11th Tamil Guide Unit 6
6.1 காலத்தை வென்ற கலை
11th Standard Tamil Samacheer kalvi Guide, 11th Tamil Unit 6 Book Back Question and answers, Additional Question and answers. 11th Tamil Lesson 6 Book Back Answers. Tamil Nadu State Board Syllabus 11th Tamil Guide Unit 6.
கலையும் அறிவியலும் மனித குல வளர்ச்சியுடன் பின்னிப் பிணைந்தவை. மனிதனின் படைப்புத் திறனால் உருவானது கலையாகும்; அது நம் மனத்தில் அழகுணர்வை ஏற்படுத்தி மகிழ்வையும் தருகிறது. நுண்கலை, பயன்கலை, பருண்மைக்கலை, கவின்கலை, நிகழ்த்துகலை எனப் பலவிதமாய்க் காணப்படுகிறது. கலை ஒரு சமூகத்தின் நாகரிகம் மற்றும் பண்பாட்டு மேன்மையைப் பிரதிபலிக்கின்றது. தமிழகத்தில் பழங்காலத்திலேயே சிற்பம், கட்டடம், ஆடல், பாடல் முதலிய கலைகள் சிறப்புற்றிருந்தன. ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாகக் காட்சியளிக்கும் தஞ்சைப் பெரிய கோவிலின் கட்டடக் கலைநுட்பம் நம்மை வியப்படையச் செய்கிறது..
பலவுள் தெரிக
1.கூற்று 1 : தந்சைப் பெரியகோவிலிலுள்ள ஓவியங்களை எஸ். கே. கோவிந்தசாமி கண்டறிந்தார்.
கூற்று 2 : அங்குள்ள சோழர்காலத்து ஓவியங்கள், ஃப்ரெஸ்கோ வகையைச் சார்ந்தவை
அ) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
ஆ) கூற்று இரண்டும் தவறு
இ) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
ஈ) கூற்று இரண்டும் சரி
Answer:
ஈ) கூற்று இரண்டும் சரி
- 11ஆம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த முதலாம் இராசராச சோழன் தஞ்சைப் பெரிய கோவிலை 1003ஆம் ஆண்டு தொடங்கி 1010 ஆம் ஆண்டுவரை கட்டினான் 2010இல் இக்கோவிலின் 1000வது ஆண்டு நிறைவடைந்தது.
குறுவினாக்கள்
1.இந்தியக் கட்டடக் கலையின் மூன்று வகைகள் யாவை?
Answer:
நாகரம், வேசரம், திராவிடம்.
2.ஒலோகமாதேவீச்சுரம் கோவில் கல்வெட்டில் காணலாகும் பெண் அதிகாரிகளின் பெயர்களிலிருந்து நீங்கள் அறிவது யாவை?
Answer:
ஒலோகமாதேவீச்சுரம் கோவில் கல்வெட்டில் எருதந் குஞ்சர மல்லி’ என்ற பெண் அதிகாரி பற்றியும், இன்னொரு கல்வெட்டில் ‘சோமயன் அமிர்தவல்லி’ என்ற பெண் அதிகாரி பற்றியும் குறிப்புகள் உள்ளன.
இதனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, பெண்கள் அதிகாரிகளாகப் படைரிந்தனர் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.
சிறுவினா
1.ஃப்ரெஸ்கோ ஓவியங்கள், கற்றளிக் கோவில்கள் குறித்து நீவிர் அறிவன யாவை?
ஃபிரெஸ்கோ ஓவியங்கள் : * ‘ஃபிரெஸ்கோ’ என்னும் இத்தாலியச் சொல்லிற்குப் ‘புதுமை’ என்று பொருள். சுண்ணாம்புக் காரைப்பூச்சுமீது, அதன் ஈரம் காயும்முன் வரையப்படும் பழமையான ஓவியக் கலைநுட்பம்.
ஃபிரெஸ்கோ வகை ஓவியங்களை அஜந்தா, எல்லோரா, சித்தன்னவாசல் முதலான இடங்களில் காணலாம்.
