12th Tamil Unit 4 Guide | Notes
இயல்: 4.1 பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்


பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக

1. சுவடியோடு பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.
அ) வசம்பு
ஆ) மணத்தக்காளியிலைச் சாறு
இ) கடுக்காய்
ஈ) மாவிலைக்கரி
Answer:
இ) கடுக்காய்

2. ‘குழிமாற்று’ எந்தத் துறையோடு தொடர்புடைய சொல்
அ) இலக்கியம்
ஆ) கணிதம்
இ) புவியியல்
ஈ) வேளாண்மை
Answer:
ஆ) கணிதம்

குறுவினா

1. அக்காலத்துக் கல்வி முறையில் மனனப் பயிற்சிக்கு உதவிய நூல்கள் யாவை ?
Answer:
  • தமிழில் : நிகண்டு, நன்னூல், காரிகை, தண்டியலங்காரம், நீதிநூல்கள்.
  • கணிதத்தில் : கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று முதலிய பலவகை வாய்பாடுகள்.
  • ‘தலைகீழ்ப்பாடம்’ என்ற முறையும் உண்டு.
  • ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் போன்ற அகராதி வடிவில் அமைந்த நூல்கள் நினைவாற்றலை வளர்க்க உதவின.

சிறுவினா

1. நீங்கள் ஆசிரியரானால் மாணாக்கரை அன்பினால் எவ்வகையில் நெறிப்படுத்துவீர்?
Answer:
  • மாணாக்கர்களின் அறிவு, திறன்கள், மனப்பாங்கு , செயற்பாடுகள், பண்புகள், பாடரீதியான அடைவுகள் எல்லா மாணவர்களுக்கு ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்ற எனது மனநிலையை மாற்றுவேன்.
  • கற்றலில் பின்னடைவு அடைந்திருக்கும் மாணாக்கரை எக்காரணம் கொண்டும் கற்றலில் முழு அடைவு அடையும் மாணாக்கரோடு ஒப்பிட்டுக் கூறமாட்டேன் மாறாக, கற்றலில் அம்மாணவன் பின்னடைவு அடைந்ததற்கான காரணத்தைக் கண்டு அவனைத் தேற்றுவேன்.
  • கற்றலில் பின்தங்கிய மாணாக்கர் கற்றலில் இடர்ப்படுவதற்கான காரணத்தை இனங்கண்டு அவன் முழுமையான அடைவு எய்த நல்ல வழிகாட்டியாகச் செயல்படுவேன்.
  • எல்லா மாணாக்கரையும் அன்புடன் அணுகும் மனத்தைப் பெறுவேன். தகாத வார்த்தைகள், பொருத்தமற்ற வார்த்தைகளை ஒருபோதும் வகுப்பறையில் உச்சரிக்க மாட்டேன்.
  • மாணக்கர்களின் குடும்பச்சூழல்களை உணர்ந்து அவர்களுக்கு ஆறுதலான வார்த்தைகளைக் கூறுவேன்.
  • மாணாக்கரோடு முரண்படுதல், எதிர்த்து நின்று செயற்படுதல் ; துன்புறுத்தல், மனம்நோக நடத்தல் என்பன போன்ற மனவேதனைப்படுத்தும் செயல்பாடுகளை முற்றிலும் தவிர்ப்பேன்.
  • (vii) நல்ல ஆசானாய் இருக்கும் என்னாலும் நல்ல அன்பானவனாய் இருக்க முடியும் என்பதை நிலைநிறுத்துவேன்.
2. மணலில் எழுதியது முதல் தற்காலம் வரை எழுதும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தொகுத்துரைக்க.
Answer:

  • முதலில் ஆசிரியர் தரையில் எழுத அதன் மேல் பிள்ளைகள் எழுதினர். மணலில் எழுதிப் பழகுவர்.
  • எழுத்துகள் வரிசையாகவும் நன்றாகவும் அமைந்திருந்தன.
  • பழங்காலத்தில் கல், களிமண்பலகை, உலோகத்தகடு, துணி, இலை, பனைஓலை, பூர்ஜ மரப்பட்டை, மரப்பலகை, தோல், மூங்கில் பத்தை போன்றவையும் எழுதுபடுபொருட்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
  • இலை, மரப்பட்டை, களிமண் பலகை போன்றவை விரைவில் அழியக்கூடியவை.
  • மரப்பலகை, மூங்கில் பத்தை இவைகளின் பெரிய நூல்களை எழுதிக் கையாள்வது கடினமாக இருந்தன. தோல், துணி, உலோகத்தகடு போன்றவை மிகுந்த பொருட்செலவினை உண் டாக்கின.
  • கருங்கல்லில் எழுதினால் பிற இடங்களுக்குக் கொண்டு செல்வது கடினமாகும். ஓலைச்சுவடிகளில் எழுத்தாணிகளைக் கொண்டு எழுதினர். கல்வெட்டுகளில் கல்தச்சர்களால் சிற்றுளி கொண்டு எழுத்துகள் பொறிக்கப்பட்டன. களிமண் பலகைக் கணிதம் எழுத்தாணி கொண்டே எழுதினர்.
  • எழுத்துகளின் உருவம் பல காலமாக மாறாமல் இருந்தது. காலம் செல்லச் செல்ல எழுதுகோலைப் பயன்படுத்திக் காகிதத்தில் எழுதும் முறையைக் கற்றுக்கொண்டனர்.
நெடுவினா

