தமிழ்ச்சொல் வளம் – வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. தமிழ் மொழிக்காக மாநாடு நடத்திய நாடு ________
விடை : மலேசியா

2. நாடும் மொழியும் நமதிரு கண்கள் என்றார் _____________
விடை : பாரதியார்

3. ஒரு நாட்டின் வளத்திற்கேற்ப அம்மக்களின் _____________ அமைந்திருக்கும்.
விடை : அறிவொழுக்கங்கள்

4. போர்ச்சுகீசு நாட்டின் தலைநகர் _____________
விடை : லிசுபனின்
5. _____________ என்னும் நூல் முதன்முதலாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.
விடை : 1554-ல் கார்டிலா

6. இந்திய மொழிகளிலேயே முதலில் _____________ அச்சேறியது தமிழ் மொழி
விடை : மேலைநாட்டு எழுத்துருவில்

II. குறு வினா

1. ஒரு தாவரத்தின் அடிப்பகுதிகளைக் குறிப்பதற்கான சொற்கள் எவை?
  • தாள், தண்டு, கோல், தூறு, தட்டு, கழி, கழை, அடி
2. தாவரங்களின் அடியிலிருந்து பிரிந்து செல்லும் பிரிவுகளுக்கு வழங்கப்படும் சொற்கள் யாவை?
  • கவை, காெம்பு, கொப்பு, கிளை, சினை, போத்து, குச்சி, இணுக்கு
3. தாவரங்களின் காய்ந்த பகுதிகளுக்கு வழங்கப்படும் சொற்கள் யாவை?
  • சுள்ளி, விறகு, வெங்கழி, கட்டை

III. சிறு வினா

1. தாவரத்தின் பிஞ்சு வகைகளுக்கு வழங்கும் சொற்களை விளக்கத்துடன் கூறுக.
  • பூம்பிஞ்சு : பூவோடு கூடிய இளம்பிஞ்சு
  • பிஞ்சு : இளம் காய்
  • வடு : மாம்பிஞ்சு
  • மூசு : பலாப்பிஞ்சு
  • கவ்வை : எள்பிஞ்சு
  • குரும்பை : தென்னை, பனை முதலியவற்றின் இளம் பிஞ்சு
  • முட்டுக் குரும்பை : சிறு குரும்பை
  • இளநீர் : முற்றாத தேங்காய்
  • நுழாய் : இளம்பாக்கு
  • கருக்கல் : இளநெல்
  • கச்சல்: வாழைப்பிஞ்சு
2. தாவரங்களின் குலை வகைகளைக் குறிப்பதற்கான  சொற்கள் விளக்குக
  • கொத்து : அவரை, துவரை முதலியவற்றின் குலை
  • குலை : கொடி முந்திரி போன்றவற்றின் குலை
  • தாறு : வாழைக் குலை
  • கதிர் : கேழ்வரகு, சோளம் முதலியவற்றின் கதிர்
  • அலகு அல்லது குரல் : நெல், தினை முதலியவற்றின் கதிர்
  • சீப்பு : வாழைத் தாற்றின் பகுதி.
3. பழங்களின் மேற்பகுதியினைக் குறிக்க வழங்கும் சொற்களை விளக்குக
  • தொலி : மிக மெல்லியது
  • தோல் : திண்ணமானது
  • தோடு : வன்மையானது
  • ஓடு : மிக வன்மையானது
  • குடுக்கை : சுரையின் ஓடு
  • மட்டை : தேங்காய் நெற்றின் மேற்பகுதி
  • உமி : நெல்,கம்பு முதலியவற்றின் மூடி
  • கொம்மை : வரகு, கேழ்வரகு முதலியவற்றின் உமி
4. தாவரங்களின் இளம் பருவத்திற்கான சொற்களை கூறுக
  • நாற்று : நெல், கத்தரி முதலியவற்றின் இளநிலை
  • கன்று : மா, புளி, வாழை முதலியவற்றின் இளநிலை
  • குருத்து: வாழையின் இளநிலை
  • பிள்ளை: தென்னையின் இளநிலை
  • குட்டி: விளோவின் இளநிலை
  • மடலி அல்லது வடலி: பனையின் இளநிலை
  • பைங்கூழ் : நெல், சோளம் முதலியவற்றின் பசும் பயிர்.
5. தேவநேயப்பாவாணர் பற்றி நீவீர் அறிந்தவற்றை எழுதுக
  • தேவநேயப்பாவணர் சிறப்புப் பெயர் மொழி ஞாயிறு
  • இலக்கணக் கட்டுரைகள், மொழியாராச்சி கட்டுரைகள், சொல்லாய்வுக் கட்டுரைகள்.
  • செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்குநர், உலக கழகத் தலைவர் இவர் ஆற்றிய பணிகள் ஆகும்.
6. கார்டிலா – நூல் குறிப்பு வரைக
  • 1554-ல் கார்டிலா என்னும் நூல் முதன்முதலாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.
  • ரோமன் வரி வடிவில் அச்சிடப்பட்ட நூல்இதனை Carthila de lingo Tamul e Portugues என்பர்இந்திய மொழிகளிலேயே மேலைநாட்டு எழுத்துருவில் முதலில் அச்சேறியது தமிழ் மொழி.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1.மரஞ்செடியினின்று பூ கீழே விழுந்த நிலையைக் குறிக்கும் சொல் எது?
அ) அரும்பு
ஆ) மலர்
இ) வீ
ஈ) செம்மல்
Answer:
இ) வீ
2.திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் என்னும் நூலை எழுதியவர் யார்?
அ) பாவாணர்
ஆ) கால்டுவெல்
இ) இரா. இளங்குமரனார்
ஈ) திரு.வி.க
Answer:
ஆ) கால்டுவெல்
3.திருவள்ளுவர் தவச்சாலை அமைந்துள்ள இடம் எது?
அ) அல்லூர்
ஆ) திருவள்ளூர்
இ) கல்லூர்
ஈ) நெல்லூர்
Answer:
அ) அல்லூர்

4.குச்சியின் பிரிவு எச்சொல்லால் அழைக்கப்படுகிறது? அ) போத்து
ஆ) குச்சி
இ) இணுக்கு
ஈ) சினை
Answer:
இ) இணுக்கு

5.பொருத்துக.
1. தாள் – அ) குத்துச்செடி, புதர் முதலியவற்றின் அடி
2. தண்டு – ஆ) நெட்டி, மிளகாய்ச்செடி முதலியவற்றின் அடி
3. கோல் – இ) தண்டு, கீரை முதலியவற்றின் அடி
4. தூறு – ஈ) நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி
அ) 1.ஈ 2.இ 3.ஆ 4.அ
ஆ) 1.ஆ 2.அ 3.ஈ 4-இ
இ) 1.இ 2.ஈ 3.அ 4.ஆ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஈ 2.இ 3.ஆ 4.அ

6.பொருத்துக.
1. தட்டு – அ) கரும்பின் அடி
2. கழி – ஆ) புளி, வேம்பு முதலியவற்றின் அடி
3. கழை – இ) கம்பு, சோளம்
முதலியவற்றின் அடி – ஈ) மூங்கிலின் அடி
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.இ 2.அ 3.ஈ. 4.ஆ
இ) 1.ஈ 2.இ 3.அ 4.ஆ
ஈ) 1.இ 2.அ 3.ஆ 4.ஈ
Answer:
ஆ) 1.இ 2.அ 3.ஈ 4.ஆ

7.பொருத்துக.
1. கவை – அ) அடிமரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை
2. கொம்பு – ஆ) கிளையின் பிரிவு
3. சினை – இ) கவையின் பிரிவு
4. போத்து – ஈ) சினையின் பிரிவு
அ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
ஆ) 1.ஈ 2.இ 3.அ 4.ஆ
இ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஈ) 1.இ 2.ஆ 3.அ 4.ஈ
Answer:
அ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ

8.பொருந்தாதவற்றைக் கண்டறிக.
அ) தூறு
ஆ) கழி
இ) கழை
ஈ) கவை
Answer:
ஈ) கவை
9.பொருந்தாதவற்றைக் கண்டறிக.
அ) தாள்
ஆ) தண்டு
இ) கிளை
ஈ) கோல்
Answer:
இ) கிளை

10.பொருந்தாதவற்றைக் கண்டறிக.
அ) கவை
ஆ) தட்டு
இ) கொம்பு
ஈ) சினை
Answer:
ஆ) தட்டு

11.பொருந்தாத இணையைக் கண்டறிக.
அ) கவை – குச்சியின் பிரிவு
ஆ) கொம்பு – கவையின் பிரிவு
இ) போத்து – சினையின் பிரிவு
ஈ) குச்சி – போத்தின் பிரிவு
Answer:
அ) கவை-குச்சியின் பிரிவு

12.வேறுபட்ட குழுவினைக் கண்டறிக.
அ) தாள், தண்டு, கோல், தூறு
ஆ) கவை, கொம்பு, கிளை, சினை
இ) சுள்ளி, விறகு, வெங்கழி, கட்டை
ஈ) கழி, குச்சு, இணுக்கு, கழை
Answer:
ஈ) கழி, குச்சு, இணுக்கு, கழை

13.பொருத்துக.
1. இலை – அ) தென்னை , பனை முதலியவற்றின் இலை
2. தாள் – ஆ) சோளம், கம்பு முதலியவற்றின் அடி
3. தோகை – இ) புளி, வேம்பு முதலியவற்றின் இலை
4. ஓலை – ஈ) நெல், புல் முதலியவற்றின் இலை
அ) 1.ஈ 2.இ 3.அ 4.ஆ
ஆ) 1.இ 2.ஈ 3.ஆ 4.அ
இ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஈ) 1.இ 2.ஈ 3.அ 4.ஆ
Answer:
ஆ) 1.இ 2.ஈ 3.ஆ 4.அ

14.பொருத்தமற்ற ஒன்றைக் கண்டறிக.
அ) சண்டு
ஆ) சருகு
இ) தோகை
ஈ) கட்டை
Answer:
ஈ) கட்டை

