12th Tamil Unit 8 Guide | Notes
12th Tamil Unit 8 Book Back Question and answers.
இலக்கணத் தேர்ச்சி கொள்
1. குறியீடுகளைப் பொருத்துக.
அ) பெண் – 1. சமாதானம்
ஆ) புறா – 2. வீரம்
இ) தராசு – 3. விளக்கு
ஈ) சிங்கம் – 4. நீதி
அ) 2, 4, 1, 3
ஆ) 2, 4, 3, 1
இ) 3, 1, 4, 2
ஈ) 3, 1, 2, 4
Answer:
இ) 3, 1, 4, 2
2. கூற்று : 19 ஆம் நூற்றாண்டில் குறியீட்டியம் ஓர் இலக்கியக் கோட்பாடாக உருப்பெற்றது.
காரணம் : பொதலேர், ரைம்போ, வெர்லேன், மல்லார்மே முதலானவர்கள் குறியீட்டியத்தை வளர்த்தவர்கள்.
அ) கூற்று சரி, காரணம் தவறு
ஆ) கூற்று சரி, காரணம் சரி
இ) கூற்று தவறு, காரணம் தவறு
ஈ) கூற்று தவறு, காரணம் சரி
Answer:
ஆ) கூற்று சரி, காரணம் சரி
3. சங்க இலக்கியத்தில், அகத்திணை மாந்தர்களின் உள்ளத்து உணர்வுகளைக் குறிப்பாக உணர்த்தும் குறியீடுகள்.
அ) உவமை
ஆ) உவமேயம்
இ) உத்தி
ஈ) உள்ளுறை உவமை
Answer:
ஈ) உள்ளுறை உவமை
4. ‘திட்டம்’ என்னும் தலைப்பில் வரங்கள் சாபங்கள் ஆகுமென்றால் இங்கே தவங்கள் எதற்காக? என்று எழுதப்பட்டுள்ள கவிதையில் ‘வரம்’ எதற்குக் குறியீடாகிறது?
அ) அமுதசுரபி
ஆ) ஆதிரைப் பருக்கை
இ) திட்ட ம்
ஈ) பயனற்ற விளைவு
Answer:
இ) திட்ட ம்
5. மறைத்துச் சொல்லவும் மிகுத்துச் சொல்லவும் அழுத்திச் சொல்லவும் பயன்படும் இலக்கிய உத்தி எது?
அ) குறியீடு
ஆ) படிமம்
இ) அங்கதம்
ஈ) தொன்மம்
Answer:
அ) குறியீடு
குறுவினா
1. குறியீட்டு உத்தியில் ஒரு புதுக்கவிதை எழுதுக.
Answer:
எதிரே
தலைமயிர் தரித்து
கொலு வீற்றிருந்தாள்
உன் நிழல் (பிரமிள்)
2. வியர்வை கவிதையில் வெளிப்படும் குறியீடுகளைக் குறிப்பீடுக.
Answer:
• வியர்வைக்கு – ஆதிரைப் பருக்கை
• செழிப்புக்கு – அமுத சுரபி
3. குறியீட்டு உத்தியின் அடிப்படை இலக்கணங்களை எழுதுக.
Answer:
• குறிப்பாக உணர்த்தும் பொருள் அல்லது சொல் குறியீட்டு உத்தி என்பர்.
• சுட்டிய பொருளுக்கும் குறியீட்டுப் பொருளுக்கும் ஏதேனும் ஒரு தொடர்பு இருத்தல் வேண்டும்.
• சுட்டும் பொருள் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றாக இருத்தல் வேண்டும்.
• இத்தொடர்பின் வாயிலாகக் குறியீட்டுப் பொருள் நுண்ணிய முறையில் வெளிப்படுத்த வேண்டும். எ.கா. தராசு – நீதி.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. Symbol (சிம்பல்) என்பதன் பொருள்
அ) ஒன்றுசேர்
ஆ) பிரித்தல்
இ) காட்டல்
ஈ) விட்டு விலகு
Answer:
அ) ஒன்றுசேர்
2. தமிழின் செல்வாக்கினாலேயே வடமொழியில் குறிப்புப் பொருள் கோட்பாடு உருவானது என்று குறிப்பிட்டவர்
அ) ஜார்ஜ்
ஆ) ஹார்ட்
இ) பிரவுன்லீ
ஈ) வில்லியம்
Answer:
ஆ) ஹார்ட்
3. ‘உறுபுலி உருஏய்ப்பப் பூத்த வேங்கையை’ – என்ற கபிலரின் கலித்தொகை பாடலில் வெளிப்படும் குறியீடு.
i) தலைவியுடனான திருமணத்தைத் தோழி வலியுறுத்தியதை விரும்பாத தலைவன் அக்கூற்றை மறுத்தற்கு, யானை வேங்கை மரத்தைக் குத்தியது குறியீடாகிறது.
ii) அவள் கூற்றை வேண்டாததாகக் கருதித் தலைவன் வருந்துதலுக்கு, தந்தத்தை எடுக்க இயலாது யானை தவிப்பது குறியீடாகிறது.
