9th Standard Tamil Guide Unit 6
TN Students Guide
9th Standard Tamil Unit 6 Full Answers Key. Book Back and Additional Question and answers. 9th tamil guide. 9th Standard Tamil Nadu Syllabus Samacheer kalvi Gide.
- இயல் 6.1. சிற்பக்கலை
- இயல் 6.2. இராவண காவியம்
- இயல் 6.3. நாச்சியார் திருமொழி
- இயல் 6.4. செய்தி
- இயல் 6.5. புணர்ச்சி
- இயல் 6.6. திருக்குறள்
6.1. சிற்பக்கலை
I. பலவுள் தெரிக.
1. பல்லவர் காலச் சிற்பக்கலைக்குச் சிறந்த சான்று ___________
- மாமல்லபுரம்
- பிள்ளையார்பட்டி
- திரிபுவனவீரேசுவரம்
- தாடிக்கொம்பு
விடை : மாமல்லபுரம்
2. திருநாதர்குன்றில் ஒரு பாறையில் புடைப்புச் சிற்பங்களாக உள்ளவை ________ .
- விலங்கு உருவங்கள்
- தீர்த்தங்கரர் உருவங்கள்
- தெய்வ உருவங்கள்
- நாட்டியம் ஆடும் பாவை உருவங்கள்
விடை : தீர்த்தங்கரர் உருவங்கள்
II. குறு வினா
1. செப்புத் திருமேனிகள் பற்றிக் குறிப்பு வரைக.
- சோழர் காலத்தில் மிகுதியான செப்புத் திருமேனிகள் உருவாக்கப்பட்டன.
- கடவுளின் உருவங்களும் மிகுந்த கலை நுட்படத்தோடு வடிவமைக்கப்பட்டன.
- செப்புத் திருமேனைகளில் பொற்காலம் எனபர்.
2. நடுகல் என்றால் என்ன?
- போரி்ல் விழுப்புண் பட்டு இறந்த வீரருக்குக் கல்லில் வீரரின் உருவம் பொறிக்கப்பட்டு நடுவது நடுகல் ஆகும்.
3. இசைத் தூண்கள் யார் காலத்தில் அமைக்கப்பட்டவை?
- இசைத் தூண்கள் விஜய நகர மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்டவை.
III. சிறு வினா
1. முழு உருவச் சிற்பங்கள் – புடைப்புச் சிற்பங்கள் இரண் டிற்கும் உள்ள வேறுபாடு யாது?
- முழு உருவச் சிற்பங்கள் புடைப்புச் சிற்பங்கள்
- உருவத்தின் முன், பின் பகுதிகள் தெளிவாக முழு உருவத்துடன் அமைந்த சிற்பங்கள் முழு உருவச் சிற்பங்கள் உருவத்தின் முன்பகுதி மட்டும் தெரியும்படி அமைக்கப்பட்ட சிற்பங்கள் புடைப்புச் சிற்பங்கள்.
2. நாயக்கர் காலச் சிற்பங்களின் நுட்பங்கள் யாவை?
- கோவைக்கு அண்மையில் உள்ள பேரூர் சிவன் கோவிலின் சிற்பங்கள் நாயக்கர் காலச் சிற்பக் கலைநுட்பத்தில் உச்சநிலைப் படைப்பு எனலாம்.
- விழியோட்டம், புருவ நெளிவு, நக அமைப்பு என மிகமிக நுட்பகமாகக் கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ளன.
IV. நெடு வினா
தமிழ்நாட்டுச் சிற்பங்கள் கலை நயம் மிக்கனவாகவும் வரலாற்றுப் பதிவுகளாகவும் இருப்பதை நிறுவுக.
- பல்லவர் கால மாமல்லபுரச் சிற்பங்கள் பெரும்பாைறகளைச் செதுக்கிப் பற்பல உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. பஞ்சபாண்டவர்கள் இரதத்தில் உள்ள சிற்ப வேலைப்பாடுகள் அழகாக உள்ளன. காஞ்சி கைலாசநாதர் கோவில் சுற்றுச்சுவர் சிற்பங்களின் கலைக்கூடமாக திகழ்கின்றன.
- தஞ்சைப் பெரிய கோவிலில் காணப்படும் 14 அடி உயரமுள்ள வாயிற்காவலர் உருவங்களும், நந்தியும் வியப்பூட்டும் வண்ணம் உள்ளது.
- விஜய நகர மன்னர்கள் காலத்தில் மிக உயர்ந்த கோபுரங்கள் சிற்ப வேலப்பாடுகளுடன் அமைக்கப்பட்டன. பல்வேறு ஓசைகளை எழுப்பும் இசைக் கற்றூண்களையும் அமைத்தன.
- நாயக்கர் மன்னர்கள் சிற்ப வேலைபாடுடன் ஆயிரங்களால் மண்டபத்தை அமைத்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆயிரம் கால் மண்டபத்து தூண்களில் கண்ணப்பர், குறவன், குறத்தி போன்ற சிற்பங்கள் உள்ளன. அரிச்சந்திரன். சந்திரமதி சிற்பங்களில் ஆடை ஆபரணங்கள் கலை நயத்துடன் காணப்படுகின்றன. இறந்த மைந்தனைக் கையில் ஏந்தியபடி சந்திரமதி சிற்பம் நயம் மிக்கது.
- கோவைக்கு அண்மையில் உள்ள பேரூர் சிவன் கோவிலில் உள்ள சிற்பங்கள் நாயக்காலச் சிற்பக் கலைநுடபத்தின் உச்சநிலைப் படைப்பு எனலாம்.
- விழியோட்டம், புருவ நெளிவு, நக அமைப்பு என மிகமிக நுட்பமாகக் கலைநயத்துடன் அவை அமைக்கப்பட்டுள்ளன.
- இவை அனைத்தும் கலைநயத்திற்கும், வரலாற்றுப் பதிவுகளும் தக்க சான்றுகளாகும்.
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. தமிழர் _________ நாம் காணும் சிற்பங்கள்.
விடை : அழகியலின் வெளிப்பாடு
2. தமிழ்ச் சிற்பிகள் கல்லில் வடித்த கவிதைகளே _________.
விடை : சிற்பங்கள்
3. சிற்பத் தொழிலுக்குரிய உறுப்புகளைப் பற்றிக் கூறும் நூல்கள் _________, _________
விடை : திவாகர நிகண்டு, மணிமேகலை
4. சிற்பிகளை _________ என்று சிறப்பிக்கின்றனர்.
விடை : கற்கவிஞர்கள்
5. அரசு கவின் கலைக் கல்லூரிகள் உள்ள இடங்கள் _________, _________
விடை : சென்னை, கும்பகோணம்
II. குறு வினா
1. மனித நாகரிக வளர்ச்சியின் தொடக்கமாக எதைக் கொள்ளலாம்?
- கல்லிலும், உலோகத்திலும் கருவிகள் செய்த மனிதன், அவற்றில் சிற்பமென்னும் நுண்கலையை வடிக்கத் தொடங்கினான். மனித நாகரிக வளர்ச்சியின் தொடக்கமாக இதைக் கொள்ளலாம்.
2. பல்லவர்கள் காலச் சிறப்பங்களர் அமைந்துள்ள இடங்கள் யாவை?
- மாமல்லபுரம்
- காஞ்சிபுரம்
- திருச்சி
- மலைக்கோட்டை
3. சிற்பங்களின் நிலைகள் யாவை?
சிற்பங்களின் நிலைகள் 4வகைப்படும்
- தெய்வ உருவங்கள்
- கற்பைன உருவங்கள்
- இயற்கை உருவங்கள்
- முழு வடிவ உருவங்கள்
4. பல்லவர் காலத்தில் தூண்களில் பொறிக்கப்பட்டவை எவை?
