PG TRB Psychology Notes Unit 6 Part 3
PG TRB Psychology Notes Unit 6 Part 3

கவனித்தல் (Attention)

  • நமது நனவுப் பரப்பில் உள்ள பல்வேறு தூண்டல்களில், ஒரு குறிப்பிட்ட சமயத்தில் நமது தேவையுடன் இணைந்த ஒன்றினைத் தேர்ந்தெடுத்து புலன்காட்சிக்கு ஆட்படுத்துவதையே கவனி என்கிறோம். கவனம் புலன்காட்சிக்கு அடிப்படையாகும்.

கோட்பாடுகள்:

  1. தேர்வு செய்தல் கோட்பாடு (Selection theory of attention)
  2. கவனம் வரையறை மக்டூகல்
  3. ஹெப்பின் கோட்பாடு பிராட்பென்ட் கோட்பாடு
  4. ரூபின் - கெஸ்டால்ட் மனவியலறிஞர் காரணிகள் (Factors)

காரணிகள்

  • 1. அகக்காரணிகள் (Subjective or internal factors) தனி ஒருவனிடம் இருக்கும் காரணிகளாகும். எ.கா. ஆர்வம் (Interest) தேவை (Nced), மனநிலை (Mood). உடல்நிலை (Physiological condition),& ஆயத்தநிலை (Mental set)
  • 2. புறக்காரணிகள் (Obective or External Factors) எ.கா. உருவஅளவு (Size), அடர்த்தி (அ) செறிவு (intensity), மாற்றம் (Change), வேறுபாடு (Contrast), புதுமை (Novelty), இயக்கம் (அ) அசைவு (Movement), திரும்பத்திரும்பத் தோன்றல் (Repetition), முழுமைப்பெற்ற உருவம் (Systematic form)

கவனமின்மை (Inattention)

  • கவனமின்மை எந்தவொரு தூண்டலையம் கவனிக்காத நிலையினைக் குறிப்பிடும். எ.கா. ஆர்வமின்மை, மனநிலை சரியின்மை, போன்றவை கவனமின்மைக்கு காரணங்களாக அமைகின்றன.

கவனக்குலைவு (Distraction)

  • நாம் மேற்கொண்டுள்ள காரியத்தில் இருந்து (தூண்டலிருந்த) நமது கவனம் விலகி வேறொரு தூண்டலின்பால் செல்கின்ற வினையினை கவனக் குலைவு (அ) கவனச் சிதைவு என்கிறோம்.
எ.கா. 
  • 1.) வகுப்பறைக்கு வெளியே எழும் சத்தம் 
  • 2) வெகு தொலைவிலிருந்து கேட்கும் இசையொலி

கவனமாற்றம் (Shifting of Attention) 

நாம் ஒரு குறிப்பிட்ட பொருளின் (அ) நிகழ்ச்சியில் கவனம் செலுத்திக் கொண்டே இருக்கும்போது, நமது கவனம் இடையில் அந்த நிகழ்ச்சியிலிருந்து விலகி மற்றொரு பொருளின் மீது சென்று மீண்டும் பழைய நிலைக்கே திரும்புவதினைக் குறிப்பிடும்.

Note: தொடர்ந்து ஒரு பொருளின் மீது 10 வினாடிகளுக்கு மேல் நாம் கவனம் செலுத்த முடியாது.

கவனப்பிரிவு (Division of Attention)

"ஒரே நேரத்தில் இரண்டு செயல்களில் கவனம் செலுத்துவதினை குறிக்கும் - உட்வொர்த் (Woodworth) எ.கா. அடுத்தவரிடம் பேசிக் கொண்டே கம்பளிச் சட்டை பின்னுதல்.

கவன வீச்சு (Span of Attention) 

  • ஒரே பார்வையில் மிகக்குறுகிய நேரத்தில் எத்தனை பொருட்களை அல்லது தூண்டல்களை ஒருவன் உணர்ந்து அறிகிறான் என்பதே அவனது கவனவீச்சு ஆகும். இது புறன்காட்சி வீச்சு (Perception span) எனவும் குறிப்பிடலாம்.

கவனவீச்சுக் கருவி

  • டாக்ஸிஸ்டாஸ்கோப் (Tachistoscope) என்ற கருவி கவன வீச்சை அறிய பயன்படுகிறது. இக்கருவியினை வடிவமைத்தவர் R.B.Cattell (R.B.கெட்டல்) முதிர்ச்சியடைந்த ஒருவனின் கவனவீச்சு 6 or 7.

