10th Tamil Unit 7 Book

10th Standard Tamil Guide, Notes Book Back Answers, 10th Tamil Unit 7 Full Answer Key,  Book Back answers and additional Question and answers. 10th All Subject Samacheer kalvi guide, Tamil Nadu State Board Syllabus 10th Guide, samacheer kalvi 10th Tamil guide.  

இயல் 7.1 சிற்றகல் ஒளி (தன்வரலாறு)

  • இயல் 7.1 சிற்றகல் ஒளி (தன்வரலாறு)
  • இயல் 7.2 ஏர் புதிதா?
  • இயல் 7.3 மெய்க்கீர்த்தி
  • இயல் 7.4 சிலப்பதிகாரம்
  • இயல் 7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே…
  • இயல் 7.6 புறப்பொருள் இலக்கணம்


7.1. சிற்றகல் ஒளி

I. பலவுள் தெரிக

1. ‘மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்’ – மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே-

  1. திருப்பதியும் திருத்தணியும்
  2. திருத்தணியும் திருப்பதியும்
  3. திருப்பதியும் திருச்செந்தூரும்
  4. திருப்பரங்குன்றமும் பழனியும்
விடை : திருப்பதியும் திருத்தணியும்

2. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது ………..

  1. திருக்குறள்
  2. புறநானூறு
  3. கம்பராமாயணம்
  4. சிலப்பதிகாரம்
விடை : சிலப்பதிகாரம்

II. குறு வினா

1. வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி. என்பதற்குச் சான்று தருக.

  • ம.பொ.சி. வறுமையிலும் நூல் வாங்குவதற்கும் பணமில்லாத நிலையில் பழைய புத்தகங்கள் வாங்கி படிப்பார்.
  • இவர் விரும்பமான புத்தகங்களை குறைந்த விலைக்கு வாங்கும் வழகம் உள்ளவர்
  • இவர் பல வேளைகளில் பட்னி கிடந்து புத்தகம் வாங்கி ஆனந்தம் அடைவார்
  • செவி வழியாகவும் இலக்கிய அறிவை பெற்றார்.

2. பொருத்தமான இடங்களில் நிறுத்தக் குறியிடுக.

  • பழங்காலத்திலே பாண்டியன் ஆண்ட பெருமையைக்கூறி சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன் – ம.பொ.சி.
  • பழங்காலத்திலே பாண்டியன் ஆண்ட பெருமையைக்கூறி, சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி, சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன். – ம.பொ.சி.

III. சிறு வினா

தலையைக் கொடுத்தேனம் தலைநகரைக் காப்போம் – இடம் சுட்டி பொருள் விளக்குக

இடம்:-
  • ம.பொசி.யின் தன் வரலாற்றப் பகுதியில் சிற்றகல் ஒளி என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ளன.
பொருள்:-
  • ஆந்திர மாநிலம் பிரியும் போது சென்னைதான் அதன் தலைநகராக இருக்க வேண்டும் என்று அந்திர தலைவர்கள் விரும்பினர். அதனை எதிர்த்து ம.பொ.சி. கூறிய கூற்று இது.
விளக்கம்:-
  • மாநகரத் தந்தை செங்கல்வராயன் தலைமையில் ஒரு கூட்டத்தை கூட்டினர். அப்போது, தமிழ் மாநிலத்தின் தலைநகர் “சென்னை” என்ற தீர்மானத்தை முன் மொழிந்தனர்
  • முன்மொழிந்து “தலையை கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” என்று ம.பொ.சி முழங்கினார்.
  • 25.03.1953-ல் பிரதமர் நேரு, சென்னை தமிழருக்கே என்ற உறுதிமொழியை நாடளுமன்றத்தில் நடுவணரசின் சார்பில் வெளியிட்டார்.

IV. நெடு வினா

நாட்டு விழாக்கள் – விடுதலைப் போராட்ட வரலாறு – நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர் பங்கு – குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் “மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும்” என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக.

மாணவப் பருவமும் நாட்டுப்பற்றும்

அறிமுகவுரை:-
  • அன்பார்ந்த அவையோரே! வணக்கம்! மாணவப் பருவத்திலே நாம் நாட்டுப்பற்று உடையர்களாய் இருத்தல் வேண்டும் என்பதைப் பற்றி உங்கள் முன் பேச வந்துள்ளேன்.
பொருள்:-
  • நாட்டின் எதிர்காலம் வகுப்பறைகளில் தான் வடிவமைக்கப்டுகிறது என்றார் நேரு. கல்வியோடு நாட்டுப்பற்றையும் கண் எனப் போற்றி வளர்க்க வேண்டும்.
  • சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்டு விழாக்களை கொண்டாடும் போது நம் முன்னோர்கள் சிந்திய கண்ணீரையும், செந்நீரையும், விலைமதிப்பில்லாத உயிரையும் மனப்பூர்வமாக உணர்ந்து செயல்பட வேண்டும்.
  • அகிம்சை, தீண்டாமை விலக்கு, கதர் விறபனை, வெள்ளையேன வெளியேறு போன்ற விடுதலைப் போராட்ட முறைகளை  நாம் மறத்தல் கூடாது.
  • செக்கடியில், சிறைச்சாலையிலும் நம் வீரர்கள் பட்ட துன்பத்தை எண்ணிப் பார்த்து, நாட்டு விழாக்களைக் கொண்டுடாடும் போது நாட்டைக் காக்கும் சூளுரை ஏற்பவர்களாகவும், அதனைச் செயல்படுத்துகிறவர்களாகவும் நாம் இருத்தல் வேண்டும்.
  • மாணவப் பருவத்தில் நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய மாணவர் படை ஆகியவற்றில் இணைந்து நாட்டுப் பற்றையும், சேவை மனப்பான்மையையும் நாம் வளர்த்து கொண்டால் நாம் நாட்டைக் காக்கும் நல்லோராய், பற்றாளராய் மாற முடியும்
  • கல்வி, பொருளாதாரம், தொழில் பெருக்கம் இவற்றில் நாம் அக்கறை உடையவர்களாய் இருப்பதும் நாட்டுப்பற்றே
  • நம் நாட்டின் உயர்வுக்கும் முற்போக்கு வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டையாக இருப்பவைகளை முறியடித்து கல்வி, அறிவியல், தொழில்நுட்பபம் போன்ற துறைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
  • சொந்த நலன் கருதி சொந்த நாட்டையே சீரழிக்கும் கயவர் போல் இல்லாமல் இருத்தல் வேண்டும்.
விளக்கம்:-
  • நாடு நமக்கு என்ன செய்தது என்பதை நினைக்காமல் நாட்டிற்காக நாம் நல்ல செயல்களை செய்வேம் என்று கூறி என் உரையை நிறைவு செய்கிறேன்.

 சிறந்த கல்வி – கூடுதல் வினாக்கள் 

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. ம.பாெ.சி-யின் இயற்பெயர் ____________
விடை :

2. காந்தியடிகள் சத்தியாகிரத்தை தொடங்கிய ஆண்டு ____________
விடை : 1906

3. இந்தியாவை விட்டு வெளியேறு என்ற தீர்மானத்தை இந்திய பேராயக் கட்சி நிறைவேற்றிய நாள் ____________
விடை : 1942 ஆகஸ்ட் 8

4. ம.பொ.சி. சாகித்திய அகாதெமி விருது ____________ -ல் பெற்றார்
விடை : 1966

5. ____________ என ம.பொசி. போற்றப்பட்டார்
விடை : சிலம்புச் செல்வர்

II. குறு வினா

1. 1906-ம் ஆண்டின் சிறப்புகள் யாவை?
  • ம.பொ.சி. சென்னை ஆயிரம் விளக்கு சால்வன் குப்பத்தில் 1906-ல் பிறந்தார்
  • காந்தியடிகள் சத்தியாகிர அறப்போரினை தென்னாப்பிரிக்காவில் தொடங்கினார்
  • ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதேசிக் கப்படல் நிறுவனத்தை தொடங்கினார் வ.உ.சி

2. ம.பொ.சி பற்றி குறிப்பு வரைக

  • சிலம்புச் செல்வர் என்று போற்றப்படுபவர்
  • இவர்  விடுதலை பேராட்ட வீரர் (1906 – 1995)
  • சட்டமன்ற பேரவைத் தலைவர் (1952-1954)
  • சட்ட மேலவை தலைவர் (1972 – 1978)
  • தமிழரசுக் கழகத்தை தொடங்கியவர்
  • “வள்ளலால் கண்ட ஒருமைப்பாடு” என்ற இவரின் நூலுக்கா சாகித்தி அகாதெமி விருது பெற்றார்

3. சென்னையை மீட்போம் என்று ம.பொ.சி குறிப்பிடுவன பற்றி கூறுக

  • ஆந்திர மாநிலம் பிரியும் போது சென்னைதான் அதன் தலைநகராக இருக்க வேண்டும் என்று அந்திர தலைவர்கள் விரும்பினர்.
  • தலைநகர் காக்க தன் முதல்வர் பதவியை துறக்க முன் வந்தார் இராஜாஜி
  • மாநகரத் தந்தை செங்கல்வராயன் தலைமையில் ஒரு கூட்டத்தை கூட்டினர். அப்போது, தமிழ் மாநிலத்தின் தலைநகர் “சென்னை” என்ற தீர்மானத்தை முன் மொழிந்தனர்
  • முன்மொழிந்து “தலையை கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” என்று ம.பொ.சி முழங்கினார்.
  • இதுவே சென்னையை மீட்போம் என்று ம.பொ.சி குறிப்பிடுவனவாகும்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1.ம.பொ.சி.க்கு பெற்றோர் இட்ட பெயர் ……………..

அ) சிவஞானம்
ஆ) ஞானப்பிரகாசம்
இ) பிரகாசம்
ஈ) பொன்னுசாமி
Answer:
ஆ) ஞானப்பிரகாசம்

2.சிவஞானி என்ற பெயரே……………..

என நிலைத்தது.
அ) சிவஞானம்
ஆ) சிவப்பிரகாசம்
இ) ஞானப்பிரகாசம்
ஈ) பிரகாசம்
Answer:
அ) சிவஞானம்

3.ம.பொ.சியின் இயற்பெயரை மாற்றிய முதியவர் ……………..

அ) பொன்னுசாமி
ஆ) சரவணன்
இ) சரபையர்
ஈ) சிவஞானி
Answer:
இ) சரபையர்

4.காந்தியடிகள் ‘சத்தியாகிரகம்’ என்னும் அறப்போர் முறையைத் தொடங்கிய ஆண்டு ……………..
அ) 1806
ஆ) 1906
இ) 1916
ஈ) 1919
Answer:
ஆ) 1906

5.ஒருவன் அறிவு விளக்கம் பெறுவதற்கான இரண்டு வழிகள் ……………..
அ) கல்வி, கேள்வி
ஆ) கல்வி, ஓவியம்
இ) கலை, பண்பாடு
ஈ) கலை, மேடைப்பேச்சு
Answer:
இ) கலை, பண்பாடு

6.‘இந்தியாவை விட்டு வெளியேறு’ என்ற தீர்மானத்தை இந்தியப் பேராயக் கட்சி நிறைவேற்றிய நாள்……………..
அ) 1942 ஜனவரி 8
ஆ) 1939 ஆகஸ்டு 8
இ) 1942 ஆகஸ்டு 8
ஈ) 1947 ஆகஸ்டு 18
Answer:
இ) 1942 ஆகஸ்டு 8

7.பசல் அலி ஆணையம் நடுவண் அரசுக்குத் தந்த பரிந்துரை வெளியான நாள் ……………..
அ) 1955 அக்டோபர் 10
ஆ) 1957 ஆகஸ்டு 10
இ) 1957 ஆகஸ்டு 10
ஈ) 1949 அக்டோபர் 15
Answer:
அ) 1955 அக்டோபர் 10

8.ஆஸ்டிரியா நாட்டின் தலைநகர் ……………..
அ) இலண்ட ன்
ஆ) டெல்அவிவ்
இ) வியன்னா
ஈ) சிட்னி
Answer:
இ) வியன்னா

9.‘சிற்றகல் ஒளி’ இடம் பெற்ற நூல் ……………..
அ) எனது போராட்டம்
ஆ) என் பயணம்
இ) என் விருப்பம்
ஈ) என் பாதை
Answer:
அ) எனது போராட்டம்

10.ம.பொ.சிவஞானத்தின் சிறப்புப் பெயர் ……………..
அ) சொல்லின் செல்வர்
ஆ) நாவலர்
இ) சிலம்புச் செல்வர்
ஈ) சிலம்பு அறிஞர்
Answer:
இ) சிலம்புச் செல்வர்

11.சாகித்திய அகாதெமி விருது பெற்ற ம.பொ.சியின் நூல்……………..
அ) வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
ஆ) மனுமுறை கண்ட வாசகம்
இ) எனது போராட்டம்
ஈ) வானம் வசப்படும்
Answer:
அ) வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு

12.ம.பொ.சி சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு ……………..
அ) 1956
ஆ) 1966
இ) 1976
ஈ) 1986
Answer:
ஆ) 1966

