9th Standard Tamil Guide Unit 4
9th Standard Tamil Unit 4 Book Back & Additional Answers
TN Students Guide
9th Standard Tamil Unit 5 Full Answers Key. Book Back and Additional Question and answers. 9th tamil guide. 9th Standard Tamil Nadu Syllabus Samacheer kalvi Gide.
இயல் 4.1. இயந்திரங்களும் இணையவழிப்
பயன்பாடும்
இயல் 4.2. ஓ, என் சமகாலத் தாேழர்களே!
இயல் 4.3. உயிர்வகை
இயல் 4.4. விண்ணையும் சாடுவோம்
இயல் 4.5. வல்லினம் மிகா இடங்கள்
4.1. இயந்திரங்களும் இணையவழிப் பயன்பாடும்
I. பலவுள் தெரிக
1. கீழ்க்காணும் மூன்று தொடர்களுள்அ. இருந்த இடத்திலிருந்தே பயணச்சீட்டு எடுப்பதை எளிதாக்கிய மிகப் பெரிய இந்திய நிறுவனம் இந்தியத் தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் ஆகும்.
ஆ. வங்கி அட்டை இல்லை என்றால் அலைபேசி எண், வங்கிக் கணக்கு எண் ஆகியவற்றைக் கொண்டு பணம் செலுத்துதல் இயலாது.
இ. திறன் அட்டைகள் என்பவை குடும்ப அட்டைகளுக்கு மாற்றாக வழங்கப்பட்டனவாகும்.
- அ, ஆ ஆகியன சரி; இ தவறு
- அ, இ ஆகியன சரி; ஆ தவறு
- அ தவறு; ஆ, இ ஆகியன சரி
- மூன்றும் சரி
2. தமிழ்நாடு அரசு கிராமப்புற மாணவர்களுக்கு நடத்தும் திறனாய்வுத் தேர்வு எது?
- தேசியத் திறனாய்வுத் தேர்வு
- ஊரகத் திறனாய்வுத் தேர்வு
- தேசியத் திறனாய்வு மற்றும் கல்வி உதவித் தொகைத் தேர்வு
- மூன்றும் சரி
II. குறு வினா
இணைய வழியில் இயங்கும் மின்னனு இயந்திரங்கள் எவையேனும் ஐந்தினைக் குறிப்பிடுக.தொலைநகல் இயந்திரம்
தானியக்கப் பண இயந்திரம்
அடடைப் பயன்படுத்தும் இயந்திரம்
திறனட்டைக் கருவி
ஆளறி சோதனைக் கருவி
II. சிறு வினா
பள்ளி மாணவர்களுக்கான தமிழக அரசின் இணையவழிச் சேவைகளை எழுதுகவகுப்பு கல்வி உதவித் தொகை தேர்வு
10-ம் வகுப்பு மாணவர்கள் தேசியத்திறனாய்வுத் தேர்வு (NTSE)
8-ம் வகுப்பு மாணவர்கள் தேசியத்திறனாய்வு மற்றும் கல்வி உதவித் தொகைத் தேர்வு (NMMS)
9-ம் வகுப்பு கிராமப் பள்ளி மாணவர்கள் ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST)
இத்தேர்வுகளை இணையம் மூலம் பள்ளியிலேயே விண்ணப்பிக்கலாம்
10 மற்றும் 12-ம் வகுப்பு முடித்தவர்கள், அவர்கள் பள்ளியிலேயே அரசு வேலை வாய்ப்பகப் பதிவினைச் செய்யலாம்
விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி பெற்றவர்களின் விவரங்கள் இணையம் மூலம் கணினியில் பதிவேற்றம் செய்யப்படுகின்றது.
III. நெடு வினா
அட்டைப் பயன்படுத்தம் இயந்திரம்:-
கையில் பணம் இல்லாமல் கடைக்குச் சென்று பொருள் வாங்கவும் மற்ற வணிக பரிமாற்றங்களுக்கும் இந்தக் கருவி பயன்படுகிறது.
இந்த இயந்திரத்தில் வங்கி அட்டையின் காந்தப்பட்டை இருக்கும் பகுதியைத் தேய்க்கும் போது வாடிக்கையாளரின் விவரங்கள், இணையத் தொடர்பின் மூலம் வங்கி கணினிக்கு செல்கிறது.
கணினியால் அட்டை ஆராயப்பட்டு கடவுச்சொல் சரிபார்க்கப்பட்டு பண பரிவர்த்தனைக்கு வங்கி ஒப்புதல் அளிக்கின்றது.
திறன் அட்டைக் கருவி:-
தமிழகத்தில் குடும்ப அட்டைகள் திறன் அட்டைகளாக மாற்றப்பட்டுள்ளன.
குடும்பத்தில் உள்ளவர்களின் ஆதார் எண்கள், அலைபேசி எண், முகவரி ஆகிய விவரங்கள் சேர்த்து திறன் அட்டைகள் வழங்கப்படுகின்றன.
நியாயவிலைக் கடையில் திறன் அட்டை விற்பனைக்கருவியில் வருடப்படுகின்றன.
அங்கு விற்பனை செய்யப்படும் விவரங்கள் குறிப்பாக பதிவு செய்யப்பட்டு அலைப்பேசிக்கு குறுஞ்செய்தியாக வரும்.
இயந்திரங்களும் இணையவழிப் பயன்பாடும் – கூடுதல் வினாக்கள்
கோடிட்ட இடத்தை நிரப்புக
1. குறுஞ்செய்தியின் வருகைக்குப்பின் ______________ விடை பெற்றது.விடை : தந்தி
2. அறிவியல் முன்னேற்றத்தால், மனிதனின் ______________ குறைந்துள்ளது.
விடை : பயணநேரம்
3. கிரேக்க மொழியில் சீரோகிராஃபி என்றால் ______________ என்று பொருள்.
விடை : உலர் எழுத்துமுறை
4. 1959 ______________ ஒளிப்படி இயந்திரத்தினை கண்டுபிடித்தார்
விடை : செஸ்டர் காரல்சன்
5. 1865-ல் பாரிஸ் நகரிலிருந்து லியான் நகரத்துக்குத் ______________ தொடங்கப்பட்டது.