கவன் வகைகள்

1. விருப்ப (அ) முயற்சிசார் (அ) தன்னிச்சையான கவனம் (Voluntary or volitional attention) விருப்பத்தின்படி நடைபெறுகிறது. (play of will)

  • (a) Implicit volitional attention (தெளிவற்ற விருப்பக்கவனம்) விரும்புதலின் ஒரே செயகையால் பெறப்படுகிறது. (Single act of will)
  • (b) Explicit volitional attention (தெளிவான விருப்பக்கவனம் விரும்புதவின் திரும்பத்திரும்ப செயல்படும் செய்கையால் பெறப்படுகிறது. (Repeated act of will) 
2) விருப்பமற்ற (அ) தன்னச்சையற்ற (அ) முயற்ச்சியற்ற கவனம் (Involuntary or non-volitional attention) விருப்பமில்லாமல் நடைபெறுகிறது (without the play of will) எ.கா. அழுகின்ற குழந்தையின்பால் தாயின் கவனம் செல்லுதல், (2) திடீர் சத்தம் (3) bright colors (நிறம்) 4) Attention towards the members of the opposite sex, etc

  • a) Enforced non-volitional attention: (கட்டாய்ப் படுத்தப்பட்ட இயல்புணர்வுகளால் (Instincts) ஏற்படுகிறது.
  • b) Spantancous non-volitional attention: உணர்ச்சிக்கனிவுகளால் (Sentiments) ஏற்படுகிறது.

3) Habitual Attention (பழக்கக் கவனம்)

  • இது ஓரளவு முயற்ச்சியற்ற கவனத்துடன் இணைந்தது ஆகும்.

Instincts (Basic Drives) - இயல்புணர்வுகள் (அ) இயல்பூக்கங்கள்.

  • இயல்பூக்கங்கள் என்பவை இயற்கையான ஊக்கிகள் பிறப்பிலேயே குழந்தைகளிடம் இருப்பதாகவும், இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட மனவெழுச்சியுடன் தொடர்புடையதாகவும். இவையே மனித நடத்தைக்கு அடித்தளங்களாகும். இது சிக்கல் மிகுந்த நடைத்தயாகும். இவைகள். கற்றலால் விளைவது அல்ல.

இயல்பூக்கக் கொள்கை (Instinet theory of McDougall)மக்டூகல் மடைமாற்றம் (Sublimation)

  • இயல்பூக்கங்கள் ஆற்றல் மிக்கவை. சிலவேலைகளில் அழிவிற்கும், ஆபத்திற்கும், நஷ்டத்திற்கும் கூட காரணமாக இருப்பவை. இந்த இயல்பூக்கங்களை அடக்கி ஒடுக்காமல் பயனுள்ள வேறொரு இலக்கை அடைய திசை திருப்பி விடுவது மடைமாற்றமாகும்.

Sensation (புலன் உணர்வு)

  • மனிதனின் புலன் உறுப்புகள் - "அறிவின் வாயில்கள்" (Gateway of Human Knowledge). புலன் உணர்வானது புலன் உறுப்புகளால் பெறப்படுகிறது. புலன் உறுப்புகள்: கண், காது, மூக்கு, நாக்கு, தோல்.

புலன்காட்சி (Perception)

  • புலன் உறுப்புகள் வாயிலாகப் பெற்ற புலன் உணர்விற்கு. நாம் ஏற்கனவே பெற்றிருக்கும் அனுபவங்களின் அடிப்படையில் பொருள் ஊட்டி தூண்டல் பொருளின் தன்மையை அறிதலை புலன்காட்சி என்கிறோம். (அதாவது) புலன் காட்சி = புலன் உணர்வு + பொருள் அறிதல் 

புலன் காட்சியை பாதிக்கும் காரணிகள் (Factors of Perception)

  • தூண்டல்களை தோற்றுவிக்கும் புறப்பொருள் - புறக்காரணி (தூண்டலால் எழுந்த உணர்வுக்கு பொருள் கொள்ளுதல் -அகக்காரணி

அகக்காரணிகள் (Internal Factors)

(1) மனநிலை (Mental Set), (2) கவர்ச்சி (Interest), (3) தேவை (need), (4) மனப்பான்மை attitude) (5) கருத்தேற்றம் (Suggestion) (6) எதிர்பார்ப்பு (Expectation)

புலன்காட்சியின் 4 கூறுகள் (மர்பி – Garddner Murphy)

  • 1. புலன் உணர்வு (Pereption) (2) நரம்பு மண்டலம் (Nervous) (3) முந்தைய அனுபவங்கள் (Past Experince) (4) LOGOTIBD60 (Mental Set)

புலன் காட்சியை முறைபடுத்தும் நியதிகள் (Laws)

  1. முழுமைக்காட்சி நியதி v of Pragnancy)
  2. அண்மை விதி (Law of Proximity)
  3. ஒப்புடைமை விதி (Law of Similarity)
  4. மூட்ட விதி (Law ofclosure)
  5. தொடர்ச்சி விதி (Law of.Continuity

புலன் காட்சியில் ஏற்படும் தவறுகள் (Errors in Perception)

(i) திரிபுக்காட்சி (Illusion)

  • தூண்டல் தவறாக புரிந்து கொள்ளப்படுமேயானால் அதனை திரிபுக் காட்சி என்கிறோம். எ.கா. இரவு நேரத்தில் கிணற்றடியல் கிடக்கும் கயிற்றை மிதித்து விட்டு, அச்சம் காரணமாக, பாம்பு என்று எண்ணினால் அது திரிபுக் காட்சியாகும்.

