9th Standard Tamil Guide Unit 3
TN Students Guide
9th Standard Tamil Unit 5 Full Answers Key. Book Back and Additional Question and answers. 9th tamil guide. 9th Standard Tamil Nadu Syllabus Samacheer kalvi Gide.
- இயல் 3.1 ஏறு தழுவுதல்
- இயல் 3.2 மணிமேகலை
- இயல் 3.3 அகழாய்வுகள்
- இயல் 3.4 வல்லினம் மிகும் இடங்கள்
- இயல் 3.5 திருக்குறள்
3.1. ஏறு தழுவுதல்
I. பலவுள் தெரிக.
1. பொருந்தாத இணை எது?
- ஏறுகோள் – எருதுகட்டி
- திருவாரூர் – கரிக்கையூர்
- ஆதிச்சநல்லூர் – அரிக்கமேடு
- பட்டிமன்றம் – பட்டிமண்டபம்
விடை : திருவாரூர் – கரிக்கையூர்
2. முறையான தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக.
- தமிழர்களின் வீரவிளையாட்டு தொன்மையான ஏறுதழுவுதல்.
- தமிழர்களின் வீரவிளையாட்டு ஏறுதழுவுதல் தொன்மையான.
- தொன்மையான வீரவிளையாட்டு தமிழர்களின் ஏறுதழுவுதல்.
- தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்.
விடை : தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்.
3. சொற்றொடர்களை முறைப்படுத்துக.
அ) ஏறுதழுவுதல் என்பதை ஆ) தமிழ் அகராதி இ) தழுவிப் பிடித்தல் என்கிறது
- ஆ – அ – இ
- ஆ – இ – அ
- இ – ஆ – அ
- இ – அ – ஆ
விடை : ஆ – அ – இ
II. குறு வினா
1. நீங்கள் வாழும் பகுதியில் ஏறுதழுவுதல் எவ்வாறெல்லாம் அழைக்கப்படுகிறது?
ஜல்லிக்கட்டு
மாடு பிடித்தல்
மஞ்சு விரட்டு
2. ஏறுதழுவுதல் நிகழ்விற்கு இலக்கியங்கள் காட்டும் வேறுபெயர்களைக் குறிப்பிடுக.
ஏறுகோள்
எருதுகட்டி
3. ஏறுதழுவுதல் குறித்துத் தொல்லியல் சான்றுகள் கிடைத்த இடங்களைப் பட்டியலிடுக.
சேலம்
நீலகிரி – கரிக்கையூர்
மதுரை – கல்லூத்து மேட்டுப்பட்டி
தேனி – சித்திரக்கல் புடவு
சிந்துசமவெளி அகழாய்வு
III. சிறு வினா
1. வேளாண் உற்பத்தியின் பண்பாட்டு அடையாள நீட்சியை விளக்குக.
ஏறு தழுவுதல், முல்லை நிலத்து மக்களின் அடையாளம்.
மருத நில வேளாண் மக்களின் தொழில் உற்பத்தியோடும் பாலை நிலத்து மக்களின் தேவைக்கான போக்குவரத்துத் தொழிலோடும் பிணைந்தது.
இதுவே வேளாண் உற்பத்தியின் பண்பாட்டு அடையாளமாக நீட்சி அடைந்தது.
2. ஏறுதழுவுதல், திணைநிலை வாழ்வுடன் எவ்விதம் பிணைந்திருந்தது?
ஏறு தழுவுதல், முல்லை நிலத்து மக்களின் அடையாளம்.
மருத நில வேளாண் மக்களின் தொழில் உற்பத்தியோடும் பாலை நிலத்து மக்களின் தேவைக்கான போக்குவரத்துத் தொழிலோடும் பிணைந்தது.
ஏறுதழுவுதல் இங்கனம் திணைநிலை வாழ்வுடன் பிணைந்துள்ளதை அறியலாம்.
IV. நெடு வினா
1. ஏறுதழுவுதல் தமிழரின் அறச்செயல் என்று போற்றப்படுவதற்கான காரணங்களை விவரிக்க
காளைச் சண்டையைத் தேசிய விளையாட்டாகக் ஸ்பெயின் நாடு கொண்டுள்ளது.
காளையைக் கொன்று அடக்குபவனே வீரனாகக் கருதப்படுவான். அதில் ஆயுதங்களைப் பயன்படுத்துவதும் உண்டு.காளையை அடக்கும் வீரன் வென்றாலும் தோற்றாலும் ஆட்டத்தின் முடிவில் அந்தக் காளை சில நாடுகளில் கொல்லவதும் உண்டு.வன்மத்தையும் போர் வெறியையும் வெளிப்படுத்துவதாகவே இருக்கிறது.தமிழகத்தில் நடைபெறும் ஏறு தழுவுதலில் ஆயுதத்தை பயன்படுத்தக் கூடாது.
நிகழ்வின் தொடக்கத்திலும் முடிவிலும் காளைக்கு வழிபாடு செய்வர்.
எவராலும் அடக்க முடியாத காளைகள் வெற்றி பெற்றதாகக் கருதப்படும்.
அன்பையும் வீரத்தையும் ஒன்றாக வளர்த்தெடுக்கும் இவ்விளையாட்டில் காளையை அரவணைத்து அடக்குபவரே வீரராகப் போற்றப்படுவர்.
2. பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப் பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய செயல்களைத் தொகுத்து எழுதுக.
ஏறுதழுவுதல் விலங்குகளை முன்னிலைப்படுத்தும் வழிபாட்டையும் இயற்கை வேளாண்மையையும் வலியுறுத்தும் பண்பாட்டுக் குறியீடு ஆகும்.
நம் முன்னோர்களின் இத்தகைய பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப் பாதுகாக்க நாம் ஏறுதழுவுதல் நிகழ்வைக் காணவும், ஏறுகளைப் பேணவும் நாம் உறுதி கொள்ள வேண்டும்.
மாட்டுப் பொங்கள் விழாவினைப் பெரிய நிகழ்வாகக் கொண்டாட வேண்டும்.
நமது கலை, பண்பாட்டு நிகழ்வுகளை ஆண்டுதோறும் விழாவாகக் கொண்டாட வேண்டும்.
குழந்தைகளுக்கு நமது பண்பாடுகளையும் வீர விளையாட்டுகளையும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
ஏறு தழுவுதல் – கூடுதல் வினாக்கள்
************THE END OF 3.1 *********************
3.2. மணிமேகலை
I. சொல்லும் பொருளும்
- சமயக் கணக்கர் – சமயத் தத்துவவாதிகள்
- பாடைமாக்கள் – பல மொழிபேசும் மக்கள், குழீஇஒன்றுகூடி
- தோம் – குற்றம்
- கோட்டி – மன்றம்
- பொலம் – பொன்
- வேதிகை – திண்ணை
- தூணம் – தூண்
- தாமம் – மாலை
- கதலிகைக் கொடி -சிறு சிறு கொடியாகப் பல கொடிகள் கட்டியது,
- காழூன்று கொடி – கொம்புகளில் கட்டும் கொடி
- விலோதம் – துணியாலான கொடி
- வசி – மழை
- செற்றம் – சினம்
- கலாம் – போர்
- துருத்தி – ஆற்றிடைக்குறை (ஆற்றின் நடுவே இருக்கும் மணல்திட்டு).
