1.1. தமிழ்மொழி வாழ்த்து
8th Standard Tamil Guide Lesson 1 Book Back and additional Question and
answers. 8th Standard Tamil Samacheer Kalvi Guide, 8th Tamil Answers
Notes, 8th Tamil book Answers.
1.1. தமிழ்மொழி வாழ்த்து
*வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி!வாழிய வாழியவே!வான மளந்தது அனைத்தும் அளந்திடுவண்மொழி வாழியவே!ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசிஇசைகொண்டு வாழியவே!எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!என்றென்றும் வாழியவே! *சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்துலங்குக வையகமே!தொல்லை வினைதரு தொல்லை அகன்றுசுடர்க தமிழ்நாடே!வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழிவாழ்க தமிழ்மொழியே!வானம் அறிந்த தனைத்தும் அறிந்துவளர்மொழி வாழியவே!
- பாரதியார்
பாடலின் பொருள்
தமிழ்மொழி எக்காலத்தும் நிலைபெற்று வாழ்க! ஆகாயத்தால் சூழப்பட்ட
எல்லாவற்றையும் அறிந்து உரைக்கும் வளமான தமிழ்மொழி வாழ்க! ஏழு கடல்களால்
சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மணத்தைப் பரவச் செய்து,
புகழ்கொண்ட தமிழ்மொழி வாழ்க! எங்கள் தாய்மொழியாகிய தமிழ்மொழி உலகம் உள்ள
வரையிலும் வாழ்க! எங்கும் சூழ்ந்துள்ள அறியாமை இருள் நீங்கட்டும்! அதனால்
தமிழ்மொழி மேன்மையுற்று உலகம் முழுதும் சிறப்படைக! பொருந்தாத பழைய
கருத்துகளால் உண்டாகும் துன்பங்கள் நீங்கித் தமிழ்நாடு ஒளிர்க! தமிழ்மொழி
வாழ்க! தமிழ்மொழி வாழ்க! என்றென்றும் தமிழ்மொழி வாழ்க! வானம்வரை
உள்ளடங்கியுள்ள எல்லாப் பொருண்மைகளையும் அறிந்து மேன்மேலும் வளரும்
தமிழ்மொழி வாழ்க!
I. சொல்லும் பொருளும்
- நிரந்தரம் – காலம் முழுமையும்
- வண்மொழி – வளமிக்கமொழி
- வைப்பு – நிலப்பகுதி
- இசை – புகழ்
- சூழ்கலி – சூழ்ந்துள்ள அறியாமை இருள்
- தொல்லை – பழமை, துன்பம்
நூல் வெளி
கவிஞர், எழுத்தாளர், இதழாளர், சமூகச் சீர்திருத்தச் சிந்தனையாளர்,
விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர்
சி. சுப்பிரமணிய பாரதியார். இந்தியா, விஜயா
முதலான இதழ்களை நடத்தி விடுதலைப் போருக்கு வித்திட்டவர். கவிதைகள்
மட்டுமன்றி,
சந்திரிகையின் கதை, தராசு
உள்ளிட்ட உரைநடை நூல்களையும் வசனகவிதைகளையும் சீட்டுக்கவிகளையும்
எழுதியவர்.
சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞன்,
மறம் பாட வந்த மறவன்
என்றெல்லாம் பாரதிதாசன் இவரைப் புகழ்ந்துள்ளார்.
இப்பாடல்
பாரதியார் கவிதைகள் என்னும்
தொகுப்பில்
தமிழ்மொழி வாழ்த்து என்னும்
தலைப்பில் இடம் பெற்றுள்ளது.
II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல் _____.
- வைப்பு
- கடல்
- பரவை
- ஆழி
2. “என்றென்றும்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______
- என் + றென்றும்
- என்று + என்றும்
- என்றும் + என்றும்
- என் + என்றும்
3. ‘வானமளந்தது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______.
- வான + மளந்தது
- வான் + அளந்தது
- வானம் + அளந்தது
- வான் + மளந்தது
4. அறிந்தது + அனைத்தும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.
- அறிந்ததுஅனைத்தும்
- அறிந்தனைத்தும்
- அறிந்ததனைத்தும்
- அறிந்துனைத்தும்
5. வானம் + அறிந்த என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.
- வானம்அறிந்து
- வான்அறிந்த
- வானமறிந்த
- வான்மறிந்
III. “தமிழ்மொழி வாழ்த்து” – இப்பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்தெழுதுக.
- வாழ்க – வாழிய
- எங்கள் – என்றென்றும்
- வண்மொழி – வளர்மொழி
- அகன்று – அறிந்த
IV. குறுவினா
1. தமிழ் எங்குப் புகழ் கொண்டு வாழ்கிறது?
- ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மணத்தைப் பரவச் செய்து, புகழ் கொண்டு வாழ்கிறது
2. தமிழ் எவற்றை அறிந்து வளர்கிறது?
- வானம் வரை உள்ளடங்கியுள்ள எல்லாப் பொருண்மைகளையும் அறிந்து மேன்மேலும் வளர்கிறது
V. சிறுவினா
தமிழ் மொழியை வாழ்த்திப் பாரதியார் கூறும் கருத்துகளை எழுதுக.
- எக்காலத்தும் நிலைபெற்று வாழ்க!
- எல்லாவற்றையும் அறிந்து உரைக்கும் தமிழே வாழ்க!
- ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் புகழ்கொண்ட தமிழே வாழ்க!
- உலகம் உள்ள வரையிலும் தமிழே வாழ்க!
- எங்கும் உள்ள அறியாமை இருள் நீங்கட்டும்.
- தமிழ் உயர்வுற்று உலகம் ழுழுவதும் சிறப்படைக!
- பொருந்தாத பழங்கருத்தால் உண்டாகும் துன்பங்கள் நீங்கி தமிழ்நாடு ஒளிரட்டும்.
- என்றென்றும் தமிழே! வாழ்க
- வானம் வரை உள்ளடங்கியுள்ள எல்லாப் பொருண்மைகளையும் தன்மையை அறிந்து வளரும் தமிழே! வாழ்க
தமிழ்மொழி வாழ்த்து – கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. _____________ கருத்தை அறிவிக்கும் கருவியாகும்விடை : மொழி
2. தமிழர்கள் தமிழை _____________ ஆகக் கருதி போற்றி வந்துள்ளனர்
உயிர்
3. _____________ அறிந்த தனைத்து அறிந்து வளர் மொழி வாழியவே
விடை : வானம்
4. இசை என்பதற்கு பொருள் _____________
விடை : புகழ்
5. “தமிழ்தேனீ” என்று பாரதியாரைப் புகழ்ந்தவர் _____________
விடை : பாரதிதாசன்
II. குறு வினா
1. பாரதியாரின் பன்முக ஆற்றல் யாவை?
- கவிஞர்
- எழுத்தாளர்
- இதழாளர்
-
சமூகச் சீர்த்தச் சிந்தனையாளர் விடுதலைப் போராட்ட வீரர்
2. பாரதியார் நடத்திய இதழ்கள் எவை?
- இந்தியா
- விஜயா
3. பாரதிதாசன் பாரதியாரை எவ்வாறெல்லாம் புகழ்ந்துள்ளார்?
- சிந்துக்குத் தந்தை
- செந்தமிழ்த் தேனீ
- புதிய அறம் பாட வந்த அறிஞன்
- மறம் பாட வந்த மறவன்
4. தமிழ்நாடு எவ்வாறு ஒளிர்கிறது?
- பொருந்தாத பழைய கருத்துகளால் உண்டாகும் துன்பங்கள் நீங்கி ஒளிர்கிறது
5. எந்த இருள் நீங்கட்டும் என பாரதியார் கூறுகிறார்?
