10th Tamil Guide Unit 3
3.1. விருந்து போற்றதும்
I. பலவுள் தெரிக.
1. பின்வருவனவற்றுள் முறையான தொடர் –
- தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு
- தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு.
- தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு
- தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு
2. ‘விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு’. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை –
- நிலத்திற்கேற்ற விருந்து
- இன்மையிலும் விருந்து
- அல்லிலும் விருந்து
- உற்றாரின் விருந்து
II. குறு வினா
‘தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குற்றியெடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி’ என்பது இலக்கியச் செய்தி. விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றா? உங்கள் கருத்தைக் குறிப்பிடுக.- விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றாகக் கருத முடியாது.
- ஏனென்றால், இனிய சொற்களும், நல்ல உபசரிப்பும் இல்லாமல் செல்வத்தால் செய்யும் விருந்தோம்பலை ஏற்கமாட்டார்கள். எனேவ, செல்வத்தை விட விருந்தோம்பலுக்கு இனியச் சொற்களும் நல்ல உபசரிப்பும், மனமும் இருந்தால் போதும் என்பது என் கருத்தாகும்.
III. சிறு வினா
• புதியதாக வருவோர் இரவில் தங்குவதற்கு வீட்டின் முன்புறம் திண்ணையும் அதில் தலை வைக்கத் திண்டும் அமைத்தனர்.• திருவிழாக் காலங்களில் ஊருக்கு வரும் புதியவர்களையும் அழைத்து அன்போடு விருந்தளிப்பதைச் சில இடங்களில் காணமுடிகிறது.
இப்படியாகக் காலமாற்றம், தமிழர் விருந்தோம்பலில் ஏற்படுத்திய மாற்றங்கள்
குறித்த கருத்துகளை எழுதுக.
- அன்றைய காலத்தில் வழிப்போக்கர்களே விருந்தினராகப் போற்றப்பட்டனர்.
- காலமாற்றத்தல் நாகரிகம் என்னும் பெயரால், வழிப்போக்கர்களுக்கு விருந்தளிப்பது மறைந்து, நண்பர்களுக்கும், உறவினர்களுக்கு மட்டுமே விருந்தளிக்கும் நிலையைத்தான் இன்று காண முடிகின்றது.
- வழிப்போக்கர்களுக்கும், ஏழைகளுக்கும் கோவில் மற்றும் அன்னசத்திரங்கள் விருந்திட்டு வருகின்றன.
- விருந்தினர் என்று சொல்லி கயவர்கள் இன்று மக்களை ஏமாற்றுவதால் புதியவர்களை விருந்தினராகப் போற்ப்படுவது இல்லை.
- இன்றைய சமுதாயத்தில் தன்னலம் மேலோங்கியதால் விருந்தென்னும் பொதுநலம் குறைந்து வருகின்றது.
IV. நெடு வினா
உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.குறிப்புச் சட்டம்
- முன்னுரை
- இனிது வரவேற்றல்
- உணவு உபசரிப்பு
- அன்பு வெளிப்பாடு
- முடிவுரை
- முன்னுரை:-
நல்விருந்து வாத் தவர்க்கு”
- என்ற குறட்பா வந்த விருந்தினரைப் பேணிப் போற்றி இனிவரும் விருந்தினரை எதிர்பார்த்து இருப்பவனை வானவர்கள் போற்றும் சிறப்பு விருந்தினனாவான் என்கின்றது. வந்த விருந்தையும் வரும் விருந்தையும் சிறப்புடன் செய்வது இல்லத்தார் கடமையாகும்.
- வீட்டிற்கு வந்த உறவினர்களிடம் வாருங்கள், அமருங்கள், நலமா? நீர் அருந்துங்கள், குடும்பத்தினர் அனைவரும் நலமா? என சில வார்த்தைகளைக் கூறி முக மலர்ச்சியுடன் விருந்தினரை வரவேற்றேன்.
- வீட்டிற்கு வந்த விருந்தினர்களுக்கு அவர்கள் விரும்பும் அறுசுவை உணவைத் தயார் செய்து அவரை உணவு உண்ண வருமாறு இன்முகத்துடன் அழைத்து, அமர வைத்தேன்
- தலை வாழை இலையில் விருந்தினருக்கு உணவளிப்பது மரபு. ஆகவே தமிழ்ப் பண்பாடு மறையாதிருக்க தலைவாழை இலையில் விருந்தினருக்கு உணவிட்டேன்.
- உண்பவரின் இடப்பக்கம் வாழை இலையின் குறுகலான் பகுதியும், வலப்பக்கம் விரிந்த பகுதியும் வருமாறு வாழையிலையை விரித்தேன்.
- வாழை இலையின் இடது ஓரத்தில் உப்பு, ஊறுகாய், இனிப்பு முதலான அளவில் சிறிய உணவு வகைகளை வைத்தேன். வாழை இலையின் வலது ஓரத்தில் காய்கறி, கீரை, கூட்டு முதலான அளவில் பெரிய உணவு வகைகளையும் நடுவில் சோறும் வைத்தேன்.
- உண்பவர் மனமறிந்து அவர்கள் விரும்பிச் சாப்பிடும் உணவு வகைகளை மீண்டும் மீண்டும் பரிவுடன் பரிமாறினேன்.
- ஒரு குவளையில் நீரைக் கொண்டு வந்தேன். அதைக் கொண்ட அவர் அருகில் வைக்கப்பட்ட வெற்றுப்பாத்திரத்தில் அவர் கைகழுவுமாறு நீர் ஊற்றினேன்.
- பிறகு கைகளைத் துடைப்பதற்குத் துண்டினை அளித்தேன்.
- உணவு உண்டு எழுந்தவருக்கு ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கும் சுண்ணாம்பு வைத்தேன். அவர் அதை மகிழ்வுடன் உண்டார்.
- உணவுண்டவரிடம் திருப்தியாக உண்டீர்களா? என விசாரித்து, வீட்டில் உள்ள உணவுப் பொருட்கள் சிலவற்றையும் கொடுத்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுக்குமாறு கூறி, ஏழடி வரை அவருடன் சென்று வழியனுப்பி வைத்தேன்.