கற்றளிக் கோவில்கள் :
செங்கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிக் கோவில் கட்டுவதுபோல், கருங்கற்களை அடுக்கிக் கோவில் கட்டுவது ‘கற்றளி’ எனப்படும். மகாபலிபுரம் கடற்கரைக்கோவில், காஞ்சி கைலாச நாதர்கோவில், பனைமலைக்கோவில் ஆகியவை, கற்றளிக் கோவில்களுக்குச் சான்றுகளாகும்.
கட்டடக் கலை என்பது உறைந்துபோன இசை
-பிரடிரிகா வொன்ஸ்லீவிங்
நெடுவினா
1.‘கல்லும் கதை சொல்லும்’ – என்னும் தொடர், தஞ்சைப் பெரிய கோவிலுக்குப் பொருந்துவதை விளக்கி எழுதுக.
காலத்தை வென்று நின்ற கலை :
ஒரு சமூகத்தின் நாகரிகம், பண்பாட்டு மேன்மைகளைப் பிரதிபலிப்பது கலை. தஞ்சைப் பெரிய கோவில், தமிழ்ச் சமுதாயத்தின் கலையாற்றலுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. அந்தக் கருங்கல் கலைச்செல்வம், தமிழரின் வரலாற்றுப் பெருமைகளை இன்றளவும் கதையாகக் கூறிக் கொண்டிருக்கிறது. தஞ்சையில் அமைந்துள்ள கோவில், இராசராச சோழனால் 11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கருங்கற்களே இல்லாத நிலப்பரப்பில், கருங்கற் கொண்டு 216 அடி உயரம் உடையதாகவும், கருவறை விமானம், 13 தளங்களை உடையதாகவும் கட்டப்பட்டது.
கதை சொல்லும் கல்வெட்டு :
சுற்றுச்சுவரில் அமைந்துள்ள கல்வெட்டுச் செய்திகள், எண்ணற்ற பழமையான வரலாற்றைக் கூறுகின்றன. கதை சொல்லும் அந்தக் கல் இசை, நடனம், நாடகம் எனப் பல அருங்கலைகளைப் பேணி வளர்த்த செய்தியைத் தன்னுள் கொண்டுள்ளது. பஞ்ச காலத்தில் மக்களுக்கு உதவும் தானியக் கிடங்குகளைத் தன்னிடம் கொண்டிருந்ததை அறிய முடிகிறது. கருவூலமாக, மருத்துவமனையாக, படைவீரர் தங்கும் கூடமாகக் கோவில் பயன்பட்ட கதைகளைக் கேட்டறிய முடிகிறது.
கோவில் உருவான கதையைக் கூறுகிறது :
கோவிலை உருவாக்க மக்களும் அதிகாரிகளும் செயல்பட்டதைக் கதைபோல் எண்ணிப் பார்க்கச் செய்கிறது. இராசராசன் அமைத்த கோவிலின் முன்வாயில்கள் எண்ணற்ற வரலாற்றுக் கதைகளைக் கூறுகின்றன.
ஓவியங்கள் கூறும் கதை :
கோவிலின் கருவறைத் தளங்களில் உள்ள சுற்றுக்கட்டம், சாந்தார நாழிகைப் பகுதிச் சுவர்களில், தட்சிணாமூர்த்தி ஓவியம், சுந்தரர் வரலாறு, திரிபுராந்தகர் ஓவியம் முதலியவற்றைப் பெரிய அளவில் வரைந்து வைத்துள்ளதை, இன்றளவும் காணமுடிகிறது. கோவல் கட்டுவதில் புதிய மரபு படைத்த இராசராசன் அமைத்த சிலைவடிவங்கள், வண்ண ஓவியங்கள் என யாவும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர் கலை வளர்த்ததைக் கதைகதையாக இன்று இந்தப் பெரிய கோவில் நமக்குக் கூறுகிறது.