15.பொருந்தாத இணையைக் கண்டறிக.
அ) சண்டு – காய்ந்த தாளும் தோகையும்
ஆ) சருகு – காய்ந்த இலை
இ) தாள் – புலி, வேம்பு முதலியவற்றின் இலை
ஈ) தோகை – சோளம், கம்பு முதலியவற்றின் இலை
Answer:
இ) தாள் – புலி, வேம்பு முதலியவற்றின் இலை

16.வேறுபட்ட குழுவினைக் கண்டறிக.
அ) தோகை, ஓலை, சண்டு, சருகு
ஆ) துளிர், முறி, கொழுந்து, கொழுந்தாடை
இ) பூம்பிஞ்சு, பிஞ்சு, வடு, கவ்வை
ஈ) கருக்கல், கச்சல், கொத்து, குலை
Answer:
ஈ) கருக்கல், கச்சல், கொத்து, குலை

17.தும்பி – இச்சொல்லின் பொருள்
அ) தும்பிக்கை
ஆ) வண்டு
இ) துந்துபி
ஈ) துன்பம்
Answer:
ஆ) வண்டு

18.தாவரங்களின் இலை வகைகளைக் குறிக்கும் சொற்களுள் – சரியானவற்றைச் தேர்ந்தெடு.
அ) இலை, தாள், தோகை, ஒலை, சண்டு, சருகு
ஆ) இலை, தோகை, தாள், தளிர், குருத்து, அரும்பு
இ) தாள், தோகை, தூறு, தட்டு, தண்டு, ஓலை
ஈ) இலை, தாள், ஓலை, தளிர், கொழுந்து, சண்டு
Answer:
அ) இலை, தாள், தோகை, ஒலை, சண்டு, சருகு

19.‘நாடும் மொழியும் நமதிரு கண்கள்’ என்று பாடியவர் யார்?
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன் 
இ) பெருஞ்சித்திரனார்
ஈ) தேவநேயப் பாவாணர்
Answer:
அ) பாரதியார்

20.சொல்லாராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார் யார்?
அ) தேவநேயப் பாவாணர்
ஆ) இளங்குமரனார்
இ) திரு.வி.கலியாணசுந்தரனார்
ஈ) மறைமலையடிகள்
Answer:
ஆ) இளங்குமரனார்

21.பாவாணர் நூலகம் ஒன்றை உருவாக்கியவர் யார்?
அ) தேவநேயப் பாவாணர்
ஆ) இளங்குமரனார்
இ) திரு.வி.க
ஈ) மறைமலையடிகள்
Answer:
ஆ) இளங்குமரனார்

22.தமிழ்வழித் திருமணங்களை நடத்தி வருபவர் யார்?
அ) தேவநேயப் பாவாணர்
ஆ) பெருஞ்சித்திரனார்
இ) இளங்குமரனார்
ஈ) பெருந்தேவனார்
Answer:
இ) இளங்குமரனார்

23.விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழினை இழந்துவிடக் கூடாது என்று எண்ணியவர் யார்?
அ) ஜி. யு. போப்
ஆ) வீரமாமுனிவர்
இ) இளங்குமரனார்
ஈ) பெருங்குமரனார்
Answer:
இ) இளங்குமரனார்

24.இளங்குமரனார் யார் போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக் கொண்டவர்?
அ) திரு.வி.க
ஆ) பாவாணர்
இ) மு.வ
ஈ) ஜீவா
Answer:
அ) திரு.வி.க

25.இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக்கொண்டவர்
அ) தமிழழகனார்
ஆ) அப்பாத்துரையார்
இ) தேவநேயப் பாவாணர்
ஈ) இரா.இளங்குமரனார்
Answer:
ஈ) இரா.இளங்குமரனார்

26.விழிகளை மூடியபடி எழுதும் ஆற்றல் வாய்ந்த வர்கள் ………… …………
அ) திரு.வி.க., இளங்குமரனார்
ஆ) தமிழழகனார், அப்பாத்துரையார்
இ) தேவநேயப் பாவாணர், கால்டுவெல்
ஈ) பெருஞ்சித்திரனார், சுந்தரனார்
Answer:
அ) திரு.வி.க., இளங்குமரனார்

27.‘தமிழ்த்தென்றல்’ என்று போற்றப்பட்டவர் யார்?
அ) இளங்குமரனார்
ஆ) பெருந்தேவனார்
இ) திரு.வி.க
ஈ) ம.பொ .சி
Answer:
இ) திரு.வி.க

28.உலகிலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு எது? மாநாட்டுக்குரிய அம்முதல் மொழியும் தமிழே என்று கூறியவர் யார்?
அ) மலேசியா, க. அப்பாத்துரையார்
ஆ) சிங்கப்பூர், தேவநேயப் பாவாணர்
இ) இந்தியா, இளங்குமரனார் 
ஈ) கனடா, ஜி.யு. போப்
Answer:
அ) மலேசியா, க. அப்பாத்துரையார்

29.‘பன்மொழிப் புலவர்’ என்றழைக்கப்பட்டவர் யார்?
அ) க.அப்பாத்துரையார்
ஆ) தேவநேயப் பாவாணர்
இ) இளங்குமரனார்
ஈ) ஜி.யு.போப்
Answer:
அ) க.அப்பாத்துரையார்

30.சம்பா நெல்லின் உள் வகைகள் எத்தனை?
அ) 30
ஆ) 60
இ) 40
ஈ) 80
Answer:
ஆ) 60

குறுவினா

1.தாவரத்தின் அடிப்பகுதியைக் குறிப்பதற்கான சொற்கள் யாவை?
Answer:
  • தாள், தண்டு , கோல், தூறு, தட்டு, கழி, கழை, அடி.
2.தாவரங்களின் அடியிலிருந்து பிரிந்து செல்லும் பிரிவுகளுக்கு வழங்கப்படும் சொற்கள் யாவை?
Answer:
  • கவை, கொம்பு, கொப்பு, கிளை, சினை, போத்து, குச்சி, இணுக்கு.
3.தாவரங்களின் காய்ந்த பகுதிகளுக்கு வழங்கப்படும் சொற்கள் யாவை?
Answer:
  • சுள்ளி, விறகு, வெங்கழி, கட்டை.
4.தாவரங்களின் இலை வகைகளைக் குறிக்கும் சொற்கள் யாவை?
Answer:
  • இலை, தாள், தோகை, ஓலை, சண்டு, சருகு.
5.தாவரங்களின் நுனிப்பகுதியைக் குறிக்கும் சொற்கள் யாவை? (கொழுந்து வகை)
Answer:
  • துளிர் அல்லது தளிர்
  • குருத்து
  • முறி அல்லது கொழுந்து
  • கொழுந்துதாடை
6.பூவின் நிலைகளைக் குறிக்கும் சொற்கள் யாவை?
Answer:
  • அரும்பு, போது, மலர், வீ, செம்மல்.
7.தாவரங்களின் பிஞ்சு வகைகளுக்கு வழங்கப்படும் சொற்கள் யாவை?
Answer:
  • பூம்பிஞ்சு, பிஞ்சு, வடு, மூசு, கவ்வை, குரும்பை, முட்டுக்குரும்பை, இளநீர், நுழாய், கருக்கல், கச்சல்.
8.தாவரங்களின் குலை வகைகளைக் குறிப்பதற்கான சொற்கள் யாவை?
Answer:
  • கொத்து, குலை, தாறு, கதிர், அலகு அல்லது குரல், சீப்பு.
9.கெட்டுப்போன காய்க்கும் கனிக்கும் தாவரத்திற்கேற்ப வழங்கப்படும் சொற்கள் யாவை?
Answer:
  • சூம்பல், சிவியல், சொத்தை, வெம்பல், அளியல், அழுகல், சொண்டு, தேரைக்காய், அல்லிக்காய், ஒல்லிக்காய், கோட்டான்காய் (அ) கூகைக்காய்.
10.பழங்களின் மேற்பகுதியினைக் குறிக்க வழங்கும் சொற்கள் யாவை?
Answer:
  • தொலி, தோல், தோடு, ஓடு, குடுக்கை, மட்டை, உமி, கொம்மை.
11.தானியங்களுக்கு வழங்கப்படும் சொற்கள் யாவை?
Answer:
  • கூலம், பயறு, கடலை, விதை, காழ், முத்து, கொட்டை, தேங்காய், முதிரை.
12.தாவரங்களின் இளமைப் பெயர்களை எழுது.
Answer:
  • நாற்று, கன்று, குருத்து, பிள்ளை , குட்டி, பைங்கூழ், மடலி (அ) வடலி.
13.கோதுமையின் வகைகளில் சிலவற்றைக் கூறு.
Answer:
  • சம்பாக்கோதுமை, குண்டுக்கோதுமை, வாற்கோதுமை.
14.சம்பா நெல் வகைகளை எழுதுக.
Answer:
  • ஆவிரம்பூச்சம்பா, ஆனைக் கொம்பன் சம்பா, குண்டுச் சம்பா, குதிரைவாலிச் சம்பா, சிறுமணிச்சம்பா, சீரகச்சம்பா முதலிய அறுபது வகைகள் சம்பாவில் உள்ளன.
15.இரா. இளங்குமரனாரின் தமிழ்ப்பணியைத் தரம் உயர்த்திய நல்முத்துகள் யாவை?
Answer:
  • இலக்கண வரலாறு
  • தமிழிசை இயக்கம்
  • தனித்தமிழ் இயக்கம்
  • பாவாணர் வரலாறு
  • குண்டலகேசி உரை
  • யாப்பருங்கலம் உரை
  • புறத்திரட்டு உரை
  • திருக்குறள் தமிழ் மரபுரை
  • காக்கைப் பாடினிய உரை
  • தேவநேயம்
  • முதலியன இரா. இளங்குமரனாரின் தமிழ்ப்பணியைத் தரமுயர்த்திய நல்முத்துகளாகும்.
16.உலகத்தமிழ் மாநாடு குறித்து க. அப்பாத்துரையார் கூறுவன யாவை?
Answer:
  • “உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு மலேசியா. அம்மாநாட்டுக்குரிய முதல் மொழியும் தமிழே!” என்று க. அப்பாத்துரையார் கூறுகின்றார்.