- விருந்தினர் பேணுதன் தமிழர் மரபு ஆகும். அதனை அன்போடும், அருளோடும் செய்தல் நனி சிறப்பாகும்.
விருந்து போற்றதும் – கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. தமிழர் பண்பாட்டில் ____________ க்குத் தனித்த இடமுண்டு.விடை : வாழை இலை
2. அமெரிக்காவின் மினசோட்டோ தமிழ்ச் சங்கம் ____________ வை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றது.
விடை : வாழையிலை விருந்து விழா
3. திருவள்ளுவர் ____________ ‘விருந்தோம்பலை வலியுறுத்த ஓர் அதிகாரத்தையே அமைத்திருக்கிறார்.
விடை : இல்லறவியலில்
4. இளையான்குடி மாறநாயனாரின் விருந்தளிக்கும் திறன் பற்றி ____________ குறிப்பிடுகிறது.
விடை : பெரியுராணம்
5. விருந்தோம்பலை வலியுறுத்த ஓர் அதிகாரத்தையே படைத்த புலவர் ____________
விடை : திருக்குறள்
6. தனித்து உண்ணாமை என்பது தமிழரின் ____________ பண்பின் அடிப்படை
விடை : விருந்தோம்பல்
7. விருந்தோம்பல் என்பது ____________
விடை : பெண்களின் சிறந்த பண்பு
II. குறு வினா
1. விருந்தோம்பல் என்றால் என்ன?- தம் வீட்டிற்கு வரும் விருந்தினரை முகமலர்ச்சியோடு வரவேற்று, உண்ண உணவும் இடமும் கொடுத்தல், அவர்களிடம் அன்பு பாராட்டுதல் இவை விருந்தோம்பல் எனப்படும்.
- தனித்து உண்ணாமை என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை
- அமிழ்தே கிடைத்தாலும் தாமே உண்ணாது பிறருக்கும் கொடுக்கும் நல்லோர் உள்ளதால் உலகம் நிலத்திருக்கிறது.
- விருந்தோம்பல் என்பது பெண்களின் சிறந்த பண்புகளில் ஒன்றாகப் கருதப்படுகிறது.
- நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழந்து வரவேற்று உணவிடும் நல்லியல்பு குடும்ப தலைவிக்கு உண்டு.
- திருமணத்தை உறுதி செய்தல்
- திருமண்
- வளைகாப்பு
- பிறந்த நாள்
- புதுமனை புகுவிழா
- முருங்கைக்காய் சாம்பார்
- வெண்டக்காய் கூட்டு
- மோர்க்குழம்பு
- வேப்பம்பூ ரசம்
- தினைப்பாயாசம்
- அப்பளம்
- தொல்காப்பியம்
- திருக்குறள்
- சிலப்பதிகாரம்
- கம்பராமாயணம்
- கலிங்கத்துப்பரணி
- புறநானூறு
- நற்றிணை
- குறுந்தொகை
- கொன்றைவேந்தன்
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1.வரிசைப்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடு.i) விருந்தே புதுமை – 1. செயங்கொண்டார்
ii) இல்லறவியல் – 2. இளங்கோவடிகள்
iii) சிலப்பதிகாரம் – 3. தொல்காப்பியர்
iv) கலிங்கத்துப்பரணி – 4. திருவள்ளுவர்
அ) 1, 2, 3, 4
ஆ) 4, 3, 2, 1
இ) 4, 3, 1, 2
ஈ) 3, 4, 2, 1
Answer:
ஈ) 3, 4, 2, 1
2.மினசோட்டா தமிழ்ச்சங்கம் அமைந்துள்ள இடம் எது?
அ) அமெரிக்கா
ஆ) இலங்கை
இ) மொரிசியஸ்
ஈ) மலேசியா
Answer:
அ) அமெரிக்கா
3.தொல்காப்பியர் விருந்து என்பதை என்னவென்று கூறியுள்ளார்?
அ) தொன்மை
ஆ) புதுமை
இ) இளமை
ஈ) முதுமை
Answer:
ஆ) புதுமை
4.“………தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை ”
– என்று குறிப்பிடும் நூல் எது? இது யாருடைய கூற்றாக அமைகிறது?
அ) கம்பராமாயணம், சீதை
ஆ) சிலப்பதிகாரம், கண்ணகி
இ) நளவெண்பா , தமயந்தி
ஈ) சீவகசிந்தாமணி, காந்தருவதத்தை
Answer:
ஆ) சிலப்பதிகாரம், கண்ணகி
5.“பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்
வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்
விருந்தும் அன்றி விளைவான யாவையே” – என்று குறிப்பிடும் நூல்?
அ) கம்பராமாயணம்
ஆ) பெரிய புராணம்
இ) சிலப்பதிகாரம்
ஈ) மணிமேகலை
Answer:
அ) கம்பராமாயணம்
6.“அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்” என்று நள்ளிரவிலும் உணவிடும் குடும்பத் தலைவியின் விருந்தோம்பலைச் சிறப்பித்துக் கூறும் நூல்.
அ) குறுந்தொகை
ஆ) அகநானூறு
இ) நற்றிணை
ஈ) புறநானூறு
Answer:
இ) நற்றிணை
7.‘காலின் ஏழடிப் பின் சென்று’ என விருந்தினரை வழியனுப்பும் தமிழரின் இயல்பைக் குறிப்பிடும் நூல்
அ) சிறுபாணாற்றுப்படை
ஆ) பெரும்பாணாற்றுப்படை
இ) பொருநராற்றுப்படை
ஈ) கூத்தராற்றுப்படை
Answer:
இ) பொருநராற்றுப்படை
8.“விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண மேன்மேலும் முகமலரும் மேலோர் போல” – இவ்வடிகள் இடம் பெற்றுள்ள நூல்?