விடை : தொலைநகல் சேவை
6. ______________ பான்டெலி கிராஃப் என்ற தொலைநகல் கருவியை வடிவத்தார்.
விடை : ஜியோவான்னி காசில்லி
7. ______________ தமிழக அரசின் நியாய விலைக்கடைகளில் பயன்படுத்தப்படுகிறது.
விடை : திறன் அட்டை
8. 1967 ஜீன் 27 ______________ இலண்டனில் நிறுவப்பட்டது
விடை : தானியக்கப் பண இயந்திரம்
II. குறு வினா
இணையவழிப் பயன்பாடு வாழ்வை எளிதாக்கி, நேரத்தையும், உழைப்பையும் வீணாக்காமல் தடுக்கிறது.
2. ஒளிப்படி இயந்திரம் காரணம் யாது?
நியூயார்க்கைச் சேர்ந்த காப்புரிமைச் சட்ட வல்லுநரும் பகுதி நேர ஆய்வாளருமான செஸ்டர் கார்ல்சன் (chester Carlson), தம் தொழிலுக்காக நிறைய காகிதங்களைப் படி எடுக்க வேண்டியிருந்தது. அந்தப் பணிச்சுமையே அவரை இப்புதிய கண்டுபிடிப்பை நோக்கித் தள்ளியது .
3. தொலைநகல் இயந்திரத்தின் பயன் யாது?
தொலைநகல் இயந்திரம் கோப்புகளையும் ஒளிப்படங்களையும் உடனடியாக ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு அனுப்பப் பயன்படுகிறது.
4. இன்று வாழ்க்கை எதில் உருள்கின்றது?
வங்கிகள் தரும் அட்டைகளில் இன்று வாழ்க்கை உருள்கின்றது.
5. அட்டைத்தேப்பி இயந்திரத்தின் வேறு பெயர்கள் எவை?
- கட்டணம் செலுத்தும் கருவி
- விற்பனைக் கருவி
- ஆதார் எண்
- அலைபேசி எண்
- முகவரி
II. சிறு வினா
- 1979-ல் மைக்கல் ஆல்டரிச் இணைய வணிகத்தைக் கண்டுபிடித்தார்
- 1989-ல் அமெரிக்காவில் இணையவழி மளிகைக்கடை தொடங்கப்பட்டது.
- கரும்பு முதல் கணினி வரை இன்று விற்காத பொருளே இணைய வணிகத்தில் இல்லை
- கல்விக் கட்டணங்கள் மற்றும் தேர்வுக் கட்டணங்கள் இணையம் வழியாக கட்டலாம்.
- தேர்வு அறை அடையாள்ச் சீட்டு பதிவிறக்கம் செய்யலாம்.
- போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
- தொழிற் கல்வி நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
***********************THE END OF 4.1*************************
4.2. ஓ, என் சமகாலத் தாேழர்களே!
I. இலக்கணக்குறிப்பு
- பண்பும் அன்பும் – எண்ணும்மை
- இனமும் மொழியும் – எண்ணும்மை
- சொன்னோர் – வினையாலணையும் பெயர்
II. பகுபத உறுப்பிலக்கணம்
- பொருத்துங்கள் = பொருத்து + உம் + கள்
- பொருத்து – பகுதி
- உம் – முன்னிலைப் பன்மை விகுதி
- கள் – விகுதி மேல் விகுதி
III. பலவுள் தெரிக
பின்வரும் தொடர்களைப் படித்து ‘நான்’ யார் என்று கண்டுபிடிக்க.- அறிவியல் வாகனத்தில் நிறுத்தப்படுவேன்
- எல்லாக் கோளிலும் ஏற்றப்படுவேன்
- இளையவர் கூட்டம் என்னை ஏந்தி நடப்பர்
- இணையம்
- தமிழ்
- கணினி
- ஏவுகணை
IV. குறு வினா
கூட்டுப்புழுவை எடுத்துக்காட்டிக் கவிஞர் உணர்த்தும் கருத்துக்களை எழுதுக.கூட்டுப்புழு தான் பட்டுப்பூச்சியாய் மாறும். அவை கொண்ட பொறுமையும் அடக்கமும் தான்.
V. சிறு வினா
அறிவியல் வாகனத்தில் ஆளும் தமிழை நிறுத்துங்கள்
கரிகாலன் புகழைக் கணினியுள்ளே பொறுத்துங்கள்.
திசையில் ஏவும் அன்பைப் போல இருந்த இனத்தை மாற்றுங்கள்.
ஏவுகணையில் தமிழை எழுதி அனைத்து கோள்களிலும் ஏற்றுங்கள்.
என்று கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் வைக்கிறார்
ஓ, என் சமகாலத் தாேழர்களே! – கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
விடை : பத்மபூஷண்
2. கள்ளிக்காட்டு இதிகாசம் புதினத்துக்காக 2003ஆம் ஆண்டு _________________ பெற்றவர்.
விடை : சாகித்திய அகாதெமி விருது
3. அறவியலும் அறிவியலும் இணைந்து வளர்ந்தது _________________
விடை : தமிழ்ச்சமூகம்
4. பண்பும் _________________ பழையவை
விடை : அன்பும்
5. அறிவியல் வானத்தில் ஆளும் _________________ நிறுத்த வேண்டும்.
விடை : தமிழை
6. கூட்டுப்புழு _________________ ஆக மாறும்
விடை : பட்டுப்பூச்சியாய்
II. குறு வினா
அறவியலும் அறிவியலும் இணைந்து வளர்ந்தது தமிழ்ச்சமூகம்.
2. தற்காலப் படைப்பாளர்கள் எதனை வலியுறுத்துகின்றன?
அறவியலாேடு அறிவியல் கண்ணோட்டமும் வளர்க்கப்பட வேண்டும் என தற்காலப் படைப்பாளர்கள் வலியுறுத்துகின்றன.
3. கரிகாலன் எந்த நாட்டின் மன்னன் ஆவான்?