13.மார்ஷல் ஏ. நேசமணிக்குச் சிலையோடு மணி மண்டபமும் அமைந்துள்ள ஊர்……………..
அ) கன்னியாகுமரி
ஆ) தூத்துக்குடி
இ) நெல்லை
ஈ) நாகர்கோவில்
Answer:
ஈ) நாகர்கோவில்

14.ம.பொ.சிவஞானம் வாழ்ந்த காலம் ……………..
அ) 1906-1955
ஆ) 1906-1995
இ) 1906 -1966
ஈ) 1906-1998
Answer:
ஆ) 1906-1995

15.ம.பொ.சி. சிலை அமைந்துள்ள இடங்கள்……………..
அ) திருத்தணி, தியாகராயநகர்
ஆ) திருத்தணி, திருநெல்வேலி
இ) திருத்தணி, கன்னியாகுமரி
ஈ) திருத்தணி, திருப்பதி
Answer:
அ) திருத்தணி, தியாகராயநகர்

16.இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிகவும் சிறப்புடைய ஆண்டு ……………..
அ) 1906
ஆ) 1908
இ) 1947
ஈ) 1946
Answer:
அ) 1906

17.மா.பொ.சி பிறந்த சென்னை வட்டம் ……………..
அ) ஆயிரம் விளக்கு
ஆ) சால்வன் குப்பம்
இ) திருவல்லிக்கேணி
ஈ) சேப்பாக்கம்
Answer:
அ) ஆயிரம் விளக்கு

18.மா.பொ.சி பிறந்த சென்னைப் பகுதி ……………..
அ) ஆயிரம் விளக்கு
ஆ) சால்வன் குப்பம்
இ) திருவல்லிக்கேணி
ஈ) சேப்பாக்கம்
Answer:
ஆ) சால்வன் குப்பம்

19.மா.பொ.சி பள்ளியில் படிக்கும் போது ஆசிரியர் கண்டிக்க காரணம் ……………..
அ) தாமதமாக வந்தது
ஆ) பாடப் புத்தகம் கொண்டுவராமை
இ) படிக்காமை
ஈ) வீட்டுப் பாடம் எழுதாமை
Answer:
ஆ) பாடப் புத்தகம் கொண்டுவராமை

20.மா.பொ.சியின் பள்ளி வாழ்க்கை முடிவுற்ற வகுப்பு – ……………..
அ) ஐந்தாம் வகுப்பு
ஆ) மூன்றாம் வகுப்பு
இ) ஆறாம் வகுப்பு
ஈ) இரண்டாம் வகுப்பு
Answer:
ஆ) மூன்றாம் வகுப்பு

21.மா.பொ.சிக்கு இளமையிலேயே பாக்களைப் பயிற்றுவித்தவர் ……………..
அ) அன்னை
ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்
இ) மங்கலங்கிழார்
ஈ) மார்சல் ஏ. நேசமணி
Answer:
அ) அன்னை

22.மா.பொ.சி அறிவு விளக்கம் பெற எடுத்துக்கொண்ட வழி ……………..
அ) கல்வி
ஆ) கேள்வி
இ) கட்டுரை
ஈ) சிறுகதை
Answer:
ஆ) கேள்வி

23.மா.பொ.சிக்குக் கேள்வி ஞானம் பெருக்கியவர் ……………..
அ) அன்னை
ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்
இ) மங்கலங்கிழார்
ஈ) மார்சல் ஏ.நேசமணி
Answer:
ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்

24.வடக்கெல்லைத் தமிழர்களை ஒருங்கிணைத்துத் தமிழுணர்வு கொள்ளச் செய்தவர்……………..
அ) அன்னை
ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்
இ) மங்கலங்கிழார்
ஈ) மார்சல் ஏ.நேசமணி
Answer:
இ) மங்கலங்கிழார்

25.இளம் வயதிலேயே சமூக விடுதலைக்காகப் போராடிய வழக்கறிஞர்……………..
அ) அன்னை
ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்
இ) மங்கலங்கிழார்
ஈ) மார்சல் ஏ.நேசமணி
Answer:
ஈ) மார்சல் ஏ. நேசமணி

26.நாகர்கோவில் நகர்மன்றத்தலைவர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகிய பொறுப்புகளை வகித்தவர் ……………..
அ) அன்னை
ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்
இ) மங்கலங்கிழார்
ஈ) மார்சல் ஏ.நேசமணி
Answer:
ஈ) மார்சல் ஏ.நேசமணி

27.குமரிமாவட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர் ……………..
அ) அன்னை
ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்
இ) மங்கலங்கிழார்
ஈ) மார்சல் ஏ.நேசமணி
Answer:
ஈ) மார்சல் ஏ.நேசமணி

28.‘தலையைக் கொடுத்தாவது தலைநகரைக் காப்போம்’ என்று முழங்கியவர் ……………..
அ) மா.பொ .சி
ஆ) செங்கல்வராயன்
இ) மங்கலங்கிழார்
ஈ) மார்சல் ஏ.நேசமணி
Answer:
அ) மா.பொ .சி

29.சிலம்புச் செல்வர் என்று போற்றப்படுபவர்……………..
அ) மா.பொ .சி
ஆ) செங்கல்வராயன்
இ) மங்கலங்கிழார்
ஈ) மார்சல் ஏ.நேசமணி
Answer:
அ) மா.பொ.சி

30.மா.பொ.சிவஞானத்தின் ‘எனது போராட்ட நூல்’ ஒரு ……………..
அ) தன்வரலாறு
ஆ) கவிதை
இ) சிறுகதை
ஈ) புதினம்
Answer:
அ) தன்வரலாறு

31.தமிழரசுக் கழகத்தைத் தொடங்கியவர் ……………..
அ) மா.பொ .சி
ஆ) செங்கல்வராயன்
இ) மங்கலங்கிழார்
ஈ) மார்சல் ஏ.நேசமணி
Answer:
அ) மா.பொ.சி

32.பொருத்துக.
1. திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள் – அ) வடக்கெல்லைத்தமிழ் மக்களை ஒருங்கிணைத்த தமிழாசான்
2. மங்கலங்கிழார் – ஆ) மா.பொ.சிக்குக் கேள்வி ஞானம் பெருக்கியவர்
3. மார்சல் ஏ.நேசமணி – இ) மா.பொ.சிவஞானம்
4. சிலம்புச் செல்வர் – ஈ) குமரிமாவட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர்
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

33.பொருத்துக.
1. ஞானியாரடிகள் – அ) தமிழாசான்
2. மங்கலங்கிழார் – ஆ) வழக்கறிஞர்
3. மார்சல் ஏ.நேசமணி – இ) முதல்வர்
4. இராஜாஜி – ஈ) திருப்பாதிரிப்புலியூர்
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

34.பொருத்துக.
1. வாஞ்சு – அ) மாநகரத் தந்தை
2. செங்கல்வராயன் – ஆ) நீதிபதி
3. தேவசகாயம், செல்லையா – இ) மொழிவாரி ஆணையத் தலைமை
4. சர்தார் கே.எம்.பணிக்கர் – ஈ) தமிழரசுக் கழகத் தோழர்கள்
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
10th Guide TN students guide


*********THE END OF 7.1***********

7.2. ஏர் புதிதா?

- கு.ப. ராஜகோபாலன்

முதல்மழை விழுந்ததும் 
மேல்மண் பதமாகிவிட்டது. 
வெள்ளி முளைத்திடுது, விரைந்துபோ நண்
காளைகளை ஓட்டிக் கடுகிச்செல், முன்பு!
பொன் ஏர் தொழுது, புலன் வழிபட்டு 
மாட்டைப் பூட்டி 
காட்டைக் கீறுவோம். 
ஏர் புதிதன்று, ஏறும் நுகத்தடி கண்டது, 
காடு புதிதன்று, கரையும் பிடித்ததுதான் 
கை புதிதா, கார் புதிதா? இல்லை.
நாள்தான் புதிது, நட்சத்திரம் புதிது! . 
ஊக்கம் புதிது, உரம் புதிது!
மாட்டைத் தூண்டி, கொழுவை அமுத்து. 
மண்புரளும், மழை பொழியும், 
நிலம் சிலிர்க்கும், பிறகு நாற்று நிமிரும். 
எல்லைத் தெய்வம் எல்லாம் காக்கும்;
கவலையில்லை!
கிழக்கு வெளுக்குது 
பொழுதேறப் பொன்பரவும் ஏரடியில் 
நல்லவேளையில் நாட்டுவோம் கொழுவை.
10th Tamil Guide, TN Students Guide


நூல் வெளி

'ஏர் புதிதா?' எனும் கவிதை கு.பரா.படைப்புகள் என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது. 1902இல் கும்பகோணத்தில் பிறந்த கு.ப.ராஜகோபாலன் மிகச்சிறந்த சிறுகதை ஆசிரியர், கவிஞர், நாடக ஆசிரியர், மறுமலர்ச்சி எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்டவர். தமிழ்நாடு, பாரதமணி, பாரததேவி, கிராம ஊழியன் ஆகிய இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். இவரின் மறைவுக்குப் பின்னர் இவரது படைப்புகளுள் அகலிகை, ஆத்மசிந்தனை ஆகியன நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.


I. பலவுள் தெரிக

1. சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க.

  1. உழவு, மண், ஏர், மாடு
  2. மண், மாடு, ஏர், உழவு
  3. உழவு, ஏர், மண், மாடு
  4. ஏர், உழவு, மாடு, மண்
விடை : உழவு, ஏர், மண், மாடு

II. குறு வினா

1. முதல் மழை விழுந்ததும் என்னவெல்லாம் நிகழ்வதாக கு.ப.ரா. கவிபாடுகிறார்?

  • முதல் மழை விழுந்தவுடன் நிலம் ஈர்த்தால் பண்பட்டது.
  • விரைந்து சென்று பொன் போன்ற ஏரிலே காளைகளைப் பூட்டி, நிலத்தை உழுதனர். ஊக்கத்துடன், வலிமையுடன் உழைத்தனர். நாற்று நட்டனர்.
  • மேலும் மழை பொழிய நிலம் குளிர்ந்தது. நாற்றுகள் நிமிர்ந்து வளர்ந்தன. கிழக்கும் வெளுத்தது. கவலையும் மறந்தது.
“முதல்மழை விழுந்ததும்
மேல் மண் பதமாகிவிட்டது
வெள்ளி முளைத்திடுது, விரைந்து போ நண்பா!”

 ஏர் புதிதா? – கூடுதல் வினாக்கள் 

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. சங்கத்தமிழரின் திணை வாழ்வு ____________ அடிப்படையாக கொண்டது.
விடை : வேளாண்மையை

2. கு.ப.ராஜகோபாலன் ____________  பிறந்தவர்
விடை : 1902-ல் கும்பகோணத்தில்

3. உழுவோர் உலகத்தார்க்கு ____________ எனப் போற்றப்பட்டனர்.
விடை : அச்சாணி

4. உழவே ____________ தொழில்
விடை : தலையான

5. முதல் மழை விழுந்தவுடன் நிலம் ____________ பண்பட்டது.
விடை : ஈர்த்தால்

6. உழவு தொழிலாக இல்லாமல் ____________ திகழ்ந்தது
விடை : பண்பாடாகவும்

II. சிறு வினா

1. சங்கத்தமிழரின் திணை வாழ்வு எதனை அடிப்படையாக கொண்டது?

  • சங்கத்தமிழரின் திணை வாழ்வு வேளாண்மையை அடிப்படையாக கொண்டது.

2. யார் உலகத்தார்க்கு அச்சாணி எனப் போற்றப்பட்டனர்?

  • உழுவோர் உலகத்தார்க்கு அச்சாணி எனப் போற்றப்பட்டனர்.

3. எது தலையான தொழில் ஆகும்?

  • உழவே தலையான தொழில்
4. உழவு தொழிலாக இல்லாமல்  எவ்வாறு திகழ்ந்தது?
  • உழவு தொழிலாக இல்லாமல் பண்பாடாக திகழ்ந்தது
5. தமிழர் பண்பாட்டின் மகுடம் எது?
  • வேளாண்மை செழிக்கவும் மானுடம் தழைக்கவும் சித்திரைத் திங்களில் நடத்தப்படும் பொன் ஏர் பூட்டுதல் தமிழர் பண்பாட்டின் மகுடம் ஆகும்.

6. கு.ப.ராஜகோபாலன் பன்முகத் தன்மைகள் யாவை?

  • மிகச்சிறந்த சிறுகதை ஆசிரியர்
  • கவிஞர், நாடக ஆசிரியர்
  • மறுமலர்ச்சி எழுத்தாளர்
  • எனப் பன்முகத் தன்மை கொண்டவர்

7. கு.ப.ராஜகோபாலன் ஆசிரியராகப் பணிபுரிந்த இதழ்கள் யாவை?

  • தமிழ்நாடு
  • பாரதமணி
  • பாரததேவி
  • கிராம ஊழியன் ஆகிய இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

8. கு.ப.ராஜகோபாலன் மறைவுக்கு பின்னர் எந்த படைப்புகள் நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன?

