11th Tamil Guide Unit 1 
Unit 1.4 ஆறாம் திணை

11th Standard All Subject Guide for Tamil Nadu State Board Syllabus. Samacheer Kalvi Guide. 11th Tamil Guide, 11th Tamil Unit 1 Full Book Back Answers. 11th Tamil  இயல் 1-4 ஆறாம் திணை. பதினோராம் வகுப்பு தமிழ் இயல் 1 விடை குறிப்புகள். 11th All Subject Book Answers, 11th Tamil All Answers, TN 11th Tamil Book Back and Additional Question with Answers. Samacher Kalve Guide have 11th Tamil Book Answers Solutions Guide Pdf Free Download are part of Tamil Nadu Samacher Kalve 11th Books Solutions.

TN State Board New Syllabus Samacher Kalvee 11th Std Tamil Guide Pdf of Text Book Back Questions and Answers Chapter Wise Important Questions, Study Material, Question Bank, Notes, and revise our understanding of the subject. 

நெடுவினா

1.தமிழர் வாழ்வோடும் புலம்லெர் நிகழ்வுகளோடும் அ.முத்துலிங்கத்தின் திணைப்பாகுபாடு எவ்வாறு

இணைக்கப்படுகிறது? (அல்லது) புலம் பெயர்ந்த வலியையும் வாழ்வையும் ஆறாம் திணை வாயிலாக நீவிர் அறிவதைத் தொகுத்து எழுதுக.

Answer:

அகதிகள் முகாம் வாரிக்கை :

இலங்கை, மவண்லவினியாவில் வாடகை வீட்டில் வாழ்ந்த தமிழ்க் குடும்பம் ஒன்று, இனக் கலவரத்தின்போது வீட்டுக்காரரான சிங்களவரால் அன்று இரவு காப்பாற்றப்பட்டு, மறுநாள் அகதிகள் முகாமுக்குச் சென்றது. அங்கே யாரோ அணிந்த மேல்சட்டையை மட்டும் ஒருவர் மாற்று உடையாகப் பெற்றார். தன் அக்காகத் தட்டு ஏந்தி நின்றபோது, இப்படி ஒருகணம் தம் வாழ்வில் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என முடிவு செய்து, உறுதியாக இருந்துள்ளார். பலவருடம் பல தேசங்களில் சுற்றி அலைந்துள்ளார்.

பலம் பெயர்தல் காரணம் :

புலம்பெயர்தல் என்பது, புதிதன்று. சங்ககாலத்தில் ஐந்நிலத்தில் வாழ்ந்த தமிழர், புலம்பெயர்ந்து வாழ்ந்ததை, இலக்கியங்களில் காணமுடிகிறது. அவர்கள் உயிர்க்காகவும், பொருள் தேடவும் புலம்பெயர்ந்தபோதும், ‘வெஞ்சின வேந்தன் பகை அலைக் கலங்கி வாழ்வோர் போகிய பேரூர்பாழ்’ எனத் தனிமகனார் பாடியுள்ளார். அக்காலத்தில் அரசனின் சீற்றத்திற்கு அஞ்சிப் புலம்பெயர்ந்ததுபோலச் சமீப காலங்களில் தம்மைப் போன்றோர் புலம் பெயர நேரிட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

தீய சிந்தனையைச் சாக அடித்தவர்கள் :

கனடாவுக்குப் புலம் பெயர்ந்த தமிழர்கள், சில வருடங்களில் தமிழ்ப் பத்திரிகைககள் தொடங்கி, கோரிக்கைகள் வெற்றி பெறாதநிலையில் நிரந்தர வேலையும் அடுத்தவேளை உணவும் நிச்சயமில்லா நிலையிலும், தங்கள் புதுவாழ்வைப் பதிவு செய்கின்றனர்.

புலம்பெயர்ந்தோர் சாதனை :

புலம்பெயர்ந்த இரண்டாம் தலைமுறை தமிழைக் கைவிடும் என்ற குற்றச்சாட்டைப் பொய்யாக்கி, கணினி யுகத்தில் தமிழ்கற்று உயர் இலக்கியங்களைப் படைத்துத் தமிழை உலக அரங்கில் முன்னிறுத்துகிறார்கள். நியூசிலாந்திலிருந்து அலாஸ்காவரை புலம் பெயர்ந்த தமிழர்கள், பத்துலட்சம் பேர் வாழ்கிறார்கள். கனடாவில் மட்டும் மூன்று லட்சம் தமிழர்கள். ஒருகாலத்தில் சூரியன் மறையாத பிரிட்டிஷ் ராச்சியம் என்று சொன்னதுபோல், இன்று ‘சூரியன் மறையாத தமிழ்ப்புலம்’ என்று, புலம் பெயர்ந்த தமிழர்கள் தோற்றுவித்துள்ளனர்.

கனடாவில் சாலை ஒன்றுக்கு வன்னி வீதி என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இப்பெயரை மாற்றவோ, சிதைக்கவோ முடியாது. 2012முதல் ஆண்டுதோறும் ஜனவரி 14ஆம் நாள், தமிழர் பாரம்பரிய நாள் எனப் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. இவை ஈழத் தமிழரின் புலம்பெயர்ந்த வரலாற்றை நினைவுபடுத்திக் கொண்டிருக்கும்.

ஆறாம் திணையும் ஆறுமணிக் குருவியும் :

ஆசிரியரின் ஈழத்துக் கொக்குவில் கிராமத்தில் காகமும் ஆறுமணிக் குருவியும் இருந்தன. காகம் பறக்க இரண்டு மைல் தூரமே எல்லை. ஆறுமணிக் குருவி, இமயத்தைக் கடந்தும் சென்று தரும்புமாம். ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்கள், இந்த ஆறுமணிக் குருவிபோல, அவர்களுக்கு பொலை கிடையாது. இனி அந்தத் தமிழர்களின் புலம், பனியும் பனிசார்ந்த நிலமும். அதுவே ஆறாம்திணை என, அ. முத்துலிங்கம் பாகுபடுத்திக் கூறியுள்ளது சிறப்பாகும்.

Post a Comment

புதியது பழையவை