- எங்கும் உள்ள அறியாமை இருள் நீங்கட்டும்.
6. தமிழ்மொழி எங்கு சிறப்படைய வேண்டும் என பாரதியார் கூறுகிறார்?
- தமிழ்மொழி மேன்மையுற்று உலகம் முழுவது சிறப்படைய வேண்டும்
II. சிறு வினா
பாரதியார் குறிப்பு வரைக
- கவிஞர், எழுத்தாளர், இதழாளர், சமூகச் சீர்த்தச் சிந்தனையாளர், விடுதலைப் போராட்ட வீரர் என பன்முக ஆற்றல் கொண்டவர்.
- இந்தியா, விஜயா முதலான இதழ்களை நடத்தி விடுதலை போருக்கு வித்திட்டவர்
- சந்திரிகையின் கதை, தராசு உள்ளிட்ட உரைநடை நூல்களையும், வசனக் கவிதைகளையும் உள்ளிட்ட உரைநடை நூல்களையும், வசன கவிதைகளையும், சீட்டுக் கவிகளையும் எழுதியவர்.
நிரப்புக :
1. தமிழ்மொழி வாழ்த்து என்னும் தலைப்பில் அமைந்துள்ள பாடல் பாரதியார் கவிதைகள் என்னும் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.2. பாரதியார் நடத்திய இதழ்கள் இந்தியா, விஜயா.
3. பாரதியாரின் உரைநடை நூல்கள் சந்திரிகையின் கதை, தராசு.
4. மொழி மக்களின் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்புடையது.
விடையளி :
1.சுப்பிரமணிய பாரதியாரின் பன்முக ஆற்றல்கள் யாவை?
Answer:கவிஞர், எழுத்தாளர், இதழாளர், சமூகச் சீர்திருத்தச் சிந்தனையாளர், விடுதலைப் போராட்ட வீரர் போன்றவை பாரதியாரின் பன்முக ஆற்றல்கள் ஆகும்.
2.தமிழ்நாடு எவ்வகைத் துன்பங்கள் நீங்கி ஒளிர வேண்டும்?
Answer:பொருந்தாத பழைய கருத்துகளால் உண்டாகும் துன்பங்கள் நீங்கித் தமிழ்நாடு ஒளிர வேண்டும்.
3.பாரதிதாசன் பாரதியாரை எவ்வாறெல்லாம் புகழ்ந்துள்ளார்?
Answer:பாரதிதாசன், பாரதியாரைப் புகழ்ந்தமை :
(i) சிந்துக்குத் தந்தை
(ii) செந்தமிழ்த் தேனீ
(iii) புதிய அறம் பாட வந்த அறிஞன்
(iv) மறம் பாட வந்த மறவன்.
4.பாரதியார் இயற்றியவைகளாக நும் பாடப் பகுதியில் குறிப்பிடப்பட்டவை எவை?
Answer:(i) சந்திரிகையின் கதை, தராசு உள்ளிட்ட உரைநடை நூல்கள்.
(ii) வசன கவிதைகள்
(iii) சீட்டுக்கவிகள் ஆகியவையாகும்.
5.தமிழ்மொழி, எதனால் சிறப்படைய வேண்டும் என்று பாரதியார் கூறுகிறார்?
Answer:தாய்மொழியாகிய தமிழ்மொழி உலகம் உள்ள வரையிலும் வாழ்ந்து, எங்கும் சூழ்ந்துள்ள அறியாமை இருளை நீக்கும். அதனால் தமிழ்மொழி மேன்மையுற்று உலகம் முழுவதும் சிறப்படையும்.
செந்தமிழ் அந்தாதி
செந்தமிழே! செங்கரும்பே! செந்தமிழர் சீர்காக்கும்நந்தா விளக்கனைய நாயகியே! - முந்தைமொழிக்கெல்லாம் மூத்தவளே! மூவேந்தர் அன்பே!எழில்மகவே! எந்தம் உயிர்.உயிரும்நீ; மெய்யும்நீ; ஓங்கும் அறமாம்பயிரும்நீ; இன்பம்நீ; அன்புத் தருவும்நீ;வீரம்நீ; காதல்நீ; ஈசன் அடிக்குநல்ஆரம்நீ; யாவும்நீ யே!
-து. அரங்கன்
---------------------------------------------
1.2. தமிழ்மொழி மரபு
நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்கலந்த மயக்கம் உலகம் ஆதலின்இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமைத்திரிவுஇல் சொல்லொடு தழாஅல் வேண்டும்.
-தொல். 1579
மரபுநிலை திரிதல் செய்யுட்கு இல்லைமரபுவழிப் பட்ட சொல்லின் ஆன
-தொல். 1580
மரபு நிலை திரியின் பிறிது பிறிதாகும்.
-தொல், 1581
-தொல்காப்பியர்
I. சொல்லும் பொருளும்
- விசும்பு – வானம்
- மரபு – வழக்கம்
- மயக்கம் – கலவை
- திரிதல் – மாறுபடுதல்
- இருதிணை – உயர்திணை, அஃறிணை
- செய்யுள் – பாட்டு
- வழாஅமை – தவறாமை
- தழாஅல் – தழுவுதல் (பயன்படுத்துதல்)
- ஐம்பால் – ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால
அளபெடை
புலவர்கள் சில எழுத்துகளை அவற்றுக்கு உரிய
மாத்திரை அளவைவிட நீண்டு ஒலிக்குமாறு பயன்படுத்துவது உண்டு. இப்பாடலில்
இடம்பெற்றுள்ள வழாஅமை, தழாஅல் ஆகிய
சொற்களில் உள்ள ழா என்னும் எழுத்தை மூன்று மாத்திரை அளவு நீட்டி ஒலிக்க
வேண்டும். அதற்கு அடையாளமாகவே 'ழா'வை
அடுத்து 'அ' இடம் பெற்றுள்ளது. இவ்வாறு உயிர் எழுத்து நீண்டு ஒலிப்பதை
உயிரளபெடை என்பர். இதனைப் பற்றி உயர்
வகுப்புகளில் விரிவாக அறிந்துகொள்ளலாம்.
இளமைப் பெயர்கள்
நூல் வெளி
தொல்காப்பியத்தின் ஆசிரியர்
தொல்காப்பியர். தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல்
தொல்காப்பியம் ஆகும். இந்நூல்
எழுத்து, சொல், பொருள் என்னும்
மூன்று அதிகாரங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு அதிகாரமும்
ஒன்பது இயல்களைக் கொண்டது.
பொருளதிகாரத்தின் மரபியலில் உள்ள மூன்று நூற்பாக்கள் (91,92, 93) இங்குத்
தரப்பட்டுள்ளன.
விலங்கு | இளமைப் பெயர்கள் |
---|---|
புலி | பறழ் |
சிங்கம் | குருளை |
யானை | கன்று |
பசு | கன்று |
கரடி | குட்டி |
ஒலி மரபு
விலங்கு | ஒலி மரபு |
---|---|
புலி | உறுமும் |
சிங்கம் | முழங்கும் |
யானை | பிளிறும் |
பசு | கதறும் |
கரடி | கத்தும் |
II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பறவைகள் _________ பறந்து செல்கின்றன.
- நிலத்தில்
- விசும்பில்
- மரத்தில்
- நீரில்
விடை : விசும்பில்
2. இயற்கையைப் போற்றுதல் தமிழர் __________.
- மரபு
- பொழுது
- வரவு
- தகவு
விடை : மரபு
3. ‘இருதிணை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________.
