11th Tamil Guide Unit 3
3.7 திருக்குறள்
குறுவினாக்கள்
1.தீயினால் சுட்டதைப் ‘புண்’ என்றும் நாவினால் சுட்டதை ‘வடு’ என்றும் வள்ளுவம் கூறுவது ஏன்?Answer:
தியினால் சுட்டது உடலில் வடுவாக இருந்தாலும், உள்ளத்தில் ஆறிவிடும்.
நாவினால் சுட்டது மனத்தில் என்றும் ஆறாத வடுவாக நிலைத்துவிடும்.
எனவே, தீயினால் சுட்டதைப் ‘புண்’ என்றும், நாவினால் சுட்டதை ‘வடு’ என்றும் வள்ளுவம் கூறுகிறது.
2.மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின். – இக்குறட்பாவின் உவமையைப் பொருளோடு பொருத்துக.
Answer:
மருந்தாகித் தப்பா மரம், தன் எல்லா உறுப்புகளாலும் மருந்தாகப் பயன்படும் மரம் என்பது உவமை.
செல்வம், பிறருக்குப் பயன்படும்வகையில் வாழும் பெருந்தகையானுக்கு உவமையாகக் கூறப்பட்டது.
மரம் – உவமானம்; பெருந்தகையான் – உவமேயம்; பயன்படல் – பொதுத்தன்மை ; ‘அற்று’ – உவமை உருபு.
3.எதற்குமுன் நல்ல செயல்களை விரைந்து செய்ய வேண்டும் என்று திருக்குறள் கூறுகிறது?
Answer:
நாக்கு அடைத்து, விக்கல் வந்து உயிர்க்கு இறுதி வருமுன், நல்ல செயல்களை விரைந்து செய்யவேண்டும் என்று, திருக்குறள் கூறுகிறது.
4.சீர்தூக்கி ஆராய வேண்டிய ஆற்றல்கள் யாவை?
Answer:
செயலின் வலிமை, தன்னின் வலிமை, பகைவனின் வலிமை, துணையானவரின் வலிமை.
5.மருந்து எது? மருந்து மரமாக இருப்பவர் யார்?
Answer:
மருந்து மரமாக இருப்பவர் : பெருந்தகையாளர் மருந்து : செல்வம்
கற்பவை கற்றபின்
1.படத்துக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டுபிடிக்க.
அ) வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம் ‘ ஈண்டு முயலப் படும்.ஆ) அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்.
இ) நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது.
Answer:
இ) நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது.
2.துன்பப்படுபவர் ……….
அ) தீக்காயம் பட்டவர்
ஆ) தீயினால் சுட்டவர்
இ) பொருளைக் காக்காதவர்
ஈ) நாவைக் காக்காதவர்
Answer:
ஈ) நாவைக் காக்காதவர்
3.பின்வரும் நாலடியார் பாடலின் பொருளுக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டறிக.
Answer:
மலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத்
தலைமிசைக் கொண்ட குடையர் – நிலமிசைத்
துஞ்சினார் என்றெடுத்துத் தாற்றப்பட்
டாரல்லால்
எஞ்சினார் இவ்வுலகத் தில்.
அ) ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன்று இல்.
ஆ) நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ் வுலகு.
இ) அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்.
Answer:
ஆ) நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ் வுலகு.
4.கீழ்க்காணும் புதுக்கவிதைக்குப் பொருந்தும் திருக்குறளைத் தேர்ந்தெடுக்க.
Answer:
பூக்களுக்கும் முட்களுக்கும் இடையில்
புழங்குகிறது யோசனை
பாசத்துக்கும் நியாயத்துக்கும் நடுவில்
நசுங்குகிறது அறம்
இன்பத்துக்கும் பேராசைக்கும் நடக்கும்
போராட்டத்தில் வெடிக்கின்றன
வெளியில் குண்டுகளும்
வீட்டில் சண்டைகளும்
ஆசை அறுத்தல் எளிதல்ல!
முயன்று பார்க்கலாம் வா!
அ) அருவினை யென்ப உளவோ கருவியான் காலம் அறிந்து செயின்
ஆ) பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்.