அ) கம்பராமாயணம்
ஆ) கலிங்கத்துப்பரணி
இ) முக்கூடற்பள்ளு
ஈ) பெரியபுராணம்
Answer:
ஆ) கலிங்கத்துப்பரணி
9.“குரல் உணங்கு விதைத்தினை உரல்வாய்ப் பெய்து சிறிது புறப்பட்டன்றோ இலள்” என்று புறநானூறு காட்சிப்படுத்தும் கருத்து?
அ) தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குத்தியெடுத்து விருந்தினர்க்கு உணவளித்தாள் தலைவி.
ஆ) உணவுக்காக வைத்திருந்த தானியத்தை விதைப்பதற்குத் தலைவனிடம் தந்தாள் தலைவி.
இ) குழந்தையின் பசியைப் போக்க விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குத்தியெடுத்துச் சமைத்துத் தந்தாள் தலைவி.
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குத்தியெடுத்து விருந்தினர்க்கு உணவளித்தாள் தலைவி.
10.தலைவன் விருந்தளிக்க அடகும் பணையமும் வைத்த பொருட்கள் யாவை?
அ) பழையவாள், கருங்கோட்டுச் சீறியாழ்
ஆ) புதியவாள், நெடுங்கோட்டுப் பெரியாழ்
இ) பழையவாள், நெடுங்கோட்டுப் பெரியாழ்
ஈ) புதியவாள், கருங்கோட்டுச் சீறியாழ்
Answer:
அ) பழையவாள், கருங்கோட்டுச் சீறியாழ்
11.அன்று விதைத்துவிட்டு வந்த நெல்லை அரித்து வந்து, பின் சமைத்துச் சிவனடியாருக்கு விருந்து படைத்தவர் யார்? இக்காட்சி இடம் பெறும் நூல் எது?
அ) சாக்கியநாயனார், பெரிய புராணம்
ஆ) இளையான்குடி மாறநாயனார், பெரிய புராணம்
இ) காரைக்கால் அம்மையார், அற்புத திருவந்தாதி
ஈ) சுந்தரர், திருத்தொண்டத்தொகை
Answer:
ஆ) இளையான்குடி மாறநாயனார், பெரியபுராணம்
12.நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் கொடுத்தவையாகச் சிறுபாணாற்றுப்படை குறிப்பிடுபவை எவை?
அ) குழல் மீன் கறியும் பிறவும்
ஆ) ஆரல் மீன் கறியும் உப்பும்
இ) உப்பும் முத்தும் ஈ) மீன் கறியும் நண்டும்
Answer:
அ) குழல் மீன் கறியும் பிறவும்
13.“இலையை மடிப்பதற்கு முந்தைய
வினாடிக்கு முன்பாக
மறுக்க மறுக்க
பரிமாறப்பட்ட கூடுதல் இட்லியில்
நீண்டு கொண்டிருந்தது
பிரியங்களின் நீள் சரடு” – என்னும் கவிதைக்கு உரியவர் யார்?
அ) அம்சப்பிரியா
ஆ) பா.விஜய்
இ) சிநேகன்
ஈ) நா. முத்துக்குமார்
Answer:
அ) அம்சப்பிரியா
14.“பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர்
வருவீர் உளீ ரோ”- என்று குறிப்பிடும் நூல் எது?
அ) நற்றிணை
ஆ) குறுந்தொகை
இ) பதிற்றுப்பத்து
ஈ) பரிபாடல்
Answer:
ஆ) குறுந்தொகை
15.“மருந்தே ஆயினும் விருந்தோடு உண்” என்று பாடியவர் யார்? நூல் எது?
அ) ஔவையார், ஆத்திச்சூடி
ஆ) ஔவையார், கொன்றைவேந்தன்
இ) குமரகுருபரர், நீதிநெறி விளக்கம்
ஈ) வள்ளலார், ஜீவகாருண்ய ஒழுக்கம்
Answer:
ஆ) ஔவையார், கொன்றைவேந்தன்
16.அமெரிக்காவின் மினசோட்டா தமிழ்ச்சங்கம் ஆண்டுதோறும் கொண்டாடும் விழா
அ) வாழையிலை விருந்து விழா
ஆ) இறைச்சி உணவு விருந்து விழா
இ) வேட்டி சேலை உடுத்தும் விழா
ஈ) நவதானிய விழா
Answer:
அ) வாழையிலை விருந்து விழா
17.திருக்குறளில் விருந்தோம்பல் அதிகாரம் இடம்பெறும் இயல்
அ) இல்லறவியல்
ஆ) பாயிரவியல்
இ) அரசியல்
ஈ) துறவறவியல்
Answer:
அ) இல்லறவியல்
18.விருந்தினரைப் போற்றிப் பேணல் பழந்தமிழர் மரபு என்பதை உணர்த்தியவர்.
அ) திருவள்ளுவர்
ஆ) தொல்காப்பியர்
இ) இளங்கோவடிகள்
ஈ) செயங்கொண்டார்
Answer:
இ) இளங்கோவடிகள்
19.கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள், விருந்தும் ஈகையும் செய்வதாகக் குறிப்பிட்டுள்ளவர்
அ) கம்பர்
ஆ) தொல்காப்பியர்
இ) இளங்கோவடிகள்
ஈ) செயங்கொண்டார்
Answer:
அ) கம்பர்
20.இளையான்குடி மாறநாயனாரின் விருந்தளிக்கும் திறன் பற்றிக் குறிப்பிடும் நூல்?
