12th Tamil Unit 4 Guide | Notesஇயல்: 4.3 இடையீடு
TN Students Guide
பாடநூல் வினாக்கள்
குறுவினா
12th Tamil Guide | Unit 4 Book Back Answers
12th Standard Tamil Guide. 12th Tamil Guide Unit 4 Book Back Question and Answers. and also additional question and answers.
1. ‘இடையீடு’ – எவற்றைக் குறியீடாகக் குறிப்பிடுகிறது?
Answer:
இடையீடு என்ற கவிதை, கவிஞரின் கவிதை சார்ந்த எண்ணம், அதனை வெளிப்படுத்தும் வண் ணம், எழுதப்பட்ட கவிதையை உள்வாங்கும் வாசகனின் மனநிலை போன்றவற்றைக் குறியீடாகக் குறிப்பிடுகிறது.
சிறுவினா
1. ‘மூன்றான காலம் போல் ஒன்று” எவை? ஏன்? விளக்குக.
Answer:
மூன்றான காலம் போல் ஒன்று என்பது எண்ணம், வெளியீடு, கேட்டல்.
எண்ண ம் :
நம் மனதில் உள்ளவையே எண்ணம்.
வெளியீடு :
நம் மனதில் எண்ணியதை வெளியிடுவது வெளியீடு.
கேட்டல் :
- நாம் வெளியிட்டதை கருத்துவேறுபாடின்றி கேட்பது கேட்டல்.
- எண்ணம் மொழியாக உருவாக்கப்பட்டு வெளிப்படுத்தி கேட்கிறவர்கள் சொல்லுகின்ற கருத்துகளைப் புரிதல். இவற்றில் மாற்றமடையலாம்.
- எப்படி மூன்று காலமும் ஒரே நேரத்தில் கூற முடியாதோ அப்படியே இந்த மூன்றும் ஒன்றாக வருவதில்லை .
கற்பவை கற்றபின்
1. இதழ்களில் வெளிவந்துள்ள கவிதைகளில் இரண்டினைத் திரட்டி, வகுப்பறையில் படித்துக் காட்டி, அவை கவிஞனின் மனநிலையை எவ்விதம் வெளிப்படுத்துகின்றன என்பதை விளக்கவும்.
Answer:
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. கவிஞர் சி. மணியின் கவிதைகள் 1959-ஆம் ஆண்டு முதல் எந்த இதழில் வெளிவந்தது?
அ) விளக்கு
ஆ) எழுத்து
இ) நடை
ஈ) ஒளிச்சேர்க்கை
Answer:
ஆ) எழுத்து
2. கவிஞர் சி. மணி நடத்தி வந்த சிற்றிதழ்
அ) நடை
ஆ) விளக்கு
இ) யாப்பும் கவிதையும்
ஈ) ஒளிச்சேர்க்கை
Answer:
அ) நடை
3. கவிஞர் சி. மணி வெளியிட்ட கவிதைத் தொகுப்பில் குறிப்பிடத்தக்கவை
அ) ஒளிச்சேர்க்கை
ஆ) இதுவரை
இ) நடை
ஈ) எழுத்து
Answer:
அ) ஒளிச்சேர்க்கை
4. கவிஞர் சி. மணி மொழிப்பெயர்த்த சீன மெய்யியல் நூல்
அ) தாவோ ஜிஜிங்
ஆ) தாவோ லி ஜிங்
இ) தாவோதே ஜிங்
ஈ) தாவோ ஸி ஜிங்
Answer:
இ) தாவோதே ஜிங்
5. கவிஞர் சி. மணி புதுக்கவிதையில் எந்தச் சுவையை மிகுதியாகப் பயன்படுத்துவார்?
அ) உவகை
ஆ) மருட்கை
இ) இளிவரல்
ஈ) அங்கதம்
Answer:
ஈ) அங்கதம்
6. கவிஞர் சி. மணி இருத்தலின் வெறுமையை எப்படிக் சொன்னவர்?
