10th Tamil Guide 9 Unit
10th Stndard Tamil Unit 9 Book Back Answers and Additional Question and
Answers. 10th Standard Samacheer kalvi guide. 10th Tamil Lesson 9 book
back answers. TN STUDENTS Guide. 10th Guide. 10th Tamil Guide.
9.1. ஜெயகாந்தம் (நினைவு இதழ்)
விருதுகள்
-
குடியரசுத் தலைவர் விருது (உன்னைப்போல் ஒருவன்- திரைப்படம்)
-
சாகித்திய அகாதெமி விருது - சில நேரங்களில் சில மனிதர்கள் (புதினம்)
-
சோவியத் நாட்டு விருது (இமயத்துக்கு அப்பால்)
-
ஞானபீட விருது
-
தாமரைத்திரு விருது
I. பலவுள் தெரிக.
1. சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது
- அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்தல்
- பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்
- அறிவியல் முன்னேற்றம்
- வெளிநாட்டு முதலீடுகள்
விடை : பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்
2. கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன் –இக்கூற்றிலிருந்து நாம் புரிந்துகொள்வது:
- தம் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார்
- சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்
- அறத்தைக் கூறுவதற்காக எழுதினார்
- அழகியலுடன் இலக்கியம் படைத்தார்
விடை : தம் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார்
II. குறு வினா
நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு – இத்தொடரை இரு தொடர்களாக்குக.
- நான் எழுதுவதற்குத் தூண்டுதல் ஒன்றுண்டு. நான் எழுதுவதற்குத் தூண்டுதலுக்குரிய காரணமும் ஒன்றுண்டு.
III. சிறு வினா
ஜெயகாந்தன் தம் கதைமாந்தர்களின் சிறந்த கூறுகளைக் குறிப்பிடத் தவறுவதில்லை என்று அசோகமித்திரன் கூறுகிறார். இக்கூற்றை மெய்ப்பிக்கும் செயல் ஒன்றைத் ‘தர்க்கத்திற்கு அப்பால்’ கதை மாந்தர் வாயிலாக விளக்குக.
“தாகத்திற்கு அப்பால்” கதை மாந்தர்:-
- கண்ணில்லாத பிச்சைக்காரன், தர்மம் செய்தவன்
மாந்தர்களின் சிறப்புக் கூறி மெய்பிக்கும் செயல்:-
- இரயில் நிலையத்திற்கு வெளியே இருந்த கண்ணில்லாத பிச்சைகாரனுக்கு இரண்டனாவை அவர் போட்டார். அதை பெற்றுக் கொண்டவர் கைகள் குவித்து “சாமி நீங்க போற வழிக்கெல்லாம் புண்ணியம் உண்டு, என்று வாழ்த்தினான். அந்த பிச்சைக்காரனுக்குத் தர்மம் செய்யமாமல் இருந்திருந்தாலோ அல்லது தரம்ம் செய்ய ஓரணாவை எடுத்துச் சென்றிருந்தாலோ? விபத்துக்குள்ளான இரயிலில் தான் சென்றிருப்பான். தர்மம் தலைகாக்கும் என்பதை தர்மம் செய்தவன் உணர்ந்தான்.
- தர்மம் தந்தவனும் அதைப் பெற்றவனும் மனதார வாழ்த்தும் நன் மாந்தர்களின் சிறப்புக் கூறுகளாகும்.
IV. நெடு வினா
ஜெயகாந்தன் நினைவுச் சிறப்பிதழை, வார இதழ் ஒன்று வெளியிட இருக்கிறது. அதற்கான ஒரு சுவரொட்டியை வடிவமைத்து அளிக்க
ஜெயகாந்தம் (நினைவு இதழ்) – கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. _____________ சாகித்திய அகாதெமி விருது ஜெயகாந்தனின் புதினம்
ஆகும்
விடை : சிலநேரங்களில் சில மனிதர்கள்
2. ஜெயகாந்தன் வாழ்ந்த காலம் _________ முதல் _________வரை ஆகும்.
விடை : 1934 முதல் 2015
3. ஜெயகாந்தன் _________ என சிறப்பு பெயர் பெற்றவர்
விடை : சிறுகதை மன்னன்
4. ஜெயகாந்தன் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு _________
விடை : 1972
II. சிறு வினா
1. ஜெயகாந்தன் பெற்ற விருதுகள் யாவை?
- குடியரசுத்தலைவர் விருது
- சாகித்திய அகாதெமி விருது
- சோவியத் நாட்டு விருது
- ஞானபீட விருது
- தாமரைத்திரு விருது
2. அசோக மித்திரன் பார்வையில் ஜெயகாந்தன் பற்றி எழுதுக
- ஜெயகாந்தன், எத்தகைய பாத்திரங்களைப் படைத்தாலும் அந்த பாத்திரங்களின் சிறந்த அம்சங்களை குறிப்பிடத் தவறுவதில்லை.
- துவேஷத்தைப் பரப்புவது, அவருடைய இயல்புக்கு சற்று ஒவ்வாது, அவர் அரசியிலில் தொடர்நது பங்கு பெறமால் போனதற்கு இதுகூட காரணமாக இருந்திருக்கலாம்.
3. கா.செல்லப்பன் பார்வையில் ஜெயகாந்தன் பற்றி எழுதுக
- நேர்கொண்ட ஆனால் வித்தியாசமான பார்வை.
- நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள், திமரிந்த ஞானச் செருக்கு, கம்பீரமானக குரல், வளமான, புதுமையான வாழ்க்கைச் சித்தரிப்புகள் – இவைகள் தாம் ஜெயகாந்தன் என்ற செம்மாந்த தமிழினின் சிறப்பான அடையாளங்கள்.
- படிக்காத மேதை என குறிப்பிடப்படும் அவர், முறையாகக் கல்லூரிகளில் படிக்கவில்லையே தவிர, தமிழ், இந்திய இலக்கியங்களை மட்டுமன்றி, சோவியத் பிரஞ்சு இலக்கியங்களை தானே படித்து உணர்ந்தத மட்டுமன்றி, வாழ்க்கையும் ஆழமாகப் படித்தவர் பிறகு அவற்றை வார்த்தைகளில் அழகுறப் படைத்தவர்.
4. ஜெயகாந்தன் எழுதிய சிறுகதைத் தொகுப்பு யாவை?
- குருபீடம்
- யுகசாந்தி
- ஒரு பிடி சோறு
- உண்மை சுடும்
- இனிப்பும் கரிப்பும்
- தேவன் வருவாரா
- புதிய வார்ப்புகள்
5. ஜெயகாந்தன் எழுதிய குறும்புதினங்கள் யாவை?
- பிரளயம்
- கைவிலங்கு
- ரிஷிமூலம்
- பிரம்ம உபதேசம்
யாருக்காக அழுதான்?
- கருணையினால் அல்ல
- சினிமாகவுக்குப் போன சித்தாளு
6. ஜெயகாந்தன் எழுதிய புதினங்களை எழுதுக.
- பாரீசுக்குப் போ
- சுந்தர காண்டம்
- உன்னைப் போல் ஒருவன்
- கங்கை எங்கே போகிறாள்
- ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
- இன்னும் ஒரு பெண்ணின் கதை
- ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
7. ஜெயகாந்தன் மொழிபெயர்ப்பு நூல்களை எழுதுக.
- வாழ்விக்க வந்த காந்தி, ஒரு கதாசிரியனின் கதை
8. ஜெயகாந்தன் திரைப்படமான படைப்புகளை எழுதுக.
- சில நேரங்களில் சில மனிதர்கள்
- ஒரு நடிகை நாடகம் பார்க்கிறார்
- ஊருக்கு நூறு பேர்
- உன்னைப் போல் ஒருவன்
- யாருக்காக அழுதான்
9. ஜெயகாந்தன் பார்வையில் சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனை எது? மிகப்பெரிய சவால் எது?
- ஜெயகாந்தன் பார்வையில் சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனை பெற்ற சுதந்திரத்தை பேணிக்காத்தது. மிகப்பெரிய சவாலும் அதுதான்
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1.மனிதம் தோய்ந்த எழுத்தாளுமை மிக்கவர்……………………..
அ) ஜெயகாந்தன்
ஆ) ஜெயமோகன்
இ) புதுமைப்பித்தன்
ஈ) சுஜாதா
Answer:
அ) ஜெயகாந்தன்
2.சாகித்திய அகாதெமி விருதுபெற்ற ஜெயகாந்தனின் புதினம்……………………..
அ) கங்கை எங்கே போகிறாள்
ஆ) யாருக்காக அழுதாள்
இ) சில நேரங்களில் சில மனிதர்கள்
ஈ) இமயத்துக்கு அப்பால்
Answer:
இ) சில நேரங்களில் சில மனிதர்கள்
3.தர்மார்த்தங்களை உபதேசிக்கவே…………………….. பாரதத்தை எழுதியவர்.
அ) வியாசர்
ஆ) கம்பர்
இ) வில்லிபுத்தூரார்
ஈ) பாரதியார்
Answer:
அ) வியாசர்
4.“நாற்பொருட் பயத்தலொடு” – இதில் ‘நாற்பொருட்’ என்பது ……………………..