கல் சொல்லும் கதை :
ஆண்களே அன்றிப் பெண்களும் அதிகாரிகளாகப் பணி புரிந்த செய்தியைக் கல்வெட்டுகள் கதைபோல் பாதுகாத்து வைத்துள்ளன. தஞ்சை பெரிய கோவிலை ஒருமுறை காணும்போது, கல்லும் கதை சொல்லும்’ என்பது தெளிவாகப் புலப்படும்.
ஃப்ரெஸ்கோ ஓவியங்கள்
ஃப்ரெஸ்கோ என்ற இத்தாலியச் சொல்லுக்குப் புதுமை என்று பொருள். சுண்ணாம்புக் காரைப்பூச்சு மீது அதன் ஈரம் காயும் முன் வரையப்படும் பழமையான ஓவியக் கலைநுட்பம் இது. இவ்வகை ஓவியங்களை அஜந்தா, எல்லோரா, சித்தன்னவாசல் போன்ற இடங்களிலும் காணலாம்.
கூடுதல் வினாக்கள்
2.மனிதகுல வளர்ச்சியுடன் பின்னிப் பிணைந்தவை
அ) கல்வியும் தொழிலும்
ஆ) கல்வியும் கலையும்
இ) கலையும் அறிவியலும்
ஈ) தொழிலும் அறிவியலும்
Answer:
இ) கலையும் அறிவியலும்
3.ஒரு சமூகத்தின் நாகரிகத்தையும் பண்பாட்டு மேம்பாட்டையும் பிரதிபலிப்பது ……………
அ) கல்வி
ஆ) அறிவியல்
இ) கோவில்
ஈ) கலை
Answer:
ஈ) கலை
4.கட்டடக் கலை என்பது, ‘உறைந்து போன இசை’ என்று கூறியவர் …………………
அ) எஸ். கே. கோவிந்தசாமி
ஆ) ஃப்ரெஸ்கோ
இ) ஷூல்ஸ்
ஈ) பிரடிரிகா வொன்ஸ்லீ விங்
Answer:
ஈ) பிரடிரிகா வொன்ஸ்லீ விங்
5.தஞ்சைப் பெரிய கோவில் கோபுரங்களில் உயரமானது………………
அ) இராசராசன் திருவாயில் கோபுரம்
ஆ) கேரளாந்தகன் திருவாயில் கோபுரம்
இ) மதுராந்தகன் கோபுரம்
ஈ) இராசராசன் கோபுரம்
Answer:
ஆ) கேரளாந்தகன் திருவாயில் கோபுரம்
6.‘தட்சிண மேரு’ என அழைக்கப்படுவது –
அ) காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில்
ஆ) திருவில்லிபுத்தூர் கோவில்
இ) தஞ்சைப் பெரிய கோவில்
ஈ) ஓலோகமாதேவிச்சுரம் கோவில்
Answer:
இ) தஞ்சைப் பெரிய கோவில்
7.செங்கற்களாலான எழுபத்தெட்டுக் கோவில்களைக் கட்டியவன் ………….
அ) முதலாம் மகேந்திரவர்மன்
ஆ) இராசசிம்மன்
இ) இரண்டாம் குலோத்துங்க சோழன்
ஈ) சோழன் செங்கணான்
Answer:
ஈ) சோழன் செங்கணான்
8.‘இராசசிம்மேச்சுரம்’ என அழைக்கப்படும் கோவில் ……………
அ) திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில்
ஆ) தஞ்சைப் பெரிய கோவில்
இ) காஞ்சி கைலாசநாதர் கோவில்
ஈ) தாராசுரம் ஐராவதேசுவரர் கோவில்
Answer:
இ) காஞ்சி கைலாசநாதர் கோவில்
9.இராசராசனுக்குப் பெரியதொரு கோவிலைக் கட்ட வேன்டுமென்ற எண்ணத்தைத் தூண்டிய கோவில் ………….