அ) அழுகையும் அங்கலாய்ப்பும்
ஆ) நகையும் உவமையும்
இ) சிரிப்பும் கசப்பும்
ஈ) பயமும் துக்கமும்
Answer:
இ) சிரிப்பும் கசப்பும்
7. கூற்று 1 : குதிரை வரையக் குதிரை வராது ; கழுதையும் வரலாம் இரண்டும் கலக்கலாம்.
கூற்று 2 : கனியின் இனிமை கனியில் மட்டுமில்லை ; சுவைப்போன் பசியை, சுவை முடிச்சைச் சார்ந்தது.
அ) கூற்று இரண்டும் தவறு
ஆ) கூற்று 1 தவறு 2 சரி
இ) கூற்று 1 சரி 2 தவறு
ஈ) கூற்று இரண்டும் சரி
Answer:
ஈ) கூற்று இரண்டும் சரி
8. கூற்று 1 : சொல்ல விரும்பியதெல்லாம் எழுத்தில் வருவதில்லை.
கூற்று 2 : எலிக்குப் பொறிவைத்தால் விரலும் விழுவதுண்டு.
அ) கூற்று 1 சரி 2 தவறு
ஆ) கூற்று 1 தவறு 2 சரி
இ) கூற்று இரண்டும் தவறு
ஈ) கூற்று இரண்டும் சரி
Answer:
ஆ) கூற்று 1 தவறு 2 சரி
9. கூற்று : கனியின் இனிமை கனியில் மட்டுமில்லை .
காரணம் : கனியை உண்போனின் பசியைப் பொறுத்ததே கனியின் சுவை.
அ) கூற்று சரி காரணம் சரி
ஆ) கூற்று தவறு காரணம் சரி
இ) கூற்று சரி காரணம் தவறு
ஈ) கூற்று தவறு காரணம் தவறு
Answer:
அ) கூற்று சரி காரணம் சரி
10. சரியானதைத் தேர்க.
அ) குதிரை வரைய யானையும் வரலாம் இரண்டும் கலக்கலாம்.
ஆ) கனியின் இனிமை அதன் மறத்தால் அறியப்படும்.
இ) சொல்ல வந்தது சொல்லில் வந்தாலும் கேட்பதில் சிக்கல்.
ஈ) நீர்த்தேடி அலையும் போது நீர் கிடைக்கும்.
Answer:
இ) சொல்ல வந்தது சொல்லில் வந்தாலும் கேட்பதில் சிக்கல்.
11. சரியானதைத் தேர்க.
அ) கவிஞர் சி. மணி அவர்கள் புதுக்கவிதையின் அங்கதத்தை பயன்படுத்தவில்லை .
ஆ) இருத்தலின் வெறுமையைக் கவிஞர் சி மணி சிரிப்பும் கசப்புமாகச் சொன்னார்.
இ) கவிஞர் சி. மணியின் ஒளிச்சேர்க்கை கவிதைத் தொகுப்புக் குறிப்பிடத்தக்க ஒன்று.
ஈ) கற்பித்தல், கற்றல் இரண்டிற்குமிடையே இடையீடுகள் நகர்வதில்லை.
Answer:
இ) கவிஞர் சி. மணியின் ஒளிச்சேர்க்கை கவிதைத் தொகுப்புக் குறிப்பிடத்தக்க ஒன்று.
12. பொருத்தாதைத் தேர்க.
அ) கனியின் இனிமை சுவைப்போன் பசியை சுவை முடிச்சைச் சார்ந்தது.
ஆ) சொல்ல வந்தது சொல்லில் வந்தாலும், கேட்பதில் சிக்கல் உண்டு.
இ) நீர்தேடி அலையும் போது இளநீரும் கிடைக்கும்.
ஈ) எத்தனையோ ஏமாற்றங்கள் குறிதவறிய மாற்றங்கள் மனம் புழுங்கப் பலவுண்டு.
Answer:
ஈ) எத்தனையோ ஏமாற்றங்கள் குறிதவறிய மாற்றங்கள் மனம் புழுங்கப் பலவுண்டு.
13. பொருத்தாதைத் தேர்க.
அ) கவிஞர். சி.மணி, வே.மாலி, செல்வம் என்னும் புனைப்பெயர்களில் எழுதியுள்ளார்.
ஆ) கவிஞர். சி.மணி, ஆசான் கவிதை விருது பெற்றவர்.