அ) அறம், மானம், கல்வி, புகழ்
ஆ) அறம், பொருள், இன்பம், வீடு
இ) அறம், மறம், மானம், புகழ்
ஈ) புகழ், கல்வி, வீரம், பெருமை
Answer:
ஆ) அறம், பொருள், இன்பம், வீடு
5.கலைப்பணி என்றாலே அதனுள் அடங்குவது……………………..
அ) மானுடம்
ஆ) சமூகப்பார்வை
இ) நன்னெறி
ஈ) நாட்டுப்பற்று
Answer:
ஆ) சமூகப்பார்வை
6.ஜெயகாந்தன் வாழ்ந்த காலம் ……………………..
அ) 1934-2015
ஆ) 1936-2016
இ) 1939-2017
ஈ) 1940-2018
Answer:
அ) 1934-2015
7.பிரெஞ்சு மொழியில் வந்த “காந்தி வாழ்க்கை வரலாற்றின்” தமிழாக்க நூல்
எது?
அ) உண்மை சுடும்
ஆ) ஒரு கதாசிரியரின் கதை
இ) வாழ்விக்க வந்த காந்தி
ஈ) தேவன் வருவார்
Answer:
இ) வாழ்விக்க வந்த காந்தி
8.முன்சி பிரேம்சந்தின் வாழ்க்கை வரலாறு ……………………..
அ) ஒரு கதாசிரியனின் கதை
ஆ) பிரளயம்
இ) இனிப்பும் கரிப்பும்
ஈ) யுகசந்தி
Answer:
அ) ஒரு கதாசிரியனின் கதை
9.“தர்க்கத்திற்கு அப்பால்” சிறுகதை அமைந்த தொகுப்பு – ……………………..
அ) ரிஷிமூலம்
ஆ) யுகசந்தி
இ) குருபீடம்
ஈ) ஒரு பிடி சோறு
Answer:
ஆ) யுகசந்தி
10.தன்னுடைய படைப்புகளுக்குத் தானே முன்னுரை எழுதும் பழக்கம் உடையவர்
……………………..
அ) மேத்தா
ஆ) சுஜாதா
இ) ஜெயமோகன்
ஈ) ஜெயகாந்தன்
Answer:
ஈ) ஜெயகாந்தன்
11.ஜெயகாந்தன் யாரைப் பற்றி கவிதை எழுதியுள்ளார்?
அ) கண்ண தாசன்
ஆ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இ) புலமைப்பித்தன்
ஈ) வாலி
Answer:
ஆ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
12.சோவியத் நாட்டின் விருது பெற்ற ஜெயகாந்தனின் நூல்……………………..
அ) உன்னைப்போல் ஒருவன்
ஆ) இமயத்துக்கு அப்பால்
இ) புதிய வார்ப்புகள்
ஈ) ஒரு மனிதன் ஒருவீடு ஒரு உலகம்
Answer:
ஆ) இமயத்துக்கு அப்பால்
13.கருத்தாழமும் வாசகச் சுவைப்பும் கலந்து இலக்கியங்கள் படைத்தவர்
……………………..
அ) அகிலன்
ஆ) ஜெயகாந்தன்
இ) புதுமைப்பித்தன்
ஈ) கல்கி
Answer:
ஆ) ஜெயகாந்தன்
14.சமகாலக் கருத்துகளையும் நிகழ்வுகளையும் சமகால மொழியில் சமகால உணர்வில்
தந்தவர்
அ) அகிலன்
ஆ) ஜெயகாந்தன்
இ) புதுமைப்பித்தன்
ஈ) கல்கி
Answer:
ஆ) ஜெயகாந்தன
15.உன்னைப்போல் ஒருவன் – திரைப்படத்திற்காக ஜெயகாந்தன் பெற்ற
விருது……………………..
அ) குடியரசுத்தலைவர் விருது
ஆ) சாகித்ய அகாதெமி விருது
இ) ஞானபீட விருது
ஈ) தாமரைத் திரு விருது
Answer:
அ) குடியரசுத்தலைவர் விருது
16.மாறுபட்ட குழுவினைத் தேர்வு செய்க.
அ) குருபீடம், யுகசந்தி
ஆ) ஒருபிடி சோறு, உண்மை சுடும்
இ) இனிப்பும் கரிப்பும், தேவன் வருவாரா
ஈ) பிரளயம், கைவிலங்கு
Answer:
ஈ) பிரளயம், கைவிலங்கு)
17.கீழ்க்கண்டவற்றுள் ஜெயகாந்தன் சிறுகதைத் தொகுப்பினைக் கண்டறிக.
அ) குருபீடம்
ஆ) பிரளயம்
இ) பாரீசுக்குப்போ
ஈ) ஒரு கதாசிரியரின் கதை
Answer:
அ) குருபீடம்
18.கீழ்க்கண்டவற்றுள் ஜெயகாந்தனின் குறும்புதினத்தைக் கண்டறிக.
அ) குருபீடம்
ஆ) பிரளயம்
இ) பாரீசுக்குப் போ
ஈ) ஒரு கதாசிரியரின் கதை
Answer:
ஆ) பிரளயம்
19.கீழ்க்கண்டவற்றுள் ஜெயகாந்தன் மொழிபெயர்ப்பு நூலினைக் கண்டறிக.
அ) குருபீடம்
ஆ) பிரளயம்
இ) பாரீசுக்குப்போ
ஈ) ஒரு கதாசிரியரின் கதை
Answer:
ஈ) ஒரு கதாசிரியரின் கதை
20.பொருத்துக.
1. தேவன் வருவாரா – அ) குறும்புதினம்
2. சினிமாவுக்குப் போன சித்ததாளு – ஆ) சிறுகதைத் தொகுப்பு
3. சுந்தர காண்டம் – இ) மொழிபெயர்ப்பு
4. வாழ்விக்க வந்த காந்தி – ஈ) புதினம்
அ) 1.இ 2.அ 3.ஈ 4.ஆ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
இ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
21.ஜெயகாந்தனின் திரைப்படம் ஆகாத படைப்பு ஒன்று……………………..
அ) உன்னைப் போல் ஒருவன்
ஆ) ஒரு நடிகை நாடகம் பார்க்கின்றாள்
இ) ஒருபிடி சோறு
ஈ) ஊருக்கு நூறு பேர்
Answer:
இ) ஒருபிடி சோறு
22.சிறுகதை மன்னன் என்று சிறப்பிக்கக்கூடியவர் ……………………..
அ) அகிலன்
ஆ) ஜெயகாந்தன்
இ) புதுமைப்பித்தன்
ஈ) கல்கி
Answer:
ஆ) ஜெயகாந்தன்
23.படிக்காத மேதை என்று கா.செல்லப்பன் குறிப்பிடும் எழுத்தாளர்
……………………..
அ) அகிலன்
ஆ) ஜெயகாந்தன்
இ) புதுமைப்பித்தன்
ஈ) கல்கி
Answer:
ஆ) ஜெயகாந்தன்
24.திரைப்படமான ஜெயகாந்தனின் குறும்புதினம் எது?
அ) உன்னைப் போல் ஒருவன்
ஆ) யாருக்காக அழுதான்
இ) சிலநேரங்களில் சில மனிதர்கள்
ஈ) ஊருக்கு நூறு பேர்
Answer:
ஆ) யாருக்காக அழுதான்
25.ஜெயகாந்தனின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற புதினம்……………………..
அ) உன்னைப் போல் ஒருவன்
ஆ) யாருக்காக அழுதான்
இ) சிலநேரங்களில் சில மனிதர்கள்
ஈ) ஊருக்கு நூறு பேர்
Answer:
இ) சிலநேரங்களில் சில மனிதர்கள்
26.ஜெயகாந்தன் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு ……………………..
அ) 1972
ஆ) 1971
இ) 1975
ஈ) 1978
Answer:
அ) 1972
இன்னுமொரு முகம் (கவிதை)
ஜெயகாந்தன் சில கவிதைகளையும் திரைப்பாடல்களையும் படைத்திருக்கிறார். அவரது
படைப்பாற்றலின் இன்னொரு பக்கம் அது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய
அவரின் கவிதை இது
"எண்ணமும் எழுத்தும் உயர்ந்திருக்கும்-ஏழைகண்ணீரும் பாடலிலே கலந்திருக்கும்பண்ணொடு சந்தமும் பாய்ந்து வரும் - பழையமண்ணின் வாடையும் சேர்ந்து வரும்"
*************THE END OF 9.1************
9.2. சித்தாளு
பொற்காலமாக இருந்தாலும்
இவள் தலையில் எழுதியதோ
கற்காலம்தான் எப்போதும்.
தொலைந்ததே வாழ்வு என
தலையில் கைவைத்து
புலம்புவார் பூமியிலே
தன் வாழ்வு தொலைக்காமல்
தற்காத்து வைப்பதற்காய்
தலையில் கைவைக்கிறாள் இவள்.
வாழ்வில் தலைக்கனம்
பிடித்தவர் உண்டு.
தலைக்கனமே வாழ்வாக
ஆகிப்போனது இவளுக்கு.
அடுக்குமாடி அலுவலகம்
எதுவாயினும்
அடுத்தவர் கனவுக்காக
அலுக்காமல் இவள் சுமக்கும்
செத்தாலும் சிறிதளவே
கற்களெல்லாம்
அடுத்தவேளை உணவுக்காக.
சலனங்கள் ஏற்படுத்தும்
சித்தாளின் மனச்சுமைகள்
செங்கற்கள் அறியாது.
