10th Tamil Guide unit 8 

TN Students Guide


10th Tamil  Samacheer kalvi guide, Unit 8 Book Back Answers, 10thTamil Lesson 8, Book Back Ans Additional Question answers. 10th Standard All Unit Questiionnd answerss.       
  • இயல் 8.1 சங்க இலக்கியத்தில் அறம்
  • இயல் 8.2 ஞானம்
  • இயல் 8.3 காலக்கணிதம்
  • இயல் 8.4 இராமானுசர் (நாடகம்)
  • இயல் 8.5 பா-வகை, அலகிடுதல்


8.1. சங்க இலக்கியத்தில் அறம்

10th Tamil Guide unit 8 Answers TN Students Guide


I. பலவுள் தெரிக.

1. மேன்மை தரும் அறம் என்பது…….

  1. கைம்மாறு கருதாமல் அறம் செய்வது
  2. மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது
  3. புகழ் கருதி அறம் செய்வது
  4. பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது
விடை : கைம்மாறு கருதாமல் அறம் செய்வது

2. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்

  1. உதியன்; சேரலாதன்
  2. அதியன்; பெருஞ்சாத்தன்
  3. பேகன்; கிள்ளிவளவன்
  4. நெடுஞ்செழியன்; திருமுடிக்காரி
விடை : அதியன்; பெருஞ்சாத்தன்

II. குறு வினா

குறிப்பு வரைக : அவையம்

  • அறம் கூறும் மன்றங்கள் அரசனின் ஆட்சிக்கு துணை புரிந்தன.
  • “அறம் அறக்கண்ட நெறிமான் அவையம்” என்கிறது புறநானூறு, உறையூலிருந்து அவையம் தனிச்சிறப்புப் பெற்றது.
  • மதுரையிலிருந்த அவையம் பற்றி மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது.
  • மதுரை அவையம் துலாக்கோல் போல் நடுநிலைமிக்கது.

III. சிறு வினா

சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்குமு் தேவையானவையே என்பதற்கு சில எடுத்துக்காட்டுகள் தருக.

  • சங்க இலக்கியங்ள் காட்டும் அறங்கள், ஒரு மனிதன் தனியாகவும், சமூக உறுப்பினராகவும் இயங்குவதற்கும், அவனது பண்பு நலனை உருவாக்குவதற்கும் உதவுகிறது.
அரசியல் அறம்:-
“அறநெறி முதற்றே அரசின் கொற்றம்”
  • நீர் நிலையைப் பெருக்கி நிலவளம் கண்டு, உணவுப் பெருக்கம் காண்பதும், அதனை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதும் அரசினின் அறம். இவ்வறம் இன்றைய சூழலில் காணப்படுகிறது.
வணிகத்தில் அறம்:-
“அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்”
  • அறம் செய்வதில் வணிகநோக்கம் இருத்தல் கூடாது, நோக்கமின்றி அறம் செய்வதே வணிக அறனின் மேன்மையாகும்.
போர் அறம்:-
  • தமிழர் போர் செய்வதிலும், அறநெறி உடையவர்களாக இருந்தனர். போர் அறம் என்பது வீரமற்றோர், முதியோர், சிறார் போன்றவரை எதிர்த்து போர் செய்யாமல் இருப்பது.
உதவி செய்வதி அறம்:-
  • பிறருக்கு உதவி செய்வதை அறமாகக் கருதினர். அதாவது தன்னைத் தாண்டி பிறரைப் பற்றி சிந்திக்கும் நிலை.
  • “பிழையா நன்மொழி” என்று நற்றிணையும் கூறுகிறது.
  • நிலம் பெயர்ந்தாலும் பொய் சொல்லக் கூடாது. மெய் பேசும் நாவே மனிதனை உயர்த்தும்.
  • சங்க இலக்கியங்கள் காட்டும் அறம் ஒரு மனிதன் தனியாகவும், சமூக உறுப்பினராகவும் இயங்குதவதற்குப் பண்பு நலனே காரணம் என்று சங்க இலக்கியம் மூலமாக அறிய முடிகிறது.
  • இறுதியாக, சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைய மனிதனுக்கு அடிப்படையாகவும் வழிகாட்டுதலாகவும் உள்ளது.

IV. நெடு வினா

பள்ளித் திடலில் கிடந்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்தையும், அதற்குப் பாராட்டுப் பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்கு கடிதம் எழுதுக


உறவினருக்கு மடல்
திருநெல்வேலி
07.07.2020

அன்புள்ள பெரியப்பாவிற்கு ராமு எழுதுவது,
நலம், நலம் அறிய ஆவல்,
நான் இன்று மகிழ்ச்சியாக உள்ளேன். என்னவென்று தெரியுமா? நேற்று வகுப்பு முடித்து வெளியே வந்து கொண்டிருந்தேன். அப்போது பள்ளித்திடலில் ஒரு பணப்பை கிடைத்தது. அதில் அதிகமான பணம் இருந்தது. ஒரு நிமிடம் ஐயோ! இவ்வளவு பணம் இருக்கிறதே என்று பையை எடுத்துக் கொண்டு தலைமை ஆசிரியரிடம் சென்றேன். அவர் அலுவலக ஊழியர் கட்டணம் வசூலித்த பணம் இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லும்போது தவற விட்டு விட்டார் என்றார்.

தலைமை ஆசிரியர் மிகவும் மகிழ்ந்தார். என் நேர்மையையும், கண்ணியமான செயலையும் பாராட்டினார்.

பிறர் பொருளுக்கு ஆசைப்படாத உன்னைப் பாராட்டியே தீர வேண்டும் என்று மறுநாள் காலை இறை வணக்கக் கூட்டத்தில் மாணவர்கள் மத்தியில் என் நேர்மையை பாராட்டி, சன்மானத் தொகையை பரிசாகவும் வழங்கினார்.
அது மட்டுமல்லாமல் என்னைப் பள்ளி மாணவர் தலைவராக்கினார். நேர்மைக்கு எப்போதும் உயர்வு உண்டு என்று கூறி, அதற்கு ராமுவே என்று என்னைப் பாராட்டினார்.

இந்நிகழ்வின் மகிழ்ச்சியை உங்களுடன், பெரியம்மா, தங்கையுடன் இக்கடிதம் மூலம் பகிர்ந்து கொள்வதற்கு மகிழ்கிறேன்.

இப்படிக்கு
தங்கள் அன்புள்ள,
ராமு
உறைமேல் முகவரி
பெறுநர்:-
அ. அய்யம்பெருமாள்
5/507, திருவள்ளூவர் நகர்
சென்னை – 600 012.

 சங்க இலக்கியத்தில் அறம் – கூடுதல் வினாக்கள் 

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. தமிழர் ____________, ____________  இன்புற்றனர்.
விடை : பொருள் ஈட்டி, அறம் செய்து

2. சங்க காலத்தில் அறத்தை ____________ மையமாகக் கொண்டிருந்தனர்.
விடை : மனித உறவின்

3. சமயக் கலப்பில்லாத ____________ இயல்பாக நிலவிய காலம் சங்ககாலம்
விடை : மானிட அறம்

4. அறநெறிக்கால அறங்கள் ____________ சார்ந்தவை.
விடை : சமயம்
5. அறம் கூறும் மன்றங்கள் அரசனின் ____________ ஆட்சிக்குத் துணைபுரிந்தன.
விடை : அறநெறி

6. வீ ரத்தைப் போலவே கொடையும் ____________ விரும்பப்பட்டது.
விடை : தமிழர்களால்

II. குறு வினா

1. அறத்தின் குறியீடாக போற்றப்பட்டவை எவை?

  • மன்னர்களுடைய செங்கோலும், வெண் கொற்றக் குடையும் அறத்தின் குறியீடுகளாக போற்றப்பட்டன.

2. உண்மையான செல்வம் என நல்வேட்டனார் கூறுவது என்ன?

  • பிறர் துன்பம் தீர்ப்பது தான் ‘உண்மையான செல்வம் என நல்வேட்டனார் கூறுகிறார்.
3. அமைச்சரின் கடமைகளாகச் சங்க இலக்கியம் யாது கூறுகிறது?
  • அரசன் அறநெறியில் ஆட்சி செய்ய உதவி புரிய வேண்டும்.
  • நன்றும் தீதும் ஆய்தலும், அன்பும் அறனும் காத்தலும் அமைச்சர் கடமை என்று மதுரைக்காஞ்சி கூறுகிறது

4. கொடையில் சிறந்த மன்னர்கள் நால்வரைக் குறிப்பிடுக.

  • அதியன்
  • பேகன்
  • ஆடுகோட்பாட்டுச்சேரலாதன்
  • திருமுடிக்காரி

5. நாக்கு ஓர் அதிசயத் திறவுகோல் காரணம் கூறுக

  • இன்பத்தின் கதவைத் திறப்பதுவும், துன்பத்தின் கதவைத் திறப்பதுவும் நாக்கு தான்.
  • மெய் பேசும் நா மனிதனை உயர்ததுகிறது
  • பொய் பேசும் நா மனிதனை தாழ்த்துகிறது
  • எனவே நாக்கு ஓர் அதிசயத் திறவுகோல் எனக் கூறக் காரணம் ஆகும்.
  • சங்க காலத்தில் போர் அறம் பற்றி கூறுக
  • தமிழர், போரிலும் அறநெறிகளைப் பின்பற்றினர். போர் அறம் என்பது வீரமற்றோர், புறமுதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கிறது.
  • போரின் கொடுமையிலிருந்து பசு, பார்ப்பனர், பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போர் புரிய வேண்டும் என்று ஒரு பாடல் கூறுகிறது.
  • தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதை ஆவூர் மூலங்கிழார் குறிப்பிட்டிருக்கிறார்.
  • எறியார் எறிதல் யாவணது எறிந்தார்
  • எதிர்சென்று எறிதலும் செல்லான் – புறம்.

எத்திசையும் புகழ் மணக்க...    

கி.பி.(பொ.ஆ.) ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காஞ்சி மாநகரத்துச் சிற்றரசர் ஒருவர் போதிதர்மர் என்னும் சமயப்பெயர்பூண்டு சீனாவுக்குச் சென்றார். பௌத்த சமயத் தத்துவத்தின் ஒரு பிரிவைப் போதித்தார். அதிலிருந்து உருவானதே "ஜென்" தத்துவம். இது, பின்னர் ஜப்பான் நாடுகளுக்கும் பரவிச் செழித்து விளங்கியது. போதி தருமருக்குச் சீனர்கள் கோவில் முதலிய கட்டி சிலை வைத்து இன்றளவும் வணங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1.சங்க காலத்திற்குப் பிந்தையக் காலம்…………………..