அ) பெரிய புராணம்
ஆ) நற்றிணை
இ) பொருநராற்றுப் படை
ஈ) கம்பராமாயணம்
Answer:
அ) பெரிய புராணம்
இயல் 3.2 காசிக்காண்டம்
விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்
வியத்தல் நன்மொழி இனிது
உரைத்தல்
திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்
எழுதல் முன் மகிழ்வன செப்பல்
பொருந்து மற்றுஅவன் தன்அருகுற இருத்தல்
போமெனில் பின்
செல்வதாதல்
பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்
ஒழுக்கமும் வழிபடும் பண்பே *
இல்லொழுக்கம், (பா எண் : 17)
சொல்லும் பொருளும்
-
அருகுற - அருகில்
-
முகமன் - ஒருவரை நலம் வினவிக் கூறும் விருந்தோம்பல் சொற்கள்
பாடலின் பொருள்
விருந்தினராக ஒருவர் வந்தால், அவரை வியந்து உரைத்தல், நல்ல
சொற்களை இனிமையாகப் பேசுதல், முகமலர்ச்சியுடன் அவரை நோக்குதல்,
'வீட்டிற்குள் வருக! என்று வரவேற்றல், அவர் எதிரில் நிற்றல்,
அவர்முன் மனம் மகிழும்படி பேசுதல், அவர் அருகிலேயே
அமர்ந்துகொள்ளுதல், அவர் விடைபெற்றுச் செல்லும்போது வாயில்வரை
பின் தொடர்ந்து செல்லல், அவரிடம் புகழ்ச்சியாக முகமன் கூறி
வழியனுப்புதல் ஆகிய ஒன்பதும் விருந்தோம்பல் செய்யும் இல்லற
ஒழுக்கமாகும்.
விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்எழுதல் முன் மகிழ்வன செப்பல்பொருந்து மற்றுஅவன் தன்அருகுற இருத்தல்போமெனில் பின் செல்வதாதல்பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்ஒழுக்கமும் வழிபடும் பண்பே *
- அருகுற - அருகில்
- முகமன் - ஒருவரை நலம் வினவிக் கூறும் விருந்தோம்பல் சொற்கள்
விருந்தினராக ஒருவர் வந்தால், அவரை வியந்து உரைத்தல், நல்ல சொற்களை இனிமையாகப் பேசுதல், முகமலர்ச்சியுடன் அவரை நோக்குதல், 'வீட்டிற்குள் வருக! என்று வரவேற்றல், அவர் எதிரில் நிற்றல், அவர்முன் மனம் மகிழும்படி பேசுதல், அவர் அருகிலேயே அமர்ந்துகொள்ளுதல், அவர் விடைபெற்றுச் செல்லும்போது வாயில்வரை பின் தொடர்ந்து செல்லல், அவரிடம் புகழ்ச்சியாக முகமன் கூறி வழியனுப்புதல் ஆகிய ஒன்பதும் விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கமாகும்.
I. சொல்லும் பொருளும்
- அருகுறை – அருகில்
- முகமன் – ஒருவரை நலம் வினவிக் கூறும் விருந்தோம்பல் சொற்கள்
- உரை – பகுதி
- த் – சந்தி
- த் – இறந்த கால இடைநிலை
- அ – பெயரச்ச விகுதி
- வா – பகுதி
- வரு – எனக் குறுகியத விகாரம்
- க – வியங்கோள் வினைமுற்று விகுதி
- நன்மொழி – பண்புத்தொகை
- வியத்தல் – தொழிற்பெயர்
- நோக்கம் – தொழிற்பெயர்
- எழுதுதல் – தொழிற்பெயர்
- உரைத்தல் – தொழிற்பெயர்
- செப்பல் – தொழிற்பெயர்
- இருத்தல் – தொழிற்பெயர்
- வழங்கல் – தொழிற்பெயர்
IV. பலவுள் தெரிக.
காசிக்காண்டம் என்பது –- காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்
- காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்
- காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்
- காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்
V. குறு வினா
விருந்தினரை மகிழ்வித்து கூறும் முகமன் சொற்களை எழுதுக- வாருங்கள் ஐயா, வணக்கம்!
- அமருங்கள்
- நலமாக இருக்கிறீர்களா?
- தங்கள் வரவு நல்வரவு.
காசிக்காண்டம் – கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. காசி நகரத்தின் பெருமைகளை கூறும் நூல் ____________ ஆகும்.விடை :காசிக்காண்டம்
2. ____________ என்று அழைக்கப்படுபவர் அதிவீரராம பாண்டியர் ஆவார்
விடை : சீவலமாறன்
3. ____________ சிறந்த அறக்கருத்துகளை எடுத்துரைக்கிறது.
விடை : நறுந்தொகை
4. அதிவீரராம பாண்டியரின் பட்டப்பெயர் ____________
விடை : சீவலமாறன்
5. ____________ என்னும் நூலின் ஆசிரியர் அதிவீரராம பாண்டியர்.
விடை : வெற்றிவேற்கை
II. குறு வினா
1. காசி நகரத்தின் பெருமைகளைக் கூறுகிற நூல் எது?- காசி நகரத்தின் பெருமைகளைக் கூறுகிற நூல் காசிக்கண்டம்
- காசி நகரத்தின் பெருமைகளைக் கூறுகிற நூல் காசிக்கண்டம்
- துறவு, இல்லறம், பெண்களுக்குரிய பண்புகள், வாழ்வியல் நெறிகள், மறுவாழ்வில் அடையும் நன்மைகள் ஆகியவற்றை பாடுவதாக அமைந்துள்ளது
- காசிக்காண்டம்
- நைடதம்
- லிங்கபுராணம்
- வாயுசம்கிதை
- திருக்கருவை அந்தாதி
- கூர்மபுராணம்
- வெற்றி வேற்கை என்றழைக்கப்படும் நறுந்தொகை
- ஒருவரை நலம் வினவிக் கூறும் விருந்தோம்பல் சொல்லாகும்.
III. சிறு வினா
1. அதிவீரராம பாண்டியர் குறிப்பு வரைக- முத்துக் குளிக்கும் கொற்கையின் அரசர் அதிவீரராம பாண்டியர்.
- தமிழ்ப் புலவராக திகழ்ந்த இவர் இயற்றி நூல் காசிக்காண்டம்
- இவர் இயற்றிய வெற்றி வேற்கை என்றழைக்கப்டும் நறுந்தொகை சிறந்த அறக்கருத்துகளை எடுத்துரைக்கிறது.
- இவரின் பட்டப்பெயர் சீவலமாறன்.
- காசிக்காண்டம், நைடதம், லிங்கபுராணம், வாயுசம்கிதை, திருக்கருவை அந்தாதி, கூர்மபுராணம், வெற்றி வேற்கை என்றழைக்கப்படும் நறுந்தொகை ஆகியவை இவர் இயற்றிய நூல்கள் ஆகும்.