பொற்காலமாக இருந்தாலும்இவள் தலையில் எழுதியதோகற்காலம்தான் எப்போதும்.தொலைந்ததே வாழ்வு எனதலையில் கைவைத்துபுலம்புவார் பூமியிலேதன் வாழ்வு தொலைக்காமல்தற்காத்து வைப்பதற்காய்தலையில் கைவைக்கிறாள் இவள்.வாழ்வில் தலைக்கனம்பிடித்தவர் உண்டு.தலைக்கனமே வாழ்வாகஆகிப்போனது இவளுக்கு.அடுக்குமாடி அலுவலகம்எதுவாயினும்அடுத்தவர் கனவுக்காகஅலுக்காமல் இவள் சுமக்கும்செத்தாலும் சிறிதளவேகற்களெல்லாம்அடுத்தவேளை உணவுக்காக.சலனங்கள் ஏற்படுத்தும்சித்தாளின் மனச்சுமைகள்செங்கற்கள் அறியாது.
I. பலவுள் தெரிக.
1. “இவள் தலையில் எழுதியதோ
கற்காலம்தான் எப்போதும் …” – இவ்வடிகளில் கற்காலம் என்பது
- தலைவிதி
- பழைய காலம்
- ஏழ்மை
- தலையில் கல் சுமப்பது
விடை : தலையில் கல் சுமப்பது
II. குறு வினா
‘வாழ்வில் தலைக்கனம்’, ‘தலைக்கனமே வாழ்வு’ என்று நாகூர்ரூமி யாருடைய வாழ்வைக் குறித்துக் கூறுகிறார்?
- ‘வாழ்வில் தலைக்கனம் (அகந்தை) பிடித்தவர்கள் இடையில் ஏழ்மை காரணமாகித் தலையில் கல் சுமந்து ‘தலைக்கனமாகவே வாழ்கிறாள் சித்தாள்
III. சிறு வினா
1. “சித்தாளின் மனச்சுமைகள்
செங்கற்கள் அறியாது” – இடஞ்சுட்டிப் பொருள் தருக.
இடம் சுட்டல்:-
- “சித்தாளு” என்னும் தலைப்பில் நாகூர் ரூமி எழுதியுள்ள கவிதையில் இவ்வடி இடம் பெற்றுள்ளது
பொருள்:-
- சித்தாளின் துன்பங்களைச் செங்கற்கள் அறிவது இல்லை
விளக்கம்:-
- அடுத்த வேளை உணவுக்காக சுமைகளை இறக்காமல் சுமக்கும் இவர்களின் மரணம் கூட சிறிதளவே சலனத்தை ஏற்படுத்தும்.
- பல இன்னல்களின் நடுவே தன் வாழ்வைத் தொலைக்காதிருக்க சுமை சுமக்கும் சித்தாள்களின் மனச்சுமையைச் செங்கற்களும், கற்களும் அறியாது.
சித்தாளு – கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. நாகூர் ரூமி இயற்பெயர் __________
விடை : முகம்மதுரஃபி.
2. நாகூர் ரூமி __________ பிறந்தவர்.
விடை : தஞ்சை மாவட்டத்தில்
3. __________ என்ற நாவலை நாகூர் ரூமி எழுதியுள்ளார்.
விடை : கப்பலுக்குள் போன மச்சான்
4. நாகூர் ரூமி __________ என்னும் இதழில் முதலில் எழுத
தொடங்கினார்.
விடை : கணையாழி
5. தொழிலாளர்களின் மனச் சுமையை அறியாதது __________ ஆகும்.
விடை : செங்கற்கள்
II. குறு வினா
1. நாகூர் ரூமியின் படைப்புகள் வெளியான இதழ்களை கூறுக
- மீட்சி
- சுபமங்களா
- புதிய பார்வை
- குங்குமம்
- கொல்லிப்பார்வை
- குமுதம்
- இலக்கிய வெளிவட்டம்
2. நாகூர் ரூமி எவ்வகை தளங்களில் இயங்கி வருபவர்?
- கவிதை
- குறுநாவல்
- சிறுகதை
- மொழிபெயர்ப்பு என பலதளங்களில் தொடர்ந்து இயங்கி வருபவர்
3. நாகூர் ரூமியின் கவிதை தொகுதிகள் யாவை?
- நதியின் கால்கள்
- ஏழாவது சுவை
- சொல்லாத சொல் ஆகிய கவிதை தொகுதிகள் இதுவரை வெளியாகி உள்ளன
4. நாகூர் ரூமி படைப்புகள் யாவை?
- மொழிபெயர்ப்புக் கவிதைகள்
- சிறுகதைத் தொகுதிகள்
- கப்பலுக்குள் மச்சான் என்ற நாவல்
5. சித்தாள் கற்கள் சுமக்க காரணம் யாது?
- வாழ்வைத் தொலைக்காமல் தன்னைக் காக்கவும். அடுத்த வேளை உணவுக்காகவும் சித்தாள் கற்களைச் சுமக்கிறாள்.
III. சிறு வினா
1. நாகூர் ரூமி பற்றி குறிப்பு வரைக
- நாகூர் ரூமி இயற்பெயர் முகம்மதுரஃபி.
- நாகூர் ரூமி தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர்.
- 1980 கணையாழி என்னும் இதழில் எழுத தொடங்கினார்.
- கவிதை, குறுநாவல், சிறுகதை, மொழிபெயர்ப்பு என பலதளங்களில் தொடர்ந்து இயங்கி வருபவர்.
- மீட்சி, சுபமங்களா, புதிய பார்வை, குங்குமம், கொல்லிப்பார்வை, குமுதம், இலக்கிய வெளிவட்டம் ஆகிய இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.
- நதியின் கால்கள், ஏழாவது சுவை, சொல்லாத சொல் ஆகிய கவிதை தொகுதிகள் இதுவரை வெளியாகி உள்ளன.
- மொழிபெயர்ப்புக் கவிதைகள், சிறுகதைத் தொகுதிகள் ஆகியவற்றுடன கப்பலுக்குள் மச்சான் என்னும் நாவலையும் படைத்துள்ளார்.
2. சித்தாளின் இன்னல்களை விளக்குக
- பொற்காலமாக இருந்தாலும் சித்தாள் தலையில் எழுதப்பட்டதோ கற்காலம்
- தன் வாழ்வை தொலைத்து விடாமல் காத்துக் கொள்வதற்காக தலையில் கை வைப்பவள்.
- வாழ்வில் தலைக்கனம் (இறுமாப்பு) கொண்டவர் உண்டு. ஆனால், கல் சுமந்து தலைக்கனமானது இவளுக்கு.
- அடுத்தவர் கனவுக்காக அலுக்காமல் சுமக்கும் கற்களெல்லாம் இவளின் அடுத்தவேளை உணவுக்குத்தான். இவள இறந்தால் கூட சலனம் சிறிதளவு தான்.
- இந்த சித்தாளின் மனச்சுமையை அவள் சுமக்கு செங்கற்கள் அறியாது.
பலவுள் தெரிக
1.நாகூர் ரூமியின் இயற்பெயர் யாது?
அ) முகம்மதுரஃபி
ஆ) முகம்மது மீரான்
இ) முகம்மது இஸ்மாயில்
ஈ) முகம்மது
Answer:
அ) முகம்மதுரஃபி
2.நாகூர் ரூமி பிறந்த மாவட்டம்
அ) மதுரை
ஆ) நெல்லை
இ) தஞ்சை
ஈ) திருச்சி
Answer:
இ) தஞ்சை
3.நாகூர் ரூமி முதன் முதலில் எழுதிய இதழ் ………………….
அ) குங்குமம்
ஆ) கணையாழி
இ) தென்றல்
ஈ) புதிய பார்வை
Answer:
ஆ) கணையாழி
4.நாகூர் ரூமி எழுதிய புதினம் (நாவல்) – ………………..
அ) சொல்லாத சொல்
ஆ) ஏழாவது சுவை
இ) கப்பலுக்குப் போன மச்சான்
ஈ) சுபமங்களா
Answer:
இ) கப்பலுக்குப் போன மச்சான்
5.சிறிதளவே சலனத்தை ஏற்படுத்துவது ……………………
அ) தலைக்கனம்
ஆ) அடுத்தவர் கனவு
இ) சித்தாளின் மரணம்
ஈ) சித்தாளின் புலம்பல்
Answer:
இ) சித்தாளின் மரணம்
6.தொழிலாளர்களின் மனச் சுமையை அறியாதது ………………………
அ) கட்டடம்
ஆ) செங்கற்கள்
இ) கம்பிகள்
ஈ) மணல்
Answer:
ஆ) செங்கற்கள்
7.தன் வாழ்வு தொலைக்காமல் காக்க தலையில் கை வைப்பவர் …………….
அ) சித்தாளு
ஆ) பொறியாளர்
இ) உழவர்
ஈ) காவலர்
Answer:
அ) சித்தாளு
8.நாகூர் ரூமியின் கவிதைத் தொகுப்புகளில் ஒன்று ………………….
அ) கப்பலுக்குப் போன மச்சான்
ஆ) கொல்லிப்பாவை
இ) நதியின் கால்கள்
ஈ) மீட்சி
Answer:
இ) நதியின் கால்கள்
9.இன்னலில் இருக்கும் தொழிலாளர் நிலையை நினைப்பவர்கள் ……………………
அ) முதலாளிகள்
ஆ) கவிஞர்கள்
இ) மக்கள்
ஈ) அமைச்சர்கள்
Answer:
ஆ) கவிஞர்கள்
10.தன் வாழ்வு தொலைக்காமல்
தற்காத்து வைப்பதற்காய் – இத்தொடரில் உள்ள நயம்?