இ) இன்பம் இடையறாது ஈண்டும் அவாவென்னும் துன்பத்துள் துன்பம் கெடின்.
Answer:
இ) இன்பம் இடையறாது ஈண்டும் அவாவென்னும் துன்பத்துள் துன்பம் கெடின்.
5.ஒப்புரவு என்பதன் பொருள்……
அ) அடக்கமுடையது
ஆ) பண்புடையது
இ) ஊருக்கு உதவுவது
ஈ) செல்வமுடையது
Answer:
இ) ஊருக்கு உதவுவது
6.பொருத்துக.
அ) வாழ்பவன் – i) காத்திருப்பவன்
ஆ) வாழாதவன் – ii) மருந்தாகும் மரமானவன் !
இ) தோன்றுபவன் – iii) ஒத்ததறிபவன்
ஈ) வெல்ல நினைப்பவன் – iv) புகழ் தரும் பண்புனவன்
உ) பெரும் பண்புடையவன் – V) இசையொழிந்த வல் ,
– vi) வீழ்பவன்
Answer:
அ – iii, ஆ – V, இ – iv, ஈ – i,
7.இலக்கணக் குறிப்புத் தருக.
Answer:
அ) சுடச்சுடரும் – மூன்றாம் வேற்றுமைத்தொகை
ஆ) சுடச்சுடரும் பொன் – எதிர்காலம் பெயரெச்சத் தொடர்
இ) சுடச்சுட – அடுக்கத்தொடர்
8.விரைந்து கெடுபவன் யார்?
அ) பிறருடன் ஒத்துப் போனவன், தன் வலிமை அறிந்தவன், தன்னை உயர்வாக நினைப்பவன்.
ஆ) பிறருடன் ஒத்துப் பாகாதவன், தன் வலிமை அறியாதவன், தன்னை உயர்வாக நினைக்காதவன்.
இ) பிறருடன் ஒத்துப் போனவன், தன் வலிமை அறிந்தவன், தன்னை உயர்வாக நினைக்காதவன்.
ஈ) பிறருடன் ஒத்துப் போகாதவன், தன் வலிமை அறியாதவன், தன்னை உயர்வாக நினைப்பவன்.
Answer:
ஈ) பிறருடன் ஒத்துப் போகாதவன், தன் வலிமை அறியாதவன், தன்னை உயர்வாக நினைப்பவன்.
9.வேளாண்மை செய்தற் பொருட்டு – பொருள் கூறுக.
Answer:
விடை உதவி செய்வதற்கே ஆகும்.
10.பற்று தங்கியவனுக்கு உண்டாவது – பற்றற்றவனைப் பற்றுவதால் உண்டாவது
அ) பற்றுகள் பெருகும் – பொருள்களின் இன்பம் பெருகும்
ஆ) பற்றுகள் அகலும் – பொருள்களின் துன்பம் அகலும்
இ) பொருள்களின் துன்பம் அகலும் – பற்றுகள் அகலும்
ஈ) பொருள்களின் இன்பம் பெருகும் – பற்றுகள் பெருகும்
Answer:
இ) பொருள்களின் துன்பம் அகலும் – பற்றுகள் அகலும்
11.அருவினை – புணர்ச்சிவிதி கூறுக.
Answer:
அருவினை – அருமை + வினை – “ஈறுபோதல்” (அருவினை)
12.சொல்லிழுக்குப் படுபவர் ……………….
அ) அடக்கமில்லாதவர்
ஆ) தீயினால் சுட்டவர்
இ) நாவைக் காக்காதவர்
ஈ) பொருளைக் காக்காதவர்
Answer:
இ) நாவைக் காக்காதவர்
கூடுதல் வினாக்கள்
6.மலையினும் மாணப்பெரியது எது?Answer:
தனக்குரிய நேர்வழியில் மாறாது, அடக்கமாக இருப்பவனின் உயரிய தோற்றமானது, மலைப்பின் மாண்பைக் காட்டிலும் பெரியதாகும்.
7.நாவை ஏன் காக்க வேண்டும்?
Answer:
எதனை அடக்கிக் காக்காவிட்டாலும், நாவை மட்டுமாவது அடக்கிக் காக்க வேண்டும். அவ்வாறு நாவைக் காக்காவிட்டால், சொல்குற்றம் ஏற்பட்டுத் துன்பப்படுவர்.
