12th Tamil Unit 8 Guide | Notes
இயல்:8.4 சிறுபாணாற்றுப்படை


பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. சிறுபாணாற்றுப்படை காட்டும் பாட்டுடைத் தலைவனின் இன்றைய நிலப்பகுதி
அ) உதகமண்ட லம்
ஆ) விழுப்புரம்
இ) திண்டிவனம்
ஈ) தருமபுரி
Answer:
இ) திண்டிவனம்

2. கடையெழு வள்ளல்களின் வரிசையைச் சாராத மன்னர்கள்
அ) ஆய் அண்டிரனும் அதிகனும்
ஆ) நல்லியக் கோடனும் குமணனும்
இ) நள்ளியும் ஓரியும்
ஈ) பாரியும் காரியும்
Answer:
ஆ) நல்லியக் கோடனும் குமணனும்

சிறுவினா

1. கடையெழு வள்ளல்களையும் அவர்கள் செய்த செயலையும் அட்டவணைப் படுத்துக.
Answer:
  

2. கொடை வழங்குதலில் நீங்கள் பின்பற்ற விரும்புவனவற்றை எழுதுக.
Answer:
  • கொடை என்பது மடைமை குணங்களில் ஒன்றாகும்.
  • மடம் என்பது அறியாமை என்ற பொருள்.
  • இன்னாருக்கு இன்னது கொடுக்க வேண்டும் என்பதை எண்ணாமல் கிடைத்ததை நினைத்த போது கொடுப்பதுதான் கொடை.
  • இது சரியா தவறா என்று ஆலோசிக்க அறிவுக்கு இடம் கொடுக்காமல் உள்ளத்துக்குக் கொடுக்கும்போது தோன்றுவது கொடை மடம்.
இதைத்தான் வள்ளுவர்
வறியார்க்கொன்று ஈவதே ஈகை மற்றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர் உடைத்து – என்கிறார். இதன்படியே நாமும் கொடை வழங்குவதைப் பின்பற்றலாம்.
இலக்கணக் குறிப்பு
வாய்த்த, உவப்பு, கொடுத்த, ஈந்த – பெயரெச்சங்கள்
கவாஅன் – செய்யுளிசையளபெடை
தடக்கை – உரிச்சொல் தொடர்
நீலம் – ஆகுபெயர்
அருந்திறல், நெடுவழி, வெள்ளருவி, நன்மொழி,நெடுவேல், நன்னாடு – பண்புத் தொகைகள்
கடல்தானை – உவமைத்தொகை
அரவக்கடல் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
மலைதல் – தொழிற்பெயர்
விரிகடல் – வினைத்தொகை

உறுப்பிலக்கணம்

  

புணர்ச்சி விதி

1. நன்மொழி = நன்மை + மொழி
ஈறுபோதல் என்ற விதிப்படி மை கெட்டு நன் + மொழி = நன்மொழி என்று புணர்ந்தது.
2. உரனுடை = உரன் + உடை
‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே’ என்ற விதிப்படி (ன் + உ = னு) ‘உரனுடை’ எனப் புணர்ந்தது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. பொருத்துக
i) பேகன் – மலையமான் நாடு
ii) பாரி – பறம்பு மலை
iii) காரி – பொதிய மலை
iv) ஆய் – பொதினி மலை
அ) 4, 2, 3, 1
ஆ) 4, 2, 1, 3
இ) 4, 3, 2, 1
ஈ) 3, 2, 1, 4
Answer:
ஆ) 4, 2, 1, 3

2. பொருந்தாத இணையைத் தேர்க.
அ) அதிகன் – கதடூர்
ஆ) நள்ளி – நளி மலை
இ) ஓரி – கொல்லி மலை
ஈ) காரி – பொதிய மலை
Answer:
ஈ) காரி – பொதிய மலை

3. பொருத்துக.
i) கலிங்கம் – வண்டு
ii) சுரும்பு – சுரபுன்னை
iii) நாகம் – பாரம்
iv) நுகம் – ஆடை
அ) 4, 1, 2, 3
ஆ) 4, 3, 2, 1
இ) 3, 2, 1, 4
ஈ) 2, 1, 4, 3
Answer:
அ) 4, 1, 2, 3