அ) மோனை நயம்
ஆ) எதுகை நயம்
இ) இயைபு
ஈ) உவமை அணி
Answer:
அ) மோனை நயம்
11.‘சித்தாளின் மனச்சுமைகள்
செங்கற்கள் அறியாது’ எனக் குறிப்பிடும் கவிஞர்?
அ) நாகூர் ரூமி
ஆ) கண்ணதாசன்
இ) ஜெயகாந்தன்
ஈ) பாரதியார்
Answer:
அ) நாகூர் ரூமி
12.மாறுபட்ட ஒன்றினைக் கண்டறிக.
அ) மீட்சி
ஆ) சுபமங்களா
இ) ஏழாவது சுவை
ஈ) புதியபார்வை
Answer:
இ) ஏழாவது சுவை
13.நதியின் கால்கள் என்பது நாகூர் ரூமியின்…………………..
அ) கவிதைத் தொகுதி
ஆ) படைப்புகள் வெளியான இதழ்
இ) நாவல்
ஈ) சிறுகதைத் தொகுதி
Answer:
அ) கவிதைத் தொகுதி
14.‘கப்பலுக்குப் போன மச்சான்’ என்பது நாகூர் ரூமியின்…………………..
அ) கவிதைத் தொகுதி
ஆ) படைப்புகள் வெளியான இதழ்
இ) நாவல்
ஈ) சிறுகதைத் தொகுதி
Answer:
இ) நாவல்
*********THE END OF 9.2*************
9.3. தேம்பாவணி
1. பூக்கையைக் குவித்துப் பூவே
புரிவொடு காக்கென்று அம்பூஞ்
சேக்கையைப் பரப்பி இங்கண்
திருந்திய அறத்தை யாவும்
யாக்கையைப் பிணித்தென்று ஆக
இனிதிலுள் அடக்கி வாய்ந்த
ஆக்கையை அடக்கிப் பூவோடு
அழுங்கணீர் பொழிந்தான்மீதே.
2388
2. வாய்மணி யாகக் கூறும்
வாய்மையே மழைநீ ராகித்
தாய்மணி யாக மார்பில்
தயங்கியுள் குளிர வாழ்ந்தேன்
துளியிலது இளங்கூழ் வாடிக்
காய்மணி யாகு முன்னர்க்
காய்ந்தெனக் காய்ந்தேன் அந்தோ.
2400
I. சொல்லும் பொருளும்
1. பூக்கையைக் குவித்துப் பூவேபுரிவொடு காக்கென்று அம்பூஞ்சேக்கையைப் பரப்பி இங்கண்திருந்திய அறத்தை யாவும்யாக்கையைப் பிணித்தென்று ஆகஇனிதிலுள் அடக்கி வாய்ந்தஆக்கையை அடக்கிப் பூவோடுஅழுங்கணீர் பொழிந்தான்மீதே.
2388
2. வாய்மணி யாகக் கூறும்வாய்மையே மழைநீ ராகித்தாய்மணி யாக மார்பில்தயங்கியுள் குளிர வாழ்ந்தேன்துளியிலது இளங்கூழ் வாடிக்காய்மணி யாகு முன்னர்க்காய்ந்தெனக் காய்ந்தேன் அந்தோ.
2400
I. சொல்லும் பொருளும்
- சேக்கை – படுக்கை
- யாக்கை – உடல்
- பிணித்து – கட்டி
- வாய்ந்த – பயனுள்ள
- இளங்கூழ் – இளம்பயிர்
- தயங்கி – அசைந்து
- காய்ந்தேன் – வருந்தினேன்
- கொம்பு – கிளை
- புழை – துளை
- கான் – காடு
- தேம்ப – வாட
- அசும்பு – நிலம்
- உய்முறை – வாழும் வழி
- ஓர்ந்து – நினைத்து
- கடிந்து – விலக்கி
- உவமணி – மணமலர்
- படலை – மாலை
- துணர் – மலர்கள்
II. இலக்கணக் குறிப்பு
- காக்கென்று – காக்கவென்று என்பதன் தொகுத்தல் விகாரம்
- கணீர் – கண்ணீர் என்பதன் இடைக்குறை
- காய்மணி – வினைத்தொகை
- உய்முறை – வினைத்தொகை
- செய்முறை – வினைத்தொகை
- மெய்முறை – வேற்றுமைத்தொகை
- கைமுறை – மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
III. பகுபத உறுப்பிலக்கணம்
1. அறியேன் = அறி + ய் + ஆ + ஏன்
- அறி – பகுதி
- ய் – சந்தி
- ஆ – எதிர்மறை இடைநிலை புணர்ந்து கெட்டது
- ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று
2. ஒலித்து = ஒலி + த் + த் + உ
- ஒலி – பகுதி
- த் – சந்தி
- த் – இறந்தகால இடைநிலை
-
உ – வினையெச்ச விகுதி
IV. பலபவுள் தெரிக.
பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க என்று ………………….. , ………………….. வேண்டினார்.
- கருணையன் எலிசபெத்துக்காக
- எலிசபெத் தமக்காக
- கருணையன் பூக்களுக்காக
- எலிசபெத் பூமிக்காக
விடை : கருணையன் எலிசபெத்துக்காக
V. குறு வினா
“காய்மணி யாகு முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன்” – உவமை உணர்த்தும் கருத்து யாது?
உவமை:-
- இளம்பயிர் நெல்மணி காணும் முன்னே மழையின்றி வாழக் காய்தல்
உவமை உணர்த்தும் கருத்து:-
- கருணையாகிய நான் என் தயார் எலிசபெத் அவர்களை இழந்து வாடுகிறேன்.
VI. சிறு வினா
எவையெல்லாம் அறியேன் என்று கருணையன் கூறுகிறார்?
- கருணையாகிய நான் உயிர் பிழைக்கும் வழி அறியேன்.
- அறிவோடு பொருந்திய உறுப்புகள் இயங்காத இந்த உடலின் தன்மையை அறியேன்.
- உடலுக்கு வேண்டிய உணவைத் தேடிக்கொண்டு வரும் வழிவகைகளை அறியேன்.
- காட்டில் செல்வதற்கான வழிகளையும் அறியேன் என்று கூறுகிறார்.
- “செய்முறை அறியேன்; கானில்
- செல்வழி அறியேன்”
VII. நெடு வினா
கருணையனின் தாய் மறைவுக்கு, வீரமாமுனிவர்தம் பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரிக்க.
குறிப்புச் சட்டம்
- முன்னுரை
- வீரமாமுனிவரின் உவமை உருவக கவிதாஞ்சலி
- முடிவுரை
முன்னுரை:-
- தாயின் அன்பை எழுத உலக மொழிகள் போதாது. தாயை இழந்த துயரம் சொல்ல இயலாது. தாயை இழந்த கருணையனின் கண்ணீர் சொற்களை அறிவோம்.
வீரமாமுனிவரின் உவமை உருவக கவிதாஞ்சலி:-
1. மலர்ப்படுக்கை:-
- கருணையனின் தாய் மறைந்து விட்டாள். கருணையன் தன் கையைக் குவித்துப் “பூமித்தாயே! என் அன்னையின் உடலைக் காப்பாயாக என்று கூறி, குழியிலே மலர்படுக்கையைப் பரப்பினேன். அன்னையின் உடலை மண்ணிட்டு மூடி மலர்களையும் தன் கண்ணீரையும் பொழிந்தான்.
2. இளம்பயிர் வாட்டம்:-
- என் தாயின் மார்பில் மணிமாலையென அசைந்து வாழ்ந்தேனே! இப்பொழுது, இளம்பயிர் வளர்ந்து முதிர்ந்து காய்ந்து மணியாகு முன்பே, தூய மணி போன்ற மழைத்துளி இன்றி வாடிக் காய்ந்து விட்டது போல நானும் வாடுகிறேன். என் மனம் மரக்கிளையில் இருந்து பறிக்கப்பட்ட மலர் போல் வாடுகிறது.
3. அம்பு துளைத்த வேதனை:-
- தீயையும், நஞ்சையும் தன் முனையில் கொண்ட அம்பு துளைத்தால் எற்படும் புண்ணின் வரியைப் போல் என் துயரம் வேதனை தருகிறது. துணையைப் பிரிந்த ஒரு பறவையைப் போல நான் இக்காட்டில் அழுது வாடுகிறேன்.
4. தவிப்பு:-
- சரிந்த வழக்கு நிலப்பகுதியிலே தனியே விடப்பட்டுச் செல்லும் வழி தெரியாமல் தவிப்பவன் போல் ஆனேன். நவமணிகள் பதித்த மணிமாலைகளை இணைத்தது போன்று நல்ல அறன்கள் எல்லாம் ஒரு கோவையாக இணைத்த தவத்தையே அணிந்த மார்பனாகிய கருணையன் புலம்பினான்.
5. உயிர்கள் அழுதல்:-
- புலம்பலைக் கேட்டு பல்வேறு இசைகளை இயக்கியது போல் தேன் மலர்கள் தோறும் மணம் வீசும் மலர்களும், மலர்ந்த சுனைதோறும் உள்ள பறவைகளும், வண்டுகளும் அக்காட்டினிேல அழுவன போல கூச்சலிட்டன.