- இரண்டு + திணை
- இரு + திணை
- இருவர் + திணை
- இருந்து + திணை
விடை : இரண்டு + திணை
4. ‘ஐம்பால்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________.
- ஐம் + பால்
- ஐந்து + பால்
- ஐம்பது + பால்
- ஐ + பால்
விடை : ஐந்து + பால்
III. குறுவினா
1. உலகம் எவற்றால் ஆனது?
- நிலம்
- நீர்
- நெருப்பு
- காற்று
- வானம் ஆகிய ஐந்தால் உலகம் ஆனது
2. செய்யுளில் மரபுகளை ஏன் மாற்றக்கூடாது?
- செய்யுளில் மரபுகளை மாற்றினால் பொருள் மாறிவிடும்
தமிழ்மொழி மரபு – கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. வாழ்வுக்குரிய ஒழுங்குமுறை ___________ எனப்படும்.
விடை : ஒழுக்கம்
2. மொழிக்குரிய ஒழுங்குமுறை ___________ எனப்படும்.
விடை : மரபு
3. தொல்காப்பியத்தின் ஆசிரியர் ___________ .
விடை : தொல்காப்பியர்
4. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் ___________
ஆகும்.
விடை : தொல்காப்பியம்
5. ___________, ___________ உள்ள தொடர்பைப்பற்றித் தொல்காப்பியம் கூறும்
நூல்
விடை : செய்யுளுக்கும், மரபுக்கும்
II. குறுவினா
1. தொல்காப்பியம் – குறிப்பு வரைக
- தொல்காப்பியத்தின் ஆசிரியர் தொல்காப்பியர்.
- தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும்.
- இந்நூல் எழுத்து, சாெல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களைக் கொண்டுள்ளது.
- ஒவ்வொரு அதிகாரமும் ஒன்பது இயல்களைக் கொண்டது.
2. தொல்காப்பியத்தின் அதிகாரங்கள் யாவை? எழுத்து
- சாெல்
- பொருள்
3. தமிழின் மரபு யாது?
- உலகத்து பொருள்களை இரு திணையாகவும், ஐம்பால்களாகவும் பாகுபடுத்திக் கூறுதல் தமிழ் மரபு ஆகும்
4. இவ்வுலக பொருள்களை எவ்வாறு கூறுதல் வேண்டும்?
- திணை, பால் வேறுபாடு அறிந்து, இவ்வுலக பொருள்களை நம் முன்னோர் கூறிய சொற்களால் கூறுதல் வேண்டும்
5. எவ்வகையான சொற்களை செய்யுளில் பயன்படுத்த வேண்டும்?
- மரபான சொற்களை செய்யுளில் பயன்படுத்த வேண்டும்
- தமிழ்மொழிக்கெனச் சில மரபுகள் உள்ளன. அவை பழங்காலம் முதலே பின்பற்றப்பட்டு வருகின்றன.
6. செய்யுளுக்கும் மரபுக்கும் உள்ள தொடர்பைப்பற்றித் கூறும் நூல் எது?
- செய்யுளுக்கும் மரபுக்கும் உள்ள தொடர்பைப்பற்றித் தொல்காப்பியம் கூறும் நூல்
7. உயிரளபெடை என்றால் என்ன?
- செய்யுளில் ஓசை குறையும்போது அந்த ஓசையை நிறைவு செய்ய உயிர்நெடில் எழுத்துக்கள் ஏழும் அளபெடுக்கும். இது உயிரளபெடை எனப்படும்
நிரப்புக :
1. தொல்காப்பியத்தின் ஆசிரியர் தொல்காப்பியர்.
2. நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம்.
3. தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களைக்
கொண்டுள்ளது.
4. தொல்காப்பிய அதிகாரங்கள் ஒவ்வொன்றும் ஒன்பது இயல்களைக் கொண்டது.
5. மனிதன் தன் கருத்தைப் பிறருக்கு அறிவிக்க கண்டுபிடித்தது மொழி.
III. இளமை பெயர்களை பொருத்துக
1. புலி கன்று
2. சிங்கம் குட்டி
3. பசு குருளை
4. கரடி பறழ்
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – அ, 4 – ஆ
IV. ஒலி மரபுகளை பொருத்துக
1. புலி கதறும்
2. சிங்கம் உறுமும்
3. யானை முழங்கும்
4. பசு கத்தும்
5. கரடி பிளிறும்
விடை : 1 – ஆ, 2 – இ, 3 – உ, 4 – அ, 5 – ஈ
விடையளி :
1.தொல்காப்பியம் – குறிப்பு எழுதுக.
Answer:
(i) தொல்காப்பியத்தின் ஆசிரியர் தொல்காப்பியர். தமிழில் நமக்குக்
கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கணநூல் தொல்காப்பியம்.
(ii) இந்நூல் எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களைக்
கொண்டுள்ளது. ஒவ்வொரு அதிகாரமும் ஒன்பது இயல்களைக் கொண்டது.
2.அளபெடை என்பது யாது?
Answer:
(i) அளபெடை – நீண்டு ஒலித்தல்.
(ii) சில எழுத்துகள் அவற்றுக்கு உரிய மாத்திரை அளவை விட நீண்டு ஒலிக்கும்.
அதனை அளபெடை என்பர்.
3.உயிரளபெடை என்றால் என்ன?
Answer:
(i) உயிரெழுத்துகள் நீண்டு ஒலிப்பதை உயிரளபெடை என்பர். அளபெடுத்ததற்கு
அடையாளமாக உயிர்மெய் நெடிலுக்குப் பக்கத்தில் அதன் இன எழுத்து எழுதப்படும்.
(ii) (எ.கா.) வழாஅமை ழா – ழ் + ஆ; ‘ஆ’ – இன எழுத்து ‘அ)
4.புலி, சிங்கம், யானை, பசு, கரடி இவற்றின் இளமைப் பெயர்களை எழுதுக.
Answer:
(i) புலி – பறழ்
(ii) சிங்கம் – குருளை
(iii) யானை – கன்று
(iv) பசு – கன்று
(V) கரடி – குட்டி
5.புலி, சிங்கம், யானை, பசு, கரடி இவற்றின் ஒலிமரபினை எழுதுக.
Answer:
(i) புலி – உறுமும்
(ii) சிங்கம் – முழங்கும்
(iii) யானை – பிளிறும்
(iv) பசு – கதறும்
(v) கரடி – கத்தும்
-----------------------------------------
1.3. தமிழ் வரிவடிவ வளர்ச்சி
தெரிந்து தெளிவோம்
கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகளின் அமைப்பு
- 1. 'ஸ எனும் வடமொழி எழுத்து காணப்படுகிறது.
- 2. மெய்யைக் குறிக்கப் புள்ளி பயன்படுத்தவில்லை.
- 3. எகர, ஒகரக் குறில் நெடில் வேறுபாடில்லை.
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற _____ காரணமாக அமைந்தது?
- ஓவியக்கலை
- இசைக்கலை
- அச்சுக்கலை
- நுண்கலை
2. வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து ______ என அழைக்கப்படுகிறது?
- கோட்டெழுத்து
- வட்டெழுத்து
- சித்திர எழுத்து
- ஓவிய எழுத்து
3. தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர் _____.
- பாரதிதாசன்
- தந்தை பெரியார்
- வ.உ. சிதம்பரனார்
- பெருஞ்சித்திரனார்
II. கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துகள் ________________ என அழைக்கப்பட்டன.
விடை : கண்ணெழுத்துக்கள்2. எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர் ________________
விடை : வீரமாமுனிவர்III. குறுவினா
1. ஓவிய எழுத்து என்றால் என்ன?
- தொடக்க காலத்தில் எழுத்து என்பது பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தால் அதனை ஓவிய எழுத்து என்பர்.