கரிகாலன் சோழ நாட்டின் மன்னன் ஆவான்
4. கரிகாலன் பெருமைகள் எதில் பொருத்தப்பட வேண்டும்?
கரிகாலன் பெருமைகள் கணிப்பொறியினுள் பொருத்தப்பட வேண்டும்
5. உணர்ச்சி தொலைந்த அறிவு எதைப் போன்றது?
உணர்ச்சி தொலைந்த அறிவு எரியும் தீயை இழந்த திரி போன்றது
6. புதியவை என வைரமுத்து கூறுவது என்ன?
இனமும் மொழியும் புதியவை என வைரமுத்து கூறுகிறார்
7. பழையவை என வைரமுத்து கூறுவது என்ன?
பண்பு, அன்பு பழையவை என வைரமுத்து கூறுகிறார்
8. அறிவை மறந்த உணர்ச்சி எதைப் போன்றது?
அறிவை மறந்த உணர்ச்சி திரியை மறந்த தீயைப் போன்றது
9. எல்லாக் கோள்களிலும் எதனை ஏற்ற வேண்டும் என கவிஞர் வைரமுத்து கூறுகிறார்?
ஏவுகணைகளில் தமிழை எழுதி எல்லாக் கோள்களிலும் ஏற்ற வேண்டும் என கவிஞர் வைரமுத்து கூறுகிறார்
III. சிறு வினா
- இந்தி
- தெலுங்கு
- மலையாளம்
- வங்காளம்
- ஆங்கிலம் – உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
- கவிஞர் வைரமுத்து தேனி மாவட்டத்திலுள்ள மெட்டூர் என்னும் ஊரில் பிறந்தவர்.
- இந்திய அரசின் உயர்ந்த விருதுகளுள் ஒன்றான பத்மபூஷண் விருதினைப் பெற்றவர்.
- கள்ளிக்காட்டு இதிகாசம் புதினத்துக்காக 2003ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்.
- இந்தியாவின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை ஏழு முறையும், மாநில அரசின் விருதினை ஆறு முறையும் பெற்றவர்.
- இவருடைய கவிதைகள் இந்தி, தெலுங்கு, மலையாளம், வங்காளம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
*****************THE END OF 4.2********************
4.3. உயிர்வகை
I. இலக்கணக்குறிப்பு
உணந்தோர் – வினையாலணையும் பெயர்II. பகுபத உறுப்பிலக்கணம்
நெறிப்படுத்தினர் = நெறிப்படுத்து + இன் + அர்- நெறிப்படுத்து – பகுதி
- இன் – இறந்தகால இடைநிலை
- அர் – பலர் பால் வினைமுற்று விகுதி
III. பலவுள் தெரிக
பின்வரும் தொடர்களைப் படித்து ‘நான்’ யார் என்று கண்டுபிடிக்க.- அறிவியல் வாகனத்தில் நிறுத்தப்படுவேன்
- எல்லாக் கோளிலும் ஏற்றப்படுவேன்
- இளையவர் கூட்டம் என்னை ஏந்தி நடப்பர்
- இணையம்
- தமிழ்
- கணினி
- ஏவுகணை
IV. குறு வினா
மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கேநான்கறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே
இவ்வடிகளில் தொல்காப்பியர் குறிப்பிடும், மூவறிவு, நான்கறிவு, ஐந்தறிவு உயிர்கள் யாவை?
மூவறிவு கரையான், எறும்பு
நான்கறிவு நண்டு, தும்பி
ஐந்தறிவு பறவை, விலங்கு
V. சிறு வினா
புல், மரம் ஆகியன ஓரறிவு உயிர்கள் (தொடு உணர்வு)
சிப்பி, நத்தை ஆகியன ஈரறிவு உயிர்கள் (தொடு உணர்வு+நுகர்தல்)
கரையான், எறும்பு ஆகிய மூவறிவு உயிர்கள் (தொடு உணர்வு+சுவை+நுகர்தல்)
நண்டு, தும்பி ஆகியன நான்கறிவு உயிர்கள் (தொடு உணர்வு+சுவை+நுகர்தல்+காணல்)
பறவை, விலங்கு ஆகியன ஐந்தறிவு உயிர்கள் (தொடு உணர்வு+சுவை+நுகர்தல்+காணல்+கேட்டல்)
மனிதன் ஆறறிவு உயிர்கள் (தொடு உணர்வு+சுவை+நுகர்தல்+காணல்+கேட்டல்+பகுத்தறிவு)
உயிர்வகை – கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. _______________ தமிழ்மொழியில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல்விடை : தொல்காப்பியம்
2. தொல்காப்பியம் ______________ இயல்களை உடையது
விடை : 37
3. புல், மரம் ஆகியன _______________
விடை : ஓரறிவு உயிர்கள்
4. தமிழர்களின் அறிவாற்றலுக்கு சிறந்த சான்று _______________
விடை : தொல்காப்பியம்
5. நண்டு, தும்பி ஆகியன _______________
விடை : நான்கறிவு உயிர்கள்
II. குறு வினா
1. அறிவு என்பதை நாம் எவ்வாறு பெறுகிறோம்?கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றயியும் ஐம்புல உணர்வுகளின் வாயிலாக அறிவு என்பதை நாம் பெறுகிறோம்.
2. அறிவுக்குரிய பொறிகள் யாவை?
- கண்
- காது
- வாய்
- மூக்கு
- உடல்
உயிரினங்களைப் புலன்களின் எண்ணிக்கை அடிப்படையில் முன்னோர்கள் பகுத்தனர்.
4. மூவறிவு உயிர்கள் அறியும் ஆற்றல் யாவை? மூவறிவு உயிர்களுக்கு சான்று தருக.
5. ஆறறிவு உயிர்கள் அறியும் ஆற்றல் யாவை? ஆறறிவு உயிர்க்கு சான்று தருக.
6. தொல்காப்பியம் எத்தனை அதிகாரங்களை கொண்டுள்ளது?
எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று அதிகாரங்களை கொண்டுள்ளது
- தொடு உணர்வு
- சுவை
- நுகர்தல்
- சான்று : கரையான், எறும்பு
- கரையான், எறும்பு ஆகிய மூவறிவு உயிர்கள் (தொடு உணர்வு+சுவை+நுகர்தல்)
- தொடு உணர்வு
- சுவை
- நுகர்தல்
- காணல்
- கேட்டல்
- பகுத்தறிவு
- சான்று : மனிதன்
எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று அதிகாரங்களை கொண்டுள்ளது
7. தொல்காப்பியத்தின் பொருள் அதிகாரம் எதனை விளக்குகிறது?
பொருள் அதிகாரம் தமிழர்களின் அகம், புறம் சார்ந்த வாழ்வியல் நெறிகளையும், தமிழ் இலக்கிய கோட்பாடுகளையும் விளக்குகிறது,
8. தொல்காப்பியத்தின் எழுத்து, சொல் அதிகாரங்கள் எதனை விளக்குகிறது?
எழுத்து, சொல் அதிகாரங்கள் மொழி இலக்கணங்களை விளக்குகிறது.
III. சிறு வினா
தொல்காப்பியம் சிறு குறிப்பு வரைக- தமிழ்மொழியில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல்
- இதன் ஆசிரியர் தொல்காப்பியர்
- எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று அதிகாரங்களை கொண்டுள்ளது
- 37 இயல்களை உடையது
- எழுத்து, சொல் அதிகாரங்கள் மொழி இலக்கணங்களை விளக்குகிறது.
- பொருள் அதிகாரம் தமிழர்களின் அகம், புறம் சார்ந்த வாழ்வியல் நெறிகளையும், தமிழ் இலக்கிய கோட்பாடுகளையும் விளக்குகிறது,
- பல அறிவியல் கருத்துகளை கொண்டது.
- பிறப்பியல் எழுத்துக்கள், பிறக்கும் இடங்களை உடற்கூற்றியல் அடிப்படையில் விளக்கியிருக்கிறது
- தமிழர்களின் அறிவாற்றலுக்கு சிறந்த சான்று
********************THE END OF 4.3***************************
4.4. விண்ணையும் சாடுவோம்
I. பலவுள் தெரிக
விடை வரிசையைத் தேர்க.அ) இது செயற்கைக்கோள் ஏவு ஊர்தியின் செயல்பாட்டை முன்கூட்டியே கணிக்கும்.
ஆ) இது கடல்பயணத்துக்காக உருவாக்கப்ப ட்ட செயலி.
- நேவிக், சித்தாரா
- நேவிக், வானூர்தி
- வானூர்தி, சித்தாரா
- சித்தாரா, நேவிக்
II. குறு வினா
- சித்தாரா செயலி செயற்கைக்கோள் ஏவுஊர்தி பற்றிய முழு விவரங்களையும் மின்னிலக்க முறையில் சேகரிக்கும்.
- வாகனத்தின் செயல்பாடு எப்படியிருக்கும் என்பதை முன் கூட்டியே கணிக்கலாம்.
- கல்லைத் தூக்கி வீசும் போகு, அது விழும் திசை, கோணம், நேரம், அழுத்தம் ஆகியவற்றை தெரிவிப்பது சித்தாராவின் பணி எனலாம்.
III. சிறு வினா
- ஆண்டு விவசாயம் மூலம் விளைச்சலைக் கண்டுபிடித்தல், நிலத்திற்கு ஏற்ற நீரின் அளவு எவ்வளவு இருக்கும் என்பதைக் கண்டறிதல்.
- கடலில் மீனவர்களுக்கு மீன்கள் அதிகமாகக் கிடைக்கும் இடத்தைச் சொல்கின்றது.
- திறன்பேசி, தானியக்கப் பண இயந்திரம், அட்டைப் பயன்படுத்ம் இயந்திரம் ஆகியவற்றிகுச் செயற்கைக்கோள் பயன்படுகிறது.
IV. நெடு வினா
இந்திய விண்வெளித்துறை
முன்னுரை:-
- இந்திய விண்வெளித் துறையில் அப்துல்கலாம், மயில்சாமி அண்ணாத்துரை, வளர்மதி, சிவன் ஆகியோரன் பங்கு அளப்பரியதாகும். இந்தியர்கள் வானியியல் வல்லமையை வலுப்படுத்தும் பல்வேறு செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளித்துறை படைத்துள்ளது.
- இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) பெங்களூரில் உள்ளது. திரு.கே.சிவன் என்பவர் 14.1.2018 முதல் இதன் தலைவராக உள்ளார்,
- குறைந்த செலவில் தரமான் சேவையை கொடுப்பதனை நோக்கமாக இஸ்ரோ கொண்டுள்ளது.
- இதுவரை 45 செயற்கைக்கோள் வின்னில் செலுத்தப்பட்டுள்ளன.
- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் உலகின் மிகப் பெரிய் விண்வெளி ஆய்வு மையத்தில் ஆறாவது இடத்தை பெற்றுள்ளது.
- 1975-ல் இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் ஆரியப்பட்டா சோவியத் ரஷ்யா உதவியால் விண்ணில் செலுத்தப்பட்டது. விக்ரம் சாராபாய் இதற்கு மூல காரணம் ஆவார்
- 1980-ல் முதல் செயற்கைக் கோள் ரோகிணி விண்ணில் ஏவப்பட்டது.
- சந்திராயன்-1 நிலவை நோக்கி 2008-ல் விண்ணில் ஏவப்பட்டது.
- நேவிக் என்ற செயலியைக் கடல் பயணத்திற்கு உருவாயிக்கியிருக்கிறது.
- நம் நாட்டிற்கு தேவையான செயற்கைக் கோளை விண்ணில் அனுப்பி நம் தேவைகளை நிறைவு செய்வதே இஸ்ரோவின் செயல்பாடு
விண்ணையும் சாடுவோம் – கூடுதல் வினாக்கள்
I. குறு வினா
- அப்துல் கலாம்
- மயில்சாமி அண்ணாதுரை
- வளர்மதி
- சிவன்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) தலைவராகப் பொறுப்பேற்றுள்ள முதல் தமிழர் சிவன் ஆவார்.