1. பண்டைக்காலக் கல்வி முறையில் ஆசிரியர் மாணவர்களுக்கிடையே நிகழ்ந்த கற்றல், கற்பித்தல் முறைகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
  • பண்டைக்காலத்தில் ஆசிரியர்களிடையே மிகுந்த உறவுமுறை இருந்தது. ஆசிரியரை உபாத்தியார் என்றனர். உபாத்தியாரைக் கணக்காயர் என்பர். உபாத்தியாயருடைய வீடே குருகுலமாக இருந்தது.
  • ஊர்தோறும் பொதுவாக இடத்தில் மேடை அமைக்கப்பட்டிருக்கும். அம்மேடையை மன்றம் என்றும் அம்பலம் என்றும் கூறுவர். மன்றம் என்பது மரத்தடியில் உள்ள திண்ணை . அதுதான் : பிறகு திண்ணைப் பள்ளிக்கூடமாக மாறியது. மரத்தடிப் பள்ளிகள் நாளடைவில் குடிசைப் பள்ளியாக மாறியது.
  • பெற்றோர்கள் ஐந்து வயதில் பிள்ளைகளை ஆசிரியரிடம் ஒப்படைத்தனர். ஒரு நல்ல நாளில் ஏட்டின் மீது மஞ்சள் பூசி பையனிடம் கொடுப்பர். உபாத்தியார் நெடுங்கணக்கைச் சொல்ல மாணவன் அதைப் பின்பற்றிச் சொல்வான். இப்படி மாணாக்கர்கள் பலர் சேர்ந்து சொல்வதை ‘முறை வைப்பது’ என்பர்.
  • சுவடியில் எழுத்துகள் தெளிவாகத் தெரிய மஞ்சள், மணத்தக்காளிச் சாறு, மாவிலைக் கரி, தர்ப்பைக் கரி தடவுவர். உபாத்தியாயர் மாணவர்களை முதலில் மணலில் எழுதிப் பழக்குவர். உபாத்தியாயர் எழுதியதின்மேல் மாணவர்கள் எழுதி எழுதிப் பயிற்சி பெறுவர்.
  • எழுத்துகள் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல், வரிகோணாமல் பழைய காலத்தில் எழுதும் முறையைக் கற்றுக் கொடுத்தனர். புள்ளி, கால், கொம்பு, விலங்கு முதலியவை வரியெழுத்தின் உறுப்புகளாகும். இதனை முறையாகக் கற்றுக் கொடுத்தனர்.
  • மனனம் செய்யும் முறையைச் சொல்லிக் கொடுத்தனர். மாணாக்கர்கள் அதிக முயற்சி எடுத்து மனனம் செய்தனர்.
  • தமிழில் நிகண்டு, நன்னூல், காரிகை, தண்டியலங்காரம், நீதி நூல்கள் முதலியவற்றையும் ஆத்திசூடி, கொன்றைவேந்தன் முதலிய அகராதி வரிசையில் அமைந்த நூற்களை மனப்பாடம் செய்ய வைப்பதன் மூலமாகக் கற்றுக் கொடுத்தனர்.
  • கணிதத்தில் கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று முதலிய பலவகை வாய்பாடுகள் மூ லம் கற்பித்தல் நடைபெற்றது. எல்லோரும் ஒன்றாகக் கூடி கேள்விகள் கேட்டும் விடைகூறியும் கற்றுவரும் முறையும் இருந்தது. சுவடியில் எழுத்துகளை எழுதும் முறையும், கற்றுக்கொடுத்தனர்.
  • ஆசிரியர்கள் மாணக்கர்களை அன்பினால் வழி நடத்தி வந்தார்கள். கற்றல் கற்பித்தல் முக்கியமாக விளங்கியவாதம் செய்யும் கற்றல் முறையும் இருந்தது. அரசவையில் கூடவாது புரியும் அளவிற்குக் :கற்றல் முறைகள் இருந்தன. பள்ளிக்கூடத்தில் மாணாக்கர்கள் நூல் பயிலும் இயல்பை நன்னூல் நூற்பா இவ்வாறு கூறும்.
  • “வினாதல் வினாயவை விடுத்தல் என்றிவை
  • கடனாக் கொளினே மடநனி இகக்கும்” – நன்னூல் 41
  • ஞாபகசக்தியை வளர்க்க தினமும் பூ, மிருகம், பட்சி, ஊர் இவற்றின் பெயர்களில் வகைக்கு ஒவ்வொன்றை ஆசிரியர் சொல்லி அனுப்ப மாணாக்கர் அந்தப் பெயர்களை மறுநாள் மறவாமல் வந்து சொன்னார்கள்.
  • இவ்வாறு, மாணவர்களின் எல்லாத் திறமைகளையும் வளர்க்கும் விதமாக கற்பித்தல் இருந்தது. : மாணவர்களும் தங்களின் அறிவினை வளர்க்கும் விதமாகக் கற்றனர்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. திண்ணைப் பள்ளிக்கூடங்கள் எந்த நூற்றாண்டில் அதிகம் இருந்தன?
அ) 12-ஆம் நூற்றாண்டு
ஆ) 18-ஆம் நூற்றாண்டு
இ) 19-ஆம் நூற்றாண்டு
ஈ) 17-ஆம் நூற்றாண்டு
Answer:
இ) 19-ஆம் நூற்றாண்டு

2. குருகுலம் என்பது
அ) ஆசிரியரின் அறை
ஆ) குருக்கள் தங்கும் இடம்
இ) துறவியரின் குழல்
ஈ) ஆசிரியரின் வீடு
Answer:
ஈ) ஆசிரியரின் வீடு

3. மன்றத்திற்கு வழங்கும் இன்னொரு பெயர்
அ) சபை
ஆ) சங்கம்
இ) கோட்டை
ஈ) அம்பலம்
Answer:
ஈ) அம்பலம்

4. ஜைன மடங்களுக்கான பெயர்
அ) அம்பலம்
ஆ) மன்றம்
இ) திண்ணை
ஈ) பள்ளி
Answer:
ஈ) பள்ளி

5. பள்ளியென்னும் பெயர் எவ்வறிற்கெல்லாம் பொதுவாக வழங்கப்படும்
அ) பாடசாலை, ஆலயம்
ஆ) பாடசாலை, விருந்தினர் கூடும் இடம்
இ) பாடசாலை, மடங்கள்
ஈ) பாசறை, மடங்கள்
Answer:
இ) பாடசாலை, மடங்கள்

6. ‘நெடுங்கணக்கு’ என்பது
அ) நீண்ட கணக்கு
ஆ) பெருக்கல் கணக்கு
இ) ஓலைச் சுவடி
ஈ) அரிச்சுவடி
Answer:
ஈ) அரிச்சுவடி

7. ‘சட்டாம்பிள்ளை ‘ என்பவர் யார்?
அ) ஊரில் பெரியவர்
ஆ) சண்டித்தனம் செய்பவர்
இ) தலைமை வகிக்கும் மாணவர்
ஈ) பிடிவாதம் பிடிக்கும் மாணவர்
Answer:
இ) தலைமை வகிக்கும் மாணவர்

8. ‘அக்ஷராப்பியாசம்’ என்றால்
அ) பாடம்படித்தல்
ஆ) எழுத்தறிவித்தல்
இ) மனனம் செய்தல்
ஈ) ஏடு எழுதுதல்
Answer:
ஆ) எழுத்தறிவித்தல்