- யாளி
- சிங்கம்
- தாமரை மலர்
- நுட்பனமான வேலைப்பாடுகள் அமைந்த வட்டங்கள்
5. எவை வரலாற்றின் வாயில்களாக விளங்குகின்றன?
உயிரற்ற கல்லிலும், உலோகத்திலும் தமிழர் மன உணர்வுகளையும், நிகழ்வுகளையும் செதுக்கி வைத்த சிற்பங்கள் , இன்றும் வரலாற்றின் வாயில்களாக விளங்குகின்றன.
6. சிற்பக்கலை என்றால் என்ன?
கல், உலோகம், செங்கல், மரம் முதலியவற்றைக் கொண்டு கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் உருவங்கள் அமைக்கும் கலையே சிற்பக்கலை எனலாம்.
7. சிற்பங்களின் வகைகள் யாவை
சிற்பங்களை அவற்றின் உருவ அமைப்பு அடிப்படையில்
முழு உருவச் சிற்பங்கள்
புடைப்புச் சிற்பங்கள் – என இரண்டாகப் பிரிக்கலாம்.
8. முழு உருவச் சிற்பங்கள் என்றால் என்ன?
உருவத்தின் முன்பகுதியும் பின்பகுதியும் தெளிவாகத் தெரியும் வகையில் முழு உருவத்துடன் அமைந்த சிற்பங்களை முழு உருவச் சிற்பங்கள் என்று கூறலாம்.
9. புடைப்புச் சிற்பங்கள் என்றால் என்ன?
முன்பகுதி மட்டும் தெரியும்படி அமைக்கப்பட்ட சிற்பங்களைப் புடைப்புச் சிற்பங்கள் எனலாம்.
10. புடைப்புச் சிற்பங்களை எங்கு காணலாம்?
- கோவிலின் தரைப் பகுதி
- கோபுரம், தூண்கள்
- நுழைவாயில்கள்
- சுவர்களின் வெளிப்புறங்கள்
- என எல்லா இடங்களிலும் புடைப்புச் சிற்பங்களைக் காணலாம்.
III. சிறு வினா
பாண்டியர் காலச் சிற்பங்களுக்கு சான்றுகள் கூறுக.
- பாண்டியர் காலத்தில் அமைக்கப்பட்ட குகைக்கோவில்களில் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்துள்ளன. அவற்றைத் திருமயம், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, திருப்பரங்குன்றம் முதலிய இடங்களில் உள்ள கோவில்களில் காணலாம்.
- கோவில்பட்டிக்கு மேற்கே கழுகுமலை வெட்டுவான் கோவிலில் அமைந்துள்ள சிற்பங்களும் பாண்டியர் காலச் சிற்பக்கலைக்குச் சான்றுகளாகும்.
***************THE END OF 6.1*************
6.2. இராவண காவியம்
I. சொல்லும் பொருளும்
- மைவனம் – மலைநெல்
- முருகியம் – குறிஞ்சிப்பறை
- பூஞ்சினை-பூக்களை
- உடைய கிளை
- சிறை – இறகு
- சாந்தம் – சந்தனம்
- பூவை- நாகணவாய்ப் பறவை
- பொலம்- அழகு
- கடறு – காடு
- முக்குழல்-கொன்றை, ஆம்பல், மூங்கில் ஆகியவற்றால் ஆன குழல்கள்;
- பொலி – தானியக்குவியல்
- உழை – ஒரு வகை மான்.
- கல் -மலை
- முருகு – தேன், மணம், அழகு
- மல்லல்- வளம்
- செறு- வயல்
- கரிக்குருத்து – யானைத்தந்தம்
- போர்- வைக்கோற்போர்
- புரைதப- குற்றமின்றி
- தும்பி- ஒருவகை வண்டு
- துவரை-பவளம்
- மரை – தாமரை மலர்
- விசும்பு- வானம்
- மதியம்-நிலவு
II. இலக்கணக் குறிப்பு
- இடிகுரல் – உவமைத்தொகை
- இன்னுயிர் – பண்புத்தொகை
- பிடிபசி- வேற்றுமைத் தொகை
- பைங்கிளி- பண்புத்தொகை
- பூவையும் குயில்களும் – எண்ணும்மை
- முதிரையும் சாமையும் வரகும் – எண்ணும்மை
- பெருங்கடல் – பண்புத்தொகை
- முதுவெயில் – பண்புத்தொகை
- இன்னிளங்குருளை – பண்புத்தொகை
- அதிர்குரல் – வினைத்தொகை
- மன்னிய- பெயரெச்சம்
- வெரீஇ – சொல்லிசை அளபெடை
- கடிகமழ் – உரிச்சொற்றொடர்
- மலர்க்கண்ணி – மூன்றாம் வேற்றுமைஉருபும் பயனும் உடன் தொக்க தொகை
- எருத்துக்கோடு – ஆறாம் வேற்றுமைத்தொகை
- கரைபொரு – இரண்டாம் வேற்றுமைத் தொகை
- மரைமுகம் – உவமைத் தொகை
- கருமுகில் – பண்புத்தொகை
- வருமலை – வினைத் தொகை
III. பகுபத உறுப்பிலக்கணம்
1. பருகிய = பருகு+இன்+ ய்+அ;
பருகு – பகுதி
இன்- இறந்த கால இடைநிலை (ன் கெட்டது விகாரம்)
ய் -உடம்படுமெய்; அ –பெயரெச்ச விகுதி
2. பூக்கும் = பூ + க் + க் + உம்;
பூ – பகுதி
க் – சந்தி
க் – எதிர்கால இடைநிலை
உம் – வினைமுற்று விகுதி
IV. பலவுள் தெரிக.
’பொதுவர்கள் பொலிஉறப் போர்அடித்திடும்’ நிலப் பகுதி _______
- குறிஞ்சி
- நெய்தல்
- முல்லை
- பாலை
விடை : முல்லை
V. குறு வினா
1. பாலை நிலத்தில் பருந்துகள் பறந்ததன் காரணம் என்ன?
எருதின் கொம்புகளைப் போன்றிருந்த பாலைக் காயை நிலத்தில் விழுந்து வெடிக்குமாறு அவர்கள் கோலினால் அடித்து விளையாடினர். அவ்வோசையைக் கேட்ட பருந்துகள் அச்சத்துடன் பறந்தோடின.
2. இடிகுரல், பெருங்கடல் இலக்கணக்குறிப்பு தருக?
இடிகுரல் – உவமைத்தொகை
பெருங்கடல் – பண்புத்தொகை
VI. சிறு வினா
1. இராவண காவியத்தில் இடம் பெற்ற இரண்டு உவமைகளை எடுத்துக்காட்டுக
- எருதின் கொம்புகளைப் போன்றிருந்த பாலைக் காயை நிலத்தில் விழுந்து வெடிக்குமாறு அவர்கள் கோலினால் அடித்து விளையாடினர். அவ்வோசையைக் கேட்ட பருந்துகள் அச்சத்துடன் பறந்தோடின.
- தும்பியானது கரையை நெருங்கி வருகின்ற மலை போன்ற அலையினைத் தடவி, கடற்கரை மணலிடை உலவி, காற்றிலே தன் நீண்ட சிறகினை உலர்த்தும். பின்னர்த் தாமரை மலரையொத்த பெண்களின் முகத்தினை நோக்கித் தொடர்ந்து செல்லும். அது வானில் முழு நிலவைத் தொடர்ந்து செல்லும் கருமேகத்தின் கா ட்சி போல் உள்ளது.
2. குறிஞ்சி மணப்பதற்கு நிகழ்வுகளைக் குறிப்பிடுக?
- தீயில் இட்ட சந்தன மரக் குச்சிகள், அகில் இவற்றின் நறுமணமும் உலையில் இட்ட மலை நெல்லரிசிச் சோற்றின் மணமும் காந்தள் மலரின் ஆழ்ந்த மணமும் பரவித் தோய்ந்து கிடந்தத னால் எல்லா இடங்களிலும் உள்ள பொருள்கள் மணம் கமழ்ந்து காணப்பட்டன.