முடிவுரை:-
- வீரமாமுனிவர் உவமை, உருவக மலர்களால் தன் கவிதை மூலம் எலிசபெத்துக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
தேம்பாவணி – கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. கிறித்துவிற்கு முன் தோன்றியவர் ____________
விடை : திருமுழுக்கு யோவான்.
2. திருமுழுக்கு யோவானுக்கு தேம்பாவணியில் ____________ என
பெயரிடப்பட்டுள்ளது
விடை : கருணையன்
3. கிறிஸ்துவின் வளர்ப்புத் தந்தை ____________
விடை : சூசையப்பர்
4. தேம்பாவணியில் ____________ காண்டங்கள் உள்ளன
விடை : மூன்று
5. ____________ தேம்பாவணி படைக்கப்பட்டது
விடை : 17ஆம் நூற்றாண்டில்
II. குறு வினா
1. தேம்பா + அணி என்பதன் பொருள் யாது?
- தேம்பா + அணி என்பதன் பொருள் “வாடாத மாலை” என்பதாகும்.
2. தேன் + பா + அணி என்பதன் பொருள் யாது?
- தேன் + பா + அணி என்பதன் பொருள் “தேன் போன்ற பாடல்களின் தொகுப்பு” என்பதாகும்.
3. தேம்பாவணி யாரை பாட்டுடைத் தலைவனாக கொண்டது?
- தேம்பாவணி கிறிஸ்துவின் வளர்ப்பு தந்தயான சூசையப்பர் என்னும் யோசேப்பினைப் பாட்டுடைத் தலைவனாக கொண்டது
4. வீரமாமுனிவர் படைத்த நூல்கள் யாவை?
- சதுரகராதி
- தொன்னூல் விளக்கம்
- சிற்றிலகக்கியங்கள்
- உரைநடை நூல்கள்
- பரமார்த்தக் குரு கதைகள்
- மொழிபெயர்ப்பு நூல்கள்
5. இஸ்த் சன்னியாசி குறிப்பு வரைக
- வீரமாமுனிவரின் எளிமையும் துறவையும் கண்டு வியந்த, திருச்சியை ஆண்ட சந்தாசாகிப் என்னும் மன்னர் இஸ்மத் சன்னியாசி என்னும் பட்டம் வழங்கினார்.
- இஸ்மத் சன்னியாசி என்பதற்கு தூயதுறவி என்று பொருள்.
- இஸ்மத் சன்னியாசி என்பது பாரசீகச் சொல் ஆகும்.
III. சிறு வினா
1. தேம்பாவணி – குறிப்பு வரைக
- 17ஆம் நூற்றாண்டில் தேம்பாவணி படைக்கப்பட்டது
- தேம்பா + அணி என்பதன் பொருள் “வாடாத மாலை” என்பதாகும்.
- தேன் + பா + அணி என்பதன் பொருள் “தேன் போன்ற பாடல்களின் தொகுப்பு” என்பதாகும்.
- தேம்பாவணி கிறிஸ்துவின் வளர்ப்பு தந்தயான சூசையப்பர் என்னும் யோசேப்பினைப் பாட்டுடைத் தலைவனாக கொண்டது.
- 3 காண்டங்களையும் 36 படலங்களையும் கொண்டது.
2. வீரமாமுனிவர் குறிப்பு வரைக
- வீரமாமுனிவர் இயற்பெயர் கான்சுடான்சு (கொனஸ்டான்) ஜோசப் பெஸ்கி
- சதுரகராதி, தொன்னூல் விளக்கம், சிற்றிலகக்கியங்கள், உரைநடை நூல்கள், பரமார்த்தக் குரு கதைகள், மொழிபெயர்ப்பு நூல்கள் ஆகியவை வீரமாமுனிவர் படைத்த நூல்கள் ஆகும்
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1.கிறிஸ்துவுக்கு முன் தோன்றியவர்…………………………
அ) பேதுரு
ஆ) ஆபிரகாம்
இ) திருமுழுக்கு யோவான்
ஈ) சூசை
Answer:
இ) திருமுழுக்கு யோவான்
2.திருமுழுக்கு யோவானுக்கு வீரமாமுனிவர் தன் காப்பியத்தில் இட்ட பெயர்…………………………
அ) கருணாகரன்
ஆ) கருணையன்
இ) கருணாமூர்த்தி
ஈ) வலின்
Answer:
ஆ) கருணையன்
3.கருணையனின் தாயார் யார்?
அ) எலிசபெத்
ஆ) மரியாள்
இ) சாரா
ஈ) அண்ணாள்
Answer:
அ) எலிசபெத்
4.சொல்லையும் பொருளையும் பொருத்துக.
அ) 3, 2, 1, 4
ஆ) 4, 1, 2, 3
இ) 2, 1, 3, 4
ஈ) 2, 1, 4, 3
Answer:
ஆ) 4, 1, 2, 3
5.தேம்பா + அணி என்பதன் பொருள் …………………
அ) வாடாத மாலை
ஆ) சூடாத மாலை
இ) பாடாத மாலை
ஈ) தேன்மாலை
Answer:
அ) வாடாத மாலை
6.கிறித்துவின் வளர்ப்புத் தந்தை …………………………….
அ) கருணையன்
ஆ) சூசையப்பர்
இ) தாவீது
ஈ) ஈசாக்கு
Answer:
ஆ) சூசையப்பர்
7.தேம்பாவணி நூலில் உள்ள காண்டங்கள் ………………………..
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) ஐந்து
ஈ) ஏழு
Answer:
ஆ) மூன்று
8.தேம்பாவணி படைக்கப்பட்ட காலம் ………………………..
அ) 7ஆம் நூற்றாண்டு
ஆ) 12ஆம் நூற்றாண்டு
இ) 17ஆம் நூற்றாண்டு
ஈ) 19ஆம் நூற்றாண்டு
Answer:
இ) 17ஆம் நூற்றாண்டு
9.தேம்பாவணியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ………………………..
அ) 3656
ஆ) 3565
இ) 3613
ஈ) 3615
Answer:
ஈ) 3615
10.தேம்பாவணியின் படலங்களின் எண்ணிக்கை ………………………..
அ) 33
ஆ) 35
இ) 36
ஈ)
Answer:
இ) 36
11.தேம்பாவணி ஒரு ……………………….. நூல் ஆகும்.
அ) பெருங்காப்பிய
ஆ) புதின
இ) நாடக நூல்
ஈ) வரலாற்று
Answer:
அ) பெருங்காப்பிய
12.தேம்பாவணியை இயற்றியவர் யார்?
அ) கபிலர்
ஆ) கால்டு வெல்
இ) வீரமாமுனிவர்
ஈ) ஜி.யு.போப்
Answer:
இ) வீரமாமுனிவர்
13.தமிழ் முதல் அகராதி எது?
அ) சதுரகராதி
ஆ) தமிழ் அகராதி
இ) தொன்மை அகராதி
ஈ) பழைய அகராதி
Answer:
அ) சதுரகராதி
14.வீரமாமுனிவரின் இயற்பெயர்………………………..ஆகும்.
அ) கான்சுடான்சு ஜோசப் பெசுகி
ஆ) தாமஸ் பெஸ்கி
இ) இஸ்மத்
ஈ) கால்டுவெல்
Answer:
அ) கான்சுடான்சு ஜோசப் பெசுகி
15.சந்தா சாகிப் வீரமாமுனிவருக்கு அளித்த பட்டம் யாது?
அ) சாகிப்
ஆ) இஸ்மத்
இ) இஸ்மத் சன்னியாசி
ஈ) சன்னியாசி
Answer:
இ) இஸ்மத் சன்னியாசி
16.இஸ்மத் சன்னியாசி என்பதன் பொருள் ………………
அ) தூயவன்
ஆ) புனிதன்
இ) பெரியோன்
ஈ) தூயதுறவி
Answer:
ஈ) தூயதுறவி
17.இஸ்மத் சன்னியாசி என்பது ……………… மொழிச் சொல்.
அ) பாரசீக
ஆ) இலத்தீன்
இ) எபிரேய
ஈ) உருது
Answer:
அ) பாரசீக
18.கானில் செல்வழி அறியேன் – யார் கூற்று?
அ) எலிசபெத் கூற்று
ஆ) கருணையன் கூற்று
இ) சூசையப்பர் கூற்று
ஈ) தாவீது கூற்று
Answer:
ஆ) கருணையன் கூற்று
19.பொருத்துக.
1. கூழ் – அ) கிளை
2. கொம்பு – ஆ) பயிர்
3. புழை – இ) காடு
4. கான் – ஈ) துளை
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
20.பொருத்துக.
1. கடிந்து – அ) விலக்கி
2. உவமணி – ஆ) மாலை
3. படலை – இ) மணமலர்
4. துணர் – ஈ) மலர்கள்
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
21.பொருத்துக.
1. காக்கென்று – அ) இடைக்குறை
2. கணீர் – ஆ) தொகுத்தல் விகாரம்
3. காய்மணி – இ) வேற்றுமைத்தொகை
4. மெய்முறை – ஈ) வினைத்தொகை
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
22.வேறுபட்ட ஒன்றினைத் தேர்வு செய்க.