3. அப்துல்கலாம் ‘இந்திய ஏவுகணை நாயகன்’ என போற்றப்பட காரணம் யாது?
ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவு ஊர்தித் தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமி ன் ஈடுபாட்டினால் அவர் ‘இந்திய ஏவுகணை நாயகன்’ என்று போற்றப்படுகின்றார்.
4. இஸ்ரோவின் செயற்கைக்கோள் திட்ட இயக்குநராகப் பணியாற்றிய இரண்டாவது பெண் அறிவியல் அறிஞர் யார்?
இஸ்ரோவின் செயற்கைக்கோள் திட்ட இயக்குநராகப் பணியாற்றிய இரண்டாவது பெண் அறிவியல் அறிஞர் வளர்மதி ஆவார்.
5. ‘இளைய கலாம்’ என்று அழைக்கப்படுபவர் யார்?
‘இளைய கலாம்’ என்று அழைக்கப்படுபவர் மயில்சாமி அண்ணாதுரை ஆவார்.
II. சிறு வினா
1. விக்ரம் சாராபாய் பற்றிய குறிப்பு வரைக- விக்ரம் சாராபாய் ‘இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை’ என்று அழைக்கப்படுகிறார்.
- ஆரியபட்டா என்ற முதல் செயற்கைக்கோள் ஏவுதலுக்குக் காரணமானவர்.
- செயற்கைக்கோள் உதவியுடன் தொலைக்காட்சி வழியாக 24,000 இந்திய கிராமங்களில் உள்ள ஐம்பது இலட்சம் மக்களுக்குக் கல்வியை எடுத்துச் செல்ல உதவினார்.
- இவரின் பெயரால் ‘விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்’ திருவனந்தபுரத்தில் செயல்பட்டுவருகிறது.
- இங்கு, வானூர்தியியல் (Aeronautics), வான்பயண மின்னணுவியல் (Avionics), கூட்டமைப் பொருள்கள் (Composites), கணினி – தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் ஆராய்ச்சிகளும் வடிவமைப்புகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
- இவருடைய முயற்சியால்தான் இஸ்ரோ தொடங்கப்பட்டது.
- இந்தியாவின் 1 1ஆவது குடியரசுத் தலைவராகப் பணியாற்றிய இந்திய அறிவியலாளர்.
- தமிழ்நாட்டின் இராமேசுவரத்தைச் சேர்ந்தவர்.
- ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவு ஊர்தித் தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் ஈடுபாட்டினால் அவர் ‘இந்திய ஏவுகணை நாயகன்’ என்று போற்றப்படுகின்றார்.
- பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும் விண்வெளிப் பொறியாளராகப் பணியாற்றினார் .
- இந்தியாவின் உயரிய விருதான பாரதரத்னா விருது பெற்றவர்.
- இவர் தம் பள்ளிக் கல்வியைத் தமிழ்வழியில் கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- அரியலூரில் பிறந்த இவர், 2015இல் தமிழ்நாடு அரசின் அப்துல்கலாம் விருதைப் பெற்ற முதல் அறிவியல் அறிஞர். இஸ்ரோவில் 1984ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார்.
- 2012இல் உள் நாட்டிலேயே உருவான முதல் ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள் (RISAT-1) திட்டத்தின் இயக்குநராகப் பணியாற்றினார்.
- இவர், இஸ்ரோவின் செயற்கைக்கோள் திட்ட இயக்குநராகப் பணியாற்றிய இரண்டாவது பெண் அறிவியல் அறிஞர் ஆவார்.
- இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் அறிவியலாளர் மற்றும் திட்ட இயக்குநர் ஆவார்.
- திருநெல்வேலி மாவட்டத்தின் ஏர்வாடி அருகில் உள்ள கோதைசேரி என்னும் ஊரைச் சேர்ந்தவர்.
- இயந்திரப் பொறியியலில் பட்டம் பெற்று, 1984இல் திருவனந்தபுரத்திலுள்ள விக்ரம்சாராபாய் விண்வெளி மையத்தில் பணியில் சேர்ந்து,
- தற்போது பெங்களூரில் உ ள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணிபுரிகிறார்.
- 2013இல் மங்கள்யான் செயற்கைக்கோளை உருவாக்கிய இந்தியாவின் செவ்வாய் சுற்றுகலன் திட்டத்தின் திட்ட இயக்குநராக இருக்கின்றார்.
- ‘ இளைய கலாம்’ என்று அன்புடன் அழைக்கப்படும் இவர் கோவை மாவட்டம்
- பொள்ளாச்சி வட்டம், கோதவாடி என்னும் சிற்றூரில் பிறந்தவர்.11ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் தமிழ்வழியில் படித்தவர்.இதுவரை 5 முனைவர் பட்டங்கள் பெற்றுள்ளார். 1982ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணியில் சேர்ந்த இவர் தற்போது இயக்குநராகப் பணிபுரிகிறார்.நம் நாடு நிலவுக்கு முதன் முதலில் அனுப்பிய ஆய்வுக்கலம் சந்திரயான்-1 திட்டத்தின் திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர்.சந்திரயான்-2 திட்டத்திலும் பணியாற்றிவருகிறார்.
- சர்.சி.வி. இராமன் நினைவு அறிவியல் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
- தமது அறிவியல் அனுபவங்களை, கையருகே நிலா என்னும் நூலாக எழுதியுள்ளார்,
***********************THE END OF 4.4**************************
4.5. வல்லினம் மிகா இடங்கள்
I. சிறு வினா
தற்கால உரைநடையில் வல்லினம் மிகா இடங்களை கூறு.வல்லினம் மிகா இடங்கள்
அது, இது என்னும் சுட்டுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது.
சான்று: அது செய், இது காண்
எது, எவை வினாப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது.
எது கண்டாய்? எவை தவறுகள்?
எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது.
குதிரை தாண்டியது, கிளி பேசும்.
மூன்றாம், ஆறாம் வேற்றுமை விரிகளில் வல்லினம் மிகாது.
அண்ணனோடு போ, எனது சட்டை.