2. ஒலி எழுத்து நிலை என்றால் என்ன?
- ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை ஒலி எழுத்து நிலை என்பர்.
3. ஓலைச்சுவடிகளில் நேர்கோடுகள், புள்ளிகள் ஆகியவற்றைப் பயன்படுத்த இயலாமைக்குக் காரணம் என்ன?
- புள்ளியிட்டு எழுதினால் ஓலைச்சுவடி சிதைந்துவிடும்
- நேர்கோடிட்டு எழுதினால் ஓலைச்சுவடி கிழிந்து விடும்
- ஆகிய காரணங்களால் ஓலைச்சுவடிகளில் நேர்கோடுகள், புள்ளிகள் ஆகியவற்றைப் பயன்படுத்த இயலவில்லை
4. வீரமாமுனிவர் மேற்கொண்ட எழுத்துச் சீர்திருத்தங்களில் எவையேனும் இரண்டனை எழுதுக
- ஒகர வரிசை எழுத்துக்களில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களை வீரமாமுனிவர் போக்கினார்.
- “எ” என்னும் எழுத்திற்குக் கீழ்க்கோடிட்டு “ஏ” என்னும் எழுத்தை நெடிலாகவும் “ஒ” என்னும் எழுத்திற்குச் சுழி இட்டு “ஓ” என்னும் எழுத்தாக உருவாக்கினார்
IV. சிறுவினா
1. எழுத்துச் சீர்திருத்தத்தின் தேவை குறித்து எழுதுக.
- ஓலைச் சுவடிகளிலும் கல்வெட்டுகளிலும் புள்ளிபெறும் எழுத்துகளை எழுதும்போது அவை சிதைந்துவிடும் என்பதால் புள்ளி இடாமல் எழுதினர்.
- ஓலைச் சுவடிகளில் நிறுத்தற் குறிகளும் பத்தி பிரித்தலும் கிடையாது.
- புள்ளி இடப்பட்டு எழுதப்படும் இடங்களில் புள்ளிகள் தெளிவாகத் தெரியாத நிலையில் அவற்றின் இடம் நோக்கி மெய்யா உயிர்மெய்யா, குறிலா நெடிலா என உணர வேண்டிய நிலை இருந்தது.
- இதனால் படிப்பவர்கள் பெரிதும் இடருற்றனர். எனவே எழுத்துச் சீர்திருத்தம் வேண்டியதாயிற்று.
2. தமிழ் எழுத்துகளில் ஏற்பட்ட உருவ மாற்றங்களை எழுதுக.
- நெடிலைக் குறிக்க ஒற்றைப்புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் துணைக்கால் (ர) பயன்படுகின்றது.
- ஐகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்கு முன் இருந்த இரட்டைப்புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் இணைக்கொம்பு (ை) பயன்படுகின்றது.
- ஒளகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்குப் பின் இருந்த இரட்டைப்புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் கொம்புக்கால் (ள) பயன்படுகின்றது.
- குற்றியலுகர, குற்றியலிகர எழுத்துகளின் மேல் புள்ளி இடும் வழக்கம் இக்காலத்தில் வழக்கொழிந்து விட்டது.
V. நெடுவினா
எழுத்துகளின் தோற்றம் குறித்து எழுதுக.
- மனிதன் தனக்கு எதிரே இல்லாதவர்களுக்கும் பின்னால் வரும் தலைமுறையினருக்கும் தனது கருத்துகளைத் தெரிவிக்க விரும்பினான்.
- அதற்காகப் பாறைகளிலும் குகைச் சுவர்களிலும் தன் எண்ணங்களைக்
- குறியீடுகளாகப் பொறித்து வைத்தான். இதுவே எழுத்து வடிவத்தின் தொடக்க நிலை ஆகும்.
- தொடக்க காலத்தில் எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது. இவ்வரி வடிவத்தை ஓவிய எழுத்து என்பர்.
- அடுதத்ததாக ஒவ்வொரு வடிவமும் அவ்வடிவத்துக்கு உரிய முழு ஒலியாகிய சொல்லைக் குறிப்பதாக மாறியது.
- அதன்பின் ஒவ்வொரு வடிவமும் அச்சொல்லின் முதல் ஓசையைக் குறிப்பதாயிற்று. இவ்வாறு ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து
தமிழ் வரிவடிவ வளர்ச்சி – கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. மொழியை நிலைபெறச் செய்ய ________________ உருவாக்கினான்
விடை : எழுத்துகளை2. ‘ஸ’ எனும் ________________ காணப்படுகிறது.
விடை : வட எழுத்து3. தமிழ் எழுத்துக்களின் பழைய வரி வடிவங்களை கருங்கல் ________________, ________________ காணமுடிகிறது
விடை : சுவர்களிலும், செப்பேடுகளிலும்4. வரி வடிவங்களை ________________, ________________ என இருவகைப்படுத்தலாம்.
விடை : வட்டெழுத்து, தமிழெழுத்து5. ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை ________________ என்பர்.
விடை : ஒலி எழுத்து நிலைII. குறுவினா
1. மனிதன் எதற்கு மொழியைக் கண்டுபிடித்தான்?
- மனிதன் தன் கருத்தைப் பிறருக்கு அறிவிக்க மொழியைக் கண்டுபிடித்தான்.
2. மொழிக்கு மொழி எவை வேறுபடுகின்றன?
- எழுத்துகளின் வரிவடிவங்கள் மொழிக்கு மொழி வேறுபடுகின்றன. அவை ஒரே மொழியிலும் கூட, காலந்தோறும் மாறி வருகின்றன.
கூடுதல் வினாக்கள்
நிரப்புக :
1. எழுத்துகளின் வரிவடிவங்கள் மொழிக்கு மொழி
வேறுபடுகின்றன.
2. பாறைகளிலும் குகைச் சுவர்களிலும் தன் எண்ணங்களைக்
குறியீடுகளாகப் பொறித்து வைத்தான்.
3. பொருளின் ஓவிய வடிவமாக இருந்த வரிவடிவம் ஓவிய எழுத்து.
4. ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலை
ஒலி எழுத்து நிலை.
5. தமிழ் எழுத்துகளின் பழைய வரி வடிவங்கள் காணப்படும் இடங்கள்
கோவில்களிலுள்ள கருங்கல் சுவர்கள்.
6. வளைந்த கோடுகளால் அமைந்த மிகப் பழைய தமிழ் எழுத்து
வட்டெழுத்து.
7. கல்வெட்டுகள் மூன்றாம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன.
8. செப்பேடு, கல்வெட்டில் காணப்படும் வரிவடிவங்கள்
வட்டெழுத்து, தமிழெழுத்து என இருவகைப்படும்.
9. அரச்சலூர் கல்வெட்டில் தமிழ் எழுத்தும் வட்டெழுத்தும்
கலந்து எழுதப்பட்டுள்ளன.
10. எட்டாம் நூற்றாண்டு முதல் பதினொன்றாம் நூற்றாண்டு வரை கிடைக்கும்
சாசனங்களில் இடம்பெற்ற எழுத்துகள் வட்டெழுத்துகள்.
11. முதலாம் இராசராச சோழனின் ஆட்சிக் காலம்
பதினொன்றாம் நூற்றாண்டு.
12. ‘கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி’ என்னும் தொடர் இடம்பெற்ற
நூல் சிலப்பதிகாரம்.
13. பழங்காலத்தில்
கற்பாறை, செப்பேடு, ஓலை போன்றவற்றில் எழுதினர்.
14. தமிழ்மொழியை எழுத இருவகை எழுத்துகள் இருந்ததற்குச் சான்றாக அமைந்த
கல்வெட்டு அரச்சலூர் கல்வெட்டு.