அ) திருமுழுக்கு யோவான்
ஆ) அருளப்பன்
இ) கருணையன்
ஈ) எலிசபெத்
Answer:
ஈ) எலிசபெத்
23.வேறுபட்ட ஒன்றினைத் தேர்வு செய்க.
அ) சூசையப்பர்
ஆ) யோவான்
இ) வளன்
ஈ) இயேசு
Answer:
ஈ) இயேசு
24.‘சரிந்தன அசும்பில் செல்லும்’ இவ்வடிகளில் ‘அசும்பு’ என்பதன் பொருள்
………………
அ) வானம்
ஆ) நிலம்
இ) காடு
ஈ) கிளை
Answer:
ஆ) நிலம்
25.நவமணி என்பதில் ‘நவம்’ என்ற சொல் குறிப்பது ………………
அ) ஆறு
ஆ) ஒன்பது
இ) பத்து
ஈ) ஐந்து
Answer:
ஆ) ஒன்பது
26.‘நல்லறப் படலைப் பூட்டும்’ இவ்வடிகளில் ‘படலை’ என்னும் பொருள் தரும்
சொல் ………………
அ) மாலை
ஆ) மணமலர்
இ) மலர்கள்
ஈ) நிலம்
Answer:
அ) மாலை
27.கிறித்துவின் வருகையை அறிவித்த முன்னோடி ………………
அ) சூசையப்பர்
ஆ) யோவான்
இ) வளன்
ஈ) இயேசு
Answer:
ஆ) யோவான்
28.கருணையன் என்பவர் ………………
அ) வீரமாமுனிவர்
ஆ) யோசேப்பு
இ) அருளப்பன்
ஈ) சாந்தாசாகிப்
Answer:
இ) அருளப்பன்
************THE END OF 9.3*********
9.4 ஒருவன் இருக்கிறான்
பாடநூல் வினாக்கள்
நெடுவினா
1.அழகிரிசாமியின் ‘ஒருவன் இருக்கிறான்’ சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுத்தும் கதைமாந்தர் குறித்து எழுதுக.
Answer:
மனித நேயம் கொண்ட கதைமாந்தர் – வீரப்பன்
குறிப்புச் சட்டம்
- முன்னுரை
- அன்பாளர்
- கொடையாளர்
- பண்பாளர்
- முடிவுரை
முன்னுரை:
- கு.அழகிரிசாமியின் ஒருவன் இருக்கிறான்’ சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுத்தும் கதை மாந்தர் வீரப்பன். அவர் தான் வறுமைப்பட்ட போதும் தன் அன்பையும் அருளையும் கொண்டு நட்பைப் போற்றினார்.
அன்பாளர்:
- வீரப்பன் காஞ்சிபுரத்தில் விறகுகடையில் வேலை செய்து வந்தார். அவர் ஏழையாக இருந்தாலும் நண்பன்குப்புசாமிமீது மிகுந்த அன்புவைத்திருந்தார். அனாதையானகுப்புசாமிக்கு அவன் உறவினர்களும் உதவ முன்வரவில்லை. ஆனால் தன்னுடைய வறுமையையும் பொருட்படுத்தாமல் வீரப்பன், குப்புசாமியுடன் மனித நேயத்துடன் இருக்கின்றார்.
கொடையாளர்:
- குப்புசாமி நோய்வாய்ப்பட்டு வேலை இழந்தபோது வீரப்பன் அவரை தன் வீட்டிற்கு அழைத்து வந்து உணவு கொடுப்பார். மேலும், தான் கடன் வாங்கி அதனைக் குப்புசாமிக்குக் கொடுப்பார். சென்னைக்குச் செல்லும் ஆறுமுகத்திடம் கடிதம் ஒன்றையும் மூன்று ரூபாயையும் குப்புசாமியிடம் கொடுத்து அனுப்பினார் வீரப்பன்.
பண்பாளர்:
- வீரப்பன் குப்புசாமி குணமடைய நாள்தோறும் கோயிலுக்குச் சென்று வேண்டுகிறார். அவருக்கு வேலை இல்லாதபோதும் நண்பன் குப்புசாமிக்குக் கொடுக்க ஒருவரிடம் மூன்று width=”197″ height=”19″ கடன் வாங்கி சென்னைக்குச் செல்லும் ஆறுமுகத்திடம் கொடுத்து அனுப்புகிறார். குப்புசாமியைப் பார்க்க வரலாம் என்றால், இந்த மூன்று width=”197″ height=”19″ பேருந்துக்கு செலவாகிவிடும் என்பதால்தான் கொடுத்தனுப்புகிறேன். இன்னொரு இடத்திலும் பணம் கேட்டிருப்பதாகவும் கிடைத்தவுடன் குப்புசாமியைப் பார்க்க விரைவாக வருவதாகவும் வீரப்பன் தெரிவித்தார்.
முடிவுரை:
- ஏழ்மையிலும் நட்பைப் பாராட்டி உதவும் வீரப்பன், மனித நேயத்தின் மாமகுடமாகத் திகழ்கின்றார். அவரின் செயல்பாடுகள் கல் மனதையும் கரைத்து மனிதநேயத்தைச் சுரக்க வைக்கின்றது. ஒருவன் இருக்கிறான், மனித நேயத்திற்குச் சான்றாக அவன் இருக்கின்றான்.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1.“ஒருவன் இருக்கிறான்” கதையின் ஆசிரியர் ………………… ஆவார்.
அ) அழகர்சாமி
ஆ) அழகிரிசாமி
இ) அண்ணாதுரை
ஈ) சுஜாதா
Answer:
ஆ) அழகிரிசாமி
2.அரசுப் பணியை உதறிவிட்டு முழுதாக எழுத்துப்பணியை மேற்கொண்டவர் …………………
அ) அழகிரிசாமி
ஆ) புதுமைப்பித்தன்
இ) ஜெயகாந்தன்
ஈ) சுஜாதா
Answer:
அ) அழகிரிசாமி
3.…………………வரிசையில் மூத்தவர் அழகிரிசாமி ஆவார்.
அ) வானம்பாடி
ஆ) மணிக்கொடி
இ) கரிசல் எழுத்தாளர்கள்
ஈ) கணையாழியில் எழுதியவர்
Answer:
இ) கரிசல் எழுத்தாளர்கள்
4.அழகிரிசாமி எந்நாட்டில் படைப்பாளர்களுக்கான படைப்புப் பயிற்சி அளித்தார் …………………
அ) தாய்லாந்து
ஆ) இந்தியா
இ) இலங்கை
ஈ) மலேசியா
Answer:
ஈ) மலேசியா
5.சரியான கூற்றுகளைத் தேர்க.
i) தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டு அழகிரிசாமி திறனாய்வு நூல்களைப்
படைக்கவில்லை.
ii) கு. அழகிரிசாமி பல இதழ்களில் பணியாற்றியவர்.
iii) வீரப்பனும் குப்புசாமியும் ரொம்ப சிநேகம்.
அ) மூன்று கூற்றுகளும் சரியானவை
ஆ) கூற்று (ii), (ii) சரியானவை
இ) கூற்று (iii) மட்டும் சரி
ஈ) மூன்று கூற்றுகளும் தவறானவை.
Answer:
ஆ) கூற்று (i), (iii) சரியானவை
6.ஒருவன் இருக்கிறான் கதை வெளியான இதழ் …………………
அ) கலைமகள்
ஆ) கணையாழி
இ) குமுதம்
ஈ) ஆனந்தவிகடன்
Answer:
அ) கலைமகள்
7.“ஒருவன் இருக்கிறான்” கதை வெளியான ஆண்டு …………………
அ) 1956
ஆ) 1966
இ) 1976
ஈ) 1979
Answer:
ஆ) 1966
8.வீரப்பன் குப்புசாமிக்கு கொடுத்துவிட்ட பணம் …………………
அ) ஒரு width=”197″ height=”19″
ஆ) மூன்று width=”197″ height=”19″
இ) நான்கு width=”197″ height=”19″
ஈ) ஐந்து width=”197″ height=”19″
Answer:
ஆ) மூன்று width=”197″ height=”19″
கற்பவை கற்றபின்
1.சமூகத் தொண்டு செய்து உயர்ந்த விருதுகளைப் பெற்ற ஆளுமைகளைப்
பட்டியலிட்டு அவர்கள் செய்த சமூகப்பணி குறித்துக் கலந்துரையாடுக.
Answer:
கலந்துரையாடல்
கலந்துரையாடுபவர்கள்: மதியழகன், புனிதா
மதியழகன் : புனிதா! தங்கம்மா என்ற சமூகச் சேவையாளர் எங்கு எப்போது பிறந்தார்
என்று உனக்குத் தெரியுமா?
புனிதா : தெரியாது மதியழகா… நீ சொல் தெரிந்துகொள்கிறேன்.
மதியழகன் : இவர் சனவரி 7ஆம் நாள் 1925இல் யாழ்ப்பாணம் அருகில் உள்ள ஓர் ஊரில்
பிறந்தவர். சைவ சித்தாந்த தத்துவங்களில் ஈடுபாடுடையவர்.
புனிதா : அவரது சமூகப் பணிகள் பற்றி சொல்கிறாயா?