8.தாளாற்றிப் பொருளீட்டுவது எதற்காக எனக் குறள் கூறுகிறது?
Answer:
விடாமுயற்சி செய்து பொருளீட்டுவது, தகுதியானவருக்கு உதவி செய்வதற்கேயாகும் எனக் குறள் கூறுகிறது.
9.உயிர் வாழ்வார், செத்தார் – எவர் எவர்?
Answer:
உலக நடைமுறையோடு பொருந்தி ஒத்து வாழ்பவரே உயிர் வாழ்பவராவார். அவ்வாறு வாழாதவர் செத்தவராவர்.
10.உலகில் நிலைத்து நிற்பதாகக் குறள் கூறுவது யாது?
Answer:
இணையற்ற, உயர்ந்த புகழே அல்லாமல், இந்த உலகத்தில் ஒப்பற்று உயர்ந்து நிலைத்து நிற்பது, வேறு எதுவுமில்லை எனக் குறள் கூறுகிறது.
11.‘நன்று’ என வள்ளுவர் எதனைக் கூறுகிறார்? ‘
Answer:
தோன்றினால், புகழ்தரும் பண்புகளுடன் தோன்ற வேண்டும். இல்லையெனில், தோன்றாமல் இருப்பதே நன்று என, வள்ளுவர் கூறுகிறார்.
12.வாழ்வார், வாழாதவர் எவர் எவர் என வள்ளுவர் கூறுகிறார்?
Answer:
பழி இல்லாமல் வாழ்பவரே வாழ்பவராவார்; புகழ் இல்லாமல் வாழ்பவர், வாழாதவராவார் என, வள்ளுவர் கூறுகிறார்.
13.செய்தவம் ஈண்டு முயலப்படுவது ஏன்?
Answer:
விரும்பியதை விரும்பியவாறே பெற முடியும் என்பதனால், செய்ய முடிந்த தவம், இங்கேயே முயன்று பார்க்கப்படுகிறது என, வள்ளுவர் கூறியுள்ளார்.
14.தவமிருப்பார் மேலும் பயன் யாது?
Answer:
பொன்னை நெருப்பில் புடம் இட்டுச் சுடும்போது, மாசு நீங்கி ஒளிவிடும். *
அதுவால், தவம் இருந்து, துன்பத்தில் தம்மை வருத்திக் கொள்பவருக்கு, ஞானம் ஒளி பெற்று வளம.
15.இவ்வலகு எத்தகைய பெருமையை உடையது?
Answer:
நேற்று உயிருடன் இருந்தவன், இன்று இல்லை என்னும் நிலையாமைப் பெருமையை உடையது இவ்வுலகம்.
16. கோடியும் அல்ல பல. – கருதுபவர் எவர்?
Answer:
வாழ்வின் தன்மையை ஒரு வேளையாயினும் சிந்திக்காதவர், ஒரு கோடியினும் அதிகமாக எண்ணுவர்.
17.நோதல் இலன் – எவன்?
Answer:
பொருள்களிடமிருந்து பற்றுதலை நீக்கியவனாக எவனொருவன் இருக்கிறானோ, அவன் அந்தப் பொருள்களால் துன்பம் அடைவது இல்லை.
18.பற்றை விட என்ன செய்ய வேண்டும்?
Answer:
பற்றை விட்டு அகல்வதற்குப் பற்று இல்லாத (இறை)வனைப் பற்றி நிற்க வேண்டும்.
19.இன்பம் எப்பொழுது இடைவிடாது பெருகும்?
Answer:
பேராசை என்னும் பெருந்துன்பம் தொலைந்துபோனால், இன்பம் என்பது இடைவிடாது பெருகும்.
20.பேரா இயற்கை பெற வழியாது?
Answer:
எக்காலத்திலும் நிறைவு செய்யமுடியாத இயல்புடைய ஆசை என்பதனை விட்டொழித்தால், நிலையான இன்பத்தைப் பெற முடியும்.
21.விரைந்து கெடுபவன் யார்?