அ) அறநெறிக் காலம்
ஆ) மன்னர் காலம்
இ) பக்திக் காலம்
ஈ) சமயக் கலப்பில்லாக் காலம்
Answer:
அ) அறநெறிக் காலம்

2.சங்க இலக்கியத்தைப் பற்றி ‘கவிதை வாழ்க்கையின் திறனாய்வு’ என்றவர் ………………….
அ) ஜி.யூ. போப்
ஆ) ஆர்னால்டு
இ) கால்டுவெல்
ஈ) வீரமாமுனிவர்
Answer:
ஆ) ஆர்னால்டு

3.சங்கப் பாடலில் அறம் பற்றிய கருத்துகள் யாரை முதன்மைப்படுத்தியே கூறப்படுகிறது?
அ) வீரர்களை
ஆ) மக்களை
இ) அமைச்சர்களை
ஈ) அரசர்களை
Answer:
ஈ) அரசர்களை

4.மதுரையின் அவையம் பற்றிக் குறிப்பிடும் நூல் ……………………
அ) சிலப்பதிகாரம்
ஆ) மதுரைக்காஞ்சி
இ) பரிபாடல்
ஈ) மதுரை மும்மணிக்கோவை
Answer:
ஆ) மதுரைக்காஞ்சி

5.உதவி செய்தலை ‘உதவியாண்மை’ என்று குறிப்பிட்டவர்………………………
அ) ஈழத்துப் பூதன் தேவனார்
ஆ) நக்கீரர்
இ) திருமுடிக்காரி
ஈ) கபிலர்
Answer:
அ) ஈழத்துப் பூதன் தேவனார்

6.‘இரப்போர்க்கு ஈயாது வாழ்வதை விட உயிர் துறப்பது மேலானது’ என்று கூறும் அகநூல்…………………….
அ) கலித்தொகை
ஆ) குறுந்தொகை
இ) ஐங்குறுநூறு
ஈ) பரிபாடல்
Answer:
அ) கலித்தொகை

7.பேகன், மறுமை நோக்கிக் கொடுக்காதவர் என்று பாராட்டியவர்…………………………
அ) கபிலர்
ஆ) ஔவையார்
இ) நக்கீரர்
ஈ) பரணர்
Answer:
ஈ) பரணர்

8.‘வள்ளலின் பொருள், இரவலனின் பொருள்’ – என்றவர் ……………………
அ) நக்கீரர்
ஆ) கபிலர்
இ) பெரும்பதுமனார்
ஈ) நல்வேட்டனார்
Answer:
இ) பெரும்பதுமனார்

9.‘நிறைவடைகிறவனே செல்வன்’ என்று கூறும் தத்துவம் ………………….
அ) மாவோவியம்
ஆ) தாவோவியம்
இ) பௌத்தம்
ஈ) ஜென்தத்துவம்
Answer:
ஆ) தாவோவியம்

10.‘பிழையா நன்மொழி’ என்று வாய்மையைக் குறிப்பிடும் நூல் ………………….
அ) கலித்தொகை
ஆ) புறநானூறு
இ) நற்றிணை
ஈ) கொன்றை வேந்தன்
Answer:
இ) நற்றிணை

11.நம்மிடமுள்ள அதிசயத் திறவுகோல் எது?
அ) மூளை
ஆ) நாக்கு
இ) கண்
ஈ) கை
Answer:
ஆ) நாக்கு

12.சேர அரசர்களின் கொடைப் பதிவாக திகழும் நூல் ………………….
அ) புறநானூறு
ஆ) பரிபாடல்
இ) பதிற்றுப்பத்து
ஈ) சிலப்பதிகாரம்
Answer:
இ) பதிற்றுப்பத்து

13.தன்னிடமுள்ள எல்லாவற்றையும் கொடுப்பவன் என்று திருமுடிக்காரியைப் பாராட்டியவர்
அ) கம்ப ர்
ஆ) கபிலர்
இ) ஒளவையார்
ஈ) நல்வேட்டனார்
Answer:
ஆ) கபிலர்

14.பின்வரும் புலவர்களையும், மன்னர்களையும் சரியான இணையாகப் பொருத்துக.
அ) நக்கீரர் – 1. ஆடு கோட்பாட்டுச் சேரலாதன்
ஆ) ஔவையார் – 2. பெருஞ்சாத்தன்
இ) கபிலர் – 3. அதியன்
ஈ) நச்செள்ளையார் – 4. திருமுடிக்காரி
அ) 4, 3, 2, 1
ஆ) 3, 2, 1, 4
இ) 2, 3, 4, 1
ஈ) 2, 4, 3, 1
Answer:
இ) 2, 3, 4, 1

15.இரவலர் வராவிட்டாலும் தேடி வரவழைத்துக் கொடுக்கும் மன்னன் ………………….
அ) அதியன்
ஆ) திருமுடிக்காரி
இ) ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
ஈ) நல்வேட்டனார்
Answer:
இ) ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்

16.காஞ்சி மாநகரத்து சிற்றரசரே ………………….என்றும் சமயப் பெயர் கண்டார்.
அ) தர்மர்
ஆ) கன்பூசியஸ்
இ) போதி தர்மர்
ஈ) புத்தர்
Answer:
இ) போதி தர்மர்

17.போதி தர்மருக்குக் கோயில் கட்டியவர்கள் ………………….
அ) சீனர்கள்
ஆ) ஜப்பானியர்
இ) கிரேக்கர்
ஈ) புத்தர்
Answer:
அ) சீனர்கள்

18.சமூகக் கடலின் ஒரு துளி ………………….
அ) பறவைகள்
ஆ) விலங்குகள்
இ) மரங்கள்
ஈ) மனிதன்
Answer:
ஈ) மனிதன்

19.சொற்றொடர்களை முறைப்படுத்துக.
i) செய்ய வெறுத்தனர்
ii) பழிதரும் செயல்களை
iii) பரிசாகக் கிடைத்தாலும்
iv) உலகே
அ) (iv)-(iii)-(ii)-(i)
ஆ) (iii)-(iv)-(i)-(ii)
இ) (ii)-(i)-(iv)-(iii)
ஈ) (i)-(iv)-(iii)-(ii)
Answer:
அ) (iv)-(iii)-(i)-(i)

20.பொருத்துக.

1. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் – அ) ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
2. இரவலர் வராவிட்டாலும் அவர்களைத் தேடி அழைக்கும் இயல்பு – ஆ) பேகன்
3. மறுமை நோக்கிக் கொடுக்காதவன் – இ) மலையமான் திரு முடிக்காரி
4. எல்லாவற்றையும் கொடுப்பவன் – ஈ) அதியன்
அ) 1.அ 2.ஆ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஆ)1.ஈ 2.அ 3.ஆ 4.இ

21.பொருத்துக.
1. கொடை வள்ளல் எழுவரின் கொடைப்பெருமை – அ) ஆற்றுப்படை இலக்கியங்கள்
2. கொடை இலக்கியங்கள் – ஆ) சிறுபாணாற்றுப் படை
3. சேர அரசர்களின் கொடைப்பதிவு – இ) வள்ளல்கள்
4. இல்லோர் ஒக்கல் தலைவன் – ஈ) பதிற்றுப்பத்து
அ) 1.அ 2.ஆ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
இ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

22.தவறான சொற்றொடரைக் கண்டறிக.
அ) நாக்கு ஓர் அதிசயத் திறவுகோல்.
ஆ) நாக்கு இன்பத்தின் கதவைத் திறப்பது.
இ) நாக்கு துன்பத்தின் கதவைத் திறப்பது.
ஈ) மெய் பேசும் நா மனிதனைத் தாழ்த்துகிறது.
Answer:
ஈ) மெய் பேசும் நா மனிதனைத் தாழ்த்துகிறது.

23.‘செம்மை சான்ற காவிதி மாக்கள்’ என்றழைக்கப்பட்டவர் ………………….
அ) அமைச்சர்கள்
ஆ) மன்னர்கள்
இ) புலவர்கள்
ஈ) சான்றோர்கள்
Answer:
அ) அமைச்சர்கள்

24.‘செம்மை சான்ற காவிதி மாக்கள்’ என்று அமைச்சர்களைக் குறிப்பிட்ட புலவர் ………………….
அ) மாங்குடி மருதனார்
ஆ) பரணர்
இ) ஆவூர் மூலங்கிழார்
ஈ) நக்கீரர்
Answer:
அ) மாங்குடி மருதனார்

25.தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதைக் குறிப்பிட்ட புலவர் ………………….
அ) மாங்குடி மருதனார்
ஆ) பரணர்
இ) ஆவூர் மூலங்கிழார்
ஈ) நக்கீரர்
Answer:
இ) ஆவூர் மூலங்கிழார்

26.குற்றங்களை, அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும் என்று கூறிய புலவர் ………………….
அ) மாங்குடி மருதனார்
ஆ) பரணர்
இ) ஆவூர் மூலங்கிழார்
ஈ) ஊன் பொதிப் பசுங்குடையார்
Answer:
ஈ) ஊன் பொதிப் பசுங்குடையார்

27.‘அறம் அறக் கண்ட நெறிமான் அவையம்’ எனக் குறிப்பிடும் நூல் – ………………….
அ) புறநானூறு
ஆ) பதிற்றுப்பத்து
இ) பரிபாடல்
ஈ) நற்றிணை
Answer:
அ) புறநானூறு

28.தனிச் சிறப்புப் பெற்றிருந்த அற அவையம் அமைந்திருந்த இடம் ………………….
அ) உறையூர்
ஆ) மதுரை
இ) திருநெல்வேலி
ஈ) மாமல்லபுரம்
Answer:
அ) உறையூர்

29.உண்மையான செல்வம் என்பது பிறர்துன்பம் நீக்குவது தான் என்றவர் ………………….
அ) நல்வேட்டனார்
ஆ) பரணர்
இ) ஆவூர் மூலங்கிழார்
ஈ) நக்கீரர்
Answer:
அ) நல்வேட்டனார்

30.சங்க இலக்கியங்கள் பேசும் சிறந்த அறம் ………………….
அ) உதவி
ஆ) கொடை
இ) வாய்மை
ஈ) பொருள்
Answer:
இ) வாய்மை

31.ஈதல் பற்றியச் செய்திகளைக் கூறும் அகஇலக்கியம் ………………….
அ) கலித்தொகை
ஆ) குறுந்தொகை
இ) அகநானூறு
ஈ) நற்றிணை
Answer:
அ) கலித்தொகை

32.செல்வத்துப் பயனே ஈதல் என்று கூறும் நூல் ………………….
அ) புறநானூறு
ஆ) கலித்தொகை
இ) அகநானூறு
ஈ) பரிபாடல்
Answer:
அ) புறநானூறு



****************THE END OF 8.1**************************

8.2. ஞானம்

10th Tamil Guide unit 8 Answers TN Students Guide

சாளரத்தின் கதவுகள், சட்டம்;
காற்றுடைக்கும், தெருப்புழுதி வந்தொட்டும்.
கரையான் மண் வீடு கட்டும்.
அன்று துடைத்தேன்,
சாயம் அடித்தேன்,
புதுக்கொக்கி பொருத்தினேன்.
காலக்கழுதை
கட்டெறும்பான
இன்றும்
கையிலே
வாளித்தண்ணீர், சாயக்குவளை,
கந்தைத்துணி, கட்டைத் தூரிகை: அறப்பணி ஓய்வதில்லை
ஓய்ந்திடில் உலகமில்லை!