4. பொருத்துக.
i) போது – கூத்தர்
ii) உறழ் – வில்
iii) கோடியர் – மலர்
iv) சாவம் – செறிவு
அ) 3, 4, 1, 2
ஆ) 4, 1, 2, 3
இ) 4, 3, 2, 1
ஈ) 3, 2, 1, 4
Answer:
அ) 3, 4, 1, 2

5. பொருத்துக.
i) ஆலமர் செல்வன் – போரிடல்
ii) நாகு – மலைப்பக்கம்
iii) மலைதல் – சிவபெருமான்
iv) கவாஅன் – இளமை
அ) 3, 4, 1, 2
ஆ) 4, 1, 2, 3
இ) 2, 3, 4, 1
ஈ.) 3, 2, 4, 1
Answer:
அ) 3, 4, 1, 2

6. பொருத்துக.
i) மயிலுக்குப் போர்வை – பாரி
ii) முல்லைக்குத் தேர் – பேகன்
iii) ஔவைக்கு நெல்லிக்கனி – ஆய்
iv) கூத்தர்க்கு மலைநாடு – அதிகன்
v) சிவனுக்கு நீலமணி – ஓரி
அ) 2, 1, 4, 5, 3
ஆ ) 4, 5, 3, 2, 1
இ) 3, 2, 1, 4, 5
ஈ) 1, 4, 5, 3, 2
Answer:
அ) 2, 1, 4, 5, 3

7. ஆவியர் குலத்தில் தோன்றியவன்
அ) பாரி
ஆ) ஓரி
இ) காரி
ஈ) பேகன்
Answer:
ஈ) பேகன்

8. பொருத்துக
i) வீரக்கழலை உடையவன் – ஆய்
ii) வில் ஏந்தியவன் – காரி
iii) வேலினை உடையவன் – நள்ளி
iv) போர்த் தொழிலில் வல்லமையுடையவன் – அதிகன்
அ) 2, 1, 4, 3
ஆ) 4, 3, 2, 1
இ) 2, 1, 3, 4
ஈ) 3, 4, 2, 1
Answer:
அ) 2, 1, 4, 3

9. தனியொருவனாக இருந்து ஈகையின் பாரத்தைத் தாங்கி செல்பவன்
அ) அதிகன்
ஆ) பேகன்
இ) நள்ளி
ஈ) நல்லியக்கோடன்
Answer:
ஈ) நல்லியக்கோடன்

10. பொருத்துக.
i) வாய்த்த – செய்யுளிசையளபெடை
ii) காவ அன் – பெயரெச்சம்
iii) தடக்கை – ஆகுபெயர்
iv) நீலம் – உரிச்சொல் தொடர்
அ) 2, 1, 4, 3
ஆ) 4, 3, 2, 1
இ) 2, 4, 3, 1
ஈ) 1, 3, 4, 2
Answer:
அ) 2, 1, 4, 3

11.பொருத்துக.
i) நெடுவேல் – வினைத்தொகை
ii) கடல்தானை – தொழிற்பெயர்
iii) விரிகடல் – உவமைத்தொகை
iv) மலைதல் – பண்புத்தொகை
அ) 4, 3, 1, 2
ஆ) 4, 3, 2, 1
இ) 3, 2, 1, 4
ஈ) 2, 3, 1, 4
Answer:
அ) 4, 3, 1, 2

12. சிறுபாணன் பயணம் தொடங்கிய இடம் ……………. முடித்த இடம் ………………..
அ) நல்லூர், திண்டிவனம்
ஆ) மரக்காணம், வேலூர்
இ) வேலூர், ஆமூர்
ஈ) எயிற்பட்டினம், நல்லாமூர்
Answer:
அ) நல்லூர், திண்டிவனம்
Question 13.
சிறுபாணனின் பயணம் குறித்த தகவல்களைப் பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்னும் நூலில் குறிப்பிட்டுள்வர்
அ) மயிலை சீனி. வேங்கடசாமி
ஆ) விபுலானந்த அடிகள்
இ) மா. இராசமாணிக்கனார்
ஈ) மறைமலையடிகள்
Answer:
இ) மா. இராசமாணிக்கனார்