- விருந்தினராக ஒருவர் வந்தால், அவரை எதிர்கொண்டு வியந்து உரைத்தல் வேண்டும்.
- நல்ல சொற்களை இனிமையாகப் பேசுதல் வேண்டும்.
- முகமலர்ச்சியுடன் அவரை நோக்கி, “வீட்டிற்குள் வருக” என்று வரவேற்று, அவர் எதிரில் நின்று, அவர் முன் மனம் மகிழும்படி பேசுதல் வேண்டும்.
- அவர் அருகிலேயே அமர்ந்து கொண்டு, அவர் விடை பெற்றுச் செல்லும் போது, வாயில் வரை பின் தொடர்ந்து செல்லல் வேண்டும்.
- வந்தவரிடம் புகழ்ச்சியகா முகமன் கூறி வழியனுப்புதல் வேண்டும்
- மேற்கண்ட செயல்கள் விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்ககமாக காசிக்காண்டத்தில் கூறப்பட்டுள்ளது.
பலவுள் தெரிக
1.காசிக்காண்டத்தை இயற்றியவர் யார்?
அ) துளசிதாசர்
ஆ) அதிவீரராம பாண்டியர்
இ) ஔவையார்
ஈ) பெருஞ்சித்திரனார்
ஆ) அதிவீரராம பாண்டியர்
2.காசிக்காண்டத்தின் இல்லொழுக்கம் பற்றிய பகுதி எத்தனையாவது பாடல்?
அ) பதினான்காவது
ஆ) பதினாறாவது
இ) பதின்மூன்றாவது
ஈ)
பதினேழாவது
Answer:
ஈ) பதினேழாவது
3.முத்துக் குளிக்கும் கொற்கையின் அரசர்?
அ) அதிவீரராம பாண்டியர்
ஆ) கிள்ளிவளவன்
இ) செங்குட்டுவன்
ஈ)
இரண்டாம் புலிகேசி
Answer:
அ) அதிவீரராம பாண்டியர்
4.அதிவீரராம பாண்டியரின் பட்டப்பெயர்
அ) சீவலபேரி பாண்டி
ஆ) சீவலமாறன்
இ) மாறவர்மன்
ஈ)
மாறன்வழுதி
Answer:
ஆ) சீவலமாறன்
5.அதிவீரராம பாண்டியர் இயற்றாத நூலைக் கண்டறிக.
அ) நைடதம்
ஆ) வாயு சம்கிதை
இ) திருக்கருவை அந்தாதி
ஈ)
சடகோபர் அந்தாதி
Answer:
ஈ) சடகோபர் அந்தாதி
6 .‘அருகுற’ என்பதன் பொருள் என்ன?
அ) அருகில்
ஆ) தொலைவில்
இ) அழிவில்
ஈ) அழுகிய
Answer:
அ) அருகில்
7 .முகமன் எனப்படுவது ……………………
அ) ஒருவரை நலம் வினவிக்கூறும் விருந்தோம்பல் சொற்கள்
ஆ) ஒருவரை
எதிர்த்துப் பேசும் சொற்கள்
இ) பெரியோர்களின் கருத்துகளை வரவேற்கும்
சொற்கள்
ஈ) மன்னரும் அமைச்சரும் உரையாடும் சொற்கள்
Answer:
அ) ஒருவரை நலம் வினவிக்கூறும் விருந்தோம்பல் சொற்கள்
8 .விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கத்தின் பண்புகள் எத்தனை?
அ) எட்டு
ஆ) ஒன்பது
இ) ஆறு
ஈ) பத்து
Answer:
ஆ) ஒன்பது
9 .வெற்றிவேற்கை என்னும் நூலின் ஆசிரியர் ……………………
அ) அதிவீரராம பாண்டியர்
ஆ) கரிகாலன்
இ) பாரி
ஈ) பாண்டியன்
நெடுஞ்செழியன்
Answer:
அ) அதிவீரராம பாண்டியர்
10 .நறுந்தொகை என்னும் நூலின் ஆசிரியர் ……………………
அ) அதிவீரராம பாண்டியர்
ஆ) கரிகாலன்
இ) பாரி
ஈ) பாண்டியன்
நெடுஞ்செழியன்
Answer:
அ) அதிவீரராம பாண்டியர்
11 .நறுந்தொகை என்று அழைக்கப்படும் நூல் எது?
அ) கொன்றைவேந்தன்
ஆ) காசிக்கலம்பகம்
இ) வெற்றிவேற்கை
ஈ)
காசிக்காண்டம்
Answer:
இ) வெற்றிவேற்கை
******************************THE END OF 3.2************************************
3.3. மலைபடுகடாம்
அன்று அவண் அசைஇ, அல்சேர்ந்து அல்கி,கன்று எரி ஒள்இணர் கடும்பொடு மலைந்துசேந்த செயலைச் செப்பம் போகி,அலங்கு கழை நரலும் ஆரிப்படுகர்ச்சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்திநோனாச் செருவின் வலம்படு நோன்தாள்மான விறல்வேள் வயிரியம் எனினே,நும்இல் போல நில்லாது புக்கு,கிழவிர் போலக் கேளாது கெழீஇசேட் புலம்பு அகல இனிய கூறிபரூஉக்குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடுகுரூஉக்கண் இறடிப் பொம்மல் பெறுகுவிர்