கோடை வயல் - தொகுப்பு:

I. பலவுள் தெரிக.

‘வீட்டைத் துடைத்துச் சாயம் அடித்தல்’ இவ்வடி குறிப்பிடுவது ……………

  1. காலம் மாறுவதை
  2. வீட்டைத் துடைப்பதை
  3. இடையறாது அறப்பணி செய்தலை
  4. வண்ணம் பூசுவத
விடை : இடையறாது அறப்பணி செய்தலை

II. குறு வினா

காலக் கழுதை சுட்டெறும்பானது கவிஞர் செய்வது யாது?

  • காலக் கழுதை கட்டெறும்பானது என்பது காலம் மாறி வயது முதிர்தலை குறிப்பது ஆகும்.
  • வயது முதிர்ந்து உடலும் உடல் உறுப்புகளும் வலுவிழந்தாலும் அற்பணியைத் தொடர்ந்து செய்கிறார்.
  • வாளித்தண்ணீர், சாயக்குவளை, துணி கந்தையானாலும், சாயம் அடிக்கும் தூரிகை கட்டையானலும் சுத்தம் செய்வது போல, காலக்கழுதை கட்டெறும்பான பின்னும் அறப்பணி ஓயாது தொடர்கிறது.

III. சிறு வினா

1. ‘சுற்றுச்சூழலைப் பேணுவதே இன்றைய அறம்’ என்ற தலைப்பில், பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்பு ஒன்றை உருவாக்குக.


(குறிப்பு – சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கச் சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும், ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஏற்படும் மாற்றமே சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும்)

உரைக்குறிப்புகள்:-

அறம் என்பதன் விளக்கம் தரல்
சுற்றுச்சூழல் என்றால் என்ன?
சுற்றுச்சூழலோடு அறத்திற்கு உள்ள தொடர்பை விளக்குதல்.
அறம் சார்ந்த வகையில் மாசு அடைவதைத் தவிர்க்க வழி கூறுதல்.
  • சட்டங்கள் வன்மையாக இருந்தாலும், அரசின் வாயிலாக மென்மைப்படுத்தல் வேண்டும்.
  • நெகிழி, ஆலைக்கழிவு, நச்சுக்காற்று வாகனப்புகை இவற்றால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்பதை மக்கள் மனதில் பதிய வைத்தல்.
  • இக்குறிப்புகளை மையமாக வைத்து உரையாற்ற வேண்டும்.
2. வாளித் தண்ணீர், சாயக் குவளை, கந்தைத் துணி, கட்டைத் தூரிகை – இச்சொற்களைத் தொடர்புபடுத்தி ஒரு பத்தி அமைக்க.
  • வீட்டின் சுவர், சன்னல் போன்றவற்றில் அழுக்குப் படிந்தும், சன்னல்களில் கரையான் படிவதைத் தடுக்க, வாளித் தண்ணீரைக் கொண்டு சுவரையும் ஜன்னலையும் நன்கு கழுவ வேண்டும்.
  • பிறகு கந்தை துணியால் நன்கு துடைத்து விட வேண்டும்.
  • மூன்றாவதாக சாயக் குவளையில் உள்ள சாயத்தை கட்டைத் தூரிகை கொண்டு சாயம் பூசி புதுபிக்க வேண்டும்.

ஞானம் – கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. ___________ உலகம் நிலைத்திருப்பதற்கான அடிப்படை
விடை : இயக்கமே

2. கடல் அலைகளைப்போல் ___________ ஓய்வதில்லை
விடை : பணிகள்

3. பணிகள் ஓய்திடின் ___________ இல்லை
விடை : உலகம்

4. தி,சொ.வேணுகோபாலன் ___________ பிறந்நதவர்
விடை : திருவையாற்றில்

5. தி.சொ.வேணுகோபாலன் ___________ புதுக்கவிஞர்களில் ஒருவர்
விடை : ‘எழுத்து’ காலப்

6. தி,சொ.வேணுகோபாலனின் மற்றாெரு கவிைதத் தாெகுப்பு ___________
விடை :  மீட்சி விண்ணப்பம்

II. குறு வினா

1. எவை அறம் சாரந்து வளர வேண்டும்?

  • தனக்கான பணிகளோ உலகிற்கான பணிகேளா அறம் சாரந்து வளர வேண்டும்

2. காலக் கழுதை கட்டெறும்பானது என்பது எதை குறிப்பது ஆகும்?

  • காலக் கழுதை கட்டெறும்பானது என்பது காலம் மாறி வயது முதிர்தலை குறிப்பது ஆகும்.

3. சட்டங்கள் வன்மையாக இருந்தாலும் யாரின் வாயிலாக மென்மைப்படுத்தல் வேண்டும்?

  • சட்டங்கள் வன்மையாக இருந்தாலும், அரசின் வாயிலாக மென்மைப்படுத்தல் வேண்டும்.

4. எவற்றால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்பதை மக்கள் மனதில் பதிய வைத்தல் வேண்டும்?

  • நெகிழி
  • ஆலைக்கழிவு
  • நச்சுக்காற்று
  • வாகனப்புகை இவற்றால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்பதை மக்கள் மனதில் பதிய வைத்தல்

5. தி.சொ.வேணுகோபாலன் குறிப்பு வரைக

  • இவர் திருவையாற்றில் பிறந்தவர்; மணிப்பால்
  • பாெறியியல் கல்லூரியில் எந்திரவியல் பேராசிரியராகப் பணியாற்றியவர்;
  • ‘எழுத்து’ காலப் புதுக்கவிஞர்களில் ஒருவர்.
  • இவரின் மற்றாெரு கவிைதத் தாெகுப்பு மீட்சி விண்ணப்பம்.

பலவுள் தெரிக

1.‘ஞானம்’ – கவிதையின் ஆசிரியர் ……………………..

அ) அப்துல் ரகுமான்
ஆ) வேணுகோபாலன்
இ) இராஜகோபாலன்
ஈ) இராமகோபாலன்
Answer:
ஆ) வேணுகோபாலன்

2.உலகிற்கான பணிகள் எதைச் சார்ந்து வளர வேண்டும்?
அ) மறம்
ஆ) அறம்
இ) ஞானம்
ஈ) கல்வி
Answer:
ஆ) அறம்

3.‘ஞானம்’ கவிதை இடம்பெற்ற தொகுப்பு……………………..
அ) தீக்குச்சி
ஆ) மீட்சி விண்ணப்பம் 
இ) கோடை வயல்
ஈ) கோடைமழை
Answer:
இ) கோடை வயல்

4.தி.சொ.வேணுகோபாலன் பிறந்த ஊர் ……………………..
அ) தஞ்சாவூர்
ஆ) திருவாதவூர்
இ) திருவாரூர்
ஈ) திருவையாறு
Answer:
ஈ) திருவையாறு

5.தி.சொ.வேணுகோபாலன் எக்காலத்துப் புதுக்கவிஞர்களில் ஒருவர்?
அ) மணிக்கொடி
ஆ) எழுத்து
இ) வானம்பாடி
ஈ) கவிக்குயில்கள்
Answer:
ஆ) எழுத்து

6.வேணுகோபாலன் பேராசிரியராகப் பணியாற்றியது……………………..
அ) கோவை மருத்துவக் கல்லூரியில்
ஆ) மணிப்பால் பொறியியல் கல்லூரியில்
இ) சென்னை கிண்டி கல்லூரியில்
ஈ) வேளாண்மைக் கல்லூரியில்
Answer:
ஆ) மணிப்பால் பொறியியல் கல்லூரியில்

7.“மீட்சி விண்ணப்பம்” கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்……………………..
அ) வேணுராம்
ஆ) வேணுகோபாலன்
இ) சி.சு. செல்லப்பா
ஈ) கபிலன்
Answer:
ஆ) வேணுகோபாலன்

8.‘ஞானம்’ கவிதை உணர்த்தும் பொருள்
அ) சமூக அறப்பணி
ஆ) வீட்டைப் புதுப்பித்தல்
இ) இடைவிடாத சமூக அறப்பணியை
ஈ) உலகப் பணிகள்
Answer:
இ) இடைவிடாத சமூக அறப்பணியை

9.அறப்பணி ஓய்ந்தால்……………………..இல்லை .
அ) மனிதன்
ஆ) இயற்கை
இ) உலகம்
ஈ) கடல்
Answer:
இ) உலகம்

10.“புதுக்கொக்கி பொருத்தினேன்” – இத்தொடர் உணர்த்துவது………………………
அ) சாளரக் கதவை சீர்ப்படுத்துதல்
ஆ) சமூகத்தைச் சீர்ப்படுத்துதல்
இ) பொய்களை நீக்குதல் 
ஈ) வீட்டைப் புதுப்பித்தல்
Answer:
ஆ) சமூகத்தைச் சீர்ப்படுத்துதல்

11.பொருத்துக.
1. கரையான் – அ) கட்டெறும்பு
2. காலக்கழுதை – ஆ) வந்தொட்டும்
3. தெருப்புழுதி – இ) காற்றுடைக்கும்
4. சட்ட ம் – ஈ) மண்வீடு கட்டும்
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

12.‘அறப்பணி ஓய்வதில்லை
ஓய்ந்திடில் உலகமில்லை !’ – இவ்வடிகளில் அமைந்த நயம்?
அ) எதுகை
ஆ) மோனை
இ) முரண்
ஈ) இயைபு
Answer:
ஈ) இயைபு

13.பொருத்துக.
1. வாளி – அ) குவளை
2. சாயம் – ஆ) தண்ணீர்
3. கந்தை – இ) தூரிகை
4. கட்டை – ஈ) துணி
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