II. சொல்லும் பொருளும்
- தோரணவீதியும் – எண்ணும்மை
- தோமறு கோடடியும் – எண்ணும்மை
- காய்க்குலை கழுகு – இரணடாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
- பூக்கொடிவல்லி – இரணடாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
- முத்துத்தாமம் – இரணடாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
- மாற்றுமின் – ஏவல் வினைமுற்று
- பரப்புமின் – ஏவல் வினைமுற்று
- உறுபொருள் – உரிச்சொல் தொடர்
- தாழ்பூந்துறை – வினைத்தொகை
- பாங்கறிந்து – இரண்டாம் வேற்றுமைத் தொகை
- நன்பொருள் – பண்புத்தொகை
- தண்மணல் – பண்புத்தொகை
- நல்லுரை – பண்புத்தொகை
III. பகுபத உறுப்பிலக்கணம்.
1. பரப்புமின் = பரப்பு +மின்
பரப்பு – பகுதி
மின் – முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி
2. அறைந்தான் = அறை + த்(ந்) + த் +அன் + அன்
அறை – பகுதி
த் – சந்தி (ந்) ஆனது விகாரம்
த் – இறந்த கால இடைநிலை
அன் – சாரியை
அன் – ஆண்பால் வினைமுற்று விகுதி
IV. பலவுள் தெரிக.
ஐம்பெருங்குழு, எண்பேராயம் – சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம்
- திசைச்சொற்கள்
- வடசொற்கள்
- உரிச்சொற்கள்
- தொகைச்சொற்கள்
விடை : தொகைச்சொற்கள்.
V. சிறு வினா
1. பழமணல் மாற்றுமின் புதுமணல் பரப்புமின் – இடஞ்சுட்டி பொருள் விளக்குக
இடம்:-
மணிமேகலை விழாவறைக் காதையில் முரசு கொட்டுபவன் இவ்வரிகளை கூறினான்
பொருள் விளக்கம்:-
புகார் நகரில் 28 நாட்கள் இந்திர விழா நடைபெறுவதால், தெருக்களிலும் மன்றங்களிலும் பழைய மணலை மாற்றிப் புது மணலைப் பரப்புங்கள் என்று முரசு கொட்டுபவன் தெரிவித்தான்.
2. பட்டிமண்டபம், பட்டிமன்றம் இரண்டும் ஒன்றா? விளக்குக எழுதுக
பட்டிமன்றம், பட்டிமண்டபம் இரண்டும் ஒன்றே!
விளக்கம்:-
புலவர்கள் சொற்போரிட்டு வாதிடும் இடம் பட்டிமண்டபம் ஆகும். இவையே இன்று பட்டிமன்றம் என்றும் அழைக்கப்டுகிறது.
VI. குறு வினா
1.உங்கள் ஊரில் நடைபெறுகின்ற விழா முன்னேற்பாடுகளை இந்திரவிழா நிகழ்வுகளுடன் ஒப்பிடுக.
ஊரில் நடைபெறுகின்ற விழா முன்னேற்பாடுகள்:-
தோரணம் கட்டுதல், தெருக்களையும், கோவில் மண்டபங்களையும் தூய்மைப்படுத்தி வண்ணம் அடித்தல், கோலமிடுதல் போன்றவற்றை செய்தனர்.
பனையோலை, மாவிலை தோரணங்களை கட்டுவர். வாழை மரங்களை கட்டி வைப்பர்.
நாடகம், இசைக்கச்சேரி, பட்டிமன்றம் ஆகியவை நடக்க ஏற்பாடு செய்வர்.
இந்திரவிழா நிகழ்வுகள்:-
தெருக்கள், மன்றங்கள் ஆகியவற்றில் அழகுப் பொருட்கள் பலவற்றை அழகுபடுத்தினர்.
பாக்கு, வாழை, வஞ்சிக் கொடி, பூங்கொடி, கரும்பு ஆகியவற்றை நட்டு வைத்தனர்.
தெருக்கள், மன்றங்கள் ஆகியவற்றில் புது மணலைப் பரப்பினர்.
பட்டிமண்டபத்தில் வாதிட ஏற்பாடு செய்தனர்.
மணிமேகலை – கூடுதல் வினாக்கள்I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. அல்லும் பகலும் உழைப்பில் திளைக்கின்ற மக்களை உற்சாகப்படுத்தி ஓய்வு தரும் வாயில் ____________
விடை : விழா
2. மக்களின் வாழ்வின் நிகழ்வுகளில் விழா தனக்கென ஒரு ____________ பெறுகிறது.
விடை : தனியிடம்
3. மணிமேகலை பெண்மையை முதன்மைபடுத்தும் ____________
விடை : முதற்காப்பியம்
4. மணிமேகலை கதை அடிப்படையில் ____________ தொடர்ச்சி என்று கூறுவர்
விடை : சிலப்பதிகாரத்தின்
II. சிறு வினா
1. மனித மாண்புகளை எடுத்துரைக்கும் விழா எவ்வாறு திகழ்கிறது?
மனித மாண்புகளை எடுத்துரைக்கும் விழா, பண்பாட்டின் வெளிப்பாடாகவும் திகழ்கிறது.
2. பூம்புகாரில் இந்திர விழா எத்தனை நாட்கள் நடைபெறும்?
பூம்புகாரில் இந்திர விழா 28 நாட்கள் நடைபெறும்
3. இந்திர விழாவினைக் காண வந்தோர் யாவர்?
- சமயவாதிகள்
- காலக்கணிதர்
- மக்கள் உருவில் கடவுளர்
- பல மொழி பேசும் அயல்நாட்டின் ஐம்பெருங்குழு
- எண்பேராயம்
4. இந்திர விழா நடைபெறும் இடங்கள் யாவை?
- வெண்மையான மணற்குன்றுகள்
- பூஞ்சோலைகள்
- ஆற்றிடைக் குன்றுகள்
- மரக்கிளைகள் நிழல் தரும் தண்ணீர்த் துறைகள்
5. விழா கொண்டாடுவதன் நோக்கம் யாது?
- ஒன்று கூடுதல்
- கொண்டாடுதல்
- கூடி உண்ணுதல்
- மகிழ்ச்சியைப் பகிர்தல்
6. ஐம்பெருங்குழுவில் உள்ளவர்கள் யாவர்?
- அமைச்சர்
- சடங்கு செய்விப்பாேர்
- படைத்தலைவர்
- தூதர்
- சாரணனர் (ஒற்றர்)
III. குறு வினா
1. எண்பேராயம் குழுவில் உள்ளவர்கள் யார்?
- கரணத்தியலவர் (கணக்கு எழுதுபவர்)
- கருமவிதிகள் (புரோகிதர்)
- கனகச்சுற்றம் (பொருட்காப்பாளர்)
- கடைக்காப்பாளர் (வாயிற்காப்பாளர்)
- நகரமாந்தர் (மக்கள் சார்பாளர்)
- படைத்தலைவர்
- யானை வீரர்
- இவுளி மறவர் (குதிரை வீரர்)
2. மணிமேகலை – குறிப்பு வரைக
- ஐப்பெருங்காப்பியங்களுள் ஒன்றானது,
- மணிமேகலைத் துறவு என்பது இதன் வேறு பெயராகும்.
- பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக்காப்பியம்
- பண்பாட்டுக் கூறுகளை காட்டும் தமிழ்க்காப்பியம்
- சொற்சுவையும், பொருட்சுவையும் இயற்கை வருணைனைகளும் நிறைந்தது.