VII. நெடு வினா
இராவண காவியத்தில் உங்களை ஈர்த்த இயற்கை எழில் காட்சிகளை விவரி.
குறிஞ்சி மணம்:-
- தீயில் இட்ட சந்தன மரக் குச்சிகள், அகில் இவற்றின் நறுமணமும் உலையில் இட்ட மலை நெல்லரிசிச் சோற்றின் மணமும் காந்தள் மலரின் ஆழ்ந்த மணமும் பரவித் தோய்ந்து கிடந்தத னால் எல்லா இடங்களிலும் உள்ள பொருள்கள் மணம் கமழ்ந்து காணப்பட்டன.
பறவைகளின் அச்சம்:-
- எருதின் கொம்புகளைப் போன்றிருந்த பாலைக் காயை நிலத்தில் விழுந்து வெடிக்குமாறு அவர்கள் கோலினால் அடித்து விளையாடினர். அவ்வோசையைக் கேட்ட பருந்துகள் அச்சத்துடன் பறந்தோடின.
தும்பியின் காட்சி:-
- தும்பியானது கரையை நெருங்கி வருகின்ற மலை போன்ற அலையினைத் தடவி, கடற்கரை மணலிடை உலவி, காற்றிலே தன் நீண்ட சிறகினை உலர்த்தும். பின்னர்த் தாமரை மலரையொத்த பெண்களின் முகத்தினை நோக்கித் தொடர்ந்து செல்லும். அது வானில் முழு நிலவைத் தொடர்ந்து செல்லும் கருமேகத்தின் காட்சி போல் உள்ளது.
இராவண காவியம் – கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. இராவண காவியத்தின் பாட்டுத்தலைவன் __________________.
விடை : இராவணன்
2. அழகைச் சுவைத்தால் மனம் __________________பெறும்
விடை : புத்துணர்வு
3. இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தனித்தமிழ்ப் பெருங்காப்பியம் __________________
விடை : இராவண காவியம்.
4. இராவண காவியம் ஆசிரியர் __________________
விடை : புலவர் குழந்தை
5. இராவண காவியம் _____________ பாடல்களையும் கொண்டது.
விடை : 3100
6. புலவர் குழந்தை பெரியாரின் வேண்டுகோளுக்கு இணங்க 25 நாள்களில் __________________ உரை எழுதியுள்ளார்.
விடை : திருக்குறளுக்கு
II. பாெருத்துக
- குறிஞ்சி – தாமரை
- முல்லை – மயில்
- பாலை – மான்
- மருதம் – பருந்து
விடை : 1 – ஆ, 2 – இ, 3 – ஈ, 4 – அ
III. குறு வினா
1. இராவண காவியம் பற்றி பேரறிஞர் அண்ணா கூறுவதென்ன?
- ”இராவண காவியம் காலத்தின் விளைவு. ஆராய்ச்சியின் அறிகுறி. புரட்சிப் பொறி.
- உண்மையை உணர வைக்கும் உன்னத நூல்”
2. இராவண காவியம் எத்தனை காண்டங்களை கொண்டது?
- இராவண காவியம் ஐந்து காண்டங்களை கொண்டது
- தமிழகக் காண்டம்
- இலங்கைக் காண்டம்
- விந்தக் காண்டம்
- பழிபுரி காண்டம்
- போர்க்காண்டம்
3. புலவர் குழந்தை படைப்புகள் எவை?
- இராவண காவியம். யாப்பதிகாரம், தொடையதிகாரம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இலக்கண, இலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்.
4. இராவணனை முதன்மை நாயகனாகக் கொண்டு அமைக்கப்பட்ட நூல் எது?
- இராமாயணத்தில் எதிர்நிலை மாந்தராகப் படைக்கப்பட்ட இராவணனை முதன்மை நாயகனாகக் கொண்டு அமைக்கப்பட்டது இராவண காவியம்.
IV. சிறு வினா
1. இராவண காவியம் – குறிப்பு வரைக
- இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தனித்தமிழ்ப் பெருங்காப்பியம் இராவண காவியம்.
- இந்நூல் தமிழகக் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம், பழிபுரி காண்டம், போர்க்காண்டம் என ஐந்து காண்டங்களையும் 3100 பாடல்களையும் கொண்டது.
- இந்நூல் புலவர் குழந்தை அவர்களால் இயற்றப்பட்டது.
2. புலவர் குழந்தை – குறிப்பு வரைக
- தந்தை பெரியாரின் வேண்டுகோளுக்கிணங்க 25 நாள்களில் இவர் திருக்குறளுக்கு உரை எழுதிய சிறப்பினை உடையவர்.
- இராவண காவியம், அரசியரங்கம், நெருஞ்சிப்பழம் யாப்பதிகாரம், தொடையதிகாரம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இலக்கண, இலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்.
***************THE END OF 6.2*****************
6.3. நாச்சியார் திருமொழி
I. சொல்லும் பொருளும்
- தீபம் – விளக்கு
- சதிர் – நடனம்
- தாமம் – மாலை
- கொட்ட – வினையெச்சம்
- முத்துடைத்தாமம் – இரண்டாம் வேற்றுமைத் தொகை
III. பகுபத உறுப்பிலக்கணம்
1. தொட்டு – தொடு (தொட்டு) + உதொடு – பகுதி, தொட்டு என ஒற்று இரட்டித்து இறந்தகாலம் காட்டியது – விகாரம்
உ – வினையெச்ச விகுதி
2. கண்டேன் – காண் (கண்) + ட் + ஏன்
காண் – பகுதி (’கண்’ எனக் குறுகியது விகாரம்)
ட் – இறந்தகால இடைநிலை
ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி
கண்ணன் புகுந்த பந்தல் எவ்வாறு இருந்தது?
விடை : பக்தி இலக்கியம்
2. ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு ___________
விடை : நாலாயிர திவ்யப் பிரபந்தம்
3. பன்னிரு ஆழ்வார்களின் ___________ மட்டும் ஒரே பெண் ஆழ்வார்.
விடை : ஆண்டாள்
4. ______________ தன் கனவினை தோழியிடம் கூறினாள்.
விடை : ஆண்டாள்
5. ______________ வளர்ப்பு மகள் ஆண்டாள்.
விடை : பெரியாழ்வாரின்
6. நாச்சியார் திருமொழியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ___________
விடை : 140
2. “சூடிக் கொடுத்த சுடர்க்கொடி” என அழைக்கக் காரணம் என்ன?
இறைவனுக்குப் பாமாலை சூட்டியதோடு தான் அணிந்து மகிழ்ந்த மாலையையும் சூட்டியதால், “சூடிக் கொடுத்த சுடர்க்கொடி” என அழைக்கப்பெற்றார்.
காண் – பகுதி (’கண்’ எனக் குறுகியது விகாரம்)
ட் – இறந்தகால இடைநிலை
ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி
IV. பலவுள் தெரிக.
’அதிரப் புகுதக் கனாக் கண்டேன்’ – யார் கனவில் யார் அதிரப் புகுந்தார்?- கண்ணனின் கனவில் ஆண்டாள் புகுந்தாள்
- தோழியின் கனவில் ஆண்டாள் புகுந்தாள்
- ஆண்டாளின் கனவில் தோழி புகுந்தாள்
- ஆண்டாளின் கனவில் கண்ணன் புகுந்தான்
V. குறு வினா
- இசைக்கருவிகள் மற்றும் சங்குகள் முழங்க கண்ணன் புகுந்த பந்தலில் முத்துக்களையுடைய மாலைகள் தொங்கவிடப்பட்டு இருந்தது.