இ) கவிஞர். சி.மணி, வரும்போகும்’ என்னும் சிற்றிதழை நடத்திவந்தார்.
ஈ) கவிஞர். சி.மணி எழுத்து இதழில் எழுதியவர்.
Answer:
இ) கவிஞர். சி.மணி, வரும்போகும்’ என்னும் சிற்றிதழை நடத்திவந்தார்.
14. பொருத்தி,
அ) 4, 2, 1, 3
ஆ) 4, 3, 2, 1
இ) 4, 2, 3, 1
ஈ) 4, 1, 3, 2
Answer:
ஈ) 4, 1, 3, 2
15. சி. மணியின் (சி பழனிச்சாமி) இடையீடு என்னும் கவிதை………….. தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
அ) யாப்பும் கவிதையும்
ஆ) வரும் போகும்
இ) ஒளிச்சேர்க்கை
ஈ) இதுவரை
Answer:
ஈ) இதுவரை
16. சி. மணியின் கவிதைகள் எழுத்து என்னும் இதழில் வெளிவரத் தொடங்கிய ஆண்டு
அ) 1953
ஆ) 1956
இ) 1959
ஈ) 1962
Answer:
ஈ) 1962
17. சி. மணி படைத்த இலக்கணம் பற்றிய நூல்
அ) யாப்பும் கவிதையும்
ஆ) அணியும் கவிதையும்
இ) எழுத்தும் கவிதையும்
ஈ) சொல்லும் கவிதையும்
Answer:
அ) யாப்பும் கவிதையும்
18. ‘வரும் போகும்’, ‘ஒளிச்சேர்க்கை ‘ என்னும் கவிதைத் தொகுப்புகளின் ஆசிரியர்
அ) வேணுகோபாலன்
ஆ) இரா.மீனாட்சி
இ) சி.மணி
ஈ) ஆத்மாநாம்
Answer:
இ) சி.மணி
19. சி. மணி, பேராசிரியராகப் பணியாற்றிய துறை
அ) தமிழ்
ஆ) ஆங்கிலம்
இ) கணிதம்
ஈ) இயற்பியல்
Answer:
ஆ) ஆங்கிலம்
20. ‘தாவோ தே ஜிங்’ என்னும் சீன மெய்யியல் நூலைத் தமிழில் மொழிபெயர்த்தவர்
அ) கவிமணி
ஆ) சி. மணி
இ) நாகூர் ரூமி
ஈ) ஆத்மாநாம்
Answer:
ஆ) சி. மணி
21. வே. மாலி, செல்வம் என்ற புனைப்பெயர்களிலும் எழுதியவர்
அ) சி. மணி
ஆ) ஆத்மாநாம்
இ) நாகூர் ரூமி
ஈ) ந. பிச்சமூர்த்தி
Answer:
அ) சி. மணி
22. எம்மூன்றும் எப்போதும் ஒன்றல்ல என்கிறார் சி. மணி?
அ) எண்ணம், வெளியீடு, கேட்டல்
ஆ) பார்த்தல், கேட்டல், இரசித்தல்
இ) கேட்டல், பார்த்தல், கவனித்தல்
ஈ) உணர்தல், நினைத்தல், செய்தல்
Answer:
அ) எண்ணம், வெளியீடு, கேட்டல்
23. சொல்ல விரும்பியதெல்லாம்
சொல்லில் வருவதில்லை – என்று எழுதியவர்
அ) ஆத்மாநாம்
ஆ) நாகூர் ரூமி
இ) சி. மணி
ஈ) கவிமணி
Answer:
இ) சி. மணி
குறுவினா
1. கல்வி எவற்றையெல்லாம் நமக்கு வழங்குகிறது?
Answer:
- சாதிக்கும் திறனையும் சறுக்கல்களில் நம்பிக்கையையும் தருகிறது.
- நமக்குத் துணை நின்று காக்கும் அறிவையும் வழங்குகிறது கல்வி.
2. கற்பித்தல், கற்றல் இரண்டிற்கும் இடையே நிகழும் விளைவுகள் என்ன?
Answer:
- கற்பித்தல், கற்றல் இரண்டிற்குமிடையே இடையீடுகள் நேர்வதும் உண்டு.