- பெளத்த சமயம் சார்புடையது.
- மணிமேகலை கதை அடிப்படையில் சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சி என்று கூறுவர்.
- இது 30 காதையாக அமைந்துள்ளது.
3. சீத்தலைச் சாத்தனார் பற்றிய குறிப்புகளை எழுதுக
- மணிமேகலை காப்பியத்திலன் ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார்.
- சாத்தன் என்பது இவரது இயற்பெயர்.
- தானிய வணிகம் செய்ததால் கூல வாணிகன் சீத்தலை சாத்தனார் என்பர்.
- இவரின் வேறுபெயர் – தண்டழிச் சாத்தன், தண்டமிழ்ப்புலவன்.
- கி.பி. 2-ம் நூற்றாண்டைச் சார்ந்தவர்.
- திருச்சி சீத்தலையில் பிறந்து மதுரையில் வாழ்ந்தவர் என்பர்.
******************THE END OF 3.2**********************
3.3. அகழாய்வுகள்
I. குறு வினா
தொல்லியல் சான்றுகள் காணப்படும் இடங்களை அகழாய்வு செய்ய வேண்டும் ஏன்?
நமக்கு இதுவரை கிடைத்துள்ள பழங்காலப் பொருட்கள் நாம் வாழ்ந்த காலத்தை மட்டுமன்றி பழம்பெரும் வரலாற்றைப் பறை சாற்றகின்றன.
நமது நாகரிகத்தை எடுத்துக் காட்டுகின்றன. எனவே தொல்லியல் சான்றுகள் காணப்படும் இடங்களை அகழாய்வு செய்ய வேண்டும்.
II. குறு வினா
வியத்தகு அறிவியல் விரவிக் கிடக்கும் நிலையில் அகழாய்வின் தேவை குறித்து உங்களது கருத்துகளைத் தொகுத்துரைக்க
அறிவியல் மிகவும் வேகமானது. ஒரு கருவி கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்து அதுவே சில ஆண்டுகளில் மாற்றம் அடைந்து முன்னது காணாமல் போய்விடுகின்றது.
கணினியை வைரஸ் அழித்து விடும். ஆனால், மண்ணாலும், கல்லாலும் ஆன பழம் பொருட்களை எந்த வைரஸூம் கூட அழிக்க முடியாது.
பழமையே புதுமை என்பதை மனதில் கொண்டு அகழாய்வை மேலும் மேற்கொள்ள வேண்டும்.
III. நெடு வினா
வியத்தகு அறிவியல் விரவிக் கிடக்கும் நிலையில் அகழாய்வின் தேவை குறித்து உங்களது கருத்துகளைத் தொகுத்துரைக்க
முன்னுரை:-
நமது பண்பாட்டை எண்ணிப் பார்பதற்கும் கடந்த காலத்தைப் புரிந்து கொள்வதற்கும் துணை நிறபவை அகழாய்வுகள்.
அரிக்கமேடு அகழாய்வு:-
அரிக்கமேடு அகழாய்வில் பொ.ஆ. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இவற்றில் காணப்பட்ட தொட்டிகளில் சாயம் தோய்க்கப் பட்டிருந்ததாகத் தெரிகின்றது.
அரிக்கமேடு அகழாய்வில் ரோமானிய மட்பாண்டங்கள் கிடைத்தன.
அதனால் ரோமானியர்களுக்கும் நமக்கும் இருந்த வாணிபத் தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அரிக்கமேடு அகழாய்வு:-
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இது பழம்பெரும் பழங்கால அடையாளமாக உள்ளன.
கீழடி அகழாய்வு:-
மதுரை அருகே கீழடி என்னும் இடத்தடில் நடத்தப்பட்ட அகழாய்வில் சுடுமண் பொருட்கள், உலோகப் பொருட்கள், முத்துக்கள், கிளிஞ்சல் பொருள்கள், மான் கொம்புகள், சோழிகள், கிண்ணங்கள், துளையிடப்பட்ட பாத்திரங்கள், இரத்தினக்கல் வகைகள், பழுப்பு, கறுப்பு, சிவப்பு – கறுப்புப் பானைகள், சதுரங்க்காய்கள், தானியங்களைச் சேமித்து வைக்கும் கலன்கள், செம்பு, சங்கு வளையல்கள், தமிழ்-பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், கற்கருவிகள், உறைக்கிணறுகள் போன்ற தொல்லியல் பொருள்கள் கிடைத்துள்ளன.
இவை 2300 ஆண்களுக்கு முற்பட்டவை என கருதப்படுகின்றன. இதுவரை கிடைத்த அகழாய்வில் இறப்பு தொடர்பான தடயங்கள் கிடைத்துள்ளன.
ஆனால் கீழடியில் வாழ்விடப்பகுதிகளே முழுமையான அளவில் கிடைத்துள்ளன. செங்கல் கட்டுமானங்கள் தமிழரின் உயரிய நாகரிகத்தைக் காட்டும் சாட்சிகளாக அமைந்துள்ளன.
முடிவுரை:-
தமிழகர்களின் உணவு, உடை, வாழிடம் முதலியன இயற்கையைச் சிதைக்காத இயல்புகளைக் கொண்டவை என்பதற்கு அகழாய்வில் கண்ட சான்றுகள் ஆவணங்களாகத் திகழ்கின்றன.
அகழாய்வுகள் – கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. ____________ தோன்றிப் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டன.
விடை : மனிதன்
2. அகழாய்வு ____________ முழுமை பெற உதவுகிறது.
விடை : வரலாறு
3. வணிக அறிவியல், ____________ பெருக்குவதற்காகப் பொருள்களைக் கண்டுபிடிக்கிறது.
விடை : மூலதனத்தைப்
4. இயற்கையோடு இணைந்த பண்பாட்டு வாழ்க்கை நம்முடையது என்பதனை அறிவதே ____________
விடை : மக்கள் அறிவியல்.
II. குறு வினா
1. எதற்காக தமிழகத்தின் தொன்மையான பகுதிகளை அகழாய்வு செய்தல் இன்றியமையாதது?
இன்றும் பண்பாட்டு அளவில் சிறந்த வாழ்வை வெளிப்படுத்திய தமிழர்களின்
வரலாற்றை அறிந்து கொள்ள தமிழகத்தின் தொன்மையான பகுதிகளை அகழாய்வு செய்தல் இன்றியமையாதது.
2. அகழாய்வு செய்தல் என்பது என்ன?
அகழாய்வு செய்தல் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட நிலப்பகுதியில் செதுக்கிச்
செதுக்கி ஆராய்தல் ஆகும்.
3. அகழாய்வில் கிடைத்த பொருள்கள் எவற்றையெல்லாம் உணர்த்துகின்றன?
அகழாய்வில் கிடைத்த பொருள்கள் நாம் வாழ்ந்த காலத்தை மட்டுமன்றி, நமது வரலாற்றையும் உணர்த்துகின்றன.
4. பட்டிமண்டபம் பற்றிய செய்திகளைக் கூறும் இலக்கியங்கள் யாவை
- சிலப்பதிகாரம்
- திருவாசகம்
- மணிமேகலை
- கம்பராமாயணம்
5. இந்தியாவில் கண்பிடிக்கப்பட்ட கல்லாயுதம் எது?