VI. சிறு வினா
ஆண்டாளின் கனவுக் காட்சிகளை எழுதுக- கைகளில் கதிரவன் போன்ற ஒளி யை உடைய விளக்கையும், கலசத்தையும் ஏந்தி வந்து அழைக்க, வடமதுரை மன்னன் கண்ணன் பாதுகை அணிந்து நடந்து வருகிறார்’.
- இசைக்கருவிகள் சங்குகள் முழங்க, அத்தை மகனும், “மது” என்ற அரக்கனை அழித்தவனுமாகிய கண்ணன், புகுந்த பந்தலில் முத்துகளையுடைய மாலைகள்
- தொங்கவிடப்பட்டு இருந்தது. அதன் கீழ் என்னைத் திருமணம் செய்து கொள்கிறான்.
நாச்சியார் திருமொழி – கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. ___________ உணர்ச்சி நிறைந்த பாடல்களை உள்ளடக்கியது.விடை : பக்தி இலக்கியம்
2. ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு ___________
விடை : நாலாயிர திவ்யப் பிரபந்தம்
3. பன்னிரு ஆழ்வார்களின் ___________ மட்டும் ஒரே பெண் ஆழ்வார்.
விடை : ஆண்டாள்
4. ______________ தன் கனவினை தோழியிடம் கூறினாள்.
விடை : ஆண்டாள்
5. ______________ வளர்ப்பு மகள் ஆண்டாள்.
விடை : பெரியாழ்வாரின்
6. நாச்சியார் திருமொழியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ___________
விடை : 140
II. குறு வினா
1. பக்தி இலக்கியத்தின் பணியாக என்னவாக இருந்தது?- பக்தி இலக்கியம் உணர்ச்சி நிறைந்த பாடல்களை உள்ளடக்கியது.
- இறையோடு ஒன்றுதலும் அதன்பால் அனைவரையும் சரணடையச் செய்வதும் பக்தி இலக்கியத்தின் பணியாக இருந்தது.
இறைவனுக்குப் பாமாலை சூட்டியதோடு தான் அணிந்து மகிழ்ந்த மாலையையும் சூட்டியதால், “சூடிக் கொடுத்த சுடர்க்கொடி” என அழைக்கப்பெற்றார்.
3. திருமாலை வழிபட்டுச் சிறப்புநிலை எய்தியவர்கள் யார்?
திருமாலை வழிபட்டுச் சிறப்புநிலை எய்திய ஆழ்வார்கள் பன்னிருவர் ஆவர்.
திருமாலை வழிபட்டுச் சிறப்புநிலை எய்திய ஆழ்வார்கள் பன்னிருவர் ஆவர்.
4. “நாலாயிர திவ்வியப் பிரபந்தம்” என்றால் என்ன?
ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு “நாலாயிர திவ்வியப் பிரபந்தம்” ஆகும்.
ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு “நாலாயிர திவ்வியப் பிரபந்தம்” ஆகும்.
5. ஆண்டாள் -குறிப்பு வரைக
- பன்னிரு ஆழ்வார்களின் ஒருவராவர்
- ஆண்டாள் மட்டுமே பெண் ஆழ்வார் ஆவார்.
- இறைவனுக்குப் பாமாலை சூட்டியதோடு தான் அணிந்து மகிழ்ந்த பூமாலையையும் சூட்டியதால், “சூடிக் கொடுத்த சுடர்க்கொடி” என அழைக்கப் பெற்றார்.
- இவரைப் பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள் என்பர்.
- நாச்சியார் திருமொழி ஆண்டாள் பாடியது .
- நாச்சியார் திருமொழி மொத்தம் 140 பாடல்களைக் கொண்டது.
- திருப்பாவை நாச்சியார் திருமொழி ஆகிய ஆண்டாள் பாடியவை.
- திருப்பாவை
- நாச்சியார் திருமொழி
****************THE END OF 6.3********************
6.4. செய்தி
I. நெடு வினா
இசைக்கு நாடு, மொழி இனம் தேவையில்லை என்பதைச் செய்திக் கதையின் விளக்குகமுன்னுரை:-
- செய்தி என்னும் சிறுகதையின் ஆசிரியனர் தி.ஜானகிராமன். இக்கதை “சிவப்பு ரிக்சா என்ற சிறுகதை தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. இசைக்கு நாடு, மொழி, இனம் தேவையில்லாமல் என்பதை இக்கதையில் காண்போம்.
- இசைக்கு மயங்காத உயிர்கள் இல்லை. அத்தகைய இசைக்கு காரணம் இசைக் கருவிகள் தமிழக இசையில் தன் முத்திரை பதித்தது நாதஸ்வரம். இதில் பல இராகங்களை கொண்டு வித்துவான் வாசித்தார். அத நிகழ்ச்சியில் பிலிப் போல்ஸ்கா என்ற வித்துவானும் வந்திருந்தார்.
- நாதஸ்வரக் கலைஞர் வாசிக்கத் தொடங்கினார். நாதஸ்வர இசை இனிக்க ஆரம்பித்தது. போஸ்கோ சிரித்தபடியே தன்னையே இழந்து இரசிக்கின்றார். இசை வெள்ளத்தில் மிதக்கின்றார். வெளிநாட்டவர் தமிழக இசைக்கு மெய் மறக்கின்றனர். வித்துவானின் சாமாராகம் அனைவரையும் மயங்கச் செய்தது. ஆடவும் செய்தது.
- வித்வானிடம் சாந்தமுலேகாவை 5, 6 முறை வாசிக்கக் கேட்டு மகிழ்ந்தார். இதில் ஒரு செய்தி இருப்பதாகவும். ஏதோ ஒரு உலகத்தில் இருந்து வந்த செய்தி கேட்கிறது. நான் அதில் மூழ்கி விட்டேன் என்றார் போஸ்கா. எனக்கு அனுப்பிய செய்தி, உலகத்திற்கே அனுப்பிய செய்தி, அது தமிழ் இசையின் செய்தி. வேறு எந்த சங்கீதமும் இதனை கொடுக்கவும் இல்லை. அதனை நான் வாங்கிக் கொண்டேன்.
- போஸ்கோவின் செயல்பாடுகள் இசைக்கு நாடு, மொழி, மதம் என எதுவும் இல்லை என்பதை உணர்த்துகிறது.
செய்தி – கூடுதல் வினாக்கள்
I. குறு வினா
1. தஞ்சாவூர், தமிழுக்கு அளித்த கொடையாளர்கள் யாவர்?- உ.வே. சாமிநாதர்
- மெளனி
- தி.ஜானிகிராமன்
- தஞ்சை பிரகாஷ்
- தஞ்சை இராமையா தாஸ்
- தஞ்சாவூர் கவிராயர்
- இசை மொழியைக் கடந்தது.
- அமைதியின் நாக்காக அது எல்லா மொழிகளையும் பேசுவது.
- மனங்களைக் கரைத்து அந்தரவெளியில் உலவச் செய்வது.
- சொற்களைப் புறக்கணித்துத் தனக்குள்ளிருக்கும் செய்தியை எந்தமொழி மனதிற்குள்ளும் செலுத்துவது.
- ஆரவாரங்கள், குழப்பங்கள், கூச்சல்கள் , துயரங்கள் என எல்லாவற்றையும் கடந்த அமைதி வெளியில் மனங்களைக் கூட்டுவது.
- இசையின் செவ்வியில் தலைப்படும் மனமானது இனம், நாடு என்ற எல்லைக்கோடுகளைத் தாண்டிவிடும். இசை தாண்டவைக்கும்.