சிறுவினா

1.தேவநேயப்பாவாணர் பற்றி நீவீர் அறிந்தவற்றை எழுதுக.
Answer:
பெயர் : தேவநேயப் பாவாணர்
  • சிறப்புப்பெயர் : மொழிஞாயிறு
  • படைப்புகள் : இலக்கணக் கட்டுரைகள், மொழியாராய்ச்சிக் கட்டுரைகள், சொல்லாய்வுக் கட்டுரைகள்.
  • பணி : செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்குநர், உலகத் தமிழ்க் கழகத் தலைவர்
2.இரா. இளங்குமரனார் குறித்து நீவீர் அறிந்தவற்றைக் கூறுக.
Answer:
பெயர் : இரா. இளங்குமரனார்
  • தமிழ்ப்பற்று : விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழினை இழந்துவிடக் கூடாது என்றார்.
  • திரு.வி.க வழி : தமிழ்த்தென்றல் திரு.வி.க. போல் இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கொண்டவர்.
  • சிறந்த நூல்கள் : இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம், பாவாணர் வரலாறு, குண்டலகேசி உரை, யாப்பருங்கலம் உரை, திருக்குறள் தமிழ் மரபுரை, புறத்திரட்டு உரை, காக்கைப் பாடினிய உரை, தேவநேயம்
  • பிற செய்திகள் : திருவள்ளுவர் தவச்சாலை மற்றும் பாவாணர் நூலகத்தை அமைத்தார்.
3.கார்டிலா – நூல் குறிப்பு வரைக.
Answer:
  • 1554-ல் போர்ச்சுகீசு நாட்டில் தமிழில் முதன்முதலில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்.
  • ரோமன் வரிவடிவில் அச்சிடப்பட்ட நூல்.
  • இதனை Carthila de lingoa Tamul e Portugues என்பர்.
  • இந்திய மொழிகளுள் மேலை நாட்டு மொழிகளில் அச்சிடப்பட்ட முதல் நூல் தமிழ்மொழி நூலே.
4.எந்தெந்தத் தாவரங்களின் அடிப்பகுதி என்னென்ன பெயர்களால் அழைக்கப்படுகிறது எனப் பட்டியலிடுக.
Answer
  • தாள் – நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி
  • தண்டு – கீரை, வாழையின் அடி
  • கோல் – நெட்டி, மிளகாய்ச் செடியின் அடி
  • துறு – குத்துச்செடி, புதர் முதலியவற்றின் அடி
  • தட்டு (அ) தட்டை – கம்பு, சோளம் முதலியவற்றின் அடி
  • கழி – கரும்பின் அடி
  • கழை – மூங்கிலின் அடி
  • அடி – புளி, வேம்புவின் அடி
5.தாவரங்களின் அடியிலிருந்து பிரிந்து செல்லும் பிரிவுகளுக்கு வழங்கும் சொற்களையும் அவை தாவரங்களின் எப்பகுதிக்குப் பொருந்தும் என்பதையும் எழுது.
Answer:
  • கவை – மரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை
  • கொம்பு (அ) கொப்பு – கவையின் பிரிவு
  • கிளை – கொம்பின் பிரிவு
  • சினை – கிளையின் பிரிவு
  • போத்து – சினையின் பிரிவு
  • குச்சி – போத்தின் பிரிவு
  • இணுக்கு – குச்சியின் பிரிவு
6.எந்தெந்தத் தாவரங்களின் இலைகள் என்னென்ன பெயர்களால் அழைக்கப்படுகின்றன என்பதைப்
பட்டியலிடுக.
Answer:
  • புளி, வேம்பு – இலை
  • தென்னை, பனை – ஓலை
  • நெல், புல் – தாள்
  • காய்ந்த இலை – சருகு
  • சோளம், கரும்பு – தோகை
7.தாவரங்களின் பிஞ்சு வகைகளுக்கு வழங்கப்படும் பெயர்களையும் அவை எத்தாவரப் பிஞ்சுகளுக்குப்
பொருந்தும் என்பதையும் கூறு.
Answer:
  • (பூம்பிஞ்சு -பூவோடு கூடிய இளம்பிஞ்சு, பிஞ்சு – இளம்காய்)
  • வடு – மாம்பிஞ்சு
  • இளநீர் – முற்றாத தேங்காய்
  • மூசு – பலாப்பிஞ்சு
  • நுழாய் – இளம்பாக்கு
  • கவ்வை – எள் பிஞ்சு
  • கருக்கல் – இளநெல்
  • குரும்பை – தென்னை, பனை பிஞ்சு
  • கச்சல் – வாழைப்பிஞ்சு
8.எந்தெந்தத் தாவரங்களின் குலைகள் என்னென்ன பெயர்களால் அழைக்கப்படுகின்றன எனப் பட்டியலிடுக.
Answer:
  • கொத்து – அவரை, துவரை
  • கதிர் – கேழ்வரகு, சோளக் கதிர்
  • குலை – கொடி முந்திரி
  • அலகு (அ) குரல் – நெல், தினைக் கதிர்
  • தாறு – வாழைக்குலை
  • சீப்பு – வாழைத் தாற்றின் பகுதி
9.கெட்டுப்போன காய்க்கும் கனிக்கும் தாவரத்திற்கேற்ப வழங்கப்படும் பெயர்கள் யாவை?
Answer:
  • சூம்பல் – நுனியில் சுருங்கிய காய்
  • சிவியல் – சுருங்கிய பழம்
  • சொத்தை – புழுபூச்சி அரித்த காய் (அ) கனி
  • வெம்பல் – சூட்டினால் பழுத்த பிஞ்சு
  • அளியல் – குளுகுளுத்த பழம்
  • அழுகல் – குளுகுளுத்து நாறிய பழம் (அ) காய்
  • சொண்டு – பதறாய்ப் போன மிளகாய்
  • கோடான்காய் (அ) கூகைக்காய் – கோட்டான் அமர்ந்ததினால் கெட்ட காய்
  • தேரைக்காய் – தேரை அமர்ந்ததினால் கெட்டகாய்
  • அல்லிக்காய் – தேரை அமாந்ததினால் கெட்ட தேங்காய்
  • ஒல்லிக்காய் – தென்னையில் கெட்ட காய்

நூல் வெளி

மொழிஞாயிறு என்றழைக்கப்படும் தேவநேயப் பாவாணரின் "சொல்லாய்வுக் கட்டுரைகள்" நூலில் உள்ள தமிழ்ச்சொல் வளம் என்னும் கட்டுரையின் சுருக்கம் பாடமாக இடம்பெற்றுள்ளது. இக்கட்டுரையில் சில விளக்கக் குறிப்புகள் மாணவர்களின் புரிதலுக்காகச் சேர்க்கப்பட்டுள்ளன. பல்வேறு இலக்கணக் கட்டுரைகளையும் மொழியாராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதிய பாவாணர், தமிழ்ச் சொல்லாராய்ச்சியில் உச்சம் தொட்டவர். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர்; உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர்.

*************************THE END OF 1.2**********************************

1.3 இரட்டுற மொழிதல்

இரட்டுற மொழிதல்

    ஒரு சொல்லோ, சொற்றொடரோ இருபொருள்பட வருவது இரட்டுற மொழிதல் அணி எனப்படும். இதனைச் சிலேடை அணி என்றும் அழைப்பர். செய்யுளிலும் உரைநடையிலும் மேடைப்பேச்சிலும் சிலேடைகள் பயன்படுத்தப்படுகின்றன.


நூல் வெளி!

    புலவர் பலரின் பாடல்களின் தொகுப்பான தனிப்பாடல் திரட்டு (ஐந்தாம் பகுதி - கழகப் பதிப்பு) என்னும் நூலிலிருந்து இந்தப்பாடல் எடுத்தாளப்பட்டுள்ளது. இப்பாடலைப் படைத்தவர் தமிழழகனார்.

    சந்தக்கவிமணி எனக் குறிப்பிடப்படும் தமிழழகனாரின் இயற்பெயர் சண்முகசுந்தரம். இலக்கணப் புலமையும் இளம்வயதில் செய்யுள் இயற்றும் ஆற்றலும் பெற்ற இவர் பன்னிரண்டு சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்.


பாடநூல் வினாக்கள்

I. சொல்லும் பொருளும்
  • துய்ப்பது – கற்பது, தருதல்
  • மேவலால் – பொருந்துதல், பெறுதல்


பலவுள் தெரிக

1.‘மெத்த வணிகலன்’ என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது
அ) வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்
ஆ) பெரும் வணிகமும் பெரும் கலன்களும்
இ) ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும்
ஈ) வணிகக் கப்பல்களும் அணிகலன்களும்
Answer:
அ) வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்

II. குறு வினா

1. தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்தக்காட்டுத் தருக.
  • ஒரு சொல்லோ, சொற்றொடரோ இரு பொருள் பட வருவது இரட்டுற மொழிதல் அணி என்பர். இதனை சிலேடை அணி என்றும் அழைப்பர்.
எ.கா, சீனிவாசன் பாற்கடலில் துயில் கொள்கிறான்
– இத் தொடர் எவ்வித மாற்றமுமின்றி இரண்டு விதமான பொருளைத் தருகிறது.
சீனியில் (சர்க்கரை) வாசம் செய்யும் எறும்பு பாலில் இறந்து மிதக்கிறது.
சீனிவாசனாகிய திருமால் பாற்கடலில் துயில் கொள்கிறார்.

சிறுவினா

1.தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுறமொழியும் பாங்கினை விளக்குக.