  • கு.ப.ராஜகோபாலன் மறைவுக்கு பின்னர் இவரது அகலிகை, ஆத்மசிந்தனை ஆகிய படைப்புகள் நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
9. மண் எப்போது புரளும்?
  • மாட்டைத் தூண்டி, கொழுவை (கலப்பை இரும்பை) அழுத்தினால் மண் புரளும்
10. விரைந்து போ நண்பா என கவிஞர் கூறக் காரணம் யாது?
  • முதலில் மழை விழுந்து விட்டதாலும், மேல் மண் பக்குவமானதாலும், வெள்ளி முளைத்ததாலும் ஏறினை பூட்ட விரைந்து போ என்கிறார் கவிஞர்
11. பொன் ஏர் பூட்டுதல் என்றால் என்ன?
  • வேளாண்மை செழிக்கவும், மானுடம் தழைக்கவும் சித்திரைத் திங்களில் நடத்தப்படும் பண்பாட்டு நிகழ்வு பொன் ஏர் பூட்டுதல் ஆகும்
11. கு.ப.ராஜகோபாலன் குறிப்பு வரைக
  • 1902-ல் கும்பகோணத்தில் பிறந்தவர்
  • மிகச்சிறந்த சிறுகதை ஆசிரியர், கவிஞர், நாடக ஆசிரியர், மறுமலர்ச்சி எழுத்தாளர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர்
  • தமிழ்நாடு, பாரதமணி, பாரததேவி, கிராம ஊழியன் ஆகிய இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
  • இவரின் மறைவுக்கு பின்னர் இவரது படைப்புகளுள் அகலிகை, ஆத்மசிந்தனை ஆகியன நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

பலவுள் தெரிக

1.சங்கத்தமிழரின் திணை வாழ்வு எதை அடிப்படையாகக் கொண்டது?

அ) நெசவை
ஆ) போரினை
இ) வேளாண்மையை
ஈ) கால்நடையை
Answer:
இ) வேளாண்மையை

2.தமிழரின் தலையான தொழிலாகவும், பண்பாடாகவும் திகழ்வது ………………………….

அ) கல்வி
ஆ) உழவு
இ) நெசவு
ஈ) போர்
Answer:
ஆ) உழவு

3.தமிழர் பண்பாட்டின் மகுடமாகத் திகழ்வது ………………………….
அ) நாகரிகம்
ஆ) கலை
இ) உழுதல்
ஈ) பொன் ஏர் பூட்டுதல்
Answer:
ஈ) பொன் ஏர் பூட்டுதல்

4.பொன்ஏர் பூட்டுதல் நடத்தப்படும் மாதம் ………………………….
அ) சித்திரை
ஆ) ஆனி
இ) ஆடி
ஈ) தை
Answer:
அ) சித்திரை

5.‘ஏர் புதிதா?’ என்னும் கவிதை இடம் பெற்ற நூல் ………………………….
அ) அகலிகை
ஆ) ஆத்மசிந்தனை
இ) கு.ப.ரா. படைப்புகள்
ஈ) ஏர்முனை
Answer:
இ)கு.ப.ரா.படைப்புகள்

6.கு.ப.ரா. பிறந்த ஊர் ………………………….
அ) தஞ்சை
ஆ) மதுரை
இ) கும்பகோணம்
ஈ) நெல்லை
Answer:
இ) கும்பகோணம்

7.கு.ப.ரா. பிறந்த ஆண்டு ………………………….
அ) 1902
ஆ) 1912
இ) 1915
ஈ) 1922
Answer:
அ) 1902

8.கு.ப.ரா ஆசிரியராகப் பணிபுரிந்த இதழ்களில் ஒன்று. ………………………….
அ) தமிழ் ஊழியன்
ஆ) தினமணி
இ) இந்தியா
ஈ) கிராம ஊழியன்
Answer:
ஈ) கிராம ஊழியன்

9.‘கடுகி செல்’ – இதில் ‘கடுகி’ என்பதன் பொருள் ………………………….
அ) செல்லுதல்
ஆ) மெதுவாக
இ) விரைந்து
ஈ) இயல்பாக
Answer:
இ) விரைந்து

10.நிலம் சிலிர்க்கும், நாற்று ………………………….
அ) வளரும்
ஆ) வளையும்
இ) நிமிரும்
ஈ) நெகிழும்
Answer:
இ) நிமிரும்

11.ஊக்கம் புதிது, உரம் புதிது – இதில் உரம் என்ற சொல் குறிப்பது ………………………….
அ) வலிமை
ஆ) பயிர் உரம்
இ) சத்து
ஈ) வித்து
Answer:
அ) வலிமை

12.உலகத்தார்க்கு அச்சாணி என்போர் ………………………….
அ) தொழுவோர்
ஆ) கற்போர்
இ) உழுவோர்
ஈ) போரிடுவோர்
Answer:
இ) உழுவோர்

13.பொருத்துக.
1. முதல் மழை – அ) பதமாகியது
2. மேல்மண் – ஆ) முளைத்தது
3. வெள்ளி – இ) தொழு
4. பொன்னேர் – ஈ) விழுந்தது
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

14.‘வெள்ளி முளைத்திடுது விரைந்து போ நண்பா’ என்று பாடியவர் ………………………….
அ) மா.பொ .சி
ஆ) கு.ப.ராஜகோபாலன்
இ) சுரதா
ஈ) பாரதிதாசன்
Answer:
ஆ) கு.ப.ராஜகோபாலன்

15.தவறான ஒன்றினைக் கண்டறிக.
அ) மண் புரளும்
ஆ) மேற்கு வெளுக்கும்
இ) மழை பொழியும்
ஈ) எல்லைத் தெய்வம் காக்கும்
Answer:
ஆ) மேற்கு வெளுக்கும்

16.‘பொழுதேறப் பொன்பரவும் ஏரடியில்
நல்லவேளையில் நாட்டுவோம் கொழுவை’ என்று பாடியவர்?
அ) மா.பொ.சி
ஆ) கு.ப.ராஜகோபாலன்
இ) சுரதா
ஈ) பாரதிதாசன்
Answer:
ஆ) கு.ப.ராஜகோபாலன்

***********THE END OF 7.2************

7.3 மெய்க்கீர்த்தி

-இரண்டாம் இராசராச சோழன்


7.3 மெய்க்கீர்த்தி

மெய்க்கீர்த்தி 


இந்தி ரன்முதற் திசாபாலர் எண் மரும்ஒரு வடிவாகி 
வந்தபடி யென நின்று மனுவாணை தனி நடாத்திய 
படியானையே பிணிப்புண்பன 
வடிமணிச்சிலம்பே யரற்றுவன 
செல்லோடையே கலக்குண்பன
    வருபுனலே சிறைப்படுவன 
மாவே வடுப்படுவன 
    மாமலரே கடியவாயின் 
காவுகளே கொடியவாயின 
    கள்ளுண்பன வண்டுகளே
பொய்யுடையன வரைவேயே 
    போர்மலைவன எழுகழனியே
மையுடையன நெடுவரையே
மருளுடையன இளமான்களே
கயற்குலமே பிறழ்ந்தொழுகும்.
கைத்தாயரே கடிந்தொறுப்பார் 
இயற்புலவரே பொருள்வைப்பார்
இராசராசன் காலத் தமிழ் கல்வ  
இசைப் பாணரே கூடஞ்செய்வார்
என்று கூறி இவன்காக்கும் திருநாட்டி னியல்இதுவென 
நின்றுகாவல் நெறிபூண்டு நெறியல்லது நினையாது 
தந்தையில்லோர் தந்தையாகியந் தாயரில்லோர் தாயராகியும் 
மைந்தரில்லொரு மைந்தராகியும் மன்னுயிர்கட்குயிராகியும் 
விழிபெற்ற பயனென்னவும் மெய்பெற்ற அருளென்னவும் 
மொழிபெற்ற பொருளென்னவும் முகம்பெற்ற பனுவலென்னவும் 
எத்துறைக்கும் இறைவனென்னவும் யாஞ்செய்.....

I. பலவுள் தெரிக

‘தன் நாட்டு மக்களுக்குத் தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன்’ என்னும் மெய்க்கீர்த்தித் தொடர் உணர்த்தும் பொருள் –

  1. மேம்பட்ட நிருவாகத்திறன் பெற்றவர்
  2. மிகுந்த செல்வம் உடையவர்
  3. பண்பட்ட மனிதநேயம் கொண்டவர்
  4. நெறியோடு நின்று காவல் காப்பவர்
விடை : நெறியோடு நின்று காவல் காப்பவர்

II. குறு வினா

மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் யாது?

  • மன்னர் தம் நாட்டின் வளத்தையும் ஆட்சிச் சிறப்பையும் காலம் கடந்தும் உணர்த்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக புகழும் பெருமையும் அழியாத வகையில் அவை அனைத்தையும் கல்லில் செதுக்கினார்கள். இதுவே மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் ஆகும்.

III. குறு வினா

பின்வரும் பத்தியைப் படித்து மையக்கருத்தை எழுதுக.

  • பேரரசனது மெய்ப் புகழை எடுத்துக்கூறுவது மெய்க்கீர்த்தி. பொதுவாக இது சோழ மன்னருடைய சாசனங்களின் தொடக்கத்தில் அரசனுடைய இத்தனையாவது ஆட்சியாண்டு என்று கூறுமிடத்து அமைக்கப்பெறும். சிறப்பாக அவனுடைய போர் வெற்றிகளையும் வரலாற்றையும் முறையாகக் கூறி, அவன் தன் தேவியோடு வீற்றிருந்து நீடு வாழ்க எனக் கூறி, பிறகே சாசனம் எழுந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடும்.
  • சோழ மன்னர் பரம்பரையில் மெய்க்கீர்த்தியோடு சாசனங்களைப் பொறிக்கும் வழக்கம் நெடுநாள் இருந்ததில்லை. முதல் இராசராசனுடை ய எட்டாம் ஆண்டில் தான் மெய்க்கீர்த்தி காணப்படுகிறது. இதன் கண் வமிச பாரம்பரியம் விதந்து ஓதப்படவில்லை ; ஏனைய பகுதிகள் உள்ளன.எனினும் இது மிகவும் சுருக்கமாகவே உள்ளது. இன்னும் பின்வந்த மெய்க்கீர்த்திகளின் வமிச பரம்பரையை மிகவும் விரித்துக் கூறியுள்ளன.
மையக்கருத்து
  • பேரரசனது புகழை எடுத்துக் கூறுவது மெய்க்கீர்த்தி. இது சோழ மன்னருடைய சாசனங்களில் அரசனுடைய ஆட்சியாண்டு கூறுமிடத்தில் அமைக்கப் பெறும். மன்னனுடைய வெற்றிகளையும், வரலாறுகளையும் கூறும். முதல் இராசராசனுடைய எட்டாம் ஆண்டு தான் மெய்க்கீர்த்தி காணப்பபடுகிறது. இதன் கண் வமிச பாரம்பரியம் விதந்து ஓதப்படுவதில்லை. இதன் பின் வந்த மெய்க்கீர்த்திகள் வமிச பரம்பரையை விரித்துக் கூறுகின்றன.

IV. நெடு வினா

பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ள மெய்க்கீர்த்தி பாடலின் நயத்தை விளக்கு

இரண்டாம் இராசராச சோழன் மெய்க்கீர்த்தி

குறிப்புச்சட்டம்

  • முன்னுரை
  • சோழ நாட்டின் வளம்
  • மன்னனின் சிறப்பும் பெருமையும்
  • முடிவுரை

முன்னுரை:-

  • நம் பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ள இரண்டாம் இராராச சோழனது மெய்க்கீர்த்தி பாடல், சோழ நாட்டின் வளத்தையும், மன்னனின் சிறப்பையும் நயமுடன் எடுத்துரைக்கிறது.
சோழ நாட்டின் வளம்:-
10th tamil guide samacheer kalvi guide tn students guide

மன்னனின் சிறப்பும் பெருமையும்:-
  • மன்னன் மக்களுக்கு காவல் தெய்வமாக, தாயாக, தந்தையாக இருக்கிறான். மகன் இல்லாதோர்க்கு மகனாக இருக்கிறான். உலக உயிர்களுக்கு உயிராக, விழியாக. மெய்யாக, புகழ் பெற்ற நூலாக புகழ் அனைத்துக்கும் தலைவனாக விளங்குகிறான்.
முடிவுரை:-
  • சோழ அரசனின் பெருமையும் அவன் காலத்தில் நாடு பெற்றிருந்த வளத்தையும் மெய்க்கீர்த்திப் பாடல் வழியாக நயம்பட உரைக்கிறது.

 மெய்க்கீர்த்தி – கூடுதல் வினாக்கள் 

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. மெய்க்கீர்த்திக்கு முன்னோடியாகத் திகழும் சங்க இலக்கிப் பாடல்கள் ____________  ஆகும்
விடை : பதிற்றுப்பத்து

2. சோழ நாட்டில் பிறந்தொழுகுவது ____________ 
விடை :

3. இரண்டாம் இராசராச சோழனின் மெய்கீர்தியின் வரிகள் ____________ 
விடை : 91

4. அழியாத கல் இலக்கியம் எனப் போற்றபடுவது ____________ 
விடை : மெய்க்கீர்த்தி

5. திரிபாலர் ____________ ஆவார்
விடை : எண்மர்

6. அரசர்கள் தங்கள் ____________, ____________ காலம் கடந்தும் நிலைக்க விரும்பினார்கள்
விடை : வரலாறும், பெருமையும்

II. சிறு வினா

1. இரண்டாம் இராசராசனின் பட்டங்கள் யாவை?