- 1970 – அன்பளிப்பு (சிறுகதைகள்) – கு. அழகிரிசாமி
- 1979 – சக்தி வைத்தியம் (சிறுகதைத் தொகுப்பு) – தி. ஜானகிராமன்
- 1987 – முதலில் இரவு வரும் (சிறுகதைத் தொகுப்பு) – ஆதவன்
- 1996 – அப்பாவின் சிநேகிதர் (சிறுகதைத் தொகுப்பு) – அசோகமித்ரன்
- 2008 – மின்சாரப்பூ (சிறுகதைகள்) – மேலாண்மை பொன்னுசாமி
- 2010 – சூடிய பூ சூடற்க (சிறுகதைகள்) – நாஞ்சில் நாடன்
- 2016 – ஒரு சிறு இசை (சிறுகதைகள்) – வண்ணதாசன்.
II. நெடு வினா
- சிறுகதை என்றால் சிறிய கதை, கொஞ்சப் பக்கங்களில் முடிந்து விடுவது என்பதல்ல; சிறுகதை என்ற பிரிவு இலக்கியத்தில் அதில் எடுத்தாளப்படும் பொருள் பற்றியது;
- ஒரு சிறு சம்பவம், ஒரு மனோநிலை, மனநிலை ஆகியவற்றை மையமாக வைத்து எழுதப்படுவது; எடுத்து எழுதுவது.
- சிறுகதையில் சம்பவமோ , நிகழ்ச்சியோ அல்லது எடுத்தாளப்படும் வேறு எதுவோ அது ஒன்றாக
- இருக்க வேண்டும்.
- சிறுகதைப் பின்னலில் ஆரம்பம், மத்திய சம்பவம், அதன் வளர்ச்சி அல்லது வீழ்ச்சி என்ற மூன்று
- பகுதிகள் உண்டு.
- சாதாரணமான கதைகளில் இம்மூன்றும் படிப்படியாக வளர்ந்துகொண்டே போகும்.
- சமீபத்தில் எழுதப்பட்ட அமெரிக்க சிறுகதைகளில் பழைய சம்பிரதாயமான ஆரம்பம், முடிவு என்ற இரண்டு பகுதிகளும் கிடையவே கிடையாது.
- கதை திடீரென்று மத்திய சம்பவத்தின் உச்சஸ்தானத்தில் ஆரம்பிக்கிறது. அதிலேயே முடிவடைகிறது.
- இன்னும் வேறு ஒரு விதமான கதைகளும் உண்டு. அவற்றில் முடிவு என்ற ஒன்று கிடையாது.
- அதாவது கதையை வாசிப்பது நமது சிந்தனையின் சலனத்தை ஊக்குவதற்கு ஒரு தூண்டுகோல்.
- தி. ஜானகிராமன் தஞ்சை மண்வாசனையுடன் கதைகளைப் படைத்தவர்.
- உயர்நிலைப்பள்ளி ஆசிரியராகவும் வானொலியில் கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகவும்
- பணியாற்றியவர்.
- வடமொழி அறிவும் சிறந்த இசையறிவும் கொண்ட இவர்தம் கதைகள் மணிக்கொடி, கிராம ஊழியன், கணையாழி, கலைமகள், சுதேசமித்திரன், ஆனந்த விகடன், கல்கி போன்ற இதழ்களில் வெளிவந்தன.
- நாவல்களையும் நாடகங்களையும் இவர் படைத்துள்ளார்.
- “அவரவர் அனுபவிப்பதும் எழுத்தாக வடிப்பதும் அவரவர் முறை” என்னும் கோட்பாட்டைக் கொண்டவர் இவர்.
- தமிழ்க் கதையுலகம் நவீனமயமானதில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது..
- இந்திய இசையின் அழகான நுட்ப ங்களைத் தெளிவாக வாசித்துக் காட்டக்கூடிய இசைக்கருவிகளில் நாகசுரமும் ஒன்று.
- மங்கலமான பல நிகழ்வுகளில் இக்கருவி இசைக்கப்படுகிறது. இந்தச் சிறப்பான கருவி 600 ஆண்டுகளுக்கு முன்புதான் தமிழகத்தில் வாசிக்கப்பட்டது.
- 13ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சங்கீத இரத்னாகரம் என்னும் நூலில் இந்தக் கருவி கூறப்படவில்லை. 13ஆம் நூற்றாண்டு வரையிலுள்ள எந்தப் பதிவுகளிலும் இந்தக் கருவி பற்றிக் குறிப்பிடப்படவில்லை.
- தமிழகப் பழைமை வாய்ந்த கோவில் சிற்பங்களிலும் இந்தக் கருவி காணப்படவில்லை. ஆகவே இந்தக் கருவி 13ஆம் நூற்றாண்டிற்குப் பின் ஏற்பட்டிருக்கலாம் என்று அறியமுடிகிறது. நாகசுரம் என்ற பெயரே சரியானது. நாகசுரக் கருவி ஆச்சா மரத்தில் செய்யப்படுகிறது.
- வெட்டப்பட்ட ஆச்சா மரத்துண்டுகளை நீண்ட நாள்கள் வைத்திருந்த பிறகே இக்கருவி உருவாக்கப்படுகிறது. எனவே பழைய வீடுகளிலிருந்து பிரிக்கப்பட்ட ஆச்சா மரக்கட்டைகளைக் கொண்டே நாகசுரம் செய்யப்படுகிறது.
- நாகசுரத்தின் மேல்பகுதியில் சீவாளி என்ற கருவி பொருத்தப்படுகிறது. சீவாளி, நாணல் என்ற புல் வகையைக்கொண்டு செய்யப்படுகிறது.
*************THE END OF 6.4****************
6.5. புணர்ச்சி
I. பலவுள் தெரிக.
மரவேர் என்பது ________ புணர்ச்சி- இயல்பு
- திரிதல்
- தோன்றல்
- கெடுதல்
II. சிறு வினா
கைபிடி, கைப்பிடி – சொற்களின் பொருள் வேறுபாடுகளையும் ஆவற்றின் புணர்ச்சி வகைகளையும் எழுதுக.கைபிடி:-
பொருள் : கையினை பிடி
புணர்ச்சி வகை : இயல்புப்புணர்ச்சி
கைப்பிடி:-
பொருள் : கைப்பிடி பிடி
புணர்ச்சி வகை : விகாரப்புணர்ச்சி
புணர்ச்சி – கூடுதல் வினாக்கள்
1. புணர்ச்சி என்றால் என்ன?
நிலைமொழி இறுதியும், வருமொழி முதலும் சேர்வது புணர்ச்சி ஆகும்
2. புணர்ச்சியின் வகையினை கூறு?
புணர்ச்சி இயல்பு புணர்ச்சி, விகாரப்புணர்ச்சி என இரு வகைப்படும்.
3. இயல்பு புணர்ச்சி என்றால் என்ன? சான்று தருக
நிலைமொழி இறுதியும், வருமொழி முதலும் எவ்வித வேறுபாடும் இன்றி சேர்வது விகாரப்புணர்ச்சி ஆகும்
சான்று:- மா + மரம் = மாமரம்
3. விகாரப்புணர்ச்சி என்றால் என்ன? சான்று தருக
நிலைமொழி இறுதியும், வருமொழி முதலும் மாறுபட்டு சேர்வது விகாரப்புணர்ச்சி ஆகும்
சான்று:- நுழைவு + தேர்வு = நுழைவுத்தேர்வு
4. விகாரப்புணர்ச்சி மாற்றத்தின் வகையினை சான்றுடன் எழுதுக
சான்று:- நுழைவு + தேர்வு = நுழைவுத்தேர்வு
2. திரிதல்
சான்று:- பல் + பசை = பற்பசை
3. கெடுதல்
சான்று:- புறம் + நானூறு = புறநானூறு
5. உடம்படுமெய் என்றால் என்ன?
நிலைமொழி இறுதி உயிராகவும், வருமொழி முதல் உயிராகவும் நிற்க அவற்றை இணைக்க ஒரு மெய் தோன்றும் இதனை உடம்படுமெய் எனப்படும்.