விளித் தொடர்களில் வல்லினம் மிகாது.
தந்தையே பாருங்கள், மகளே தா.
பெயரெச்சத்தில் வல்லினம் மிகாது.
வந்த சிரிப்பு, பார்த்த பையன்
இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது.
நாடு கண்டான், கூடு கட்டு
படி என்று முடியும் வினையெச்சத்தில் வல்லினம் மிகாது.
வரும்படி சொன்னார், பெறும்படி கூறினார்.
வியங்கோள் வினைமுற்றுத் தொடரில் வல்லினம் மிகாது.
வாழ்க தமிழ், வருக தலைவா!
வினைத்தொகையில் வல்லினம் மிகாது.
குடிதண்ணீர், வளர்பிறை, திருவளர்செல்வன்
ஆ) பெரிய __தம்பி : குறிப்புப் பெயரச்சத்தில் வல்லினம் மிகாது.
இ) சிறிய __ பறவை : குறிப்புப் பெயரச்சத்தில் வல்லினம் மிகாது.
ஈ) பழகு __தமிழ் : வினைத்தொகையில் வல்லினம் மிகாது.
உ) இது __கேள் : இது என்னும் சுட்டுப் பெயர்களில் வல்லினம் மிகாது.
ஊ) எலி __ கடிக்கும் : எழுவாய் தொடரில் வல்லினம் மிகாது.
எ) ஓடிய __ குதிரை : பெயரச்சத்தில் வல்லினம் மிகாது.
ஏ) தரும்படி __ சொன்னார் : “படி” என முடியும் வினையெச்சத்தில் வல்லினம் மிகாது.
ஐ) வாழ்க __ தலைவர் : வியங்கோள் வினைமுற்றுத் தொடரில் வல்லினம் மிகாது.
ஒ) கார் __ காலம் : காலப் பெயர்ச்சொல் எனவே வல்லினம் மிகாது.
“கள் என்னும் பன்மை விகுதி சேரும்போது வல்லினம் இடுதல் கூடாது.
ஆ) எழுத்து__ கள்
“கள் என்னும் பன்மை விகுதி சேரும்போது வல்லினம் இடுதல் கூடாது.
இ) திருநிறை __ செல்வன்
“திருநிறை” ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்படும் தொடரில் வல்லினம் இடுதல் கூடாது.
ஈ) திருவளர் __ செல்வி
“வளர்செல்வி” வினைத்தொகையில் வல்லினம் இடுதல் கூடாது.
காரணம்:- “அண்ணாமலை என்னும் பெயரை அடுத்து” வல்லினம் இடுதல் கூடாது. “இருபெயரொட்டுப் பண்புத் தொகையில்” வல்லினம் மிகும்.
எனவே பல்கலைக்கழகம் என்பதில் வல்லினம் இட்டு எழுவதும் சரியே
கற்பவை கற்றபின்…
I. வல்லினம் வருமா?
அ) தோழி __ கூற்று : நிலைமொழி உயர்திணையாய் அமையும் பெயர்த் தொகையில் வல்லினம் மிகாது.ஆ) பெரிய __தம்பி : குறிப்புப் பெயரச்சத்தில் வல்லினம் மிகாது.
இ) சிறிய __ பறவை : குறிப்புப் பெயரச்சத்தில் வல்லினம் மிகாது.
ஈ) பழகு __தமிழ் : வினைத்தொகையில் வல்லினம் மிகாது.
உ) இது __கேள் : இது என்னும் சுட்டுப் பெயர்களில் வல்லினம் மிகாது.
ஊ) எலி __ கடிக்கும் : எழுவாய் தொடரில் வல்லினம் மிகாது.
எ) ஓடிய __ குதிரை : பெயரச்சத்தில் வல்லினம் மிகாது.
ஏ) தரும்படி __ சொன்னார் : “படி” என முடியும் வினையெச்சத்தில் வல்லினம் மிகாது.
ஐ) வாழ்க __ தலைவர் : வியங்கோள் வினைமுற்றுத் தொடரில் வல்லினம் மிகாது.
ஒ) கார் __ காலம் : காலப் பெயர்ச்சொல் எனவே வல்லினம் மிகாது.
II. வல்லினம் இடலாமா?
அ) வாழ்த்து __கள்“கள் என்னும் பன்மை விகுதி சேரும்போது வல்லினம் இடுதல் கூடாது.
ஆ) எழுத்து__ கள்
“கள் என்னும் பன்மை விகுதி சேரும்போது வல்லினம் இடுதல் கூடாது.
இ) திருநிறை __ செல்வன்
“திருநிறை” ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்படும் தொடரில் வல்லினம் இடுதல் கூடாது.
ஈ) திருவளர் __ செல்வி
“வளர்செல்வி” வினைத்தொகையில் வல்லினம் இடுதல் கூடாது.
III. எது சரி? எது தவறு? காரணம் கூறுக.
அ) அண்ணாமலைப் பல்கலைக் கழகம் (சரி)காரணம்:- “அண்ணாமலை என்னும் பெயரை அடுத்து” வல்லினம் இடுதல் கூடாது. “இருபெயரொட்டுப் பண்புத் தொகையில்” வல்லினம் மிகும்.
எனவே பல்கலைக்கழகம் என்பதில் வல்லினம் இட்டு எழுவதும் சரியே
ஆ) அத்தனைச் சிறிய (தவறு)
அத்தனை சிறிய என்பதுதான் சரி
காரணம்:- “அத்தனை என்ற சொல்லின் பின்” வல்லினம் இடுதல் கூடாது.
இ) ஆத்திச்சூடி (சரி)
காரணம்:- “அத்தி – அகர ஈறு, இகர ஈறு புணரும் போது” வல்லினம் மிகும்.
ஈ) எடுத்துக்காட்டுகள் (சரி)
காரணம்:- “வன்தொடர் குற்றியலுகரத்தில்” பின் வல்லினம் இட்டு எழுத வேண்டும்.
உ) கீழ்பக்கம் (தவறு)
கீழ்ப்பக்கம் என்பது தான் சரி
காரணம்:- “இருபெயரொட்டுப் பண்புத்தொகையில்” வல்லினம் மிகும்.