9. ‘ஐயாண் டெய்தி மையாடி அறிந்தார் கலைகள்’ என உரைக்கும் நூல்
அ) சிலப்பதிகாரம்
ஆ) வளையாபதி
இ) குண்டலகேசி
ஈ) சிந்தாமணி
Answer:
ஈ) சிந்தாமணி

10. செய்யுளை நினைவுப்படுத்தும் முறைகள்
அ) எழுதுதல், படித்தல்
ஆ) வாசித்தல், எதுகை மோனை
இ) எதுகை மோனை, அந்தாதி
ஈ) கற்பித்தல், எழுதுதல்
Answer:
இ) எதுகை மோனை, அந்தாதி

11. எழுத்தாணிக்கு வழங்கும் வேறு பெயர்
அ) மடக்கெழுத்தாணி
ஆ) குண்டெழுத்தாணி
இ) ஊசி
ஈ) எழுதுகோல்
Answer:
இ) ஊசி

12. கதைப்பாடல் குறிப்பிடும் மனனம் செய்வதற்கான சுவடி
அ) அம்கொவதி சுவடி
ஆ) இந்திரச்சுவடி
இ) பிரபாவதி சுவடி
ஈ) சரஸ்வதி சுவடி
Answer:
இ) பிரபாவதி சுவடி

13. “மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும்
மிஞ்சப் புகட்ட மிகவளர்ந்தாய்” – எனக் குறிப்பிடும் நூல்
அ) சிந்தாமணி
ஆ) தமிழ்விடு தூது
இ) தமிழ்க்கோவை
ஈ) இரட்டை அர்த்தங்கள் மாண்டு போகவில்லை
Answer:
ஆ) தமிழ்விடு தூது

14. ஓதற் பிரிவுக்கென தொல்காப்பியம் குறிப்பிடும் கால எல்லை
அ) மூன்று ஆண்டுகள்
ஆ) நான்கு ஆண்டுகள்
இ) இரண்டு ஆண்டுகள்
ஈ) ஏழு ஆண்டுகள்
Answer:
அ) மூன்று ஆண்டுகள்

15. பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள் என்னும் உ.வே.சாவின் இக்கட்டுரை எந்தத் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது?
அ) உயிர்நீட்சி
ஆ) உயிர்மீட்சி
இ) உயிர்க்காட்சி
ஈ) மையாடல்
Answer:
ஆ) உயிர்மீட்சி

16. கூற்று 1 : ஆசிரியர் நெடுங்கணக்கைச் சொல்லிக் கொடுக்க மாணக்கன் அதனைப் பின்பற்றிச் செல்வான்.
கூற்று 2 : பிள்ளைகள் முதலில் தரையில் எழுத ஆசிரியர்கள் அதன் மேல் எழுதுவார்கள்.
அ) கூற்று இரண்டும் சரி
ஆ) கூற்று 1 தவறு 2 சரி
இ) கூற்று 1 சரி 2 தவறு
ஈ) கூற்று இரண்டும் தவறு
Answer:
இ) கூற்று 1 சரி 2 தவறு

17. கூற்று : சுவடிகளிலுள்ள எழுத்துகளில் மையைத் தடவி வாசிக்கத் தருவார்கள்.
காரணம் : கண்ணுக்குக் குளிர்ச்சியைத் தரும், எழுத்துகளை விளக்கமாகக் காட்டும்.
அ) கூற்று சரி, காரணம் தவறு
ஆ) கூற்று சரி, காரணம் சரி
இ) கூற்று தவறு, காரணம் தவறு
ஈ) கூற்று தவறு, காரணம் சரி
Answer:
ஆ) கூற்று சரி, காரணம் சரி

18. கூற்று 1 : உபாத்தியாயருடைய வீடே பள்ளிக்கூடமாக இருந்தது.
கூற்று 2 : கணக்காயரென்பது அமைச்சரின் பெயர்.
அ) கூற்று இரண்டும் தவறு
ஆ) கூற்று 1 சரி 2 தவறு
இ) கூற்று இரண்டும் சரி
ஈ) கூற்று 1 தவறு 2 சரி
Answer:
ஆ) கூற்று 1 சரி 2 தவறு

19. கூற்று : பூ, மிருகம், பட்சி, ஊர் இவற்றின் பெயர்களை ஆசிரியர் கூறி அனுப்புவதில்லை .
காரணம் : பெயர்களை நினைவில் வைத்து மறுநாள் சொல்வதன் மூலம் நினைவாற்றல் அதிகமாகும்.
அ) கூற்று தவறு காரணம் சரி
ஆ) கூற்று சரி காரணம் தவறு
இ) கூற்று சரி காரணம் சரி
ஈ) கூற்று தவறு காரணம் தவறு
Answer:
அ) கூற்று தவறு காரணம் சரி

20. கூற்று : தமிழ்நாட்டிற்கும் நவத்வீபம் முதலிய இடங்களிலிருந்து வந்து படித்துச் சென்றவர்கள் பலர் உண்டு .
காரணம் : திருவாவடுதுறை மடம், தருமபுரம் மடம் முதலியன பல வருஷமாகக் கல்வியைப் போதிக்கவில்லை.
அ) கூற்று சரி, காரணம் சரி
ஆ) கூற்று தவறு, காரணம் சரி
இ) கூற்று சரி காரணம் தவறு
ஈ) கூற்று தவறு காரணம் தவறு
Answer:
இ) கூற்று சரி காரணம் தவறு

21. கூற்று 1 : பள்ளிக்கு முதலில் வருபவனை வேத்தான் என்று அழைப்பர்.
கூற்று 2 : வேத்தான் சில நேரங்களில் சட்டாம்பிள்ளைக்குரிய கடமை செய்வான்.
அ) கூற்று இரண்டும் சரி
ஆ) கூற்று இரண்டும் தவறு
இ) கூற்று 1 சரி 2 தவறு
ஈ) கூற்று 1 தவறு 2 சரி
Answer:
இ) கூற்று 1 சரி 2 தவறு

22. சரியானதைத் தேர்க.
அ) உபாத்தியாயர் – கணக்காயர்
ஆ) கீழ்வாயிலாக்கம் – பின்ன எண்ணின் மேல் தொகை
இ) நவத்வீபம் – கல்விப் பயிற்சிக் கூடம்
ஈ) வித்தியாரம்பம் – எழுத்துப் பயிற்சி
Answer:
அ) உபாத்தியாயர் – கணக்காயர்

23. சரியானதைத் தேர்க.
அ) மனப்பாடம் செய்ய சகல வல்லவாதி சுவடி என்ற புத்தகம் இருந்தது.
ஆ) ‘மையாடல் விழா’ என்பது திருமண விழா.
இ) நெடுங்கணக்கை மாணாக்கர் தானே கற்றனர்.
ஈ) நிகண்டுகளை மனப்பாடம் செய்யும் மாணவனுக்கு மதிப்பிருந்தது.
Answer:
ஈ) நிகண்டுகளை மனப்பாடம் செய்யும் மாணவனுக்கு மதிப்பிருந்தது.