Answer:
மற்றவருடன் ஒத்துப் போகாதவனும், தன் வலிமையை அறியாதவனும், தன்னைப் பெரிதாக நினைப்பவனும் விரைந்துக் கெடுபவனாவான்.
22.இல்லாகித் தோன்றாக் கெடுபவன் யார்?
Answer:
தன்னிடம் உள்ள பொருள் முதலானவற்றின் அளவை அறிந்து வாழாதவன், வாழ்க்கையில் எல்லா வளமும் பெற்றிருப்பதுபோல் காட்சி தந்து, தோற்றம் இல்லாமல் கெட்டு அழிவான.
23.எவருக்கு அருவினை என்பது இல்லையாம்?
Answer:
உரிய கருவிகளுடன், தக்க காலம் அறிந்து செயலைச் செய்பவனுக்கு, செயதற்கு அரிய செயல் என்று எதுவும் இல்லையாம்.
24.எவரால் ஞாலத்தையும் பெறமுடியும்?
Answer:
உரிய காலத்தில், பொருத்தமான இடத்தில் செயலைச் செய்யும் ஆற்றலைப் பெற்றவனால், ஞாலத்தையும் பெறமுடியும்.
25.காலம் கருதி இருப்பவர் – எவர்?
Answer:
உலகத்தை வெல்லக் கருதுபவர், மனம் கலங்காமல் அதற்கு உரிய காலத்திற்காகக் காத்திருப்பர்.
26.அரிய செயலை எப்போது செய்து முடிக்கவேண்டும்?
Answer:
கிடைப்பதற்கு அரிய காலம் வாய்த்தால், படிப்பதற்கு அரிய செயலை, அப்போதே செய்து முடிக்க வேண்டும்.
Answer:
கிடைப்பதற்கு அரிய காலம் வாய்த்தால், படிப்பதற்கு அரிய செயலை, அப்போதே செய்து முடிக்க வேண்டும்.
27.திருக்குறளுக்கு வழங்கும் வேறு பெயர்கள் பாவை?
Answer:
உலகப்பொதுமறை, பொய்யாமொழி வாயுறை வாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்கள், திருக்குறளுக்கு ழங்கப்பெறுகின்றன.
28.மருத்துவத்தின் பிரிவுகளாகக் குறள் கூறுவன யாவை?
Answer:
நோயாளி, மருத்துவர் பாத்து, மருந்தாளுநர்.
சிறுவினாக்கள்
1.தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு – இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.Answer:
இக்குறட்பாவில் வேற்றுமை அணி பயின்று வந்துள்ளது.
இரு பொருள்களின் ஒற்றுமையை முதலில் கூறிப் பின்னர் அவற்றின் வேற்றுமையைக் கூறுவது வே றுமை அணி. தீயினால் சுட்ட புண்ணும், நாவினால் சுட்ட வடுவும் சுடுதலால், ஒற்றுமை உடையன. புண் ஆறும்; வடு ஆறாது என்பது வேற்றுமை. எனவே, வேற்றுமை அணி பயின்று வந்துள்ளது.
2.புகழுக்குரிய குணங்களாக நீவிர் கருதுவன யாவை? புகழின் பெருமையைப் பொதுமறைவழி நின்று கூறுக.
Answer:
உலகநடை அறிந்து, அடக்கத்தோடு பிறருக்கு உதவி செய்து வாழ்வதே, புகழுக்குரிய குணங்கள் ஆகும்.
இணையற்ற இந்த உலகத்தில், உயர்ந்த புகழே அல்லாமல், உயர்ந்து ஒப்பற்று நிலைத்து நிற்பது வேறு எதுவும் இல்லை .
எனவே, வாழ்ந்தால் புகழ் தரும் பண்புகளுடன் வாழ வேண்டும். இல்லையெனில் தோன்றாமல் இருப்பதே நல்லது. ஏனெனில், பழி இல்லாமல் வாழ்பவரே வாழ்பவராவார். புகழ்பெற இயலாமல் வாழ்பவர், வாழாதவரேயாவார் எனப் புகழின் பெருமையைப் பொதுமறை விளக்குகிறது.
3.நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும் – இக்குறட்பாவை அலகிட்டு வாய்பாடு கூறுக.