  • கோப்பரகேசரி
  • திருபுவனச் சக்கரவர்த்தி

2. திசாபாலர் எண்மர் யாவர்

  • இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன்

3. மெய்க்கீர்த்தி குறிப்பு வரைக.

  • அரசர்கள் தம் வரலாறும், பெருமையும் காலம் கடந்து நிலைத்து நிற்கச் செய்யும் சாசனம்
  • பல்லவர் கல்வெட்டுகளிலும், பாண்டியர் செப்பேடுகளிலும், முளைவிட்ட இவ்வழக்கம் சோழ காலத்தில் மெய்க்கீர்த்தி எனப் பெயர் பெற்றது.
  • முதலாம் இராராசன் காலந்தொட்டு மெய்க்கீர்திகள் கல்லில் வடிவமைக்கப்பட்டன.
  • மெய்க்கீர்த்தி ஒரு மன்னரின் ஆட்சிச் சிறப்பு, நாட்டு வளம் ஆகியவற்றை ஒரு சேர உணர்ந்துவதாக உள்ளது.

பலவுள் தெரிக

1.மெய்க்கீர்த்திக்கு முன்னோடியாய்த் திகழும் சங்க இலக்கியப்பாடல்கள்……………………….

அ) புறநானூறு
ஆ) பதிற்றுப்பத்து
இ) குறுந்தொகை
ஈ) அகநானூறு
Answer:
ஆ) பதிற்றுப்பத்து

2.பல்லவர் கால கல்வெட்டும், பாண்டியர் கால செப்பேடும் சோழர் காலத்தில் எனப் ………………………பெயர் பெற்றது.

அ) மெய்க்கீர்த்தி
ஆ) மெய்யுரை
இ) நூல்
ஈ) செப்பம்
Answer:
அ) மெய்க்கீர்த்தி

3.………………………இந்திரன் முதலாகத் திசைபாலர் எட்டு பேரும் ஒருவரும் பெற்றதுபோல் ஆட்சி செய்தவன்.

அ) இளஞ்சேரலாதன்
ஆ) இரண்டாம் இராசராசன்
இ) இராஜேந்திர சோழன்
ஈ) முதலாம் இராசராசன்
Answer:
ஆ) இரண்டாம் இராசராசன்

4.சோழநாட்டில் பிறழ்ந்தொழுகுவது………………………

அ) இளமான்கள்
ஆ) யானைகள்
இ) மக்கள்
ஈ) கயற்குலம்
Answer:
ஈ) கயற்குலம்

5.‘காவுகளே கொடியவாயின’ – இதில் ‘காவு’ என்பதன் பொருள்………………………

அ) காடுகள்
ஆ) மலைக்குகை
இ) கடல்
ஈ) யானைகள்
Answer:
அ) காடுகள்

6.‘இயற்புலவரே பொருள் வைப்பார்’ – எதில்?
அ) இல்லத்தில்
ஆ) மன்றத்தில்
இ) செய்யுளில்
ஈ) சான்றோர் அவையில்
Answer:
இ) செய்யுளில்

7.‘முகம் பெற்ற பனுவலென்னவும்’ – பனுவல் என்பதன் பொருள்………………………
அ) பொருள்
ஆ) முன்னுரை
இ) நூல்
ஈ) கோல்
Answer:
இ) நூல்

8.கோப்பரகேசரி, திருபுவனச்சக்கரவர்த்தி எனப் பட்டங்கள் பெற்றவன்………………………
அ) இரண்டாம் இராசராசன்
ஆ) குலோத்துங்கன்
இ) முதலாம் இராசராசன்
ஈ) விக்கிரம சோழன்
Answer:
அ) இரண்டாம் இராசராசன்

9.யாருடைய காலந்தொட்டு மெய்க்கீர்த்தி கல்லில் வடிக்கப்பட்டது?
அ) பல்ல வர்
ஆ) பாண்டியர்
இ) முதலாம் இராசராசன்
ஈ) இராஜேந்திர சோழன்
Answer:
இ) முதலாம் இராசராசன்

10.இரண்டாம் இராசராச சோழனின் மெய்க்கீர்த்தியின் வரிகள்………………………
அ) 81
ஆ) 91
இ) 101
ஈ) 112)
Answer:
ஆ) 91

11.அழியாத கல் இலக்கியம் எனப் போற்றப்படுவது………………………
அ) செப்பேடு
ஆ) சிற்பங்கள்
இ) ஓவியம்
ஈ) மெய்க்கீர்த்தி
Answer:
ஈ) மெய்க்கீர்த்தி

12.சோழநாட்டில் சிறைப்படுவன………………………
அ) மா
ஆ) வண்டுகள்
இ) வருபுனல்
ஈ) காவுகள்
Answer:
இ) வருபுனல்

13.திசாபாலர் ………………………ஆவார்
அ) அறுவர்
ஆ) எழுவர்
இ) எண்மர்
ஈ) பதின்மர்
Answer:
இ) எண்மர்

14.பொருத்துக.
1. பிணிப்பு – அ) நீர்
2. புனல் – ஆ) கட்டுதல்
3. கழனி – இ) இருள்
4. மை – ஈ) வயல்
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

15.பொருத்துக.
1. முகம் – அ) மலை
2. வரை – ஆ) செவிலித்தாய்
3. கைத்தாய் – இ) நூல்
4. பனுவல் – ஈ) முன்னுரை
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

16.பொருத்துக.
1. யானை – அ) புலம்புகின்றன
2. சிலம்புகள் – ஆ) பிணிக்கப்படுவன
3. ஓடைகள் – இ) வடுப்படுகின்றன
4. மாங்காய்கள் – ஈ) கலக்கமடைகின்றன
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

17.பொருத்துக.
1. மலர்கள் – அ) பறிக்கப்படுகின்றன
2. காடுகள் – ஆ) தேன் உண்ணுகின்றன
3. வண்டுகள் – இ) கொடியன
4. மலை மூங்கில்- ஈ) உள்ளீடு இன்றி வெறுமை
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ

18.பொருத்துக.
1. நெற்கதிர்கள் – அ) இருள் சூழ்ந்திருக்கின்றன
2. மலைகள் – ஆ) மருள்கின்றன
3. மான்களின் கண்கள் – இ) பிறழ்ந்து செல்கின்றன
4. குளத்து மீன்கள் – ஈ) போராக எழுகின்றன
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

19.பொருத்துக.
1. செவிலித்தாய் – அ) பொருள் பொதிந்து கிடக்கின்றது.
2. புலவர் பாட்டு – ஆ) தெருவில் ஆடிப்பாடுபவர்.
3. இசைப்பாணர் – இ) பிறழ்ந்து செல்கின்றன.
4. குளத்து மீன்கள் – ஈ) சினங்காட்டுவார்.
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

20.சொற்றொடரை முறைப்படுத்துக.
i) கல்தச்சர்களால்
ii) புலவர்களால் எழுதப்பட்டு
iii) மெய்க்கீர்த்திகள்
iv) கல்லில் பொறிக்கப்பட்டவை
அ) (ii)-(ii)-(i)-(iv)
ஆ) (ii)-(i)-(i)-(iv)
இ) (i)-(iii)-(iv)-(ii)
ஈ) (iv)-(iii)-(i)-(ii)
Answer:
அ) (iii)-(ii)-(i)-(iv)

21.பொருந்தாததைக் கண்டறிக.
அ) யானைகள் பிணிக்கப்படும் – மக்கள் பிணிக்கப்படுவதில்லை
ஆ) சிலம்புகள் புலம்பும் – மக்கள் புலம்புவதில்லை
இ) ஓடைகள் கலக்கமடையும் – மக்கள் கலக்கமடைவதில்லை
ஈ) ஓடைகள் அடைக்கப்படுவதில்லை – மக்கள் அடைக்கப்படுகின்றனர்
Answer:
ஈ) ஓடைகள் அடைக்கப்படுவதில்லை – மக்கள் அடைக்கப்படுகின்றனர்

22.செப்பமான வடிவம் பெற்றது, கல்லிலக்கியமாய் அமைந்தது………………………
அ) கல்வெட்டு
ஆ) மெய்க்கீர்த்தி
இ) செப்பேடு
ஈ) இலக்கியம்
Answer:
ஆ) மெய்க்கீர்த்தி

23.தந்தையில்லாதவருக்குத் தந்தையாக இருக்கின்றவன்………………………
அ) இராசராச சோழன்
ஆ) ஒட்டக்கூத்தர்
இ) பல்லவர்
ஈ) சேரர்
Answer:
அ) இராசராச சோழன்

24.தாயில்லாதவருக்குத் தாயாக இருக்கின்றவன்………………………
அ) இராசராச சோழன்
ஆ) ஒட்டக்கூத்தர்
இ) பல்லவர்
ஈ) சேரர்
Answer:
அ) இராசராச சோழன்

25.மகனில்லாதவருக்கு மகனாக இருக்கின்றவன்………………………
அ) இராசராச சோழன்
ஆ) ஒட்டக்கூத்தர்
இ) பல்ல வர்
ஈ) சேரர்
Answer:
அ) இராசராச சோழன்

26.உலக உயிர்களுக்கு எல்லாம் உயிராக இருக்கின்றவன்………………………
அ) இராசராச சோழன்
ஆ) ஒட்டக்கூத்தர்
இ) பல்லவர்
ஈ) சேரர்
Answer:
அ) இராசராச சோழன்

27.விழி பெற்ற பயனாகவும் மெய் பெற்ற அருளாகவும் மொழி பெற்ற பொருளாகவும் புகழ்பெற்ற நூ லாகவும் திகழ்பவன்………………………
அ) இராசராச சோழன்
ஆ) ஒட்டக் கூத்தர்
இ) பல்ல வர்
ஈ) சேரர்
Answer:
அ) இராசராச சோழன்

28.புகழ் அனைத்திற்கும் தலைவனானவன்………………………
அ) இராசராச சோழன்
ஆ) ஒட்டக் கூத்தர்
இ) பல்ல வர்
ஈ) சேரர்
Answer:
அ) இராசராச சோழன்

***********THE END OF 7.3*************


7.4 சிலப்பதிகாரம்

- இளங்கோவடிகள்

10th tamil guide, TN samacheer kalvi guide,


மருவூர்ப் பாக்கம்


வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும் 
பூவும் புகையும் மேனிய விரையும்
பகர்வனர் திரிதரு நகர வீதியும்;
பட்டினும் மயிரினும் பருத்தி நூலிலும் 
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்;

*தூசும் துகிரும் ஆரமும் அகிலும்
மாகஅறு முத்தும் மணியும் பொன்னும் 
அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா 
வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்;

பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு 
கூலம் குவித்த கூல வீதியும்; *

காழியர், கூவியர், கள்நொடை ஆட்டியர், 
மீன்விலைப் பரதவர், வெள்உப்புப் பகருநர், 
பாசவர், வாசவர், பல்நிண விலைகுரோடு 
ஓசுநர் செறிந்த ஊன்மலி இருக்கையும்;

கஞ்ச காரரும் செம்புசெய் குநரும் 
மரம்கொல் தச்சரும் கருங்கைக் கொல்லரும்

கண்ணுள் வினைஞரும் மண்ணீட்டு ஆளரும். 
பொன்செய் கொல்லரும் நன்கலம் தருநரும் 
துன்ன காரரும் தோலின் துன்னரும்
கிழியினும் கிடையினும் தொழில்பல பெருக்கிப்
பழுஇல் செய்வினைப் பால்கெழு மாக்களும்; 
குழவினும் யாழினும் குரல்முதல் எழும் 
வழுவின்றி இசைத்து வழித்திறம் காட்டும் 
அரும்பெறல் மரபின் பெரும்பாண் இருக்கையும்;

சிறுகுறுங் கைவினைப் பிறர்வினை யாளரொடு 
மறுகின்றி விளங்கும் மருவூர்ப் பாக்கமும் 
இந்திரவிழா ஊரெடுத்த கரதை ( அடி 13-39)

I. பாடலின் பொருள்

    புகார் நகர மருவூர்ப்பாக்கத்தின் வணிக வீதிகளில் வண்ணக்குழம்பு, சுண்ணப்பொடி, குளிர்ந்த மணச்சாந்து. பூ. நறுமணப் புகைப்பொருள்கள். அகில் முதலான மணப்பொருள்கள் விற்பவர்கள் வீதிகளில் வணிகம் செய்து கொண்டிருக்கின்றனர்.

    இங்குப் பட்டு. முடி, பருத்திநூல். இவற்றினைக் கொண்டு அழகாகப் பின்னிக் கட்டும் கைத்தொழில் வல்லுநரான நெசவாளர் வாழும் வீதிகள் உள்ளன. இங்குப் பட்டும் பவளமும், சந்தனமும் அகிலும், முத்தும் மணியும் பொன்னும் அளக்க முடியாத அளவிற்குக் குவிந்து கிடக்கும் வளம் நிறைந்த அகன்ற வணிக வீதிகளும் உள்ளன. மேலும் இவ்வீதிகளில் வேறு பலப்பல பண்டங்களின் விற்பனை நடைபெறுகின்றது. எட்டுவகைத் தானியங்களும் குவிந்து கிடக்கும் கூலக்கடைத் தெருக்களும் உள்ளன.