24. சரியானதைத் தேர்க.
அ) சாஸனம் – இருக்கை
ஆ) மணல் – சிலேட்
இ) பனையேடு – கரும்பலகை
ஈ) எழுத்தாணி – பென்சில்
Answer:
ஆ) மணல் – சிலேட்

25. பொருந்தாததைத் தேர்க.
அ) ஓதற்பிரிவு – 3 வருடம்
ஆ) வேத்தான் – முதலில் வரும் மாணக்கன்
இ) மையாடல் விழா – அக்ஷராப்பியாசம்
ஈ) விலங்கு – வரியெழுத்தின் இனம்
Answer:
ஈ) விலங்கு – வரியெழுத்தின் இனம்

26.பொருந்தாததைத் தேர்க.
அ) சுவடிகளை வைக்கவும் எடுத்துச்செல்லவும் பயன்படும் கருவி அசை எனப்படும்.
ஆ) ‘கிளிமூக்கு’ என்பது ஓலைச் சுவடியுடன் தொடர்புடையது.
இ) மாணவர்கள் சேர்ந்து சொல்வது மனன முறை என்பர்.
ஈ) புள்ளி, கால், கொம்பு, விலங்கு முதலியன வரியெழுத்தின் உறுப்புகள்.
Answer:
இ) மாணவர்கள் சேர்ந்து சொல்வது மனன முறை என்பர்.

27. பொருந்தாததைத் தேர்க.
அ) கோணாமல் – கொம்பு சுழி
ஆ) சாயாமல் – கொண்ட பந்தி
இ) அசையாமல் – தராசுபோல் கால்கள்
ஈ) கொம்பு – வரியெழுத்தின் உறுப்பு
Answer:
இ) அசையாமல் – தராசுபோல் கால்கள்

28. பொருத்துக.
அ) உபாத்தியாயர் – 1. தாழைமடல்
ஆ) குழிமாற்று – 2. ஆசிரியர்
இ) சீதாளபத்திரம் – 3. எழுத்துப்பயிற்சி
ஈ) அக்ஷராப்பியாசம் – 4. பெருக்கல் வாய்பாடு
அ) 2, 4, 1, 3
ஆ) 3, 4, 1, 2
இ) 2, 1, 4, 3
ஈ) 3, 1, 4, 2
Answer:
அ) 2, 4, 1, 3

29. பொருத்துக.
அ) எட்டயபுரம் திண்ணைப் பள்ளி – 1. பின்னத்தூர் நாராயணசாமி
ஆ) முத்துராம பாரதி திண்ணைப் பள்ளி – 2. நாவலர் சோமசுந்தர பாரதியார்
இ) கணபதியார் திண்ணைப் பள்ளி – 3. வெள்ளைக்கால் ப. சுப்பிரமணியனார்
ஈ) மௌனகுரு – 4. மாண. இராசமாணிக்கனார்
அ) 2, 1, 3, 4
ஆ) 2, 1, 4, 3
இ) 2, 3, 1, 4
ஈ) 2, 4, 3, 1
Answer:
அ) 2, 1, 3, 4

30. பொருத்துக.
அ) நெடுங்கணக்கு – 1. அரசாணை
ஆ) சட்டாம் பிள்ளை – 2. ஓலைச்சுவடி
இ) தூக்கு – 3. அரிச்சுவடி
ஈ) சாஸனம் – 4. வகுப்புத்தலைவன்
அ) 3, 4, 1, 2
ஆ) 3, 2, 4, 1
இ) 4, 1, 3, 2
ஈ) 4, 3, 1, 2
Answer:
ஈ) 4, 3, 1, 2

31. சென்னை புரசைவாக்கம் சர்,எம்.சி.டி. முத்தையா உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் சங்கத்தின் முதல் சொற்பொழிவாக 20.03.1936இல் நிகழ்த்தப்பட்டு 16.08.1936இல் கட்டுரையாக வெளியான வார இதழ்
அ) இந்தியா
ஆ) விஜயா
இ) நவசக்தி
ஈ) சுதேசமித்திரன்
Answer:
ஈ) சுதேசமித்திரன்

32. மில்டனின் சுவர்க்க நீக்கத்தைத் தமிழில் மொழிபெயர்த்தவர்
அ) வெள்ளைக்கால் ப. சுப்பிரமணியனார்
ஆ) எட்டையபுரம் சி.சுப்பிரமணிய பாரதி
இ) சுப்ரமணிய சிவா
ஈ) உ.வே.சாமிநாதர்
Answer:
அ) வெள்ளைக்கால் ப. சுப்பிரமணியனார்

Question 33.
வெள்ளைக்கால் சுப்பிரமணியனார் என்பார் ……………….. ஆவார்.
அ) வழக்கறிஞர்
ஆ) பொறியாளர்
இ) உயிரின மருத்துவர்
ஈ) நீதியரசர்
Answer:
இ) உயிரின மருத்துவர்

Question 34.
ப. சுப்பிரமணியார், திருநெல்வேலி தெற்குத்தெரு கணபதியார் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்த வருடங்கள்
அ) மூன்று
ஆ) நான்கு
இ) ஐந்து
ஈ) ஆறு
Answer:
ஆ) நான்கு

Question 35.
வரலாற்றாய்வாளரும் தமிழறிஞருமான டாக்டர் மா. இராசமாணிக்கனார் …………. படித்திருக்கிறார்.
அ) ஞான குருவிடம்
ஆ) மௌன குருவிடம்
இ) கணபதியாரிடம்
ஈ) மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனாரிடம்
Answer:
ஆ) மௌன குருவிடம்

Question 36.
நற்றிணை நூலின் உரையாசிரியர்
அ) டாக்டர் மா. இராசமாணிக்கனார்
ஆ) பின்னத்தூர் நாராயணசாமி
இ) ப. சுப்பிரமணியனாா
ஈ) வ.சுப. மாணிக்கம்
Answer:
ஆ) பின்னத்தூர் நாராயணசாமி