குறுவினாக்கள் :
1.எழுத்து வடிவத்தின் தொடக்கநிலை யாது?
Answer:
மனிதன் தனக்கு எதிரே இல்லாதவர்களுக்கும் பின்னால் வரும்
தலைமுறையினருக்கும் தனது – கருத்துகளைத் தெரிவிக்க விரும்பினான்.
அதற்காகப் பாறைகளிலும் குகைச் சுவர்களிலும் தன் எண்ணங்களைக்
குறியீடுகளாகப் பொறித்து வைத்தான். இதுவே எழுத்து வடிவத்தின் தொடக்கநிலை
ஆகும்.
2.தமிழ் எழுத்துகள் எப்போது நிலையான வடிவத்தைப் பெற்றன?
Answer:
காலந்தோறும் தமிழ் எழுத்துகளின் வரிவடிவங்கள் பல்வேறு மாற்றங்களுக்கு
உள்ளாகி வளர்ச்சி அடைந்து வந்துள்ளன. அச்சுக்கலை தோன்றிய பிறகே தமிழ்
எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற்றுள்ளன.
3.கண்ணெழுத்து – குறித்து எழுதுக.
Answer:
கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் கண்ணெழுத்துகள்
என்று அழைக்கப்பட்டன. இதனைச் சிலப்பதிகாரத்தில் இடம்பெறும்,
‘கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி’ என்னும் தொடரால் அறியலாம்.
4.எழுத்துகளில் மாற்றங்கள் ஏற்பட காரணங்களாக அமைந்தவை யாவை?
Answer:
எழுத்துகளில் மாற்றங்கள் ஏற்பட எழுதப்படும் பொருள்களின் தன்மை,
அழகுணர்ச்சி போன்றவை காரணங்களாக அமைந்தன.
5.தமிழ்மொழியின் வரிவடிவ வளர்ச்சியின் இன்றைய நிலை யாது?
Answer:
காலந்தோறும் ஏற்பட்ட வரிவடிவ வளர்ச்சி காரணமாகத் தமிழ்மொழியைப் பிற
மொழியினரும் எளிதில் கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்மொழிகணினிப்பயன்பாட்டிற்கு ஏற்ற மொழியாகவும் மாற்றம் பெற்றுள்ளது.
சிறுவினாக்கள் :
1.பேச்சுமொழி எவ்வாறு உருவானது?
Answer:
(i) மனிதன் தோன்றிய காலத்தில் தனது தேவைகளையும் கருத்துகளையும்
மற்றவர்களுக்குத் தெரிவிக்கச் சைகைகளைப் பயன்படுத்தினான்.
(ii) காலப்போக்கில் தனது குரலைப் பயன்படுத்தி ஒலிகள் மூலம் தனது
கருத்துகளை வெளிப்படுத்த முற்பட்டான்.
(iii) அடுத்துச் சிறிது சிறிதாகச் சொற்களைச் சொல்லக் கற்றுக்கொண்டான்.
அவை மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டதால் செம்மைப்பட்டுக் காலப்போக்கில்
அவை
பண்பட்டுப் பேச்சுமொழி உருவானது.
2.தமிழ் எழுத்துகளின் பழைய வரி வடிவங்கள் பற்றி எழுதுக.
Answer:
(i) தமிழ் எழுத்துகளின் பழைய வரி வடிவங்களை கோவில்களிலுள்ள கருங்கல்
சுவர்களிலும் செப்பேடுகளிலும் காணமுடிகிறது.
(ii) கல்வெட்டுகள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன.
செப்பேடுகள் கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன.
(iii) கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவற்றில் காணப்படும் வரிவடிவங்களை
வட்டெழுத்து, தமிழெழுத்து என இருவகையாகப் பிரிக்கலாம்.
3.பெரியார் மேற்கொண்ட எழுத்துச் சீர்திருத்தங்களில் எவையேனும் நான்கனை எழுதுக.
Answer:
4.இரு வகையான எழுத்துகள் பற்றி எழுதுக.
Answer:
(i) வட்டெழுத்து என்பது வளைந்த கோடுகளால் அமைந்து மிகப் பழைய தமிழ்
எழுத்து ஆகும். தமிழ் எழுத்து என்பது இக்காலத்தில் எழுதப்படும் தமிழ்
எழுத்துகளின் பழைய வரி வடிவம் ஆகும்.
(ii) சேர மண்டலம், பாண்டிய மண்டலம் ஆகிய பகுதிகளில் எட்டாம் நூற்றாண்டு
முதல் பதினொன்றாம் நூற்றாண்டு வரை கிடைக்கும் சாசனங்களில் வட்டெழுத்துகளே
இடம் பெற்றுள்ளன.
(iii) முதலாம் இராசராச சோழனின் ஆட்சிக் காலமான பதினொன்றாம்
நூற்றாண்டுக்குப் பிறகு கிடைக்கும் கல்வெட்டுகளில் பழைய தமிழ் எழுத்துகள்
காணப்படுகின்றன.
5.தமிழ் எழுத்துகளில் புள்ளிகளின் நிலை பற்றி எழுதுக.
Answer:
(i) எகர ஒகர குறில் எழுத்துகளைக் குறிக்க எழுத்துகளின் மேல் புள்ளி
வைக்கும் வழக்கம் தொல்காப்பியர் காலம் முதல் இருந்து வந்துள்ளது.
(ii) எடுத்துக்காட்டாக எது என எழுதப்பட்டால் எது என்றும் எது என
எழுதப்பட்டால் ஏது என்றும் ஒலித்தனர்.
(iii) அகர வரிசை உயிர்மெய்க் குறில் எழுத்துகளை அடுத்துப் பக்கப்புள்ளி
இடப்பட்டால் அவை நெடிலாகக் (க. = கா, த. = தா) கருதப்பட்டன.
(iv) ஐகார எழுத்துகளைக் குறிப்பிட எழுத்துகளின் முன் இரட்டைப் புள்ளி
இட்டனர். (.க =கை)
(v) எகர வரிசை உயிர்மெய்க் குறில் எழுத்துகளை அடுத்து இருபுள்ளிகள்
இடப்பட்டால் அவை ஒளகார வரிசை எழுத்துகளாகக் கருதப்பட்டன. (கெ.. = கௌ,
தெ..= தெள).
(vi) மகர எழுத்தைக் குறிப்பிட, பகர எழுத்தின் உள்ளே புள்ளி இட்டனர்.
(vii) குற்றியலுகர, குற்றியலிகர எழுத்துகளைக் குறிக்க அவற்றின் மேலேயும்
புள்ளி இட்டனர்.
நெடுவினா :
1.எழுத்துச் சீர்திருத்தத்தில் வீரமாமுனிவர், பெரியார் மேற்கொண்டவை எவை?
Answer:
வீரமாமுனிவர் :
- தமிழ் எழுத்துகளில் மிகப்பெரும் சீர்திருத்தத்தைச் செய்தவர் வீரமாமுனிவர். எகர, ஒகர வரிசை எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களை அவர் களைந்தார். எ என்னும் எழுத்திற்குக் கீழ்க்கோடிட்டு ஏ என்னும் எழுத்தை நெடிலாகவும் ஒ என்னும் எழுத்திற்குச் சுழி இட்டு ஓ என்னும் எழுத்தாகவும் உருவாக்கினார்.
- அதேபோல ஏகார ஓகார வரிசை உயிர்மெய் நெடில் எழுத்துகளைக் குறிக்க இரட்டைக்கொம்பு இரட்டைக் கொம்புடன் கால் சேர்த்து போ) புதிய வரி வடிவத்தை அறிமுகப்படுத்தினார்.