    மருவூர்ப்பாக்கத்தின் தெருக்களில், பிட்டு வணிகம் செய்பவரும் அப்பம் சுடுபவரும் கள் விற்கும் வலைச்சியரும் மீன் விற்கும் பரதவரும் உள்ளனர். மேலும் வெண்மையான உப்பு விற்கும் உமணரும் வெற்றிலை விற்பவரும் ஏலம் முதலான ஐந்து நறுமணப் பொருள் விற்பவரும் பல வகையான இறைச்சிகள் விற்பவரும் எண்ணெய் வணிகம் இங்கு, வணிகம் செய்கின்றனர்.

    இவற்றுடன் அத்தெருக்களில் பல்வகைப் பொருள்களை விற்கின்ற கடைகளும் உள்ளன. வெண்கலம், செம்புப் பாத்திரங்கள் செய்வோர், மரத்தச்சர், இரும்புக்கொல்லர், ஓவியர், மண் பொம்மைகள் செய்பவர், சிற்பிகள் ஆகியோர் உள்ளனர். பொற்கொல்லர், இரத்தின வேலை செய்பவர், தையற்காரர், தோல்பொருள் தைப்பவர், துணியாலும் கட்டைகளாலும் பொம்மைகள் செய்பவர் ஆகியோர் உள்ளனர்.

    இவ்வாறாகப் பழுதின்றிக் கைத்தொழில் பல செய்யும் மக்கள் வாழும் பகுதிகள் இங்கு நிறைந்துள்ளன. குழவிலும் யாழிலும் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்னும் ஏழு இசைகளைக் (ச. ரி, க, ம, ப, த, நி என்னும் ஏழு சுரங்களை) குற்றமில்லாமல் இசைத்துச் சிறந்த திறமையைக் காட்டும் பெரும்பாணர்களின் இருப்பிடங்களும் உள்ளன.

    இவர்களுடன் மருவூர்ப்பாக்கத்தின் தெருக்களில் சிறுசிறு கைத்தொழில் செய்வோர், பிறருக்கு ஏவல் செய்வோர் வாழும் இடங்களும் உள்ளன. இவை அனைத்தும் குற்றமின்றிச் சிறப்புடன் அமைந்து விளங்கப் பரந்து கிடந்தன.

II. சொல்லும் பொருளும்

  • சுண்ணம் – நறுமணப்பொடி,
  • காருகர் – நெய்பவர் (சாலியர்),
  • தூசு – பட்டு
  • துகிர் – பவளம்
  • வெறுக்கை – செல்வம்
  • நொடை – விலை
  • பாசவர் – வெற்றிலை விற்போர்
  • ஓசுநர் – எண்ணெய் விற்போர்
  • மண்ணுள் வினைஞர் – ஓவியர்
  • மண்ணீட்டாளர் – சிற்பி
  • கிழி – துணி

III. இலக்கணக் குறிப்பு

  • வண்ணமும் சுண்ணமும் – எண்ணும்மை
  • பயில்தொழில் – வினைத்தொகை

IV. பகுபத உறுப்பிலக்கணம்

மயங்கிய – மயங்கு + இ(ன்) + ய் + அ
  • மயங்கு – பகுதி
  • இ(ன்) – இறந்த கால இடைநிலை
  • ‘ன்’ – புணர்ந்து கெட்டது.
  • ய் – உடம்படு மெய்
  • அ – பெயரெச்ச விகுதி
ஐம்பெருங்காப்பிய முறைவைப்பு

சிந்தா மணியாம் சிலப்பதிகா ரம்படைத்தான் கந்தா மணிமே கலைபுனைந்தான் - நந்தா வளையா பதிதருவான் வாசவனுக் கீந்தான் திளையாத குண்டலகே சிக்கும்

-திருத்தணிகையுலர்,

IV. சிறு வினா

பாசவர், வாசவர், பல்நிண விலைஞர், உமணர் – சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?

  • பாசவர் – வெற்றிலை விற்பவர்கள்
  • வாசவர் – நறுமணப் பொருட்களை விற்பவர்
  • பல்நிண விலைஞர் – பல்வகை இறைச்சிகளை விலைகூறி விற்பவர்கள்
  • உமணர் – உப்பு விற்பவர்

III. குறு வினா

“பகர்வனர் திரிதிரு நகரவீதியும்;
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்;
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்”

அ) இவ்வடிகள் இடம்பெற்ற நூல் எது?
சிலப்பதிகாரம்
ஆ) பாடலில் அமைந்த மோனையை எடுத்து எழுதுக.
பகர்வனர் – பட்டினும்
இ) எதுகைச் சொற்களை அடிக்கோடிடுக.
பட்டினும் – சுட்டு
ஈ) காருகர் – பொருள் தருக.
நெய்பவர் (நெசவாளர்)
உ) இப்பாடலில் காணப்படும் நறுமணப் பொருள்கள் யாவை?
சந்தனமும் அகிலும்

III. நெடு வினா

சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக  வளாகங்களோடும், அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக.

  • மருவூர்ப்பாக்கத்து வணிகவீதிகளில் வண்ணக்குழும்பு, சுண்ணப்பொடி விற்பது போல இன்றைய அங்காடிகளிலும், வணிக வளாகங்களிலும் விற்கப்படுகின்றன.
  • குளிர்ச்சி பொருந்திய சந்தனம், பூ வகைகள், ஊதுவத்தி, அகில் போன்ற நறுமணப் பொருள்களும் இன்றைய வணிக வளாகத்திலும், கிடைக்கின்றன, விற்கப்படுகின்றன.
  • பொன், மணி, முத்து, பவளம், ஆகியவை மருவூர்ப்காக்க வீதிகளில் விற்பனை செய்யப்பட்டது. இன்று வணிக வளாகத்திலும் நகைக்கடைகளில் பொன், மணி, முத்து, பவளம் விற்கப்படுகிறது,
  • வணிக வீதிகளில் குவியலாகக் கிடந்து தானிய வகைகள்.
  • இன்று அங்காடிகளில் தானிய வகைகளை எடை போட்டு பொட்டலங்களில் கட்டி விற்பனை செய்கின்றனர்.
  • மரூவூர்ப்பாக்கத் தெருக்களில் உப்பு, வெற்றிலை, நறுமணப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது போல், இன்றைய அங்காடிகளிலும் விற்கப்படுகின்றது.
  • வெண்கலம், செம்புப் பாத்திரம், மரப்பொருட்கள், இரும்புப் பொருட்கள் கிடைத்ததைப் போல, இன்றைய அங்காடிளிலும் விற்கப்படுகின்றது.
  • வெண்கலம், செம்புப் பாத்திரம், மரப்பொருட்கள், இரும்புப் பொருட்கள் கிடைத்ததைப் போல இன்றைய அங்காடி, வணிக வளாகங்களில் கிடைப்பதோடு, கூடுதலாக பல நவீனப் பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள (நெகிழி) பொருள்கள் நவீன அலங்காரங்களுடன் கிடைக்கின்றன.
  • மருவூர்பாக்க வீதிகளில் பொற்கொல்லர், இரத்தின வேலை செய்பவர், தையற்காரர், தோல் பொருள் செய்பவர், துணியாலும், கட்டையாலும் பொம்மை செய்பவர்கள் எனப் பல திறப்பட்ட கைவினைஞர்கள் இருந்தனர்.
  • அதைப்போலவே, இன்றைய அங்காடிகளிலும், வணிக வளாகங்களிலும் இத்தகு கைவினைக் கலைஞர்கள், நவீன தொழில் நுட்பத்துடன் தொழில் வல்லோராய் இருக்கின்றார்கள். அழகு மிளிரும் கைவினைப் பொருள்களைச் செய்து விற்பனையும் செய்கின்றனர்.

 சிலப்பதிகாரம் – கூடுதல் வினாக்கள் 

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. இளங்கோவடிகள் ____________ சேர்ந்தவர்
விடை : சேர மரபைச்

2. ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று ____________
விடை : சிலப்பதிகாரம்

3. சிலப்பதிகாரத்தில் ____________, ____________ உள்ளன
விடை : மூன்று காண்டங்கள், முப்பது காதைகள்

4. சிலப்பதிகாரத்தோடு தொடர்புடைய காப்பியம் ____________
விடை : மணிமேகலை

5. சிலப்பதிகாரத்தின் பெரும் பிரிவு ____________
விடை : காண்டம்

6. சிலப்பதிகாரம் ____________ பற்றிய செய்திகளைக் கூறுகிறது
விடை : மூவேந்தர்களின்

II. சிறு வினா

1. சிலப்பதிகாரத்தில் உள்ள காண்டங்கள் எத்தனை? அவை யாவை?


சிலப்பதிகாரத்தில் உள்ள காண்டங்கள் மூன்று.
அவை
  • புகார்க்காண்டம்
  • மதுரைக்காண்டம்
  • வஞ்சிக்காண்டம்

2. இரட்டைக் காப்பியங்கள் எவை? அவ்வாறு அழைக்கப்படக் காரணம் யாது?

இரட்டைக் காப்பியங்கள் என்பது சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகும்
காரணம்:-
  • கோவலன், கண்ணகி, மாதவி வாழ்க்கையைப் பாடுவது மணிமேகலைக் காப்பியத்துடன் கதைத்தொடர்பு கொண்டிருப்பதால் இவை இரண்டும் இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படுகின்றன

3. சிலப்பதிகாரத்தின் சிறப்பு பெயர்கள் யாவை?

  • முத்தமிழ்காப்பியம்
  • குடிமக்கள் காப்பியம்

4. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் (உரைபாட்டு மடை) விளக்குக

  • உரைப்பாட்டு மடை என்பது சிலப்பதிகாரத்தில் வரும் தமிழ்நடை. இது உரைநடைப்பாங்கில் அமைந்திருக்கும் பாட்டு

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1.மூவேந்தர் பற்றிய செய்திகளைக் கூறும் நூல் …………………….

அ) சிலப்பதிகாரம்
ஆ) மணிமேகலை
இ) வளையாபதி
ஈ) குண்டலகேசி
Answer:
அ) சிலப்பதிகாரம்

2.சிலப்பதிகாரத்தில் உள்ள காண்டங்கள் ……………………
அ) ஐந்து
ஆ) ஏழு
இ) மூன்று
ஈ) ஒன்பது
Answer:
இ) மூன்று

3.சிலப்பதிகாரத்தின் காதைகள் ………………………..
அ) 30
ஆ) 27
இ) 33
ஈ) 36
Answer:
அ) 30

4.‘அடிகள் நீரே அருளுக’ என்று இளங்கோவடிகளிடம் வேண்டிக் கொண்டவர் ……………………..
அ) கம்பர்
ஆ) கபிலர்
இ) திருத்தக்கதேவர்
ஈ) சீத்தலைச்சாத்தனார்
Answer:
ஈ) சீத்தலைச்சாத்தனார்

5.சிலப்பதிகாரத்தோடு தொடர்புடைய காப்பியம் ……………….
அ) மணிமேகலை
ஆ) சூளாமணி
இ) வளையாபதி
ஈ) நீலகேசி
Answer:
அ) மணிமேகலை

6.நாட்டுதும் யாமோர் பாட்டுடைச்செய்யுள் என்றவர் ………………..
அ) பாரதியார்
ஆ) கம்பர்
இ) இளங்கோவடிகள்
ஈ) உமறுப்புலவர்
Answer:
இ) இளங்கோவடிகள்

7.மணிமேகலையின் ஆசிரியர் …………………..
அ) இளங்கோவடிகள்
ஆ) சீத்தலைச்சாத்தனார்
இ) திருத்தக்கதேவர்
ஈ) புத்தமித்திரர்
Answer:
ஆ) சீத்தலைச்சாத்தனார்

8.இந்திரவிழா ஊரெடுத்த காதை அமைந்த காண்டம் ……………….
அ) புகார்க்காண்டம்
ஆ) மதுரைக்காண்டம்
இ) வஞ்சிக்காண்டம்
ஈ) பாலகாண்டம்
Answer:
அ) புகார்க்காண்டம்

9.சிலப்பதிகாரத்தின் பெரும் பிரிவு ………………
அ) பாகம்
ஆ) அங்கம்
இ) காண்டம்
ஈ) காதை
Answer:
இ) காண்டம்

10.சிலப்பதிகாரத்தின் உட்பிரிவு …………….
அ) படலம்
ஆ) சருக்கம்
இ) காதை
ஈ) காட்சி
Answer:
இ) காதை

11.சிலப்பதிகாரத்தில் வரும் தமிழ் நடை……………..
அ) உரைப்பாட்டு மடை
ஆ) உரைநடை
இ) வசனநடை
ஈ) செய்யுள் நடை
Answer:
அ) உரைப்பாட்டு மடை

12.பேசும் மொழியின் ஓட்டம் என்பது ………………….
அ) மொழி
ஆ) உரை
இ) காதை
ஈ) காட்சி
Answer:
ஈ) காட்சி

13.சிலப்பதிகாரமும் மணிமேகலையும்……………………. ஆகும்.
அ) இணைகாப்பியம்
ஆ) முதற்காப்பியம்
இ) பினைகாப்பியம்
ஈ) இரட்டைக்காப்பியம்
Answer:
ஈ) இரட்டைக்காப்பியம்