Question 37.
நாராயணசாமி, பின்னத்தூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் ……………… திண்ணைப் பள்ளிக்கூடத்தில் இலவசமாகப் படித்தார்.
அ) சோமசுந்தர பாரதி
ஆ) சுப்பிரமணிய பாரதி
இ) முத்துராம பாரதி
ஈ) கவிபாரதி
Answer:
இ) முத்துராம பாரதி

38. நாவலர் சோமசுந்தர பாரதிக்குப் பொருந்தாததைக் கண்டறிக.
அ) பாரதியின் நண்பர்
ஆ) வழக்கறிஞர்
இ) தமிழறிஞர்
ஈ) வரலாற்றாய்வாளர்
Answer:
ஈ) வரலாற்றாய்வாளர்

39. பின்வரும் தமிழறிஞர்களில் சிலப்பதிகார உரையாசிரியரைக் கண்டறிக.
அ) ப. சுப்பிரமணியனார்.
ஆ) மா.இராசமாணிக்கனார்
இ) வ.சுப. மாணிக்கம்
ஈ) வேங்கடசாமி
Answer:
ஈ) வேங்கடசாமி

40. டாக்டர் வ.சுப. மாணிக்கம் …………… பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தார்.
அ) சென்னை
ஆ) மதுரை
இ) மைசூர்
ஈ) டெல்லி
Answer:
ஆ) மதுரை
Question 41.
‘இரட்டை அர்த்தங்கள் மாண்டுபோகவில்லை’ என்னும் நூலின் ஆசிரியர்
அ) அ.கா. பெருமாள்
ஆ) வ.சுப. மாணிக்கம்
இ) வ.வே.சு. ஐயர்
ஈ) மு.வரதராசனார்
Answer:
அ) அ.கா. பெருமாள்

42. பொருத்திக் காட்டுக.
அ) கீழ்வாயிலக்கம் – 1. பெருக்கல் வாய்ப்பாடு
ஆ) மேல்வாயிலக்கம் – 2. தாழை மடல்
இ) குழிமாற்று – 3. பின்ன எண்ணின் கீழ்த்தொகை
ஈ) சீதாளபத்திரம் – 4. பின்ன எண்ணின் மேல்தொகை
அ) 3, 4, 1, 2
ஆ) 3, 1, 2, 4
இ) 4, 3, 2, 1
ஈ) 2, 3, 1, 4
Answer:
அ) 3, 4, 1, 2

43. நவத்வீப்ம் என்பது
அ) நேபாளத்தில் உள்ள பள்ளிக்கூடத்தின் பெயர்
ஆ) வங்காளத்தில் உள்ள ஓர் ஊர்
இ) தெய்வத்திற்குப் படைக்கப்படும் ஒருவித பொருள்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
ஆ) வங்காளத்தில் உள்ள ஓர் ஊர்

44. முதன் முதலில் வித்தியாப்பியாசம் செய்யும்பொழுது தாய்தந்தையர் பிள்ளைகளை ஆசிரியர்களிடம் அடைக்கலமாகக் கொடுத்த வயது
அ) ஐந்து
ஆ) ஏழு
இ) பத்து
ஈ) பதின்மூன்று
Answer:
அ) ஐந்து

45. உபாத்தியாயர் ………………. சொல்லிக்கொடுக்க, மாணாக்கன் அதனைப் பின்பற்றிச் சொல்வான்.
அ) குறுங்கணக்கை
ஆ) நெடுங்கணக்கை
இ) புராணத்தை
ஈ) இதிகாசத்தை
Answer:
ஆ) நெடுங்கணக்கை

46. உபாத்தியாயர் ஒன்றைச் சொல்ல அதை மாணவர்கள் பலரும் சேர்ந்து சொல்வதை ……………… என்று கூறுவார்கள்.
அ) முறை வைப்பது
ஆ) திருமறை படிப்பது
இ) பாடம் படிப்பது
ஈ) நூல் வாசிப்பது
Answer:
அ) முறை வைப்பது

47. உபாத்தியாயருக்குப் பிரதியாகச் சில சமயங்களிற் முறை வைப்பவர்
அ) சட்டாம்பிள்ளை
ஆ) கணக்குப்பிள்ளை
இ) உபாத்தியாயரின் மனைவி
ஈ) இவர்களில் எவருமிலர்
Answer:
அ) சட்டாம்பிள்ளை

48. மை தடவிப் புத்தகத்தை வாசிக்கத் தொடங்குவதனால் அகூராப்பியாசத்தை ………… என்று சொல்வார்கள்.
அ) மஞ்சள் நீராட்டுவிழா
ஆ) மையாடல் விழா
இ) மையிழைக்கும் விழா
ஈ) புதுவாசிப்பு நாள் விழா
Answer:
ஆ) மையாடல் விழா

49. வரியெழுத்தின் உறுப்புகள்
i) புள்ளி
ii) கால்
iii) கொம்பு
iv) விலங்கு
அ) i), ii) சரி
ஆ) ii), iii) சரி
இ) ili) மட்டும் தவறு
ஈ) நான்கும் சரி
Answer:
ஈ) நான்கும் சரி

50. சிறுவர்களைப் படிக்கவைக்கும் வகையில் அகராதி வரிசையில் அமைந்த நூல்கள்
அ) ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன்
ஆ) திருக்குறள், நாலடியார்
இ) இன்னா நாற்பது, இனியவை நாற்பது
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன்

குறுவினா

1. நற்றிணை நூலின் உரையாசிரியர் யார்? அவர் எங்கு யாரிடம் திண்ணைக் கல்விக் கற்றார்?
Answer:
  • நற்றிணை நூலின் உரையாசிரியர் பின்னத்தூர் நாராயணசாமி.
  • பின்னத்தூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் முத்துராம பாரதி திண்ணைப் பள்ளிக்கூடத்தில் இலவசமாகக் கற்றார்.

2. இன்றைய பள்ளிக்கூடங்களில் வளர்க்கப்படும் செடிகொடிகளுக்கு ஆசிரியர் கூறும் உவமை என்ன?
Answer:
நாடகத்தில் வனங்களைத் திரையில் எழுதித் தொங்கவிடுவது போலப் பள்ளிக்கூடங்களில் சட்டியிலும் வாயில்களிலும் செடி கொடிகளை வளர்ப்பதாக ஆசிரியர் கூறுகிறார்.