*************************THE END OF 8.2*******************************

8.3. காலக்கணிதம்
10th Tamil Guide unit 8 Answers TN Students Guide

காலக்கணிதம் 

-கண்ணதாசன்

கவிஞன் யானோர் காலக் கணிதம் 
கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்! 
புவியில் நானோர் புகழுடைத் தெய்வம் 
பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்! 
இவைசரி யென்றால் இயம்புவதென் தொழில் 
இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை! 
ஆக்கல் அளித்தல் அழித்தல்இம் மூன்றும் 
அவனும் யானுமே அறிந்தவை; அறிக! 
செல்வர்தங் கையில் சிறைப்பட மாட்டேன்; 
பதவி வாளுக்கும் பயப்பட மாட்டேன்! 
பாசம் மிகுத்தேன்; பற்றுதல் மிகுத்தேன்! 
ஆசை தருவன அனைத்தும் பற்றுவேன்! 
உண்டா யின்பிறர் உண்ணத் தருவேன்; 
இல்லா யின்எமர் இல்லம் தட்டுவேன் 
வண்டா யெழுந்து மலர்களில் அமர்வேன் 
வாய்ப்புறத் தேனை ஊர்ப்புறந் தருவேன்! 
பண்டோர் கம்பன், பாரதி, தாசன் 
சொல்லா தனசில சொல்லிட முனைவேன்!
புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக் காது 
இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது! 
வளமார் கவிகள் வாக்குமூ லங்கள் 
இறந்த பின்னாலே எழுதுக தீர்ப்பு! 
கல்லாய் மரமாய்க் காடுமே டாக 
மாறா திருக்கயான் வனவிலங் கல்லன்! 
*மாற்றம் எனது மானிடத் தத்துவம்; 
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்! 
எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை 
என்ப தறிந்து ஏகுமென் சாலை! 
தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்; 
தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்! 
கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!
உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது; 
நானே தொடக்கம்; நானே முடிவு; 
நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்!*

நூல் வெளி

'காலக்கணிதம்' என்னும் இப்பாடப்பகுதி கண்ணதாசன் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

'முத்தையா' என்னும் இயற்பெயரைக் கொண்ட கண்ணதாசன் இன்றைய சிவகங்கை மாவட்டத்தின் சிற்றூரான சிறுகூடல்பட்டியில் பிறந்தவர். இவரது பெற்றோர் சாத்தப்பன் விசாலாட்சி ஆவர். 1949ஆம் ஆண்டு கலங்காதிரு மனமே என்ற பாடலை எழுதி, திரைப்படப் பாடலாசிரியரானார். திரையுலகிலும் இலக்கிய உலகிலும் சிறந்து விளங்கியவர் கண்ணதாசன். இவர் சிறந்த கவியரங்கக் கவிஞராகவும் பேச்சாளராகவும் திகழ்ந்தவர். தன் திரைப்படப் பாடல்கள் வழியாக எளிய முறையில் மெய்யியலை மக்களிடையே கொண்டு சேர்த்தவர். சேரமான் காதலி என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர். இவர் தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும் சிறப்பிக்கப்பட்டிருந்தார்.

 

I. பலவுள் தெரிக.

4. காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர்………

  1. இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது
  2. என்மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது
  3. இகழ்ந்தால் இறந்துவிடாது என்மனம்
  4. என்மனம் இறந்துவிடாது இகழ
விடை : இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது

II. குறு வினா

‘கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!
உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது’
அ) அடி எதுகையை எடுத்தெழுதுக.
ஆ) இலக்கணக் குறிப்பு எழுதுக – கொள்க, குரைக்க


அ) அடி எதுகை
  • கொள்வோர் – உள்வாய்

ஆ) இலக்கணக் குறிப்பு

  • கொள்க – வியங்கோள் வினைமுற்று
  • குரைக்க – வியங்கோள் வினைமுற்று

III. நெடு வினா

காலக்கணிதம் கவிதையில் பொதிந்துள்ள நயங்களைப் பாராட்டி எழுதுக.

கவிஞன் யானோர் காலக் கணிதம்

கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்!
புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்
பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்!
இவைசரி யென்றால் இயம்புவதென் தொழில்
இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை!
ஆக்கல் அளித்தல் அழித்தல்இம் மூன்றும்
அவனும் யானுமே அறிந்தவை; அறிக!

– கண்ணதாசன்

திரண்ட கருத்து:-
  • கவிஞன் நானே காலத்தை கணிப்பவன். உள்ளத்தில் உதிக்கும் பொருளை வார்த்தை வடிவம் கொடுத்த ஒரு உருவமாய் அவற்றை நான் படைப்பதால் இப்பூமியில் நானும் புகழ்பெற்ற தெய்வம் பொன்னை விட விலையுயர்ந்த செல்வம் என்னுடைய கருத்துகள். சரியானவற்றை எடுத்துச் சொல்வதும், தவறானவற்றை எதிப்பதும் என் பணி. படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று பணிகளும் நானும் கடவுளும் அறிந்தவை.

மோனை நயம்:-

காட்டுக்கு யானை
பாட்டுக்கு மோனை
செய்யுளில் அடியிலோ சீரிலோ முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை ஆகும்.
விஞன் – ருப்போடு, வை சரி – வை தவறாயின்….
மோனை நயம் பெற்று வந்துள்ளது.

எதுகை நயம்:-

மதுரைக்கு வைகை
செய்யுளுக்கு எதுகை
செய்யுளில் முதல் எழுத்து அளவொத்திருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது மோனை ஆகும்.
ருப்படு – பொருளை – உருப்பட : சீர் எதுகை வந்துள்ளது.

முரண்:-

நாட்டுக்கு அரண்
பாட்டுக்கு முரண்
செய்யுளில் அடியிலோ, சீரிலோ எதிரெதிர் பொருள் தரும் வகையில் தொடுக்கப்படுவது முரண் ஆகம்
ஆக்கல் X அழித்தல் என்று முரண்பட்ட சொற்கள் அமைத்து தொடுந்திருப்பதால் முரண் நயமும் உள்ளது.

இயைபு நயம்:-

அடிதோறும் இறுதி எழுத்தோ, சொல்லோ இயைந்து வரத்தொடுப்பது இயைபு ஆகும்
…. புகழுடைத் தெய்வம்
…. பொருளென் செல்வம் – இயைபு நயமும் உள்ளது

அணி நயம்:-

கண்ணதாசன் இப்பாடலில், கடவுளுக்கு இணையாக
யானோர் காலக்கணிதம்
நானோர் புகழுடையத் தெய்வம்
என உருவகப்படுத்தி உள்ளதால் இப்பாடலில் உருவக அணி பயின்று வந்துள்ளது.

சந்த நயம்:-

சந்தம் தமிழக்குச் சொந்தம் என்பதற்கு ஏற்ப, இப்பாடலில் எண்சீர் கழிநெடிலடி ஆசரிய விருத்தம் இடம் பெற்றுள்ளது. அகவலோசையுடன் இனிய சந்த நயமும் பெற்றுள்ளது.

காலக்கணிதம் – கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1.கவிஞன் காலத்தைக் கணிப்பதால் காலத்தை வென்றவனாகிறான்.
விடை : காலத்தைக் கணிப்பதால்

2.கண்ணதாசனின் இயற்பெயர் ‘முத்தையா’
விடை :விடை : முத்தையா

3.சேரமான் காதலி என்னும் புதினத்திற்காக கண்ணதாசன் சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்
விடை : சாகித்திய அகாதெமி விருது

4. _________ மாவட்டத்தில பிறந்தவர் கண்ணதாசன்.
விடை : சிவகங்கை

II. குறு வினா

1. கவிஞன் என்பவன் யார்?

  • மனம் என்னும் வயலில், சொல்லேர் உழவனாக, சிந்தனை விதையைத் தூவி, மடமைக்களை பறித்து, தத்துவ நீர் பாய்ச்சி, அறம் என்னும் கதிர் அறுப்பவன் கவிஞன்.

2. கவிஞன் எதனால் காலத்தை வென்றவனாகிறான்?

  • கவிஞன் காலத்தைக் கணிப்பதால் காலத்தை வென்றவனாகிறான்.
  • கண்ணதாசன் எதற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.
  • கண்ணதாசன் சேரமான் காதலி என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.

3. கண்ணதாசன் குறிப்பு வரைக

  • கண்ணதாசனின் இயற்பெயர் ‘முத்தையா’
  • சிவகங்கை மாவட்டத்தின் சிற்றூரான சிறுகூடல்பட்டியில் பிறந்தவர்.
  • இவரது பெற்றாெர் சாத்தப்பன்– விசாலாட்சி ஆவர்.
  • 1949ஆம் ஆண்டு “கலங்காதிரு மனேம’’ என்ற பாடைல எழுதி, திரைப்படப் பாடலாசிரியரானார். திரையுலகிலும் இலக்கிய உலகிலும் சிறந்து விளங்கியவர் கண்ணதாசன்.
  • சிறந்த கவியரங்கக் கவிஞராகவும் பேச்சாளராகவும் இவர் திகழ்ந்தவர்.
  • தன் திரைப்படப் பாடல்கள் வழியாக எளிய முறையில் மெய்யியலை மக்களிடைய காெண்டு சேர்த்தவர்.
  • சேரமான் காதலி என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்.
  • இவர் தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும் சிறப்பிக்கப்பட்டிருந்தார்.

பலவுள் தெரிக

1.காலத்தை வெல்பவன் ………………………..
அ) ஆசிரியர்
ஆ) அரசர்
இ) கவிஞன்
ஈ) ஓவியன்
Answer:
இ) கவிஞன்

2.கண்ணதாசனின் இயற்பெயர் யாது?
அ) முத்தரசன்
ஆ) முத்தையா
இ) முத்துக்குமார்
ஈ) முத்துசாமி
Answer:
ஆ) முத்தையா

3.கண்ணதாசன் பிறந்த மாவட்டம் ………………………..
அ) இராமநாதபுரம்
ஆ) நெல்லை
இ) புதுக்கோட்டை
ஈ) சிவகங்கை
Answer:
ஈ) சிவகங்கை

4.கண்ண தாசன் பிறந்த ஊர் – ………………………..
அ) சிறுகூடல்பட்டி
ஆ) கூடல் மாநகர்
இ) முக்கூடல்
ஈ) சிவகங்கை
Answer:
அ) சிறுகூடல்பட்டி

5.கண்ணதாசன் முதன் முதலில் திரைப்படத்திற்குப் பாடல் எழுதிய ஆண்டு………………………..
அ) 1939
ஆ) 1942
இ) 1949
ஈ) 1950
Answer:
இ) 1949

6.கண்ண தாசன் எழுதிய முதல் திரைப்படப் பாடல்………………………..
அ) வாழ நினைத்தால் வாழலாம்
ஆ) கலங்காதிரு மனமே
இ) மலர்களைப் போல் தங்கை
ஈ) உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
Answer:
ஆ) கலங்காதிரு மனமே

7.கண்ணதாசன் திரைப்படப் பாடல் வாயிலாக மக்களுக்கு………………………..உணர்த்தினார்.
அ) மெய்யியலை
ஆ) உலகியலை
இ) ஆன்மீகத்தை
ஈ) இலக்கணத்தை
Answer:
அ) மெய்யியலை

8.சாகித்திய அகாதெமி விருது பெற்ற கண்ணதாசனின் நூல் ………………………..
அ) மாங்கனி
ஆ) இயேசு காவியம்
இ) சேரமான் காதலி
ஈ) சிவகங்கைச் சீமை
Answer:
இ) சேரமான் காதலி