1863 ஆம் ஆண்டு இராபர்ட் புரூஸ்பு ட் என்னும் தொல்லியல் அறிஞர் ன்னைப் பல்லாவரம் செம்மண் மேட்டுப்பகுதியில் எலும்பையும் கற்கருவியையும் கண்டுபிடித்தார். இந்தக் கற்கருவிதான் இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட முதல் கல்லாயுதம்.
6. எங்கு நடைபெற்ற அகழாய்வில் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன?
1914ஆம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன
7. எதற்கு அகழாய்வில் சான்றுகள் ஆவணங்களாகத் திகழ்கின்றன?
தமிழர்களின் உணவு, உடை, வாழிடம் முதலியன இயற்கையைச் சிதைக்காத இயல்புகளைக் கொண்டவை என்பதற்கு அகழாய்வில் கண்ட சான்றுகளே ஆவணங்களாகத் திகழ்கின்றன
8. எதற்கு அகழாய்வு துணை நிற்கின்றது?
மக்கள் அறிவியல் என்கிற மகத்தான சிந்தனையைப் புரிந்து கொள்வதற்கும் நமது பண்பாட்டின் மேன்மைகளை இன்றைய தலைமுறை எடுத்துக் கொண்டு சிறப்பாக வாழ்வதற்கும் அகழாய்வு துணை நிற்கின்றது.
9. அறிவியலின் வகைகளை கூறுக
அறிவியலில் இரண்டு வகையுண்டு.
வணிக அறிவியல்
மக்கள் அறிவியல்
***************************THE END OF 3.3******************************
3.4. வல்லினம் மிகும் இடங்கள்
I. பலவுள் தெரிக.
பின்வருவனவற்றுள் தவறான செய்தியைத் தரும் கூற்று –
- அரிக்கமேடு அகழாய்வில் ரோமானிய நாணயங்கள் கிடைத்தன.
- புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கண நூலிலும் ஏறுகோள் குறித்துக் கூறப்பட்டுள்ளது.
- எட்டு, பத்து ஆகிய எண்ணுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது.
- பட்டிமண்டபம் பற்றிய குறிப்பு மணிமேகலையில் காணப்படுகிறது.
விடை : எட்டு, பத்து ஆகிய எண்ணுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது.
வல்லினம் மிகும் இடங்கள் – கூடுதல் வினாக்கள்
I. குறு வினா
1. வல்லினம் மிகுதல் என்றால் என்ன?
வல்லெழுத்துகள் க, ச, த, ப ஆகிய நான்கும் மொழிக்கு முதலில் வரும். இவை நிலைமொழியுடன் புணர்கையில் அவற்றின் மெய்யெழுத்துகள் தோன்றிப் புணரும். இதை வல்லினம் மிகுதல் என்பர்.
2. விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்?
தோன்றல், திரிதல், கெடுதல் என விகாரப் புணர்ச்சி மூன்று வகைப்படும்.
3. வல்லின எழுத்துகளின் புணர்ச்சி இலக்கணம் எதற்காக தேவைப்படுகிறது.?
சொல்லமைப்பின் கட்டுப்பாடுகளைப் பேணவும் பொருள் மயக்கத்தைத் தவிர்க்கவும் பேச்சின் இயல்பைப் பேணவும் இனிய ஓசைக்காகவும் இவ்வல்லின எழுத்துகளின் புணர்ச்சி இலக்கணம் தேவைப்படுகிறது.
4. வல்லினம் மிகும், மிகா இடங்களை அறிவதற்கு வழிகள் யாவை?
வல்லினம் மிகும் இடங்களை இனங்கண்டு பயன்படுத்தத் தொடங்கினாலே, தவறுகளைத் தவிர்த்து விடலாம்.
மரபையும் பட்டறிவையும் தாண்டி, சொற்களை ஒலித்துப் பார்ப்பதும் வல்லினம் மிகும், மிகா இடங்களை அறிவதற்கு எளியவழி எனலாம்.
II. சிறு வினா
1. தற்கால உரைநடையில் வல்லினம் மிகவேண்டிய இடங்களாகக் எவற்றை கூறலாம்?
வல்லினம் மிகவேண்டிய இடங்கள் சான்று
அ, இ என்னும் சுட்டெழுத்துகளுக்குப் பின்னும் அச் சட்டை
அந்த, இந்த என்னும் சுட்டுப் பெயர்களின் பின்னும் இந்தக்காலம்
எ என்னும் வினாவெழுத்தின் பின்னும் எத் திசை?
எந்த என்னும் வினாச் சொல்லின்
பின்னும் எந்தப்பணம்?
ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்படும் தொடர்களில் கதவைத் திற, காட்சியைப்பார்
கு என்னும் நான்காம் வேற்றுமை உருபு வெளிப்படும் தொடர்களில் முதியவருக்குக்கொடு, மெட்டுக்குப்பாட்டு
என, ஆக போன்ற சொல்லுருபுகளின் பின் எனக்கேட்டார், வருவதாகக்கூறு
2. வல்லினம் மிகும் இடங்களை அட்டவணைப்படுத்துக
வல்லினம் மிகும் இடங்கள் சான்று
அதற்கு, இதற்கு, எதற்கு என்னும் சொற்களின் பின் அதற்குச் சொன்னேன், இதற்குக் கொடு, எதற்குக் கேட்கிறாய்?
இனி, தனி ஆகிய சொற்களின் பின் இனிக் காண்போம், தனிச் சிறப்பு
மிக என்னும் சொல்லின் பின் மிகப் பெரியவர்
எட்டு, பத்து என்னும் எண்ணுப் பெயர்களின் பின் எட்டுத் தொகை, பத்துப்பாட்டு
ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் தீப் பிடித்தது, பூப் பந்தல்
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் கூவாக் குயில், ஓடாக் குதிரை
வன்தொடர்க் குற்றியலுகரங்கள் நிலை மொழியாக இருந்து புணர்கையில் கேட்டுக் கொண்டான், விற்றுச் சென்றான்