3. மன்றம் என்பது எவ்வாறு அமைக்கப்பட்டிருக்கும்? அதன் வேறு பெயர்கள் என்ன?
Answer:
  • பெரிய மரத்தடியில் மேடையொன்று அமைக்கப்பட்டிருக்கும்.
  • ‘அம்பலம்’ என்றும் மன்றம்’ என்றும் அழைப்பர்.

4. ‘முறை வைப்பு’ என்றால் என்ன ?
Answer:
உபாத்தியாயர் (ஆசிரியர்) ஒன்றைச் சொல்ல அதை மாணாக்கர்கள் பலரும் சேர்ந்து சொல்வது 11 ‘முறை வைப்பது’ என்று அழைக்கப்படும்.

5. கையெழுத்து எவ்வாறு இருக்க வேண்டுமென்று பழைய வெண்பா பாடல் குறிப்பிடுகிறது?
Answer:
  • எழுத்துகளில் கொம்பு, சுழி போன்றவை கோணக் கூடாது.
  • வரிசையாக எழுதும் எழுத்துகள் சாயக் கூடாது.
  • துணைக்கால் எழுத்துகள் சாயாமல் அம்பு போல் அசையாமல் எழுத வேண்டும்.

6. வரியெழுத்தின் உறுப்புகள் யாவை?
Answer:
புள்ளி, கால், கொம்பு, விலங்கு முதலியவை வரியெழுத்தின் உறுப்புகள்.

7. ‘கிளிமூக்கு’ என்பது என்ன?
  • சுவடியைக் கோர்க்கும் கயிற்றின் ஒரு தலைப்பில் தடையாக, பனையோலையை ஈர்க்கோடு கிளிமூக்குப் போலக் கத்தரித்தது அமைப்பது பார்ப்பதற்குக் கிளிமூக்கு போன்று இருக்கும்.
  • சுவடியைக் கோர்க்கும் கயிற்றின் அமைப்பு ‘கிளிமூக்கு’ என்றழைக்கப்படும்.

8. எழுத்தாணியின் வகைகள் எத்தனை? அவை யாவை?
Answer:
  1. எழுத்தாணியின் வகைகள் மூன்று.
  2. மடக்கெழுத்தாணி, வாரெழுத்தாணி, குண்டெழுத்தாணி.


9. சட்டம் தூக்கு இவை எவற்றை உணர்த்துகின்றன?
சட்டம் :
ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எழுதும் பழக்கம் நன்றாக வர தினமும் அவர்களைத் தனித்தனியே ஏடுகளில் தாங்கள் மேலே எழுதி அதைப் போன்று எழுதி வரச் சொல்வர். இதற்குச் ‘சட்டம்’ என்று பெயர்.
தூக்கு :
சுவடிகளை வைப்பதற்கும் எடுத்துச் செல்வதற்கும் பயன்படும் கருவிக்குத் தூக்கு’ என்று பெயர். இதற்கு அசை’ என்ற வேறுபெயரும் உண்டு.

10. தஞ்சையில் பொறிக்கப்பட்டுள்ள அரசாணையால் அறியப்படும் செய்தி யாது?
Answer:
தஞ்சாவூரில் வாழ்ந்த ஆகம சாஸ்திர பண்டிதராகிய சர்வசிவ பண்டிதரிடத்தில் பல நாட்டைச் : சார்ந்த மாணாக்கர்கள் கல்விக் கற்க வந்திருந்தார்கள் என்ற செய்தி, முதல் இராஜராஜ சோழன் காலத்தில் தஞ்சையில் பொறிக்கப்பட்டுள்ளது.

11. ‘வேத்தான்’ – இச்சொல்லால் அழைக்கப்பட்டவர் யார்? இதன் பொருள் என்ன?
Answer:
  • பள்ளிக்கூடத்திற்குக் காலை 5 மணிக்கே வரவேண்டும்.
  • பள்ளிக்கூடத்திற்கு முதலிலே வரும் மாணாக்கரே ‘வேத்தான்’ என்று அழைக்கப்பட்டார்.
  • மற்றவர்களை விட வேறான தனிப்பெருமை உடையவன் என்பதே ‘வேத்தான்’ என்பதன் பொருள்.
12. ‘தமிழ்த்தாத்தா’ பெற்ற சிறப்புப் பட்டங்கள் யாவை?
Answer:
  • மகாமகோபாத்தியாய
  • திராவிட வித்தியா பூஷணம்
  • தாக்ஷிணாத்திய கலாநிதி
  • 1932-இல் சென்னைப் பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம்.

13. உ.வே.சா. அவர்களின் பண்முகங்கள் யாவை?
  • இணையற்ற ஆசிரியர்
  • புலமைப்பெருங்கடல்
  • சிறந்த எழுத்தாளர்
  • பதிப்பாசிரியர்
  • பழந்தமிழ் இலக்கியங்களைப் பதிப்பிக்க அரும்பாடுபட்டவர்
  • கும்பகோணம் அரசுக்கலைக்கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர்.

14. சுவடியில் உள்ள எழுத்துகள் தெளிவாகத் தெரிய முன்னோர்கள் செய்தது யாது?
Answer:
சுவடியில் வம்பு, மஞ்சள், மணத்தக்காளியிலைச்சாறு அல்லது ஊமைத்தயிலைச்சாறு, மாவிலைக்கரி, தர்ப்பைக்கரி முதலியவற்றைக் கலந்து செய்த மையைத் தடவினால் எழுத்துகள் தெளிவாகத் தெரியும்.

15. வித்தியாரம்பம் என்பது யாது?
Answer:
முதன் முதலில் ஐந்து வயதில் கல்வி கற்பதற்காகக் குழந்தைகளை ஆசிரியர்களிடம் அடைக்கலமாகக் கொடுப்பதே வித்தியாரம்பம் என்பர்.

16. நாராசம் என்றால் என்ன?
Answer:
இரட்டைத் துளையுள்ள ஏடுகளில் ஒரு துளையில் செப்புக் கம்பி அல்லது மூங்கிற் குச்சியைச் செருகிக் கட்டுவார்கள் அதற்கு நாராசம்’ என்று பெயர்.