ஊ) சான்றோர் பேரவை (சரி)
காரணம்:- “நிலை மொழியில் உயர்திணை வரும்போது” வல்லினம் இடுதல் கூடாது.
ஒ) சென்னைப் பல்கலைக்கழகம் (சரி)
காரணம்:- “இருபெயரொட்டுப் பண்புத்தொகையில்” வல்லினம் இடுதல் வேண்டும்.
ஓ) தயிர்ச்சோறு (சரி)
காரணம்:- “இருபெயரொட்டுப் பண்புத்தொகையில்” வல்லினம் இடுதல் வேண்டும்.
IV. கீழ்க்காணும் தொடர்களில் வல்லினம் மிகும், மிகா இடங்களைக் கண்டறிந்து அதற்கான இலக்கணம் அறிக.
அ) வங்கி கடன் (வல்லினம் மிகும்) – வங்கிக்கடன்காரணம்:- “இகர ஈற்றில்” வல்லினம் மிகும். (வினையாக வந்தாலும் பெயராக வந்தாலும் வல்லினம் மிகும்)
ஆ) பழங்களை பறிக்காதீர்கள் (வல்லினம் மிகும்) – பழங்களைப் பறிக்காதீர்கள்
காரணம்:- “ஐ” என்னும் “இரணடாம் வேற்றுமை உருபபு வெளிப்படும் தொடர்” அதனால் வல்லினம் மிகும்.
இ) திட்ட குழு (வல்லினம் மிகாது)
காரணம்:- “பெயரச்சத்தில்” வல்லினம் மிகாது.
ஈ) அரசு ஆணை பிறப்பித்தது (வல்லினம் மிகாது)
காரணம்:- ஆணை பிற்ப்பித்தது என்பது “இரண்டாம் வேற்றுமை தொகை” எனவே வல்லினம் மிகாது
உ) மருந்து கடை (வல்லினம் மிகும்) – மருந்துக்கடை
காரணம்:-
“மென் தொடர் குற்றியலுகரத்தின் பின்னும்” வல்லினம் மிகும்.
“இருபெயரொட்டுப் பண்புத்தொகையில்” வல்லினம் மிகும்.
குறிப்பு:- “மென்தொடர் குற்றியலுகரம் எச்சப் பொருளில் வந்தால்” வல்லினம் மிகாது. இச்சொல்லில் “மருந்து” பின் வல்லினம் மிகும்
ஊ) வேலையில்லா பட்டதாரி (வல்லினம் மிகும்) – வேலையில்லாப் பட்டதாரி
காரணம்:- “ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரச்சத்தில்” வல்லினம் மிகும்
எ) சிறப்பு பரிசு (வல்லினம் மிகும்) – சிறப்புப்பரிசு
காரணம்:- “வன்தொடர் குற்றியலுகரத்தில்” வல்லினம் மிகும்
மொழியை ஆள்வோம்!
I. பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்கள்
நாக்குதான் ஐம்புலன்களிலேயே ரொம்ப வீக்கு! அதற்கு நான்கு ஆதார ருசிகள்தாம் தெரியும். எலுமிச்சையின் புளிப்பு, சர்க்கரை யின் தித்திப்பு, காபியின் கசப்பு, உப்பு. இவை தவிர ஸேவரி என்று சொல்கிற டேஸ்ட் எல்லாம் இந்த நான்கு ஆதார ருசிகளின் கலப்புதான். இந்த ருசிகளைத் தொட்டு அறிய நாக்கில் வெவ்வேறு இடங்கள் உண்டு. தித்திப்பு – நுனி நாக்கு, உப்பு – பரவலாக, குறிப்பாக நுனியில். கசப்பு – உள்நாக்கு. புளிப்பு, ஸேவரி – நாக்கின் வலது – இடது புறங்கள்! ஒரு சராசரி மனிதனுடைய நாக்கில் 9,000 சுவை அரும்புகள் உண்டு. அலட்டல் வேண்டாம்.குழந்தையின் நாக்குடன் ஒப்பிடும்போது இது ஒன்றுமே இல்லை. ஏதாவது மருந்தை நாக்கில் தொட்டால் குழந்தைகள் என்னமாக எக்ஸ்பிரஷன் காட்டுகின்றன! சுவைக்கு வாசனையும் சேரவேண்டும். இரண்டும் ஒத்துழைத்தால் தான் பாதாம் அல்வா, ஐஸ்க்ரீம் போன்றவற்றை ரசிக்க முடியும். மூக்கைப் பிடித்துக் கொண்டு ஐஸ்க்ரீம் சாப்பிட்டுப் பாருங்கள். ஜில்லென்று இருக்கும். அவ்வளவே. கூடவே சூடும், உணவின் தோற்றமும் முக்கியம்.
மூக்குக்கு மொத்தம் ஏழு வாசனைகள். கற்பூர வாசனை, பெப்பர்மிண்ட் வாசனை, மலர்களின் வாசனை, மஸ்க் என்னும் அரபுசேக் செண்ட் வாசனை, ஈத்தர் அல்லது பெட்ரோல் வாசனை, அழுகிய முட்டை வாசனை, காட்டமான அமில வாசனை. இந்த ஏழு வாசனைகளின் கலப்புகளால் நம்மால் ஆயிரக்கணக்கான வாசனைகளை உணர முடிகிறது. ( ஏன்? எதற்கு? எப்படி? – சுஜாதா)
சொற்கள் தமிழாக்கம்
- ரொம்ப வீக்கு நிரம்ப சபலம்
- ஆதார ருசிகள் அடிப்படைச் சுவைகள்
- காபி குழம்பி, கோப்பி, கொட்டை வடி நீர்
- ஸேவரி காரசுவையுண்டி
- டேஸ்ட் சுவை
- ருசிகள் சுவைகள்
- சராசரி ஏறத்தாழ
- அலட்டல் அளத்தல்
- எக்ஸ்பிரஷன் விளைவுகள்
- வாசனை நறுமணம்
- பாதாம் அல்வா பாதாம இன்களி
- ஐஸ்க்ரீம் பனிக்குழைவு
- ரசிக்க களிக்க
- ஜில்லென்று குளிர்ச்சி என்று
- கற்பூர வாசனை சூடம் நறுமணம்
- பெப்பர்மிண்ட் வாசனை புதினாச்சுவையுள்ள மிட்டாய்கள்
- மஸ்க் அரபுசேக் செண்ட் ஆண்மானிலிருந்து எடுக்கப் பெற்ற வாசனைத் திரவியம்
- ஈத்தர் தீப்பற்றக் கூடிய பொருள்
- பெட்ரோல் வாசனை கலெநல் (கன்னெய்)