அ) தில்லைக் கோவில்
ஆ) குற்றாலநாதர் கோவில்
இ) திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்
ஈ) காஞ்சி கைலாசநாதர் கோவில்
Answer:
ஈ) காஞ்சி கைலாசநாதர் கோவில்
10.ஃப்ரெஸ்கோ வகை ஓவியங்கள் காணப்படும் இடம்……………
அ) காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவில்லிபுத்தூர்
ஆ) தஞ்சாவூர், அஜந்தா, திருவில்லிபுத்தூர்
இ) அஜந்தா, எல்லோரா. சித்தன்னவாசல்
ஈ) காஞ்சிபுரம், எல்லோரா, சித்தன்னவாசல்
Answer:
இ) அஜந்தா, எ மோரா, சித்தன்னவாசல்
11.தஞ்சைப் பெரிய கோவிலில் அமைந்த கட்டடக்கலைப் பாணி ……………
அ) நாகர கலைப்பாணி
ஆ) வேசர கலைப்பாணி
இ) திராவிட கலைப்பாணி
ஈ) மாயன் கலைப்பாணி
Answer:
இ) தராவிட கலைப்பாணி
12.தஞ்சை பெரிய கோவிலில் உள்ள ஓவியங்களைக் கண்டறிந்தவர் ……………
அ) எஸ்.கே.கோவிந்தசாமி
ஆ) பி. கே. கோவிந்தசாமி
12) வி. கே. கோவிந்தராஜன்
ஈ) எம். எஸ். கோவிந்தராஜன்
Answer:
அ) எஸ்.கே.கோவிந்தசாமி
13.‘கற்றளி’க் கோவிலை முதன்முதலில் உருவாக்கியவர்……………
அ) முதலாம் நரசிம்மவர்மன்
ஆ) இராசராசசோழன்
இ) இரண்டாம் நரசிம்மவர்மன்
ஈ) மகேந்திரவர்மன்
Answer:
இ) இரண்டாம் நரசிம்மவர்மன்
14.காஞ்சி கைலாசநாதர் கோவிலை அமைத்த மன்னன்……………
அ) மகேந்திரவர்மன்
ஆ) இராசசிம்மன்
இ) நரசிம்மவர்மன்
ஈ) இராசராசன்
Answer:
ஆ) இராசசிம்மன்
15.குடைவரைக் கோவில்களை அமைத்தவன் ……………
அ) இராசசிம்மன்
ஆ) முதலாம் மகேந்திரவர்மன்
இ) இரண்டாம் நரசிம்மன்
ஈ) இராசராச சோழன்
Answer:
ஆ) முதலாம் மகேந்திரவர்மன்
16.தஞ்சைப் பெரிய கோவிலை இராசராசன்தான் கட்டினான் என உறுதி செய்தவர் ……………
அ) இத்தாலி ஃப்ரெஸ்கோ
ஆ) ஜெர்மனி அறிஞர் ஷூல்ஸ்
இ) எஸ். கே. கோவிந்தசாமி
ஈ) கோவலூர் உடையான்
Answer:
ஆ) ஜெர்மனி அறிஞர் ஷூல்ஸ்
17.தமிழக அரசின் சின்னம்……………
அ) ஆலமரம்
ஆ) கோவில் நந்தி
இ) கோவில் கோபுரம்
ஈ) திருவாயில்
Answer:
இ) கோவில் கோபுரம்
18.இரண்டு கோபுரங்களைக் கட்டும் புதிய மரபைத் தோற்றுவித்தவர் ……………
அ) நாயக்க மன்னர்
ஆ) பல்லவர்
இ) குலோத்துங்கன்
ஈ) இராசராசன்
Answer:
ஈ) இராசராசன்
19.நான்கு கோபுரங்கள் எழுப்பும் மரபைத் தொடங்கியவன் ……………
அ) இரண்டாம் நரசிம்மவர்மன்
ஆ) இரண்டாம் குலோத்துங்க சோழன்
இ) இரண்டாம் இராசராசன்
ஈ) இரண்டாம் மகேந்திரவர்மன்
Answer:
ஆ) இரண்டாம் குலோத்துங்க சோழன்
20.பெரிய கோவிலில் காணப்படும் பெரிய நந்தியும் மண்டபமும்,……………காலத்தில் கட்டப்பட்டவை.