9.தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர் ………………………..
அ) பாரதியார்
ஆ) கண்ண தாசன்
இ) வைரமுத்து
ஈ) மேத்தா
Answer:
ஆ) கண்ண தாசன

10.கண்ணதாசன் அட்சயப்பாத்திரம் என்று எதைக் குறிப்பிடுகிறார்?
அ) தத்துவம்
ஆ) கொள்கை
இ) ஞானம்
ஈ) பண்பாடு
Answer:
அ) தத்துவம்

11.கண்ணதாசன் தன் வாக்கு மூலங்களாக எவற்றைக் குறிப்பிடுகிறார்?
அ) தன் நூல்களை
ஆ) உரைகளை
இ) இதழ்களை
ஈ) வளமார் கவிகளை
Answer:
ஈ) வளமார் கவிகளை

12.‘மாற்றம் எனது மானிடத் தத்துவம்’ என்றவர் யார்?
அ) பாரதிதாசன்
ஆ) பாரதி
இ) கண்ண தாசன்
ஈ) பெரியார்
Answer:
இ) கண்ண தாசன்

13.‘கவிஞன் யானோர் காலக் கணிதம்’ – இவ்வடிகளில் அமைந்த நயம்.
அ) எதுகை
ஆ) மோனை
இ) இயைபு
ஈ) முரண்
Answer:
ஆ) மோனை

14.‘புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக் காது
இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது!’ – இவ்வடிகளில் அமைந்த முரண் சொல்?
அ) என்னுடல் x என்மனம்
ஆ) புல்லரிக்காது x இறந்துவிடாது
இ) புகழ்ந்தால் x இகழ்ந்தால்
ஈ) புகழ்ந்தால் x என்மனம்
Answer:
இ) புகழ்ந்தால் x இகழ்ந்தால்

15.‘கவிஞன் யானோர் காலக் கணிதம்’ என்று கூறியவர் ………………………..
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) சுரதா
ஈ) கண்ண தாசன்
Answer:
ஈ) கண்ண தாசன்

16.‘மாற்றம் எனது மானிடத் தத்துவம்’ என்று கூறியவர் ………………………..
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) சுரதா
ஈ) கண்ண தாசன்
Answer:
ஈ) கண்ண தாசன்

17.‘வண்டாய் எழுந்து மலர்களில் அமர்வேன்’ – எனக் கூறியவர் ………………………..
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) சுரதா
ஈ) கண்ண தாசன்
Answer:
ஈ) கண்ண தாசன்


******THE END OF 8.3********

 8.4 இராமானுசர் (நாடகம்)

10th Tamil Guide unit 8 Answers TN Students Guide


பாடநூல் வினாக்கள்

நெடுவினா

1.குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் நாடகம் எழுதுக.

Answer:
மாணவன் – கொக்கைப் போல, கோழியைப் போல – உப்பைப் போல – இருக்க வேண்டும் – கொக்கு காத்திருந்து கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் – குப்பையைக் கிளறினாலும் தனது உணவை மட்டுமே எடுத்துக்கொள்ளும் கோழி – கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் உப்பின் சுவையை உணரமுடியும் – ஆசிரியர் விளக்கம் – மாணவன் மகிழ்ச்சி.

காட்சி – 1

இடம் : வகுப்பறை
பாத்திரங்கள் : குகன், செழியன், தமிழாசிரியர் மற்றும் மாணவர்கள்.

குகன் : செழியா! வந்துவிட்டாயா.

செழியன் : வந்துவிட்டேன் குகன். இன்று நம் தமிழாசிரியர் அவர்கள் மாணவன் எப்படி இருக்கவேண்டும் என்று சில குறிப்புகளை வழங்குகிறேன் என்றாரே! அவர் அறைக்குச் செல்வோமா?

குகன் : செல்வோம் செழியன்! இதுவரை நான்கைந்து முறை சென்று பார்த்தோம். ஆசிரியரைச் சந்திக்க முடியவில்லை …
செழியன் : இன்று கட்டாயம் நம்மை சந்திப்பார்.

காட்சி – 2

இடம் : வகுப்பறை

பாத்திரங்கள் : ஆசிரியர், குகன், செழியன்.

மாணவர்கள் இருவரும் : வணக்கம் ஐயா!

ஆசிரியர் : வணக்கம்!

குகன் : ஐயா! உள்ளே வரலாமா?

ஆசிரியர் : வாருங்கள்! வந்ததன் காரணம் கூறுங்கள்.

செழியன் : ஐயா, வாழ்வில் முன்னேற சில குறிப்புகளைச் சொல்லி அறிவுரை 
கூறுகிறேன் என்றீர்களே… அதற்காகத்தான் வந்தோம்.

ஆசிரியர் : நல்லது. உங்களுக்கு மூன்று உதாரணங்கள் கூறப்போகிறேன். முதலில் கொக்கைப் போல’ வாய்ப்பு கிட்டும் வரை கொக்கைப் போல காத்திருக்க வேண்டும். வாய்ப்பு கிட்டியவுடன் சரியாகப் பயன்படுத்த வேண்டும். அதைத்தான் வள்ளுவர், ‘கொக்கொக்க’ எனப் பாடியுள்ளார்.

குகன் : சரிங்க ஐயா! இனிமேல் நாங்கள் அவசரப்பட்டு எதையும் சிந்திக்காது செயல்பட மாட்டோம்.

ஆசிரியர் : இரண்டாவதாக, கோழியைப் போல்!’
செழியன் : ஆமாங்க ஐயா! அதென்ன கோழியைப் போல்….

ஆசிரியர் : கோழி, குப்பையைக் கிளறினாலும் குப்பைக்குள் இருந்தாலும் தனக்குத் தேவையான ‘உணவை மட்டுமே’ கொத்தித் தின்னும். அதுபோல இந்த சமுதாயத்தில் உங்களைக் கெடுக்கும் குப்பைகளைப் போல பல இருந்தாலும் உமக்குத் தேவையான
நன்மணிகளை மட்டும் தேர்ந்தெடுத்து வாழ வேண்டும்.

இருவரும் : நன்றாகப் புரிந்தது ஐயா!

ஆசிரியர் : மூன்றாவதாக, உப்பைப் போல….

குகன் : ஆம். ஐயா, ‘உப்பைப்போல’ என்பதன் விளக்கம் தாருங்கள்.

ஆசிரியர் : கூறுகிறேன்! உப்பைக் கண்ணால் பார்க்கலாம். சுவையை நாவில் இட்டு உணரலாம். அதுபோல ஒவ்வொருவரின் வெளித்தோற்றம் எப்படியிருப்பினும், உங்களைச் சார்ந்தவரின் குணநலன்களை ஆராய்ந்து உணர்ந்து அறிந்து நடந்து கொள்ள வேண்டும். மிக நெருங்கி இருந்தாலும், மிக தூரம் இருந்தாலும் துன்பந்தான். உப்பு குறைவானாலும் உண்ண முடியாது. அதிகமானாலும் உண்ண முடியாது. அளவோடு இருந்தால்தான் ருசிக்க முடியும். நாமும் அளவோடு இருப்போம்.
இருவரும் : மிக்க மகிழ்ச்சி ஐயா! எம் அறிவுக் கண்களைத் திறந்து நாங்கள் எப்படி வாழ வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தி விட்டீர்கள்.
நன்றி! ஐயா!

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1.ஆண்டுக்கு ஒருமுறை மலர்வது ………………..

அ) பிரம்மகமலம்
ஆ) சண்ப கம்
இ) குறிஞ்சி
ஈ) முல்லை
Answer:
அ) பிரம்மகமலம்

2.தண்டு கொடிக்கு இணையானவர்கள் யாவர்?
அ) பூரணர்
ஆ) கூரேசர்
இ) முதலியாண்டான், கூரேசர்
ஈ) இராமானுசர்
Answer:
இ) முதலியாண்டான், கூரேசர்

3.தலைமுறைக்கு ஒருமுறை மட்டுமே மலர்வது………………………..
அ) மூங்கில்
ஆ) குறிஞ்சி
இ) கமலம்
ஈ) செண்பகம்
Answer:
அ) மூங்கில்

4.சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடு.
i) இறைவனின் திருவருளால் இன்று திருமந்திரம் உமக்குக் கிடைத்தது என்றார் பூரணர்.
ii) ஆசிரியர் கட்டளையை மீறினால் தண்டனையாக நரகமே கிடைக்கும்.
iii) சௌம்பிய நாராயணனை அடைக்கலமாகக் கொடுக்கவில்லை.
அ) மூன்று கூற்றுகளும் சரியானவை
ஆ) ஆ மட்டும் சரியான கூற்று
இ) ஆ, இ இரண்டும் சரியானவை.
ஈ) கூற்று அ, ஆ இரண்டும் சரியானவை.
Answer:
ஈ) கூற்று அ, ஆ இரண்டும் சரியானவை.

5.பூரணரின் மகன் பெயர் ………………………..
அ) நாராயணன்
ஆ) சௌம்ய நாராயணன்
இ) சௌம்ய ராஜன்
ஈ) முதலியாண்டான்
Answer:
ஆ) சௌம்ய நாராயணன்

6.“நான் மட்டுமே தண்டனை பெற்று நரகம் சேர்வேன். மக்கள் அனைவர்க்கும் நலம் கிட்டும் – என்று கூறியவர்?
அ) இராமானுசர்
ஆ) பூரணர்
இ) கூரேசர்
ஈ) முதலியாண்டான்
Answer:
அ) இராமானுசர்

7.சௌம்ய நாராயணன் யாரிடம் அடைக்கலப்படுத்தப்பட்டான்?
அ) முதலியாண்டானிடம்
ஆ) பூரணரிடம்
இ) இராமானுசரிடம்
ஈ) கூரேசரிடம்
Answer:
இ) இராமானுசரிடம்

8.பிறவிப் பிணியைத் தீர்க்கும் அருமருந்து ………………………..
அ) திருமந்திரம்
ஆ) திருநீறு
இ) மந்திரம்
ஈ) துறவு
Answer:
அ) திருமந்திரம்

9.நாராயணனின் திருப்பாதங்களைப் புகலிடமாகக் கொள்பவர்………………………..
அ) திருமகள்
ஆ) மலைமகள்
இ) கலைமகள்
ஈ) அலைமகள்
Answer:
அ) திருமகள்

10.இளையாழ்வாரே! என்று பூரணர் யாரை அழைத்தார்?
அ) கூரேசரை
ஆ) முதலியாண்டானை
இ) இராமானுசரை
ஈ) பெரியவரை
Answer:
இ) இராமானுசரை

11.12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் மலரும் மலர்
அ) செண்பகம்
ஆ) குறிஞ்சி
இ) முல்லை
ஈ) பிரம்மகமலம்
Answer:
ஆ) குறிஞ்சி