- அமில வாசனை காடிப்புளியம்
II. நயம் பாராட்டுக.
பொங்கியும் பொலிந்தும் நீண்ட புதுப்பிடர் மயிர்சி லிர்க்கும்சிங்கமே! வான வீதி திகுதிகு எனஎரிக்கும்
மங்காத தணற்பி ழம்பே! மாணிக்கக் குன்றே! தீர்ந்த
தங்கத்தின் தட்டே! வானத் தகளியிற் பெருவி ளக்கே!
கடலிலே கோடி கோடிக் கதிர்க்கைகள் ஊன்று கின்றாய்
நெடுவானில் கோடி கோடி நிறைசுடர்க் கைகள் நீட்டி
இடைப்படு மலையோ காடோ இல்லமோ பொய்கை ஆறோ
அடங்கநின் ஒளிஅ ளாவ அமைந்தனை! பரிதி வாழி!
– பாரதிதாசன்
மோனை நயம்
பாடலின் அடி அல்லது சீரில் முதல் எழுத்து ஒரே மாதிரியாக வருவது மோனை
தங்கத்தின் – தகளியில்
கடலிலே – கதிர்க்கைகள்
பாடலின் அடி அல்லது சீரில் முதல் எழுத்து ஒரே மாதிரியாக வருவது மோனை
தங்கத்தின் – தகளியில்
கடலிலே – கதிர்க்கைகள்
எதுகை நயம்
பாடலின் அடி அல்லது சீரில் இரண்டாம் எழுத்து ஒரே மாதிரியாக வருவது எதுகை
பொங்கி – சிங்கேம
தங்கத்தின் – மங்காத
அணி நயம்
இப்பாடலில் சூரியனைத் தங்கத்தட்டு, மாணிக்கப் குன்று என்று உருவகப்படுத்துவதால் உருவக அணி பயின்று வந்துள்ளது.
சந்த நயம்
நாட்டுப்புறச் சிந்து இராகத்தில் இப்பாடலை பாடலாம்.
சுவை நயம்
இப்பாடலில் பெருமிதச் சுவை பயின்றுள்ளது.
மொழியோடு விளையாடு
I. அகராதியில் காண்க.
1. இமிழ்தல்இனிதாதல், ஒலித்தல், கக்குதல்
2. இசைவு
இணக்கம், சம்மதி, பொருத்து, தகுதி, ஏற்றது, உடன்பாடு, ஓட்டம்
3. துவனம்
அக்னி, நெருப்பு
4. சபலை
இலக்குமி, திப்பிலி, நா, மின்னல், வேசி
5. துகலம்
பங்கு
II. ஒரு சொல்லால் தொடரின் இரு இடங்களை நிரப்புக.
(விலங்கு, எழுதி, அகல், கால், அலை)- எண்ணெய் ஊற்றி அகல் விளக்கு ஏற்றியவுடன், இடத்தைவிட்டு அகல்
- எனக்கு கால் பங்கு பிரித்துக் கொடுக்க வா! கீழே ஈரம்; பார்த்து உன் கால் ஐ வை.
- கைப்பொருளைக் கடல் அலையில் தொலைத்துவிட்டு, கரையில் தேடி அலைந்தால் கிடைக்குமா?
- வீட்டு விலங்கு ஆன நாயுடன் விளையாடுவது மகிழ்ச்சி தரும்; வெளியில் அதனைக் கழுத்து விலங்கு உடன் மட்டுமே பிடித்துச் செல்ல வேண்டும்.
- எழுத்தாணி கொண்டு எழுதிய தமிழை, ஏவுகணையில் எழுதி எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள்.
III. ஒரு தொடரில் இருவினைகளை அமைத்து எழுதுக.
(குவிந்து – குவித்து; சேர்ந்து – சேர்த்து; பணிந்து – பணித்து; பொருந்து – பொருத்து; மாறு – மாற்று)1. விரிந்தது – விரித்தது
மழைக்காற்று வீசியதால், பூவின் இதழ்கள் விரிந்தன; மயில் தோகையை விரித்தது.
2. குவிந்து – குவித்து;
காட்டாற்று வெள்ளம் அடித்து வந்த மணல் குவிந்தது ;வாங்கிய மணலை குவித்து வைத்தோம்
3. சேர்ந்து – சேர்த்து;
காசு சேர்ந்தது; அதனால் சேர்த்து வைத்தோம்
4. பணிந்து – பணித்து;
தலைவர் சொல்லுக்கு தொண்டர்கள் பணிந்து நடந்தனர்; மக்கள் பணியில் சேவை செய்யுமாறு பணித்து இருக்கிறார்
5. பொருந்து – பொருத்து;
மேடைப் பேச்சுக்குப் பொருந்துமாறு, உவமைகளை பொருத்திப் பேச வேண்டும்
6. மாறு – மாற்று
கைம்மாறு எதிர்பார்க்காமல் செய்யும் வேலை அனைவரையும் உன் பக்கம் மாற்றும்
கலைச்சொல் அறிவோம்
- ஏவு ஊர்தி – Launch Vehicle
- ஏவுகணை – Missile
- கடல்மைல் – Nautical Mile
- காணொலிக் கூட்டம் – Video Conference
- பதிவிறக்கம் – Download
- பயணியர் பெயர்ப் பதிவு – Passenger Name Record (PNR)
- மின்னணுக் கருவிகள் – Electronic devices

கருத்துரையிடுக