17. உ.வே.சா. விற்குத் தமிழகத்தில் செய்யப்பட்டுள்ள சிறப்புகள் யாவை?
Answer:
உ.வே.சா. வின் திருவுருவச்சிலை, சென்னை மாநிலக் கல்லூரியில் வங்கக்கடலை நோக்கி நிற்கும் வண்ணம் நிறுவப்பட்டுள்ளது.

18. அக்கால பிள்ளைகளின் சிலேட்டு, புத்தகம், பேனாவாக எவை இருந்ததாக உ.வே.சா கூறுகிறார்?
Answer:
  • மணல்தான் சிலேட்டு
  • பனையேடுதான் புத்தகம்
  • எழுத்தாணியே பேனா

சிறுவினா


1. பேராசிரியர் அ.கா.பெருமாள் அவர்கள் யாரெல்லாம் திண்ணை பள்ளியில் கல்விக்கற்றவர்கள் என்று பட்டியலிடுகின்றார்?
Answer:
  • மில்டனின் சுவர்க்க நீக்கத்தைத் தமிழில் மொழிபெயர்த்தவரும், உயிரின மருத்துவருமான வெள்ளக்கால் ப.சுப்பிரமணியனார் திருநெல்வேலி தெற்குத்தெரு கணபதியார் திண்ணைப் பள்ளிக்கூடத்தில்
  • வருடங்கள் கல்வி கற்றார். வரலாற்று ஆய்வாளரும், தமிழறிஞருமான டாக்டர் மா.இராசமாணிக்கனார் மௌனகுருவிடம் கல்வி கற்றார்.
  • நற்றிணை நூலின் உரையாசிரியரான பின்னத்தூர் நாராயணசாமி பின்னத்தூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் முத்துராம பாரதி திண்ணைப் பள்ளிக்கூடத்தில் இலவசமாகப் படித்தார்.
  • சுப்பிரமணிய பாரதியின் நண்பரும் வழக்குரைஞருமான தமிழறிஞர் நாவலர் சோமசுந்தர பாரதியார் எட்டயபுரம் திண்ணைப் பள்ளியில் கல்வி கற்றார்.
  • சிலப்பதிகாரத்திற்கு உரையெழுதிய வேங்கடசாமி அவர்கள் வல்லம் குருசாமி வாத்தியார் திண்ணைப் பள்ளியில் கல்வி கற்றார்.
  • மதுரைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர்.வ.சுப.மாணிக்கம் மகிபாலன்பட்டி நடேசனார் திண்ணைப் பள்ளியில் கல்வி கற்றார்.

2. வித்தியாரம்பம் (கல்வித்தொடக்கம்) குறித்து உ.வே.சாமிநாதர் கூறுவது என்ன?
  • ஐந்து வயதில் வித்தியாப்பியாசம் (கல்விப்பயிற்சி) பெறுவதற்காகப் பெற்றோர்கள் பிள்ளைகளை ஆசிரியர்களிடம் ஒப்படைப்பர்.
  • பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கும் காலம் மிகப் பெரிய விழாவாகக் கொண்டாடப்படும்.
  • ஏட்டின் மீது மக்கள் பூசிப் பூசித்துப் பள்ளியில் சேரும் மாணாக்கரிடம் கொடுத்து வாசிக்கக் கூறுவர்.
  • ஆசிரியர் நெடுங்கணக்கைக் (அரிச்சுவடி / எழுத்துவரிசை) சொல்ல மாணாக்கன் அதனைப் பின்பற்றிச் சொல்ல வேண்டும்.
  • ஆசிரியர் சொல்ல மாணக்கர்கள் பலரும் சேர்ந்து சொல்வதை முறை வைப்பு’ என்பர்.
  • சில நேரங்களில் ஆசிரியருக்குப் பதிலாகச் சட்டாம் பிள்ளை (வகுப்புத்தலைவன்) முறை வைப்பதும் உண்டு.

3. அக்ஷராப்பியாசத்தை (எழுத்து அறிவித்தல்) மையாடல் விழா என அழைக்கக் காரணம் என்ன? : மாணக்கர் எவ்வாறு எழுத்துகளைக் கற்க தொடங்கினர்?
மையாடல் விழா :
  1. சுவடியில் வசம்பு, மஞ்சள், மணத்தக்காளியிலைச்சாறு அல்லது ஊமைத்தயிலைச்சாறு, மாவிலைக்கரி, தர்ப்பைக்கரி முதலியவற்றைக் கலந்து செய்த மையைத் தடவினால் எழுத்துகள் தெளிவாகத் தெரியும்.
  2. இவ்வாறு தடவும் மையானது சுவடியில் இருக்கும் எழுத்துகளை விளக்கமாகக் காட்டும். கண்ணுக்குக் குளிர்ச்சியாகவும் இருக்கும்.
  3. இதனாலேயே அக்ஷராப்பியாசத்தை (எழுத்து அறிவித்தலை) மையாடல் விழா என்றனர்.
எழுத்து அறிவித்தல் :
  • மாணக்கர்கள் முதலில் மணலில் எழுதிப் பழகுவர்.
  • ஆசிரியர் முதலில் தரையில் எழுத அதன் மேல் மாணாக்கர்கள் எழுதுவர். பிறகு தாமே எழுதுவர்.
  • இதனால் மாணக்கர்களுடைய எழுத்துகள் வரிசையாகவும் நன்றாகவும் அமைந்திருந்தன.

4. பண்டையக் கல்வி முறையில் ‘மனனம்’ என்பது எளிதான ஒன்றாக இருக்கக் காரணம் என்ன என்பதை விளக்குக.
  • பண்டைய மாணாக்கருக்கு அடிப்படை நூல்களெல்லாம் மனனமாக இருக்கும்.
  • தமிழில் நிகண்டு, நன்னூல், காரிகை, தண்டியலங்காரம், நீதிநூல்கள் முதலியன பாடமாகும்.
  • கணிதத்தில், கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று போன்ற பலவகை வாய்பாடுகள் இருக்கும்.
  • ‘தலைகீழ்ப்பாடம்’ என்ற முறையும் உண்டு.
  • அகராதி வரிசையில் படிப்பதால் அவை மாணாக்கரின் நினைவை விட்டு அகல்வதில்லை. சான்று : ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன்.
  • அந்தாதி முறை, எதுகை மோனை முறையும் மனனம் செய்ய எளிய முறை.
  • பாடங்களைச் சிந்தித்து வருதல், ஒன்றாகச் சேர்ந்து கேள்விகள் கேட்டு விடை கூறுதல் இவையும் தா ‘மனனம்’ செய்ய எளிய வழிமுறைகளாகும்.