12.கூர்வேல் குவைஇய மொய்ம்பின்
தேர்வண் பாரிதண் பறம்பு நாடே! – இப்பாடல் வரி எந்நூலில் இடம்பெற்றுள்ளது?
அ) அகநானூறு
ஆ) புறநானூறு
இ) நற்றிணை
ஈ) கலித்தொகை
Answer:
ஆ) புறநானூறு

13.சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள மலை
அ) பழனி மலை
ஆ) பிரான் மலை
இ) பொதிகை மலை
ஈ) நல்லி மலை
Answer:
ஆ) பிரான் மலை

நெடுவினா

1.இராமானுசர் நாடகம் மூலம் இராமானுசரின் பண்புகளைக் கூறுக.
Answer:

குறிப்புச் சட்டம்

  • முன்னுரை
  • பொறுமை உடையவர்
  • நட்புக்கு மரியாதை
  • தன்னலமற்ற பரந்த உள்ளம்
  • முடிவுரை
முன்னுரை:
  • பிறர்நலம் போற்றுவதே மனித வாழ்வின் சிறந்த நிலை ஆகும். தான் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்று எண்ணுவோர் மத்தியில் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லி வாழ்ந்து காட்டிய இராமானுசரின் பண்புநலன்கள் பற்றிக் காண்போம்.
பொறுமை உடையவர்:
  • திருமந்திரத் திருவருளைக் கற்றுக் கொள்வதற்காக பதினெட்டு முறை பூரணரைச் சந்திக்கச் சென்றார்.
  • இன்றாவது நம் விருப்பம் நிறைவேறுமா! என்ற உடன்வந்தவர்களையும் பொறுமையுடன் வழி நடத்துகிறார்.
  • உங்களை மட்டும்தானே வரச்சொன்னேன் என்ற பூரணரிடமும் பொறுமையுடன் பதில் கூறுகிறார்.
  • இவ்வாறு இராமானுசர் பொறுமை என்னும் பண்பில் சிறந்திருத்தலை அறியலாம்.
நட்புக்கு மரியாதை:
  • எப்பொழுதும் தன்னுடன் இருக்கும் கூரேசரையும், முதலியாண்டானையும் உண்மையான நட்புடன் நேசிக்கிறார். திருமந்திர
  • திருவருளைக் கற்கப் போகும் பொழுதுகூட, பூரணர் தண்டு கொடியுடன் மட்டும் வாருங்கள் என்கிறார்.
  • அப்போதும் இவர்கள் இருவரும் என்னுடன் இருக்கும் தண்டும் கொடியும் போன்றவர்கள்தான் என்று கூறி நட்பு உணர்வை வெளிப்படுத்துகிறார்.
தன்னலமற்ற பரந்த உள்ளம்:
  • பிறவிப் பிணி தீர்க்கும் அருமருந்தான திருமந்திரத்தை கற்றபின் தன்னலம் கருதி அதனைத் தனக்காக வைத்துக்கொள்ளாமல் மக்களுக்கும் வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்பியவர்.
  • குருவின் கட்டளையை மீறினால் நரகம் வந்து சேரும் என்று தெரிந்தபோதும் மக்களுக்குத் திருமந்திரத்தை வெளிப்படுத்துகிறார்.
  • திருமந்திரத் திருவருளை வெளியில் சொன்னால் நான் மட்டுமே நரகம் செல்வேன். இத்தனை மக்கள் நரகத்தில் இருந்து விடுபடுவார்கள் அல்லவா! என்ற பரந்த எண்ணம் கொண்டிருந்தார்.
  • அதனால் மக்கள் கூட்டத்தை அழைத்து பிறவிப் பிணியறுக்கும் திருமந்திரத்தைக் கற்றுக்கொடுத்து மக்களை நரகில் இருந்து காத்த மகிழ்ச்சியைப் பெற்றார்.
  • பரந்த மனப்பான்மை பெற்றிருந்தபடியால் பூரணரால் “எம் பெருமான்” என்று அழைக்கப் பெற்றார்.
  • அது மட்டுமின்றி பூரணர் தன் மகன் சௌம்ய நாராயணனையும் அடைக்கலமாக அளித்தார்.
  • இவையே இராமானுசர் நாடகம் மூலம் நாம் உணர்ந்து கொள்ளும் தலைமைப் பாத்திரமான “இராமானுசரின் பண்புகள்” ஆகும்.
முடிவுரை:
  • தன்னலம் அகற்றி, பொதுநலம் போற்றுபவரே உண்மையான மகான்களாக முடியும் என்பதற்கு இராமானுசரே சான்றாக விளங்குகிறார் எனலாம்.
2.‘என் மக்கள் அனைவர்க்கும் நலம் கிட்டும். எல்லாரும் நலமுடன்’ என்ற இராமானுசரின் கூற்றுக்கு
ஏற்ப தன்னலமற்ற பண்புகளைக் கொண்டவர்களாக நாம் வாழ வேண்டும் என்பதனை நீங்கள் அறிந்த எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
Answer:

குறிப்புச் சட்டம் ப்பச் சட்டம் –

  • முன்னுரை
  • அன்னை தெரசா
  • விவேகானந்தர்
  • அப்துல்கலாம்
  • முடிவுரை
முன்னுரை:
  • நாளுக்கு ஒருமுறை மலர்வது செண்பகம். ஆண்டுக்கு ஒரு முறை மலர்வது பிரம்ம கமலம். பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறை மலர்வது குறிஞ்சி. தலைமுறைக்கு ஒருமுறை மட்டுமே மலர்வது மூங்கில். அதைப்போல் நம் தலைமுறைக்கு ஒருமுறை பிறப்பவர்கள் ஞானிகள். அவ்வாறு உதித்தவர்தான் இராமானுசர். அவர் தனக்கு மட்டுமே வீடுபேறு கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர் மத்தியில் எல்லாருக்கும் நலம் கிட்ட வேண்டும் என்று எண்ணி, வாழ்ந்து காட்டிய அவரது வாழ்க்கை போற்றுத்தற்குரியது.

அன்னை தெரசா:
  • அயல்நாட்டுப் பெண்மணியாக இருந்தாலும், இந்திய நாட்டுக் குடிமகளாகவே வாழ்ந்தவர் அன்னை தெரசா. அவர் நோய்வாய்ப்பட்ட மக்களுக்கும், ஆதரவற்ற எளியோருக்கும் தனது களங்கமில்லாத சேவையால் பெருந்தொண்டாற்றினார்.
“காண்கின்ற மனிதர்களிடத்தில் அன்பு கூறாவிட்டால்
காணாத இறைவனிடத்தில் எப்படி அன்பு கூறுவாய்”

என்ற விவிலியத்தின் வார்த்தைகளைக் கொள்கையாகக் கொண்டு “உதவும் கரங்கள் ஜெபிக்கும் உதடுகளைவிட மேலானவை” என்று கூறி தன்னலமற்ற உதவிகளை அன்னை தெரசா செய்தமையால் ஒரு கவிஞர் தனது கவிதையில்,

“நீ கருவுற்றிருந்தால் ஒரு குழந்தைக்குத் தாயாகி இருப்பாய்…
கருணையுற்றதால் உலகத்திற்கே தாயாகிவிட்டாய்”
என்று எழுதினார்.

விவேகானந்தர்:
  • அயல்நாட்டிலும் ஆகச்சிறந்த ஆன்மீக உரையால் இந்தியப் பண்பாட்டை உலகறிய செய்த மகான் விவேகானந்தர்.
“எவர் ஒருவருடைய நெஞ்சு ஏழை மக்களுக்காகத்
துயரத்தில் அழுமோ, அவரையே நான் மகாத்மா என்பேன்’
என்று குறிப்பிடும் விவேகானந்தர்,

“சுயநலம் என்பதை அறவே தூர எறிந்துவிட்டு
வேலை செய்யுங்கள்”
என்கிறார்.
அப்துல்கலாம்:
  • தன்னலமற்ற தனிப்பெரும் தலைவராக வாழ்ந்து மறைந்தவர் அப்துல் கலாம்.
“நம்மை அனைவரும் நினைவு கூரும் வகையில்
ஒரு பெரும் செல்வத்தை நம் வருங்கால
சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்லும்
உரிமையும் பொறுப்பும் நம் அனைவருக்கும் உள்ளது”

என்று குறிப்பிடும் கலாம், என்ன செய்வாய்’ என எதிர்பார்க்கும் இளைஞனைத் தான் பிறர்க்கு என்னவெல்லாம் செய்யலாமென மாற்றும் கல்வி முறைதான் ஒரு நாட்டின் எதிர்காலத்தலைவர்களை உருவாக்கும்’ என தன்னலமற்றவர்களை உருவாக்குவதற்கான வழிகாட்டுதலையும் வழங்குகிறார்.

முடிவுரை:
  • தான் மட்டும் வாழ வேண்டும் என்று நினைப்பவர் மத்தியில் பிறரையும் வாழ வைப்பதற்கான நெறிமுறைகளை அளிப்பதாக பலரின் கூற்றுகளையும் சான்றாகக் கூறிட இயலும். ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்னும் திருமூலரின் வாக்கினுக்கேற்ப வாழ்வை அமைத்துக் கொண்டால் உலகில் அன்பே நிலைத்து நிற்கும். பரிதி முன் பனி காணாமல் போவதைப் போல் பகை இவ்வுலகைவிட்டு நீங்கிவிடும்.

கற்பவை கற்றபின்

1.கருத்துகளை உரைநடையாகப் படிப்பதிலும் நாடகமாகப் படிப்பதிலும் நீங்கள் உணரும் வேறுபாடுகள் குறித்துக் கலந்துரையாடுக.
Answer:
கலந்துரையாடல்
கலந்துரையாடுபவர்கள்: மீனாட்சி, கயல்விழி, கண்ணன்.
மீனாட்சி : அனைவருக்கும் வணக்கம்! இன்றைய பொழுதில் அனைவரும் ஒன்றாய் உள்ளோம். இப்பொழுதை நல்லமுறையில் கழிக்க வேண்டும்.
கயல்விழி : நாம் இன்று கல்வி தொடர்பான செய்திகளைக் கலந்துரையாடலாமா?
மீனாட்சி : இராமானுசரைப்பற்றி கலந்துரையாடலாமா?
கயல்விழி : ஓ… கலந்துரையாடலாமே!
கண்ணன் : நாம் இன்று நாடகமாக இராமானுசரைப் பற்றிப் படித்தோம் அல்லவா…
மீனாட்சி : ஆம்! அதற்கென்ன…
கண்ணன் : உரைநடையைப் படிப்பதற்கும் நாடகத்தைப் படிப்பதற்கும் உள்ள வேறுபாடு குறித்துப் பேசுவோமா…
கயல்விழி : ஓ தாராளமாக… நானே தொடங்கி வைக்கிறேன். உரைநடை நீண்ட வாக்கிய அமைப்பு உடையதாக இருக்கும். எனவே படிப்பதற்குச் சலிப்பாக இருக்கும்.
மீனாட்சி : சரியாகச் சொன்னாய். நாடகமாகப் படிக்கும் போது கதைப்போக்கில் அமைந்து விடுகிறது.
கண்ணன் : கதைப்போக்கில் அமைவதால் படிப்பதற்கு ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.
கயல்விழி : உரையாடல் வடிவில் கருத்துகள் இருப்பதால் நேரில் பேசிக் கேட்பது போல் உள்ளது.
மீனாட்சி : கதைமாந்தர்கள் பெயர் நினைவுக்கு வரும்போதே அவர்கள் கூறும் கருத்தும் நினைவுக்கு வந்துவிடும்.
கயல்விழி : ஆம் மீனாட்சி. உரைநடையை நாம்தான் சொல்லிச் சொல்லிப் பார்த்து நினைவுக்குக் கொண்டு வரவேண்டும்.
கண்ணன் : ஆம் தோழிகளே! நம் கலந்துரையாடலில் இருந்து ஒரு கருத்தை உரைநடையில் படிப்பதை விட நாடக வடிவில் படிப்பதே எளிது என்பதை உணர்ந்து கொண்டோம் அல்லவா!