Answer: >

இரட்டுற மொழிதல் – வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. கடல் மூன்று வகையான ______________ தருகிறது
விடை : சங்கினைத்
2. தமிழ் ______________ அணிகலனாய்ப் பெற்றது.
விடை : ஐம்பெருங்காப்பியங்களை
3. கடல் ______________, ______________ தருகிறது.
விடை : முத்தினையும், அமிழ்தினையும்
4. தமிழழகனாரின் மற்றொரு பெயர் ______________
விடை : சந்தக்கவிமணி
5. தமிழழகனாரின் இயற்பெயர் ______________
விடை : சண்முகசுந்தரம்
6. தமிழழகனாரின் _____________ சிற்றிலக்கிய  நூல்களைப் படைத்துள்ளார்.
விடை : 12

II. குறு வினா

1. ஐம்பெருங்காப்பியங்கள் யாவை?
  • சிலப்பதிகாரம்
  • மணிமேகலை
  • சீவகசிந்தாமணி
  • வளையாபதி
  • குண்டலகேசி
2. தமிழ் எப்படி வளர்ந்தது?
  • தமிழ், இயல் இசை நாடகம் என முத்தமிழாய் வளர்ந்தது
3. தமிழ் எவற்றால் வளர்க்கப்பட்டது;
  • தமிழ் முதல், இடை, கடை ஆகிய முச்சங்கங்களால் வளர்க்கப்பட்டது
4. தமிழ் எவற்றை அணிகலனாய் பெற்றது?
  • ஐம்பெருங்காப்பியங்கள் என அழைக்கப்படும் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகியவற்றை அணிகலன்களாகப் பெற்றது
5. தமிழ் யாரால் காக்கப்பட்டது?
  • தமிழானது சங்கப் பலகையில் அமர்ந்திருந்த சங்கப்புலவர்களால் காக்கப்பட்டது.
6. கடல் எவற்றையெல்லாம் தருகிறது?
  • முத்து
  • அமிழ்து
  • வெண்சங்கு
  • சலஞ்சலம்
  • பாஞ்சசன்யம் ஆகியவற்றை தருகிறது
7. கடல் எவை செல்லும்படி இருக்கிறது?
  • மிகுதியான வணிகக் கப்பல்கள் செல்லும்படி இருக்கிறது;
8. கடல் தன் அலையால் எதனை தடுத்து நிறுத்திக் காக்கிறது?
  • கடல் தன் அலையால் சங்கினைத் தடுத்து நிறுத்திக் காக்கிறது.
9. இரட்டுற மொழிதல் அணி என்றால் என்ன?
  • ஒரு சொல்லோ, சொற்றொடரோ இரு பொருள் பட வருவது இரட்டுற மொழிதல் அணி என்பர். இதனை சிலேடை அணி என்றும் அழைப்பர்.
10. சிலேடைகள் எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகின்றன?
  • சிலேடைகள்
  • செய்யுள்
  • உரைநடை
  • மேடைப்பேச்சு ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.
11. தமிழ் எவற்றோடெல்லாம் இணைத்து பேசப்படுகிறது?
  • தமிழ் விண்ணோடும், முகிலோடும், உடுக்களோடும், கதிரவனோடும், கடலோடும் இணைத்து பேசப்படுகிறது

III. சிறு வினா

1. தமிழழகனார் – குறிப்பு வரைக
  • தமிழழகனார் இயற்பெயர் சண்முகசுந்தரம்.
  • தமிழழகனாரின் வேறு பெயர் சந்தக்கவிமணி.
  • இலக்கணப் புலமையும், இளம் வயதில் செய்யுள் இயற்றும் ஆற்றலும் பெற்றவர்.
  • பன்னிரண்டு சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்.
2. தமிழ் குறித்து தமிழழகனார் கூறுவன யாவை?
  • தமிழ், இயல் இசை நாடகம் என முத்தமிழாய் வளர்ந்தது.
  • முதல் இடை கடை ஆகிய முச்சங்கங்களால் வளர்க்கப்பட்டது.
  • ஐம்பெருங்காப்பியங்களை அணிகலன்களாகப் பெற்றது.
  • சங்கப் பலகையில் அமர்ந்திருந்த சங்கப்புலவர்களால் காக்கப்பட்டது.
3. கடல் குறித்து தமிழழகனார் கூறுவன யாவை?
  • கடல், முத்தினையும் அமிழ்தினையும் தருகிறது
  • வெண்சங்கு, சலஞ்சலம், பாஞ்சசன்யம் ஆகிய மூன்று வகையான சங்குகளைத் தருகிறது
  • மிகுதியான வணிகக் கப்பல்கள் செல்லும்படி இருக்கிறது;
  • தன் அலையால் சங்கினைத் தடுத்து நிறுத்திக் காக்கிறது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1.‘தமிழ், ஆழி இரண்டுக்கும் பொருள்படும் படியான’ – இரட்டுற மொழிதலணி அமைய பாடிய ஆசிரியர் யார்?
அ) தேவநேயப் பாவாணர்
ஆ) பாவலரேறு பெருஞ்சித்திரனார்
இ) தமிழழகனார்
ஈ) எழில் முதல்வன்
Answer:
இ) தமிழழகனார்

2.கடல் தரும் சங்குகளின் வகைகள் எத்தனை?
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
Answer:
ஆ) மூன்று

3.கடல் தன் அலையால் எதைத் தடுத்து நிறுத்திக் காக்கிறது?
அ) மணல்
ஆ) சங்கு
இ) கப்பல்
ஈ) மீனவர்கள்
Answer:
ஆ) சங்கு

4.முத்தினையும் அமிழ்தினையும் தருவதாகச் சந்தக்கவிமணி தமிழழகனார் குறிப்பிடுவது எதை?
அ) மூங்கில்
ஆ) கடல்
இ) மழை
ஈ) தேவர்கள்
Answer:
ஆ) கடல்

5.தமிழ் அணிகலன்களாகப் பெற்றவை எவை?
அ) சங்க இலக்கியங்கள்
ஆ) ஐம்பெருங்காப்பியங்கள்
இ) ஐஞ்சிறு காப்பியங்கள்
ஈ) நீதி இலக்கியங்கள்
Answer:
ஆ) ஐம்பெருங்காப்பியங்கள்

6.இரட்டுறமொழிதல் அணியின் வேறுபெயர் யாது?
அ) வேற்றுமை அணி
ஆ) பிறிதுமொழிதல் அணி
இ) சொற்பொருள் பின்வருநிலையணி
Answer:
ஈ) சிலேடை அணி

7.ஒரு சொல்லோ, சொற்றொடரோ இருபொருள்பட வருவது எது?
அ) இரட்டுறமொழிதல் அணி
ஆ) வேற்றுமை அணி
இ) உவமை அணி
ஈ) உருவக அணி
Answer:
அ) இரட்டுறமொழிதல் அணி

8.சந்தக்கவிமணி எனக் குறிப்பிடப்படும் தமிழழகனாரின் இயற்பெயர் என்ன?
அ) சண்முகமணி
ஆ) சண்முகசுந்தரம்
இ) ஞானசுந்தரம்
ஈ) ஆறுமுகம்
Answer:
ஆ) சண்முகசுந்தரம்

9.தமிழழகனார் எத்தனை சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்?
அ) பத்து
ஆ) பன்னிரண்டு
இ) பதினான்கு
ஈ) பதினாறு
Answer:
ஆ) பன்னிரண்டு

10.முத்தமிழ் துய்ப்பதால் என்னும் பாடல் இடம் பெற்றுள்ள தொகுப்பு யாது?
அ) எட்டுத்தொகை
ஆ) பத்துப்பாட்டு
இ) சிற்றிலக்கியங்கள்
ஈ) தனிப்பாடல் திரட்டு
Answer:
ஈ) தனிப்பாடல் திரட்டு

குறுவினா

1.சிலேடைகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
சிலேடைகள் இரண்டு வகைப்படும். அவை:

1.
அ) காலை நேரம் ஒரு நிகழ்ச்சிக்காகத் தொடர்வண்டியில் வந்து இறங்கினார் தமிழறிஞர் கி.வா. ஜகந்நாதன். அவரை மாலையிட்டு வரவேற்றனர். அப்போது கி.வா.ஜ., “அடடே! காலையிலேயே மாலையும் வந்துவிட்டதே!” என்றார். எல்லோரும் அந்தச் சொல்லின் சிலேடைச் சிறப்பை மிகவும் சுவைத்தனர்.

ஆ) இசை விமரிசகர் சுப்புடுவின் விமரிசனங்களில் நயமான சிலேடைகள் காணப்படும். ஒரு முறை ஒரு பெரிய வித்துவானுடைய இசைநிகழ்ச்சியை விமர்சனம் செய்யும் போது அவர் குறிப்பிட்டது: “அன்று கச்சேரியில் அவருடைய காதிலும் கம்மல், குரலிலும் கம்மல்.”

இ) தமிழறிஞர் கி.ஆ.பெ. விசுவநாதன் பல் மருத்துவத்தில் சிறப்புப் பட்டம் பெற்ற நண்பர் ஒருவரை அறிமுகம் செய்து வைத்தபோது “இவர் பல்துறை வித்தகர்” என்று குறிப்பிட்டார்.
இவைபோன்ற பல சிலேடைப் பேச்சுகளை நீங்கள் கேட்டிருப்பீர்கள். அவற்றைத் தொகுத்துச் சொல்நயங்களைப் பதிவு செய்து கலந்துரையாடுக.

Answer:
ஆசிரியர் : இன்று வகுப்பிற்கு புதிதாக வந்த மாணவன் எங்கே?

மாணவன் : இதோ, உள்ளேன் ஐயா. (மாணவன் வகுப்பின் கடைசி இருக்கையிலிருந்து கூறுகிறான்)

ஆசிரியர் : உன் பெயர் என்ன?

மாணவன் : கவியரசன்.

ஆசிரியர் : அப்படியானால் உனக்கு இருக்க வேண்டிய நீண்ட வாலையும் கூர்மையான நகங்களையும் காணவில்லையே.

*மாணவர்கள் அனைவரும் காரணம் புரியாமல் சிரிக்கின்றனர். அதற்கு ஆசிரியர் கூறிய விளக்கம் பின்வருமாறு அமைந்தது.] ‘கவி என்றால் குரங்கு என்று இன்னொரு பொருளும் உண்டு. ஆகவேதான் நீ குரங்குகளின் அரசனானால் உன் வாலையும், கூரிய நகங்களையும் எங்கே என்றேன்’ என விளக்கினார்.

*****************THE END OF 1.3*********************

1.4 உரைநடையின் அணிநலன்கள்


கற்பவை கற்றபின்

1.நீங்கள் படித்தவற்றுள் நினைவில் நீங்கா இடம் பெற்ற இலக்கியத் தொடர்கள், நயங்களை எழுதுக.
Answer:

  • தலைப்பு : நேரம்
  • தவிர்க்க வேண்டிய சொல் : கடிகாரம்
  • குறிப்பு : ஒரு நிமிடம் பேச வேண்டும். தமிழ்ச்சொற்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். ஐந்து வினாடிகளுக்கு மேல் இடைவெளி இருத்தல் கூடாது.