அ) i – சரி
ஆ) ii – சரி
இ) இரண்டும் சரி
ஈ) இரண்டும் தவறு
Answer:
இ) இரண்டும் சரி
4. “கோழிலை வாழைக் கோள்முதிர் பெருங்குலை” – என்னும் கபிலரின் அகநானூற்றுப் பாடலில் வெளிப்படும் குறியீடு
i) ஆண் குரங்கின் செயல் தலைவனின் செயலுக்குக் குறியீடாகிறது.
ii) சுனைநீர்த் தேறல் தலைவன் கொண்டுள்ள இன்பந்தரும் மயக்கத்திற்குக் குறியீடாகிறது.
iii) சந்தன மரத்தில் ஏறுவதற்கு முடியாமல் பூக்களாகிய படுக்கையில் குரங்கு விழுந்து கிடக்கும் செயல், திருமணம் செய்து கொள்ளாமல் இன்பத்தை மட்டும் நகர நினைக்கும் தலைவனது செயலுக்குக் குறியீடாகிறது.
அ) i – சரி
ஆ) ii – சரி
இ) மூன்றும் சரி
ஈ) iii – மட்டும் சரி
Answer:
இ) மூன்றும் சரி
5. ‘வியர்வை’ என்னும் தலைப்பில் ‘இந்த ஆதிரைப் பருக்கைகள் வீழ்ந்ததும் பூமிப்பாத்திரம் அமுதசுரபி’ என்று அப்துல்ரகுமான் எழுதியுள்ள கவிதையில் வியர்வைத்துளிக்குக் குறியீடாவது ……………………… செழிப்புக்குக் குறியீடாவது ……………..
அ) ஆதிரைப் பருக்கை , அமுதசுரபி
ஆ) திட்டம், பயனற்ற விளைவு
இ) அமுதசுரபி, ஆதிரைப்பருக்கை
ஈ) பயனற்ற விளைவு திட்டம்
Answer:
அ) ஆதிரைப் பருக்கை , அமுதசுரபி
6. சங்க இலக்கியப் பாடல்களில் வரும் உள்ளுறை உவமம் என்னும் இக்காலத்தில் இலக்கிய உத்தியை ………………………’ எனலாம்.
அ) தொன்மம்
ஆ) படிமம்
இ) குறியீடு
ஈ) புதுக்கவிதை
Answer:
இ) குறியீடு
குறுவினா
1. குறியீடு, குறியீட்டியம் சான்றுடன் விளக்குக.
Answer:
• இரண்டு பொருள்களுக்கிடையே உறவு இருக்கும்.
• உருவ ஒற்றுமை இருக்கலாம்.
• அருவமான பண்பு ஒற்றுமை இருக்கலாம்.
சான்று
பெண்ணை – விளக்கு என்பர். குறியீட்டால் பொருளை உணர்த்துவது குறியீட்டியம் என்பர்.
2. குறியீட்டியம் கோட்பாட்டை வளர்த்தவர்கள் யாவர்?
Answer:
பொதலேர், ரைம்போ, வெர்லேன், மல்லார்மே
3. கபிலரின் கலித்தொகை பாடல்வழி குறியீட்டு உத்தியை விளக்குக.
Answer:
• வேங்கை மரம் பூத்திருக்கிறது.
• அது புலிபோல் தோற்றமளிக்கிறது.
• சினம் கொண்ட மதயானை அடிமரத்தைத் தந்தத்தால் குத்தியது.
• ஆழப்பதிந்த தந்தம் எடுக்க முடியாமல் முழங்கியது.
• இப்படி யானை முழங்கும் நாட்டை உடையவன். இப்பாடலில் யானை தலைவனுக்குக் குறியீடாக இடம் பெறுகிறது.
4. குறியீடு என்பது ஒரு புதிய வடிவம் அன்று – விளக்குக.
Answer:
- சங்க இலக்கியப் பாடல்களில் வரும் உள்ளுறை உவமம் என்றும் இலக்கிய உத்திதான் குறியீடு.
- உள்ளுறை உவமம் அக இலக்கியங்களில் உரைக்க முடியாத, மறைக்க வேண்டுபவை. அதனால் குறிப்பாக உணர்த்தப் பயன்பட்டது.