அ) சோழர்
ஆ) சேரர்
இ) பல்லவர்
ஈ) நாயக்கர்
Answer:
ஈ) நாயக்கர்
21.புகழ்பெற்ற கோவில்களில் மிக உயர்ந்த கோபுரங்களை எழுப்பியது……………
அ) சோழ அரசு
ஆ) பல்லவ அரசு
இ) பாண்டிய அரசு
ஈ) விஜயநகர அரசு
Answer:
ஈ) விஜயநகர அரசு
22.‘ஒலோகமாதேவீச்சுரம்’ கோவிலைத் திருவையாற்றில் கட்டியவர் ……………
அ) எருதந் குஞ்சர மல்லி ,
ஆ) சோமயன் அமிர்தவல்லி
இ) ஒலோகமாதேவி
ஈ) குந்தவைதேவி
Answer:
இ) ஒலோகமாதேவி
23.‘ஒலோகமாதேவீச்சில் கோவில் கல்வெட்டால் அறியப்படும் பெண் அதிகாரிகள்……………
அ) குந்தவை, ருதஞ் குஞ்சர மல்லி
ஆ) சோமயின் அமிர்தவல்லி , குந்தவை
இ) எருதந் குஞ்சர மல்லி, சோமயன் அமிர்தவல்லி
ஈ) ஓவோகமாதேவி, எருதந் குஞ்சர மல்லி
Answer:
இ) எருதந் குஞ்சர மல்லி, சோமயன் அமிர்தவல்லி
24.சரியான விடையைத் தெரிவு செய்க.
இந்தியக் கட்டடக் கலையின் மூன்று வகை ……………
அ) நாகரம்
ஆ) வேசரம்
இ) தட்சிணம்
ஈ) திராவிடம்
1. அ, ஆ, இ
2. அ, ஆ, ஈ
3. ஆ, இ, ஈ
4. அ, இ, ஈ
Answer:
2. அ, ஆ, ஈ
25.சரியான விடையைத் தெரிவு செய்க.
அ) தஞ்சாவூர் – 1. கடற்கரைக் கோவில்
ஆ) மகாபலிபுரம் – 2. ஒலோகமாதேவீச்சுரம்
இ) காஞ்சிபுரம் – 3. தட்சிண மேரு
ஈ) திருவையாறு – 4. கைலாசநாதர் கோவில்
அ) அ – 1, ஆ – 2, இ – 3, ஈ – 4
ஆ) அ – 3, ஆ – 1, இ – 4, ஈ – 2
இ) அ – 2, ஆ – 4, இ – 1, ஈ – 3
ஈ) அ – 4, ஆ – 3, இ – 2, ஈ – 1
Answer:
ஆ) அ – 3, ஆ – 1, இ – 4, ஈ – 2
26.சரியான விடையைத் தெரிவு செய்க.
1) ‘தட்சிண மேரு’ என்பது – அ. வாயில்களின்மேல் அமைவது
2) ‘விமானம் என்பது – ஆ. தானியக் கிடங்கு
3) ‘கோபுரம்’ என்பது – இ. தஞ்சைப் பெரிய கோவில்
4) ‘கற்றளி’ என்பது – ஈ. அகநாழிகைமேல் அமைக்கப்படுவது
உ. கருங்கற்களை அடுக்கிக் கட்டுவது
அ) 1 – ஆ, 2 – இ, 3 – ஈ, 4 – உ
ஆ) 1 – உ , 2 – இ, 3 – ஆ, 4 – ஈ
இ) 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – உ
ஈ) 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ
Answer:
இ) 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – உ
27.பொருத்துக.
1. வளர்க்கப்பட்ட அருங்கலைகள் – அ. பஞ்சகாலத்தில் மக்களுக்கு -வ.
2. கல்வெட்டுகளாகப் பொறிக்கப்பட்டவை – ஆ. போர்க்காலத்தில் படை பரர்களுக்கு.
3. தானியக் கிடங்குகள் – இ. மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய செய்திகள்.
4. தங்கும் இடம் – ஈ. மக்கள் ஒன்று டும் இடம்.
– உ. இசை, நடனம், நாடகம்.