சான்று:- மணி + அழகு = மணியழகு
6. குற்றியலுகர வகையினை சான்றுடன் எழுதுக.
குற்றியலுகர வகை சான்று
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – ஆ, 4 – அ
தமிழ் + பேச்சு = தமிழ்பேச்சு
கை + கள் = கைகள்
பூ + கள் = பூக்கள்
பூவினம் (வகர உடம்படு மெய்)
2. இசை + இனிக்கிறது
இசையினிக்கிறது (யகர உடம்படுமெய்)
3. திரு + அருட்பா
திருவருட்பா (வகர உடம்படு மெய்)
4. சே + அடி
சேவடி (வகர உடம்படு மெய்)
குற்றியலுகரத்தில் வரும் “உ”கரமானது தனக்குரிய ஒரு மாத்திரையில் இருந்து அரை மாத்திரையாக குறுகி ஒலிக்கும்.
முற்றியலுகரத்தில் வரும் “உ”கரமானது தனக்குரிய ஒரு மாத்திரை அளவில் இருந்து குறையாமல் ஒலிக்கும்.
ஆ) புணர்ச்சி இலக்கணம் கற்பது உரைநடை எழுதவதற்கு உதவும் – இக்கூற்றை ஆய்க.
ஒருசொல்லை பிரித்தால் வரும் நிலைமொழி + வருமொழி – எவ்வாறு புணரும் என்பதை அறியும் பொழுதுதான் உரைநடை எழுதும்போது ஏற்படும். ஒலிநிலை மாற்றங்களை உணர்ந்து எழுத இயலும்.
வல்லினம் மிகும் மற்றும் மிகாவிடங்கள், சொறசேர்க்கை ஆகியன உரைநடைக்கு இன்றியமையாதாகும். அவற்றை தெளிவாக தருவது புணர்ச்சி இலக்கணம்.
எனவே புணர்ச்சி இலக்கணம் கற்பது உரைநடை எழுத உதவும்.
இ) கீழ்க்காணும் பத்தியில் உள்ள சொற்களைச் சேர்த்து எழுதுக.
தமிழின் ’தொன்மை + ஆன’ இலக்கண ’நூல் + ஆகிய’ ’தொ ல்காப்பியம் + இல்’ ’சிற்பம் + கலை’ பற்றிய குறிப்புக் காணப்படுகிறது. போரில் விழுப்புண்பட்டு இறந்த வீரருக்கு நடுகல் நடப்படும். ’அ + கல் லில்’ அவ்வீரரின் உருவம் பொறிக்கப்பெறும். ’தமிழக + சிற்பம் + கலை’யின் தோற்றத்திற்கான சான்றாக ’இதனை + கொள்ளலாம்’. சிலப்பதிகாரத் தில் ’கண்ணகிக்கு + சிலை’ வடித்த செய்தி இடம் பெற்றுள்ளது. மாளிகைகளில் பல ’சுதை + சிற்பங்கள்’ இருந்ததை மணிமேகலை மூலம் ’அறிய + முடிகிறது’.
நிலைமொழி இறுதியும், வருமொழி முதலும் சேர்வது புணர்ச்சி ஆகும்
2. புணர்ச்சியின் வகையினை கூறு?
புணர்ச்சி இயல்பு புணர்ச்சி, விகாரப்புணர்ச்சி என இரு வகைப்படும்.
3. இயல்பு புணர்ச்சி என்றால் என்ன? சான்று தருக
நிலைமொழி இறுதியும், வருமொழி முதலும் எவ்வித வேறுபாடும் இன்றி சேர்வது விகாரப்புணர்ச்சி ஆகும்
சான்று:- மா + மரம் = மாமரம்
3. விகாரப்புணர்ச்சி என்றால் என்ன? சான்று தருக
நிலைமொழி இறுதியும், வருமொழி முதலும் மாறுபட்டு சேர்வது விகாரப்புணர்ச்சி ஆகும்
சான்று:- நுழைவு + தேர்வு = நுழைவுத்தேர்வு
4. விகாரப்புணர்ச்சி மாற்றத்தின் வகையினை சான்றுடன் எழுதுக
விகாரப்புணர்ச்சி மாற்றம் மூன்று வகைப்படும். அவை
1. தோன்றல்சான்று:- நுழைவு + தேர்வு = நுழைவுத்தேர்வு
2. திரிதல்
சான்று:- பல் + பசை = பற்பசை
3. கெடுதல்
சான்று:- புறம் + நானூறு = புறநானூறு
5. உடம்படுமெய் என்றால் என்ன?
நிலைமொழி இறுதி உயிராகவும், வருமொழி முதல் உயிராகவும் நிற்க அவற்றை இணைக்க ஒரு மெய் தோன்றும் இதனை உடம்படுமெய் எனப்படும்.
சான்று:- மணி + அழகு = மணியழகு
6. குற்றியலுகர வகையினை சான்றுடன் எழுதுக.
குற்றியலுகர வகை சான்று
- வன்தொடர்க் குற்றியலுகரம் நாக்கு, வகுப்பு
- மென்தொடர்க் குற்றியலுகரம் நெஞ்சு, இரும்பு
- இடைத்தொடர்க் குற்றியலுகரம் மார்பு, அமிழ்து
- உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் முதுகு, வரலாறு
- ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் எஃகு, அஃது
- நெடில் தொடர்க் குற்றியலுகரம் காது, பேசு
கற்பவை கற்றபின்….
I. எழுத்துவகை அறிந்து பொருத்துக.- இயல் – உயிர் முதல் உயிரீறு
- புதிது – உயிர் முதல் மெய்யீறு
- ஆணி – மெய்ம்முதல் மெய்யீறு
- வரம் – மெய்ம்முதல் உயிரீறு
II. புணர்ச்சிகளை ’முதல், ஈற்றுச்’ சொல்வகையால் பொருத்துக.
- செல்வி + ஆடினாள் – மெய்யீறு + மெய்ம்முதல்
- பாலை + திணை – மெய்யீறு + உயிர்முதல்
- கோல் + ஆட்டம் – உயிரீறு + உயிர்முதல்
- மண் + சரிந்தது – உயிரீறு + மெய்ம்முதல்
III. சேர்த்து எழுதுக.
தமிழ் + பேசு = தமிழ்பேசுதமிழ் + பேச்சு = தமிழ்பேச்சு
கை + கள் = கைகள்
பூ + கள் = பூக்கள்
IV. பொருத்தமான உடம்படுமெய்யுடன் இணைக்க.
1. பூ + இனம்பூவினம் (வகர உடம்படு மெய்)
2. இசை + இனிக்கிறது
இசையினிக்கிறது (யகர உடம்படுமெய்)
3. திரு + அருட்பா
திருவருட்பா (வகர உடம்படு மெய்)
4. சே + அடி
சேவடி (வகர உடம்படு மெய்)
V. சிந்தனை கிளர் வினாக்கள்
அ) குற்றியலுகரம், முற்றியலுகரம் இவற்றின் வேறுபாட்டை எழுதுக.குற்றியலுகரத்தில் வரும் “உ”கரமானது தனக்குரிய ஒரு மாத்திரையில் இருந்து அரை மாத்திரையாக குறுகி ஒலிக்கும்.
முற்றியலுகரத்தில் வரும் “உ”கரமானது தனக்குரிய ஒரு மாத்திரை அளவில் இருந்து குறையாமல் ஒலிக்கும்.
ஆ) புணர்ச்சி இலக்கணம் கற்பது உரைநடை எழுதவதற்கு உதவும் – இக்கூற்றை ஆய்க.
ஒருசொல்லை பிரித்தால் வரும் நிலைமொழி + வருமொழி – எவ்வாறு புணரும் என்பதை அறியும் பொழுதுதான் உரைநடை எழுதும்போது ஏற்படும். ஒலிநிலை மாற்றங்களை உணர்ந்து எழுத இயலும்.