Answer:
4.சொற்பொருள் பின்வருநிலையணியை விளக்கிக் கீழ்க்காணும் குறளுக்கு இவ்வணிமைப் பொருத்தி எழுதுக.
Answer:
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.
செய்யுளில் முன்னர்வந்த சொல், மீண்டும் மீண்டும் அதே பொருளில் பல முறை வருமானால், அது சொற்பொருள் பின்வருநிலை அணி எனப்படும்.
இக்குறளில் வலி’ என்னும் சொல், வலிமை’ என்னும் பொருளில் பலமுறை வந்துள்ளது. எனவே, இச்செய்யுளில் சொற்பொருள் பின்வருநிலையணி பயின்று வந்துள்ளது.
Answer:
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.
செய்யுளில் முன்னர்வந்த சொல், மீண்டும் மீண்டும் அதே பொருளில் பல முறை வருமானால், அது சொற்பொருள் பின்வருநிலை அணி எனப்படும்.
இக்குறளில் வலி’ என்னும் சொல், வலிமை’ என்னும் பொருளில் பலமுறை வந்துள்ளது. எனவே, இச்செய்யுளில் சொற்பொருள் பின்வருநிலையணி பயின்று வந்துள்ளது.
5.விரும்பியதை அடைவது எப்படி? குறள்வழி விளக்குக.
Answer:
செய்ய முடிந்த தவத்தை முயன்று பார்த்தால், விரும்பியதை விரும்பியபடி பெறமுடியும். பொன்னை நெருப்பில் இட்டுச் சுடும்போது, அது மாசு நீங்க ஓரிவிடுவதுபோலத் தவத்தை மேற்கொண்டு வருந்தினால், ஞானம் என்னும் அறிவு ஒளி பெறலாம்.
உரிய காலத்தில், பொருத்தமான இடத்தில் தங்க செயலை மேற்கொண்டால், உலகத்தையே பெறக் கருதினாலும் கிடைத்துவிடும் எனக் குறத வழிகாட்டுகிறது.
கூடுதல் வினாக்கள்
6.மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்பெருந்தகை யான்கண் படின் – இதில் பயின்றுள்ள அணியைச் சுட்டி விளக்குக.
Answer:
இதில் உவமை அணி பயின்றுள்ளது. உவமானம் ஒரு தொடராகவும், உவமேயம் ஒரு தொடராகவும் அமைய, இடையில் உவமை உருபைக் கொடுத்துக் கூறுவது உவமை அணியாகும்.
மருந்தாகித் தப்பா மரம் – உவமானம்; செல்வம் பெருந்தகையான்கண் படின் – உவமேயம்.
அற்று – உவமை உருபு. எனவே, உவமையணி பயின்றுள்ளது.
7.சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. – இதில் பயின்றுள்ள அணியைச் சுட்டி விளக்குக.
Answer:
இதில் உவமை அணி பயின்றுள்ளது.
வமானம், உவமேயம், உவமை உருபு ஆகியவற்றைப் பெற்றிருப்பது உவமை அணி.
சுடச்சுடரும் பொன் – உவமானம்; துன்பம் சுடச்சுட நோற்கிற்பவர்க்கு ஒளிவிடும் – உவமேயம்; போல் – உவம உருபு. எனவே, உவமையணி பயின்றுள்ளது.
8.பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு. – இக்குறளில் பயிலும் அணியைச் சுட்டி விளக்குக.
Answer:
இக்குறளில் சொற்பொருள் பின்வரு நிலையணி பயின்றுள்ளது.
ஒருசொல் அதே பொருளில், பலமுறை இடம்பெறுவது, சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும்.
‘பற்று’ என்னும் சொல், ‘பிடித்தல்’ என்னும் பொருளில் பலமுறை இடம்பெற்றதால், சொற்பொருள் பின்வரு நிலையணியாயிற்று.
9.பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின். – இக்குறளில் பயின்று வரும் அணியைச் சுட்டி விளக்குக.
Answer:
இக்குறளில் பிறிது மொழிதல் அணி பயின்றுள்ளது. கூறக்கருதிய பொருளை நேரே கூறாமல், பிறிது ஒன்றைக் கூறி, அதன்மூலம் விளக்குவது. அதாவது, உவமானத்தைக் கூறி, உவமேயத்தைப் பெற வைப்பது, பிறிது மொழிதலணியாகும்.