(அகர, இகர ஈற்று) வினையெச்சங்களுடன் புணர்கையில் ஆடச் சொன்னார், ஓடிப் போனார்
ஆறாம் வேற்றுமைத் தொகையில் புலித்தோல்
திசைப் பெயர்களின் பின் கிழக்குப் பகுதி, வடக்குப் பக்கம்
இரு பெயரொட்டுப் பண்புத் தொகையில் மல்லிகைப்பூ, சித்திரைத் திங்கள்
உவமைத் தொகையில் தாமரைப்பாதம்
சால, தவ, தட, குழ என்னும் உரிச் சொற்களின் பின் சாலப்பேசினார், தவச் சிறிது
தனிக் குற்றெழுத்தை அடுத்துவரும் ஆகார எழுத்தின் பின் நிலாச் சோறு, கனாக் கண்டேன்
சில உருவகச் சொற்களில் வாழ்க்கைப்படகு, உலகப்பந்து
கற்பவை கற்றபின்…
I. வல்லினம் மிகலாமா?
அ) பெட்டிச்செய்தி
ஆ) விழாக்குழு
இ) கிளிப்பேச்சு
ஈ) தமிழ்த்தேன்
உ) தைப்பூசம்
ஊ) கூடக்கொடு
எ) கத்தியை விடக்கூர்மை
ஏ) கார்ப்பருவம்
II. தொடர் தரும் பொருளைக் கூறுக.
அ) சின்னக்கொடி / சின்னகொடி
சின்னக்கொடி – சின்னம் வரையப்பட்ட கொடி
சின்ன கொடி – சிறிய கொடி
ஆ) தோப்புக்கள் / தோப்புகள்
தோப்புக்கள் – தோப்பிலிருந்து இறக்கிவரப்பட்ட கள்
தோப்புகள் – பல மரங்கள் சேர்ந்தது தோப்புகள்
இ) கடைப்பிடி / கடைபிடி
கடைப்பிடி – கொள்கையைக் கடைபிடிப்பது
கடைபிடி – வாணிகம் தொடங்கக் கடை பிடிப்பது
ஈ) நடுக்கல் / நடுகல்
நடுக்கல் – அடையாளமாக நடுவது நடுக்கல்
நடுகல் – நினைவுச்சின்னம்
உ) கைம்மாறு / கைமாறு
கைம்மாறு – உதவி செய்தல்
கைமாறு – கையில் உள்ள மாறு (விளக்குமாறு)
ஊ) பொய்ச்சொல் / பொய்சொல்
பொய்ச்சொல் – நீ சொன்னது பொய்ச்சொல்
பொய் சொல் – பொய் சொல்வது தவறு
III. சிந்தனை வினா
நாளிதழ்கள் சிலவற்றில் வல்லினம் மிக வேண்டிய இடத்தில் மிகாமல் எழுதிவருவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவ்வாறு எழுதுவது மொழிக்கு வளம் சேர்க்குமா? வல்லினம் மிக வேண்டியதன் முக்கியத்துவத்தை எழுதுக.
அதற்க்கு – தவறு அதற்கு = அது+அன்+கு
அது (சுட்டுப்பெயர்) + அன் (சாரியை) + கு (வேற்றுமை உருபு)
அதன்+கு = அதற்கு – என்பதே சரி
(எ.கா.)
இந்தப் பொருள் வேண்டாம். அதற்குப் பதிலாக இதை வைத்துக்கொள்.
கடைபிடித்தல்
கடைப்பிடித்தல் கடைபிடித்தல் – கடையைப்பிடித்தல்
கடைப்பிடித்தல் – பின்பற்றுதல்
(எ.கா.)
சேகர் புதிதாக வாணிகம் தொடங்கக் கடைபிடித்தார்.
நாங்கள் என்றும் தூய்மையைக் கடைப்பிடிப்போம்.
அதற்க்கு – தவறு
வல்லெற்றுக்கு அருகில் இன்னொரு வல்லினம் மிகாது. அதற்கு என்றே எழுத வேண்டும்
கடைபிடி. கடைப்பிடி
இதில் கடைபிடி என்பது கடையைப்பிடி என்று பொருள், அதே சொல்லில் வல்லினம் மிகுந்து “கடைப்பிடி” என வரும்போது பின்பற்றுதல் என்னும் பொருள் தரும்.
எனவே வல்லினம் இட்டு எழுதுவதில் கவனம் தேவை
IV. உரிய இடங்களில் வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக.
பழங்கால மக்களின் நாகரிகம், பண்பாடு தொடர்பான வரலாறுகளை அகழாய்வில் கிடைக்கின்றப் பொருள்களும் உறுதிபடுத்துகின்றன. பல்வேறு இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவ்வகையில் ஆய்வு நடைபெறுகின்ற இடங்களில் கீழடியும் ஒன்று.
கீழடியில் வாழ்ந்த மக்களுள் பலர்ச் செல்வந்தர்களாக இருந்துள்ளனர் என்பதை அகழாய்வில் கிடைத்தப் பொருள்கள் நமக்கு உணர்த்துகின்றன. இங்கு குறைவான எண்ணிக்கையில் தான் தங்கத்தினாலானப் பொருள்கள் கிடைக்கின்றன.
மேலும் இரும்பை பயன்படுத்தி செய்தக் கோடரி, குத்தீட்டிகள் முதலான கருவிகளும் யானை தந்தத்தினால் செய்தச் சீப்பு, மோதிரம், பகடை, காதணிகள், கண்ணாடிப் பொருள்களில் உருவாக்கிய மணிகள், வளையல், தோடு போன்றவையும் கிடைத்துள்ளன.
விடை : பழங்கால மக்களின் நாகரிகம், பண்பாடு தொடர்பான வரலாறுகளை அகழாய்வில் கிடைக்கின்றப் பொருள்களும் உறுதிபடுத்துகின்றன. பல்வேறு இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவ்வகையில் ஆய்வு நடைபெறுகின்ற இடங்களில் கீழடியும் ஒன்று.
கீழடியில் வாழ்ந்த மக்களுள் பலர் செல்வந்தர்களாக இருந்துள்ளனர் என்பதை அகழாய்வில் கிடைத்தப் பொருள்கள் நமக்கு உணர்த்துகின்றன. இங்குக் குறைவான எண்ணிக்கையில் தான் தங்கதினாலானப் பொருள்கள் கிடைக்கின்றன.
மேலும் இரும்பைப் பயன்படுத்தி செய்தக் கோடரி, குத்தீட்டிகள் முதலான கருவிகளும் யானை தந்தத்தினால் செய்த சீப்பு, மோதிரம், பகடை, காதணிகள், கண்ணாடிப் பொருள்களில் உருவாக்கிய மணிகள், வளையல், தோடு போன்றவையும் கிடைத்துள்ளன.
மொழியை ஆள்வோம்!
I. பொன்மொழிகளை மொழிபெயர்க்க.
1. A nation’s culture resides in the hearts and in the soul of its people – Mahatma Gandhi
ஒரு நாட்டின் பண்பாடானது மக்களின் இதயங்களிலும், ஆன்மாவிலும் தங்கியுள்ளது
2. The art of people is a true mirror to their minds – Jawaharlal Nehru
மக்களின் கலை உணர்வே அவர்களின் உள்ளத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகும் – ஜவஹர்லால் நேரு
3. The biggest problem is the lack of love and charity – Mother Teresa
அன்புக் குறைவும், தொண்டுப் பற்றாக்குறையும் தான் இன்றைய மிகப்பெரிய பிரச்சனை – அன்னைதெராசா
4. You have to dream before your dreams can come true – A.P.J. Abdul Kalam
உங்கள் கனவுகள் நனவாகும் வரை கனவு காணுங்கள் – ஏ.பி.ஜே.அப்துல் கலாம்
5. Winners don’t do different things; they do things differently – Shiv Khera
வெற்றியாளர்கள் வேறுபட்ட செயல்களைச் செயவதில்லை, அவர்கள் செயல்களை வித்தியாசமாகச் செய்கிறார்கள் – ஷிவ் கேரா
II. வடிவம் மாற்றுக.
பின்வரும் கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு, வரிசைப்படுத்தி முறையான பத்தியாக்குக.
1. உலகின் மிகப்பெரிய கல்மரப் படிமமும் இங்கேதான் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
2. டைனோசர்கள் உலாவித் திரிந்த தமிழ்மண் என்று அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்கள் அறியப்படுகின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில் கடல்பகுதி இருந்துள்ளது என்பதை அங்குக் கிடைத்துள்ள ஆதாரங்கள் உறுதி செய்கின்றன.
3. இங்குக் கல்லாகிப் போன டைனோசர் முட்டைகள், பாறைப் படிமமாகக் கிடைத்த கடல் நத்தை, டைனோசரின் வால்பகுதி, கடல் கிளிஞ்சல்களின் பாறைப் படிமங்கள் போன்றவை கிடைத்துள்ளன.