- அசைஇ - இளைப்பாறி,
- கடும்பு - சுற்றம்,
- ஆரி - அருமை,
- வயிரியம் - கூத்தர்,
- இறடி - தினை,
- அல்கி - தங்கி
- நரலும் - ஒலிக்கும்
- படுகர் - பள்ளம்
- வேவை - வெந்தது
- பொம்மல் - சோறு
- அசைஇ – இளைப்பாறி
- அல்கி – தங்கி
- கடும்பு – சுற்றம்
- நரலும் – ஒலிக்கும்
- ஆரி – அருமை
- படுகர் – பள்ளம்
- வயிரியம் – கூத்தர்
- வேவை – வெந்தது
- இறடி – திசை,
- பொம்மல் – சோறு
- மலை – பகுதி
- த் – சந்தி
- ந் – ஆனது விகாரம்
- த் – இறந்த கால இடைநிலை
- உ – வினையெச்ச விகுதி
- பொழி – பகுதி
- த் – சந்தி
- ந் – ஆனது விகாரம்
- த் – இறந்த கால இடைநிலை
- அ – பெயரச்ச விகுதி
III. இலக்கணக் குறிப்பு
- அசைஇ – சொல்லிசை அளபெடை
- கெழீஇ – சொல்லிசை அளபெடை
- பரூஉக் – செய்யுளிசை அளபெடை
- குரூஉக்கண் – செய்யுளிசை அளபெடை
IV. பலவுள் தெரிக.
- புத்தூர்
- மூதூர்
- பேரூர்
- சிற்றூர்
V. குறு வினா
- தினைச் சோற்றையும் உணவாகப் பெறவீர்கள்.
VI. சிறு வினா
- பகலில் இளைப்பாறிச் செல்லுங்கள். இரவில் சேர்ந்து தங்குங்கள். எரியும் நெருப்பைப் போல ஒளிரும் பூங்கொத்துகளைச் சுற்றத்தோடு அணிந்து கொள்ளுங்கள். சிவந்த பூக்கள் கொண்ட அசோக மூங்கில்கள் ஓசை எழுப்பும் மலைச்சரிவில் உள்ள சிற்றூரை அடையங்கள்.
- பகைவரே இல்லாமல் ஆட்சி செய்பவன், பகை வந்தாலும் எதிர் கொள்ளும் மானமும் வெற்றியும் உடைய நன்னனின் கூத்தர்கள் என்று சொல்லுங்கள்.
- நீங்கள் உரிமையுடன் உங்கள் வீட்டிற்கு போவது போலவே அவர்களுடைய வீட்டிற்குள் நுழையுங்கள். அவர்களும் உங்களிடம், உறவினர் போலப் பழகி இனிய சொற்களைப் பேசுவார்கள்.
- நெய்யில் வெந்த மாசிசம், தினைச் சோறு ஆகியவற்றை உணவாக அளிப்பர். அவற்றை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
VII. நெடு வினா
குறிப்புச்சட்டம்
- முன்னுரை
- உணவு
- கல்வி
- தொழில்
- நன்னடை
- முடிவுரை
- அன்றைய நிலையில் பொருளுக்காக ஆற்றப்படுத்துவது நிகழ்ந்தது. ஆனால் இன்று ஆற்றுப்படுத்தல் அதிலிருந்து விலகி வேறுபடுகின்றது.
- அன்றைய பாணர்கள், கூத்தர்கள் மன்னனிடமோ, வள்ளலிடமோ ஆற்றுப்படுத்தினர். ஆனால் இன்று வறுமையில் வாடும் ஏழைகளுக்கு உணவு தரும் அன்னச் சத்திரங்கள் பற்றியும், அன்னதானம் நடைபெறும் இடங்களைப் பற்றியும் ஆற்றுப்படுத்துகின்றனர்.
- கல்வி கற்க முடியாதவர்களுக்கு கல்வி உதவித் தொகை அளிக்கும் அரசின் திட்டங்கள் பற்றியும், உதவும் தொண்டு நிறுவனங்கள் குறித்தும் இன்று பல் வழிகாட்டல் செய்கின்றனர்.
- இன்று வேலைவாய்ப்பின்மை பெருகி வருகின்றது. அதனைப் போக்க அரசும் பொதுத்துறை நிறுவனங்களும் தொழிற்பயிற்சி நிறுவனங்களை ஏற்படுத்தியுள்ளது. வேலையில்லாமல் திண்டாடுவோருக்கு அவை குறித்த வழிகாட்டல்கள் இன்று செய்யப்பட்டு, வேலையில்லா திண்டாட்டம் ஓரவு போக்கப்படுகின்றது.
- சமுதாயத்தில் இன்று வன்முறை பெருகியுள்ளது. இதற்குக் காரணம் சினம், பொறாமை, சகிப்புத்தன்மை இல்லாமை ஆகியவையே! அவற்றைக் கட்டுப்படுத்த, அனைவருக்கும் மனதை ஒருநிலைப்படுத்த தியானப் பயிற்சி செய் இன்று வழிகாட்டல்கள் செய்கின்றனர்.
- வழிகாட்டல் என்பது நெறிபிறழும் சமுதாயத்தைக் காக்க உதவும் ஒரு இன்றியமையாத கருவியாகும். வழிகாட்டலுக்கு வித்து ஆற்றப்படுத்தல் இலக்கியங்களே சான்றாகும்.
மலைபடுகடாம் – கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
II. குறு வினா
- ஆற்றப்படுத்தும் கூத்தன், வள்ளலை நாடி எதிர்வரும் கூத்தனை அழைத்து, யாம் இவ்விடத்தே சென்று இன்னவெல்லாம் பெற்ற வருகின்றோம், நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம் பெற்று வாழ்வாயாக என்று கூறுதல் ஆற்றுப்படை ஆகும்.
- மலைக்கு யானையை உருவாகமாகக் கூறி, அதன் ஓசையைக் கடாம் எனச் சிறப்பித்துள்ளதால் மலைப்படுகடாம் எனப்பெயர் பெற்றது.
- நெய்யில் வெந்த மாசித்தின் பொரியல்
- தினைச் சோறு
- பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று.
- 583 அடிகளை கொண்டது.
- கூத்தராற்றுப்படை என அழைக்கப்படுகிறது.
- மலைக்கு யானையை உருவாகமாகக் கூறி, அதன் ஓசையைக் கடாம் எனச் சிறப்பித்துள்ளதால் மலைப்படுகடாம் எனப்பெயர் பெற்றது.
- நன்னன் என்ற குறுநில மன்னன் பாட்டுடைத் தலைவன் ஆவான்.