“இலேசான மயிலிறகேயானாலும், அளவுக்கு அதிகமாக ஏற்றினால், வண்டியின் வலிமையான அச்சும் முறிந்துவிடும்” என்னும் உவமையைக் கூறி, “வலிமை இல்லாதவராயினும் பலர் ஒன்று சேர்ந்தால், வலிமை பொருந்தியவனையும் அழித்திட இயலும்” என்னும் பொருளைப் பெறவைத்தமையால், பிறிது மொழிதலணியாகும்.
10.அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்.- அலகிட்டு வாய்பாடு கூறுக.
Answer:
12.திருக்குறள் குறித்து நீ அறிவன யாவை? ]
Answer:
தமிழ் இலக்கியங்களுள் வாழ்வியலுக்கு வழிகாட்டும் நூல் திருக்குறள்.
இது, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று; 1330 குறள் வெண்பாக்களால் ஆகியது.
உலக மக்கள் அனைவருக்கும், எக்காலத்திற்கும் பொருந்தும் கருத்துகளை உள்ளடக்கியது.
அலகப் பொதுமறை’ எனப் போற்றப்படுவது. குறள் வெண்பாக்களால் ஆகியதால், ‘குறள்’ எனவும், திரு என்னும் அடைமொழி பெற்றுத் ‘திருக்குறள்’ எனவும் வழங்கப்பெறுவது.
13.திருக்குறளுக்குள்ள உரைகள் பற்றி எழுதுக.
Answer:
பரிமேலழகர், மணக்குடவர், காலிங்கர், பரிதி, பரிப்பெருமாள், தருமர், தாமத்தர், நச்சர், திருமலையர், மல்லர் என்னும் பத்துப் பேருடைய பழைய உரைகள் உள்ளன.
இன்றளவும், காலத்திற்கு ஏற்பப் பலர் உரை எழுதி வருகின்றனர். உலகமொழிகள் பலவற்றில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. திருக்குறளின் சிறப்பை விளக்கிப் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பு, ‘திருவள்ளுவமாலை’ என வழங்கப் பெறுகிறது.
14.திருவள்ளுவர் குறித்து அறிவன யாவை?
Answer:
திருக்குறளை இயற்றியவர் குறித்த வரலாற்றுச் செய்திகள் எதுவும் தெளிவாகக் கிடைக்கவில்லை.
எனினும், தேவர், நாயனார், தெய்வப்புலவர், செந்நாப்போதார், பெருநாவலர், பொய்யாமொழிப் புலவர், மாதானுபங்கி, முதற்பாவலர் என்னும் சிறப்புப் பெயர்களால் அழைக்கப் பெறுகிறார்.
15.திருக்குறள் அதிகாரங்கள், இயல்கள் குறித்து எழுதுக.
Answer:
திருக்குறள் அறத்துப்பால் (38 அதிகாரங்கள்), பொருட்பால் (70 அதிகாரங்கள்), இன்பத்துப்பால் (25 அதிகாரங்கள்) என்னும் முப்பிரிவுகளையும், 133 அதிகாரங்களையும் கொண்டது.
அறத்துப்பால் – பாயிரவியல் (4), இல்லறவியல் (20), துறவறவியல் (13), ஊழியல் (1) என்னும் நான்கு இயல்களைக் கொண்டுள்ளது.
பொருட்பால் – அரசியல் (25), அமைச்சியல் (32), ஒழிபியல் (13) என்னும் மூன்று இயல்களைக் கொண்டுள்ளது.
இன்பத்துப்பால் : களவியல் (7), கற்பியல் (18) என்னும் இரண்டு இயல்களைக் கொண்டுள்ளது.
16.மருந்து, மருத்துவர், மருத்துவம் ஆகியன பற்றித் திருக்குறள் கூறுவன யாவை?
Answer:
மருந்து : முன்னர் உண்டது செரித்ததை அறிந்து உண்டால், மருந்து என ஒன்று உடலுக்குத் தேவையில்லை.