4. தமிழ்மக்களின் தொன்மையை மீட்டெடுப்பதுடன் நாம் வாழ்கின்ற நிலப்பகுதியின் வரலாற்றையும் தெரிந்துகொள்ள அரியலூரும் பெரம்பலூரும் அரிய ஊர்களாய்த் திகழ்கின்றன.
விடை :
தமிழ்மக்களின் தொன்மையை மீட்டெடுப்பதுடன் நாம் வாழ்கின்ற நிலப்பகுதியின் வரலாற்றையும் தெரிந்துகொள்ள அரியலூரும் பெரம்பலூரும் அரிய ஊர்களாய்த் திகழ்கின்றன. டைனோசர்கள் உலாவித் திரிந்த தமிழ்மண் என்று அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்கள் அறியப்படுகின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில் கடல்பகுதி இருந்துள்ளது என்பதை அங்குக் கிடைத்துள்ள ஆதாரங்கள் உறுதி செய்கின்றன. இங்குக் கல்லாகிப் போன டைனோசர் முட்டைகள், பாறைப் படிமமாகக் கிடைத்த கடல் நத்தை, டைனோசரின் வால்பகுதி, கடல் கிளிஞ்சல்களின் பாறைப் படிமங்கள் போன்றவை கிடைத்துள்ளன. உலகின் மிகப்பெரிய கல்மரப் படிமமும் இங்கேதான் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
III. மரபு இணைச் சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.
1. மேலும் கீழும்
ஆரிப் சொன்னதில் நம்பிக்கை இல்லாமல் குமார் மேலும் கீழும் பார்த்தான்.
2. மேடும் பள்ளமும்
மனித மேடும் பள்ளுமும் நிறைந்தது
3. நகமும் சதையும்
நண்பர்கள் எப்போதும் நகையும் சதையும் போல இருக்கின்றனர்.
4. முதலும் முடிவும்
இறைவன் கையில் தான் முதலும் முடிவும் உள்ளது
5. கேளிக்கையும் வேடிக்கையும்
திரைப்படங்கள் கேளிக்கையும் வேடிக்கையும் நிறைந்தது
6. கண்ணும் கருத்தும்
நம் செயலில் கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டும்
IV. பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகக் காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன. தமிழக மாட்டினங்களின் தாய் இனம் என்று ‘காங்கேயம்’ கருதப்படுகிறது. பிறக்கும்போது சிவப்பு நிறத்தில் இருக்கும் காங்கேயம் மாடுகள், ஆறு மாதம் வளர்ந்த பிறகு சாம்பல் நிறத்துக்கு மாறிவிடுகின்றன. பசுக்கள் சாம்பல் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கின்றன. மிடுக்கான தோற்றத்துக்குப் பெயர்பெற்ற காங்கேயம் இனக் காளைகள் ஏறுதழுவுதல் நிகழ்விற்கும் பெயர் பெற்றுள்ளன. அத்துடன், ஏர் உழுவதற்கும் வண்டி இழுப்பதற்கும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
கடுமையாக உழைக்கக்கூடிய காங்கேயம் மாடுகள் கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலத்தவரால் விரும்பி வாங்கிச் செல்லப்படுகின்றன. இலங்கை, பிரேசில், பிலிப்பைன்ஸ், மலேசியா ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கரூர் அமராவதி ஆற்றுத் துறையில் காங்கேய மாடுகளின் உருவம் பொறித்த கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சேரர் கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
1. பின்வரும் நான்கு வினாக்களுக்கும் பொருந்தும் ஒரு விடையைத் தருக.
அ) மிடுக்குத் தோற்றத்திற்கும் ஏறுதழுவுதலுக்கும் பெயர் பெற்றவை எவை?
விடை : காங்கேயம் இனக்காளைகள்
ஆ) தமிழக மாட்டினங்களின் தாய் இனம் என்று கருதப்படுவது யாது?
விடை : காங்கேயம் இனக்காளைகள்
இ) பிற மாநிலத்தவர் விரும்பி வாங்கிச் செல்கின்ற காளை இனம் எது?
விடை : காங்கேயம் இனக்காளைகள்
ஈ) மேற்கண்ட பத்தி எதைக் குறிப்பிடுகிறது?
விடை : காங்கேயம் இனக்காளைகள்
2. பொருந்தாத சொல்லைக் கண்டறிக.
- கர்நாடகம்
- கேரளா
- இலங்கை
- ஆந்திரா
விடை : இலங்கை
3. பிரித்து எழுதுக:
கண்டெடுக்கப்பட்டுள்ளன.
- கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன
- கண்டு + எடுக்கப் + பட்டுள்ளன
- கண்டெடுக்க + பட்டு + உள்ளன
- கண் + டெடுக்க + பட்டு + உள்ளன
விடை : கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன
4. தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகக் காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன – இது எவ்வகைத் தொடர்?
- வினாத்தொடர்
- கட்டளைத்தொடர்
- செய்தித்தொடர்
- உணர்ச்சித்தொடர்
விடை : செய்தித்தொடர்
மொழியோடு விளையாடு
I. பொருள் எழுதித் தொடரமைக்க.
கரை, கறை; குளவி, குழவி; வாளை, வாழை; பரவை, பறவை; மரை, மறை;
அ) அலை – அழை
அலை – கடலலை – இன்று கடல் அலையின் வேகம் மிக அதிகமாகவுள்ளது.
அழை – வர வழைத்தல் – என் திருமணத்திற்கு நண்பர்களை அழைத்துள்ளேன்
ஆ) கரை – கறை
கரை – ஆற்றின் ஓரம் – ஆற்றங்கரையை பலபடுத்த பனைமரங்கள் வளர்க்ப்படுகின்றன
கறை – படிவது கறை – துணியில் கறை படிந்துள்ளது
இ) குளவி – குழவி
குளவி – பூச்சி வகைகளுள் ஒன்று – குளவி வீட்டின் நிலைப்படியில் கூடு கட்டுகிறது
குழவி – குழந்தை – குழவி மருங்கினும் கிழவதாகும் (பிள்ளைத்தமிழ்)
ஈ) வாளை – வாழை
வாளை – மீன் வகைகளில் ஒன்று – ஆற்றில் வாளை மீன் துள்ளிக் குதித்தது.
வாழை – வாழைப்பழம் – முக்கனிகளுள் ஒன்று வாழைப்பழம்.
உ) பரவை – பறவை
பரவை – பரந்துள்ள கடல் – மதுரைக்குப் பக்கத்திலுள்ள சிற்றார் பரவை.
பறவை – பறப்பவை – பறவைகள் பறந்து சென்றன.
ஊ) மரை – மறை
மரை – தாமரை – தாமரை நீர் நிலையில் மலரும்.
மறை – வேதம் – வேதபாட சாலையில் நான்மறை ஓதப்பட்டன.
II. அகராதியில் காண்க.
அ) இயவை
- வழி
- மூங்கில்
- அரிசி
- துவரை
- தோரை நெல்
- காடு
ஆ) சந்தப்பேழை
- சந்தனப் பெட்டி
இ) சிட்டம்
- நூல் சிட்டம்
- உரிந்து கருகியது
- பெருமை அறிவு
- நீதி, உயர்ந்து
ஈ) தகழ்வு
- அகழ்
- அறிவு
- உண்கலம்
உ) பௌரி
- பெரும் பண் வகை
III. பொருள்தரும் வகையில் சொற்றொடர் உருவாக்குக..
கொடுக்கப்பட்டுள்ள சொற்களைக் கொண்டு பொருள்தரும் வகையில் ஒரு சொல்லில் தொடரைத் தொடங்குக. அத்துடன் அடுத்தடுத்துச் சொற்களைச் சேர்த்து, புதிய புதிய சொற்றொடர்களை உருவாக்குக. இறுதித் தொடர் அனைத்துச் சொற்களையும் சேர்த்ததாக அமைய வேண்டும்.