- மலைபடுகடாம் ஆசிரியர் இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கெளசினார்.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
3.4 கோபல்லபுரத்து மக்கள்
முன்னுரை :
- அன்னமய்யா என்ற கதாபாத்திரம் கரிசல் எழுத்தாளர் கி . ராஜநாராயணன் என்பவரால் கோபாலபுரத்து மக்கள் என்ற நூலில் எழுதப்பட்டுள்ளது . இந்நூல் 1991 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி பரிசினைப் பெற்றது .
- அன்னமய்யா தற்செயலாக அந்தப் பக்கம வந்தபோது அவர் கண்ணில் தென்பட்டான் அந்த வாலிபன் . அவன் கால்களை நீட்டி , புளியமரத்தில் சாய்ந்து உட்கார்ந்திருந்த அவனை நெருங்கிப் போய் பார்த்தபோது , பசியால் வாடி போய்விட்ட அந்த முகத்தில் கண்களின் தீட்சண்யம் , கவனிக்கக் கூடியதாய் இருந்தது . அன்னமாய்யாவைப் பார்த்ததும் சிறு புன்னகை காட்டினான் . அவனைப் பார்த்ததும் அன்னமையாவுக பத்துக் குழந்தைகள் லாட சன்னியாசி விளையாட்டு விளையாடுவது அன்னமையாவுக்கு ஞாபகம் வந்தது .
- அன்னமய்யாவை பா ர்த்த வாலிபன் " தம்பி , கொஞ்சம் குடிக்கத் தண்ணி கிடைக்குமா ? " என்று கேட்டது சந்தோஷமாக இருந்தது ." இந்தா பக்கத்துல அருகெடுத்துக்கிட்டு இருக்கிறவங்க கிட்ட நீச்சுத் தண்ணி இருக்கும் ; வாங்கிட்டு வரட்டுமா ?" என்றார் .
- இருவரும் மெல்ல நடந்து வேப்பமரத்தின் அடியில் சென்றனர் .அங்கே ஏகப்பட்ட கலயங்கள் , கருப்புக் கலயங்கள் தேங்காய்ப்பருமனுள்ள கற்களால் மூடப்பட்டு , மண் தரையில் பாதி புதைக்கப்பட்டிருந்தன. ஒரு கல்லை அகற்றினான் . ஒரு சிரட்டையில் காணத் துவையலும் ஊறுகாயும் , மோர் மிளகாய் போன்றவை இருந்தது .சிரட்டையே கலயத்தின் மூடியாக இருந்தது . ஒரு சிரட்டையில் நீத்துபாகத்தை வடித்து அவனிடம் திட்டினான் .
- கையில் வாங்கியதும் சப்பிக்குடிப்பதா அண்ணாந்து குடிப்பதா என்ற தயக்கம் வந்தபோது " சும்மா கடிச்சுக் குடிங்க "என்றான் அன்னமய்யா.. உறிஞ்சும்போது கண்கள் சொருகின . தொண்டையில் இறங்குவதன் சொகத்தை முகம் சொல்லியது.
- 'உட்காருங்க உட்கார்ந்து குடிங்க' என்று உபசரித்தான் .
- ரண்டாவது சிரட்டைக்கு சோற்றின் மகுளி மேலே வந்ததும் வார்த்துக் கொடுத்தான் . அதைக் குடித்ததும் ' ஹ ! " என்றான் .
- மடக்கும் மடக்காய் அவனுள் ஜீவஊற்று பொங்கி நிறைந்து வந்தது .
- சிரட்டையைக் கையளித்துவிட்டு அப்படியே வேப்ப மரத்து நிழலிலே சொர்க்கமாய் படுத்துத் தூங்கினான் .அன்னமய்யாவுக்கு மேலான மனநிறைவு ஏற்பட்டது .
- மார்பில் பால் குடித்துக் கொண்டிருக்கும் போதே வயிறு நிறைந்ததும் அப்படியே தூங்கிவிடும் குழந்தையைப் பார்ப்பது போல அவனைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
- அன்னமய்யாவையும் புதுஆளையும் பார்த்து வரவேற்று உண்ணும்படி உபசரித்தார்கள் . மணி அவர்களோடு சேர்ந்து சாப்பிட்டான் .
- இடதுகைச் சோற்றில் ஒரு சிறு பள்ளம் செய்து அதில் துவையலை வைத்தார்கள் . சிரிது சோற்றை எடுத்துத் துவையலில் பட்டதோ படலையோ என்று தொட்டு கழுக் என்று முழங்கினார்கள் . அவர்கள் சாப்பிட்டு முடித்ததும் ஊர்க் கதைகள் பேச ஆரம்பித்தார்கள் . மணி திரும்பவும் படுத்து அமைதியாக கண்களை மூடிக் கிடந்தார் .
- இக்கதை அன்னமய்யாவின் பெயருக்கும் அவரின் செயல்களுக்கும் உள்ள பொருத்தப்பட்டனை விளக்குகிறது .
*******************THE END OF 3.4**********************
3.5. தொகாநிலைத் தொடர்கள்
I. பலவுள் தெரிக.
- வேற்றுமை உருபு
- எழுவாய்
- உவம உருபு
- உரிச்சொல்
II. குறு வினா
- ‘சிரித்துப் பேசினார் ‘ என்பது, உவகை காரமாணக சிரித்து சிரித்து பேசினார் என அடுக்குத் தொடராகும்
- பெயர்ப் பயனிலை – கவிஞர்
- வினை பயனிலை – சென்றார்
- வினா பயனிலை – யார்?
III. சிறு வினா
கண்ணே கண்ணுறங்கு!காலையில் நீயெழும்பு!மாமழை பெய்கையிலேமாம்பூவே கண்ணுறங்கு!பாடினேன் தாலாட்டு!ஆடி ஆடி ஓய்ந்துறங்கு! –
தொகாநிலைத் தொடர்கள் – கூடுதல் வினாக்கள்
- ஒரு தொடர் மொழியில் இருசொற்கள் இருந்து அவற்றின் இடையில் சொல்லோ உருபோ இல்லாமல் அப்படியே, பொருளை உணர்த்துவது தொகாநிலைத் தொடர் எனப்படும்.