Answer:
1 – உ, 2 – இ, 3 – அ, 4 – ஆ
கூடுதல் குறுவினாக்கள்
4.கோபுரம், விமானம் – வேறுபாடு என்ன?
Answer:
நுழைவு வாயிலின்மேல் அமைக்கப்படுவது கோபுரம். –
கருவறை’ என்னும் அகநாழிகையின்மேல் அமைக்கக் வெது விமானம்.
5.பிற்காலச் சோழர்களின் தனி அடையாளம் எது? .
Answer:
தஞ்சைப் பெரிய கோவிலில் முதலில் உள்ள கேரளாந்தகன் திருவாயில், அடுத்து உள்ள இராசராசன் திருவாயில் ஆகிய இரண்டு வாயில்களிலும் கோபுரங்கள் உள்ளன. இவை பிற்காலச் சோழர்களின் சிறப்பான தனி அடையாளங்கள்.
6.கற்றளிக் கோவில்கள் சிலவற்றைக் கூறுக.
Answer:
மகாபலிபுரம் கடற்கரைக் கோவில், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில், பனைமலைக் கோவில், தஞ்சைப் பெரிய கோவில் ஆகியன, கற்றளிக் கோவில்களாகும்.
7.‘கற்றளி’க் கோவிலை முதலில் உருவாக்கியவன் யார்?
Answer:
கருங்கற்களை ஒன் என் மேல் ஒன்றாக அடுக்கிக் ‘கற்றளி’க் கோவிலை கி.பி. ஏழாம் நூற்றாண்டில், இரண்டாம் நரசிம் வம் பல்லவ மன்னன் உருவாக்கினான்.
8.பழங்காலத்தில் கோவில்கள் எப்படிக் கட்டப்பட்டன?
Answer:
பழங்காலத்தில் கோவில்களை மண்ணால்கட்டி, மேலே மரத்தால் சட்டகம் இட்டனர்.
அவற்றின் மேல் செப்பு, பொன் தகடுகளைக் கூரையாக வேய்ந்தனர்.
அடுத்து, செங்கற்களை அடுக்கிக் கோவில்களைக் கட்டினர்.
9.தடைவரைக் கோவில் என்பது யாது?
Answer:
செங்கல், சுண்ணாம்பு, மரம், உலோகம் முதலானவற்றைப் பயன்படுத்தாமல், மலைகளைக் குடைந்து அமைக்கப்பட்ட கோவில், குடைவரைக் கோவிலாகும்.
கோவிலை எடுப்பித்தவர்கள் பற்றிய கல்வெட்டில்,
நாம் கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும், கொடுப்பார் கொடுத்தனவும் இந்த கல்லிலே வெட்டி அருள்க....என்று கோவில் கட்ட உதவியவர்கள் சிறப்பிக்கப்பட்டுள்ளனர். தான் மட்டுமே பங்களிக்காமல் மற்றவர்களின் உதவியையும் பெற்றதோடு அதனைக் கல்வெட்டாகவும் ஆவணப்படுத்தியிருக்கும் இராசராசனின் பாங்கு போற்றத்தக்கது. தனக்கு அடுத்தபடியான இடத்தைத் தன் தமக்கை குந்தவை தேவிக்கு (அக்கன்) அளித்துள்ளார். அடுத்து, பெண்டு என்னும் சொல்லால் அவருடைய மனைவியர் கொடுத்த கொடையைக் குறிப்பிடுவதோடு கொடுப்பார் கொடுத்தனவும் என்று சொல்வதன் மூலம் இராசராசன், மற்றவர்களின் கொடையையும் உலகம் அறியும்படி செய்துள்ளார்.
கூடுதல் சிறுவினா
2.கற்றளிக் கோவில்கள் என்றால் என்ன? எடுத்துக்காட்டுகள் தருக.
Answer:
செங்கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டுவதைப்போல் கருங்கற்களை அடுக்கிக் கட்டுவதற்குக் ‘கற்றளி’ என்று பெயர். இவ்வடிவத்தை ஏழாம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் இரண்டாம் நரசிம்மவர்மன் உருவாக்கினான்.