காலங்களில் தெருவில் வைக்காதீர்கள் காப்புக் கம்பிகள் கவனக் குறைவுடன் ஆகியவற்றின் மீது காலை அறுந்த மழைக் மின்கம்பிகள்.
வைக்காதீர்கள்
மலைக்காலங்களில் அறுந்த மின்கம்பிகள் காப்புக் கம்பிகள் மீது காலை வைக்காதீர்கள்
மலைக்காலங்களில் தெருவில் அறுந்த மின்கம்பிகள் காப்புக் கம்பிகள் மீது காலை வைக்காதீர்கள்
மலைக்காலங்களில் தெருவில் அறுந்த மின்கம்பிகள் காப்புக் கம்பிகள் மீது கவனக்குறைவுடன் காலை வைக்காதீர்கள்
IV. குறுக்கெழுத்துப் புதிர்
இடமிருந்து வலம்
2. விழாவறை காதை குறிப்பிடும் விழா (6) _____________
இந்திரவிழா
5. சரி என்பதற்கான எதிர்ச்சொல் தரும் எழுத்துகள் இடம் மாறியுள்ளது (3) _____________
தவறு
7. பொங்கல் விழாவையொட்டி நடத்தப்படும் சிறுவர்களுக்கான போட்டிகளில் ஒன்று (7) _____________
தவளை ஓட்டம்
10. ஊழ் என்பதற்குத் தற்காலப் பயன்பாட்டில் உள்ள சொல் (2) _____________
விதி
13. மா + அடி – இதன் புணர்ந்த வடிவம் (3) _____________
மாவடி
19. கொள்ளுதல் என்பதன் முதல்நிலை திரிந்த சொல் (2) _____________
கோள்
வலமிருந்து இடம்
9. தூய்மையற்ற குருதியை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய் (2) _____________
சிரை
11. ஆராய்ச்சி என்பதன் சொற்சுருக்கம் (3) _____________
ஆய்வு
12. மணிமேகலை காப்பியத்தின் ஆசிரியர் (5) _____________
சாத்தனார்
18. தனி + ஆள் -சேர்த்து எழுதுக. (4) _____________
தனியாள்
மேலிருந்து கீழ்
1. தமிழர்களின் வீர விளையாட்டு (7) _____________
ஏறு தழுவுதல்
2. இவள் + ஐ – சேர்ந்தால் கிடைப்பது (3) _____________
இவளை
3. மரத்தில் காய்கள் … … . . ஆகக் காய்த்திருந்தன (4)
திரட்சி
5. உரிச்சொற்களுள் ஒன்று (2) _____________
தவ
6. …………..சிறந்தது (2)
சால
8. நேரத்தைக் குறிப்பிடும் வானியல் சொல் (2) _____________
ஓரை
12. அகழாய்வில் கிடைத்த கொள்கலன்களுள் ஒருவகை (4) _____________
சாடிகள்
15. காய் பழுத்தால் ………(2)
கனி
கீழிருந்து மேல்
14. ஒருவர் பற்றி ஒருவர் பிறரிடம் இதை வைக்கக் கூடாது (3) _____________
வத்தி
17. யா முதல் வரும் வினாப்பெயர் (2) _____________
யார்
18. தகவிலர் என்பதற்கு எதிர்ச்சொல்லாகத் திருவள்ளுவர் குறிப்பிடுவது (4) _____________
தக்கார்
**********************THE END OF 3.4******************************
3.5. திருக்குறள்
I. படத்திற்கேற்ற குறளைத் தேர்வு செய்க.
அ) நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்.
ஆ) விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின்.
இ) செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாந் தலை
விடை :-
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாந் தலை
II. பாடலின் பொருளுக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டறிக.
பாடல்:-
ஆண்டில் இளையவனென்று அந்தோ அகந்தையினால்
ஈண்டிங்கு இகழ்ந்தென்னை ஏளனம்செய் – மாண்பற்ற
காரிருள்போல் உள்ளத்தான் காந்திமதி நாதனைப்
பாரதி சின்னப் பயல்.
குறள்:-
அ) செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்.
ஆ) மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்.
இ) குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.
விடை :-
ஆ) மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்.
பொருள்:-
நமக்கு நல்ல வசதியும் வாய்ப்பும் இருக்கிறது என்றெண்ணி ” இவருக்கு இத்தீங்கை செய்தால் எவர் நம்மை என்ன செய்ய முடியும்?” என்ற இறுமாப்புக் கொண்டு தீங்கிழைத்தவர்களையும் பொறுமைப் பண்பால் வெற்றி கொள்ள வேண்டும். (பொறையுடைமை – 8வது குறள்
III. பொருளுக்கேற்ற அடியைக் கண்டுபிடித்துப் பொருத்துக.
பசுமண் கலத்துநீர் பெய்திரீஇ யற்று – ஒருவனின் செயல்பாடுகளே உரசி அறியும் உரைகல்
தத்தம் கருமமே கட்டளைக்கல் – அவ்வளவிற்குப் பெருமை உண்டாக்கும்
அனைத்தானும் ஆன்ற பெருமை தரும் – சுடாத மண்கலத்தில் நீரூற்றி வைப்பதைப் போல
விடை : 1 -இ, 2 – அ, 3 – ஆ
4. தீரா இடும்பை தருவது எது?
- ஆராயாமை, ஐயப்படுதல்
- குணம், குற்றம்
- பெருமை, சிறுமை
- நாடாமை, பேணாமை
விடை : ஆராயாமை, ஐயப்படுதல்
IV. சொல்லுக்கான பொருளைத் தொடரில் அமைத்து எழுதுக.
அ. நுணங்கிய கேள்வியர் – நுட்பமான கேள்வியறிவு உடையவர்
தொடர் : ராமு நுணங்கிய கேள்வியராக விளங்கினான்
ஆ. பேணாமை – பாதுகாக்காமை
தொடர் : உழவனால் பேணாத பயிர் வீணாகும்
இ. செவிச் செல்வம் – கேட்பதால் பெறும் அறிவு
தொடர் : செவிச்செல்வம் பெற்றவர் சாதனையாளராக உருவாகின்றனர்
ஈ. அறனல்ல செய்யாமை – அறம் அல்லாத செயல்களைச் செய்யாதிருத்தல்
தொடர் : காந்தியடிகள் அறனல்ல செய்கைகளைச் செய்யாதவர்
V. குறு வினா
1. நிலம் போல யாரிடம் பொறுமை காக்கவேண்டும்?
தன்னை இகழ்பவரிடம் நிலம் போலப் பொறுமை காக்கவேண்டும்
2. தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும். – இக்குறட்பாவின் கருத்தை விளக்குக.
தீயவை தீயவற்றையே தருதலால் தீயைவிடக் கொடியதாகக் கருதி அவற்றைச் செய்ய அஞ்சவேண்டும
3. ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல். – இக்குறட்பாவில் அமைந்துள்ள நயங்களை எழுதுக.