14.கண்ணகியும் கோவலனும் சென்று அடைந்த ஊர்……………………..
அ) காவிரிப்பூம்பட்டினம்
ஆ) திருவரங்கம்
இ) உறையூர்
ஈ) கொடும்பாளூர்
Answer:
ஈ) கொடும்பாளூர்

15.இளங்கோவடிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
அ) சேர
ஆ) சோழ
இ) பாண்டிய
ஈ) பல்லவ
Answer:
அ) சேர

16.அழகர் மலை என்பது …………………..
அ) திருவரங்கம்
ஆ) திருமால்குன்றம்
இ) வேலவன் குன்றம்
ஈ) மால்குன்றம்
Answer:
ஆ) திருமால்குன்றம்

17.கோவலனையும் கண்ணகியையும் அழைத்துச் சென்றவர் ………………….
அ) கவுந்தியடிகள்
ஆ) மாதரி
இ) மாதவி
ஈ) ஆயர்குலப்பெண்
Answer:
அ) கவுந்தியடிகள்

18.கணவனை இழந்த கண்ணகி சென்று அடைந்த இடம்…………………
அ) வைகைக்கரை
ஆ) வேங்கைக்கானல்
இ) அழகர்மலை
ஈ) உறையூர்
Answer:
ஆ) வேங்கைக்கானல்

19.பெருங்குணத்துக் காதலாள் யார்?
அ) கண்ணகி
ஆ) மாதவி
இ) மாதரி
ஈ) மணிமேகலை
Answer:
அ) கண்ணகி

20.சொல்லையும் பொருளையும் பொருத்துக.
அ) தூசு – 1. செல்வம்
ஆ) துகிர் – 2. பட்டு
இ) வெறுக்கை – 3. விலை
ஈ) நொடை – 4. பவளம்
அ) 3, 1, 4, 2
ஆ) 2, 4, 1, 3
இ) 3, 1, 2, 4
ஈ) 2, 1, 3, 4
Answer:
ஆ) 2, 4, 1, 3

21.மருவூர்ப்பாக்கம் அமைந்த நகரம் ………….. ஆகும்.
அ) புகார்
ஆ) மதுரை
இ) வஞ்சி
ஈ) காஞ்சி
Answer:
அ) புகார்

22.மண்ணீ ட்டாளர் எனக் குறிக்கப் பெறுபவர் ……………………….
அ) ஓவியர்
ஆ) வணிகர்
இ) சிற்பி
ஈ) சாலியர்
Answer:
இ) சிற்பி

23.கூவம் குவித்த – இதில் ‘கூவம்’ என்பதன் பொருள் …………………….
அ) தானியம்
ஆ) குப்பை
இ) பழம்
ஈ) தோல்
Answer:
அ) தானியம்

24.கள் விற்பவர் ……………………….
அ) பரதவர்
ஆ) உமணர்
இ) பாசவர்
ஈ) வலைச்சியர்
Answer:
ஈ) வலைச்சியர்

25.பொருத்துக.
1. கண்ணுள் வினைஞர் – அ) சிற்பி
2. மண்ணீட்டாளர் – ஆ) ஓவியர்
3. கிழி – இ) தொழில்
4. வினை – ஈ) துணி
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

26.சொல்லும் பொருளும் பொருந்தாத சொல் எது?
அ) சுண்ண ம் – நறுமணப்பொடி
ஆ) காருகர் – நெய்பவர்
இ) தூசு – பட்டு
ஈ) துகிர் முத்து
Answer:
ஈ) துகிர் – முத்து

27.சொல்லும் பொருளும் சரியாகப் பொருந்திய சொல் எது?
அ) சுண்ணம் – நெய்பவர்
ஆ) காருகர் – பவளம்
இ) தூசு – பட்டு
ஈ) துகிர் நறுமணப்பொடி
Answer:
இ) தூசு – பட்டு

28.சொல்லும் பொருளும் சரியாகப் பொருந்திய சொல் எது?
அ) வெறுக்கை – செல்வம்
ஆ) நொடை – எண்ணெய் விற்போர்
இ) பாசவர் – விலை
ஈ) ஓசுநர் – வெற்றிலை விற்போர்
Answer:
அ) வெறுக்கை – செல்வம்

29.‘பருத்தி நூலினும் கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்’ இவ்வடிகளில் ‘காருகர்’ என்பதைச் சுட்டும் சொல் …………..
அ) நெய்பவர்
ஆ) நுண்வினை
இ) சிற்பி
ஈ) ஓவியர்
Answer:
அ) நெய்பவர்

30.‘அருங்கல வறுக்கையோடு அளந்துகடை அறியா’ இவ்வடிகளில் ‘வெறுக்கை’ என்பதைச் சுட்டும் சொல் ……………….
அ) துணி
ஆ) பவளம்
இ) பட்டு
ஈ) செல்வம்
Answer:
ஈ) செல்வம்

31.‘ஓசுநர் செறிந்த ஊன்மலி இருக்கையும்’ இவ்வடிகளில் ‘ஓசுநர்’ என்பதைச் சுட்டும் சொல்
அ) எண்ணெய் விற்போர்
ஆ) வெற்றிலை விற்போர்
இ) சிற்பி
ஈ) துணி விற்போர்
Answer:
அ) எண்ணெய் விற்போர்

32.‘கண்ணுள் வினைஞரும் மண்ணீட்டு ஆளரும்’ இவ்வடிகளில் ‘மண்ணுள்’ என்பதைச் சுட்டும் சொல்
அ) சிற்பி
இ) சாலியர்
ஆ) ஓவியர்
ஈ) செல்வம்
Answer:
ஆ) ஓவியர்

33.‘வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும்’ இவ்வடிகளில் அமைந்த நயம்
அ) எதுகை
ஆ) மோனை
இ) முரண்
ஈ) இயைபு
Answer:
அ) எதுகை

***********************THE END OF 7.4*************************

7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே…

10th tamil guide, TN Students  Guide


பாடநூல் வினாக்கள்

நெடுவினா

1.நிகழ்வுகளைத் தொகுத்து அறிக்கை எழுதுக.

Answer:
மகளிர் நாள் விழா
எம்பள்ளிக் கலையரங்கில் 08.03.2020 அன்று மகளிர் நாள் விழா நடைபெற்றது. அவ்விழாவினைப் பற்றிய அறிக்கையாவது.

விழா நாள் : 08.03.2020
இடம் : பள்ளிக் கலையரங்கம்.
எம் பள்ளி அன்று விழாக்கோலம் பூண்டிருந்தது. சரியாக மாலை 3.30 மணி அளவில் விழா நிகழ்விடமான பள்ளிக் கலையரங்கிற்குள் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மகிழ்வுடன் வந்து அமர்ந்தனர். சரியாக 4.00 மணிக்கு சிறப்பு விருந்தினர் இதழாளர் கலையரசி வருகை புரிந்தார். மாணவர்கள் ஆசிரியர்கள் மகிழ்வுடன் ஆரவாரம் செய்து கைதட்டி சிறப்பு விருந்தினர் அவர்களை வரவேற்றனர்.

தலைமையாசிரியரின் வரவேற்பு:
இதழியல் துறையில் பட்டம் பெற்று, பட்டப்படிப்புடன் அச்சுத்துறையில் முதுகலையும் பயின்று, நாளிதழ் வார இதழ் படிப்பவர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் இதழாளர் திருமதி. கலையரசி அவர்கள் தான் பணிபுரியும் இதழில் செய்திகளை வெளியிடுவது, சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தும் கட்டுரை எழுதுவது, குழந்தைகளுக்கான பகுதிகளை வடிவமைப்பது. கேலிச்சித்திரம் வாயிலாக சமூக அவலங்களைச் சுட்டிக்காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்துவது என இதழியல் துறையில் பன்முகத் திறமை பெற்றவர். அவரை இவ்விழாவிற்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இதழாளரின் சிறப்புரை:
‘காரிருள் அகத்தில் கதிரொளி பாய்ச்சுவதும், துயில்பவர்கள் நெஞ்சில் எழுச்சியை ஏற்படுத்துவதும் இதழ்களே என்றால் மிகையில்லை. பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்களால் இயலும் என்பதை மகாகவி நமக்கு ஒரு ஊக்க சக்தியாக தந்து சென்றிருக்கிறார். பெண்களே உங்களுக்கு முழுமையான கல்வி கட்டாயம் தேவை. எந்த ஒரு காரணத்திற்காகவும் உங்கள் கல்வியை விட்டுக் கொடுக்காதீர்கள். கல்வியில்லா பெண் களர் நிலம்’ என்றார் புரட்சிக்கவி. நாம் களர்நிலமாக பயனற்றுப் போக பிறக்கவில்லை . ஞானச் செருக்கும் உடையவர்களாய், புதிய உலகம் படைக்கும் வலிமை பொருந்தியவர்களாய்ப் பிறந்திருக்கிறோம். எனவே நன்கு படியுங்கள்; புதிய சமுதாயம் படையுங்கள்; புதுமைப் பெண்ணின் மகிழ்வு கண்டு இம்மண்ணுலகம் வியக்கட்டும் என்று சிறப்புரையாற்றினார்.

நன்றியுரை:
நிறைவாக பள்ளியின் மாணவத் தலைவர் ‘மோகனா’ நன்றி கூறினார். அழைப்பிற்கிணங்கி வருகை தந்த சிறப்பு விருந்தினருக்கும், அவரை அழைத்து வந்து விழாவினை ஏற்பாடு செய்த தலைமையாசிரியருக்கும், உடன் ஒத்துழைத்த ஆசிரியப் பெருமக்களுக்கும், பெற்றோர்களுக்கும், அமைதி காத்த மாணவ நண்பர்களுக்கும் நன்றி கூறினாள்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1.பொருந்தாத இணையைத் தேர்க.
அ) பாலசரஸ்வதி – மீரா
ஆ) எம்.எஸ். சுப்புலட்சுமி – மகசேசே
இ) ராஜம் கிருஷ்ணன் – வேருக்கு நீர்
ஈ) சின்னப்பிள்ளை களஞ்சியம்
Answer:
அ) பாலசரஸ்வதி – மீரா

2.1954-ல் தாமரையணி விருது பெற்றவர் ………………………..
அ) சின்னப்பிள்ளை
ஆ) பாலசரசுவதி
இ) எம்.எஸ். சுப்புலட்சுமி
ஈ) ராஜம் கிருஷ்ணன்
Answer:
இ) எம்.எஸ். சுப்புலட்சுமி

3.எம்.எஸ். சுப்புலட்சுமியைத் தொட்டுத் தடவிப் பாராட்டியவர் ………………………..
அ) சரோஜினி நாயுடு
ஆ) கமலாநேரு
இ) ஹெலன் கெல்லர்
ஈ) மீரா
Answer:
இ) ஹெலன் கெல்லர்

4.வெங்கடேச சுப்ரபாதம் திருப்பதியில் ஒலிக்கத் தொடங்கிய ஆண்டு ………………………..
அ) 1966
ஆ) 1963
இ) 1971
ஈ) 1976
Answer:
அ) 1966

5.இசைக்குக் கிடைத்த மகுடம் எனப் போற்றப்பட்ட விருது ………………………..
அ) நோபல் பரிசு
ஆ) தாமரை விருது
இ) மகசேசே விருது
ஈ) இந்தியமாமணி விருது
Answer:
இ) மகசேசே விருது

6.பொருத்துக. பெண்கள்
அ) 4, 3, 2, 1
ஆ) 1, 2, 3, 4
இ) 3, 4, 2, 1
ஈ) 2, 3, 4, 1
Answer:
அ) 4, 3, 2, 1

7.கிருஷ்ணம்மாளுக்கு ‘வாழ்வுரிமை விருது’ வழங்கிய நாடு ………………………..
அ) சுவிட்சர்லாந்து
ஆ) சுவீடன்
இ) தாய்லாந்து
ஈ) மலேசியா
Answer:
ஆ) சுவீடன்

8.படுகர் இனமக்களின் வாழ்வியல் மாற்றத்தைப் பேசும் புதினம் ………………………..
அ) கரிப்புமணிகள்
ஆ) வேருக்குநீர்
இ) சேற்று மனிதர்கள்
ஈ) குறிஞ்சித்தேன்
Answer:
ஈ) குறிஞ்சித்தேன்

9.‘பூதான இயக்கத்தில் பணிபுரிந்தவர் ………………………..
அ) சின்னப்பிள்ளை
ஆ) கிருஷ்ணம்மாள்
இ) ராஜம் கிருஷ்ண ன்
ஈ) பாலசரசுவதி
Answer:
ஆ) கிருஷ்ணம்மாள்

10.சமூக அவலங்களை உற்று நோக்கி எழுத்தின் வழியாக உலகுக்குக் காட்டியவர் ……………….
அ) ராஜம்கிருஷ்ணன்
ஆ) கிருஷ்ணம்மாள்
இ) பாலசரசுவதி
ஈ) எம்.எஸ்.சுப்புலட்சமி
Answer:
அ) ராஜம்கிருஷ்ணன்

11.‘களஞ்சியம்’ மகளிர் குழு முதன் முதலில் ஆரம்பித்தவர்……………….
அ) சின்னப்பாப்பா
ஆ) சின்னத்துரை
இ) சின்னப்பிள்ளை
ஈ) சரசுவதி
Answer:
இ) சின்னப்பிள்ளை

12.‘உழுபவருக்கே நில உரிமை இயக்கம்’ தொடங்கியவர் …………………
அ) ராஜம்கிருஷ்ணன்
ஆ) கிருஷ்ணம்மாள்
இ) பாலசரசுவதி
ஈ) எம்.எஸ்.சுப்புலட்சுமி
Answer:
ஆ) கிருஷ்ணம்மாள்

13.எம்.எஸ். சுப்புலட்சுமியைப் பிரபலப்படுத்திய பாடல் அ) சுப்ரபாதம்………………………
ஆ) காற்றினிலே வரும் கீதம்
இ) இரகுபதி ராகவராஜாராம்
ஈ) மீரா பற்றிய பாடல்
Answer:
ஆ) காற்றினிலே வரும் கீதம்

14.பாலசரசுவதியின் நாட்டியக் கச்சேரியைப் புகழ்ந்தவர் ……………………
அ) பண்டிட் நேரு
ஆ) காந்தி
இ) பண்டிட் இரவிசங்கர்
ஈ) இயக்குநர் இரவிக்குமார்
Answer:
இ) பண்டிட் இரவிசங்கர்

15.‘காந்தி அமைதி விருதை’ கிருஷ்ணம்மாளுக்கு வழங்கிய நாடு ………………….
அ) இந்தியா
ஆ) சுவிட்சர்லாந்து
இ) சிங்கப்பூர்
ஈ) சுவீடன்
Answer:
ஆ) சுவிட்சர்லாந்து

கற்பவை கற்றபின்

1.உங்கள் ஊரில் கடின உழைப்பாளர் – சிறப்புமிக்கவர் – போற்றத்தக்கவர் – என்ற நிலைகளில் நீங்கள் கருதுகின்ற பெண்கள் தொடர்பான செய்திகளைத் தொகுத்து வழங்குக.