மகாபலிபுரம் கடற்கரைக் கோவில், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில், பனைமலைக்கோயில் ஆகியவற்றைக் கற்றளிக் கோவில்களுக்கு உதாரணங்களாகச் சொல்லலாம்.
அந்தவகையில் இராசராசசோழன் கட்டியது மிகப் பெரிய கற்றளிக் கோவிலாகும். தட்சிணமேரு’ என இராசராசனால் பெருமையுடன் அழைக்கப்பட்ட தஞ்சைப் பெரியகோவில் நம் நாட்டிலுள்ள கற்றளிக் கோவில்களில் பெரியதும் உயரமானதுமாகும்.
3.கோவில்கள் வெறும் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல – நிறுவுக.
Answer:
பெரிதாகக் கட்டப்பட்ட தமிழகக் கோவில்கள், வெறும் வழிபாட்டுத் தலங்களாக மட்டும் இல்லை.
இசை, நடனம், நாடகம் முதலான அருங்கலைகள், அக்கோவில்களால் போற்றி வளர்க்கப்பட்டன.
மக்கள் ஒன்றுகூடும் இடங்களாகக் கோவில்கள் இருந்ததனால், மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய செய்திகள் அனைத்தையும் கல்வெட்டுகளாகப் பறித்தனர்.
பஞ்சம் ஏற்படும் காலத்தில், மக்களுக்கு உதவுவதற்காகத தானியக் கிடங்குகளையும் கோவில்களில் அமைத்திருந்தனர். கருவூலமாகவும், மருத்துவமனையாகவும், போர்க்காலங்களில் படைவீரர்கள் தங்கும் இடமாகவும் கோவில்கள் பயன்பட்டன.
4.தஞ்சைப் பெரிய கோவில் விமான அமைப்பின் ( சிலப்பினை விளக்குக.
Answer:
கற்றளிக் கோவில்களிலேயே மிகமிக உர மானதும் பெரியதும் தஞ்சைப் பெரிய கோவிலாகும். முழுவதும் கருங்கற்களை ஒன்றன் (மல் ஒன்றாக அடுக்கிக் கட்டப்பட்ட கோவில் இது.
ஏறத்தாழ ஆறு ஆண்டுகள் முயன்று, இராசராச சோழனால் இது கட்டி முடிக்கப்பட்டது.
இக்கோவில் கருவறை விமானம், 216 அடி உயரத்தையும், 13 தளங்களையும் கொண்டுள்ளது.
இதனை இராசராசன், தினைமேரு’ எனப் பெருமையுடன் அழைத்தான்.
5.கோவில் கோபுரம் அமைக்கும் மரபு குறித்து எழுதுக.
Answer:
பழமையான கோவில்களில் கோபுரங்கள் சிறியனவாக இருந்தன. வெளிக்கோபுரம் உயரமாகவும், உள்கோபுரம் உயரம் குறைவாகவும் இரண்டு கோபுரம் அமைக்கும் மரபை இராசராசன் தோற்றுவித்தான்.
12ஆம் நூற்றாண்டில் கோபுரங்கள் அமைப்பு, தனிச்சிறப்புப் பெற்றது. நான்கு புறங்களில், நான்கு கோபுரங்கள் எழுப்பும் மரபு, இரண்டாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் தொடங்கியது.
புகழ்பெற்ற கோவில்கள் பலவற்றில் மிக உயரமான கோபுரங்களை எழுப்பியது விஜயநகர அரசு. ‘கோபுரங்களின் கீழ்ப்பகுதி கருங்கல்லாலும், மேற்பகுதி செங்கற்களாலும் கட்டி இருப்பர்.
காஞ்சி, தில்லை, திருவண்ணாமலை, திருவரங்கம், மதுரை ஆகிய இடங்களிலுள்ள கோவில் கோபுரங்கள், நூற்றைம்பது அடி உயரத்திற்குமேல் இருக்கும்.
6.‘கலை’ என்பது குறித்து நீ அறிவன யாவை?