மருத்துவர் : நோயையும் அதன் காரணத்தையும் அதை நீக்கும் வழியையும் ஆராய்ந்து, நோயாளியன் வயதையும் நோயின் அளவையும் மருத்துவம் செய்தற்குரிய காலத்தையும் ஆராய்ந்து, மருத்துவர் செயல்பட வேண்டும்.
மருத்துவம் : நோயாளி, மருத்துவர், மருந்து, மருந்தாளுநர் என்னும் நான்கு வகைகள் அடங்கும்.
நெடுவினா
1.கொடையில் சிறந்து விளங்க வள்ளுவம் கூறும் வழிகளை ஒப்புரவறிதல் அதிகாரம்வழி நிறுவுக.Answer:
உலகியல்பு அறிந்து, கைம்மாறு கருதாமல், கண்ணோட்டத்துடன் பிறர்க்கு உதவி வாழ்தலே ஒப்புரவறிதலாகும்.
ஒப்புரவு அறிந்தவர், தம் கைப்பொருளைப் பிறர் நலனுக்குத் தேவையுள்ளபோது செலவழிப்பவராக இருப்பர். விடாமுயற்சி செய்து பொருள் ஈட்டும் செயல்களாம், தகுதியானவர்க்குக் கொடுத்து உதவுவதற்கே ஆகும். *
உலகநடை அறிந்து, உயர்ந்தவர் அனைவரோடும் ஒத்துப்போகிறவனே உயிர் வாழ்பவனாவான்.
பொருட்செல்வமானது, பெருந்தன்மை பொருந்தி வனிடம் சென்று சேருமானால், அது தன் உறுப்புகளால் மருந்தாகப் பயன்படும் மரம், ஊர் நடுவில் பழுத்து உள்ளதற்குச் சமமாகும் என, வள்ளுவர் கூறுகிறார்.
இவற்றால் ஒப்புரவு அறிந்தவரே, கொடையால் சிறந்து விளங்க முடியும் என்பதனைத் தெளியலாம்.
2.‘அடக்கமுடைமை ஒருவரை வாழ்வினில் உயர்த்தும்’ – இக்கூற்றை முப்பால்வழி விளக்குக.
Answer:
ஒருவர் மனம், மொழி, செயல்களால் அடங்கி இருப்பதே அடக்கமாகும். அந்த அடக்கமுடைமை ஒருவனை வாழ்வில் எவ்வெவ் வாறு உயர்த்தும் என்பதை முப்பால்வழிக் காண்போம்.
தன் தகுதிக்கென ஆன் தேன் கூறிய நேர்வழி மாறாது, ஒருவன் அடக்கமாக இருப்பானாயின், அவன் உயர்வானது, மலையின் மாண்பைக் காட்டிலும் பெரிதாக விளங்கும்.
அடக்கம் என்பதில் புலன் அடக்கம் முக்கியம். அவ்வகையில் எதனை அடக்கிக் காக்கவில்லையானாலும், நாவை மட்டுமாவது அடக்கிக் காக்க வேண்டும்.
அப்படி நாவை அடக்கிக் காக்கவில்லையானால், பேசும் சொற்களில் குற்றம் ஏற்பட்டு, சிக்கலுக்கு உள்ளாகித் துன்பப்படுவர்.
நாவைன் அடக்க வேண்டும்? தீயினால் சுட்ட புண், உடலில் வடுவாகக் கிடந்தாலும், உள்ளத்துள் ஆடும். நாவினால் கூறும் சுடுசொல் புண்ணாகும் வகையில் சுடாது. ஆனால், வடுவாகவே உள்ளத்தில் நிலைத்திருந்து ஊறு செய்யும்.
எனவே, ஒருவர் வாழ்வில் பழிபாவமின்றி உயர்வு பெற, அடக்கம் இன்றியமையாதது என்பதை முப்பால் தெளிவுபடுத்துகிறது.
அப்படி நாவை அடக்கிக் காக்கவில்லையானால், பேசும் சொற்களில் குற்றம் ஏற்பட்டு, சிக்கலுக்கு உள்ளாகித் துன்பப்படுவர்.