- குறியீடு என்பது அகம், புறம் என எல்லா வகைக் கவிதையிலும் குறிப்பாக உணர்த்தப் பயன்படும் இலக்கிய உத்தியாகும்.
5. ‘வியர்வை’ கவிதையின் மூலம் நாம் அறியும் குறியீட்டு செய்தி யாது?
Answer:
- ஆதிரையிட்ட பருக்கையினால் அமுதசுரபி பாத்திரத்தில் உணவு வளர்வது போல் உழைப்பால் உலகம் செழித்து வளர்கிறது.
- வியர்வைக்கு – பருக்கை
- செழிப்புக்கு – அமுதசுரபி குறியீடாக அமைகிறது.
6. ‘திட்டம்’ கவிதையின் மூலம் நாம் அறியும் குறியீட்டுச் செய்தி யாது?
Answer:
- திட்டங்கள் தீட்டினாலும் அவை நாட்டு நலனுக்குப் பயன்படாமல் எதிராகப் போய்விடுகிறது.
- வரம் – திட்டத்திற்கும்.
- சாபம் – பயனற்ற விளைவுக்கும் குறியீடாக அமைகிறது.
- வரங்கள், சாபங்கள், ஆகுமென்றால் இங்கே தவங்கள் எதற்கே?
மொழியை ஆள்வோம்
சான்றோர் சித்திரம்
பர்மாவில் ரங்கூன் நகரில் உள்ளவொரு கடையில் அடிப்பையனாகப் (உதவியாள்) பணியாற்றினான் ஒரு சிறுவன். அவனிடம், கடை முதலாளி ஒரு பெயரைக் குறிப்பிட்டு, அந்த நபர் வந்து தன்னை எங்கே என்று கேட்டால். ‘முதலாளி இல்லை’ என்று சொல்லுமாறு வற்புறுத்தினார். அந்தச் சிறுவனோ, “நீங்கள் வெளியிலிருந்தால் அவ்வாறு கூறலாம். இல்லாதபோது எப்படிப் பொய் சொல்வது? சொல்ல மாட்டேன்” என்று பிடிவாதமாகக் கூறினார். அவர், வ.சு.ப. மாணிக்கம்.
தமிழின் சிறப்புகளைப் பற்றி ஆய்வுகள் பல செய்தமையால் ‘தமிழ் இமயம்’ என்று தமிழ் அறிஞர்களால் போற்றப்பட்டவர் வ.சுப.மாணிக்கம். எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என்ற கொள்கையைப் பறைசாற்றுவதற்காகத் ‘தமிழ்வழிக் கல்வி இயக்கம்’ என்ற அமைப்பை நிறுவித் தமிழ்ச்சுற்றுலா மேற்கொண்டவர். அழகப்பா கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகவும் முதல்வராகவும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றினாார்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தராகச் சிறப்புடன் செயலாற்றிய போது பல்கலைக்கழக நடைமுறைகள் தமிழில் இருக்க வேண்டும் என ஆணை பிறப்பித்ததுடன் அங்குத் தமிழாய்வு நடைபெறவும் வழிவகுத்தார். திருவந்தபுரத்தின் திராவிடமொழியில் கழகத்தில் முதுபேராய்வாளராகப் பணிபுரிந்தபோது தமிழ் யாப்பியல் வரலாறும் வளர்ச்சியும் என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
சங்கப் பாடல்களின் நுட்பங்களைக் கட்டுரைகளாக எழுதுவதில் ஆற்றல் மிக்கவரான இவர் தமிழ்க்காதல், வள்ளுவம், கம்பர், சங்கநெறி உள்ளிட்ட பல நூல்களை இயற்றியவர். தமிழுக்குப் புதிய சொல்லாக்கங்களையும், உவமைகளையும் உருவாக்கித் தருவதில் தனி ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்தவர். ஆராய்ச்சி, கட்டுரை, நாடகம், கவிதை, உரை, கடித இலக்கியம், பதிப்பு எனப் பல்துறை ஆளுமையான அவருக்குத் தமிழக அரசு அவருடைய மறைவிற்குப் பிறகு, திருவள்ளுவர் விருது வழங்கியதுடன் 2006ஆம் ஆண்டு அவருடைய நூல்களை நாட்டுடமையாக்கிச் சிறப்புச் செய்தது.
அவருடைய தமிழ்த்திறத்துக்கும் ஒரு பதம்.