  • >என்பர் தமிழ்ச் சான்றோர். காலம் நமக்காக காத்திருப்பதில்லை. நான் செலவழித்த மணித்துளிகள் மீண்டும் கிடைப்பதில்லை. குறித்த நேரத்தில் குறித்த செயலைச் செய்பவன் பிறரால் மதிக்கப்படத் தக்கவன். காந்தியடிகளிடம் காணப்படும் சிறந்த பண்புகளில் ஒன்று காலம் தவறாமை. குறித்த நேரத்தில் குறித்த செயலைச் செய்வதற்காகவே காந்தியடிகள் தன் இடையில் (இடுப்பு) எப்பொழுதும் 
  • சூழல் – வெளிநாட்டிலிருந்து உங்கள் இல்லத்திற்கு வந்திருக்கும் உறவினரின் மகளுக்குத் தமிழ் மொழியைப் பேச மட்டுமே தெரியும். ஆங்கில இலக்கியம் படித்த அவரிடம் தமிழ் உரைநடையின் சிறப்புப் பற்றி உரையாடுதல்.
  • உணர்ச்சிகளைக் காட்ட உவமை கொண்ட மொழிநடையே ஏற்ற கருவியாக விளங்குவதால் தற்காலத்திலும் இதனைப் பயன்படுத்துவதைப் பல இலக்கியங்களில் காண முடிகிறது.
  • ‘திருப்பரங்குன்றத்தின் அழகைப் பார்ப்பதற்கென்றே இயற்கை பதித்து வைத்த இரண்டு பெரிய நிலைக் கண்ணாடிகளைப் போல் வடபுறமும் தென்புறமும் நீர் நிறைந்த கண்மாய்கள்’ என்று, ‘குறிஞ்சி மலர்’ என்னும் நூலில் நா. பார்த்தசாரதி உவமையைப் பயன்படுத்தியுள்ளார்.
  • இக்கால இலக்கியங்களில் உவமையை விட உருவகமே உணர்வுகளைத் தூண்டி எழுப்புவதில் வெற்றி பெறுகின்றது. முகநிலவில் வியர்வை முத்துகள் துளிர்த்தன’ என்று உருவகமாக எழுதுகிறார்கள்.
  • ‘களம்புகத் துடித்து நின்ற உனக்கு, வெற்றிச்சாறு கிடைத்துவிட்டது, உண்டு மகிழ்ந்தாய் உன் புன்னகை தான் அதற்குச் சான்று’ என்பது இக்காலத்தில் வாழ்ந்த அறிஞர் அண்ணாவின் உரைநடை ஆகும்.
  • என்னும் குறட்பாவில் உவம உருபு மறைந்து வருவதால் எடுத்துக்காட்டு உவமையணி என்பர். இவ்வணியை உரைநடையில் பயன்படுத்துகையில் இணை ஒப்பு’ என்று கூறுவர்.
  • ‘ஊர் கூடிச் செக்குத் தள்ள முடியுமா? என்று கேட்கிறார்கள். ஊர் கூடின பிறகு தான் செக்குத் தள்ள வேண்டும் என்று காத்திருப்பவர்களின் காரியம் கை கூடாது, புரோகிதருக்காக அமாவாசை காத்திருப்பதில்லை ‘ என்று எழுத்தாளர் வ. ராமசாமி ‘மழையும் புயலும்’ என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
  • ஒன்றை விளக்குவதற்கு அதனோடு தொடர்புடைய பிறிதொன்றைக் கூறி விளக்குவதே உவமை என்பர். அந்த வகையில் அக்காலத்தில் செய்யுள்களில் பயன்படுத்தப்பட்ட உவமை, இக்காலத்தில் உரைநடையிலும் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இது உணர்ச்சிகளைக் காட்ட ஏற்ற கருவியாகவும் விளங்குகிறது.
  • சங்க இலக்கியம் நம் பாட்டனார் தோப்பாகவும், இடைக்கால இலக்கியம் நம் தந்தையார் தோட்டமாகவும், இக்கால இலக்கியம் நம் பூங்காவாகவும் விளங்குகிறது. தோப்பு ஈந்த பயன்களையும் தோட்டம் தந்த நயங்களையும் பூங்காவின் அழகினையும் ஒன்று சேர்த்து உரைநடையின் அணிநலன்களாக அவை விளங்குவதைக் காண்போம்.
  • சங்கப் பாடல்களுக்குப் பின், தமிழ் இலக்கியம் அற இலக்கியங்களாகி, காப்பியங்களாகி, சிற்றிலக்கியங்களாகி, சந்தக் கவிதைகளாகி, புதுக்கவிதைகளாகி, இன்றைய நிலையில் நவீன கவிதைகளில் வந்து நிற்கிறது. உரைநடையின் வளர்ச்சியில் சிறுகதை, கட்டுரை, புதினம் என்ற வடிவங்கள் உருவாகியுள்ளன.
  • அஃறிணைப் பொருள்களையும் உயர்திணையாகக் கருதிக் கற்பனை செய்து எழுதுவது இலக்கணத்தில் உண்டு. தொல்காப்பியர், ‘ஞாயிறு, திங்கள், நெஞ்சம் போன்ற அஃறிணைப் பொருள்கள். சொல்லுந போலவும், கேட்குந போலவும் சொல்லியாங்கு அமையும்’ (செய்யுளியல், 192) என்று எழுதும் திறத்தைக் குறிப்பிட்டிருக்கிறார். உயிர் இல்லாத பொருட்களை உயிர் உள்ளன போலவும், உணர்வு இல்லாத பொருள்களை உணர்வுடையன போலவும் கற்பனை செய்வதுண்டு என்று எடுத்துக்காட்டியிருக்கிறார். இதனை உரைநடையில் இலக்கணை’ என்று கூறுவர்.
  • “சோலையில் புகுவேன்; மரங்கள் கூப்பிடும்: விழுந்து வைக்கும், ஆலமரநிழலில் அமர்வேன்’, ஆல், என் விழுதைப் பார். அந்த அரசுக்கு இஃது உண்டா ? என்னும். அரசு கண்ணிற்படும். ‘யான் விழுதின்றி வானுற ஓங்கி நிற்கிறேன், என்னை மக்கள் சுற்றிச் செல்கிறார்கள், காண்’ என்னும். வேம்பு என் நிழல் நலஞ்செய்யும். என் பூவின் குணங்களைச் சொல்கிறேன் வா’ என்னும். அத்தி, நாகை, விளா, மா, வில்வம் முதலிய மரங்கள் விளியாமலிருக்குமோ? சிந்தனையில் அவைகளின் நுட்பங்கள் விளங்கும். மலை என்னை அடிக்கடி அழைக்கும். மலைமீது இவர்வேன் ஒரிடத்தில் அமர்வேன் மேலும் கீழும் பார்ப்பேன் சுற்றுமுற்றும் பார்ப்பேன். மனம் அமைதி எய்தும்.என்ற தமிழ்த்தென்றல் திரு.வி. கல்யாண சுந்தரனாரின் எழுத்துகள் அஃறிணைப் பொருள்களை உயர்திணையாகக் கருதி எழுதப்பட்டிருப்பதற்குச் சான்றாகிறது.
  • மோனையும் எதுகையும் செய்யுளில் வருமாயின் இனிய ஓசையின்பம் விளையும். இவற்றினை உரைநடையிலும் பயன்படுத்துவர்.
  • ‘சான்றாக, ‘தென்றல் அசைந்துவரும் தென்தமிழ் நாட்டில் அமைந்த திருக்குற்றாலம், மலைவளம் படைத்த பழம்பதியாகும். அம்மலையிலே, கோங்கும் வேங்கையும் ஓங்கி வளரும் குரவமும் முல்லையும் நறுமணங் கமழும்! கோலமாமயில் தோகை விரித்தாடும்; தேனுண்ட வண்டுகள் தமிழ்ப் பாட்டிசைக்கும்; இத்தகைய மலையினின்று விரைந்து வழித்திறங்கும் வெள்ளருவி வட்டச் சாலையிலே வீழ்ந்து பொங்கும் பொழுது சிதறும் நீர்த்திவலைகள் பாலாவியோற் பரந்தெழுந்து மஞ்சினோடு சேர்ந்து கொஞ்சிக் குலாவும்’ என்று சொல்லின் செல்வர் இரா.பி. சே. தமிழன்பம் என்னும் நூலில் எழுதியுள்ளமையைக் கூறலாம்.
  • வெளிப்பாட்டிற்கும் சொல்லப்படும் கருத்திற்கு அழுத்தம் தரவும் உரைநடையில் சொல்லையோ கருத்தையோ திரும்பத்திரும்பச் சொல்வதுண்டு. சொற்களை அளவாகப் பயன்படுத்தி உரைநடையை அழகு செய்ய மு. வரதராசனார், தம் நாட்டுப்பற்று என்னும் கட்டுரைத் தொகுப்பில், ‘வாழ்க்கை நடத்துவதற்குப் பொருள்கள் பல வேண்டும். அரிசி, காய், கனி முதலியவை வேண்டும். உடை, வீடு முதலியவை வேண்டும். காசும் காகித நோட்டும் வேண்டும், இன்னும் பல வேண்டும். இவற்றை ஆளும் அறிவும் வேண்டும்’ என்று எழுதியிருக்கிறார்.
  • படிப்பவருக்கு முரண்படுவது போல இருப்பினும் உண்மையில் முரண்படாத – மெய்ம்மையைச் சொல்லுவது முரண்பாடு மெய்ம்மை’ ஆகும்.
  • ‘இந்த உலகத்தில் பயம் என்ற ஒன்றிற்குத் தவிர வேறு எதற்கு நாம் பயப்பட வேண்டும்?’ சொல்லும் முறையில் அழுத்தம் கொடுப்பதற்காக எதிரும் புதிருமான முரண்படும் கருத்துகளை அமைத்து எழுதுவதை எதிரிணை இசைவு’ என்பர்.
  • ‘குடிசைகள் ஒரு பக்கம்; கோபுரங்கள் மறுபக்கம்; பசித்த வயிறுகள் ஒரு பக்கம்; புளிச்சேப்பக்கார்கள் மறுபக்கம்; மெலிந்த எலும்புக்கூடுகள் ஒரு பக்கம்; பழுத்த தொந்திகள் மறுபக்கம்; கேடு கெட்ட இந்தச் சமுதாயத்திற்கு என்றைக்கு விமோசனம்? தோழர்களே, சிந்தியுங்கள்! என்று தோழர் ப. ஜீவானந்தம் எழுதியிருப்பது இதற்கு எடுத்துக்காட்டாக அமைகிறது.
  • விடைத்தர வேண்டிய தேவை இல்லாமல் கேள்விலேயே பதில் இருப்பதைப் போலவும் எழுதுவது உணர்ச்சி வெளிப்பாட்டுக்கு உதவக் கூடியதாக இருக்கிறது. சான்றாக, ‘அவர் (பெரியார் ஈ. வெ. ரா) பேசாத நாள் உண்டா ? குரல் கேட்காத ஊர் உண்டா ? அவரிடம் சிக்கித் திணறாத பழமை உண்டா ? எதைக் கண்டு அவர் திகைத்தார்? எந்தப் புராணம் அவரிடம் தாக்குதலைப் பெறாதது? …….. எனவே தான் பெரியாருடைய பெரும் பணியை நான் ஒரு தனி மனிதனின் வரலாறு என்றல்ல ஒரு சகாப்தம். ஒரு கால கட்டம்- ஒரு திருப்பம் – என்று கூறுகிறேன்’ என்னும் பெரியாரைப் பற்றிய அறிஞர் அண்ணாவின் கூற்றினைக் கூறலாம்.
  • உரைநடையில் சொல்லையோ கருத்தையோ அடுத்தடுத்து வைக்கும் முறையிலே உள்ள சிறப்பினை உச்சநிலை’ என்பர்.
  • ‘இந்தியா தான் என்னுடைய மோட்சம்! இந்தியாவின் நன்மைதான் என் நன்மை. இந்தியா தான் என் இளமையின் மெத்தை என் யௌவனத்தின் நந்த வனம் என் கிழக்காலத்தின் காசி’ என்று பாரதி என்னும் தமிழ்க்கவிஞர் நம் நாட்டை உயர்த்திக் கூறுவதைச் சான்றாகக் கூறலாம்.
  • ஈராயிரம் ஆண்டுகட்கு மேலாக எல்லா வளத்துடனும் காலமாற்றத்திற்கு ஏற்றவாறு தகவமைத்துக் கொள்கின்ற நம் தாய்மொழியாகிய தமிழ், தற்கால உரைநடை வடிவத்திலும் மிகுந்த செழுமையுடன் விளங்குவதை அறிய முடிகிறது.ம் பார்க்கும் கருவியைத் தொங்கவிட்டிருப்பார்.
2.கொடுத்த தலைப்பில் பேசுவோம்.
Answer:
இது போன்று வேறு வேறு தலைப்புகளில் வகுப்பறையில் பேசிப் பழகுக.