- எழுவாயுடன் பெயர், வினை, வினா ஆகிய பயனிலைகள் தொடர்வது எழுவாய்த்தொடர் ஆகும்.
- விளியுடன் வினை தொடர்வது விளித்தொடர் ஆகும்.
- வினைமுற்றுடன் ஒரு பெயர் தொடர்வது வினைமுற்றுத்தொடர் ஆகும்.
- பாடினாள் கண்ணகி
- “பாடினாள்” என்னும் வினைமுற்று முதலில் நின்று ஒரு பெயரைக்கொண்டு முடிந்துள்ளது..
- முற்றுப் பெறாத வினை, பெயர்ச்சொல்லைத் தொடர்வது பெயரெச்சத்தொடர் எனப்படும்.
- கேட்ட பாடல் – “கேட்ட” என்னும் எச்சவினை “பாடல்” என்னும் பெயரைக்கொண்டு முடிந்துள்ளது .
- முற்றுப் பெறாத வினை, வினைச் சொல்லைத் தொடர்வது வினையெச்சத்தொடர் ஆகும்.
- பாடி மகிழ்ந்தனர் – “பாடி” என்னும் எச்சவினை “மகிழ்ந்தனர் ” என்னும் வினையைக் கொண்டு முடிந்துள்ளது.
- வேற்றுமை உருபுகள் வெளிப்பட அமையும் தொடர்கள் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்கள் ஆகும்.
- இடைச்சொல்லுடன் பெயரோ, வினையோ தொடர்வது இடைச்சொல் தொடர் ஆகும்.
- உரிச்சொல்லுடன் பெயரோ, வினையோ தொடர்வது உரிச்சொல் தொடர் ஆகும்.
- ஒரு சொல் இரண்டு மூன்று முறை அடுக்கித் தொடர்வது தொடர் ஆகும்.
கற்பவை கற்றபின்….
1. கீழ்க்காணும் பத்தியில் உள்ள தொடர் வகைகளை எடுத்து எழுதுக.
- இறங்கினார் முகமது – வினைமுற்றுத்தொடர்
- அவர் பாடகர் – எழுவாய்த்தொடர்
- பாடுவதும் கேட்பதும் – உம்மைத்தொகை
- கேட்ட பாடல் – உரிச்சொல்தொடர்
- அடுக்கு அடுக்காக- அடுக்குத்தொடர்
2. கோடிட்ட சொற்களின் தொடர்வகைகளை எழுதுக
- பழகப் பழகப் – அடுக்குத் தொடர்
- வடித்த கஞ்சியில் – வினையெச்சத் தொடர்
- நன்றாகப் பேசினான் – உரிச்சொல் தொடர்
- வந்தார் – வினைமுற்றுத் தொடர்
- கவிதைகளின் – உரிச்சொல்தொடர்
மொழியை ஆள்வோம்!
II. பழமொழிகளை நிறைவு செய்க.
- உப்பில்லாப் பண்டம் குப்பையிலே
- ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்
- உப்பிட்டவரை உள்ளளவும் நினை
- விருந்தும் மருந்தும் மூன்று வேளை
- அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
பத்தியைப் படித்துக் கருத்தைச் சுருக்கி எழுதுக.
மொழியோடு விளையாடு
I. விடுபட்ட எழுத்துகளை நிரப்பி அந்த எழுத்துகளை மட்டும் இணைத்து ஒளிந்துள்ள ஒரு நூலின் பெயரைக் கண்டுபிடிக்க.
- இறகு
- குருதி
- வாள்
- அக்கா
- மதி
- படகு
ஒளிந்துள்ள நூலின் பெயர் – திருக்குறள்
II. இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக.
- சிலையைத் திரைச்சீலையால் மறைத்திருக்கிறார்கள்.
- தொடு உணர்வின் மூலம் தோடு காதில் உள்ளதை தெரிந்துகொள்ளலாம் .
- மாடு மடுவில் தண்ணீர் குடித்துக் கொண்டு இருந்தது
- மலை மீது இருக்கும் கோவிலுக்கு மாலை நேரத்தில் சென்றேன் .
- வளிமண்டல காற்று பெற மரம் நட்டு வாளி நிறைய தண்ணீர் ஊற்றுவோம் .
- தீய பழக்கங்களை விட்டு விடு; வீடு சென்று மகிழ்ச்சியாக இரு
III. அகராதியில் கண்டு பொருள் எழுதுக.
- ஊண் – உணவு
- ஊன் – மாமிசம்
- திணை – உயர்திணை, அஃறிணை போன்ற இலக்கண பாகுபாடு
- தினை – சிறு தானிய வகை
- அண்ணம் – உள் நாக்கு
- அன்னம் – சோறு
- வெல்லம் – கரும்பு சாற்றினால் தயாரிக்கப்படும் இனிப்பு பொருள்
- வெள்ளம் – ஆற்றில் கரைபுரண்டு ஓடுவது வெள்ளம்
நிற்க அதற்குத் தக…
I. கலைச்சொல் அறிவோம்
- செவ்விலக்கியம் – classical literature
- காப்பிய இலக்கியம் – Epic literature
- பக்தி இலக்கியம் – Devotional literature
- பண்டைய இலக்கியம் – Ancient literature
- வட்டார இலக்கியம் – Regional literature
- நாட்டுப்புற இலக்கியம் – Folk literature
- நவீன இலக்கியம் – Modern literature
கடிதம் எழுதுக.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
*****************************THE END OF 3.5*********************************
3.6. திருக்குறள்
- நச்சப் படாதவன் – பிறருக்கு உதவி செய்யாதவன்
- கொடுப்பதூஉம், துய்ப்பதூஉம் – இன்னிசை அளபெடைகள்
- கூவிளம் தேமா மலர்
- கூவிளம் புளிமா நாள்
- தேமா புளிமா காசு
- புளிமா தேமா பிறப்பு
II. சிறு வினா
திருக்குறள் – கூடுதல் வினாக்கள்
II. குறு வினா
பலவுள் தெரிக
கருத்துரையிடுக