2.இந்நாடகம் வெளிப்படுத்துவது போன்று இராமானுசர் வாழ்க்கை நிகழ்வுகள் சிலவற்றைத் தொகுத்து அவை குறித்த உங்களின் கருத்துகளை எடுத்துரைக்க.
Answer:
  • இராமானுசர் தினமும் ஆற்றில் குளிக்கப் போகுமுன் முதலியாண்டான் என்ற அந்தணச் சீடரின் கரம் பற்றி நீராடப் புகுவார்.
  • நீராடி முடித்த பின் அந்தணர் அல்லா “உறங்காவில்லி தாசரின்’ கரம் பற்றி எழுவார்.
  • இது வர்ணாசிரம் தருமத்துக்கு எதிரானது என்றும், பிராமணன் கீழ்க் குலத்தோனைத் தொடுவது தவறல்லவா?
  • இது நீர் அறியாததா? இதற்கான காரணம் என்ன என்றனர் பிற சீடர்கள்.
  • இராமானுசர் பின்வருமாறு பதில் கூறினாராம்:
  • எத்தனை தான் ஞானம் பெற்றாலும், உயர்குலத்தில் பிறந்தோம் என்ற எண்ணம் எனக்குள் ஆணவமாக இருந்தால் இறைநிலை அடைய முடியாமல் போய்விடும் அல்லவா?
  • எனவே இப்பிறவியின் அகங்காரத்தைப் போக்க அகங்காரமே சிறிதும் இல்லாத இந்த அடியவனைத் தீண்டி என்னைச் சுத்தம் செய்து கொள்கிறேன் என்றார்.
  • “சாதியை ஒழிப்போம், ஆன்மீகத்தால் சமத்துவம் வளர்ப்போம், உயர்வு தாழ்வு நீக்குவோம் என்று வெறும் வாய்ப்பேச்சு பேசாதவராய்த் தன் செய்கையால் வாழ்ந்து காட்டியவர் இராமானுசர். அவர் வழியை நாமும் பின்பற்றுவோம்.



************THE END OF 8.4************

8.5. பா வகை அலகிடல்
10th Tamil Guide unit 8 Answers TN Students Guide

யாப்போசை தரும் பாவோசை

  1. செப்பலோசை - இருவர் உரையாடுவது போன்ற ஓசை
  2. அகவலோசை ஒருவர் பேசுதல் போன்ற சொற்பொழிவாற்றுவது போன்ற ஓசை
  3.  துள்ளலோசை - கன்று துள்ளினாற்போலச் சீர்தோறுந் துள்ளிவரும் ஓசை. அதாவது தாழ்ந்து உயர்ந்து வருவது.
  4. தூங்கலோசை-சீர்தோறுந் துள்ளாது தூங்கிவரும் ஓசை.தாழ்ந்தே வருவது.

10th Tamil Guide unit 8 Answers TN Students Guide


யாப்பதிகாரம், புலவர் குழந்தைI. பலவுள் தெரிக.

சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம் ……….
  1. அகவற்பா
  2. வெண்பா
  3. வஞ்சிப்பா
  4. கலிப்பா
விடை : அகவற்பா

II. குறு வினா

1. குறள்வெண்பாவின் இலக்கணத்தை எழுதி எடுத்துக்காட்டுத் தருக.
  • குறள் வெண்பா என்பது வெண்பாவின் பொது இலக்கணம் அமையப் பெற்று இரண்டு அடிகளாய் வரும்
  • முதலடி நான்கு சீராகவும், இரண்டாம் அடி மூன்று சீராகவும் வரும்
எ.கா.:-
கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
2. வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை தூங்கல் ஓசை ஆகும். துள்ளல் ஓசை கலிப்பாவுக்கு உரியது. இத்தொடர்களை ஒரே தொடராக இணைத்து எழுதுக.
  • வஞ்சிப்பா தூங்கல் ஓசையும், கலிப்பா துள்ளல் ஓசையும் பெற்று வரும்

III. சிறு வினா

ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக.
  • அகவல் ஓசை பெற்று வரும்.
  • ஈரசைச் சீர் மிகுதியாகவும், காய்ச்சீர் குறைவாகவும் பயின்று வரும்.
  • ஆசிரியத் தளை மிகுதியாகவும் வெண்டளை, கலித்தளை ஆகியவை விரவியும் வரும்.
  • மூன்று அடி முதல் எழுதுபவர் மனநிலைக்கேற்ப அமையும்.
  • ஏகாரத்தில் முடித்தல் சிறப்பு.

பா – வகை, அலகிடல் – கூடுதல் வினாக்கள்

I. குறு வினா

1. யாப்பின் உறுப்புகள் யாவை?
  • எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்று ஆறு உறுப்புகளைக் கொண்டது யாப்பு.
2. பாக்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
  • பாக்கள் நான்கு வகைப்படும். அவை
  • வெண்பா
  • ஆசிரியப்பா
  • கலிப்பா
  • வஞ்சிப்பா
3. பாவின் ஓசை எத்தனை வகைபப்படும்? அவை யாவை?
  • பாவின் ஓசை நான்கு வகைபப்படும். அவை
  • செப்பல்
  • அகவல்
  • துள்ளல்
  • தூங்கல்
4. வெண்பாக்கள் எத்தனை வகைகள் உள்ளன?
  • குறள் வெண்பா
  • சிந்தியல் வெண்பா
  • நேரிசை வெண்பா
  • இன்னிசை வெண்பா,
  • பஃறொடை வெண்பாஎன்று ஐந்துவகை வெண்பாக்கள் உள்ளன.
5. ஆசிரியப்பாக்கள் எத்தனை வகைகள் உள்ளன?
  • நேரிசை ஆசிரியப்பா
  • இணைக்குறள் ஆசிரியப்பா
  • நிலைமண்டில ஆசிரியப்பா
  • அடிமறி மண்டில ஆசிரியப்பா என்று நான்கு வகை ஆசிரியப்பாக்கள் உள்ளன.
6. அலகிடுதல் என்றால் என்ன?
  • அலகிடுதல் என்பது சீரைப் பிரித்து அசை பார்த்து, அசைக்கேற்ற வாய்ப்பாடு காணுதல் ஆகும்.
7. ஓரசைச் சீர்களை எழுதுக
  • நேர் – நாள்
  • நிரை – மலர்
  • நேர்பு – காசு
  • நிரைபு – பிறப்பு
8. ஈரசைச் சீர்களை எழுதுக
  • நேர் நேர் – தேமா
  • நிரை நேர் – புளிமா
  • நிரை நிரை – கருவிளம்
  • நேர் நிரை – கூவிளம்

II. சிறு வினா

1. யாப்போசை தரும் பாவோசைகள் பற்றி புலவர் குழந்தை குறிப்பிடுவன பற்றி எழுதுக
செப்பல் ஓசை:-
  • இருவர் உரியாடுவது போன்ற ஓசை.
அகவல் ஓசை:-
  • ஒருவர் பேசுதல் போன்ற – சொற்பொழிவாற்றுவது போன்ற ஓசை
துள்ளல் ஓசை:-
  • கன்று துள்ளினாற்போலச் சீர்தோறுந் துள்ளிவரும் ஓசை. அதாவது தாழ்ந்து வரும்
தூங்கல் ஓசை:-
  • சீர்தோறுந் துள்ளாது தூங்கி வரும் ஓசை. தாழ்ந்தே வரும்.
2. வெண்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக.
  • செப்பல் ஓசை பெற்று வரும்.
  • ஈற்றடி முச்சீராகவும், ஏனைய அடிகள் நாற்சீராகவும் வரும். இயற்சீர், வெண்சீர் மட்டுமே பயின்று வரும்.
  • இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை மட்டும் பயின்று வரும்.
  • இரண்டடி முதல் பன்னிரண்டு அடி வரை அமையும். (கலிவெண்பா பதின்மூன்று அடிக்கு மேற்பட்டு வரும்.)
  • ஈற்றுச் சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்பாட்டில் முடியும்.
3. பாவின் ஓசைகளை விவரி
செப்பல் ஓசை:-
  • செப்பலோசை வெண்பாவிற்குரியது. அறம் கூறும், குறளும் நாலடியாரும் வெண்பாவில் அமைந்துள்ளன.
அகவல் ஓசை:-
  • அகவல் ஓசை ஆசிரியப்பாவுக்கு உரியது. இலக்கணக் கட்டுக்கோப்புக் குறைவாகவும் கவிதை வெளியீட்டுக்கு எளிதாகவும் இருப்பது அகவற்பா என்னும் ஆசிரியப்பா.
  • சங்க இலக்கியங்களும் சிலப்பதிகாரம், மணிமேகலை , பெருங்கதை ஆகிய காப்பியங்களும் அகவற்பாவில் அமைந்தவை.
துள்ளல் ஓசை:-
  • செய்யுளில் இடையிடைேய உயர்ந்து வருவது துள்ளல் ஓசை. இது கலிப்பாவுக்கு உரியது.
தூங்கல் ஓசை:-
  • தூங்கல் ஓசை வஞ்சிப்பாவுக்கு உரியது. முன் வகுப்பில் கற்ற ஏழு வகைத் தளைகளையும் நீங்கள் நினைவுகூர்தல் நல்லது.
4. மூவசைச் சீர்களை எழுதுக

நேர்,நேர்,நேர் தேமாங்காய்
நிரை,நேர்,நேர் புளிமாங்காய்
நிரை,நிரை,நேர் கருவிளங்காய்
நேர்,நிரை,நேர் கூவிளங்காய்
நேர்,நேர்,நிரை தேமாங்கனி
நிரை,நேர்,நிரை புளிமாங்கனி
நிரை,நிரை,நிரை கருவிளங்கனி
நேர்,நிரை,நிரை கூவிளங்கனி
மொழியை ஆள்வோம்!