மதியழகன் : ஓ!… சொல்கிறேன். 1977இல் ஓர் ஆலய நிர்வாகப் பதவியை முழுமையாக
எடுத்துக்கொண்டு ஆன்மீகத்தின் வாயிலாக அறச்சாலைகள், நந்தவனம், தீர்த்த தடாகம்
உருவாக்கினார். ஆதரவற்ற சிறுமிகளுக்குத் “துர்க்காபுரம் மகளிர் இல்லம்”
நிறுவினார். அன்னபூரணி அன்னதான மண்டபம் அமைத்தார். வயோதிகர்களுக்கு அடைக்கலம்
கொடுத்தார். அன்னையர் இல்லம், துர்க்காதேவி மணிமண்டபம் என்பனவற்றை ஆரம்பித்து
சமூகத் தொண்டாற்றினார்.
புனிதா : ஓ!… இவ்வளவு சேவைகள் செய்திருக்கிறார்களா… அதனால்தான்
அத்தனைவிருதுகளும்,பட்டங்களும் பெற்றாரோ.
மதியழகன் : ஆம் புனிதா. இன்னும் இதுபோன்ற ஆளுமைகளின் சிறப்புகளை மீண்டும்
நாம் சந்திக்கும் போது பேசலாமா?
புனிதா : ஓ!… பேசலாம். இப்போது புறப்படுகிறேன். நன்றி டா…..
2.“அகநக நட்பதே நட்பு” – என்ற தலைப்பில் நண்பர்களுக்கு உதவிய சூழல்களைச்
சுவைபட எழுதுக.
Answer:
“அகநக நட்பதே நட்பு”
எனக்கு ஒரு நண்பன் இருந்தான். அவன் எனக்கு நண்பன் என்று புறத்தே
பார்ப்பவர்களுக்குத் தெரியாது. நண்பர்கள் என்று யாரும் கண்டுபிடித்ததும்
இல்லை.
“முகநக நட்பது நட்பன்று” என்பதை நாங்கள் இருவரும் உணர்ந்து இருந்தோம்.
ஒருநாள் வகுப்பறைக்கு அறிவிப்பு ஒன்று வந்தது. ஒரு குறிப்பிட்ட புத்தகம்
வாங்க பணம் கொடுப்பது தொடர்பான அறிவிப்பு அது. எங்கள் வகுப்பில் அனைவரும்
கொடுத்து விட்டோம். என் நண்பனைத் தவிர…
அவன் என்னைப் பார்த்தான்… அன்று நான் மதிய உணவு எடுத்துவரவில்லை . கடையில்
சாப்பிடுவதற்காக வைத்திருந்த பணத்தை அவனுக்காகக் கொடுத்துவிட்டேன். அவன்
கொண்டு வந்திருந்த உணவைப் பகிர்ந்து உண்டோம். எல்லோரும் வியந்தனர்.
எப்படிடா நீங்க இரண்டுபேரும்… என்று கேட்டவர்களுக்கு இருவரும் ஒரே மாதிரி
பதில் சொன்னோம்.
“முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பதே நட்பு”
******THE END OF 9.4*******
9.5. அணிகள்
I. பலவுள் தெரிக.
வாய்மையே மழைநீராகி – இத் தொடரில் வெளிப்படும் அணி
- உவமை
- தற்குறிப்பேற்றம்
- உருவகம்
- தீவகம்
விடை : உருவகம்
II. குறு வினா
1. தீவக அணியின் வகைகள் யாவை?
- முதல்நிலைத் தீவகம்
- இடைநிலைத் தீவகம்
- கடைநிலைத் தீவகம் என்னும் மூன்று வகையாக வரும்.
2. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
-இக்குறளில் பயின்று வந்துள்ள அணியின் இலக்கணம் யாது?
இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி நிரல் நிரை அணி ஆகும்.
இலக்கணம்:-
- நிரல் – வரிசை; நிறை – நிறுத்தல்
விளக்கம்:-
- சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே இணைத்துப் பொருள் கொள்வது நிரல் நிறை அணி எனப்படும்.
III. சிறு வினா
கவிஞர் தாம் கூறவிரும்பும் கருத்திற்கு ஏற்றவாறு தற்குறிப்பேற்ற அணி அமைவதை எடுத்துக்காட்டுக.
அணி இலக்கணம்:-
- இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும்.
எ.கா.:-
‘போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
‘வாரல்’ என்பனபோல் மறித்துக்கை காட்ட’
பாடலின் பொருள்:-
- கோட்டை மதில் மேல் இருந்த கொடியானது வர வேண்டாம் எனத்
- தடுப்பது போல, கை காட்டியது என்பது பொருள்.
அணிப் பொருத்தம்:-
- கோவலனும், கண்ணகியும் மதுரை மாநகருக்குள் சென்றபோது மதிலின் மேலிருந்த கொடிகள் காற்றில் இயற்கையாக அசைந்தன.
- ஆனால், இளங்கோவடிகள் கோவலன் மதுரையில் கொலை செய்யப்படுவான் எனக்கருதி அக்கொடிகள் கையை அசைத்து,
- ‘ இம்மதுரைக்குள் வரவேண்டா ’ என்று தெரிவிப்பது போலக் காற்றில் அசைவதாகத் தம் குறிப்பைக் கொடியின் மீது ஏற்றிக் கூறுகிறார்.
- இவ்வாறு இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும்.
அணிகள் – கூடுதல் வினாக்கள்
1. அணி என்றால் என்ன?
- மக்களுக்கு அழகு சேர்ப்பன அணிகலண்கள் . அதுபோன்று செய்யுள்களுக்கு அழகு செய்து சுவையை உண்டாக்குவன அணிகள் ஆகும்.
2. தீவக அணி என்றால் என்ன?
- தீவகம் என்னும் சொல்லுக்கு ‘விளக்கு’ என்று பொருள்.
- ஓர் அறையில், ஓர் இடத்தில் வைக்கப்பட்ட விளக்கானது அவ்வறையில் பல இடங்களிலும் உள்ள பொருள்களுக்கு வெளிச்சம் தந்து விளக்குதல் போல, செய்யுளின் ஓரிடத்தில்நின்ற ஒரு சொல் அச்செய்யுளின் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு சென்று பொருந்திப் பொருளை விளக்குவதால் இவ்வணி தீவக அணி எனப்பட்டது.
3. தன்மையணி என்றால் என்ன?
- எவ்வகைப்பட்ட பொருளாக இருந்தாலும் இயற்கையில் அமைந்த அதன் உண்மையான இயல்புத் தன்மையினைக் கேட்பவர்களின் மனம் மகிழுமாறு உரிய சொற்களை அமைத்துப் பாடுவது தன்மையணியாகும். இதனைத் தன்மை நவிற்சி அணி என்றும் கூறுவர்.
4. தன்மையணியின் வகைகள் யாவை?
- பொருள் தன்மையணி
- குணத் தன்மையணி
- சாதித் தன்மையணி
- தொழிற் தன்மையணி
- என நான்கு வகைப்படும்.
5. நிரல் நிறை அணி என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விவரி.
- நிரல் = வரிசை; நிறை = நிறுத்துதல்.
- சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே இணைத்துப்
- பொருள் கொள்வது நிரல் நிறை அணி எனப்படும்.
எ.கா.:-
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
பாடலின் பொருள்:-
- இல் வாழ்க்கை அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழ்க்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.
அணிப்பொருத்தம்:-
- இக்குறளில் அன்பும் அறனும் என்ற சொற்களை வரிசையாக நிறுத்தி, பண்பும் பயனும் என்ற சொற்களை முறைபடக் கூறியுள்ளமையால் இது நிரல் நிறை அணி ஆகும்.
மொழியை ஆள்வோம்…
I. மொழிபெயர்க்க.
1. Education is what remains after one has forgotten what one has
learned in School. – Albert Einstein
- ஒரு பள்ளியில் கற்றுக்கொண்டதை மறந்து விட்டால், பள்ளியில் கற்ற கல்வியினால் பயன் என்ன!
2. Tomorrow is often the busiest day of the week. – Spanish Proverb
- இவ்வாரத்தில் நாளை ஒருநாள் மட்டுமே வேலைப்பளு உள்ளது.
3. It is during our darkest moments that we must focus to see the
light. – Aristotle
- நம் இருண்ட தருணங்களிலும் ஒளியைப் பார்ப்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்.
4. Success is not final, failure is not fatal. It is the courage to
continue that counts. – Winston Churchill.
- வெற்றி என்பது முடிவல்ல, தோல்வி என்பது விதியல்ல. இரண்டுக்காகவும் தொடரந்து முயற்சியுடன் ஊக்கத்துடன் செயல்படுவதே எண்ணப்படும்.
II. உவமையைப் பயன்படுத்திச் சொற்றொடர் உருவாக்குக.
1. தாமரை இலை நீர்போல
- பட்டினத்தார் வாழ்க்கை தாமரை இலைத் தண்ணீர்போல ஒட்டாதது துறந்தார்
2. மழைமுகம் காணாப் பயிர்போல
- வெற்றியை எதிர்பார்த்து தோல்வி ஏற்பட்டதால் ரகு மழைமுகம் காணாப் பயிர்போல வாடி நின்றான்.