- எதிர்பாராத நல்ல விளைவுகளும் கிடைப்பதுண்டு.
3. கனியின் சுவை எதைப் பொறுத்தது?
Answer:
- கனியின் சுவை என்பது கனியைப் பொறுத்தது அல்ல.
- மாறாக அதைச் சுவைப்பவரின் பசியையும், சுவையின் முடிச்சையும் சார்ந்ததாகும்.
4. கவிஞர் சி. மணி பெற்றுள்ள விருதுகளைக் கூறுக.
Answer:
- விளக்கு இலக்கிய விருது.
- தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக விருது.
- ஆசான் கவிதை விருது.
- கவிஞர் சிற்பி விருது.
5. ‘மனம்புழுங்கம் பலவுண்டு’ என்று கவிஞர் சி. மணி எதனைக் குறிப்பிடுகிறார்?
Answer:
கணக்கிலடங்கா மாற்றங்களும் இலக்கைத் தவறிய ஏமாற்றங்களும் மனம் வருந்த செய்வதற்கென்று பற்பலவும் இருப்பதாகச் சி. மணி குறிப்பிடுகிறார்.
சிறுவினா
1. குதிரை வரையக் குதிரையே
வராது ; கழுதையும் வரலாம்
இரண்டும் கலக்கலாம் – இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
Answer:
இடம் :
இப்பாடல் வரியானது சி.மணி அவர்களின் ‘இதுவரை’ என்ற கவிதைத் தொகுப்பில் உள்ள ‘இடையீடு’ என்ற கவிதையில் இடம்பெற்றுள்ளது.
பொருள் :
நாம் சொல்ல விரும்பிய எல்லாமே சொல்லில் வருவதில்லை. நாம் எண்ணும் எண்ணம் எல்லாவற்றையுமே சொல்லில் கொண்டு வர முடிவதில்லை.
விளக்கம் :
நாம் ஒன்றை நினைத்துப் பேச அது புரிந்து கொள்ளும் விதத்தில் வேறொன்றாகிவிடும் நிகழ்வுகள் பல நேரங்களில் நடைபெற்றிருக்கும். எவ்வாறெனில் ஓவியன் குதிரையை வரைய நினைத்து வரையும் போது அது பார்ப்பதற்குக் குதிரை போல இல்லாமல் கழுதைபோலக் காட்சியளிக்கலாம்.
பல நேரங்களில் இரண்டும் கலந்து கூட தோற்றமளிக்கலாம். அதுபோன்றுதான் : நாம் எண்ணுகின்ற எண்ணம் வெளிவரும் போது புரிந்து கொள்ளும் விதத்தில் நம் எண்ணம் அப்படியே புரிந்து கொள்ளப்படலாம் அல்லது மாற்றுக்கருத்தையும் பெறலாம்.
2. “எலிக்குப் பொறிவைத்தால்
விரலும் விழுவதுண்டு
நீர்தேடி அலையும்போது
இளநீரும் கிடைக்கும்” – இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
Answer:
இடம் :
இப்பாடல் வரியானது சி.மணி அவர்களின் ‘இதுவரை’ என்ற கவிதைத் தொகுப்பில் உள்ள ‘இடையீடு’ என்ற கவிதையில் இடம்பெற்றுள்ளது.
பொருள் :
எலியைப் பிடிக்க பொறிவைத்தால் விரலும் மாட்டிக்கொள்ளும். தண்ணீர் தேடிய அலையும் பொழுது இளநீரும் கிடைக்கும்.
விளக்கம் :
ஒரு செயலைச் செய்கின்றபொழுது அச்செயலுக்கு மாற்றாக வேறு செயல் நடந்து நம்மைத் துன்புறுத்தலாம். நாம் சிறிய குறிக்கோளுடன் செல்லும்பொழுது எதிர்பாராத விதமாக பெரிய குறிக்கோளும் நடக்கலாம், மகிழ்ச்சியிலும் ஆழ்த்தலாம். ஆகவே, இடையீடுகள் எப்பொழுதும் நம்மிடம் வந்துபோகும்.
கருத்துரையிடுக