Answer:
நேரகாலம் தவறாமையைக் கடைபிடிப்பீர்!
காலத்தை வீண் செய்யாதீர்!!
காலம் நம்மை வாழ்த்தும்.

பாடநூல் வினாக்கள்

நெடுவினா

1.ஒரு பக்க அளவில் உரையாடல் எழுதுக.
Answer:
பங்குபெறுவோர் – தமிழன், உறவினர் மகள்

உறவினர் மகள் : வணக்கம் ஐயா.
தமிழன் : வணக்கம்
உறவினர் மகள் : உரையாடல், உரைநடை என்றால் என்ன?
தமிழன் : நீயும் நானும் பேசினால் உரையாடல். அதையே எழுதினால் உரைநடை.
உறவினர் மகள் : உரைநடை வளர்ச்சி பற்றி உங்கள் கருத்து யாது?
தமிழன் : உரைநடையில் எதுகை மோனை போன்ற அணிகளோ இல்லை. ஆனால்
அடுக்கு மொழிகள் உண்டு. கவிதையானது செயற்கைத் தன்மை கொண்டது.
உரைநடையோ இயல்பான ஒழுங்கில் அமையும்.
உறவினர் மகள் : தமிழ் உரைநடையின் வேறு வகைகள் உண்டா ?
தமிழன் : உண்டு. பொதுவாக உரைநடையினை ஆறு பிரிவுகளாகப் பிரிக்கலாம். விளக்க உரைநடை, அளவை உரைநடை, எடுத்துரை உரைநடை, வருணனை உரைநடை, நாடக உரைநடை, சிந்தனை உரைநடை.
உறவினர் மகள் : எனக்கு வருணனை உரைநடையைப் பற்றி கூற முடியுமா?
தமிழன் : கூறுகிறேன். வருணனை உரைநடை என்பது புலனுணர்வு அனுபவங்களை வருணனையாக விவரிப்பது. மக்கள், உயிரினங்கள், பொருள்கள் ஆகியவற்றைவருணிப்பது.
உறவினர் மகள் : உரைநடையில் ஓசை இன்பம் ஏற்படுமா?
தமிழன் : எதுகை, மோனைச் சொற்களை மிகுதியாகப் பயன்படுத்தி உரையாசிரியர்கள் பலர் உரையெழுதி உள்ளனர். எடுத்துக்காட்டாக இரா. பி. சேதுபிள்ளையின் தமிழின்பம் என்னும் நூலைக் கூறலாம்.
உறவினர் மகள் : உரைநடையில் இலக்கிய உத்திகள் உண்டா ?
தமிழன் : உண்டு. மு.வ. உரைநடையில் உவமை, எதுகை, மோனை சொல்லாட்சி போன்ற நான்கு உலக உத்திகளைக் கையாண்டுள்ளார்.
உறவினர் மகள் : உரைநடையில் மோனை நயம் உள்ளதா?
தமிழன் : உள்ளது. சான்றாக, இரா.பி. சேதுபிள்ளையின் ‘தமிழ் விருந்து’ என்னும் நூலில் ‘கலையும் கற்பனையும்’ என்ற தலைப்பில் அமைந்த கட்டுரையில்,
‘மலையிலே மழை பொழிந்து வெள்ளம் பொங்கி எழுகின்றது.
அருவியாய் விழுந்து ஆறாய் பாய்கிறது’ என்பதை அறிய முடிகிறது.
உறவினர் மகள் : மோனையும், இயைபும் வருவதுபோல் உரைநடை சொல்லுங்கள் ஐயா!
தமிழன் : சொல்கிறேன். இரா.பி.சேதுபிள்ளையின் ‘உமறுப்புலவர்’ எனும் கட்டுரையில், பாண்டிய நாட்டில் பருவமழை பெய்யாது ஒழிந்தது, பஞ்சம் வந்தது, பசி நோயும் மிகுந்தது.
உறவினர் மகள் : ஐயா கடைசியாக, முரண் நயம் பற்றி மட்டும் கூறுங்கள் ஐயா!
தமிழன் : முரண் என்பது முரண்பட்ட இரண்டுச் சொற்கள் அருகருகே அடுக்கி வருதல். இரா.பி.சேதுபிள்ளையின் ‘ஊரும் பேரும்’ என்னும் நூலில், வாழ்வும் தாழ்வும் நாடு நகரங்களும் உண்டு. சீரும் சிறப்பும் உற்று விளங்கிய சில நகரங்கள் இக்காலத்தில் புகைபடிந்த ஓவியங்கள் போல் பொலிவிழந்து உள்ளது.
உறவினர் மகள் : மிக்க நன்றி ஐயா. தங்களிடமிருந்து உரைநடையின் சிறப்பினை நன்கு அறிந்து கொண்டேன்.
தமிழன் : வணக்கம்!

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1.முதல் தமிழ்க்கணினி உருவாக்கப்பட்ட ஆண்டு
அ) 1983
ஆ) 1938
இ) 1893
ஈ) 1980
Answer:
அ) 1983

2.முதல் தமிழ்க் கணினிக்குச் சூட்டப்பட்ட பெயர்
அ) திருவள்ளுவர்
இ) அகத்தியர்
ஈ) கம்ப ர்
Answer:
அ) திருவள்ளுவர்

3.புதிய உரைநடை என்னும் நூலினை எழுதியவர்
அ) க. அப்பாதுரை
ஆ) எழில் முதல்வன்
இ) பாவாணர்
ஈ) இளங்குமரனார்
Answer:
ஆ) எழில் முதல்வன்

4.எழில் முதல்வனின் இயற்பெயர்
அ) மா. இராமலிங்கம்
ஆ) க. அப்பாதுரை
இ) பாவாணர்
ஈ) இளங்குமரனார்
Answer:
அ) மா. இராமலிங்கம்

5.எழில் முதல்வனின் சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற நூல்
அ) புதிய உரைநடை
ஆ) இனிக்கும் நினைவுகள்
இ) யாதுமாகி நின்றாய்
ஈ) எங்கெங்கு காணினும்
Answer:
அ) புதிய உரைநடை

6.எழில் முதல்வன் கற்றல் கற்பித்தல் பணியை மேற்கொண்ட கல்லூரி
அ) புதுக்கல்லூரி
ஆ) மாநிலக் கல்லூரி
இ) இராணி மேரிக்கல்லூரி
ஈ) குடந்தை அரசு ஆடவர் கல்லூரி
Answer:
ஆ) மாநிலக் கல்லூரி
7.சங்கப் புலவரிடம் இணையத் தமிழன் எவ்விலக்கியங்களைக் குறித்து உரையாடிக் கொண்டிருந்தான்?
அ) சங்க இலக்கியம்
ஆ) பக்தி இலக்கியம்
இ) உரைநடை இலக்கியம்
ஈ) சிற்றிலக்கியம்
Answer:
இ) உரைநடை இலக்கியம்

8.“உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அது உருவகமாகும்” – என்றவர்
அ) தொல்காப்பியர்
ஆ) பவணத்தியார்
இ) தண்டி
ஈ) அகத்தியர்
Answer:
இ) தண்டி