வீரமாமுனிவரின் எழுத்துச் சீர்திருத்தம் :
பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் :
- இருபதாம் நூற்றாண்டு வரை ணா, றா, னா ஆகிய எழுத்துகளை ணா, றா, னா என எழுதினார். அதே போல ணை, லை, ளை, னை ஆகிய எழுத்துகளை ணை, லை, ளை, னை என எழுதினார். இவற்றை அச்சுக்கோப்பதற்காக இவ்வெழுத்துகளுக்குத் தனி அச்சுகள் உருவாக்கப்பட வேண்டியிருந்தது. இக்குறைகளை நீக்குவதற்காகத் தந்தை பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் செய்தார். அவரது எழுத்துச் சீர்திருத்தங்கள் சில ஏற்கப்பட்டு தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
-------------------------------------------
1.4 சொற்பூங்கா
கற்பவை கற்றபின்
1.ஓரெழுத்து ஒரு மொழிகள் இடம் பெறுமாறு ஐந்து தொடர்கள் எழுதுக.
Answer:(i) பழங்காலத்தில் போர் தொடங்கும் முன் ஆநிரைகளைக் கவர்ந்து வருவர். (ஆ- பசு)
(ii) “கனமான பொருளைத் தூக்காதே, வை” என்று தாய் மகனிடம் கூறினார்.
(iii) கந்தனுக்கு முருகன் கை கொடுத்து உதவி செய்தான்.
(iv) தை மாதம் முதல் நாள் பொங்கல் திருநாளாகக் கொண்டாடப்படும்.
(v) “நீ எங்கே சென்றாய்?” என்று சீதா ராணியிடம் கேட்டாள்.
மதிப்பீடு
1.தமிழில் ஓரெழுத்து ஒரு மொழிகளின் பெருக்கம் குறித்து இளங்குமரனார் கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.
Answer:முன்னுரை :
- தமிழ்மொழி பழங்காலம் தொட்டு இயங்கி வருதல் அதன் பெருஞ்சிறப்பு. தமிழ்மொழி செந்தமிழாகவும் செழுந்தமிழாகவும் உயிரோட்டத் தமிழாகவும் இருந்து வருகிறது. தமிழில் ஓரெழுத்து ஒரு மொழிகளின் பெருக்கத்தை இக்கட்டுரையில் காண்போம்.
- சொல் என்பதற்கு நெல் என்பது பொருள். நெல்லில் பதர் உண்டு. சொல்லில் பதர் இருந்தலாகாது. ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்பது தொல்காப்பியர்மொழி. மொழி என்பதற்குச் சொல் என்பதும் ஒரு பொருள். மொழியானது ஓர் எழுத்துமொழி, ஈரெழுத்து மொழி, இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துகள் உடைய மொழி என மூவகைப்படும். ‘நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்து ஒருமொழி’ என்றும் ‘குற்றெழுத்து ஐந்தும் மொழி நிறைபு இலவே’ என்றும் தொல்காப்பியர் கூறுகிறார்.
- உயிர் வரிசையில் ஆறு எழுத்துகளும், ம வரிசையில் ஆறு எழுத்துகளும், த, ப, நம் என்னும் வரிசைகளில் ஐந்து ஐந்து எழுத்துகளும், க, ச, வ என்னும் வரிசைகளில் நான்கு நான்கு எழுத்துகளும், ய வரிசையில் ஒன்றும் ஆக நாற்பது நெடில்கள் ஓரெழுத்து ஒரு மொழியாக வரும் என்றார் நன்னூலார். நொ, து என்னும் குறில்களையும் சேர்த்து நாற்பத்து இரண்டு என்றார்.
- ‘பூ’ என்பதும் ‘கா’ என்பதும் ஓரெழுத்து ஒரு மொழி. இவை இரண்டையும் இணைத்துப் பூங்கா எனக் கலைச்சொல் உருவாயிற்று. ‘யா’ என்பது வினா. யாது, யாவர், யாவன், யாவள், யாங்கு, யாண்டு, யார், யாவை என்றெல்லாம் வினாவுவதற்கு முன் ‘யா’ என்ற எழுத்து முதலில் நிற்கிறது
‘ஆ’ மற்றும் ‘மா’ :
- ஆ, மா, நீ, மீ, பீ, ஊ, சே, தே இவை ஓரெழுத்து ஒரு மொழிகள். ஆ, மா என்பவை இணைந்து ஆமா எனக் கலைச்சொல் வடிவம் பெற்றுள்ளது. காட்டுப் பசுவுக்கு ‘ஆமா’ என்று பெயர். மா என்பது மாநாடு, மாநிலம், மாஞாலம் என்ற சொற்களில் பெரிய’ என்னும் பொருளில் அமைந்துள்ளது. ‘மா’ என்னும் ஓரெழுத்து ஒரு மொழி இயல்பு வழக்கிலும் இலக்கிய வழக்கிலும் திகழ்கின்றது. மாந்தளிர் நிறத்தை மாநிறம் என்றனர். அரிமா, பரிமா, நரிமா, வரிமா, கரிமா என்று வந்து விலங்கினப் பெயராகிறது.
- ஈ என்னும் எழுத்து ஒலிக்குறிப்பைக் காட்டுகிறது. மாட்டு ஈ, தேன் ஈ எனப் பகுத்தும் வழங்கப்படும். ஈ என்பது ஈக என்னும் பொருளில் வழங்குதல் வெளிப்படை ஆகும். ஈ என்று பல்லைக் காட்டாதே என்று அறிவுரை கூறவும் பயன்படும். போ, வா, நீ, சூ, சே, சை, சோ என்பவை இன்று அனைவராலும் வழங்கப்படுகின்றன. நன்னூலார் கூறிய ஓரெழுத்து ஒரு மொழிகளில் சில இன்று வழக்கில் இல்லை. இன்று வழக்கில் உள்ளவை நன்னூலார் கூறிய பட்டியலில் இல்லை என்று தெளியலாம்.
- ஆன் என்பது ஆ என்றும், மான் என்பது மா என்றும் கோன் என்பது கோ என்றும், தேன் என்பது தே என்றும், பேய் என்பது பே என்றும் மாறி காலவெள்ளத்தில் கரைந்தன. எட்டத்தில் போகிறவனை ஏய் என்றனர். ஏய் என்பது என்னோடு கூடு, பொருந்து, சேர் என்னும் பொருளை உடையது. ஏவுதல் என்பது அம்புவிடுதல், ஏவும் அம்பு ‘ஏ’ என்றாகியது. அம்பு போல விரைந்து கடமை செய்பவன் ஏவலன் எனப்பட்டான். அம்பு விடும் கலை ஏகலை, அதில் வல்லவன் ஏகலைவன் எனப் பாராட்டப்பட்டான்.
- ஏவு – ஏ – எய் என ஆயிற்று, ஏவுகின்ற அம்பைப் போல் கூர்முள்ளை உடைய முள்ளம் பன்றியின் பழம்பெயர் எய்ப்பன்றி, அம்பை எய்பவர் எயினர். அவர்தம் மகளிர் எயினியர். சங்கப் புலவர்களுள் எயினனாரும் உளர். எயினியாரும் உளர்.
- தமிழில் ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்களின் பெருக்கம் நம் மொழியின் பழமை, உயிரோட்டம், பெருவழக்கு என்பவனவற்றைக் கையில் கனியாகக் காட்டும். இத்தகைய தமிழ்மொழியின் சொற்களை, மொழிப்பற்றை மீட்டெடுத்தலே வழிகாட்டிகளுக்கு முதல் கடமையாய் நிற்கிறது. மொழிப்பற்றுள்ள ஒருவனே மொழியை வளர்ப்பான்; அதன் இனத்தை, பண்பாட்டைக் காப்பான்.