Asnwer:
கடின உழைப்பாளர்

(மாலையில் பூ விற்பவர், வீட்டு வேலை செய்பவர்)
எங்கள் ஊரில் விமலா என்றொரு பெண்மணி இருந்தார். மாலையில் பூ விற்பார், வீட்டு வேலை செய்வார். அவர் கல்வியாளரோ, எழுத்தாளரோ, போராட்டக்காரரோ அல்லர். கடின உழைப்பாளர்.

எவ்வாறெனில், திருமணமான நாள் முதல் கணவரால் பல இன்னல்களைத் துன்பங்களை அனுபவித்ததோடு, இளம் வயதிலேயே விதவையுமாகி சமூக அவலத்துக்கும், உள்ளானார்.

துன்பங்களைப் பெற்ற அவர் துன்பம் துடைத்தூன்றும் தூணாக மாறினார். உழைப்பை மட்டும் மூலதனமாகக் கொண்டார். உழைப்பையே உயிர் மூச்சாய் மாற்றினார். வீட்டு வேலை முதல் கிடைக்கும் வேலைகளை எல்லாம் செய்து. தன் பிள்ளைகளின் கல்விக் கண்களைத் திறந்தார்.

ஒரு குழந்தையை மருத்துவராகவும் மற்றொரு குழந்தையைப் பொறியாளராகவும் மாற்றிய விமலா உழைப்பின் இலக்கணமாகத் திகழ்ந்தார்.

சிறப்புமிக்கவர்
(நர்த்தகி நடராஜ்)
மதுரை மாநகரில் பிறந்து, உலகின் பல்வேறு பகுதிக்குச் சென்று தன் கலையை நடத்தி சிறப்பு செய்தவர் நர்த்தகி நடராஜ்.

இவர் யார் என்றால் நமக்கும் நம் எண்ணங்கள் எல்லாம் சிதறும். இவர் ஒரு மூன்றாம் பாலினத்தவர். செல்வக் குடும்பத்தில் பிறந்த இவர் பெற்றோரால் வெறுக்கப்பட்டு, தன் ஆசிரியரால் ஈர்க்கப்பட்டு, அவரிடமே குருகுலமுறையில் 
பரதக் கலையை கற்றவர்.

தன் ஆசிரியரால் நர்த்தகி என்று அழைக்கப்பட்ட இவர் 30 ஆண்டுகளாக தன் பரதக் கலையை உலக அரங்கில் நடத்தி 2019-ஆம் ஆண்டு இந்தியா இவருக்கு பத்மஸ்ரீ விருதளித்தது. மனித இனத்தில் மற்றவரால் தாம் வெறுக்கப்பட்டாலும் தன்னையும், தமிழரின் பரதக்கலையையும் உலகிற்குக் கொண்டு சென்ற சிறப்புமிக்கவர் நர்த்தகி நடராஜ்
போற்றத்தக்கவர்
(சாலை ஓரம் உணவகம் நடத்துபவர்)

கோவை பேரூர் பகுதியில் வசிக்கும், பாட்டி பெயர் சொன்னாலே அனைவருக்கும் தெரியும். அந்த அளவுக்கு இட்லியால் புகழ் பெற்றவர். இன்றும் ஒரு ரூபாய்க்கு ஆவி பறக்கும் இட்லி விற்பவர்.
நல்ல சுவையான சட்னியோடு 80 வயதிலும் இலாபத்தை நோக்காமல் பலரின் பசியாற்றியவர். அவர் தேவையை ஆட்சியர் கேட்டாலும் எதுவும் வேண்டாம் என்பார்.

ஆட்சியர் அவருக்கு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா வீடும், அரசு அவரை கௌரவித்தும் வருகிறது. ஒரு ரூபாய் இட்லியால் ஓராயிரம் கோடி மக்களால் போற்றப்படுபவர்.

********************THE END OF 7.5**********************

7.6. புறப்பொருள் இலக்கணம்

I. பலவுள் தெரிக.

இருநாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம் ………….
  1. நாட்டைக் கைப்பற்றல்
  2. ஆநிரை கவர்தல்
  3. வலிமையை நிலைநாட்டல்
  4. கோட்டையை முற்றுகையிடல்
விடை : வலிமையை நிலைநாட்டல்

II. குறு வினா

புறத்திணைகளில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துக.
  • வெட்சித் திணை X கரந்தைத் திணை
  • வஞ்சித் திணை X காஞ்சித் திணை
  • நொச்சித் திணை X உழிஞைத் திணை

II. சிறு வினா

அவந்தி நாட்டு மன்னன், மருத நாட்டு மன்னனுடன் போர் புரிந்து அந்நாட்டைக் கைப்பற்ற நினைக்கிறான்; அப்போர் நிகழ்வைப் புறப்பொருள் வெண்பா மாலை கூறும் இலக்கணத்தின் வழி விளக்குக
  • இந்நிகழ்வுக்கு பொருத்தமான் திணை “வஞ்சித்திணை” ஆகும்
  • மண்ணாசை காரணமாகப் பகைவர் நாட்டைக் கைப்பபற்றக் கருதி வஞ்சிப்பூவைச் சூடிப் போருக்குச் செல்வது வஞ்சித்திணையாகும்.
  • அவந்தி நாட்டு மன்னன், மருத நாட்டு மன்னனுடன் பகைகொண்டு போர்புரிந்து மருத நாட்டைக் கைப்பற்ற நினைப்பதால் இந்நிகழ்வு “வஞ்சித்திணைக்குப்” பொருந்து வருகிறது.

 புறப்பொருள் இலக்கணம் – கூடுதல் வினாக்கள் 

1. புறத்திணை என்றால் என்ன?
  • மகிழ்ச்சி. புறம் பற்றிய நெறிகளைக் கூறுவது புறத்திணை ஆகும்.
2. ஆநிரை கவர்தல் வெட்சித் திணை என கூறக்காரணம் யாது?
  • மக்கள் சிறு குழுக்களாக வாழ்ந்த காலத்தில், ஆநிரைகளைச் (மாடுகளை) சொத்தாகக் கருதினர்.
  • ஒரு குழுவினரிடமிருந்து மற்றொரு குழுவினர் ஆநிரைகளைக் கவர்தல் வழக்கமாக இருந்தது.
  • ஆநிரைகளைக் கவர்ந்துவர வெட்சிப் பூவினைச் சூடிக்கொண்டு செல்வர்.
  • எனவே, ஆநிரை கவர்தல் வெட்சித் திணை எனப்பட்டது.
3. கரந்தைத் திணை பெயர்க் காரணம் யாது?
  • கவர்ந்து செல்லப்பட்ட தம் ஆநிரைகளை மீட்கச்செல்வர். அப்போது கரந்தைப் பூவைச் சூடிக்கொள்வர். அதனால் கரந்தைத் திணை என்று பெயர் பெற்றது.
4. வஞ்சித்திணை என்றால் என்ன?
  • மண்ணாசை காரணமாகப் பகைவர் நாட்டைக் கைப்பற்றக் கருதி வஞ்சிப்பூவைச் சூடிப் போருக்குச் செல்வது வஞ்சித்திணை ஆகும்.
5. காஞ்சித் திணை என்றால் என்ன?
  • தன் நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்றரசனோடு, காஞ்சிப்பூவைச் சூடி எதிர்த்துப் போரிடல் காஞ்சித்திணை ஆகும்.
6. நொச்சித்திணை என்றால் என்ன?
  • கோட்டையைக் காத்தல் வேண்டி, உள்ளிருந்தே முற்றுகையிட்ட பகையரசனோடு
  • நொச்சிப் பூவைச் சூடி உள்ளிருந்தே போரிடுவது நொச்சித்திணை ஆகும்.
7. உழிஞைத்திணை என்றால் என்ன?
  • மாற்றரசனின் கோட்டையைக் கைப்பற்ற உழிஞைப் பூவைச் சூடிய தன் வீரர்களுடன் அதனைச் சுற்றி வளைத்தல் உழிஞைத்திணை ஆகும்.
8. தும்பைத் திணை என்றால் என்ன?
  • பகைவேந்தர் இருவரும் வலிமையே பெரிது என்பதை நிலைநாட்ட, தம் வீரர்களுடன் தும்பைப் பூவைச்சூடிப் போர்க்களத்தில் ஒருவரோடு ஒருவர் போரிடுவது தும்பைத் திணை ஆகும்.
9. வாகைத்திணை என்றால் என்ன?
  • போரிலே வெற்றி பெற்ற மன்னன் வாகைப்பூச் சூடி மகிழ்வது, வாகைத்திணை ஆகும்.
  • வாகை என்றாலே வெற்றி பொருள் ஆகும்.
10. பாடாண் திணை என்றால் என்ன?
  • பாடுவதற்குத் தகுதியுடைய ஓர் ஆளுமையாளரின் கல்வி, வீ ரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றைப் போற்றிப் பாடுவது, பாடாண் திணை ஆகும்.
  • (பாடு+ஆண்+திணை = பாடாண் திணை).
11. பொதுவியல் திணை என்றால் என்ன?
  • வெட்சி முதல் பாடாண் வரை உள்ள புறத்திணைகளில் பொதுவானவற்றையும், அவற்றுள் கூறப்படாதனவற்றையும் கூறுவது, பொதுவியல் திணை ஆகும்.
12. கைக்கிளை எதனை குறிக்கிறது?
  • கைக்கிளை என்பது ஒருதலைக் காமத்தைக் குறிக்கிறது.
13. பெருந்திணை எதனை குறிக்கிறது?
  • பெருந்திணை. பொருந்தாக் காமத்தைக் குறிக்கிறது.

 மொழியை ஆள்வோம்…. 

I. மொழிபெயர்க்க.

Among the five geographical divisions of the Tamil country in Sangam literature, the Marutam region was the fit for cultivation, as it had the most fertile lands. The properity of a farmer depended on getting the necessary sunlight, seasonal rains and the fertility of the soil. Among these elements of nature, sunlight was considered indispensible by the ancient Tamils.

மருத நிலம்

பண்டைய சங்க இலக்கிய காலத்தில், பூகோள அடிப்படையில் (நில அமைப்புப்படி) தமிழ்நாடு ஐந்து வகையாகக இருந்தது. அவற்றுள் மருத நிலப்பகுதியே உழவுத் தொழிலுக்கு ஏற்றதாய் இருந்தது. அந்த நிலப்பகுதியில் விவசாயிகள் (உழவர்கள்) பயன்பெறும் வகையான தேவையா பருவ காலங்கள் சிறந்திருந்தது. தேவையா சூரிய வெப்பம், வளமான நிலம், போதுமான அளவு மழையும் இருந்தது. அதனால் விசாயம் செழித்தது. மருத நிலத்தின் இயற்கைக் கூறுகளாலும், போதுமான சூரிய வெப்பத்தினாலும் பழந்தமிழகத்தில் மருத நிலத்தில் உழவுத் தொழில் சிறந்திருந்தது.