எதுகை நயம் – இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது
ஒற்றொற்றித் – மற்றுமோர்
ஒற்றினால் – ஒற்றிக்
மோனை நயம் – முதலாம் எழுத்து ஒன்றி வருவது
ஒற்றொற்றித் – ஒற்றினால் – ஒற்றிக்
4. கனவிலும் இனிக்காதது எவர் நட்பு?
செயல் வேறு, சொல் வேறு என்று உள்ளவர் நட்பு கனவிலும் இனிக்காது
VI.கதைக்குப் பொருத்தமான குறளைத் தேர்வு செய்து காரணத்தை எழுதுக.
மெளனவிரதம் என்னும் தலைப்பில் நான்கு நண்பர்கள் ஒரு சொற்பொழிவைக் கேட்டனர். தாங்களும் ஒரு வாரத்துக்கு மெளனவிரதம் இருப்பதாகத் தீர்மானம் செய்தனர். மெளனவிரதம் ஆரம்பமாகி விட்டது! கொஞ்ச நேரம் போனதும் ஒருவன் சொன்னான், “எங்கள் வீட்டு அடுப்பை அணைத்துவிட்டேனா தெரியவில்லையே!“ பக்கத்திலிருந்தவன் “அடப்பாவி! பேசிட்டியே!“ என்றான். உடனே மூன்றாவது ஆள், “நீ மட்டும் என்ன? நீயும்தான் பேசிவிட்டாய்!“ என்றான். நான்காவது ஆள், “நல்லவேளை! நான் மட்டும் பேசவில்லை!“ என்றான். இப்படியாக அவர்களின் மெளனவிரதம் முடிந்துபோனது.
1. மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.
2. திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.
3. ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்.
விடை:-
3. ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்.
திருக்குறள் – கூடுதல் வினாக்கள்
I. குறு வினா
1. எது தலை சிறந்தது என திருக்ககுறள் கூறுகிறது?
தன்னைத் தோண்டுபவரைத் தாங்கும் நிலம் போலத் தன்னை இகழ்பவரைப் பொறுப்பது தலைசிறந்தது என திருக்குறள் கூறுகிறது.
2. செருக்கினால் துன்பம் தந்தவரை எப்படி வெல்ல வேண்டும்?
செருக்கினால் துன்பம் தந்தவரை நம்முடைய பொறுமையால் வெல்ல வேண்டும்
3. செல்வத்தில் சிறந்த செல்வம் எது?
செல்வத்தில் சிறந்தது செவியால் கேட்டறியும் கேள்விச்செல்வம். அது பிற வழிகளில் வரும் செல்வங்களைவிடத் தலைசிறந்தது.
4. கேட்ட எதனால் அளவுக்குப் பெருமை உண்டாகும்?
எவ்வளவு சிறிதானாலும் நல்லவற்றைக் கேட்டால், கேட்ட அளவுக்குப் பெருமை உண்டாகும்.
5. யார் அடக்கமான சொற்களைப் பேசுவது அரிதாகும்?
நுட்பமான கேள்வியறிவு இல்லாதவர் அடக்கமான சொற்களைப்பேசுவது அரிது.
6. ஆராய்ந்து அறியும் உரைகல் எது?
ஒருவரின் பெருமைக்கும் சிறுமைக்கும் அவரது செயல்பாடுகளே ஆராய்ந்து அறியும் உரைகல் ஆகும்.
7. தாயின் பசியைக் கண்டபோதும் எச்செயலை செய்யக் கூடாது?
தாயின் பசியைக் கண்டபோதும் சான்றோர் பழிக்கும் செயல்களைச் செய்யக் கூடாது
8. திருக்குறள் உலகப் பொதுமறை என அழைக்கப்படக் காரணம் யாது?
இனம், சாதி, நாடு குறித்த எவ்வித அடையாளத்தையும் திருக்குறள் முன்னிலைப்படுத்தவில்லை. எனவே திருக்குறள் உலகப் பொதுமறை என அழைக்கப்படுகிறது.
தன்னைத் தோண்டுபவரைத் தாங்கும் நிலம் போலத் தன்னை இகழ்பவரைப் பொறுப்பது தலைசிறந்தது என திருக்குறள் கூறுகிறது.
2. செருக்கினால் துன்பம் தந்தவரை எப்படி வெல்ல வேண்டும்?
செருக்கினால் துன்பம் தந்தவரை நம்முடைய பொறுமையால் வெல்ல வேண்டும்
3. செல்வத்தில் சிறந்த செல்வம் எது?
செல்வத்தில் சிறந்தது செவியால் கேட்டறியும் கேள்விச்செல்வம். அது பிற வழிகளில் வரும் செல்வங்களைவிடத் தலைசிறந்தது.
4. கேட்ட எதனால் அளவுக்குப் பெருமை உண்டாகும்?
எவ்வளவு சிறிதானாலும் நல்லவற்றைக் கேட்டால், கேட்ட அளவுக்குப் பெருமை உண்டாகும்.
5. யார் அடக்கமான சொற்களைப் பேசுவது அரிதாகும்?
நுட்பமான கேள்வியறிவு இல்லாதவர் அடக்கமான சொற்களைப்பேசுவது அரிது.
6. ஆராய்ந்து அறியும் உரைகல் எது?
ஒருவரின் பெருமைக்கும் சிறுமைக்கும் அவரது செயல்பாடுகளே ஆராய்ந்து அறியும் உரைகல் ஆகும்.
7. தாயின் பசியைக் கண்டபோதும் எச்செயலை செய்யக் கூடாது?
தாயின் பசியைக் கண்டபோதும் சான்றோர் பழிக்கும் செயல்களைச் செய்யக் கூடாது
8. திருக்குறள் உலகப் பொதுமறை என அழைக்கப்படக் காரணம் யாது?
இனம், சாதி, நாடு குறித்த எவ்வித அடையாளத்தையும் திருக்குறள் முன்னிலைப்படுத்தவில்லை. எனவே திருக்குறள் உலகப் பொதுமறை என அழைக்கப்படுகிறது.
II. சிறு வினா
1. திருக்குறளின் வேறு பெயர்கள் யாவை?
- முப்பால்
- பொதுமறை
- பொய்யாமொழி
- வாயுறை வாழ்த்து
- தெய்வநூல்
- தமிழ்மறை
- முதுமொழி
- பொருளுறை
2. திருக்குறளுக்கு முற்காலத்தில் உரை எழுதியவர் யார்?
- தருமர்
- மணக்குடவர்
- தாமத்தர்
- நச்சர்
- பரிதி
- பரிமேலழகர்
- திருமலையர்
- மல்லர்
- பரிப்பெருமாள்
- காளிங்கர்
3. திருவள்ளுவரின் சில சிறப்பு பெயர்கள் யாவை?
- நாயனார்
- தேவர்
- முதற்பாவலர்
- தெய்வப்புலவர்
- நான்முகனார்
- மாதானுபங்கி
- செந்நாப்பேதார்
- பெருநாவலர்
- கலைச்சொல் அறிவோம்
- அகழாய்வு – Excavation
- கல்வெட்டியல் – Epigraphy
- நடுகல் – Hero Stone
- பண்பாட்டுக் குறியீடு – Cultural Symbol
- புடைப்புச் சிற்பம் – Embossed sculpture
- பொறிப்பு – Inscription
கருத்துரையிடுக