வகைகள்

  • இயக்கத்திரிபுக் காட்சிகள் (எ.கா. நிலைத்திருக்கும் ஓர் ஒளித்தூண்டல் தானே நகர்வது போன்று தோன்றுவது)
  • பாவைக் கோணத் திரிபுக்காட்சிகள் (இரு இணைகோடுகள் தொலைவில் ஒன்று சேர்வது போன்று தோன்றுதல்) சாயல்களின் வகைகள்: காட்சி சாயல்கள், கேள்வி சாயல்கள், கேள்வி சாயல்கள், சுவைச் சாயல்கள், மணச் சாயல்கள், தொடு சாயல்கள்
  • மாற்றுத் தோற்றங்கள்
  • முல்லர் லையர் திரிபுக் காட்சிகள்

2. இல்பொருள் காட்சி (Hallucination

எந்தவிதமான தூண்டலும் இல்லாமல், தூண்டல் இருப்பது போன்று உணர்வது இல்பொருள் காட்சி எனப்படும். எ.கா.

  • பாலைவனத்து கானல் நீர் (Mirage)
  • யாரும் அரைக்கதவை தட்டாத போதும் தட்டியது போன்று உணர்தல்
  • நடு நிசியில் பேய்களின் சலங்ளை ஓசையை கேட்டல்.நமது உள்ளத்தில் காணப்படும் இல்பொருள் காட்சிக்கு அடிப்படையாக அமைகிறது. அச்சங்கள். போராட்டங்கள், ஆர்வங்கள் போன்றவை

பொதுமைக் கருத்து உருவாதல் (Concept Formation)

  • கருத்து என்பது பொருட்கள் (அ) நிகழ்ச்சிகள் பற்றிய பொதுவான தன்மைகளைக் காட்டும், குறியீடுகளை உருவாக்குதலைக் குறிக்கும்.

வகைகள்:

  1. எளிமையான பொதுமைக்கருத்து (Simple Concept) எ.கா. நீல நிறம், சதுரம், முக்கோணம், etc
  2. சிக்கலான கருத்துக்கள் (Complex concept) எ.கா. சிறிய நீல நிற சதுரக்கட்டை. கால்பந்தாட்டக்குழு, குடியரசு. திருமணம். etc.
  3. பொருள்கள் பற்றியவை (Concept of objects) எ.கா. புத்தகம். வீடு, கார். etc.,
  4. பொருள்களின் கூறுகள் பற்றியவை (Concept pf aspects)
  • Qualities (பண்புகள்) எ.கா. நேர்மை, எளிமை, சொரசொரப்பு, etc.,
  • Relations (தொடர்புகள்) இதைவிடப் பெரிய (bigger than), அதைவிட உயரமான (higher than) etc.,

புரூணரின் பொதுமைக்கருத்து உருவாகும் படிநிலைக் கோட்பாடு

  • அ) செயல்படு நிலை (Enactive)
  • ஆ) உருவக நிலை (Iconic)
  • குறியீட்டு நிலை (Symbolic)

Note: கண்டறியும் முறையே சிறந்த கற்றல் முறையாகும். கிளவுஸ் மெயிர் படிநிலைகள் 4

  1. (Concrete level)
  2. மீண்டும் உணரும் நிலை (identity level)
  3. வகைப்படுத்தல் நிலை (Classificatory level)
  4. முறையான (அ) கருத்தியல் நிலை (Formal level) Vygotsky கருத்து உருவாதல் பற்றி கூறியுள்ளார்.

பொதுமைக் கருத்துப் படங்கள் (Concept Maps)

  • தொடர்புள்ள பல கூற்றுக்களை கொண்டு இவற்றில் காணப்படும் பொதுமைக் கருத்துக்களின் இணைப்பினை விளக்க, இப்படங்கள் உதவுகின்றன. 

பயன்கள் 

  1. பாடச்சுருக்கம் தயாரிக்க கருத்துப்படம் உதவுகிறது.
  2. ஆசிரியர் தாம் கற்பிக்கப் போகும் பாடப்பகுதியில் அடங்கியுள்ள முக்கிய பொதுக் கருத்துக்களை தொடர்பு படுத்தி படமான வரைதல் மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

குறிப்பு:

  1. கருத்துப்படம் எல்லா ஆசிரியர்களாலும் பயன்படுத்தப்படுகிறது.
  2. 2.ஆசிபெல் Ausubels theory of Advanced Irganisers, Novak (நோவாக்) and Godwin (காட்வின்) போன்றோர் கருத்துப்படத்தை உருவாக்கினர்.

Post a Comment

புதியது பழையவை