9.“இயற்கை பதித்து வைத்த இரண்டு பெரிய நிலைக் கண்ணாடிகளைப் போல் வடபுறமும் தென்புறமும் நீர் நிறைந்த கண்மாய்கள்” என்று குறிஞ்சிமலர் நூலில் நா. பார்த்தசாரதி பயன்படுத்திய நயம்
அ) உவமை
ஆ) உருவகம்
இ) எடுத்துக்காட்டு உவமையணி
ஈ) சிற்றிலக்கியம்
Answer:
அ) உவமை
10.எடுத்துக்காட்டு உவமையணியை உரைநடையில் பயன்படுத்துகையில் அதனை எப்படி அழைப்பர்?
அ) இலக்கணை
ஆ) இணை ஒப்பு
இ) முரண்படு மெய்ம்மை
ஈ) சொல்முரண்
Answer:
ஆ) இணை ஒப்பு

11.குடிசையின் ஒருபக்கம் கோபுரங்கள் மறுபக்கம்; பசித்த வயிறுகள் ஒரு பக்கம் புளிச் சேப்பக்காரர்கள் மறுபக்கம்; மெலிந்த எலும்புக் கூடுகள் ஒருபக்கம் பருத்த தொந்திகள் மறுபக்கம் – தோழர் ப. ஜீவானந்தம் உரைநடை எதற்கு எடுத்துக்காட்டு?
அ) எதிரிணை இயைபு
ஆ) முரண்படு மெய்ம்மை
இ) இலக்கணை
ஈ) சொல்முரண்
Answer:
அ) எதிரிணை இயைபு

12.உணர்வுகளைத் தூண்டி எழுப்புவதில் வெற்றிபெறுவன?
Answer:
அ) உவமையை விட உருவகமே
ஆ) உருவகத்தை விட உவமையே
இ) எதுகையை விட மோனையே
ஈ) கேள்வியிலே பதில் இருப்பது போல
Answer:
அ) உவமையை விட உருவகமே

நெடுவினா

1.உணர்ச்சிகளைக் காட்ட உவமை கொண்ட மொழிநடையே ஏற்ற கருவி என்பதை நிறுவுக.
Answer:
முன்னுரை:
குறிஞ்சிமலர் என்னும் நூலில் நா. பார்த்தசாரதி:
அறிஞர் அண்ணாவின் உரைநடை:
எடுத்துக்காட்டு உவமை அணியும் இணை ஒப்பும்:
“புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும்”
மழையும் புயலும் என்னும் நூலில் வ. ராமசாமி:
முடிவுரை:

*******************THE END OF 1.4***************************

1.5. எழுத்து, சொல்

I. பலவுள் தெரிக

‘கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது’ – தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே
  1. பாடிய; கேட்டவர்
  2. பாடல்; பாடிய
  3. கேட்டவர்; பாடிய
  4. பாடல்; கேட்டவர்
விடை : பாடிய; கேட்டவர்

II. குறு வினா

I. “வேங்கை” என்பதைத் தொடர்மொழியாகவும், பொது மொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.
வேங்கை : வேங்கை என்னும் மரத்தைக் குறிக்கும் (தனி மொழி)
வேம்+கை : வேகின்ற கை எனவும் பொருள் தருகிறது (தொடர் மொழி)
2. “உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண் வற்றாகும் கீழ்”
-இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி, அதன் இலக்கணம் தருக.

உடுப்பதூம் உண்பதூஉம் : இன்னிசை அளபெடை வந்துள்ளது.
செய்யுளில் ஓசை குறையாத இடத்தும் இனிய ஓசைக்காக அளபெடுப்பது இன்னிசை அளபெடையாகும்.

III. சிறு வினா

அறிந்தது, அறியாதது, புரிந்தது, புரியாதது, தெரிந்தது, தெரியாதது, பிறந்தது, பிறவாது இவை அனைத்தையும் யாம் அறிவோம். ஆதுபற்றி உமது அறிவுரை எமக்கு தேவை இல்லை, எல்லாம் எமக்குத் தெரியும்,

இக்கூற்றில் வண்ண எழுத்தக்களில் உள்ள வினைமுற்றுகளைத் தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக.
தொழிற்பெயர் எதிர்மறைத் தொழிற்பெயர்

எழுத்து, சொல் – கூடுதல் வினாக்கள்

I. குறு வினா

1. சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்
  • உயிர்மெய்
  • ஆய்தம்
  • உயிரளபெடை
  • ஒற்றளபெடை
  • குற்றியலுகரம்
  • குற்றியலிகரம்,
  • ஐகாரக்குறுக்கம்
  • ஔகாரக்குறுக்கம்
  • மகரக்குறுக்கம்
  • ஆய்தக்குறுக்கம் ஆகிய பத்தும் சார்பெழுத்துகள் ஆகும்.
2. ஒற்றளபெடை என்றால் என்ன? சான்று தருக
  • செய்யுளில் ஓசை குறையும்போது அதனை நிறைவுசெய்ய மெய்யெழுத்துகளான ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல், ள் ஆகிய பத்தும், ஃ என்னும் ஆய்த எழுத்தும் அளபெடுப்பது ஒற்றளபெடை ஆகும்.
  • எஃஃ கிலங்கிய கையராய் இன்னுயிர்
  • வெஃஃ குவார்க்கில்லை வீட
3. தொழிற்பெயர் என்றால் என்ன?
  • ஒரு வினை அல்லது செயலைக் குறிக்கும் பெயரானது எண் இடம், காலம், பால் ஆகியவற்றைக் குறிப்பாகவோ வெளிப்படையாகவோ உணர்த்தாமல் வருவது தொழிற்பெயர் எனப்படும்.
எ. கா. :- ஈதல், நடத்தல்
4. எதிர்மறைத் தொழிற்பெயர் என்றால் என்ன?
எதிர்மறைப் பொருளில் வருவது எதிர்மறைத் தொழிற்பெயர் ஆகும்.
எ. கா. நடவாமை, கொல்லாமை
5. விகுதி பெற்ற தொழிற் பெயர்கள் விளக்குக?
  • வினையடியுடன் விகுதி சேர்வதால் உருவாகும் தொழிற்பெயர் விகுதி பெற்ற தொழிற் பெயர் ஆகும்.
  • ஒரே வினையடி பல விகுதிகளையும் ஏற்கும்.
எ. கா.   நட என்பது வினையடி
6. தொழிற்பெயர்க்கும் வினையாலணையும் பெயர்க்கும் உள்ள வேறுபாடுகளை அட்டவணைப்படுத்தக
தொழிற்பெயர்         
  • வினை, பெயர்த் தன்மையாகி வினையையே உணர்த்தி நிற்கும்.
  • காலம் காட்டாது
  • படர்க்கைக்கே உரியது
  • எ.கா. பாடுதல், படித்தல்
வினையாலணையும் பெயர்
  • தொழிலைச் செய்யும் கருத்தாவைக் குறிக்கும்.
  • காலம் காட்டும்
  • மூவிடத்திற்கும் உரியது
  • எ.கா. பாடியவள், படித்தவர்

I. நெடு வினா

1. உயிரளபெடை என்றால் என்ன? அதன் வகைகளை விவரி.

  • செய்யுளில் ஓசை குறையும் போது, அதனை நிறைவு செய்ய, மொழிக்கு முதலிலும் இடையிலும் இறுதியிலும் நிற்கிற உயிர் நெட்டெழுத்துகள் ஏழும் தத்தம் அளவில் நீண்டு ஒலிக்கும். அதைக் குறிக்க நெ ட்டெழுத்துகளின் இனமான குற்றெழுத்துகள் அவற்றின் பின்னால் வரும். இவ்வாறு வருவது உயிரளபெடை எனப்படும்.

உயிரளபெடை மூன்று வகைப்படும்.

அ) செய்யுளிசை அளபெடை
  • செய்யுளில் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்ய, நெட்டெழுத்துகள்
  • அளபெடுத்தலைச் செய்யுளிசை அளபெடை என்போம். இதனை இசை நிறை அளபெடை என்றும் கூறுவர்.
  • ஓஒதல் வேண்டும் – மொழி முதல்
  • உறாஅர்க்கு உறுநோய் – மொழியிடை
  • நல்ல படாஅ பறை – மொழியிறுதி
ஆ) இன்னிசை அளபெடை
  • செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசைக்காக அளபெடுப்பது இன்னிசை அளபெடை ஆகும்.
  • கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே
  • எடுப்பதூஉம் எல்லாம் மழை.
இ) சொல்லிசை அளபெடை
  • செய்யுளில் ஒரு பெயர்ச்சொல் எச்சச் சொல்லாகத் திரிந்து அளபெடுப்பது
  • சொல்லிசை அளபெடை ஆகும்.
  • உரனசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
  • வரனசைஇ இன்னும் உளேன்.
  • நசை – விருப்பம்; விரும்பி என்னும் பொருள் தருவதற்காக நசைஇ என அளபெடுத்தது. பெயர்ச்சொல் வினை அடையாக மாறியது.

2. மூவகை மொழி வகைகளை விவரி.
தனி மொழி, தொடர்மொழி, பொதுமொழி என மொழி மூன்று வகையாக அமையும்.
தனி மொழி:-
  • ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருமாயின் அது தனிமொழி எனப்படும்.
எ. கா.
கண், படி – பகாப்பதம்
கண்ணன், படித்தான் – பகுபதம்
தொடர் மொழி:-
  • இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமொழிகள் தொடர்ந்து வந்து பொருள்
  • தருவது தொடர்மொழி ஆகும்.
எ. கா.
கண்ணன் வந்தான்.
மலர் வீட்டுக்குச் சென்றாள்.
பொது மொழி:-
  • ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும் அச்சொல்லே பிரிந்து நின்று வேறு பொருளையும் தந்து தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைவது பொதுமொழி எனப்படும்.
எ. கா.
எட்டு – எட்டு என்ற எண்ணைக் குறிக்கும்.
வேங்கை – வேங்கை என்னும் மரத்தைக் குறிக்கும்.