II. பின்வரும் தொடர்களைக் கொண்டு பொருத்தமான தொடர் அமைக்க.

(வரப் போகிறேன், இல்லாமல் இருக்கிறது, கொஞ்சம் அதிகம், முன்னுக்குப் பின், மறக்க நினைக்கிறேன்)
1. வரப் போகிறேன்
  • இன்னும் சிறிது நேரத்தில் வரப் போகிறேன்
2. இல்லாமல் இருக்கிறது
  • எங்கள் நாடு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது
3. கொஞ்சம் அதிகம்
  • சங்க காலத்தில் மன்னர்களுக்கு காதலும் வீரமும் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது
4. முன்னுக்குப் பின்
  • முன்னுக்குப் பின் முரணாக பேசுவது நன்றன்று.
5. மறக்க நினைக்கிறேன்
  • எனக்கு பிடிக்காதவர்களை மறக்க நினைக்கிறேன்

III. தொகைச் சொற்களைப் பிரித்து எழுதி, தமிழ் எண்ணுரு தருக.

மூவேந்தர்களால் நாற்றிசையும் போற்றி வளர்க்கப்பட்ட முத்தமிழே, உலக மொழிகளில் உயர்ந்ததென்ற செம்மாந்த கூற்றிற்கு, தமிழ் இலக்கியங்களில் அமைந்துள்ள இருதிணை அமைப்பே காரணமாகும். முப்பாலை முழுமையாகத் தந்த தமிழின் சிறப்பினை ஐந்திணைகளில் அழகுற விளக்குபவை சங்க இலக்கியங்கள். நானிலத்தில் பசித்தவர்க்கு அறுசுவை உணவு போல் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் படிப்பவர்க்கு மனதிற்கினிமை ஈந்து தமிழ்ப்பெருமை சாற்றுகிறது

தொகைச் சொற்கள்

1. நாற்றிசை
  • நான்கு + திசை (நான்கு – ௪)
  • கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு
2. முத்தமிழ்
  • மூன்று + தமிழ் (மூன்று – ௩)
  • இயல், இசை, நாடகம்
3. இருதிணை
  • இரண்டு + திணை (இரண்டு – ௨)
  • உயர்திணை, அஃறிணை
4. முப்பால்
  • மூன்று + பால் (மூன்று – ௩)
  • கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு
5. ஐந்திணை
  • ஐந்து + திணை (ஐந்து – ௫)
  • குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை
6. அறுசுவை
  • ஆறு + சுவை (ஆறு – ௬)
  • இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, உவர்ப்பு, துவர்ப்பு

IV. கவிதையை உரையாடலாக மாற்றுக

மகள் சொல்லுகிறாள்
அம்மா என் காதுக்கொரு தோடு – நீ
அவசியம் வாங்கி வந்து போடு!
சும்மா இருக்க முடியாது – நான்
சொல்லி விட்டேன் உனக்கு இப்போது!

உரையாடல்:-
அம்மா! என் காதுக்கு ஒரு தோடு வாங்கித் தாங்கம்மா! தோடு இல்லாமல் வெறுங்காதோடு என்னால் இருக்க முடியாது… சொல்லிட்டேன்

தாய் சொல்லுகிறாள்
காதுக்குக் கம்மல் அழகன்று -நான்க்ஷ
கழறுவதைக் கவனி நன்று
நீதர் மொழியை வெகுபணிவாய் – நிதம்
நீ கேட்டு வந்து காதில் அணிவாய்!

உரையாடல்:-
காதிற்குத் தங்கக் கம்மல் மட்டும் அழகு கிடையாது. நான் சொல்வதைக் கவனித்து பணிவான சொற்களையும் நல்ல கருத்துகளையும் உன் காதுக்கு அணியாக அணிந்து கொள்

மகள் மேலும் சொல்லுகிறாள்
கைக்கிரண்டு வளையல் வீதம் – நீ
கடன்பட்டுப் போட்டிடினும் போதும்!
பக்கியென் றென்னை யெல்லாரும் – என்
பாடசாலையிற் சொல்ல நேரும்!

உரையாடல்:-
கைக்கு இரண்டு வளையல்கள் கடன் வாங்கியாவது எனக்கு வாங்கித்தா அம்மா பக்கி வளையல் இல்லையா என்று பள்ளியில் என்னைக் கேலி செய்கிறார்கள்.
தாய் சொல்லும் சமாதானம்
வாரா விருந்து வந்த களையில் – அவர்
மகிழ உபசரித்தல் வளையல்!
ஆராவமுதே மதி துலங்கு – பெண்ணே
அவர் சொல்வ துன்கைகட்கு விலங்கு!

உரையாடல்:-
மகளே…. நம்மைத் தேடி வரும் விருந்தினரை மகிழ்ச்சியுடன் உபசரித்தேல் வளையல்…  அறிவார்ந்த மகளே கேள்…. அவர்கள் சொல்லும் வளையல்… உனக்கு கைவிலங்கு

பின்னும் மகள்

ஆபர ணங்கள் இல்லை யானால் – என்னை
யார் மதிப்பார் தெருவில் போனால்?
கோபமோ அம்மா இதைச் சொன்னால் – என்
குறை தவிர்க்க முடியும்

உரையாடல்:-
அணிகலன்கள் இல்லாமல் தெருவில் போனால் என்னை யார் தான் மதிப்பார்? இதைச் சொன்னால் உனக்குக் கோபம் வருகிறது. என் குறையை நீக்க மாட்டாய்…
அதற்குத் தாய்
கற்பது பெண்களுக்கா பரணம் – கெம்புக்
கல்வைத்த, நகைதீராத ரணம்!
கற்ற பெண்களை இந்த நாடு – தன்
கண்ணில் ஒற்றிக் கொள்ளுமன் போடு!

உரையாடல்:-
கல்வி தான் பெண்களுக்கு உண்மையான அணிகலன்; மாணிக்கக்கல் வைத்த அணிகலன் தீராத ரணத்தையே தரும் மகளே; கல்வி என்னும் அணிகலன் அணிந்த பெண்களை இந்நாடு கண்ணுக்குள் வைத்துப் போற்றும் என்பதை உணர்ந்து கொள்.

 மொழியோடு விளையாடு… 

I. ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக

ஊர்ப் பெயர் மரூஉ
புதுக்கோட்டை புதுகை
தஞ்சாவூர் தஞ்சை
திருச்சிராப்பள்ளி திருச்சி
உதகமண்டலம் உதகை
கோயம்புத்தூர் கோவை
நாகப்பட்டினம் நாகை
புதுச்சேரி புதுவை
கும்பகோணம் குடந்தை
திருநெல்வேலி நெல்லை
மன்னார்குடி மன்னை
மயிலாப்பூர் மயிலை
சைதாப்பேட்டை சைதை
II. அகராதியில் காண்க

1. மிரியல்
  • மிளகு
2. வருத்தனை
  • பிழைப்பு, தொழில், பெருகுதல், மானிய உரிமை, சம்பளம்
3. அதசி
  • சணல்
4. துரிஞ்சில்
  • வெளவால் வகை, சீக்கரி மரம்

III. கலைச்சொல் அறிவாேம்

  • Consulate – துணைத்தூதரகம்
  • Patent – காப்புரிமை
  • Document – ஆவணம்
  • Guild – வணிகக் குழு
  • Irrigation – பாசனம்
  • Territory – நிலப்பகுதி
 

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1.புறம் பற்றிய நெறிகளைக் கூறுவது …………………….
அ) புறத்திணை
ஆ) புறநானூறு
இ) பதிற்றுப்பத்து
ஈ) பரிபாடல்
Answer:
அ) புறத்திணை

2.புறத்திணைகள் எத்தனை வகைப்படும்?
அ) ஒன்பது
ஆ) பதினொன்று
இ) பன்னிரண்டு
ஈ) பதிமூன்று
Answer:
இ) பன்னிரண்டு

3.வெட்சிப் பூ இன்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அ) மல்லிகைப்பூ
ஆ) இட்லிப்பூ
இ) சங்குப்பூ
ஈ) உன்னிப்பூ
Answer:
ஆ) இட்லிப்பூ

4.ஒரு தலைக்காமத்தைக் குறிக்கும் திணை …………………….
அ) பெருந்திணை
ஆ) பொதுவியல்
இ) கைக்கிளை
ஈ) கொடையை
Answer:
இ) கைக்கிளை

5.‘வாகை’ என்பது எதனைக் குறிக்கும்?
அ) போர்
ஆ) வெற்றி
இ) ஆநிரைமீட்டல்
ஈ) மதில் வளைத்தல்
Answer:
ஆ) வெற்றி

6.‘நொச்சி’ எந்நிலத்துக்கு உரியது …………………….
அ) குறிஞ்சி
ஆ) மருதம்
இ) முல்லை
ஈ) பாலை
Answer:
ஆ) மருதம்

7.நொச்சிப் பூவை சூடிப் போரிடுவது …………………….
அ) கோட்டையைக் காக்க
ஆ) மன்னனைக் காக்க
இ) ஆநிரைக் கவர
ஈ) வலிமையை நிலைநாட்ட
Answer:
அ) கோட்டையைக் காக்க

8.பாடாண் திணை பிரித்து எழுதுக.
அ) பாடாண் + திணை
ஆ) பாடாண் + ஆண் + திணை
இ) பாடு + ஆண் + திணை
ஈ) பாட + ஆண் + திணை
Answer:
இ)பாடு+ஆண்+திணை

9.காஞ்சி என்பது ஒரு வகை …………………….
அ) நெடுமரம்
ஆ) குறுமரம்
இ) குறுஞ்செடி
ஈ) புதர்ச்செடி
Answer:
ஆ) குறுமரம்

10.போரைத் தொடங்கும் நிகழ்வாகக் கருதப்படுவது …………………….
அ) கோட்டை வளைத்தல்
ஆ) போரிடல்
இ) ஆநிரை கவர்தல்
ஈ) கோட்டை காத்தல்
Answer:
இ) ஆநிரை கவர்தல்

11.மக்கள் சிறு குழுக்களாக வாழ்ந்த போது ……………………. சொத்தாகக் கருதினர்.
அ) கோட்டையை
ஆ) ஆநிரைகளை
இ) நிலத்தை
ஈ) வீரத்தை
Answer:
ஆ) ஆநிரைகளை

12.மன்னனது போரை மட்டும் சொல்லாது பிற மாண்புகளையும் பாடும் திணை …………………….
அ) பாடாண் திணை
ஆ) பொதுவியல் திணை
இ) வாகைத் திணை
ஈ) நொச்சித் திணை
Answer:
அ) பாடாண் திணை

13.அன்பின் ஐந்திணை பற்றியது ……………………. ஆகும்.
அ) அகப்பொருள்
ஆ) புறப்பொருள்
இ) நுண்பொருள்
ஈ) ஐவகைநிலம்
Answer:
அ) அகப்பொருள்

14.கவர்ந்து செல்லப்பட்ட ஆநிரைகளை மீட்பது …………………….
அ) வெட்சி
ஆ) வஞ்சி
இ) கரந்தை
ஈ) உழிஞை
Answer:
இ) கரந்தை

15.பொருத்துக.
1. வெட்சித்திணை – அ) கவர்ந்து செல்லப்பட்ட ஆநிரை மீட்டல்
2. கரந்தைத்திணை – ஆ) மண்ணாசை கருதி பகைநாட்டைக் கைப்பற்ற போரிடல்
3. வஞ்சித்திணை – இ) நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்றரசனோடு எதிர் நின்று போரிடல்
4. காஞ்சித்திணை – ஈ) ஆநிரை கவர்தல்
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

16.பொருத்துக.
1. நொச்சித்திணை – அ) கோட்டையைக் கவர கோட்டையைச் சுற்றி வளைத்தல்
2. உழிஞைத்திணை – ஆ) கோட்டையைக் காத்தல் வேண்டி உள்ளிருந்து போரிடல்
3. தும்பைத்திணை – இ) இருபெரு வேந்தரும் வீரர்களும் ஒருவரோடு ஒருவர் போரிடுவது
4. வாகைத்திணை – ஈ) போரில் வெற்றி
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ

17.பொருத்துக.
1. பாடாண்திணை – அ) வெட்சி முதல் பாடாண் வரை கூறப்படாத செய்திகள்
2. பொதுவியல் திணை – ஆ) ஆளுமையாளரின் கல்வி முதலானவற்றைப் புகழ்ந்து பாடல்
3. கைக்கிளை – இ) பொருந்தாக் காமம்
4. பெருந்திணை – ஈ) ஒருதலைக்காமம்
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

18.பூக்கள் இடம்பெறும் புறத்திணைகள் …………………….
அ) 8
ஆ) 12
இ) 6
ஈ) 4
Answer:
அ) 8

19.பூக்கள் இடம்பெறாத புறத்திணைகள் …………………….
அ) 8
ஆ) 12
இ) 6
ஈ) 4
Answer:
ஈ) 4

20.அகத்திணையாக இருந்து புறத்திணையாக்கப்பட்ட திணைகள்
அ) கைக்கிளை, பெருந்திணை
ஆ) பொதுவியல், பாடாண்
இ) வெட்சி, கரந்தை
ஈ) நொச்சி, உழிஞை
Answer:
அ) கைக்கிளை, பெருந்திணை

படித்தும் பார்த்தும் சுவைக்க.

ஏர்பிடிக்கும் கைகளுக்கே
    வாழ்த்துக் கூறுவோம் - வறுமை
ஏகும்வரை செய்பவர்க்கே
    வாழ்த்துக் கூறுவோம் ! - என்றும்
ஊர்செழிக்கத் தொழில்செய்யும் |
    உழைப்பாளிகள் - வாழ்வு
உயரும்வகை செய்பவர்க்கே.
    வாழ்த்துக் கூறுவோம்! 
-கவி கா.மு ஷெரீப்,

Post a Comment

புதியது பழையவை