14. ஆவினன்குடி ‘பொதினி’ என்றழைக்கப்பட்டு தற்போது …………….. எனப்படுகிறது.
அ) பழனி
ஆ) பிரான் மலை
இ) திருக்கோவிலூர்
ஈ) தர்மபுரி
Answer:
அ) பழனி

15. பொருத்துக.
i) பறம்பு மலை – உதகமண்டலம் (ஊட்டி)
ii) மலையமான் நாடு – தர்மபுரி
iii) பொதிய மலை – பிரான்மலை
iv) தகடூர் – குற்றாலம், பாபநாசம் உள்ளிட்ட பகுதிகள்
v) நளிமலை – திருக்கோவிலூர்
அ) 3, 5, 4, 2, 1
ஆ) 4, 2, 1, 5, 3
இ) 1, 5, 3, 4, 2
ஈ ) 4, 2, 5, 3, 1
Answer:
அ) 3, 5, 4, 2, 1

16. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்தில் சிங்கம்புணரிக்கு அருகில் உள்ள மலை
அ) பொதிய மலை
ஆ) பிரான் மலை
இ) நளி மலை
ஈ) கொல்லி மலை
Answer:
ஆ) பிரான் மலை

17. விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர் அமைந்துள்ள ஆற்றங்கரை
அ) காவிரி
ஆ) தென்பண்ணை
இ) பாலாறு
ஈ) வெட்டாறு
Answer:
ஆ) தென்பண்ணை

18. தற்போது அகத்தியர் மலை எனப்படுவது
அ) பொதினி மலை
ஆ) பொதிய மலை
இ) பறம்பு மலை
ஈ) நளி மலை
Answer:
ஆ) பொதிய மலை

19. கொல்லி மலை அமைந்துள்ள மாவட்டம்
அ) நாமக்கல்
ஆ) விழுப்புரம்
இ) திருநெல்வேலி
ஈ) சிவகங்கை
Answer:
அ) நாமக்கல்

20. திண்டிவனத்தைச் சார்ந்தது ……………. நாடு என அழைக்கப்பட்ட நிலப்பகுதி.
அ) மலையமான்
ஆ) ஓய்மா
இ) தகடூர்
ஈ) பறம்பு
Answer:
ஆ) ஓய்மா


குறுவினா

1. மனித இனத்தின் அடையாளம் எவை?
Answer:
  • ஈகைப் பண்பு
  • கொடுக்கிற பண்பு இருந்தால் எடுக்கிற நிலை இருக்காது.
2. சிறுபாணாற்றுப்படை பாடலை பாடியவர் பாடப்பட்டோர் யார்?
Answer:
  • பாடியவர்: இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்
  • பாடப்பட்டோன்: ஒய்மாநாட்டு மன்னன் நல்லியக் கோடன்
3. ஆற்றுப்படை என்பது யாது?
Answer:
  • ஆறு + படை = ஆற்றுப்படை வழிப்படுத்தல் என்பதன் பொருளாகும்.
  • பரிசில் பெற்ற பாணன் பரிசில் பெற போகும் பாணனைக் கண்டு வழிப்படுத்தல்.
4. இளங்குமணன் விட்ட அறிக்கை யாது?
Answer:
காட்டில் மறைந்து வாழும் தன் அண்ணன் குமணனின் தலையை கொண்து வருவோருக்கு பரிசில் தருவதாக செய்தி அறிவித்தான்.

5. குமணனின் கொடைத் தன்மையை விளக்குக.
Answer:
தன்னை நாடி பரிசில் பெற வந்த பெருந்தலைச் சாத்தனார் எனும் புலவருக்குக் கொடுப்பதற்குத் தன்னிடம் பொருள் இல்லாமையால் தன் இடை வாளைத் தந்து ‘தன் தலையை அறிந்து சென்று இளங்குமணனிடம் கொடுத்து பரிசில் பெற்றுச் செல்லுமாறு’ கேட்டுக்கொண்டான். இதுவே குமணனின் கொடைத் தன்மையாகும்.