கற்பவை கற்றபின்…

1. தேன், நூல், பை, மலர், வா – இத் தனிமொழிகளுடன் சொற்களைச் சேர்த்துத் தொடர்மொழிகளாக்குக.
  • தேன் – தேன் மருந்துப் பொருளாக பயன்படுகிறது
  • நூல் – நூல் பல கல்
  • பை – பை நிறைய பணம் இருந்தது
  • மலர் – மலர் பறித்து வந்தேன்
  • வா – விரைந்து வா
2. வினை அடியை விகுதிகளுடன் இணைத்துத் தொழிற்பெயர்களை உருவாக்குக.
  • காண், சிரி, படி, தடு
  • காண் – காட்சி, காணுதல், காணல், காணாமை
  • சிரி –  சிரிப்பு, சிரித்தல், சிரிக்காமை
  • படி – படிப்பு, படித்தல், படிக்காமை
  • தடு – தடுப்பு, தடுத்தல், தடுக்காமை
3. தனிமொழி, தொடர்மொழி ஆகியவற்றைக் கொண்டு உரையாடலைத் தொடர்க.
அண்ணன் : எங்கே செல்கிறாய்? (தொடர் மொழி )
தம்பி : கடைக்கு (தனி மொழி)
அண்ணன் : இப்போது என்ன வாங்குகிறாய்? (தொடர் மொழி)
தம்பி : பருப்பு வாங்குகிறேன். (தொடர் மொழி)
அண்ணன் : எதற்கு? (தனி மொழி)
தம்பி : பருப்பு சோறு செய்ய அம்மா வாங்கி வரச்சொன்னார்கள் (தொடர்மொழி)
அண்ணன் : இன்று பருப்பு சோற வேண்டாமென்று அம்மாவிடம் சொல்வோம் (தொடர் மொழி)
தம்பி : சரி இன்று அம்மாவை பிரியாணி செய்து தரச்சொல்வோம் (தொடர் மொழி)

4. மலை என்னை அடிக்கடி அழைக்கும். மலைமீது ஏறுவேன் ; ஓரிடத்தில் அமர்வேன்; மேலும் கீழும் பார்ப்பேன்; சுற்றுமுற்றும் பார்ப்பேன். மனம் அமைதி எய்தும்.’
இத்தொடர்களில் உள்ள வினைமுற்றுகளைத் தனியே எடுத்தெழுதித் தொழிற்பெயர்களாக மாற்றுக.
வினைமுற்று     தொழில் பெயர்
அழைக்கும்     அழைத்தல்
ஏறுவேன்             ஏறுதல்
அமர்வேன்             அமர்தல்
பார்ப்பேன்         பார்த்தல்
எய்தும்                 எய்தல்

III. எண்ணுப்பெயர்களைக் கண்டு, தமிழ் எண்களில் எழுதுக.

  • Vowel – உயிரெழுத்து
  • Consonant – மெய்யெழுத்து
  • Homograph – ஒப்பெழுத்து
  • Monolingual – ஒரு மொழி
  • Conversation – உரையாடல்
  • Discussion – கலந்துரையாடல்

வினையடி       விகுதி     தொழிற்பெயர்

நட                     தல்                  நடத்தல்
வாழ்                கை             வாழ்க்கை
ஆள்                  அல்                ஆளல்


5. கட்டு, சொட்டு, வழிபாடு, கேடு, கோறல் – இத்தொழிற்பெயர்களை வகைப்படுத்துக.

  • கட்டு – முதனிலைத் தொழிற்பெயர்
  • சொட்டு – முதனிலைத் தொழிற்பெயர்
  • வழிபாடு – விகுதி பெற்ற தொழிற்பெயர்
  • கேடு – முதனிலைத் தொழிற்பெயர்
  • கோறல் – விகுதி பெற்ற தொழிற்பெயர்

மொழியை ஆள்வோம்!

I. மாெழிபெயர்ப்பு
1. If you talk to a man in a language he understands, that goes to his head. If you talk to him in his own language that goes to his heart – Nelson Mandela
நீங்கள் ஒரு மனிதனிடம் ஏதாவது ஒரு மொழியில் பேசினால் அதை அவன் புரிந்து கொண்டு அவன் மூளைக்குச் செல்கிறது. ஆனால் அவனுடைய மொழியல் பேசினால் அது அவன் நெஞ்சத்தை தொடும் – நெல்சன் மண்டேலா

2. Language is the road map of a culture. It tells you where its people come from and where they are going – Rita Mae Brown
மொழியே கலாச்சாரத்தில் வழிகாட்டி. அதுவே மக்கள் எங்கிருந்து வந்தார்கள் மற்றும் எங்குப் போகிறார்கள் என்பதைச் சொல்லும் – ரிட்டா மே பிரவுண்

II. சந்தக் கவிதையில் வந்த பிழைகளைத திருத்துக.

“தேணிலே ஊரிய செந்தமிழின் – சுவை
தேரும் சிலப்பத் காறமதை
ஊனிர்லே எம்முயிர் உல்லலவும் – நிதம்
ஓதி யுனர்நதின புருமவாமே”
– கவிமணி தேசிக விநாயகனார்
விடை:-
“தேனிலே ஊறிய செந்தமிழின் – சுவை
தேறும் சிலப்பத் காரமதை
ஊனிலே எம்முயிர் உள்ளவும் – நிதம்
ஓதி யுணர்நதின புறுமவாமே”
– கவிமணி தேசிக விநாயகனார்

III. கீழ்க்காணும் சொற்களின் கூட்டப்பெயர்களைக் கண்டுபிடித்து எழுதுக.

(குவியல், குலை, மந்தை, கட்டு)
சொல்     கூட்டப்பெயர்
கல்                 கற்குகுவியல்
பழம்         பழக்குலை
புல்                 புற்கட்டு
ஆடு         ஆட்டுமந்தை


IV. வினைமுற்றை வினையாலணையும் பெயராக மாற்றித் தொடர்களை இணைத்து எழுதுக.

1. கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறார். அவரை அழைத்து வாருங்கள்.

  • கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறவரை அழைத்து வாருங்கள்.
2. ஊட்டமிகு உணவு உண்டார். அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.
  • ஊட்டமிகு உண்டவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்
3. நேற்று என்னைச் சந்தித்தார். அவர் என் நண்பர்.
  • நேற்று என்னைச் சந்தித்தவர் என் நண்பர்
4. பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தார். போட்டித் தேர்வில் வென்றார்.
  • பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தவர் போட்டித் தேர்வில் வென்றார்.

V. தொடர்களில் உள்ள வண்ணச் சொற்களுக்குப் பதிலாக அதே பொருளுடைய வேறு சொற்களைப் பயன்படுத்தித் தொடர்களை மீள எழுதுக.

1. உலகில் வாழும் மக்களில் சிலர் கனியிருக்கக் காய் புசித்தலைப்போல, இன்சொல் இருக்க வன்சொல் பேசி இன்னற்படுகின்றனர்.

  • புவியில் வாழும் மானுடர்கள் சிலர் பழயிருக்கக் காய் உண்பதைப்போல, இன்சொல் இருக்க வன்சொல் பேசி துன்பப்படுகின்றனர்.
2. வள்ளல் குமணன் வறுமையால் வாடிவந்த புலவனுக்குத் தனது தலையைக் கொடுத்து மங்காப் புகழ் பெற்றான்.
  • வள்ளல் குமணன் ஏழ்மையால் வாடிவந்த அறிஞர்களுத் தனது தலையைக் ஈந்து மங்காப் பெருமை பெற்றான்.
3. நளனும் அவனது துணைவியும் நிடதநாட்டுக்கு வந்ததைக் கண்டு, அந்நாட்டு மக்கள் மழைமுகில் கண்ட மஞ்ஞை போலக் களி கொண்டனர்
  • நளனும் அவனது மனைவியும் நிடதநாட்டுக்கு வந்ததைக் கண்டு, அந்நாட்டு மக்கள் மழைமேகம் கண்ட மயில் போலக் மகிழ்ச்சி கொண்டனர்.
4. சோலையிற் பூத்த மணமலர்களில் சுரும்புகள் மொய்த்துப் பண்பாடி மதுவுண்டன.
  • நந்தவனத்தில் பூத்த மணமலர்களில் வண்டுகள் மொய்த்துப் பண்பாடி தேனைவுண்டன.
5. பசுப்போல் சாந்தமும் புலிபோல் தீரமும் யானை போல உழைப்பும் மனிதனுக்கு வேண்டும்.
  • “ஆ”ப்போல் அமைதியும் வேங்கைபோல் வீரமும் களிறு போல உழைப்பும் மனிதனுக்கு வேண்டும்

மொழியோடு விளையாடு!

I. சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.
தேன், விளக்கு, மழை, விண், மணி, விலங்கு, செய், மேகலை, வான், பொன், பூ
  • பூமணி
  • மணிமேகலை
  • தேன்மழை
  • மழைத்தேன்
  • மணிவிளக்கு
  • வான்மழை
  • விண்மணி
  • பொன்மணி
  • பொன்விலங்கு
  • செய்வான்
  • பொன்விளக்கு
  • பூமழை
  • பூவிலங்கு

II. குறிப்புகளைக் கொண்டு வினாவிலேயே விடை இருப்பது போன்று வினாத்தொடர்கள் அமைக்க.
(குறளின்பம், சுவைக்காத இளநீர், காப்பியச் சுவை, மனிதகுல மேன்மை, விடுமுறைநாள்)
1. குறளின்பம்

  • குறளின்பத்தில் திளைக்காத தமிழன் உண்டா?
2. சுவைக்காத இளநீர்
  • மனிதர்கள் சுவைக்காத இளநீர் உண்டோ?
3. காப்பியச் சுவை
  • நீ காப்பியச் சுவையை அறிந்துள்ளாயா?
4. மனிதகுல மேன்மை
  • இக்காலங்களில் மனிதகுல மேன்மை சிறப்புற உள்ளதா?
5. விடுமுறை நாள்
  • தேரோட்டம் அன்ற உள்ளூர் விடுமுறை நாள் என அறிவிக்கப்படுமா?


IV. அகராதியில் காண்க.

1. அடவி
காடு
2. அவல்
பள்ளம்
3. சுவல்
பிடரி, முதுகு
4. செறு
வயல், கோபம்
5. பழனம்
வயல்
6. புறவு
சிறுகாடு

Post a Comment

புதியது பழையவை