ஓரெழுத்து ஒருமொழிகள்
- உயிர் எழுத்து ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ
- மகர வரிசை - மா, மீ, மூ, மே, மை, மோ
- தகர வரிசை - தா தீ, தூ, தே, தை
- பகர வரிசை - பா, பூ, பே, பை, போ
- நகர வரிசை - நா, நீ, நே, நை, நோ
- ககர வரிசை கா,கூ,கை, கோ
- சகர வரிசை - சா, சீ, சே, சோ
- வகர வரிசை வா, வீ,வை, வௌ
- யகர வரிசை -யா
- குறில் எழுத்து - நொ,து
-------------------------------------
1.5. எழுத்துகளின் பிறப்பு
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள் _____
- இ, ஈ
- உ, ஊ
- எ, ஏ
- அ, ஆ
2. ஆய்த எழுத்து பிறக்கும் இடம் ______
- மார்பு
- கழுத்து
- தலை
- மூக்கு
3. வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம் _____
- தலை
- மார்பு
- மூக்கு
- கழுத்து
4. நாவின் நுனி அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள் _____
- க், ங்
- ச், ஞ்
- ட், ண்
- ப், ம்
5. கீழ்இதழும் மேல்வாய்ப்பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்து _____
- ம்
- ப்
- ய்
- வ்
II. பொருத்துக
1. க், ங் - நாவின் இடை, அண்ணத்தின் இடை2. ச், ஞ் - நாவின் நுனி, மேல்வாய்ப்பல்லின் அடி
3. ட், ண் - நாவின் முதல், அண்ணத்தின் அடி
4. த், ந் - நாவின் நுனி, அண்ணத்தின் நுனி
விடை : 1 – இ, 2 – அ, 3 – ஈ, 4 – ஆ
III. சிறு வினா
1. எழுத்துகளின் பிறப்பு என்றால் என்ன?
- உயிரின் முயற்சியால் உடலின் உள்ளிருந்து எழும் காற்றானது மார்பு, தலை, கழுத்து, மூக்கு ஆகிய நான்கு இடங்களுள் ஒன்றில் பொருந்தி, இதழ், நாக்கு, பல், மேல்வாய் ஆகிய உறுப்புகளின் முயற்சியினால் வேறுவேறு ஒலிகளாகத் தோன்றுகின்றன. இதனையே எழுத்துகளின் பிறப்பு என்பர்.
2. மெய் எழுத்துகள் எவற்றை இடமாகக் கொண்டு பிறக்கின்றன?
- வல்லின மெய் எழுத்துகள் ஆறும் மார்பை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
- மெல்லின மெய் எழுத்துகள் ஆறும் மூக்கை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
- இடையின மெய் எழுத்துகள் ஆறும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
3. ழகர, லகர, ளகர மெய்களின் பிறப்பு முயற்சி பற்றி எழுதுக.
- ழகர மெய் மேல்வாயை நாக்கின் நுனி வருடுவதால் பிறக்கின்றன.
- லகர மெய் மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கின் ஓரங்கள் தடித்து நெருங்குவதால் பிறக்கிறது
- ளகர மெய் மேல்வாயை நாக்கின் ஓரங்கள் தடித்துத் தடவுதலால் பிறக்கிறது.
எழுத்துகளின் பிறப்பு – கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் ___________ இடமாகக் கொண்டு பிறக்கின்றன.விடை : கழுத்தை
2. ஆய்த எழுத்து ___________ இடமாகக் கொண்டு பிறக்கிறது.
விடை : தலையை
3. அ, ஆ ஆகிய இரண்டும் ___________ முயற்சியால் பிறக்கின்றன.
விடை : வாய் திறத்தலாகிய
II. சிறு வினா
1. எழுத்துகளின் பிறப்பினை எத்தனை வகையாகப் பிரிப்பர்?
- எழுத்துகளின் பிறப்பினை இடப்பிறப்பு , முயற்சிப் பிறப்பு என இரண்டு வகையாகப் பிரிப்பர்.
2. சார்பெழுத்துகள் எவ்வாறு பிறக்கின்றன?
- ஆய்த எழுத்து வாயைத்திறந்து ஒலிக்கும் முயற்சியால் பிறக்கிறது.
- பிற சார்பெழுத்துகள் யாவும் தத்தம் முதலெழுத்துகள் தோன்றும் இடங்களிலேயே அவை பிறப்பதற்கு உரிய முயற்சிகளைக் கொண்டு தாமும் பிறக்கின்றன.
II. குறு வினா
- மெய் எழுத்துக்கள் எவ்வாறு பிறக்கின்றன?
- க், ங் – ஆகிய இருமெய்களும் நாவின் முதற்பகுதி, அண்ணத்தின் அடிப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கின்றன.
- ச், ஞ் – ஆகிய இருமெய்களும் நாவின் இடைப்பகுதி, நடுஅண்ணத்தின்
- இடைப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கின்றன.
- ட், ண் – ஆகிய இருமெய்களும் நாவின் நுனி, அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கின்றன.
- த், ந் – ஆகிய இருமெய்களும் மேல்வாய்ப்பல்லின் அடியை நாக்கின் நுனி பொருந்துவதால் பிறக்கின்றன.
- ப், ம் – ஆகிய இருமெய்களும் மேல் இதழும் கீழ் இதழும் பொருந்துவதால் பிறக்கின்றன.
- ய் – இது நாக்கின் அடிப்பகுதி, மேல் வாய் அடிப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கிறது.
- ர், ழ் – ஆகிய இருமெய்களும் மேல்வாயை நாக்கின் நுனி வருடுவதால் பிறக்கின்றன.
- ல் – இது மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கின் ஓரங்கள் தடித்து நெருங்குவதால் பிறக்கிறது.
- ள் – இது மேல்வாயை நாக்கின் ஓரங்கள் தடித்துத் தடவுதலால் பிறக்கிறது.
- வ் – இது மேல்வாய்ப்பல்லைக் கீழ் உதடு பொருந்துவதால் பிறக்கிறது.
- ற், ன் – ஆகிய இருமெய்களும் மேல்வாயை நாக்கின் நுனி மிகவும் பொருந்துவதால் பிறக்கின்றன.
மொழியை ஆள்வோம்!
I. அகரவரிசைப்படுத்துக.
எழுத்து, ஒலிவடிவம், அழகுணர்ச்சி, ஏழ்கடல், இரண்டல்ல, ஊழி, உரைநடை, ஒளகாரம், ஓலைச்சுவடிகள், ஆரம்நீ, ஈசன், ஐயம்.