I. மொழிபெயர்க்க.

Once upon a time there were two beggars in Rome. The first beggar used to cry in the streets of the city, “He is helped whom God helps”. The Second beggar used to cry, “He is helped who the king helps”. This was repeated by them everyday. The Emperor of Rome heard it so often that he decided to help the beggar who popularized him in the streets of Rome. He ordered a loaf of bread to be baked and filled with pieces of gold. When the beggar felt the heavy weight of the bread, he sold it to his friend as soon as he met him. The latter carried it home. When he cut the loaf of bread he found sparkling pieces of gold. Thanking God, he stopped begging from that day. But the other continued to beg through the city. Puzzled by the beggar’s behaviour, the Emperor summoned him to his presence and asked him, “What have you done with the loaf of bread that I had sent you lately?” The man replied, “I sold it to my friend, because it was heavy and did not seem well baked” Then the Emperor said, “Truly he whom God helps is helped indeed,” and turned the beggar out of his palace.

முன்பொருநாள் ரோம் நகரில் இரண்ட பிச்சைக்காரார்கள் இருந்தனர். முதல் பிச்சைக்காரன் கடவுள் எப்படியாவது யார் மூலமாவது எனக்கு உதவுவார் என்று கண்ணீர் விட்டான். இரண்டாம் பிச்சைக்காரன் மன்னனைப் புகழந்து பாடினால் மன்னன் காப்பான் என்றான். தினமும் இருவரும் இப்படியே சொல்லிக் கொண்டு இருந்தார்கள்.

ரோம் அரசன் தன்னைப் பற்றி பேசிப் புகழந்து எப்படியாவது தான் பாதுகாப்பேன் என்று நம்புகிற பிச்சைக்காரனுக்கு உதவ விரும்பினார்.
நீளமான ரொட்டிப் பொட்டலத்தில், ரொட்டித் துண்டுகள் நடுவே சில பொற்காசுகளை வைத்து கொடுத்தான்.

இரண்டாம் பிச்சைக்காரன் ரொட்டித்துண்டுகள் கனமாக இருக்கிறது விற்றால் பணம் சம்பாதிக்கலாம் என்று முதல் பிச்சைக்காரனான நண்பனிடம் விற்றுவிடுகிறான்.

இப்படியே ரொட்டித் துண்டை தினமும் விற்கிறான். அதனை வாங்கும் முதலாம் பிச்சைக்காரன் ரொட்டித்துண்டை வெண்டிப்பார்த்தால் தினமும் பொற்காசுகள் மின்னின.

தினமும் கடவுளுக்கு நன்றி சொல்லி பொற்காசுகளை எடுத்து வைத்து சேர்த்து வைத்தான். பிச்சை எடுப்பதை நிறுத்தி விடுகிறான்.

இரண்டாம் பிச்சைக்காரன் தொடர்ந்து வீதியில் பிச்சை எடுத்துக்கொண்டே இருக்கிறான். மன்னன் அவனை அழைத்து நான் கொடுத்த ரொட்டி பொட்டலங்களை என்ன செய்தாய் என்று கேட்டார்.

அது எடுத்து செல்ல கடினமாக இருந்தபடியால் என் பிச்சைக்கார நண்பனிடம் அதனை விற்று விட்டேன் என்றான்.

மன்னர் தனக்குள் நினைத்துக் கொண்டார். “கடவுள் தன்னைத் தேடுபவர்களுக்கு உண்மையிலே யார் மூலமாவது உதவுகிறார்” இரண்டாம் பிச்சைக்காரனிடம் திரும்பி, ‘சரி நீ போகலாம்’ என்று அரண்மனையில் இருந்து வெளியேறச் சொன்னார்.

II. மரபுத் தொடருக்கான பொருளறிந்து தொடரில் அமைத்து எழுதுக.

1. மனக்கோட்டை
  • முயற்சி இல்லாமல் முன்னேறலாம் என சிலர் மனக்கோட்டை கட்டுகிறார்கள்.
2. கண்ணும் கருத்தும்
  • கண்ணும் கருத்தாய் கவனமுடன் படிக்க வேண்டும்.
3. அள்ளி இறைத்தல்
  • பணத்தைக் கணக்குப் பார்க்காமல் அள்ளி இறைத்தல் நம்மை வறுமை நிலைக்கு தள்ளவிடும்.
4. ஆறப்போடுதல்
  • பிரச்சனைகளை பெரிதாக்கமல் ஆறப்போடுதல் நல்லது

III. பின்வரும் உரையாடலில் உள்ள பேச்சு வழக்கினை எழுத்து வழக்காக மாற்றுக.

“தம்பீ? எங்க நிக்கிறே?”

“நீங்க சொன்ன எடத்துலதாண்ணே! எதிர்த்தாப்புல ஒரு டீ ஸ்டால் இருக்குது.”

“அங்ஙனக்குள்ளயே டீ சாப்டுட்டு, பேப்பரப் படிச்சிக்கிட்டு இரு… நா வெரசா வந்துருவேன்”

“அண்ணே! சம்முவத்தையும் கூட்டிக்கிட்டு வாங்கண்ணே! அவனெப் பாத்தே ரொம்ப நாளாச்சு!”

“அவம்பாட்டியோட வெளியூர் போயிருக்கான். உங்கூருக்கே அவனெக் கூட்டிக்கிட்டு வர்றேன்.”

“ரொம்பச் சின்ன வயசுல பார்த்ததுண்ணே! அப்பம் அவனுக்கு மூணு வயசு இருக்கும்!”

“இப்ப ஒசரமா வளந்துட்டான்! ஒனக்கு அடையாளமே தெரியாது! ஊருக்கு எங்கூட வருவாம்
பாரேன்! சரி, போனை வையி. நாங் கெளம்பிட்டேன்…”

“சரிங்கண்ண

“தம்பி எங்கே நிற்கிறாய்?”

“நீங்கள் சொன்ன இடத்தில் தான் அண்ணா! எதிர்புறத்தில் ஒரு தேநீர் கடை இருக்கிறது”

“அங்கேயே தேநீர் சாப்பிட்டுவிட்டு, செய்தித்தாள் படித்துக்கொண்டிரு, நான் விரைாக வந்து விடுகிறேன்”

“அண்ணா! சண்முகத்தையும் கூட்டிக்கொண்டு வாருங்கள் அண்ணா! அவனைப் பார்த்து அதிக நாடகளாகிவிட்டன.”

“அவன் பாட்டியுடன் வெளியூர் சென்றிருக்கிறான். உங்கள் ஊருக்கே அவனைக் கூடிக்கொண்டு வருகிறேன்.”

“நிறைய நாளுக்கு முன்னால் சின்ன வயதில் பார்த்தது அண்ணா. அப்போது அவனுக்கு மூன்று வயது இருக்கும்”

“இப்போது உயரமாக வளர்நது விட்டான். உனக்கு அடையாளமே தெரியாது. ஊருக்கு என்னுடன் வருவான். பார்த்துக்கொள். சரி. தொலைபேசியை வைத்துவிடு. நான் புறப்படுகிறேன்.”

“சரி அண்ணா!”

 மொழியோடு விளையாடு….! 

I. கண்டுபிடித்து எழுதுக

ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, பத்து ஆகிய எண்ணுப் பெயர்கள் இடம் பெறும் திருக்குறளைக் கண்டுபிடித்து எழுதுக…

ஒன்று
  • கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
  • ஒன்றுநன்று உள்ளக் கெடும்
இரண்டு
  • தானம் தவமிரண்டும் தங்கா வியனுலம்
  • வானம் வழங்காது எனின்
மூன்று
  • காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
  • நாமம் கெடக்கெடும் நோய்
நான்கு
  • அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
  • இழுக்காறு இயன்றது அறம்
ஐந்து
  • பொறிவாயில் ஐந்துவித்தான் பொய்நீர் ஒழுக்க
  • நெறிநின்றார் நீடு வாழ்வார்
ஆறு
  • படைகுடி கூழ்அமைச்சு நட்பரன் ஆறும்
  • உடையான் அரசருள் ஏறு
ஏழு
  • எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
  • பண்புடை மக்கட் பெறின்
எட்டு
  • கோயில் பொறியில் குணமலேவே எண்குணத்தான்
  • தாளை வணங்காத் தலை
பத்து
  • நைகவகைய ராகிய நட்பின் பகைவரால்
  • பத்தடுத்த கோடி உறும்

II. சொற்களைப் பிரித்துப் பார்த்துப் பொருள் தருக.

1. கானடை
  • கான் + அடை – காட்டைச் சேர்
  • கான் + நடை – காட்டுக்கு நடத்தல்
  • கால் + நடை – காலால் நடத்தல்
2. வருந்தாமரை
  • வரும் + தாமரை – தாமரை மலர்
  • வரும் + தா + மரை – தாவும் மான் வருகிறது
  • வருந்தா + மரை – துன்புறாத மான்
3. பிண்ணாக்கு
  • பிண்ணாக்கு – எள், கடலை ஆட்டும்போது கிடைப்பது
  • பிள் + நாக்கு – பிளவுபட்ட நாக்கு
4. பலகையொலி
  • பலகை + ஒலி – பலகையால் ஏற்படும் ஒலி
  • பல + கை + ஒலி – பல கைகள் தட்டும் ஒலி

 செயல்திட்டம்… 

 I. அகராதியில் காண்க

ஆசுகவி
  • கொடுத்தப் பொருளை உடனே பாடும் பாட்டு
  • அப்பாடலைப் பாடும் புலவன்
மதுரகவி
  • இனிமை பெருகப் பாடும் கவி
  • சொற்சுவை, பொருட்சுவை நிரம்பிய பாட்டு
சித்திரகவி
  • சித்திரத்தில் அமைத்தற்கு ஏற்ப பாடும் இறைக்கவி
  • 21 நயங்களில் கவிதை ஏற்றுபவர்
வித்தாரகவி
  • விரித்துப் பாடப் பெறும் பாட்டு
  • விரிவாகப் பாடும் நூல்

II. கலைச்சொல் அறிவோம்

  • Belief – நம்பிக்கை
  • Philosopher – மெய்யியலாளர்
  • Renaissance – மறுமலர்ச்சி க்ஷ
  • Revivalism – மீட்டுருவாக்கம்

நயம் பாராட்டுக.

கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
    குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே 
    உகந்ததண்ணீர் இடைடிலர்ந்த சுகந்தமண மலரே 
மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே 
    மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே 
ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில் 
    ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- வள்ளலார்

Post a Comment

புதியது பழையவை