வல்லினம் மிகும் மற்றும் மிகாவிடங்கள், சொறசேர்க்கை ஆகியன உரைநடைக்கு இன்றியமையாதாகும். அவற்றை தெளிவாக தருவது புணர்ச்சி இலக்கணம்.
எனவே புணர்ச்சி இலக்கணம் கற்பது உரைநடை எழுத உதவும்.
இ) கீழ்க்காணும் பத்தியில் உள்ள சொற்களைச் சேர்த்து எழுதுக.
தமிழின் ’தொன்மை + ஆன’ இலக்கண ’நூல் + ஆகிய’ ’தொ ல்காப்பியம் + இல்’ ’சிற்பம் + கலை’ பற்றிய குறிப்புக் காணப்படுகிறது. போரில் விழுப்புண்பட்டு இறந்த வீரருக்கு நடுகல் நடப்படும். ’அ + கல் லில்’ அவ்வீரரின் உருவம் பொறிக்கப்பெறும். ’தமிழக + சிற்பம் + கலை’யின் தோற்றத்திற்கான சான்றாக ’இதனை + கொள்ளலாம்’. சிலப்பதிகாரத் தில் ’கண்ணகிக்கு + சிலை’ வடித்த செய்தி இடம் பெற்றுள்ளது. மாளிகைகளில் பல ’சுதை + சிற்பங்கள்’ இருந்ததை மணிமேகலை மூலம் ’அறிய + முடிகிறது’.
- தொன்மை + ஆன = தொன்மையான
- நூல் + ஆகிய = நூலாகிய
- தொல்காப்பியம் + இல் = தொல்காப்பியத்தில்
- சிற்பம் + கலை = சிற்பக்கலை
- அ + கல்லில் = அக்கல்லில்
- தமிழக + சிற்பம் + கலை = தமிழகச் சிற்பக்கலை
- இதனை + கொள்ளலாம் = இதனைக் கொள்ளலாம்
- கண்ணகிக்கு + சிலை = கண்ணகிக்குச் சிலை
- சுதை + சிற்பங்கள் = சுதைச் சிற்பங்கள்
- அறிய + முடிகிறது = அறிய முடிகிறது
VI. படக்காட்சியிலிருந்து இருசொல் தொடர்களை அமைத்து, அவற்றின் புணர்ச்சி வகையினைக் கண்டறிக.
- மரக்கிளை மரம் + கிளை = மரக்கிளை விகாரப் புணர்ச்சி
- மூன்றுபெண்கள் மூன்று + பெண்கள் =மூன்றுபெண்கள் இயல்புப் புணர்ச்சி
- நிறைகுடம் நிறை + குடம் = நிறைகுடம் இயல்புப் புணர்ச்சி
- உழவுத்தொழில் உழவு + தொழில் = உழவுத்தொழில் தோன்றல் விகாரப் புணர்ச்சி
மொழியை ஆள்வோம்
I. மொழிபெயர்க்க.- Strengthen the body – உடலினை உறுதி செய்
- Love your Food – உணவை நேசி
- Thinking is great – நல்லதே நினை
- Walk like a bull – ஏறு போல் நட
- Union is Strength – ஒற்றுமையே பலம்
- Practice what you have learnt – படித்ததைப் பழகிக் கொள்
II. மரபுத் தொடர்களைக் கொண்டு தொடர் அமைக்க.
(எட்டாக்கனி, உடும்புப்பிடி, கிணற்றுத்தவளை , ஆகாயத் தாமரை, எடுப்பார் கைப்பிள்ளை, மேளதாளத்துடன்)1. எட்டாக்கனி
முயன்றால் எந்தச் செயலிலும் வெற்றி என்பது எட்டாக்கனி இல்லை.
2. உடும்புப்பிடி
நட்பில் அன்பு உடும்புப்பிடி போன்றது
3. கிணற்றுத்தவளை
வெறும் படிப்பறிவு மட்டும் இருப்பது கிணற்றுத்தவளை போலத்தான்.
4. ஆகாயத்தாமரை
பாலைவனத்தில் நீர் கிடைப்பது ஆகாயத்தாமரை பூப்பது போலத்தான்
5. எடுப்பார் கைப்பிள்ளை
பிறரின் பேச்சைக் கேட்டு எடுப்பார் கைப்பிள்ளை போல இருக்கக் கூடாது.
6. மேளதாளத்துடன்
நண்பனின் திருமணம் மேளதாளத்துடன் நடைபெற்றது.
III. பத்தியில் இடம்பெற்றுள்ள இயல்பு புணர்ச்சிகளையும் விகாரப் புணர்ச்சிகளையும் எடுத்தெழுதுக.
காஞ்சி கயிலாசநாதர் கோவில் சுற்றுச்சுவர் முழுவதும் சிற்பங்களின் கலைக்கூடமாகத் திகழ்கிறது. அதேபோன்று காஞ்சி வைகுந்தபெருமாள் கோவிலிலும் பல்லவர்காலச்சிற்பங்கள் மிகுதியாக உள்ளன. இங்குத் தெய்வச் சிற்பங்கள் மட்டுமல்லாது பிற சிற்பங்களும் கோவில் உட்புறச் சுவரில் செதுக்கப்பட்டுள்ளன. பல்லவர்காலக் குடைவரைக் கோவில்களின் நுழைவுவாயிலின் இருபுறங்களிலும் காவலர்கள் நிற்பதுபோன்று சிற்பங்கள் படைக்கப்பட்டுள்ளன.- நுழைவு + வாயிலின் நுழைவு வாயிலின் இயல்புப் புணர்ச்சி
- நிற்பது + போன்று நிற்பது போன்று இயல்புப் புணர்ச்சி
- சுற்று + சுவர் சுற்றுச்சுவர் தோன்றல் விகாரப்புணர்ச்சி
- கலை + கூடம் கலைக்கூடம் தோன்றல் விகாரப்புணர்ச்சி
- தெய்வம் + சிற்பங்கள் தோன்றல் விகாரப்புணர்ச்சி
- குடவரை + கோயில் குடவரைக் கோயில் தோன்றல் விகாரப்புணர்ச்சி
- வைகுந்தம் + பெருமாள் வைகுந்த பெருமாள் கெடுதல் விகாரப்புணர்ச்சி
- பல்லவர் காலம் + குடவரைக் கோயில் பல்லவர் காலக் குடவரைக் கோயில் திரிதல் விகாரப்புணர்ச்சி
IV. மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.
1. இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை போட்டனர்.இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை வேய்ந்தனர்.
2. கயல் பானை செய்யக் கற்றுக் கொண்டான்.
கயல் பானை வனையக் கற்றுக் கொண்டாள்
3. நேற்று தென்றல் காற்று அடித்தது.
நேற்று தென்றல் காற்று வீசியது.
4. தென்னை மட்டையிலிருந்து நார் எடுத்தார்.
தென்னை மட்டையிலிருந்து நார் உரித்தனர்.
5. அணில் பழம் சாப்பிட்டது.
அணில் பழம் கொறித்தது.
6. கொடியிலுள்ள மலரை எடுத்து வா .
கொடியிலுள்ள மலரைப் பறித்து வா .