நாவைன் அடக்க வேண்டும்? தீயினால் சுட்ட புண், உடலில் வடுவாகக் கிடந்தாலும், உள்ளத்துள் ஆடும். நாவினால் கூறும் சுடுசொல் புண்ணாகும் வகையில் சுடாது. ஆனால், வடுவாகவே உள்ளத்தில் நிலைத்திருந்து ஊறு செய்யும்.
எனவே, ஒருவர் வாழ்வில் பழிபாவமின்றி உயர்வு பெற, அடக்கம் இன்றியமையாதது என்பதை முப்பால் தெளிவுபடுத்துகிறது.
இலக்கணக்குறிப்பு
அடங்கியான், அறிவான், வாழ்வான், வாழ்வாரே, நீங்கியான், வியந்தான், கருதுபவர் – வினையாலணையும் பெயர்கள்
தோற்றம், நோதல், வாழ்க்கை – தொழிற்பெயர்கள்
மலையினும் – உயர்வு சிறப்பும்மை
யா – அஃறிணைப் பன்மை வினாப்பெயர்
நா காக்க (நாவைக் காக்க), நாச்செற்று (நாவினைச் செற்று), அவா நீப்பின் (அவாவை நீப்பின்) – இரண்டாம் வேற்றுமைத்தொகைகள்
சுடச்சுடரும் (சுடுவதால் சுடரும்) – மூன்றாம் வேற்றுமைத்தொகை
நெருநல் உளன் (நேற்றைக்கு உளன்), இன்று இல்லை – நான்காம் வேற்றுமைத்தொகைகள்
தோற்றம், நோதல், வாழ்க்கை – தொழிற்பெயர்கள்
மலையினும் – உயர்வு சிறப்பும்மை
யா – அஃறிணைப் பன்மை வினாப்பெயர்
நா காக்க (நாவைக் காக்க), நாச்செற்று (நாவினைச் செற்று), அவா நீப்பின் (அவாவை நீப்பின்) – இரண்டாம் வேற்றுமைத்தொகைகள்
சுடச்சுடரும் (சுடுவதால் சுடரும்) – மூன்றாம் வேற்றுமைத்தொகை
நெருநல் உளன் (நேற்றைக்கு உளன்), இன்று இல்லை – நான்காம் வேற்றுமைத்தொகைகள்
வினைவலி, தன்வலி, மாற்றான்வலி, துணைவலி – ஆறாம் வேற்றுமைத்தொகைகள்
காக்க, தோன்றுக, பற்றுக – வியங்கோள் வினைமுற்றுகள்
சோகாப்பர் – பலர்பால் வினைமுற்று
சொல்லிழுக்கு (சொல்லால் உண்டாகும் இழுக்கு) – மூன்றன் உருபும் பயனும் உடன்தொக்க தொகை
காவாக்கால், பொன்றாது, இடையறாது, கலங்காது – எதிர்மறை வினையெச்சங்கள்
சுட்ட புண், சுட்ட வடு, தந்த பொருள் – இறந்தகாலப் பெயரெச்சங்கள்
ஆறும் – உடன்பாட்டு ஒன்றன்பால் வினைமுற்று
காக்க, தோன்றுக, பற்றுக – வியங்கோள் வினைமுற்றுகள்
சோகாப்பர் – பலர்பால் வினைமுற்று
சொல்லிழுக்கு (சொல்லால் உண்டாகும் இழுக்கு) – மூன்றன் உருபும் பயனும் உடன்தொக்க தொகை
காவாக்கால், பொன்றாது, இடையறாது, கலங்காது – எதிர்மறை வினையெச்சங்கள்
சுட்ட புண், சுட்ட வடு, தந்த பொருள் – இறந்தகாலப் பெயரெச்சங்கள்
ஆறும் – உடன்பாட்டு ஒன்றன்பால் வினைமுற்று
புணர்ச்சி விதிகள்
1. தாளாற்றி – தாள் + ஆற்றி.“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (தாளாற்றி).
2. பொருளெல்லாம் – பொருள் + எல்லாம்.
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (பொருளெல்லாம்).
3. அச்சிறும் – அச்சு + இறும்.
“உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்” (அச்ச் + இரும்)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (அச்சிறும்.)
கருத்துரையிடுக