5. சுவடியை உருவாக்கும் முறையை விவரி.
  • ஓலையை வாரி ஒழுங்காக நறுக்கித் துளையிட்டுக் கயிறு கோத்து ஒரு துளை அல்லது இரண்டு துளையிடுவர்.
  • மேல் சட்டமாகப் பனைமட்டையின் காம்பை நறுக்கிக் கோர்ப்பர். மரத்தால் சட்டம் செய்வதும் உண்டு. செப்புத்தகட்டாலும் சட்டம் செய்வர்.
  • சட்டங்களின் மேல் வர்ணமையினாற் பல வகையான சித்திரங்களை வரைந்து வைப்பர்.
  • இரட்டைத்துளையுள்ள ஏடுகளில், ஒரு துளையினைச் செப்புக் கம்பி அல்லது மூங்கில் குச்சியைச் செருகிக் கட்டுவர். இதனை நாராசம்’ என்று அழைப்பர்.
  • சுவடியைக் கோர்க்கும் கயிற்றின் ஒரு தலைப்பில் தடையாக, பனையோலையை ஈர்க்கோடு கிளிமூக்குப் போலக் கத்தரித்து அமைப்பது பார்ப்பதற்கு கிளிமூக்கு போன்று இருக்கும். சுவடியைக் கோர்க்கும் கயிற்றின் அமைப்பு ‘கிளிமூக்கு’ என்றழைக்கப்படும்.

6. பண்டைய மாணவர்களுக்குக் கற்பித்த பாடங்களாகக் கதைப்பாடல் உணர்த்துபவை எனப் பேராசிரியர் அ.கா.பெருமாள் குறிப்பிடுபவை யாவை?
Answer:
கதைப்பாடல் உணர்த்தும் நூற்கள் :
  • ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி கற்பிக்கப்பட்டது.
  • நிகண்டுகளை மனப்பாடம் செய்பவனுக்கு மதிப்பு அதிகமாக இருந்தது.
  • வியாபாரம் செய்வதற்கும் கோவிலில் பணி செய்வதற்கும் ஏற்ற முறையில் அமைந்த கணித முறை பாடங்கள் கற்பிக்கப்பட்டன.
  • கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று, நெல் இலக்கம் முதலிய வாய்பாடுகள் கட்டாயம் மனனம் செய்யும்படிக் கற்பிக்கப்பட்டது.
  • ‘பிரபவாதி சுவடி’ என்ற புத்தகம் மனனம் செய்வதற்கென இருந்துள்ளது.


கற்பவை கற்றபின்

1. பண்டைக்காலப் பள்ளிக்கூடங்களில் பின்பற்றப்பட்ட குறிப்பிடத்தக்க நடைமுறைகளில், தற்காலத்தில் மேற்கொள்ளத்தக்கவை குறித்து வகுப்பறையில் கலந்துரையாடுக.
Answer:
மாணவன் : வணக்கம் ஐயா! அக்காலத்தில் கையெழுத்து எப்படி இருந்தது ஐயா?
ஆசிரியர் : வணக்கம். எழுத்துகள் ஒன்றோடொன்று வரி கோணல் இல்லாமல் பழைய காலத்தில் எழுதி வந்தார்கள். நாமும் அவ்வாறே எழுத வேண்டும். புள்ளி, கால், கொம்பு முதலிய வரி எழுத்தின் உறுப்புகளை அன்றைய பெரியோர்கள் பழக்கினார்கள். நாம் இன்றைய பெரியோர்களிடமிருந்து அவற்றைப் பழக்கிக் கொள்ள வேண்டும். தமிழில் நிகண்டு, நன்னூல், காரிகை முதலானவற்றை மனனம் செய்தார்கள். கணிதத்தில் கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று, நெல் இலக்கம் முதலிய வாய்பாடுகளை கட்டாயம் மனப்பாடம் செய்தார்கள்.
மாணவன் : அப்படியா ஐயா! வேறு ஏதேனும் செய்தார்களா ஐயா?
ஆசிரியர் : ஆசிரியர் ஒவ்வொரு நாளும் மாணவர்களைத் தான் எழுதிய ஏடுகளின் எழுத்துகளின் மேலேயே எழுதி வரச் செய்தார்கள். இதுபோன்ற செயல்பாடுகளை
நீயும் மேற்கொண்டால் சிறப்பாக இருக்கும்.
மாணவன் : நன்றி ஐயா! உறுதியாகச் செய்கிறேன் ஐயா!

2. ‘மனனம் செய்தல்’ – இன்றைய கல்வி நிலையிலும் குறிப்பிடத்தக்க ஒரு கூறு. இது பற்றிய பத்துக் கருத்துகளை முன் வைக்க.
Answer:
  • திருக்குறள், சான்றோர் சிந்தனைகள், அறநூல் தொடர்கள் போன்றவற்றை மனனம் செய்தால் தான் அறிவை வெளிக்கொணர முடியும். அன்று கவனச் சிதறல்கள் இல்லை.
  • இன்று கவனச்சிதறல்களின் ஊடேதான் கல்வி. எனவே, மனனம் செய்வதே நல்லது.
  • நேரங்களில் மனனப் பாடல்கள், சில கொள்கைகள் மனனம் செய்தாலொழிய நினைவுக்கு வராது.
  • மனதை ஒருமைப்படுத்தும் ஒரு தியானம். மனம் என்பது நீண்டநாள் மனதில் இருத்தி வைத்துக் கொள்ளும் ஒரு ஞாபக சக்தி. சான்றோர் அறிவுரை, முந்தைய நிகழ்வுகள் எல்லாம் மனனம் என்னும் வகையில்தான் அடங்கும்.
  • ஆராய்ச்சியின் தொடர்ச்சி என்பது நேற்று என்ன செய்தோம் நாளை என்ன செய்யப் போகிறோம் என்பதும் மனன சக்தியே.
  • புரியாத ஒரு பகுதியை மனனம் செய்தோம் என்றால் விளங்கும் காலத்தில்தானே விளங்கும். : மனனம் இல்லை என்றால் மூளையின் செயல்பாடு குறையும் என்பது ஆராய்ச்சி கருத்து. எனவே, மனனத்தின் மீது கவனம் செலுத்துவது சிந்தனையாற்றலைச் சிறக்க வித்திடும்.

Post a Comment

புதியது பழையவை