V. விடையைத் தமிழ் எண்களில் எழுதுக
- பதினெண் கீழ்கணக்கு – ௧௮
- திருக்குறளின் அதிகாரங்கள் – ௧௩௩
- சிற்றிலக்கியங்கள் – ௯௩
- சைவத் திருமுறைகள் – ௧௨
- நாயன்மார்கள் – சா௩
- ஆழ்வார்கள் – ௧௨
VI. கண்டுபிடிக்க.
1. எண்ணும் எழுத்தும் கண் – இந்தத் தொடரை ஒருவர் 1 2 3 4 1 5 6 7 4 8 2 என்று குறிப்பிடுகிறார். இதே முறையைப் பின்பற்றிக் கீழ்க் காணும் சொற்களை எப்படிக் குறிப்பிடுவார்?- எழுது → 1, 5, 7
- கண்ணும் → 8, 2, 3, 4
- கழுத்து → 8, 5, 6, 7
- கத்து → 8, 6, 7
- உண்மை
- பொய்
- உறுதியாகக் கூறமுடியாது
- விடை : உறுதியாகக் கூறமுடியாது
- காரணம் : அனைவரும் என்று, கூறிய பின் இராமன் வேறு வகுப்பு மாணவனாகக் கூட இருக்கலாம்.
VII. அகராதியில் காண்க.
1. ஏங்கல்அஞ்சல். அழுதல், இரங்கல், வாடல், வாய்விடல், கவலைப்படல்
2. கிடுகு
வட்டவடிவப்பாறை, கேடகம், சட்டப்பலகை, தேரின் மரச்சுற்று, முடைந்த ஓலைக்கீற்று
3. தாமம்
மாலை, இடம், உடல், ஒளி, பிறப்பு, பெருமை, யானை
4. பான்மை
குணம், தகுதி, தன்மை, பங்கு, ஊழ், நல்வினைப்பயன்
5. பொறி
அறிவு, எழுத்து, செல்வம், தீப்பொறி, தேர், வண்டு, முத்திரை, வரி, பதுமை
VIII. உவமைத் தொடர்களை உருவகத் தொடர்களாக மாற்றுக.
1. மலர்விழி வீணை வாசித்தாள் ; கேட்டவர் வெள்ளம் போன்ற இன்பத்தில் நீந்தினர்.விழிமலர் வீணை வாசித்தாள், கேட்டவர் இன்ப வெள்ளத்தில் நீந்தினர்
2. குழலியின் இசையைச் சுவைத்தவர், கடல் போன்ற கவலையிலிருந்து நீங்கினர்.
குழலியின் இசையைச் சுவைத்தவர் கவலை கடலிருந்து நீங்கினர்
3. தேன் போன்ற மொழியைப் பவளவாய் திறந்து படித்தாள்.
மொழித்தேனை வாய்பவளத்தால் திறந்து படித்தாள்
4. முத்துநகை தன் வில் போன்ற புருவத்தில் மை தீட்டினாள்.
நகைமுத்து தன் புருவவில்லில் மை தீட்டினாள்
IX. கலைச்சொல் அறிவோம்
- குடைவரைக் கோவில் – Cave temple,
- கருவூலம் – Treasury,
- மதிப்புறு முனைவர் – Honorary Doctorate,
- மெல்லிசை – Melody
- ஆவணக் குறும்படம் – Document short film ,
- புணர்ச்சி – Combination
*************THE END OF 6.5*****************
6.6. திருக்குறள்
கற்பவை கற்றபின்…
1. படத்திற்கு ஏற்ற குறளைத் தேர்வு செய்அ. இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.
ஆ. ஏவவும் செய்கலான் தான்தே றான் அவ்வுயிர்
போஒம் அளவும்ஓர் நோய்.
இ. சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை
விடை
இ. சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை
2. பொருளுக்கேற்ற அடியைக் கண்டு பிடித்துப் பொருத்துக.
1. கண்டானாம் தான்கண்டவாறு பகைவரையும் நட்பாக்கும் கருவி
2. அறம்நாணத் தக்கது உடைத்து தெரிந்த அளவில் அறிவுடையவனாகத் தோன்றுவான்
3. மாற்றாரை மாற்றும் படை அறம் வெட்கப்பட்டு அவனை விட்டு விலகிப்போகும்
விடை : 1 – ஆ, 2 – இ, 1 -அ
3. ஐந்து சால்புகளில் இரண் டு
- வானமும் நாணமும்
- நாணமும் இணக்கமும்
- இணக்கமும் சுணக்கமும்
- இணக்கமும் பிணக்கமும்
5. கோடிட்ட இடங்களுக்கான விடையைக் கட்டத்துள் கண்டறிந்து வட்ட மிடுக.
ஒ ப் பு று
க ப ர வ
ட டை வு த
ல் உ ழ எ
ம் ற அ ர
1. அனைவரிடமும் இணக்கம் என்பதன் பொருள் _____________
விடை : ஒப்புரவு
2. உலகத்துக்கு அச்சாணி போன்றவர் _____________
விடை : உழவர்
3. தான் நாணான் ஆயின் _____________ நாணத் தக்கது.
விடை : அறம்
4. ஆழி என்பதன் பொருள் _____________
விடை : கடல்
5. மாற்றாரை மாற்றும் _____________
விடை : படை
6. ஒழுக்கமான குடியில் பிறந்தவர் _____________ செய்வதில்லை
விடை : தவறு
வினாக்கள்
1) இறக்கும்வரை உள்ள நோய் எது?சொன்னாலும் செய்யாமல், தானாகவும் செய்யாமல் இருப்பவன் உயிர், சாகும் வரை உள்ள நோய்
2) அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோ(டு)
ஐந்துசால்பு ஊன்றிய தூண். – இக்குறட்பாவில் பயின்றுவரும் அணியை விளக்கி எழுதுக.
இக்குறட்பாவில் பயின்றுவரும் அணி – ஏகதேச உருவக அணி
இலக்கணம்:-
செய்யுளில் ஒன்றை உருவகப்படுத்தி மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது ஏகதேச உருவக அணி ஆகும். (ஏகம் – ஒன்று, தேசம் – பக்கம்)
விளக்கம்:-
சான்றாண்மைக்கு தாங்கும் தூண்களை உருவகம் செய்த வள்ளுவன், சான்றாண்மைக்கு உருவகம் செய்யாமல் விட்டதால் இது எகதேச உருவக அணி ஆகும்.
3) உலகத்திற்கு அச்சாணியாய் இருப்பவர் யார்? ஏன்?
மற்ற தொழில் செய்பவரையும் உழுபவரே தாங்கி நிற்பதால், அவரே உலகத்துக்கு அச்சாணி ஆவர்.
4) காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு. – இக்குறட்பாவில் பயின்றுவரும் தொடை நயத்தை எழுதுக.
எதுகைத் தொடை
செய்யுளி்ல் சீர்களிலோ அல்லது அடிகளிலோ இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை ஆகும்.
தான்காணான் – தான்கண்ட
காணாதான் – காட்டுவான்
மோனைத் தொடை
செய்யுளில் சீர்களிலோ அல்லது அடிகளிலோ முதலாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை ஆகும்.
காணாதான் – காட்டுவான்
தான்காணான் – தான்கண்ட
திருக்குறள் – கூடுதல் வினாக்கள்
1. எப்படி சிறந்த இன்பம் காணலாம்?துன்பத்தில் மனக்கசப்பு என்னும் மோசமான துன்பம் மறைந்தால், இன்பத்தில் சிறந்த இன்பம் பெறலாம்.
2. யார் தவறு செய்வதில்லை?
கோடிப் பொருள் அடுக்கிக் கொடுத்தாலும், ஒழுக்கமான குடியில் பிறந்தவர், தவறு செய்வதில்லை
3. சான்றாண்மையைத் தாங்கும் தூண்கள் யார்?
பிறரிடம் அன்பும் பழிக்கு நாணுதலும் அனைவரிடமும் இணக்கமும் இரக்கமும் உண்மையும் சான்றாண்மையைத் தாங்கும் தூண்கள்!
4. சான்றோர்க்குப் பகைவரையும் நடப்காக்கும் கருவி எது?
செயல் செய்பவரின் ஆற்றல், பணிவுடன் நடத்தல். அதுவே சான்றோர்க்குப் பகைவரையும் நட்பாக்கும் கருவி.
கருத்துரையிடுக