விடை :-அழகுணர்ச்சி, ஆரம்நீ, இரண்டல்ல, ஈசன், உரைநடை, ஊழி, எழுத்து, ஏழ்கடல், ஐயம், ஒலிவடிவம், ஓலைச்சுவடிகள், ஒளகாரம்
II. மரபுத் தொடர்கள்
பறவைகளின் ஒலிமரபு | ||
---|---|---|
ஆந்தை அலறும் | குயில் கூவும் | மயில் அகவும் |
காகம் கரையும் | கோழி கொக்கரிக்கும் | கிளி பேசும் |
சேவல் கூவும் | புறா குனுகும் | கூகை குழறும் |
தொகை மரபு | ||
---|---|---|
மக்கள் கூட்டம் | ஆநிரை | ஆட்டு மந்தை |
வினை மரபு | ||
---|---|---|
சோறு உண் | தண்ணீர் குடி | பூக் கொய் |
முறுக்குத் தின் | பால் பருகு | இலை பறி |
சுவர் எழுப்பு | கூடை முடை | பானை வனை |
சரியான மரபுச் சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. கோழி __________ (கூவும்/கொக்கரிக்கும்)
விடை : கொக்கரிக்கும்
2. பால் __________ . (குடி/ பருகு)
விடை : பருகு
3. சோறு __________ . (தின்/உண்)
விடை : உண்
4. பூ __________ . (கொய்/பறி)
விடை : கொய்
5. ஆ __________ (நிரை/மந்தை)
விடை : நிரை
III. மரபுப் பிழையை நீக்கி எழுதுக.
சேவல் கொக்கரிக்கும் சத்தம் கேட்டுக் கயல் கண் விழித்தாள். பூப்பறிக்க நேரமாகி
விட்டதை அறிந்து தோட்டத்திற்குச் சென்றாள். அங்கு மரத்தில் குயில் கரைந்து
கொண்டிருந்தது. பூவைப் பறித்ததுடன், தோரணம் கட்ட மாவிலையையும் கொய்து கொண்டு
வீடு திரும்பினாள். அம்மா தந்த பாலை குடித்துவிட்டுப் பள்ளிக்குப்
புறப்பட்டாள்.
விடை :
- சேவல் கூவும் சத்தம் கேட்டுக் கயல் கண் விழித்தாள். பூப்கொய்ய நேரமாகி விட்டதை அறிந்து தோட்டத்திற்குச் சென்றாள். அங்கு மரத்தில் குயில் கூவிக் கொண்டிருந்தது. பூவைப் கொய்ததுடன், தோரணம் கட்ட மாவிலையையும் பறித்துக் கொண்டு வீடு திரும்பினாள். அம்மா தந்த பாலை பருகி விட்டுப் பள்ளிக்குப் புறப்பட்டாள்.
மொழியோடு விளையாடு
I. பொருத்தமான பன்மை விகுதியைச் சேர்த்தெழுதுக.
கல், பூ, மரம், புல், வாழ்த்து, சொல், மாதம், கிழமை, ஈ, பசு, படம், பல்,
கடல், கை, பக்கம், பா
கள் | க்கள் | ங்கள் | ற்கள் |
---|---|---|---|
கிழமைகள் | பாக்கள் | மரங்கள் | கற்கள் |
கடல்கள் | பூக்கள் | மாதங்கள் | சொற்கள் |
கைகள் | ஈக்கள் | படங்கள் | பற்கள் |
வாழ்த்துக்கள் | பசுக்கள் | பக்கங்கள் | புற்கள் |
II. ஒரு சொல் ஒரே தொடரில் பல பொருள் தருமாறு எழுதுக
1. அணி
- பல அணிகளை அணிந்த வீரர்கள், அணிஅணியாய்ச் சென்றனர்.
2. படி
- என் அம்மா, படத்தை புரியும்படி படிக்க சொன்னதால் நான் படிக்கட்டில் அமர்ந்து படம் படித்தேன்
3. திங்கள்
- ஒரு திங்களுக்கு ஒரு முறை தான் வானத்தில் முழு வடிவில் திங்கள் பௌர்ணமியாக காட்சி தரும் .இன்று திங்கள் கிழமை ஆகும்
4. ஆறு
- இன்று காலை ஆறு மணிக்கு என் தந்தை எனக்கு இட்ட ஆறு பணிகளை செய்திடப் புறப்பட்டேன் ஊருக்கு வெளிய காவிரி ஆறு ஓடியது
III. சொற்களை ஒழுங்குபடுத்தி முறையான தொடராக்குக.
1. வட்டெழுத்து எனப்படும் தமிழ் கோடுகளால் வளைந்த அமைந்த எழுத்து
விடை : வளைந்த கோடுகளால் அமைந்த எழுத்து தமிழ் வட்டெழுத்து எனப்படும்
2. உலகம் தமிழ்மொழி வாழட்டும் உள்ளவரையிலும்.
விடை : உலகம் உள்ளவரையிலும் தமிழ்மொழி வாழட்டும்
3. வென்றதை பரணி பகைவரை ஆகும் பாடும் இலக்கியம்.
விடை : பகைவரை வென்றதை பாடும் இலக்கியம்பரணி ஆகும்.
4. கழுத்து பிறக்கும் இடம் உயிரெழுத்து ஆகும்.
விடை : உயிரெழுத்து பிறக்கும் இடம் கழுத்து ஆகும்.
5. ஏகலை கலையை அம்புவிடும் தமிழ் என்றது.
விடை : அம்புவிடும் கலையை தமிழ் ஏகலை என்றது.
நிற்க அதற்குத் தக…
கலைச்சொல் அறிவோம்.
- ஒலிப்பிறப்பியல் – Articulatory phonetics
- உயிரொலி – Vowel
- மெய்யொலி – Consonant
- அகராதியியல் – Lexicography
- மூக்கொலி – Nasal consonant sound
- ஒலியன் – Phoneme
- கல்வெட்டு – Epigraph
- சித்திர எழுத்து – Pictograph
கூடுதல் வினாக்கள்
நிரப்புக.
1. எழுத்துகளின் பிறப்பினை இடப்பிறப்பு, முயற்சிப் பிறப்பு என
இரண்டு வகையாகப் பிரிப்பர்.
உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
3. வல்லின மெய் எழுத்துகள் ஆறும் மார்பை இடமாகக் கொண்டு
பிறக்கின்றன.
4. இடையின மெய் எழுத்துகள் ஆறும் மூக்கை இடமாகக் கொண்டு
பிறக்கின்றன.
5. ஆய்த எழுத்து தலையை இடமாகக் கொண்டு பிறக்கிறது.
6. நாவின் முதற்பகுதி அண்ணத்தின் அடிப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கும்
எழுத்துகள் க், ங்
7. நாவின் நுனி, அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள்
ட், ண்.
8. மேல் வாய்ப் பல்லின் அடியை நாக்கின் நுனி பொருந்துவதால் பிறக்கும்
எழுத்துகள் த், ந்.
9. மேல் இதழும் கீழ் இதழும் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள்
ப், ம்.
10. நாக்கின் அடிப்பகுதி, மேல் வாய் அடிப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கும்
எழுத்து ய்.
விடையளி :
1.எழுத்துகளின் பிறப்பு பற்றி எழுதுக.
Answer:
உயிரின் முயற்சியால் உடலின் உள்ளிருந்து எழும் காற்றானது மார்பு, தலை,
கழுத்து, மூக்கு ஆகிய நான்கு இடங்களுள் ஒன்றில் பொருத்தி, இதழ், நாக்கு,
பல், மேல் வாய் ஆகிய உறுப்புகளின் முயற்சியினால் வேறு வேறு ஒலிகளாகத்
தோன்றுகின்றன. இதனையே எழுத்துகளின் பிறப்பு என்பர்.
2.எழுத்துகளின் பிறப்பின் வகைகள் யாவை?
Answer:
எழுத்துகளின் பிறப்பு இருவகையாகப் பிரிக்கப்பட்டது. அவை இடப்பிறப்பு,
முயற்சிப் பிறப்பு ஆகும்.
3.சார்ப்பெழுத்தின் பிறப்பு பற்றி எழுதுக.
Answer:
ஆய்த எழுத்து வாயைத் திறந்து ஒலிக்கும் முயற்சியில் பிறக்கிறது. பிற
சார்பெழுத்துகள் யாவும் தத்தம் முதலெழுத்துகள் தோன்றும் இடங்களிலேயே அவை
பிறப்பதற்கு உரிய முயற்சிகளைக் கொண்டு தாமும் பிறக்கின்றன.
கருத்துரையிடுக