6. கடையெழு வள்ளல்கள் ஆண்டப் பகுதியை தற்காலப் பெயர்களோடு பட்டியலிடுக.
Answer:
 




கற்பவை கற்றபின்

1. எதையும் எதிர்பாராமல் நீங்கள் பிறருக்கு உதவி செய்த நிகழ்வை வகுப்பறையில் பகிர்ந்து கொள்க.
Answer:
மாணவச் செல்வங்களே!
வணக்கம்.
எதையும் எதிர்பார்க்காமல் செய்த உதவி மண்ணையும் விண்ணையும்விட உயர்வானது. அது பற்றிய ஒரு நிகழ்வைக் கூறுகிறேன். பத்து ஆண்டுகளுக்கு முன் நமது பள்ளி வாயிலைக் கடக்கும் போது என்னை சார் என்ற குரல் அழைத்துத் திரும்பினேன். ஒரு ஐம்பது வயதுள்ள ஒரு அம்மாவும், பத்து வயது இருக்கும் ஒரு பையனும் நின்றிருந்தார்கள். என்னம்மா வேண்டும் என்றேன். சார் இவன் என் மகளுடைய பேரன். இவனுடைய அப்பா, அம்மா சுனாமி ஏற்பட்ட போது கடல் அன்னையால்
உள்வாங்கப்பட்டார்கள். இவன் தமிழ்வழிப் படித்தவன் உங்கள் பள்ளி ஆங்கில வழியாம் இவனால் படிக்க முடியாதாம். கட்டணமும் அதிகமாம். வேறிடம் போகச் சொல்லி விட்டார்கள் என்றாள் அந்த அம்மா .
உடனே, முதல்வர் அறைக்குச் சென்று என் செல்வாக்கைப் பயன்படுத்தி, நான் இவன் மீது கவனம் செலுத்துகிறேன் என்று உத்தரவாதம் கூறிப் பள்ளியில் சேர்த்தேன். இவ்வசமாக படிக்க பள்ளியில் அனுமதி பெற்றேன். இன்று அவன் காவல்துறை அதிகாரி. சில நாட்களுக்கு முன் :அவனுடைய பாட்டி என்னைப் பார்க்க தன் பேரனோடு வந்தார்கள். ஆனந்தக் கண்ணீர் வடித்தாள் பாட்டி. அவனும் என்னைப் பார்த்து நன்றி கூறினான். எதிர்பாராமல் செய்த உதவி என்னை மகிழ்ச்சியில் உறைய வைத்தது. ஆமாம், மாணவர்களே எதையும் எதிர்பாராமல் செய்யுங்கள்.

2. தமிழர்கள் கொடைத் தன்மையில் சிறந்து விளங்கினர் என்பதற்குச் சான்றுகள் திரட்டி ஒப்படைவு.
Answer:
உலகம் உவப்பவலன் ஏர்பு திரிதரு பலர் புகழ்ஞாயிறு போன்று பண்டையத்தமிழரின் வரலாறு, வாழ்வியல், அறம், ஈதல் போன்றவற்றை அறிய புறநானூறு ஒன்றைச் சான்றாகக் காட்டலாம்.
பாடல் உனக்கு பரிசில் எனக்கு :
தன்னை எதிர்த்துப் போரிட்ட பகைவனின் காவல் மிக்க அரண்களை அழித்துப் போர் புரிந்த வீரத்தைப் புகழ்ந்து பாடிய பாடினிக்கு பல கழஞ்சால் செய்யப்பட்ட பொன் அணிகலன்களையும், அவளோடு வந்து இணைந்து பாடிய பாணனுக்கு வெள்ளி நாறால் கோக்கப் பெற்ற தாமரைப் பூ மாலையும் பரிசாக வழங்கினான்.
மறம் பாடிய பாடினியும்மே
ஏருடைய விழக்கழஞ்சிற்
சீருடைய விழை பெற்றி சினே
பொற்றாமரையும் யானையும் வழங்குதல்:
“பாணாட தாமரை மலையவும் புலவர்
பூநுதல் யானையொடு புனைதேர்……
பாணர்களுக்குப் பொற்றாமரை ஈதலும், புலவர்களுக்கு யானையை வழங்குதலும் கொடையாகத் தமிழர்கள் கொண்டு வாழ்ந்தனர்.

Post a Comment

புதியது பழையவை