Answer:
மனிதனின் படைப்புத் திறனால் உருவானது கலை. கலை, நம் மனத்தில் அழகுணர்வைத் தூண்டி மகிழ்ச்சியைத் தருகிறது. நுண்கலை, பயன்கலை, பருண்மைக்கலை, கவின்கலை, நிகழ்த்துகலை எனப் பலவிதமாகப் பிரிப்பர்.
கலை என்பது, ஒரு சமூகத்தின் நாகரிகத்தையும் பண்பாட்டு மேன்மையையும் பிரதிபலிக்கிறது.
சிற்பம், கட்டடம், ஆடல், பாடல் முதலான கலைகளில், தமிழகம் பழங்காலத்திலேயே சிறப்புற்றிருந்தது.
விடைக்கேற்ற வினா அமைக்க.
1. கலை, ஒரு சமூகத்தின் நாகரிகம் மற்றும் பண்பாட்டு மேன்மையைப் பிரதிபலிக்கிறது.
வினா : கலை, எவற்றைப் பிரதிபலிக்கிறது?
2. தஞ்சைப் பெரிய கோவிலின் கட்டடக் கலைநுட்டம் நம்மை வியப்படையச் செய்கிறது.
வினா : எக்கோவிலின் கட்டடக் கலைநுட்பம், நம்மை வியப்படையச் செய்கிறது?
3. கருவறையை அகநாழிகை என்று அழைப்பார்கள்.
வினா : எதனை அகநாழிகை என் அழைப்பார்கள்?
4. தஞ்சைப் பெரிய கோவில், நம் நாட்டிலுள்ள கற்றளிக் கோவில்களிலேயே பெரியதும் உயரமானதும் ஆகும்.
வினா : நம் நாட்டிலுள்ள கறளிக் கோவில்களிலேயே பெரியதும் உயரமானதும் எது?
5. பஞ்ச காலத்தில் மக்களுக்கு உதவுவதற்காகத் தானியக் கிடங்குகளும் கோவிலுக்குள் அமைக்கப் பட்டிருந்தன.
வினா : கோவிலுக்குள் தானியக் கிடங்குகளும் எதற்காக அமைக்கப்பட்டிருந்தன?
6. தஞ்சைப் பெரிய கோவில் எண்பட்டை வடிவில் கட்டப்பட்ட திராவிடக் கலைப்பாணியாகும்.
வினா : (தஞ்சைப் பெரிய கோவில் எப்படிக் கட்டப்பட்ட வடிவு கலைப்பாணி எவை?
7. ஃப்ஸ்கோ என்ற இத்தாலியச் சொல்லுக்குப் ‘புதுமை’ என்று பொருள்.
விரை : எந்த இத்தாலியச் சொல்லுக்குப் புதுமை’ என்று பொருள்?
8. காலாற்றைப் படைத்த நமக்கு அதனைப் பாதுகாக்கத் தெரியவில்லை.
வினா : வரலாற்றைப் படைத்த நமக்கு, எது தெரியவில்லை?
9. கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம், திரிபுவனம் ஆகிய இடங்களில் இரண்டு வாயில்கள் இருப்பதைப் பார்த்திருக்கிறோம்.
வினா : கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம், திரிபுவனம் ஆகிய இடங்களில் எதனைப் பார்த்திருக்கிறோம்.
10. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, பெண்கள் அதிகாரிகளாகப் பணிபுரிந்திருக்கின்றனர் என்பது,
ஆச்சரியமாக இருக்கிறது. வினா : ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆச்சரியமாக இருக்கிறது என்பது எது?
11. தான் மட்டுமே பங்களிக்காமல், மற்றவர்களின் உதவியையும் பெற்றதோடு, அதனைக் கல்வெட்டாகவும் ஆவணப்படுத்தி இருக்கும் இராசராசனின் பாங்கு போற்றத்தக்கது.
வினா : இராசராசன், எதனை ஆவணப்படுத்திய பாங்கு போற்றத்தக்கதாகும்?
கருத்துரையிடுக