“ஐந்து கோடித் தமிழர் தொகை இருந்தும், ஆயிரம் படிகள் மாமாங்கம் ஆகின்றது. வாங்காற்றல் மக்களிடம் இல்லை என்று சொல்லுதற்கில்லை. எத்துணையோ புதுக்கோலங்கட்கும் கேளிக்கைகட்கும் தலைகால் தெரியாமல் செலவு செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள். நூல்கள் வாங்கும் அறிவுப் பழக்கத்தை மக்களிடம் பரப்ப வேண்டும்”.
வினாக்கள் :
- தமிழின் இதயம் என அறிஞர்களால் போற்றப்பட்டவர் யார்?
- வ.சு.ப. மாணிக்கத்தின் பணிகள் பற்றிக் கூறுக.
- வ.சு.ப. மாணிக்கத்திற்கு என்ன விருது வழங்கப்பட்டது?
- பிரித்து எழுதுக: பேராய்வாளர்
- புணர்ச்சி விதி தருக: தமிழாய்வு
Answer:
- தமிழின் இதயம் – வ.சு.ப. மாணிக்கம்.
- அண்ணாமலைப் பல்கலையின் தமிழ்த்துறைத் தலைவர்.
- அழகப்பா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர் மற்றும் முதல்வர்.
- மதுரை, காமராசர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்.
- திருவள்ளுவர் விருது
- பேராய்வாளர் – பெருமை + ஆய்வாளர்
- தமிழாய்வு – தமிழ் + ஆய்வு
- உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே – தமிழாய்வு.
தமிழாக்கம் தருக.
I make sure I have the basic good habits which respecting my elders, greeting people when I meet them, wishing them well when departing etc. Other than this, observing the law, serving the poor and downtrodden, helping the sick and needy, giving shelter to the homeless, assisting someone with a physically challenged etc. are also other good habits of mine. To lead on a peaceful life. I develop other good habits, writing, listening to music, dancing, singing etc. are other such habits which fulfill the needs of my soul.
நான் பெரியவர்களை மதிப்பது, பிறரைச் சந்திக்கும் போது வணக்கம் தெரிவிப்பது, அவர்கள் புறப்படும் சமயத்தில் நன்றி செலுத்துவது போன்ற நல்ல பழக்கங்கள் என்னிடம் இருப்பதை உறுதியாகச் சொல்வேன். இது தவிர, சட்டத்தைக் கவனித்தல், ஏழை மற்றும் அடித்தட்டு மக்களுக்குச் சேவை புரிதல், நோயாளிகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்தல்,
வீடற்றவர்களுக்குத் தங்குமிடம் அமைத்துத் தருதல், மாற்றுத்திறனாளிகளுக்கு இயன்ற உதவி செய்தல் போன்ற மற்ற சில நல்ல பழக்கங்களும் என்னிடம் உள்ளது. ஒரு அமைதியான வாழ்க்கையை மேற்கொள்ள நான் மேலும் சில நல்ல பழக்கங்களை வளர்த்துக் கொள்கிறேன், பாடல் கேட்கிறேன், நடனம் ஆடுகிறேன், எழுதுகிறேன், இசையை ரசிக்கிறேன். இதுபோன்ற பழக்கங்களால் என் ஆன்மாவின் தேவைகள் பூர்த்தியாகின்றன.
கதையைப் படித்துப் பொருளுணர்ந்து நிகழ்வை உரையாடலாக மாற்றுக.
“எனக்கு சில்க் சட்டை இருக்கே! உனக்கு இருக்கா! என்று கெட்டிக்காரத்தனமாகக் கேட்டான் ராமசாமி. செல்லையா பதில் சொல்லத் தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான்; தம்பையா ஆகாயத்தைப் பார்த்து யோசனை செய்தான்; மங்கம்மாள் மூக்கின்மேல் ஆள் காட்டி விரலை வைத்துக் கொண்டும் கண்ணை இலேசாக மூடிக் கொண்டும் யோசனை செய்தாள்.
அந்த மூவரும் ராமசாமியின் கேள்விக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் மற்ற பிள்ளைகள். அன்று பள்ளிக்கூடத்திலிருக்கும்போது ராமசாமிக்கும் செல்லையாவுக்கும் இடையே ஒரு போட்டி நடந்தது. ராமசாமி தன் ‘ஐந்தாம் வகுப்பிற்குரிய இந்தியதேச சரித்திரப் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டான். செல்லையா அந்த வருஷம் இந்தியதேச சரித்திரம் வாங்கவில்லை; அதனால் தன்னிடமுள்ள ஒரு சிவிக்ஸ் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டான். இருவரும் ‘படப்போட்டி’யை ஆரம்பித்து விட்டார்கள்.
கருத்துரையிடுக