3. கண்ணினைக் காக்கும் இமை போல
- பெற்றோர்கள் அவர்களின் பிள்ளைகளை கண்ணினைக் காக்கும் இமை போல பாதுகாத்து வளர்ப்பர்
4. சிலை மேல் எழுத்து போல
- கவிஞர்களின் கவிதைகள் சிலை மேல் எழுத்து போல மனதில் பதிந்தது
III. பொருத்தமான நிறுத்தக் குறியிடுதல்
சேரர்களின் பட்டப் பெயர்களில் கொல்லி வெற்பன் மலைய மான் போன்றவை
குறிப்பிடத்தக்கவை கொல்லி மலையை வென்றவன் கொல்லி வெற்பன் எனவும் பிற
மலைப்பகுதிகளை வென்றவர்கள் மலையமான் எனவும் பெயர் சூட்டிக்கொண்டனர்
இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன.
விடை:-
- சேரர்களின் பட்டப் பெயர்களில், ‘கொல்லி வெற்பன்’ ‘மலைய மான்’ போன்றவை குறிப்பிடத்தக்கவை. கொல்லி மலையை வென்றவன், ‘கொல்லி வெற்பன்’ எனவும், பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள் “மலையமான்” எனவும் பெயர் சூட்டிக்கொண்டனர். இதற்குச் சங்கஇலக்கியத்தில் சான்றுகள் உள்ளன.
IV. குறுக்கெழுத்து புதிர்
இடமிருந்து வலம்:-
1. சிறுபொழுதின் வகைகளுள் ஒன்று (2)
- காலை
2. நேர் நேர் – வாய்பாடு (2)
- தேமா
11. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று (5)
- கலித்தொகை
14. மக்களே போல்வர் …………………… (4)
- கயவர்
மேலிருந்து கீழ் :-
1. முல்லைத் திணைக்குரிய பெரும்பொழுது (5)
- கார்காலம்
2. மொழிஞாயிறு (9)
- தேவநேயப்பாவாணர்ரு
3. நல்ல என்னும் அடைமொழி கொண்ட தொகைநூல் ……………. (5)
- குறுந்தொகை
4. கழை என்பதன் பொருள் (4)
- மூங்கில்
7. மதியின் மறுபெயர், இது நிலவையும் குறிக்கும் (4)
- திங்கள்
10. குறிஞ்சித் திணைக்குரிய விலங்கு
- சிங்கம்
12. …………. என்பது புறத்திணைகளுள் ஒன்று
- கைக்கிளை
வலமிருந்து இடம் :-
15. மருந்தே ஆயினும் விருந்தோடு உண் – ஆசிரியர் (4)
- ஒளவையார்
16. மதிமுகம் உவமை எனில் முகமதி ………………. (5)
- உருவகம்
கீழிருந்து மேல் :-
5. விடையின் வகைகள் (3)
- எட்டு
6. வீரமாமுனிவர் இயற்றிய நூல் (5)
- தேம்பாவணி
8. பிள்ளைத்தமிழின் இரண்டாம் பருவம் (4)
- செங்கீரை
9. முப்பால் பகுப்பு கொண்ட நூல்களுள் ஒன்று (5)
- திருக்குறள்
13. மன்னனது உண்மையான புகழை எடுத்துக் கூறுவது (7)
- மெய்க்கீர்த்தி
17. 96 வகை சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று (7)
- பிள்ளைத்தமிழ்
18. செய்தவம் – இலக்கணக்குறிப்பு (5)
- வினைத்தொகை
V. பாடலில் இடம்பெற்றுள்ள தமிழ்ப் புலவர்களின் பெயர்களைக் கண்டறிந்து எழுதுக.
கம்பனும் கண்டேத்தும் உமறுப் புலவரை எந்தக்கொம்பனும் பணியும் அறம்பாடுஞ் ஜவாது ஆசுகவியைகாசிம்புலவரை, குணங்குடியாரை சேகனாப் புலவரைசெய்குதம்பிப் பாவலரைச் சீர்தமிழ் மறக்காதன்றோ
- கம்பர்
- உமறுப்புலவர்
- ஜவாது ஆசுகவி
- காசிம்புலவர்
- குணங்குடியார்
- சேகனாபுலவர்
- செய்குதம்பி பாவலர்
மொழியோடு விளையாடு….
I. விளம்பரத்தை நாளிதழுக்கான செய்தியாக மாற்றியமைக்க
சாலைப் பாதுகாப்பு விழிப்புணவு விழா”
ஜனவரி 18, நெல்லை
நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழா
கொண்டாடப்பட்டது. போக்குவரத்துக் காவல்துறை ஆய்வாளர் தலைமையேற்றார். சாலைக்
குறியீடுகளை விளக்கி, குறியீடுக்ள உணர்த்துவதை மனதல் கொண்டு கட்டுப்பாடுடன்
கூடிய வேகத்தில் வாகனத்தை ஓட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். குழந்தைகள்,
மாணவர்கள் மனதில் சாலைவிதிகளை பதித்து விழிப்புணர்வுடன் வளர்க்க
அறிவுறுத்தினார். தலைக்கவசம், நான்கு சக்கர வாகனம் ஓட்டும் போது இருக்கை
பட்டை கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும் என்றார். சாலை விபத்தினால்
ஏற்படும் மரணங்களை நம் விழிப்புணர்வால் தடுத்து விடலாம் என்றார். நிறைவாக
வருகை தந்திருந்த பெரியோர், குழந்தைகள், காவல்துறையைச் சார்ந்தவர் அனைவரும்
இணைந்து “சாலை விழிப்புணர்வை வலியுறுத்தி” மாரத்தான் ஓட்டம் நிகழ்த்தினர்
II. கீழ்க்காணும் நாள்காட்டியில் புதன் கிழமையை ஒன்றாம் தேதியாகக் கொண்டு தமிழெண்களால் நிரப்புக.
III. அகராதியல் காண்க
1. குணதரன்
- நற்குணமுள்ளவன்
- முனிவன்
2. செவ்வை
- செம்மை
- மிகுதி
3. நகல்
- படி
- பிரதி
4. பூட்சை
- யானை
நிற்க அதற்குத் தக
கலைச்சொல் அறிவோம்
- Humanism – மனிதநேயம்
- Cultural Boundaries – பண்பாட்டு எல்லை
- Cabinet – அமைச்சரவை
- Cultural values – பண்பாட்டு விழுமியங்கள்
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1.மக்களுக்கு அழகு சேர்ப்பன……………….ஆகும்.
அ) அணிகலன்கள்
ஆ) கலை
இ) கல்வி
ஈ) பேச்சுத்திறன்
Answer:
அ) அணிகலன்கள்
2.தீவகம் என்ற சொல்லின் பொருள் ……………….
அ) விளக்கம்
ஆ) சான்று
இ) விளக்கு
ஈ) வெளிச்சம்
Answer:
இ) விளக்கு
3.கோவலனும் கண்ண கியும்……………….நகருக்குள் சென்றபோது கொடிகள் அசைந்தன.
அ) தஞ்சை
ஆ) புகார்
இ) மதுரை
ஈ) வஞ்சி
Answer:
இ) மதுரை
4.தீவக அணி……………….வகைப்படும்.
அ) மூன்று
ஆ) ஐந்து
இ) ஆறு
ஈ) எட்டு
Answer:
அ) மூன்று
5.நிரல் நிறையணி – இதில் ‘நிரை’ என்பதன் பொருள் ……………….
அ) நிறுத்துதல்
ஆ) வரிசை
இ) எடை
ஈ) கூட்டம்
Answer:
ஆ) வரிசை
6.இயல்பாக உரியச் சொற்களின் மூலம் கூறுவது……………….அணி ஆகும்.
அ) தற்குறிப்பேற்றணி
ஆ) நிரல்நிறை அணி
இ) உயர்வு நவிற்சி அணி
ஈ) தன்மையணி
Answer:
ஈ) தன்மையணி
7.தன்மை அணியின் வகைகள்……………….ஆகும்.
அ) மூன்று
ஆ) நான்கு
இ) ஐந்து
ஈ) ஏழு
Answer:
ஆ) நான்கு
8.தன்மை அணியை……………….என்றும் கூறுவர்.
அ) தீவக அணி
ஆ) உவமை அணி
இ) தன்மை நவிற்சி அணி
ஈ) தற்குறிப்பேற்ற அணி
Answer:
இ) தன்மை நவிற்சி அணி
9.வைகை நதி பாயும் நகரம்……………….
அ) நெல்லை
ஆ) மதுரை
இ) தஞ்சை
ஈ) கடலூர்
Answer:
ஆ) மதுரை
10.‘சேந்தன வேந்தன் திரு நெடுங்கன்’ எனும் பாடலில் அமைந்த அணி?
அ) தீவக அணி
ஆ) தன்மை அணி
இ) தற்குறிப்பேற்ற அணி
ஈ) உவமை அணி)
Answer:
அ) தீவக அணி
11.பொருத்துக.
1. சேந்தன் – அ) பகை
2. தெவ் – ஆ) சிவந்தன
3. சிலை – இ) பறவை
4. புள் – ஈ) வில்
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ.
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
12.பொருத்துக.
1. தற்குறிப்பேற்றணி – அ) ஒரு சொல் பல இடங்களில் உள்ள சொற்களோடு பொருள்
கொள்ளல்
2. தீவக அணி – ஆ) சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்திப் பொருள்
கொள்ளல்
3. நிரல் நிறை அணி – இ) உண்மையான இயல்புத் தன்மை
4. தன்மையணி – ஈ) கவிஞனின் குறிப்பேற்றல்
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
கருத்துரையிடுக